gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

புதன்கிழமை, 15 March 2023 15:41

நோய்கள் வராமலிருக்க!

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை
நிற்கவே வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ்
சொன்னநாள் ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர்
எழுந்தாணி தன் கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு


#*#*#*#*#

 

39.நோய்கள் வராமலிருக்க!

 

தூய்மை, கண்களைத் தூய நீரால் கழுவுதல், கால்-பாதங்கள், தலைக்கு எண்ணெய் தடவுதல், தினமும் குளித்தல், உடற்பயிற்சி செய்தல், சத்துள்ள ஆகாரம் உண்ணுதல், இருப்பிடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், நல்ல ஒழுக்கம் ஆகியன நோய்களைத் தடுக்கும்.

நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உரிய மருத்துவரை அணுகி தக்க வைத்தியம் செய்து கொள்ளல் வேண்டும். வருமுன் காத்தல் என்பதற்கு ஏற்ப நோய்கள் வராமலிருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வாழ்க்கைப் பாதையை சீரக்கிக் கொள்ளவேண்டும்.

தினமும் தியானம் செய்ய வேண்டும்.

தூய்மை காத்து, நல்லொழுக்க நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

நம் உடலில் தொண்ணூற்றாறு வகையான வேதியல் தொழில்கள் நடை பெறுகின்றன. இந்த தொண்ணூற்றாறு தந்துவங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான் உடலில் நோய்க்கு காரணம். உடலில் ஐம்பூதங்களின் இயக்கம் சரிவர இருக்க வேண்டும். அப்பு வாகிய நீர் அதிகம் உடலிருந்து வெளியேறக்கூடாது, நெருப்பு என்கிற அக்னி அளவுடன் இருக்க வேண்டும், நாடிகள் சரிவர இயங்க வேண்டும். மூச்சுகளும் ஒழுங்காக இருக்க வேண்டும். உடல் கழிவுகள் அவ்வப்போது உடலில் தங்காமல் வெளியேற வேண்டும். இதுபோன்ற பஞ்ச பூத செயல்களில் மாற்றங்கள் ஏற்பட்டால் அதன் விளைவாக உடலில் பலவித நோய்கள் தோன்றும் என்பதை அறிக!

நம் உடலில் உள்ள நிணநீர்-இரசம்-சாரம், ரத்தம்-உதிரம்-செந்நீர், தசை-மாமிசம்-ஊன், கொழுப்பு-மேதஸ், எலும்பு-அஸ்தி-என்பு, மஜ்ஜை-மூளை, வெண்ணீர்-ஆணின் சுக்கிலம் அல்லது பெண்ணின் சுரோணிதம் ஆகிய தாதுக்கள் ஏழையும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் யோகம் செய்து கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் சித்தர்கள். எனவே யோகம் செய்வீர்!

நம் முன்னோர்கள் ஆண்டின் முதல் நாள் சித்திரை விஷு- தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கி ஆண்டு முழுவதும் நன்மையும் மங்களமும் தங்கிட இறைவனை வணங்குவதை மரபாக்கியுள்ளனர். அன்று பஞ்சாங்க படனம் கேட்பர். அதாவது பஞ்சாங்க விவரங்களை வேதம் கற்ற ஒருவர் அந்த ஆண்டின் முழுமையான விவரங்களைப் படிக்கக் கேட்டு முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பண்டிகை விரதங்களை அனுஷ்டிக்கவும் உதவுவார். அடுத்ததாக எந்த பண்டிகைக்கு என்ன உணவு வகைகள் செய்ய வேண்டும் என்றும் வரையறுத்துள்ளனர். சித்திரை அடுத்து வரும் கோடையில் அம்மை, வைசூரி போன்ற நோய் தாக்காமல் இருக்க கிருமி நாசினியான கசப்பு மிகுந்த வேப்பம் பூவை சித்திரை விஷுவன்று உணவில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர். மேலும் புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, இனிப்பு, கரிப்பு ஆகிய சுவைகளையும் சேர்த்து உணவு தயாரித்து பண்டிகையன்று இறையை வழிபட்டு விருந்து படைக்க வலியுறுத்தியுள்ளனர்.

 

#*#*#*#*#

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.


#*#*#*#*#

 

38.அன்றாடக் கடமைகளாக செய்ய வேண்டியவை!

 

காலை உறக்கத்திலிருந்து எழும்போது இந்நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும் எனக் கடவுளைத் தியானிக்க வேண்டும். இரவு உறங்கும்முன் இந்நாள் நன்றாகக் கழிந்ததற்கும் இறைவனைத் தியானித்தல் அவசியம்.

காலைக் கடன்களான பல்துலக்கி, மலம் ஜலம் கழித்து, நீராடி, கந்தையானாலும் கசக்கி கட்டு என்ற பழிமொழிப்படி- தூய ஆடை உடுத்திக்கொள்ள வேண்டும், இந்தக் காலைக் கடன்கள் எல்லாவற்றையும் தினசரி கட்டாயம் செய்ய வேண்டும்.

ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மல சுத்தமாய் விநாயகர், குலதெய்வம், மற்றும் விருப்பான தெய்வங்களை வழிபட்டு பின் வாழ்க்கைக்குத் தேவையான தினசரி செயல்களில் ஈடுபட வேண்டும்.

தனக்கும் தன் குடும்பத்திற்கும் என செயல்படும்போது பிறர் கஷ்ட நஷ்டங்களை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

செல்வம் சேர்க்கும் ஆசை அனைவருக்கும் இருந்தாலும் அச்செல்வத்தை எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம் எனச் சிந்திக்காமல் தர்ம வழிகளில் சேர்க்க நினைவு கொண்ட செயலாக்கம் வேண்டும் என்றே சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதிகமான இருள் சூழ்ந்த பகுதியில் செல்லும்போது கையில் ஒளிதரக்கூடிய விளக்குகளின்றி பயனித்தல் கூடாது.

வஞ்சகர்களுடன் உறவோ, நட்போ வைத்துக் கொள்ளக்கூடாது. குருகிய வழியில் வெற்றி பெறலாம், நிறைய பொருள் சேர்க்கலாம் என ஆசைக்காட்டி மோசம் செய்யும் தீயோர் சாகவாசம் கூடாது. அவ்வகைச் சேர்க்கை ஆரம்ப காலத்தில் நன்றாக வளமிக்கதாகத் தெரியும். பின்நாளில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தும்.

ஒருவர் பேசும் போது அவர் என்ன சொல்கின்றார் என்பதை முழுவதையும் கேட்க வேண்டும் குறுக்கிட்டுப் பேசுதல் கூடாது.


#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 15:37

யாத்திரை எதற்கு!

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால் வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.


#*#*#*#*#

 

37.யாத்திரை எதற்கு!

 

தீர்த்த யாத்திரை நம் கலாசாரத்தின் அரிய உயரிய பண்பாகும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று அங்குள்ள புனிதமான தீர்த்தங்களில் நீராடி இறைவனைத் தரிசிக்கவேண்டும். தீர்த்த யாத்திரைகளின்போது இயன்ற அளவு தானம் செய்ய வேண்டும்.

புஷ்யம், அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு-புனர்பூசம், ஹஸ்தம், அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், ரேவதி, ஆகிய நட்சத்திரங்கள் எல்லா வகையிலும் பிரயாணத்திற்கு உகந்தது. இந்த நட்சத்திரங்களில் ஆரம்பித்த யாத்திரை க்ஷேம லாபங்களுடன் இனிது முடியும்

பொதுவாக சுக்லபக்ஷ காலம் யாத்திரைக்கு விசேடமானது

சஷ்டி, அஷ்டமி, துவாதசி இவையல்லாத திதிகளில் பிரயாணம் சுபம்.

தனுஸ், விருஷபம், கடகம், சிம்மம், துலாம் ஆகிய லக்ண காலங்கள் சுபமானது.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், ஸ்வாதி, விசாகம், கேட்டை, பூராடம், ஆருத்ரா-உத்திரட்டாதி, பூரட்டாதி, ஜன்மத்ரேயம், சித்திரை ஆகிய நட்சத்திர காலங்களை தவிர்த்தல் நலம்.

சுபமான அனுகூலமான லக்கினத்தில் புறப்பட்டு பந்துக்கள் வீட்டிலோ, சிநேகிதர்கள் வீட்டிலோ தங்கி பிறகு பிரயாணம் மேற்கொள்ளலாம். இது முடியாவிட்டால் எடுத்துச் செல்லும் பொருள்களை சுப வேளையில் அனுப்பிவிட்டு பின்னர் புறப்படலாம்.

சகுனமாக கன்னிகை, பசு, பூர்ண கும்பம், பாற்குடம், தயிர், பழம், புஷ்பம், சங்கநாதம், மங்கள வாத்தியம், பல்லக்கு, இரட்டைப் பிராமணர்கள், குதிரை, விருஷபம், சவம் எதிர்பட்டால் சுபசகுனம்.

மோர், எண்ணெய் தலையன், வஸ்திரமில்லாதவன், விதவை, விறகுசுமை, பன்றி, சன்னியாசி எதிர்பட்டால் அபசகுனம்.

திங்களும் சனியும் கிழக்கில், வியாழன் தெற்கில், ஞாயிறு, வெள்ளி மேற்கில், செவ்வாய், புதன் வடக்கில் வாரசூலை.

 

#*#*#*#*#

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!


#*#*#*#*#

 

36.வழிபாடு எப்படி செய்ய வேண்டும்!


அதிகாலை சூரிய உதயத்தின்போது சூரியனை மந்திரத்தால் உபாசிக்க வேண்டும். எந்த மந்திரங்களாயிருந்தாலும் ‘ஓம்’ சேர்த்து சொல்வது சிறப்பான பலனைத் தரும். இரண்டு கைகளை உயரத்தூக்கி கிழக்குத் திசையில் ஆதவனை நோக்கி சூரிய கிரணங்கள் மேனியில் படும் வண்ணம் கண்களை மூடியபடி இருக்கும்போது

சூரிய கிராணங்களின் ஸ்பரிசம் மேனியில் பட்டு தேகத்திற்கு புதிய சக்திகளைத் தரவல்லது.

ஆலயங்களுக்குச் சென்றால் அந்தந்த முறைப்படி தெய்வங்களை வழிபடுதல் வேண்டும். தூய்மை காத்து நல்லொழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும். தியானம் செய்ய வேண்டும்.

சூரியனின் தென்திசை நோக்கிய பயணத்தை ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தை தட்சிணாயணக் காலம் என்றும், வடதிசை நோக்கிய பயணமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான காலத்தை உத்ராயணக் காலம் என்றும் கூறுவர். இந்த இரு காலங்களும் சேர்ந்த சித்திரை முதல் பங்குனி வரையிலான ஒரு வருட காலமே தேவர்களுக்கு ஒரு நாள் என்பதால் தட்சிணாயணத்தின் இறுதி மாதமான மார்கழி அவர்களின் அன்றைய அதிகாலைப்பொழுதாகவும், உத்ராயணத்தின் இறுதி மாதமான ஆனி தேவர்களின் பகல் பொழுதின் இறுதிப் பகுதியாகும். தேவர்களின் ஒருதினப்பொழுதின் சந்தியாகாலமாக விளங்கும் ஆனிமாதமும் மார்கழியும் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதங்கள்.

மார்கழி அதிகாலைப்பொழுதான தேவர்களின் சந்தியா கலாத்தில்தான் தான் திரு வெம்பாவை, திருபூம்பாவை என சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பள்ளி எழுச்சி நடைபெறும்

தமிழ் மாதங்களில் ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதம். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆனிமாதத்தை மிதுனமாதம் / ஜேஷ்டமாதம் என்பர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய எனப் பொருள். பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கும் இருகோள்களான சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் நேரமே ஆனித்திருமஞ்சனத் திருநாள். சிவபெருமானின் 64 திருவுருவங்களில் அற்புதமான ஆடலரசனுக்கு நடைபெறும் திருமஞ்சனமமே ஆனித்திருமஞ்சனத் திருநாளாகும். கல்விக்கு அதிபதியாகிய புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகளான மிதுனம், கன்னி இரண்டும் உள்ள ஆனிமாதத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சனத்தைக் காணும் பேறுபெற்றவர்கள் இறையருளால் அறிவில் சிறந்து விளங்குவர்.

அதேபோன்று மார்கழியில் திருவாதிரை விழா நடைபெறும். பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது இடது பாத தரிசனத்தை மார்கழி திருவாதிரைத் திருநாளில் சிதம்பரத்திலும், வலது பாத தரிசனத்தை பங்குனி உத்திரத்தில் திருவாரூரிலும் தரிசித்துள்ளனர்

தீப வழிபாடு ஏன்!

தீபங்கள் ஏற்றி வழிபட்டால் பல நன்மைகள் உண்டு என்று வேதங்கள் சொல்கின்றன. விஷேட நாட்களில் மட்டுமல்லாது தினமும் காலை மாலை நாம் வசிக்கும் வீட்டில் தீபம் ஏற்றிவைத்து அதை வழிபட்டால் தீய சக்திகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். மங்களங்கள் பெருகும். மகிழ்ச்சி கூடும். தீபத்தில் பலவகை உண்டு.

சித்ர தீபம்: வீட்டின் தரையில் சித்ரக்கோலம் வண்ணப் பொடிகளால் போட்டு அதன் மீது ஏற்றுவது சித்ர தீபம்

மாலா தீபம்: அடுக்கடுக்கான் தீபத் தட்டுகளில் ஏற்றுவது மாலா தீபம்.

ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்பகுதியில் உயரமான இடத்தில் ஏற்றப்படும் தீபம் ஆகாச தீபம்.

ஜல தீபம்: தீபத்தை ஏற்றி நீரில்/நதில் மிதக்கவிடுவது ஜல தீபம்.

படகு தீபம்: கங்கை நதியில் மாலைவேளையில் வாழைமட்டைமீது தீபம் ஏற்றிவைப்பதும் படகு வடிவில் தீபங்களை ஏற்றி கங்கையில் விடுவதும் படகு தீபம்.

சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பகுதியிலும் ஏற்றி வைப்பது சர்வ தீபம்.

மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு கோயில் கோபுரங்களிலேற்றி வைக்கப்படுவது மோட்ச தீபம்.

சர்வாலய தீபம்: கார்த்திகை தீபநாளில் சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபம்.

அகண்ட தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரைகளில் ஏற்றப்படுவது அகண்ட தீபம்.

லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் கோவில்களை அலங்கரிப்பது லட்ச தீபம்.

மாவிளக்கு தீபம்: அரிசி மாவில் வெல்லம் சேர்த்து இளநீர் விட்டு பிசைந்து உருண்டையாக்கி நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம்.

கோலமிடப்பட்ட வாசல்களில்-5, திண்ணைகளில்-4, மாடக்குழிகளில்-2, நிலைப்படியில்-2 நடைகளில்-2, முற்றத்தில்-4 விளக்குகள் என்று ஏற்ற வேண்டும்

பூஜையறையில்-2 அகல்விளக்கு ஏற்றி வழிபட்டால் சர்வ மங்களம் உண்டாகும்

சமையல் அறையில்- ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபட்டால் அன்ன தோஷம் இருக்காது.

வீட்டின் பின்புறம்/வெளிப்பகுதிகளில் எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். மரண பயம் நீங்கி ஆயுள் விருத்தியாகும்.

பொதுவாக தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் ‘தீபலட்சுமியே நமோ நம’ என்று வணங்கினால் பலன் அதிகம்.

 

#*#*#*#*#

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.


#*#*#*#*#

 

35.பக்தி- (5வகை) நம்முள் நிலைக்க பரிசுத்தமான மனத்துடன் பக்தியில் ஆழ்ந்திரு.

 

1.அழிஞ்சில் பக்தி- அழிஞ்சில் மரத்தின் காய் முற்றியவுடன் கீழே விழுந்து உடைந்ததும் அதன் விதைகள் ஓர் ஆதர்ஸன சக்தியில் தாய் மரத்தினை நோக்கி நகர்ந்து அடியில் ஒட்டிக் கொள்ளும். விதைகள் எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று விடுவதுபோல் பலதடைகளைத் தாண்டி இறையை அடைவதே நம் இலக்காக இருக்கும் பக்தி.

2.காந்த பக்தி. இரும்பை காந்தம் இழுத்துவிடும். சிலகாலம் அப்படியே விட்டால் அந்த இரும்பிலும் காந்த சக்தி இருக்கும். நம் பக்தி விரும்பியதை அடைவதற்காக உண்டாவது. ஞானி, யோகிகளின் இறை வழிபாடு ஒரே திடமாய் இருப்பதால் அவர்களிடம் காந்த பக்தி தோன்றும்.

3.பதி பக்தி- தன் சொந்த காலில் நிற்கும் பெண்கள்கூட பதி பக்தியில் சிறந்து விளங்குகின்றார்கள். பதிவிரதை சர்வ காலமும் தன் பதியின் நினைவிலே இருப்பதைப் போல் நாமும் இறை நினைவிலே இருக்க வேண்டும்.

4.கொடி பக்தி- கொம்பைச் சுற்றியிருக்கும் கொடியை பிரித்தெடுத்தாலும் அடுத்த நாளில் அது மீண்டும் போய் கொம்பைச் சுற்றிக் கொள்ளும். நம் பக்தியும் இப்படி இருக்க வேண்டும்.

5.நதி பக்தி- கடல் நீர் ஆவியாகி உப்புச் சுவையின்றி மேலே சென்று மழையாகப் பொழிந்து நிலத்தின் சுவையை அடைந்து மீண்டும் உப்பின் சுவை பெற்று கடலில் கலக்கின்றது. இறைவனை நோக்கி நாம் செல்லும் போது எவ்வளவு தடைகள் வந்தாலும் அதைக் கடந்து செல்லும் நம்மை கடல்நீர் நதிநீரை எதிர்கொண்டு அழைப்பதைப்போல் இறைவன் எதிர்கொள்வார்.


#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 15:28

கர்மங்கள்-பாவங்கள்!

ஓம்நமசிவய!


தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக் கடக்களிற்றைக்
கருத்துள் இருத்துவாம்! கணபதி என்றிடக் கலங்கும்
வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும் கணபதி
என்றிடக் கருமமாதலால் கணபதி என்றிடக் கருமமில்லையே!


#*#*#*#*#

 

34.கர்மங்கள்-பாவங்கள்!

 

கர்மங்கள் 3வகை.

பிறவிகள் தொடர்புடைய கர்மங்கள் 3வகை அவை

சஞ்சிதம்- முற்பிறவியில் செய்தவை,

ஆகாமியம்- முற்பிறவியின் பலனாக அவ்வினைகளை ஏற்று மறுபிறவி அடைந்து அனுபவிக்கும் சுப. அசுப கர்மாக்கள்.

பிராரத்துவம்- ஆகாமிய கர்மாவை உடலால் அனுபவிப்பது


பத்து பாபங்கள்-

வாக்கினால் நான்கு- 1.கடுஞ்சொல், 2.உண்மையில்லாத பேச்சு, 3.அவதூறான பேச்சு, 4.அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமான பேச்சு.

சரீரத்தால் மூன்று- 1.நமக்கு என்று கொடுக்கப்படாத பொருளை எடுத்துக் கொள்வது, 2. அநியாயமாக பிறரைத் துன்புறுத்துவது. 3. பிறர் மனைமேல் ஆசை கொள்வது.

மனதால் மூன்று- 1.மற்றவர் பொருளை அடைய திட்டமிடல், 2. கெட்ட எண்ணங்களை நினைத்தல், 3. பொய்யான ஆசை கொள்ளுதல்.

மனதில் உறுதிகொண்டு இந்த பத்தும் செய்யேன் என வைகாசி அமாவாசைக்குப் பின்வரும் தசமி அன்று சேதுவில் நீராடி செயல்படின் பாபங்கள் தீரும் என்பது நியதி

பாவங்கள் விலக சந்தியாவந்தனம்-

பொழுது புலரும் முன் சந்தியாவந்தனத்தை துவக்கி, சூரியோதயம் வரை மூன்று முறை செய்யவும். இது இரவு செய்த பாவங்களைப் போக்கவல்லது. மாலை சூரியன் அஸ்தமிக்கும்முன் சந்தி செய்தால் பகலில் செய்த பாவங்கள் விலகும். சந்தியா தேவியை மூன்று காலங்களிலும் வழிபடல் வேண்டும்.


#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 15:20

விரதங்கள்!

ஓம்நமசிவய!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!


#*#*#*#*#

 

33.விரதங்கள்!

 

விரதம் இருப்பது நம்முடைய சிறந்த பண்பாடாக இருந்துள்ளது. மன ஒழுக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நன்மை அளிக்கும் விரதங்கள் சில:

சந்தாபண விரதம்- ஒருநாள் முழுவதும் பஞ்சகவ்யம் உட்கொண்டு அடுத்தநாள் முழுவதும் உண்ணாவிரதம் இருத்தல்.

மஹா சந்தாபண விரதம்- பஞ்சகவ்யத்தில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஆறு நாட்கள் உட்கொண்டு ஏழாம் நாள் முழு உபவாசம் இருத்தல்.

பிரிசமத்திய அல்லது கிரிச்சர விரதம்- முதல் மூன்று நாட்கள் 26 தேக்கரண்டி அளவு பகலில் மட்டும் உணவு உட்கொண்டு, அடுத்த மூன்று நாட்கள் 22 தேக்கரண்டி அளவு இரவில் மட்டும் உணவு உட்கொண்டு, அடுத்த மூன்று நாட்கள் 24 தேக்கரண்டி அளவு உணவு உட்கொண்டு பத்தாம் நாள் உபவாசம் இருத்தல்.

அதிகிரிச்சர விரதம்- முதல் மூன்று நாட்கள் ஒரு கையளவு மட்டும் பகலில் உட்கொண்டு, அடுத்த மூன்று நாட்கள் ஒரு கையளவு மட்டும் மாலையில் உட்கொண்டு, அடுத்த மூன்று நாட்கள் ஒரு கையளவு மட்டும் பகலில் எப்பொழுதாவது உட்கொண்டு, இறுதியாக மூன்று நாட்கள் உபவாசம் என பன்னிரண்டு நாட்கள் இருத்தல்.

பராக விரதம்- பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து உபவாசம் இருத்தல்.

தப்தகிரிச்சர விரதம்- முதல் மூன்று நாட்கள் நீர் மட்டும் அருந்தி, அடுத்த மூன்று நாட்கள் பால் மட்டும் அருந்தி, அடுத்த மூன்று நாட்கள் நெய் மட்டும் அருந்தி, இறுதியாக மூன்று நாட்கள் உபவாசம் என பன்னிரண்டு நாட்கள் இருத்தல்.

பதகிரிச்சர விரதம்- முதல் நாள் ஒரு வேளை உணவு, இரண்டாம்நாள் உபவாசம், மூன்றாம் நாள் அளவில்லா உணவு, நான்காம் நாள் உபவாசம் இருத்தல்.

சாந்தா ராமண விரதம்- பௌர்ணமி முதல் நாள் 15 கையளவு உணவு, அடுத்தநாள் 14 கையளவு உணவு என ஆரம்பித்து அமாவாசைவரை உட்கொண்டு அமாவாசையன்று உபவாசம் இருக்கவேண்டும். அடுத்து பிரதமை முதல் நாள் ஒரு கையளவு என ஆரம்பித்து தினமும் ஒரு கையளவு அதிகமாகிக் கொண்டு பௌர்ணமி அன்று 15 கையளவு உண்டு விரதத்தை முடித்தல்.

சாதுர்மாஸ்ய விரதம்: சன்னியாசிகள் மேற்கொள்வது..ஆஷாட பௌர்ணமி-வியாச பௌர்ணமி அன்று அனுஷ்டிக்கப் படும். இதை குரு பௌர்ணமி என்றும் சொல்வர். உலக நலனுக்காக அனைத்து தேவதைகளுக்கும் பிரீதி செய்வதே இந்த வியாச பூஜையின் நோக்கம். ஆனிமாத பௌர்ணமியிலியிருந்து கார்த்திகை மாசம் பௌர்ணமி வரைக்கும் ஒரே இடத்தில் தங்கி வேத புராணங்களில் வித்வத்வம் உள்ளவர்களுடன் கலந்துரையாடி, சாஸ்திர சம்பிரதாயத்தையும், பக்தி மார்க்கத்தையும் மத்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதுடன், உணவையும் சில கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பர். கிருஷ்ண பஞ்சகம், வியாச பஞ்சகம், பகவத்பாத பஞ்சகம், ஸனச பஞ்சகம், திராவிடபஞ்சகம் என ஐந்து பஞ்சகங்களை அமைத்து பக்கங்களில் 24 குருமார்களை ஆவாஹனம் செய்து 30பேர் பூஜை செய்ய துறவிகள் சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம் எடுத்துக்கொள்வர். வியாசர், அவரது சீடர்கள் பைலர், ஜைமினி, வைசம்பாயனர், சுமந்து, ஆதிசங்கரர், அவரது சீடர்கள் பத்மபாதர், சீரேச்சுவரர், ஹஸ்தாமலகர், தோடகர், மௌனகுரு, அவரின் சீடர்கள் சனகர், சனந்தர், சதானர், ஸநத்குமார், நாரதர், சுகர், கௌடபாதர் ஆகிய குருமார்களும், சுத்த சைதன்யம் என்ற பெயரில் சாளக்கிராமமும் பூஜிக்கப்படும். முளையில்லாத அட்சதையைப் பரப்பி நடுவில் கிருஷ்ண விக்ரகமும் சாளக்கிராமமும் வைத்து எழுமிச்சை பழத்தை ஆங்காங்கே வைத்து முறைபடி குருபரம்பரை பூஜையாக நடைபெறும்.

இந்த பொதுவான விரதங்கள் தவிர பௌர்ணமி, அமாவாசை, திதிகள், மற்றும் விசேட தினங்களுக்குரிய விரதங்கள் என்று நிறைய உண்டு. www NAAVAAPALANIGOTRUST.COM web site-ல் விரதங்கள் பிரிவில் பார்த்து பயன் பெறவும்.

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 15:18

தெய்வ படங்கள்!

ஓம்நமசிவய!


தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டதுகுறையென்றெண்ணி
புழைநெடுங்கரத்தாற் பற்றிப்பொற்புற இனைந்துநோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.


#*#*#*#*#

 

32.தெய்வ படங்கள்!

 

பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம். அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும். இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும். அது ராஜ அலங்காரம்,

வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.

மகா சொர்ணாகர்ஷண பைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.

படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.

பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்.

லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம“ என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.

வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும். அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.

விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 15:14

அர்ச்சனைக்கு ஏற்றது எது!

ஓம்நமசிவய!


முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்கவெண்கோடொன்றுமேசிதையாநிற்கும்வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.


#*#*#*#*#


31.அர்ச்சனைக்கு ஏற்றது எது!

 

மலர்களில் மாலதி பூஜைக்கு மிகவும் ஏற்றது.

இறையை மரிக்கொழுந்தால் அர்ச்சித்தல் ஆனந்த வாழ்விற்கு அடிகோலும்.

மல்லிகையால் அர்ச்சித்தால் பாவங்களிலிருந்து விடுபடலாம்.

ஜாதிப்பூ, மலைஅத்தி, குருக்கத்தி, அலரி, செவ்வந்தி ஆகிய மலர்களின் அர்ச்சனை முக்தி கிட்டும்.

புங்க மலர் அர்ச்சனை புனிதம் பெறுவர். தாமரை, கேட்டகி, குந்தம், அசோகம் ஆகியவை அமோக பலன்களைத் தரும்.

கணபதியை அருகம் புல்லால் அர்ச்சித்தல் பலன். துளசியால் அர்சிக்கக்கூடாது.

திருமாலை துளசி கொண்டு அர்ச்சித்தால் அவர் அருகில் இருக்கும் பாக்கியம். காஞ்சனம், ஊமத்தம், மலைக்கர்ணிகை ஆகிய மலர்களால் அர்ச்சிக்கக்கூடாது.

அருக்கம், மந்தாரம், தும்பை, வில்வ இலைகள், கொன்றைப்பூ இவைகள் சிவனுக்கும் மிகவும் பிடித்தது. கேதகி, கர்கடி, நிம்பம் ஆகிய மலர்களால் சிவனை அர்ச்சிக்கக்கூடாது.

பொதுவாக கசங்கிய மலர்கள், அசுத்தமான மலர்கள், காய்ந்த மலர்கள் ஆகியவற்றால் இறையை அர்சிக்கக்கூடாது.

சொந்த தோட்டத்திலிருந்தோ அல்லது மாற்றான் தோட்டத்திலிருந்தோ பறித்த பூக்களைவிட வனப்பகுதியிலிருந்து பறித்த மலர்களே இறையின் விருப்பம்.

தங்கத்தால் அர்ச்சிப்பதைவிட மலர்கள் அர்ச்சனையே நூறு மடங்கு பலன் தர வல்லது.

பலவித வண்ண மலர்களால் அர்ச்சிப்பதைவிட எட்டுவித மானஸ மலர்களால் அர்ச்சிப்பது மகோன்னத பலன்களைத் தர வல்லது.

முதல்மலர்- ஜீவஹிம்சை செய்யாமல் அஹிம்சையை கடைப்பிடிப்பது
இரண்டாம்மலர்- சுயக்கட்டுப்பாடு
மூன்றாம்மலர்- எல்லப்பிராணிகளிடமும் அன்பு பூண்டிருப்பது.
நான்காம்மலர்- பேராசையின்றி உள்ளதைக் கொண்டு திருப்தி அடைதல்
ஐந்தாம்மலர்- இறைவனிடம் மாறாத தெய்வ பக்தி.
ஆறாம்மலர்- சதா இறைவனை நினைத்து தியானம்
ஏழாம்மலர்- வாய்மை
எட்டாம்மலர்- பற்றற்று இருப்பது

இந்த எட்டு மலர்களால் தினமும் இறையை பக்தியுடன் ஆராதிப்பவர்கள் எல்லாவிதமான நற்பலன்களையும் அடைந்து முடிவில் இறையின் அடியை அடைவர்.

#*#*#*#*#

 

ஓம்நமசிவய!


அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.


#*#*#*#*#

 

30.பூஜையில் வாழைப்பழம் தேங்காய் ஏன்!

 

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்! எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம். இதுவே இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு.

மேலும் கோவிலுக்குப் போகும்போது வெறும் கையுடன் செல்லாமல், இறை அருளால் நன்றாக இருப்பேன் அதற்கான காணிக்கை என்பதற்கான சம்பிரதாயமாக எதையாவது கொண்டு செல்ல வேண்டும். அந்த வழக்கப்படி தேங்காய், வாழைப்பழம், கற்பூரம் ஆகியவற்றை எடுத்துச் செல்கின்றோம். கொண்டு செல்லும் பொருளில் நானே கெட்டியானவன் என நினைத்த தேங்காய் உள்ளே உடைபடுகின்றது. இனிமையானவன் மென்மையானவன் என நினைத்த வாழைப்பழம் பூஜை முடிந்தபின் உரிக்கப்படும். அமைதியாக இருந்த கற்பூரம் தீபம் ஏற்றப்பட்டதும் கரைந்து காணமல் போனது. இதில் பக்தர்களுக்குச் சொல்லப்படும் உண்மை நிலை என்றால் தேங்காயைப்போல் கர்வத்துடன் இருந்தால் ஒருசமயம் உடைக்கப்படுவீர். மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கின்றோம் என தற்பெருமை பேசிக்கொண்டிருந்தால் ஒருநாள் கிழிக்கப்படுவோம். கற்பூரம்போல் அமைதியாக மணம் வீசிக்கொண்டிருந்தாலும் இறுதியில் கரைந்து ஒன்றுமில்லாமல் இறைவனோடு கலந்து விடுவோம் என்பதை உயிர்கள் உணர்ந்துகொள்ளவே!

ஆண்டுதோறும் நடைபெரும் விழாக்கள் மகோத்சவம் அல்லது பிரமோத்சவம் எனப்படும். கொடியேற்றமே திருவிழாவின் முதல் நாளாகும். இதன் மூலம் விழாவிற்கு வருமாறு தேவர்களுக்கு அழைப்பு விடுத்து திருவிழா முடியும் வரை கொடிமரத்தில் இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படும். ஒன்று / பத்து / இருபத்தோரு நாட்கள்வரை நடைபெறும். மும்மலத்தில் கட்டுண்டு கிடக்கும் உயிர், தளைகளை நீக்கிக் கொண்டால் இறைவன் திருவடியை அடையலாம் என்பதை கொடியேற்ற நிகழ்ச்சி காட்டுகின்றது.

கொடிமரம் பதியையும், கொடிச்சீலை உயிர்களையும், தர்ப்பைக் கயிறு பாசத்தையும் குறிக்கும். உலகை உடலுக்குள் காணும் யோகிகள் கொடிமரத்தை முதுகுத் தண்டாகவும், கொடி சீலையை மூலாதாரத்தில் சுருண்டிருந்து யோக சாதனத்தால் சுழுமுனையை நோக்கி மேலேறும் குண்டலினி எனும் சக்தியாகவும் கருதுவர்.

ஆசமனம் ஏன்!

இறைவனை ஒருவன் பூஜை செய்து வழிபடவேண்டுமென்றால் ஆசமனம் செய்ய வேண்டும். ஆசமனம் என்பது நீரால் தன்னை சுத்தி செய்து கொண்டு பக்தியால் உள்ளத்தை சுத்தி செய்வதாகும். அவ்வாறு ஆசமனம் செய்பவனே தூய்மையடைவான். உடலும் உள்ளமும் தூயமையுடன் இருக்கும்போது தான் அவனுள் பக்தி தலைதூக்கும்.

#*#*#*#*#

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26932330
All
26932330
Your IP: 35.175.212.5
2024-03-29 01:51

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg