gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

திருத்தப்படக் கூடியவைகள் தவறுகள்- மன்னிக்கலாம்.திருத்தப்பட முடியாதவைகள் பாவங்கள்-மன்னிப்பு இல்லை.நீ செய்வது தவறா, பாவமா.!
சனிக்கிழமை, 11 November 2017 20:15

அர்ச்சனை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

அர்ச்சனை!
தூல மலர்கள் அர்ச்சனை
மலர்களில் மாலதி பூஜைக்கு மிகவும் ஏற்றது. 
இறையை மரிக்கொழுந்தால் அர்ச்சித்தல் ஆனந்த வாழ்விற்கு அடிகோலும். 
மல்லிகையால் அர்ச்சித்தால் பாவங்களிலிருந்து விடுபடலாம். 
சண்பகம், ஜாதிப்பூ, மலைஅத்தி, குருக்கத்தி, அலரி, செவ்வந்தி ஆகிய மலர்களின் அர்ச்சனை முக்தி கிட்டும். 
புங்க மலர் அர்ச்சனை புனிதம் பெறுவர். தாமரை, கேட்டகி, குந்தம், அசோகம் ஆகியவை அமோக பலன்களைத் தரும்.
கணபதியை அருகம் புல்லால் அர்சித்தல் பலன். துளசியால் அர்ச்சிக்கக்கூடாது.
திருமாலை துளசி கொண்டு அர்ச்சித்தால் அவர் அருகில் இருக்கும் பாக்கியம். காஞ்சனம், ஊமத்தம், மலைக்கர்ணிகை ஆகிய மலர்களால் அர்ச்சிக்கக்கூடாது.
அருக்கம், மந்தாரம், தும்பை, வில்வ இலைகள், கொன்றைப்பூ இவைகள் சிவனுக்கும் மிகவும் பிடித்தது. கேதகி, கர்கடி, நிம்பம் ஆகிய மலர்களால் சிவனை அர்சிக்கக்கூடாது.
பொதுவாக கசங்கிய மலர்கள், அசுத்தமான மலர்கள், காய்ந்த மலர்கள் ஆகியவற்றால் இறையை அர்சிக்கக்கூடாது.
சொந்த தோட்டத்திலிருந்தோ அல்லது மாற்றான் தோட்டத்திலிருந்தோ பறித்த பூக்களைவிட வனப்பகுதியிலிருந்து பறித்த மலர்களே இறையின் விருப்பம்.
தங்கத்தால் அர்ச்சிப்பதைவிட மலர்கள் அர்ச்சனையே நூறு மடங்கு பலன் தர வல்லது.
மானஸ மலர்கள் அர்ச்சனை
பலவித வண்ண மலர்களால் அர்ச்சிப்பதைவிட எட்டுவித மானஸ மலர்களால் அர்ச்சிப்பது மகோன்னத பலன்களைத் தர வல்லது.
முதல்மலர்- ஜீவஹிம்சை செய்யாமல் அஹிம்சையை கடைப்பிடிப்பது
இரண்டாம்மலர்- சுயக்கட்டுப்பாடு
மூன்றாம்மலர்- எல்லப்பிராணிகளிடமும் அன்பு பூண்டிருப்பது.
நான்காம்மலர்- பேராசையின்றி உள்ளதைக் கொண்டு திருப்தி அடைதல்
ஐந்தாம்மலர்- இறைவனிடம் மாறாத தெய்வ பக்தி.
ஆறாம்மலர்- சதா இறைவனை நினைத்து தியானம்
ஏழாம்மலர்- வாய்மை
எட்டாம்மலர்- பற்றற்று இருப்பது
இந்த எட்டு மலர்களால் தினமும் இறையை பக்தியுடன் ஆராதிப்பவர்கள் எல்லாவிதமான நற்பலன்களையும் அடைந்து முடிவில் இறையின் அடியை அடைவர். 

&&&&&

அபூர்வ வில்வம்!
அஸ்வமேதயாகத்தின் பலன் தரும் ... அபூர்வ வில்வ மரம்.
சிவபெருமானின் அம்சமாக விளங்குகிற வில்வமரத்தின் சிறப்பை சிவராத்திரி காலத்தில் அறிந்து வணங்குதல் வேண்டும்.
வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்தாக சொல்லப்படுகிறது.
தேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை, வில்வம், என்றும் வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.
வில்வ மரத்தை வழிபடுவதால் லட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிட்டும்.
வில்வ இலைகள் சிவன் எனவும், முட்கள் சக்தி எனவும் கிளைகளே வேதங்கள் என்றும் வேர்கள் யாவும் முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகிறது.
சிவ பூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.
ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது வேதம்.
அகண்ட வில்வம்
இருபத்தோரு வில்வ வகைகளுள் மிகவும் சக்தி வாய்ந்த வகை. இதன் காய்கள் சற்றே ஆப்பிள் பழம் போன்று தோற்றம் அளிக்கும். இலைகளை சிவார்ச்சனைக்கு பயன்படுத்திக் காய்களை மகாலட்சுமி யாகத்திற்கு பயன்படுத்துவார்கள்.
வடநூலார் இதை ஸ்ரீபலம் (மகாலட்சமி ரூபம்) என்று புகழ்வர்.
இந்த பழத்தால் யாகம் செய்வதால் ஐஸ்வர்யத்தின் வடிவாக விளங்கும். யாகாக்னி தேவன் திருமகளது கருணையை விரைவில் பெற்றுத்தருவார். மிகப்பெரிய யாகங்கள் நடக்கும் போது 108 ஓமப் பொருட்களில் வில்வப்பழமும் ஒன்றாகிறது.
வீட்டில் அகண்ட வில்வ மரம் வளர்த்து வந்தால் அது பெரிதாகி கனி கொடுத்த பிறகே பூஜை செய்ய அதன் இலைகள் அருகதை உடையது. ஆனால் வளரும் செடியை பூஜை செய்வதால் அதுவரை குடும்பத்தில் துர் சக்திகள் விலகத்தொடங்கும். படிப்படியாக பொருட்சேர்க்கை ஏற்படும். இதை வளர்த்து வரும் அனைவருமே நலமாக இருப்பதாக கூறி உள்ளனர்.
வில்வம் வளர்த்தால் செல்வம் வளரும்
சமீப காலங்களில் வில்வத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது. சிவலிங்கம் வீட்டில் பூஜிக்கக்கூடாது என்று விரும்பியபடி பேசி வருகின்றனர். வில்வ மரம் எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்கே மகாலட்சுமி நிரந்தரமாக வசிப்பாள்.
பார்ச்சூன் ட்ரீ எனப்படும் அதிர்ஷ்ட வில்வமரத்தை விதையிட்டு வளர்த்து பூஜை செய்வதால் கடன் தொல்லைகள் அகன்று செல்வம் அதிகமாகும்.
வளர்ப்பு முறையும் வழிபாடும்:
ஒரு பூத்தொட்டியில் பசும் சாணம் மண் கலந்து மூன்று நாட்கள் விதையை உள்ளே வைத்து அமாவாசை தினத்தில் எடுத்து ஈர மண்ணில் புதைக்க வேண்டும். 45 நாட்கள் காத்திருந்தால் விதை முளைத்து வெளிவரும்.
விதை எல்லோரும் போடலாம்.
சிலருக்கே அது முளைக்கும் யோகம் வரும். அதற்காக பூமி தோஷம் நீங்கி விட விபூதியை கலந்து அதனருகில் தெளித்து விதை ஜீவனோடு முளைக்க 9 முறை
ஓம் மூலி ஜீவலட்சுமி மூலி மகாதேவ மூலி
உன் உயிர் உடலில் சேர்ந்து ஜீவனாயிருக்க சுவாகா
--என்று கூறுவதற்கு ஜீவ வழிபாடு என்று பெயர். விதை முளைத்து வந்ததும் உரமிட்டு வளர்த்து பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதி கூறி கற்கண்டு, தேங்காய்,பழம், தாம்பூலம் வைத்து வழிபடலாம். வில்வ விருட்சம் முன் அமர்ந்து விநாயகரை வணங்கி பிறகு
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
க்லீம் ஐம் வில்வ ரூபிண்யை
சௌபாக்ய லட்சுமியை
தனதாண்ய கர்யை நமோ நம!
--என்று துதிப்பதால் (16, 32, 54, 108 எண்ணிக்கையில்) வளமே பெருகும்.

$$$$$

Read 4823 times Last modified on புதன்கிழமை, 24 January 2018 06:12
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15533542
All
15533542
Your IP: 162.158.78.66
2020-02-19 10:25

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg