gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சபைகள்! (18)

வெள்ளிக்கிழமை, 09 March 2018 10:22

சபைகள்!

Written by

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.
&&&&&

ஓம் சிவபர தத்துவத்தை சொல்லாமல் சொல்லும் அற்புத ஆலயம்
மூலிகை வனநாதர் ஆலயம்
&&&&&

யுகங்கள்-யுகதர்மங்கள்

கிருதயுகம்- மக்கள் ஈசன் திருவடியை எப்பொழுதும் போற்றித் துதி செய்த வண்ணம் இருப்பர். தருமதேவதைக்கு நான்கு கால்கள். அனைவரின் வாழ்நாளும் ஒரே மாதிரியாக இருக்கும். பேதங்களின்ரி மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர்.
திரேதாயுகம்- சிரந்த யாகங்கள் புரிவர். தரும் தேவதை ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருப்பார். மழை நன்கு பொழிந்து மரம் செடி கொடிகள் நன்கு வளரும். காய் கனிகள் குறைவின்றி கிடைக்கும். பொன், பொருள், ஆடை, அணிகலன்கள் என்ரு ஆசைப்பட்டு மக்கள் கோபமுடன் சண்டையிடுவர். இளம் பெண்கள் இன்பமுடன் வாழ்வர்.
துவாபரயுகம்- மக்கள் கோபம், போட்டி, சண்டை, சச்சரவு என்றிருப்பர். தரும தேவதை இருகால்களை இழந்து இரண்டு கால்களில் நிற்கும். மக்கள் பாப புண்ணியங்கள் தெரியாமலும் தரும நெறியை அறிவதிலும் குழம்பித் தவிப்பர். வியாசர் தோன்றி வேதங்களை நான்காக பகுப்பார். புராணங்களை இயற்றுவார்.
கலியுகம்- மெய்ஞானம் விளங்கி மக்கள் தானம் புரிவர். தரும தேவதை ஒரு காலுடன் நிற்கும். அதர்மம் தலை தூக்கி இருக்கும். பொய், சூது, களவு, வஞ்சனை, கொலை, கொள்ளை ஆகியன தழைத்தோங்கும். வணிகர்கள், அந்தணர்கள், ஆளுநர்கள் பலவகை இன்னல்களுக்கு ஆளாகுவர். ஒழுக்கம் தவறி நடப்பர். வேதம் வேள்வியின்றி போகவாழ்வு வாழ முயற்சிப்பர்.

கோவில்கள் இயற்கை எழிலும், ரம்யமான சூழலும் கொண்டிருக்க வேண்டும். ஏரிகள், குளங்கள், கிணறுகள், பூக்கள், மரங்கள், அன்னப்பட்சிகளின் இனிமையான சத்தங்கள், இசையொலிகள் போன்ற அருமையான சூழலில் கோயில் கொண்டிருக்கத்தான் தெய்வங்கள் விரும்பும். குளங்கள் வெட்டுவது மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் சேர்த்த புண்ணியம். கோவில் கட்டும் பணியானது யாகங்கள் நடத்துவது போன்ற புண்ணியங்களைத் தரும். எனவே அப்படிபட்ட ஓர் அற்புதமான கோவிலை இறையருள் முழுமையாக நிறைந்த வண்ணமாக மூலிகை வனநாதர் ஆலயம் அமைக்க விரும்பும் எண்ணத்தை அடியேனுக்கு இறைவன் அருளியுள்ளான்.

யுகதர்மங்கள் எப்படி யிருந்தாலும் மக்கள் மெய்ஞானத்தில் நாட்டம் கொண்டு தங்களின் பிறவியை நன்னிலைப் படுத்த ஆன்மீக வழியில் பயனிக்க ஆன்மீக முறைகளை தெரிந்துகொள்ள உதவியாய் அமையட்டும் இந்த மூலிகை வனநாதர் ஆலயம்- ஒவ்வொரு தெய்வத்திற்கும் சபை ஏற்படுத்தி அதில் அவர்கள் மக்கள் நல் வாழ்விற்காக எடுத்த உருவங்கள், அதன் சிறப்புக்கள், பயன்கள் ஆகியவற்றை முடிந்தவரையில் அடியேன் தேடித் தெளிந்து தெரிவித்துள்ளேன். இந்த எண்ணங்களுக்குச் சொந்தக்காரார் அடியேனில்லை. என்னுள்ளே இருக்கும் பரம்பொருளே. அவன் அருளால் அனைத்து உயிர்களும் இந்த ஆன்மீக தெளிவுகளைத் தெரிந்து ஆனந்தம் அடைய வேண்டும் என்பதே அடியேன் விருப்பம் பண்டைய மன்னர்கள் மக்களின் நாகரீகம் வாழ்முறைகளுக்கு உதவிகரமாய் இருக்கவே ஆலயங்களை கட்டுவித்தனர். அந்த முறையில் வருங்கால சந்த்தியினர் புரிந்து கொள்ளும் விதமாக நம் கலாச்சார பண்பாடுகள் உணர்த்தப்பட வேண்டும். அதற்கான முதல் தொடர் முயற்சி இது. அன்புடன் -குருஸ்ரீ பகோரா.

சபைகள்!

1. விநாயகர் சபை
2.  நவகிரகங்கள்! சூரிய சபா! 
3.  லலிதாபரமேஸ்வரி-பரமேஸ்வரன் சபை! 
4.  நாரயணர் சபா!
5.  ராஜலட்சுமி சபை!
6.  பத்ரகாளி சபை!
7.   பூமாதேவி!
8.  பைரவ சபை!
9.  ஞான பண்டிதன் சபை!
10. குபேரன் சபை- 12 ராசிக்குரியவர்!
11. பிரம்மன்-சரஸ்வதி!
12. பெரியதிருவடி! 
13. சின்னதிருவடி! 
14. விஷ்வக்‌ஷேனர்!
15. நாரதர்!
16. தத்தாத்ரேயர்!
17. ஐயப்பன்!

$$$$$

புதன்கிழமை, 06 June 2018 11:43

விநாயகர் சபை!

Written by

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் 
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

$$$$$

விநாயகர் சபை!

விநாயகர் தோற்றம்! கிருதயுகத்தில் மனிதர்கள் சத்யம், தர்மம் அடிப்படையில் வாழ்ந்ததால் தங்களின் முயற்சியாலே வெற்றிக்கனியைப் பறிப்பதால், அவர்களுக்குத் தேவையான எல்லாம் கிடைப்பதால், இறையருள் என்ற எண்ணம் தோன்றவில்லை. காலப்போக்கில் நம்பிக்கை மாறி அகம்பாவமாகவும், ஆணவம்மாறி வெறியாக மாறி மமதை உண்டாகி தெய்வ நம்பிக்கை குறைந்தது. மக்களின் மனோபாவம் மாறியதால் பிரம்மா வருந்தி சிவனிடம் சொன்னார். அவர் கணேசரை உருவாக்க திட்டமிட்டார்.

நான்கு யுகத்திலும் பிள்ளையார்!

 கிருதயுகத்தில் காஸ்யப முனிவருக்கும் அதீதிக்கும் மகோத்சுடர் என்ற மகனாகப் பிறந்து பிள்ளையார் தர்மத்தை நிலை நாட்டினார். அன்னை பார்வதிதேவி அளித்த சிம்ம வாகனத்தின் மீது ஆரோகணித்தே அசுரர்களை அழித்தார். ஹேரம்பகணபதி எனும் திருநாமத்தில் ஐந்து முகங்களுடன் பல தலங்களில் இன்றும் சிம்மத்தின் மீது அமர்ந்தே காட்சி அளிகின்றார். இதே கிருதயுகத்தில் கமலாசுரன் என்ற அசுரனை அழிக்க மல்லானர் என்ற பெயருடன் போருக்குப் புறப்படும்போது யாகம் வளர்க்க அதில் தோன்றிய மயிலை வாகனமாக கொண்டார். காட்சி- திருவானைக்கா- அகிலாண்டேஸ்வரி ஆலயம், புதுச்சேரி –மணக்குள விநாயகர் ஆலயம். சிவபெருமானும் தன் காளை வாகனத்தை தந்தருளியுள்ளார். காட்சி-நெல்லை காந்திமதியம்மன் ஆலய விநாயர் சன்னதி, சுசீந்திரம் தனுமாலயன் விநாயகர் சன்னதியில் காணலாம்.

திரேதயுகத்தில் சிவன் -பார்வதியின் மகனாகப் பிறந்து மயூரர் எனப்பட்டார்.

பிள்ளையார் அபூர்வமாக யானை வாகனத்துடன் திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரை அரசாள்வார் விநாயகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி ஆலய கல்யாண விநாயகர் ஆகிய தலங்களில் காட்சி அளிக்கின்றார்- நண்டு வாகன விநாயகராக கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோவிலில் காட்சி அளிக்கின்றார்.

துவாபரயுகத்தில் பராசர மகரிஷி-வத்ஸ்லாவுக்கு மகனாகப் பிறந்து கஜானான் எனப்பட்டார், கிரௌஞ்சன் என்ற அசுரன் சௌபரி முனிவரின் மனைவி மீது ஆசை கொண்டு பார்க்க இதை அறிந்த முனிவர் அவனை மூஞ்சுறுவாக சபித்தார். அப்போதும் அவன் அனைவரையும் துன்புறுத்த மூஞ்சுறுவை அடக்கி தன் வாகனமாக்கிக் கொண்டார்

கலியுகத்தில் சிவன் பர்வதியிக்கு மகனாகப் பிறந்து விநாயகர் என்று அழைக்கப்பட்டார். வாகனம்-குதிரை என்றிருந்தாலும் அரிதாகவே சென்னப்ப நாயக்கன்பாளையம் (கடலூர்வட்டம்), மலையாண்டவர் விநாயகர் ஆலயம், கோவை குருபதேசிகவுண்டார் விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் குதிரை வாகனத்துடன் காட்சி அளிக்கின்றார். மற்றபடி கலியில் மூஞ்சுறு வாகனத்துடன்தான் காணப்படுகின்றார். சென்னை தியாகநாய நகரில் உள்ள அகத்தியர் கோவிலின் தூணில் பிள்ளையார், சிம்மம், மயில், குதிரை, மூஷிகம் ஆகிய வாகனங்களுடன் காட்சி.

பர்வதராஜனும் அவன் மனைவி மேனையும் உமையே தங்களுக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று வேண்ட ஈசன் அருள் புரிய இமவானின் புதல்வியாக உமை அவதாரம் செய்ய பார்வத குமாரி எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஈசனை மணாளனாக நினைத்து தவமிருக்க இமயமலைச் சாரலில் பர்ணசாலை அமைத்து தவம் புரிந்து வந்தார்.

சிவபெருமான் மூப்பு முதிர்ந்த முதியவராகத் தோற்றம் கொண்டு திருவெண்ணீர் பூசி ருத்திராஷமாலை அணிந்து கையில் தண்டமும் கமண்டலமும் ஏந்தி பர்வதகுமாரி தவச்சாலைமுன் நின்றார். அந்தணரின் முகப் பொலிவைக் கண்ட பர்வதகுமாரி வந்திருப்பது யார் என அறிந்து நிலத்தில் விழுந்து வணங்கி பர்ணசாலைக்குள் அழைத்து உபசரித்தாள். பர்வத ராஜனின் பெண்ணே உன் தவம் பவித்திரமானது. நீ உன் திரு மாளிகைக்குச் செல். யாம் அங்கு வந்து உன்னை பாணிக்கிரஹணம் செய்து கொள்வோம் என்றார்.

சிவன் காசியில் சப்த ரிஷிகளை நினைக்க தோன்றியவர்களிடம் ரிஷிகளே யாம் பர்வத ராஜனின் குமாரியை திருமணம் முடிக்க விருப்பம் கொண்டபடியால் எனக்காக தாங்கள் பெண்கேட்டு முகூர்த்த நாளை குறித்துவர அனுப்பினார். ரிஷிகள் நாள் குறித்து வந்ததும் பிரம்மன், விஷ்ணு, யஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், சித்தர்கள், குபேரன், காலன், சூரியன், சந்திரன், சாரணர், கிம்புருடர், அசுரர், கருடர், கின்னரர், சாக்கியர், மருத்துவர், சப்த மாதர்கள் அனைவருக்கும் நாரத மகரிஷி அழைப்பு விடுக்க அனைவரும் திருமணத்தைக் காண திரண்டனர்.

திருமணத்தன்று அனைவரும் ஈசனின் வருகையை எதிர்பார்த்திருக்கும்போது பர்வத குமாரியின் மடியில் ஓர் குழந்தை தோன்ற அனைவரும் மருகினர். தேவேந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அந்த மாயக் குழந்தையை வெட்டச் சென்றான். அதைப் பார்த்து குழந்தை சிரிக்க இந்திரன் கை அப்படியே நின்றது. எல்லோரும் சிலையாக நின்றனர். சூழ்நிலையை சட்டென்று புரிந்த நான்முகன் குழந்தையின் அருகில் சென்று அதன் பிஞ்சுக் கால்களை தன் தலையில் தாங்கி ஈசனே உன் உருவத்தை அனைவரும் கண்டிட காட்சிதரும்படி வேண்ட சிவனார் தன் உருவத்துடன் வெளிப்பட்டார். திருமால் ஈசனுக்கு கங்கா ஜலத்தை அபிஷேகித்து பாத பூஜை செய்து பர்வத ராஜனின் பர்வதகுமாரியான எனது சகோதரி பார்வதியை உமக்கு பணிக்கிரஹணம் செய்து தருகின்றேன் என்றார். மாங்கல்ய தாரணம் ஆனது. அக்னி ஹோமகுண்டத்தில் தோன்றி வணங்க அனைவரும் வணங்கி அருள் பெற்றனர்.

தேவேந்திரன் சிவனாரை வணங்கி அசுரர்கள் இந்திரப்பதவியை அடைய வேள்விகளைத் தொடங்க இருப்பதாகவும் அவர்களால் தமக்கும் தேவர்களுக்கும் தொடர்ந்து இன்னல் ஏற்படுவதால் அவர்கள் செயலை தடைசெய்ய ஓர் புத்திரன் அருள வேண்டும் என விண்ணப்பித்தான்..

திருக்கயிலையில் உள்ள பூஞ்சோலையின் சித்திரமண்டபத்தில் ஓம் எனும் பிரணவ மந்திரம் எழுதப்பட்டிருக்கின்றது. அங்கு வந்த சிவனுக்கு பிரம்மனின் வேண்டுகோள் நினைவுக்குவர அத்துடன் அசுரர்களை சம்ஹாரிக்க ஒர் புதல்வனைத் தோற்றுவிக்கும் எண்ணம் இருக்க தானும் பார்வதியும் யாணை வடிவமெடுத்து ஒங்கார பிரணவ மந்திரத்தை பார்க்க பிரணவ வடிவு கொண்ட பிள்ளையார் தோற்றம் உண்டானது என்கின்றது வேதம். அந்த நாளே ஆவணிமாத வளர்பிறை சதுர்த்திஇந்த நாளை நாம் விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடுகிறோம்.

இன்னொரு நிகழ்வு சொல்லப்படுகின்றது. ஒரு சமயம் பார்வதி தன்னிடம் இருந்த மணம் மிகுந்த குளியல் பொடிகளை தன் வியர்வையுடன் கலந்து விளயாட்டாக ஒர் பொம்மை செய்ய அதன் அழகில் கவர்ந்து அதை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டபோது அவருக்கு ஓர் குழந்தையை நினைவூட்டி மார்பில் பால் சுரந்தது. அதனால் அந்தப் பொம்மைக்கு உயிரூட்டி அக்குழந்தையை சிவனிடம் தர நினைத்தாள். அப்போது தான் குளித்துவிட்டு வரும் வரை வாயிலில் காவல் காக்கவும் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்றும் அச்சிறுவனுக்கு கட்டளை யிட்டாள். அப்போது அங்கு வந்த சிவனை யாரென்று அறியாமல் அச்சிறுவன் தடுக்க கோபம் கொண்ட சிவன் அச்சிறுவனின் தலையை வெட்டினார். நீராடிவந்த பார்வதி சிறுவனின் நிலைதனைக் கண்டு மிகுந்த துயரம் கொள்ளவே சிவன் பிரம்மனிடம் வடபுலம் நோக்கிச் சென்று முதலில் அகப்படும் ஓர் தலையைக் கொண்டுவர பணித்தார். பிரம்மா ஐராவதத்தின் மகனைக் கண்டு அவன் தலையை வெட்ட அவன் முரண்டு பண்ண ஓர்கொம்பு ஒடிந்த நிலையில் யானைத் தலையைக் கொண்டுவந்து கொடுக்க சிவன் அந்தச் சிறுவன் உடலில் பொருத்தி உயிர் கொடுத்தார். அந்த நாள் ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தி.

யானை முகத்தைப் பெற்றதானால் கஜானனன் எனப்பெயர் பெற்றார். நாயகன் இன்றி இவன் தோன்றியதால் வி+நாயகன் எனப் பெயர் பெற்றார். வி-இல்லை, நாயகன் இல்லாமல் பிறந்தவர். கணங்களுக்கு தலைவன் கணபதி. இதில் -ஞானத்தையும், -மோட்சத்தையும், பதி-ஞான மார்க்கத்தையும் குறிப்பதாகும்.

விக்னங்களைத் தீர்க்கும் கணேசர் தலை வெட்டப்பட்டதற்கு ஓர் சாபம் உண்டு. மாலி, கமலி இருவரும் சிவ பக்தர்கள். இவர்கள் தவறு செய்ததால் சூரியன் அவர்களை தாக்க வரும்போது சிவன் தன் பக்தர்களைக் காக்க சூலத்தல் சூரியனை தலையில் அடிக்க உலகம் இருண்டது. சூரியனின் தந்தை கோபம் கொண்டு தன் மகன் சூரியனை சூலத்தால் தாக்கியதுபோல் சிவபாலன் தலை சூலத்தால் தாக்கப்படட்டும் என சாபமிட்டார். அதன் பலாபலனே சிவனே தன் சூலாயுதத்தால் விநாயகர் தலையை வெட்டியது.

இந்த நிகழ்வின் பின்னனி என்னவென்றால் முன்பு சிவன் அசுரன் ஒருவனுக்கு ஓர் வரம் அளித்துள்ளார். அதன்படி அந்த அசுரனை வதைக்க தாயின் கருவில் பிறக்காத மனித உருவம் இல்லாதவனால் மரணம் என்றபடி அப்படி ஓர் ஜனனம் தோன்ற ஏற்பட்ட நிகழ்வே வி+நாயகர் ஜனனம். மேலும் பிரம்மாவின் வேண்டுகோளின்படி மக்களிடம் இறை நம்பிக்கையை வளர்க்க ஒருவர் தேவைப்பட்டது. அதுவே விநாயகர் ஜனனத்திற்கான காரணம்.

விக்னங்களை களைபவர் விநாயகர்! கணேசரை ஒதுக்கிவிட்டு செய்யும் எந்த காரியமும் வெற்றியை நெருங்கும் தருணத்தில் தடைகள் ஏற்பட்டு முற்றிலும் எதிர்பார விளைவுகளைக் கொடுக்கும்.

வாழ்க்கையில் ஆண் பெண் இணைப்பு அவசியம் ஆணின்றி பெண்ணில்லை. பெண் இன்றி ஆண் இல்லை. இதனை உணர்த்தும் விநாயகர் மூர்த்தத்தில் தந்தமுள்ள பகுதி ஆண் கூறு தந்தமில்லாத பகுதி பெண் கூறு.

அஃறினை உயர்தினை ஒருமைப்பாட்டை சொல்லும் விதமாக உயிர்களிடம் அன்பு காட்டப்படவேண்டும் என்பதை உணர்த்தும் யானைமுகம், மனித உடல்.

புலால் மறுத்தலின் அவசியத்துடன் சைவத்தின் மேன்மையை யானை முகம் குறிப்பால் உணர்த்தும். சக்தி மிகக்கொண்ட யானை உண்பது தாவர உணவு மட்டுமே.

கணபதியின் ஐங்கரங்கள் சிருஷ்டி-பற்றுள்ளதை பிறப்பித்து பிணைத்து நிற்பது- படைத்தலைக் குறிக்கும் பாசம் தாங்கிய கை,
ஸ்திதி-காத்தல்- விணை சூழ்ந்து மாறி மாறி வரும் பிறவியின் இன்ப துன்பங்களிருந்து விடுபட அஞ்சேல் எனப் பாதுகாப்பு அளிக்கும் கை,
சம்காரம்-அழித்தலைக் குறிக்கும் அங்குசம் தாங்கிய கை,
திரோதானம்-மறைத்தலைச் செய்யும் கை தும்பிக்கை,
அருளல்-அபயம் அளித்த உயிர்கட்கு அருளல் மேதகம் ஏந்திய கை
ஆகிய ஐந்தும் சிவனின் ஐந்தொழில்களும் உலக மக்கள் நலன்கருதி குறைவின்றி நடைபெறவேண்டும் என்பதைக் குறிக்கும்.

கணபதியின் ஸ்வரூபம் ஞானமயமானது. எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய பிரணவ மூர்த்தம். ஒடிந்த கொம்பு அபர ஞானத்தையும், ஒடியாத கொம்பு பரஞானத்தையும் குறிப்பதாகும்.

விலங்கு, மனிதர், பூதர், தேவர் ஆகிய இவர்கள் இணைந்த திருவுருத்தைக் கொண்டவர் பிள்ளையார். மேனியில் சிவ தத்துவங்களே அடங்கியுள்ளது.

வயிறு தன்னிடம் வரும் உணவைச் செரிக்க வைத்து அதில் உள்ள சத்துக்களை தன்னிடமே வைத்துக் கொள்ளாமல் ரத்தத்தில் கலக்க வைத்து உடல் முழுவதற்கும் பயன்பட வைக்கின்றது. விநாயகரின் வயிற்றை பேழை வயிறு என்பர். அண்டப் பொருள்கள் அனைத்தும் அதில் அடக்கம். அது பக்தர்களின் பாவங்கள் அனைத்தையும் ஜீரணிக்கும் பெருவயிறு ஆகும். மனிதர்கள் எல்லோரும் இதைப்போலவே தன்னுடையது என்ற சுயமில்லாமல் எதையும் பிறருக்கு தந்து உதவ வேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.

அவரின் காதுகள் பெரியது. அது நிறைய கேட்க வேண்டும். கேள்வி அறிவு நிறைய வேண்டும் என்பதையும், வாயை மறைக்கும் துதிக்கை குறைவாக பேச வேண்டும், பெரியோரிடம் பேசும்போது கையால் வாயைப் பொத்தி பணிவுடன் கேட்க வேண்டும், பேசுவதில் கவனம் கொள்ளல் வேண்டும் என்பதையும் உணர்த்தும். அவரின் சிறிய கண்கள் எதையும் கூர்ந்து நோக்க வேண்டும் என்பதைக் குறிக்கும்.

விநாயகருக்கு சுமுகன் என இன்னொரு பெயரும் உண்டு. சுமுகன் என்றால் நல்ல முகத்தை உடையவன் என்பதாகும். அதாவது விருப்பு, வெறுப்பு இல்லாத சமதத்துவத்தில் நிலைபெற்று பேரருள் ததும்பும் ஆனந்தமயமான முகத்தைக் கொண்டவர் விநாயகப் பெருமான்.

விநாயகருக்கு நைவேத்தியமாக நாம் படைப்பது அப்பம் அவல், பொரி கனிகள் ஆகியவையாகும். இது நம் நம்பிக்கை. இறைவனுக்குத் தேவை என எதுவுமில்லை. இவைகள் நாம் எவ்வாறு பக்குவப்படவேண்டும் என்பதையே குறிக்கும்.

ஒரு ஆன்மாவின் ஞான நிலையை சரியை, கிரியை, யோகம், ஞானம் என சைவ சித்தாந்தம் வரிசைப் படுத்தும். இதை எளிதில் புரிந்துகொள்ள ஒருவர் பூ, பிஞ்சு, காய், கனி என்ற நிலைகளைப் புரிந்துகொண்டால் போதும். பக்தி செய்வதில் பூவாகவும், பிஞ்சாகவும் சிலரும், பலர் காய் நிலையிலும், நின்று விடுகின்றனர். கனியாக எல்லோரும் ஆவதில்லை, அதனால் கனிவு இல்லை. வார்த்தையில் இனிமையில்லை. வார்த்தைகளும் செயலும் காயாகவே இருக்கின்றது. உயிர்கள் கனியாக முதிர்ச்சி அடைய வேண்டும் என்பதற்கு அடையாளமாகவே கனிகளைப் படைக்கும் முறையை பெரியோர்கள் உருவாக்கினர். மனித பிறப்பின் நோக்கம் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருப்பதே அல்ல. ஏதாவது ஒரு பிறவியில் இந்த உலக பந்தத்தை விட்டு இறைவனை அடைய வேண்டும். கனியால்தான் காம்பிலிருந்து விடுபடமுடியும். உயிர்களே நீங்களும் கனியாக மாற முயற்சியுங்கள்!

அப்ப மாவை கொதிக்கும் எண்ணெய்யில் இட்டால் அது சட சட சள சள என்று சப்தம் போட்டு ஆடி அடங்கும்-அதை அப்பம் என படைகின்றோம். வேகாத மாவுபோன்று பக்குவமடையாத நிலையில் உயிர்கள் நான், நீ எனது உனது என்ற பேதங்களுடன் இயங்குகின்றன. பக்குவமடைந்துவிட்டால் எல்லாம் ஒன்றே என்ற அமைதி நிலவும். இதை உணர்ந்து கொள்ளவே அப்பம் படைகின்றோம்.

அவலை இடிக்க இடிக்க மென்மையாகி மிருதுவாகி சுவை கொடுக்கும். அதுபோலவே வாழ்வில் எந்த அளவிற்கு சோதனைக்கு ஆளாக்கப்பட்டு அவைகளைச் சந்தித்து இறை அருளால் அதைச் சமாளிக்கின்றோமோ அந்த அளவிற்கு எல்ல சூழலிலும் எதையும் சமாளிக்க பக்குவப்படவேண்டும் என்பதை உணர்த்தவே அவலை படைக்கின்றோம்.

படைத்தலில் நெல்லாக இருக்கும் வரை நெல் முளைத்துக் கொண்டே மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கும். அதை உமி நீக்கி பொரியாக மாற்றிவிட்டால் முளைத்தல் என்ற நிலை கிடையவே கிடையாது. விநாயகரின் அருளால் இந்த உண்மையை பொறியாக அறிந்த உயிர்க்கு பிறவியே கிடையாது என்பதை உணர்த்தவே பொரியை படைக்கின்றோம்.

ஒலிகளில் அகரமும், உகரமும் சேர்ந்து ஓங்காரமாகி உயர்வுதரும் ஒலியாக மாறுவதுபோல் புள்ளியும் கோடுகளும் சேர்ந்த வரிவடிவமே எழுத்துக்களின் அடிப்படை. புள்ளியை முதலில் வைத்து அதனுடன் சேர்ந்து கோடு நீட்டி எழுதத் தொடங்குவதே வழக்கமாக இருந்து வருகின்றது. இந்தத் தொடக்க வரிவடிவமே பிள்ளையார் சுழி. பிந்து புள்ளி சக்தி வடிவம். நாதம் கோடு சிவ வடிவம். சக்தியும் சிவமும் இணைந்த வடிவமே பிள்ளையார் சுழி. மேலும் புள்ளி ஆதார உயிர். கோடு இறைவன். உயிரும் இறையும் கலந்தால் பேரின்பம். அதலால் புள்ளியும் கோடும் இணைந்த பிள்ளையார் சுழி பேரின்ப பெருவாழ்வின் அடையாளச் சின்னம். நம்மை நல்வழிப் படுத்தும் வழிபாட்டிற்குரிய வரிவடிங்களே புள்ளியும் கோடும். அகரமான உயிர் உகரமான இறைவனுடன் கலந்து உகரமாகவே நின்று புலப்படுவதுபோல் புள்ளியானது கோட்டுடன் இணைந்து உகரமாக பிள்ளயார் சுழியில் இருப்பதால் வினை நீக்கி, வருமுன் காத்து இருக்க, எல்லம் நல்லவையாக நடந்து நிறைவாக அமைய தொடக்கமாக சுழி போடுகின்றோம். அதுவே பிள்ளையார் சுழி. எனவே பிள்ளையாரை வழிபட்டே எந்தச் செயலையும் தொடங்க வேண்டும்.

வாழ்க்கையில் உயிரானது ஒருபுறம் இறைவனது தொடர்பை நாடி திருவடிகளை சரணடைந்து பேரின்ப பெருவாழ்வை அடைய முயற்சிக்கும். மறு புறத்தில் உயிரினை ஈர்த்து மலங்கள் உலக வாழ்வியலில் ஈடுபடுத்துவதால் துன்பங்கள் ஏற்பட்டு குற்றங்கள் தொடர்ந்து வினைக்கு உரியதாகின்றது உயிர். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் அறிவை மயக்கி புத்தியைக் கலக்கி புலன் வழி செயல்பட வைக்கின்றது. இந்த மயக்கத்திலிருந்து விடுபட மாயையையிலிருந்து விலக அறிவு தெளிவாக இருக்க இறை சிந்தனை வேண்டும். எனவே துன்பங்கள் வருமுன் காக்க, செய்யும் செயல் அறிவுத் தெளிவுடன், சிந்தனைக் கூர்மையுடன் மலங்களாலும் அதன்வழிப் புலன்களாலும் மயக்கப்படாமல் இருக்க பிள்ளையாரை வணங்கி வழிபடுதல் சிறப்பு.

அருகு ஓரிடத்தில் முளைத்து ஆறு இடங்களில் வேரோடிக் கிளைக்கும் தன்மையுடையது. ‘அருகு போல் தழைத்து ஆல் போல் வளர்ந்து’ என்பது பழமொழி. இந்த அருகு மூலம் விநாயகரை அர்ச்சித்தால் மூலாதாரத்தின் அதிபதியாக இருக்கும் விநாயகர் மற்ற ஆறு ஆதாரங்களிலும் அருகுபோல் நம்மைப் பொருந்தச் செய்து அருள் புரிவார்.

விநாயகரின் சக்திகள்- சித்தி, புத்தி, வல்லபை. பிள்ளையாரின் பத்தினிகளாகக் கருதப்படும் இவர்கள் உண்மையில் பெண்களல்ல. பிள்ளையாரின் ஆற்றலே சக்தி, புத்தி, வல்லபை என உருவகப் படுதப்பட்டுள்ளது.

பிள்ளையாரின் பிள்ளைகளாகக் கருதப்படுபவர்கள், சுபன், லாபன் மற்றும் சந்தோஷி. விநாய்கரை வணங்கி அறிவும் ஆற்றலும் ஒருவன் பெற்றால் அதனால் சுபமும் லாபமும் ஏற்பட்டு சதோஷமடைவது இயல்புதானே!

பெருவயிறும் யானை முகமும் கொண்ட விநாயகருக்கு சிறிய மூஞ்சுறு எப்படி வாகனமாக இருக்க முடியும். எளிமையாக இருந்தால் எத்தகைய பெரும் பிரச்சனைகளையும் சமாளிக்கலாம் என்பதே இதன் தத்துவம்.

சௌபரி என்ற முனிவரின் மனைவி மனோமயை கிரௌஞ்சன் என்ற அசுரன் பலாத்காரம் செய்ய முயல அதைக் கண்ட முனிவர் சபிக்க முஞ்சுறு ஆனான். தொடர்ந்து அடாத செயல்கள் செய்த அந்த அசுரனை-முஞ்சுறுவை அடக்கி தன் வாகனமாக்கினார் விநாயகர். மூஞ்சுறு காமத்தின் குறியீடு. விநாயகர் ஞானத்தின் வடிவம். அதாவது ஞானத்தால் காமத்தை அடக்கமுடியும் என்ற தத்துவத்தை உணர்த்துகின்றது. விநாயகர் சிறிய மூஞ்சுறுவின்மேல் அமர்ந்திருப்பதின் உட்கருத்து இதுவேயாகும்.

விநாயகர் திருமணம்! பிரமச்சர்யம் என்னவாயிற்று! பிரிந்த சக்தி!
பிரம்மாவின் படைப்புத் தொழில் நலிவுபெற நாரதர் ஆலோசனைப்படி அவர் விநாயகரைத் தொழ அவர் தன் இரு சக்திகளை பிரமனுக்கு வழங்கி படைப்புத் தொழில் சிறக்கவும் செய்தார்.

மேலும், அந்த சக்திகள் அவருக்கு மகளாக சித்தி, புத்தி என இரட்டையராகவும் பிறந்து வளர்ந்தது. மணப்பருவத்தில் மாப்பிள்ளை தேடினார் பிரம்மா. நாரதர் ஆலோசனையைக் கேட்க அவர் தன் பங்கினை செயல் படுத்த நினைத்து இரட்டைப் பிறவிகளான இவர்களுக்கு ஒரே மாப்பிள்ளை சிறந்தது என அறிவுறுத்த பிரம்மா ஏற்றார். நாரதர் கயிலை சென்று விநாயகரை சந்தித்து சித்தி, புத்தியை மணக்க சம்மதம் கேட்க விநாயகர் தன் பிரமச்சார்யம் நீக்க ஒத்துக் கொண்டார். பிரம்மச்சாரி கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டது எப்படி! என்று நாரதர் மனங்குழம்பினார். சித்தி புத்தி இருவரிடமும் சென்று நீங்கள் இருவரும் ஒருவரைத்தான் மணக்க வேண்டும் என்று விதி இருக்கின்றது எனக்கூறியதும் இருவரும் சம்மதிக்க திருமணம் நடைபெற்றது.

பிரமனுக்கு சித்தி புத்தி சம்மதத்தில் சந்தேகமும், நாரதருக்கு விநாயகர் பிரமச்சாரியம் நீக்க ஒத்துக் கொண்டதில் குழப்பமும் நீடித்தது. இது பற்றி விநாயகரிடம் கேட்க என்னிடமிருந்த இரு சக்திகளே பிரமனின் படைப்புத் தொழிலுக்கு உதவியது. அதுவே மீண்டும் அவருக்கு மகளாய் பிறந்தது. என்னிடம் இருந்த இரு சக்திகள் மீண்டும் என்னையே வந்தடைந்து விட்டது. இதில் என்ன கல்யாணம்! என்ன பிரமச்சார்யம் நீக்கம்! என்றார் –வெய்யுலுகந்த விநாயகர்.உப்பூர் 

எந்த வேலையைத் துவக்கினாலும் கணேசரின் அனுமதி- சாமுத்திர்கா லட்சணம் யார் உருவாக்கியது! கார்த்திகேயன் ஆண், பெண் லட்சணங்களை சீரமைத்துக் கொண்டிருக்கும்போது தம்மை மதிக்காமல் செய்கின்றாறே என்பதால் அவர் செயலுக்கு இடையூறு விளைவித்தார் விநாயகர். சினமுற்ற கார்த்திகேயன் கணேசரை வீழ்த்த எண்ணி அவரின் பல் ஒன்றை பிடுங்கி விட்டார். பரமசிவன் அங்கு வந்து பிள்ளைகளின் சச்சரவிற்கு காரணம் கேட்க. கார்த்திகேயன் தான் ஆண், பெண் லட்சணங்களை சீரமைக்கும் பணியில் இருக்க அதைக் கெடுத்துவிட்டார் என்றார், அப்போது ஆண், பெண் லட்சணங்கள் என்று கூறுகின்றாயே என்னிடம் எத்தகைய புருஷ லட்சணம் எனக்கேட்டார். கபாலி எனப் பெயர் பெற்ற தங்களிடம் எப்படி புருஷ லட்சணம் காணமுடியும் என்பதைக் கேட்ட சிவன் கோபமுற்று ஆண்களின் லட்சணங்கள் பற்றிய சுவடிகளைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டு அந்தர் தியானமானார்.

சமுத்திரராஜனை அழைத்து நீ பெண் லட்சணங்களைப் பற்றிப் பகுத்து ஆராய்ந்து உருவாக்கு. கார்த்திகேயன் சொன்ன புருஷ லட்சணங்கள் அப்படியே இருக்கட்டும் என்றார். அப்போது சமுத்திர ராஜன் இவை என்வசமிருந்து வருவதால் இவற்றிற்கு சாமுத்திரிகா லட்சணம் என்ற பெயரில் விளங்க அணுக்கிரகம் வேண்டினார்.

கார்த்திகேயன் முன் தோன்றி, தேவலோக நியதிப்படி யார் எந்த வேலையைத் துவக்கினாலும் கணேசரின் அனுமதியோடு துவக்கினால் தான் விக்னமின்றி நிறைவேறும். நீ சகோதரின் பல்லை திருப்பிக் கொடுத்துவிடு. உன் விருப்பப்படி லட்சண ஏடுகளை சமுத்ர ராஜனிடமிருந்து பெற்றுக்கொள். ஆனால் அது சமுத்ர ராஜன் விருப்பப்படி சாமுத்ரிகா சாஸ்திரம் என்றே அழைக்கப்படும். என்றார்.

கார்த்திகேயன் தான் அண்ணனின் பல்லைக் கொடுத்து விடுகின்றேன். ஆனால் அவர் அதைக் கையிலேயே வைத்திருக்க வேண்டும் கீழே கண்ட இடத்தில் வைத்தால் அந்த பஸ்பம் அவரை எரித்துவிடும் என்றார்.

ஒருதந்தம்! ஜமத்கனி முனிவரின் மகனான பரசுராமர் தன் தந்தையைக் கொன்ற கார்த்தவீரிய மன்னரின் வாரிசுகள் அனைவரையும் கொன்றபின் தன் குருநாதரான சிவபிரானைப் பார்க்க வர அவரை விநயாகர் தடுக்க இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது. என்ன வாயிருந்தாலும் உடனடியாக சிவபிரானைப் பார்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த பரசுராமர் விநாயகர் வழியை தன் தந்தத்தால் தடுக்க அதைத் தன் கோடாரியால் வெட்டினார். அதனால் விநாயகருக்கு ஒரு தந்தம் முறிந்த நிலை.

பிள்ளையாருக்கு ஏன் சிதறு தேங்காய்!
கஸ்யப முனிவர் தவத்தினை காலநேமி என்ற அசுரன் அழித்து தொந்தரவு செய்து வந்தான். அவர் விநாயகரை வேண்ட யாகத்தின்போது விநாயகரும் அவர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார். அங்கு வந்த காலநேமி யாகத்தை தடுத்து நிறுத்த ஆரம்பிக்க கலசத்தின்மேல் இருந்த தேங்காயை எடுத்த விநாயகர் அவன் மேல் வீச அது அசுரனின் தலையை சிதறடித்தது. தேங்காய் சிதறியதுபோல் அசுரனின் தலையும் சிதறி முனிவர்களை பாதுகாத்தது. எனவே விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்தால் அவர்களது துன்பங்கள் சிதறி விடும் என்று ஐதீகம்

கணேசரின் பூஜைக்கு துளசி சேர்ப்பதில்லை ஏன்! கங்கைக் கரையில் கணேசரைக் கண்டாள் துளசி. கணேசரின் அதிசயத் தோற்றம் அவளைக் கவர தர்மத்வஜனின் மகளான தான் அவரை மணக்க ஆசைப் படுவதாகக் கூறினாள். கணேசர் தனக்கு மணம் புரிய விருப்பமில்லை. விவாக பந்தத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. திருமணம் துயரத்தைத் தரும் எனக் கூறி மறுத்துவிட்டார். இதைக் கேட்ட துளசி திருமணம் இன்றியே இருக்கக் கடவீர் எனச் சாபமிட்டாள். கணேசரும் நீ ஓர் அரக்கன் கையில் சிக்கி பின் புதராக மண்டிக் கிடப்பாய் என்றார். வருத்தப்பட்ட துளசி மன்னிக்க வேண்ட, பூக்களுக்கொல்லாம் தலை சிறந்ததாக வைக்கப்படுவாய். கிருஷ்ணரின் பூஜையில் சேர்க்கப்படுவாய். ஆனால் என பூஜையில் சேர்க்கப்படமாட்டாய் என அருள் புரிந்தார் விநாயகர்.

உகந்த மலர்கள்: செம்பருத்தி, ரோஜா, தும்பை, மந்தாரை, அருகம்புல்.

வளர்பிறை சதுர்த்தி. ஆவணி வளர்பிறை சதுர்த்தி சாலச் சிறந்தது. இது பிள்ளையார் சதுர்த்தி ஆகும். அன்று விரதம் இருந்து துதிகளைப் படித்து வந்தால் நல்ல பலன்கள் கிட்டும். அன்று இரவு சந்திரனை தரிசித்தால் வழிபாட்டின் பூரண பலன் கிட்டும், நினைத்த நல்ல காரியங்கள் ஜெயம்.

ஒவ்வொரு நாளும் அந்தந்த திதிகளின்படி வெவ்வேறு விநாயகர் வடிவினை வணங்குவது கூடுதல் பலனைத் தரும்.

ஒவ்வொரு உயிரின் உடலும் தான் பிறந்த திதியில் அந்த விநாயகருக்கு பூஜை செய்து வழிபடின் சிறந்த பலன்களை அடைவர்.

தேவர்களுக்கு வேள்விகள் மூலம் யாகம் செய்ய முடிய வில்லை என்றால் அந்தந்த திதிகளுக்குரிய உணவை உண்டு விரதமிருந்தால் அந்தந்த திதிக்குரிய தேவதைகள் திருப்தி அடைவர். எந்த விரதமாக இருந்தாலும் விரதம் முடிந்தபின் தான தர்மங்கள் முடிந்த அளவிற்குச் செய்தல் சிறப்பான பலன்களைத் தரும்.

கணபதியின் உருவங்கள் வேண்டிய வடிவில் இல்லையென்றால் அந்த பெயரை ஒன்பதுமுறை இருக்கும் கணபதிமுன் சொல்லி வேண்டவும். எந்த நாளும் எந்த நிலையிலும் வணங்கலாம்.

ராஜகணபதி சபை
பிங்கள கணபதி, வல்லப கணபதி,

ஸப்த ஆவரணத்தில் (ஏழு பிரிவு) 56 கணபதி மூர்த்தங்கள். மூர்த்தங்களின் பெயர்களைச் சொல்லி பூஜை- நன்மைகள் ஏற்படும்.

முதல் ஆவரணம்(6மூர்த்தங்கள்):- துண்டி கணபதி, துர்க்கை கணபதி, அர்க்க கணபதி, பிரஸன்ன கணபதி, பீம கணபதி, சுந்தர கணபதி,

இரண்டாம் ஆவரணம்(14 மூர்த்தங்கள்):- சித்ரூப கணபதி, லம்போதர கணபதி, கூப தந்த கணபதி, சலாடக கணபதி, குலப்பிரிய கணபதி, சதுர்த்தி கணபதி, பஞ்சமி கணபதி,, முண்ட கணபதி, சசிமுக கணபதி, விடங்க கணபதி, நிஜ கணபதி, ராஜபுத்ர கணபதி, பிரணவ கணபதி, உபதாப கணபதி,

மூன்றாம் ஆவரணம்(8 மூர்த்தங்கள்):- வக்ர துண்ட கணபதி, ஏக தந்த கணபதி, த்விமுக கணபதி, பஞ்சமுக கணபதி, ஏரம்ப கணபதி, விக்னராஜ கணபதி, வரத கணபதி, மோதகப்ரிய கணபதி,

நான்காம் ஆவரணம்(8 மூர்த்தங்கள்):- ஏகோபயப்ரத கணபதி, சிங்கமுக கணபதி, கூர்ணிதாஷ கணபதி, க்ஷிப்ரப்பிரஸாத கணபதி, சிந்தாமணி கணபதி, தந்த வக்த்ர கணபதி, அயிசண்டி கணபதி, ஊர்த்திவாண்டமுண்ட கணபதி,

ஐந்தாம் ஆவரணம்(6 மூர்த்தங்கள்):- மணிகர்ண கணபதி, ஆசார சிருஷ்டி கணபதி, கஜகர்ண கணபதி, கண்டா கணபதி, சுமங்கல கணபதி, மந்த்ர கணபதி,

ஆறாம் ஆவரணம்(8 மூர்த்தங்கள்):- மோதக கணபதி, ஸுமுக கணபதி, துர்முக கணபதி, கண கணபதி, அமர கணபதி, ஆக்கினை கணபதி, துவார கணபதி, அவிமுக்த கணபதி,

ஏழாம் ஆவரணம்(6 மூர்த்தங்கள்):- ஆமோத கணபதி, பாகீரத கணபதி, ஹரிச்சந்ர கணபதி, கபர்த்தி கணபதி, பந்து கணபதி, கனக கணபதி,


பௌர்ணமி திதி-நித்யகணபதி / அமாவாசை திதி -நிருத்தகணபதி

பிரதிபத (எ) பிரதமை திதி -பாலகணபதி
த்விதீய / துவிதையை திதி!-தருணகணபதி
த்ரிதியை / திருதியை திதி! -பக்திகணபதி
சதுர்த்தி திதி -வீரகணபதி
பஞ்சமி திதி -சக்திகணபதி
சஷ்டி திதி -துவிஜகணபதி
சப்தமி திதி -சித்திகணபதி
அஷ்டமி திதி -உச்சிஷ்ட கணபதி
நவமி திதி -விக்ன கணபதி
தசமி திதி -க்ஷிப்ர கணபதி
ஏகாதசி திதி -ஹேரம்ப கணபதி
துவாதசி திதி -லக்ஷ்மி கணபதி,
த்ரையோதசி திதி -மகா கணபதி
சதுர்த்தசி திதி -விஜய கணபதி

$$$$$

வியாழக்கிழமை, 07 June 2018 19:33

நவகிரகங்கள்! சூரிய சபா!

Written by

ஓம்நமசிவய!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

$$$$$

நவகிரகங்கள்! சூரிய சபா!

கிரகங்களின் நிலைகளால் உலக உயிர்களுக்கு அவ்வப்போது வரும் தீமைகளைப் போக்கிக் கொள்ளவே நவகிரகங்களின் வழிபாட்டை முன்னோர்கள் நெறிமுறைப் படுத்தியுள்ளனர். உயிர்கள் செய்த நல்வினை, தீவினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களை உயிர்கள் அடைகின்றன. துன்பங்களின் பாதிப்பை நீக்க / குறைக்கவே கிரஹ வழிபாடு செய்கின்றோம். நவகிரகங்கள்: கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாக கொண்டு இயங்குவதால் சூரிய சபா.

காலத்திற்குத் துணைபோவதுதான் கிரகங்களின் செயல்பாடுகள். உயிர்களின் கர்ம வினைக்கு ஏற்ப கோள்கள் பலன்களைத் தருகின்றன. அமைதியான வாழ்க்கை, செல்வம், உடல்நலம், நீண்ட ஆயுள், நாட்டில் பசுமைக்கு நல்ல மழை என்ற அனைத்தையும் இவைகளே கொடுப்பதால் இவைகளைத் திருப்தி படுத்த வேள்விகள் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

வருங்காலம் தெரியா நவக்கிரகங்கள்- ஒன்பது கிரகங்களும் இருக்கும் இடத்தை பொருட்டு அதன் பலனாக மனிதர்களுக்கு காலம் நேரம் கணித்து இன்னது நடந்தது. இது நடக்கும் எனக்கூறுவது ஜோதிடக்கலை. இக்கலைக்கு முக்கியமாக கிரகங்களின் நிலையே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எல்லோருக்கும் நிலையைக் கணிக்க உதவும் அந்த கிரகங்களுக்கு தங்களின் நிலை தெரியாத ஓர் காலம் வந்தது.

வருங்காலம் பற்றி சொல்ல ஏதுமில்லை என்ற கால மகரிஷியிடம் உங்கள் எதிர்காலம் பற்றித் தெரியுமா எனக்கேட்க அதிர்ந்தவர் வந்திருப்பது காலதேவன் என்பதை உணர்ந்து தன் எதிர்காலம் பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தார். எதிர்கால பாதிப்புகளை அகற்ற நவக்கிரக நாயகர்களை வணங்க அவர்கள் அவருக்கு அதைப் போக்க அருள் புரிந்தனர் ஒன்பது பேரும்.. காலவமுனிவருக்கு தொழுநோயிலிருந்து காப்பாற்ற வரம் அளித்தனர்.

ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் காலத்திலேயே ஆத்மாக்களுக்கு நன்மையோ தீமையோ அளிக்க வேண்டும் என்பது நியதி. அந்த நியதி மீறிய நவக்கிரகங்களை பிரம்மா சபித்தார். காலமகரிஷியின் தொழுநோய் நீங்க வரமளித்தவர்கள் அந்தக் காலம் முழுவதும் அதேநோயால் துன்புறுக என்ற சாபமடைந்த நவக்கிரகங்கள் தங்கள் சாபம் நீங்க திருமங்களக்குடி சுற்றியுள்ள ஒன்பது தீர்த்தங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்த்தத்தில் திங்கள் கிழமை காலையில் குளித்து எருக்க இலையில் தயிர் சாதம் உண்டு மற்ற நாளில் விரதமும் இருந்து பிராணநாதரை வணங்கி வழிபட்டு வர தொழுநோய் தோஷம் நீக்கியது,

தங்களுக்குத் தெரியாமல் வீடு- இடம் மாறிய நவகிரகங்கள்! -தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஊரில் பிறந்த இடைக்காடர். ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்து வந்தார். அவைகளை மேய விட்டு சிந்தனைவயப்பட்டு மரத்தடியில் அமர்ந்து அமைதியாய் இருப்பார். ஒருநாள் இவ்வாறு அமர்ந்திருக்கையில் வான்வழி சென்ற சித்தர் ஒருவர் கீழிறங்கி நீர் என்ன சிந்தித்துக் கொண்டிருந்தாய் என வினவினார்.

சுயநினைவிற்கு வந்தவர் அவருக்கு பால் கொடுத்து தாகம் தீர்க்க, மனம் மகிழ்ந்த சித்தர் இவருக்கு வைத்தியம், சோதிடம் ஞானம், யோகம் முதலியன உபதேசித்து மறைந்தார். அன்று முதல் இடைக்காட்டுச் சித்தர் ஆனார். அந்த திறமைகளால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குபின் ஏற்படும் பஞ்சத்தை அறிந்தார்.

முன்னெச்சரிக்கையாக எக்காலமும் கிடைக்கும் எருக்க இலைகளைத் திண்ண ஆடு மாடுகளுக்கு பழக்கினார். கெடாமல் இருக்கக்கூடிய குருவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். எதிர்பார்த்தபடி பஞ்சம் வந்தது. புல்பூண்டுகளும் அழிந்தன. எருக்க இலைகளைத் தின்றதால் ஏற்படும் அரிப்பை போக்க ஆடுகள்சுவரில் உடம்பைத் தேய்க்கும்போது சுவரிலிருந்து உதிரும் குருவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு உயிர் வாழ்ந்தார். பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிய இடைக்காடரும் அவருடைய ஆடுகளும் உயுருடன் இருப்பதைக் கண்ட நவகிரகங்கள் இவரைப் பார்க்க வந்தனர்.

அவர்களை வரவேற்று வரகு சாதத்தையும் ஆட்டுப்பாலையும் கொடுத்தார். பாலில் சமைத்த உணவை உண்டு அவர்கள் அப்படியே உறங்கி விட்டனர். நவகிரகங்கள் மயங்கி படுத்திருப்பதைக் கண்ட இடைக்காடர் தன் சோதிட அறிவிற்கேற்றவாறு மழை வருவதற்கான முறையில் கிரகங்களை இடம் மாற்றிப் படுக்கவைத்தார். கிரக நிலைகள் மாறியதால் வானம் இருண்டு மழை பொழியத் தொடங்கியது. பூமி குளிர்ந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிறைந்தன.

மழையின் குழுமை நவகிரங்களை எழுப்பியது. நாட்டின் பஞ்சத்தைப் போக்கிய சித்தரின் திறமையை பாராட்டினார்கள். மேலும் வரங்கள் கொடுத்து அவரை ஆசிர்வதித்தனர். பல ஆண்டுகள் வாழ்ந்து திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்

சூரியன் உருவத்தை செம்பிலும்-எருக்கு சமித்துடன், சந்திரனை ஸ்படிகத்திலும்-பலாசமித்துடன், அங்காரகன் எனும் செவ்வாய் உருவத்தை சிவப்பு நிறத்திலும்-கருங்காலி சமித்துடன், புதன் உருவத்தை சந்தன மரத்திலும்-நாயுருவி சமித்துடன், வியாழன் என்ற பிரகஸ்பதியை தங்கத்திலும்-அரசு சமித்துடன், சுக்கிரனை வெள்ளியிலும்-அத்தி சமித்துடன், சனி-வன்னிசமித்துடன், ராகு-அருகம்புல்லுடன், கேது-தர்ப்பையுடன் சனி, ராகு, கேது உருவங்களை ஈயத்திலும் வடித்து ஆராதனை செய்ய வேண்டும். இந்த சமித்துகளை தேன், நெய், தயிரில் தேய்த்து கோளுக்கான மந்திரங்களுடன் ஹோமகுண்டங்களில் பய பக்தியுடன் சேர்த்து முடிவில் அந்தணர்களுக்கு உணவளித்து தானங்கள் செய்தால் கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபடமுடியும்.

சந்தனக் குழம்பில் அந்தந்த உருவங்களை வரைந்தும் வழிபடலாம்.

நைசர்க்க பலம்!- நவகிரக சனியைவிட செவ்வாயும், செவ்வாயைவிட புதனும், புதனைவிட குருவும், குருவைவிட சூரியனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும் இவர்கள் அனைவரையும் விட இராகுவும் கேதுவும் பலம் பொருந்தியவர்கள் இந்த ராகு கேது மற்ற கிரகங்களைவிட பலம் பொருந்தியவர்கள். அதை நைசர்க்க பலம் -என்பர்.

நவக்கிரக பிரதிஷ்டை 1.வைதீகப் பிரதிஷ்டை, 2.ஆகமப்பிரதிஷ்டை, 3.சமப் பிரதிஷ்டை என 3 வகைப்படும்.

1.வைதீகப் பிரதிஷ்டை,
சூரியன் - கிழக்கு
சுக்கிரன், புதன் - கிழக்கு
சந்திரன், சனி - மேற்கு
செவ்வாய், ராகு, கேது - தெற்கு
குரு - வடக்கு

2.ஆகமப்பிரதிஷ்டை-
1.அந்தர் மண்டலம்- எல்லா கிரகங்களும் சூரியனைப் பார்த்து இருப்பர்.
சூரியன், செவ்வாய், சந்திரன், கேது – மேற்கு
குரு, சனி, ராகு - கிழக்கு
சுக்கிரன் - தெற்கு
புதன் - வடக்கு

2.பஹிர் மண்டலம்- எல்லா கிரகங்களும் வெளிப்புறம் பார்த்து இருப்பர்.
சூரியன், குரு, சனி, ராகு - மேற்கு
கேது, செவ்வாய், சந்திரன் - கிழக்கு
புதன் - தெற்கு
சுக்கிரன் - வடக்கு

3.சமப் பிரதிஷ்டை-எல்லா கிரகங்களும் ஒரே வரிசையாக மேற்கு பார்த்து இருப்பர்.

நவக்கிர ஸ்லோகம்
”ஓம் ஸ்ரீ ஆதித்யாய சோமாய
மங்களாய புதாய ச
குரு சுக்ர சனியச்ச
ராகுவே கேதுவே நம”

$$$$$

நவகிரகங்கள்!

1.சூரியன் எனும் மார்த்தாண்டன்
2.சந்திரன்
3.அங்காரகன் எனும் செவ்வாய்
4.சந்திரனின் மகன் புதன்
5.பிரகஸ்பதி என்ற தேவ குரு வியாழன்
6.சுக்கிரன் என்ற அசுர குரு வெள்ளி 
7.சூரியனின் மகன் சனி
8.நிழற் கிரகம்  ராகு
9.நிழற் கிரகம் கேது

$$$$$

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

#####

லலிதாபரமேஸ்வரி-பரமேஸ்வரன் சபை

காமேஸ்வரி-காமேஸ்வரர் -மாயையின் மூன்று குணங்களில் சுத்த சத்வ குணத்தில் பிரம்மத்தின் சம்பந்தமாக இருப்பது வித்தை எனப்படும். ஸ்ரீவித்யை என்றால் பரம மங்களம். அது மோக்ஷத்தை அருளவல்ல பிரும்ம வித்யா ஸ்வரூபினியான சித் சக்தியாகும். மின்னல் கொடிபோல் பிரகாசித்து விளங்கும் அந்த சித் சக்தியே சிந்தையும், மொழியும் செல்லாத நிலைமையான ஸ்ரீவித்தையாகும். பரப்பிரும்ம ஸ்வரூபத்திற்கு அபிமானதாய், சுத்தமான சைதன்ய வடிவினதாய் உள்ள சக்தியே சித் சக்தி.

ஸ்வரூபம்தான் பிரபஞ்ச ஆதாரம். மாயையின் முக்குணங்களில் பிரதிபலித்து வடிவமாகத் தோன்றுவது சித்சக்தியே. சக்தியின் கருணையால் பிறப்பது அருள். சிவமே அன்பு. அன்பு இன்றி அருள் சுரக்காது. அருள் இன்றி அன்பு பயன்படாது. அருளினால் இம்மை, மறுமை இருபயனும் விளையும், நிர்க்குண உபாசனையால்- போதனையால் மறுமைப் பயன் வேண்டுவோர் இகசுகம் வேண்டார். தாய் தன் சேய்க்கு வேண்டியதைக் கருணை மூலமாக அளிப்பாள். ஆகவே சித் சக்தியே ஸ்ரீவித்தை. வித்யை என்றால் அவித்யை ஒழிக்கும் சாமர்த்திய சக்தி உடையது.

சக்தி உபாசனையை ஸ்ரீவித்யை என்றும் சகுணம் என்றும் சொல்வர். இதனால் இகத்திலும் பரத்திலும் பயன்கள் உண்டு. சிவ உபாசனையை பிரும்ம வித்தை என்றும் நிர்க்குணம் என்றும் சொல்வர். இதனால் ஜீவன் முக்தனாய் மறுபிறவியற்று சச்சிதானந்தாமாய் விளங்கலாம். அன்பே சிவம் என்று சொல்வர். சிவத்தை எளிதில் அறிய முடியாது. ஆனால் அன்பை நம்மால் அறிய முடியும். ஆகவே அன்பினால் சிவத்தை அடைய முடியும். அந்த அன்பே சித்சக்தி. சித்சக்தியாகிய தாயின் கருணை நமக்கு ஏற்படாவிட்டால் நம்மால் இந்தப் பிறவிப் பெருங்கடலை கடக்க முடியாது. எல்லா வித்தைகளுக்கும் லட்சியமாய், ஆண் பெண் அலி என்ற லிங்க வேறுபாடு இல்லாததாயும் பிறவிப் பெருங்கடலில் துன்பத்தில் உழல்பவர்களுக்கு தாரகம்- படகு போன்று காப்பாற்றுவதால் அப்பரம் பொருள் சக்தி-பராசக்தி எனப்படும். அவள் ஒருவளே பிரும்ம ரூபத்தில் சிருஷ்டிப்பவளாகவும், விஷ்ணு ரூபத்தில் உலகை காப்பவளாகவும், ருத்ர ரூபத்தில் சம்ஹரிப்பவளாகவும் இருக்கின்றாள்.

வித்தில்லாமல் பயிர் இல்லை. வித்தாய் விளங்கும் சிவத்தினுள் சக்தி அடங்கியுள்ளது. விதை முளைத்தெழும்போது சக்தி சிவத்தை வளர்க்கும். இறுதியில் வளர்ந்த சக்தி அடங்கும் இடம் சிவன் என்ற வித்தே என்பதே தத்துவம்.

பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருமூர்த்திகளுக்குமேல் ஈஸ்வர ஸ்வரூபமாகிய மகேசுவரன் சதாசிவன், அவர்களுக்குமேல் காமேசுவர் காமேஸ்வரியாக சிவசக்தி ஐக்ய நிலை. ஈஸ்வரனிடத்தில் முதலில் தோன்றியது சக்தி தத்துவம். பின் திரிமூர்த்தி மற்றும் மூன்று சக்திகள் தத்துவம். அதிலிருந்தே சதாசிவ தத்துவம் தோன்றுகிறது.

லலிதாபரமேஸ்வரி-ஈஸ்வரன், திரிபுரசுந்தரி-திரிபுராந்தகர், இராஜராஜேஸ்வரி-இராஜராஜேஸ்வரர். . எல்லாம் காமேசுவர்- காமேஸ்வரியே!

தேவியின் அங்க தேவதை- பாலா, உபாங்கதேவதை- அன்னபுரணா, பாசத்திலிருந்து தோன்றிய ப்ரித்தியங்க தேவதை- அச்வாரூபா, இடது- இலட்சுமி, வலது- சரஸ்வதி, அருகில் புத்தியிலிருந்து தோன்றிய ராஜமாதங்கி-சியாமளாதேவி-மந்திரிணீ, அஹங்காரத்தினின்று தோன்றிய வராஹி-தண்டினீ, சண்டி, வைஷ்ணவி,

யோகினிகள் -ஒவ்வொரு திதிக்கும் உரியவள் அம்பிகையின் அம்சமான ஒரு தேவி. இத்தேவிகள் மகாநித்யையுடன் 16 பேர். 1.காமேஸ்வரி, 2.பசுமாலினி, 3.நித்யக்லின்னா, 4.பேருண்டா, 5.வந்ஹிவாஸினி, 6.மஹாவஜ்ரேஸ்வரி, 7.சிவதூதீ, 8.த்வரிதா, 9.குலஸூந்தரி, 10.நித்யா, 11.நீலபதாகா, 12.விஜயா, 13.ஸர்வமங்களா, 14.ஜ்வாலாமாலினி, 15. சித்ரா இந்த பதினைந்து நித்யா தேவிகளுக்கு அதிஷ்டானமாய் விளங்கும் மஹாநித்யாதேவி- நித்யாகாமேச்வரி. இந்தச் சக்திகளுக்கு பொதுவாக யோகினிகள் எனப்பெயர். அம்பிகையின் அங்கதேவதை களான இவர்கள் ஸ்ரீ சக்கரத்தின் நடுவிலுள்ள முக்கோணத்தைச் சுற்றி இருப்பார்கள். அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை ஒவ்வொரு தினத்திற்கும் ஒரு திதி என்று தனது அங்கமான பதினைந்து நித்யாக்களைப் பூஜிப்பதால் தேவி பரம சந்தோஷமடைகின்றாள். இது திதி நித்யா பூஜை எனப்படும். இதில் சுக்லபக்ஷம், கிருக்ஷ்ண பக்ஷம் என்ற இரு பக்ஷங்களிலும் நடுநாயகமாக வீற்றிருப்பவள் த்வரிதா என்கிற நித்யாதேவி. இவளுடைய திதி தினம் அஷ்டமி. இருவிதச் சக்திகளுடன் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்பவளும் இவளே சிற்றின்பத்தில் ஆழ்த்துபவளும் இவளே. அதனால் இவள் திதியில் தேவ காரியங்கள் மட்டுமே செய்யப்படும்.

பிரதிபத (எ) பிரதமை திதி –காமேஸ்வரி— நெய் நிவேதித்து பூஜை -பிணி நீக்கம்,
துவிதை திதி –பசுமாலினி- சர்க்கரை நிவேதித்து பூஜை –ஆயுள் பெருக்கம்,
த்ரிதியை திதி –நித்யக்லின்னா- பால் நிவேதித்து பூஜை –சகல துக்க நீக்கம்
சதுர்த்தி திதி –பேருண்டா- பக்ஷணம் நிவேதித்து பூஜை –விக்ன நிவர்த்தி
பஞ்சமி திதி –வந்ஹிவாஸினி- வாழைப்பழம் நிவேதித்து பூஜை –புத்தி சூட்சுமம்
சஷ்டி திதி –மஹாவஜ்ரேஸ்வரி- தேன் நிவேதித்து பூஜை –உடல் ஒளி
சப்தமி திதி -சிவதூதீ- வெல்லம் நிவேதித்து பூஜை –சேக நிவர்த்தி
அஷ்டமி திதி -த்வரிதா- தேங்காய் நிவேதித்து பூஜை – தாப நிவர்த்தி
நவமி திதி –குலஸூந்தரி-- நெற்பொறி -நிவேதித்து பூஜை – இவ்வுலகச் சுகம்
தசமி திதி –நித்யா- கறுப்பு எள் நிவேதித்து பூஜை - யமலோக பய நிவர்த்தி
ஏகாதசி திதி –நீலபதாகா- தயிர் நிவேதித்து பூஜை –தேவி ஆதிக்கம்
துவாதசி திதி –விஜயா- அவல் நிவேதித்து பூஜை –தேவியிடம் ஆனந்தம்
த்ரையோதசி திதி –ஸர்வமங்களா- கடலை நிவேதித்து பூஜை –சந்த்தி விருத்தி
சதுர்த்தசி திதி –ஜ்வாலாமாலினி- சத்துமா நிவேதித்து பூஜை –சிவன் அருளுக்குப் பிரியமாகும் தன்மை
பௌர்ணமி திதி/ அமாவாசை திதி சித்ரா--பாயாசம் நிவேதித்து பூஜை –பிதுர்களை கரையேற்றுதல்
இந்த பதினைந்து நித்யா தேவிகளுக்கு அதிஷ்டானமாய்- காரியத்திற்கு காரணமாய் விளங்கும் மஹாநித்யாதேவி- நித்யாகாமேச்வரி.

அந்தந்த நட்சத்திரன்று லலிதாபரமேஸ்வரி-ஈஸ்வரன், திரிபுரசுந்தரி-திரிபுராந்தகர், இராஜராஜேஸ்வரி-இராஜராஜேஸ்வரர் –க்கு பூஜைக்குரிய நிவேதனப் பொருள்.

அஸ்வினி-நெய், பரணி-எள், கார்த்திகை-சர்க்கரை, ரோகிணி-தயிர், மிருகஷீரிடம்-பால், திருவாதிரை-கிலாடம், புனர்பூசம்-தயிரேடு, பூசம்-மோதகம், ஆயில்யம்-பேணி, மகம்- கிருத மண்டகம் (நெய்த்திரட்சி, நெய்ப்பாலேடு), பூரம்-கம்சாரம் (நீர்சாரம்), உத்திரம்-வடபத்திரம், ஹஸ்தம்-கிருதபூரம் (நெய்வெல்லம்ஹல்வா), சித்திரை-வடை, சுவாதி- கோகரசகம் (தாமரை ரசகம்), விசாகம்-பூர்ணயம், அனுஷம்-மதுசூரணம் (வள்ளிக் கிழங்கு), கேட்டை-வெல்லம், மூலம்-அவல், பூராடம்-திராக்ஷை, உத்திராடம்-கர்ச்சூரி (பேரிச்சம்), திருவோணம்-ராசகம், அவிட்டம்-அப்பம், சதயம்-நவதீதம் (வெண்ணெய்), பூரட்டாதி-பயிறு, உத்திரட்டாதி-மோதகம், ரேவதி-மாதுளம் பழம்.

ஸ்ரீமேரு சக்கரம் அமைப்பு!

கீழே சதுரமான ஒரு மூன்று அடுக்கு மேடை மேலே செல்ல செல்ல குருகும்.
நான்கு முனைகளிலும் முறையே சூரியன், சந்திரன், முக்கோணம், சதுரம்..
அதன் மேலே 3 வட்ட வடிவமான மேடை மேலே போகப் போகப் குருகிக்கொண்டே செல்லும்.
அதற்கு மேலே 16 இதழ் தாமரை.
அதற்கு மேலே 8 இதழ் தாமரை.
அதற்கு மேலே 14 முக்கோணம்
அதற்கு மேலே 10 முக்கோணம்
அதன் மேலே 10 முக்கோணம்
அதன் மேலே 8 முக்கோணம்
அனைத்துக்கும் மேலே உச்சியில் ஒற்றை முக்கோணம்.
அதன் நடுவில் ஒரு வட்டம் அதில் உருண்டையான பிந்து வடிவம் (அம்பாள்).
உச்சியிலிருந்து பார்த்தால் 43 முக்கோணம் தெரியும்.
ஸ்ரீ மேருவை செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் உருவாக்குவது வழக்கம்.
சாக்த வழிபாட்டிற்கு ஸ்ரீவித்யா வழிபாடு என்பர்,

ஸ்ரீசக்ரம் சர்வரோகஹர ஸ்ரீசக்ரத்தின் முக்கோணத்தில் வசினி, காமேசி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌளினி ஆகிய லலிதா சகஸ்கர நாமத்தை இயற்றிய எட்டு தேவதைகள் உறைவதால்-சகஸ்ரநாம அர்ச்சனைகளை இந்த ஸ்ரீ எந்திரத்திற்கு செய்ய காமாட்சி அருள்புரிந்ததால் கர்ப்பகிரஹத்தை முக்கோணவடிவில் அமைத்து மேலும் உக்கிரகமாக இருந்ததால் எட்டு திக்குகளிலும் இருந்த காளியை ஆகர்ஷித்து ஸ்தம்பனம் செய்து ஸ்ரீசக்ர சுற்றில் அடைத்ததால் அன்னை சாந்த சொரூபியாகி அருள். தேவியின் விருப்பப்படி தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றின் கோடியில் உள்ள மோட்சத்திற்கு அழைத்து செல்வதாலும், கோடி விருப்பங்களை- கோடி காமங்களை நிறைவேற்ற ஸ்ரீசக்ர பதக்கம் அருளி ஈசன் அருள்.

பார்வதி தேவியின் நவ பெயர்கள். 1.ஷைலபுத்ரி, 2.பிரம்மசாரினி, 3.சந்திரகாந்தா, 4.குஷ்மாந்தா, 5.ஸ்கண்டமாதா, 6.காத்யாயினி, 7.காளாராத்ரி, 8.மகாகௌரி, 9.சித்தாத்ரி.

பராசக்தியின் பத்து (தசமகா) வடிவங்கள்- வித்தைகள் சித்தவித்தைகள் மகாவித்தைகள் எனப்பட்டாலும் துரியமானதும் தத்துவத்திற்கு அப்பாற்பட்டதுமான தேவியின் ஆனந்த வடிவமே மஹாவித்தை எனப்படும். அந்த ஈசுவர சக்தி தேவியிடமிருந்து தோன்றியவர்களே தசமஹாவித்தை. எண் திசைகள் மற்றும் நிலம், வானம் எனப் பத்து திக்குகளில் தோன்றிய இந்த தசமஹா வித்தைகளே விஷ்ணுவின் தசாவதார காரியங்களை நிறைவேற உதவியுள்ளார்கள்.

தசமஹாவித்தைகள்!


1.தாரா!
2.கமலாத்மிகா!
3.சின்னமஸ்தா!
4.காளி!
5.திரிபுர சுந்தரி!
6.மாதங்கி!
7.பகாளாமுகி!
8.புவனேஸ்வரி!
9.திரிபுரபைரவி!
10.தூமாவதி!

இந்த தசமஹாவித்யா எனப்படும் பத்துவிதமான சொரூபங்களில்

மாதங்கி, புவனேஸ்வரி, திரிபுரசுந்தரி, மஹாலட்சுமி என்ற நான்கு சொரூபங்களும் சத்வ குணத்தைச் சார்ந்த சொரூபங்கள்.
மாகாளி, தாரா, பைரவி, சின்னமஸ்தா ஆகிய நான்கு சொரூபங்களும் ராஜச குணம் சார்ந்தவர்கள்.
தூமாவதி தாமஸ குணம் சார்ந்த சொரூபம்.
ஸ்ரீபகளாமுகி தேவி சத்வ ,ராஜச, தாமஸ என்ற மூன்று குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவள். இதன் காரணமாக சர்வ வல்லமை பெற்றதனால் திடீரென்று கோபம் / மகிழ்ச்சி அடையக்கூடும்.


#####

ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 09:39

நாரயணர் சபா!

Written by

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

நாரயணர் சபா!

விஷ்ணு!

நீக்கமற எங்கும் நிறைந்த விஷ்ணு- பரம் வியுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் நின்று இருந்து கிடந்து நடந்து அருள் பாலிக்கின்றார். விஷ்ணு வின் அருளைப்பெற ஏகாதசியன்று விரதமிருந்து துவாதசியன்று வெண்பட்டாடை அணிந்து விஷ்ணுவை வெண்மலர்களால் பூஜிக்கவேண்டும்.

பரம்- திருமகள் (ஸ்ரீ) மண்மகள் (பூதேவி) ஆய்மகள் (நீளா) ஆகியோரோடு பரமபதத்தில் தன்னை விட்டு பிரியாத அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் போன்ற நித்தியர், பூவுலகை விட்டு நீங்கி தன்னை வந்தடைந்த புனிதரான முக்தர் ஆகியோருக்கு எப்போதும் இன்முகத்துடன் வாழ்வளிக்கும் ஆனந்த நிலை பரத்துவம் எனப்படும்.

வியூகம்- உலகில் அனைத்தையும் படைக்க தன் நாபிக் கமலப் பூவில் நான்முகனைப் படைத்து மற்ற தேவர்களின் குறைகளைக் கேட்டுக் களைய உதவும் வகையில் அனந்தன்மேல் பள்ளி கொண்டிருக்கும் கோலமே வியூகம்.

விபவம்- அறம் தலைத்து நிற்க (தர்ம ஸம்ஸ்தாபனம்) நல்லவர்களை காக்க (ஸாது பரித்ராணம்) அல்லவர்களை அழிக்க (துஷ்க்குத்விநாசம்) பூவுலகில் இராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரங்களை மேற்கொள்வது விபவம் எனப்படும்.

அந்தர்யாமி- கறந்த பாலில் நெய்போல், எள்ளுக்குள் எண்ணெய்யாக இருப்பதுபோல் கட்டை விரல் அளவில் உள்ளத்தே எழுந்தருளி யிருப்பது அந்தர்யாமி எனப்படும்.

அர்சை- அடியவர்கள் விருப்பும் பொன், வெள்ளி முதலிய உலோகங்களிலும், மரம், மண், கல், வரைச்சித்திரம் அனைத்திலும் தோன்றும் வடிவமே அர்ச்சாவதாரமாகும்.

விஷ்ணு ஆலயத்தைத் திறக்குமுன் மங்கள வாத்தியங்கள் முழங்க கதவுகள் திறக்கப்படவேண்டும்.

எந்தெந்த மாதங்களில், எந்த நாட்களில் மகாவிஷ்ணுவை எந்தவடிவில் பூஜித்து விரதம் இருக்கவேண்டும்.

சித்திரை- வளர்பிறை துவாதசி- வாமனனாகிய நாராயணனை பூஜைக்க வேண்டும்.

வைகாசி- வளர்பிறை துவாதசி- பரசுராம துவாதசி- பரசுராமவதார நாராயணனை பூஜிக்க வேண்டும்.

ஆனி- வளர்பிறை துவாதசி- ஸ்ரீராம துவாதசி- ராமவதார விஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.

ஆடி- வளர்பிறை துவாதசி- கிருஷ்ண துவாதசி- கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.

ஆவணி- வளர்பிறை துவாதசி- புத்த துவாதசி- ஆபத்திலிருந்து விடுபட நாராயணனை பூஜிக்க வேண்டும்.

புரட்டாசி- வளர்பிறை துவாதசி- கல்கி துவாதசி- கல்கி அவதார விஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.

புரட்டாசியில் சூரியன் கன்னிராசியில் பிரவேசிப்பதாலும் புதன் மிகவும் உச்சம் பெருவதாலும் அதன் அதிதேவதை திருமாலாகவும் இருப்பதால் மகாவிஷ்ணுக்கு உரிய மாதம். புதனின் நட்புகிரகம் சனி ஆயுட்காரகர் என்பதால் புரட்டாசி சனிக்கிழமை விரதம் சிறந்த பலனைத் தரும்.

புரட்டாசி தேய்பிறை ஏகாதசி- வாமன ஏகாதசி எனப்படும். இந்நாளில் மாகாவிஷ்ணு சயனத் திருக்கோலத்தை மாற்றுவதால் பரிவர்த்தன ஏகாதசி எனப்படும். மகாபலியை வாமன அவதாரம் எடுத்து அழித்தது இந்த ஏகாதசி நாளில். எனவே ஜெயந்தி ஏகாதசி என்றும் கூறுவதுண்டு.

புரட்டாசி வளர்பிறை ஏகாதசி அஜா ஏகாதசி எனப்படும். பழைய வினைகள், முன் வினைப்பயன் காரணமாக ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.

மண்பாண்டங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு நிவேதனம்!

திருப்பதியில் வாழ்ந்த குயவன் பீமன் மனம் எப்போதும் கோவிலில் இருக்க ஆசைப்பட்டாலும் குடும்ப சூழ்நிலையால் அவ்வாறு இருக்க முடியவில்லை. தினமும் காலை மாலை இருநேரங்களிலும் கோவிலுக்குச் சென்று எல்லாம் நீயே வேங்கடவா எனச்சொல்லி வணங்கி வந்திடுவான். இருப்பினும் சனிக்கிழமை தோறும் தவறாமல் விரதம் இருந்து வந்தான்.

மன்னர் தொண்டைமான் திருப்பதி ஆலயத்தைப் பெரிது படுத்தி புனரமைப்புச் செய்து சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்ய ஏற்பாடு செய்தார். தங்கத்தால் ஆன அழகான பூமாலை செய்து அணிவித்து அழகு பார்த்து மகிழ்ந்தார்.

ஒரு புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை விரதம் இருந்தும் கோவிலுக்குப் போக முடியாத சூழல் ஏற்பட பீமன் மிகவும் வருந்தினான். பெருமாளை இங்கு வரவழைத்து விட்டால் என்ன என்ற எண்ணம் தோன்ற மண்ணால் சிலை செய்து மண்ணால் பூமாலை செய்து அணிவித்து அழகு பார்த்து திருப்தி அடைந்தான்.

அடுத்தநாள் காலை தொண்டைமான் பெருமாளைப் பார்த்தபோது தங்க மாலையுடன் மண் மாலையும் இருக்க தான் என்ன அபசாரம் செய்தோமோ என வருந்தி உண்ணா நோன்பு மேற்கொண்டான். மூன்று நாடகள் கழிந்தபின் அவன் கனவில் பெருமாள் பீமனைப் பற்றிச் சொல்ல மன்னன் பீமனைக் கண்டு பொன்னும் பொருளும் கொடுக்க அதை மறுத்த பீமன் அதைக் கொண்டு மேலும் தர்மகாரியங்கள் செய்யுங்கள் என்றான். இதனால் தொண்டைமானின் கர்வம் அழிந்தது. குயவன் பீமனின் பெயர் நிலைக்கும் வண்ணம் இன்றும் மண்பாண்டங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றது.

புரட்டாசியில் சூரியன் கன்னிராசியில் நுழைந்ததும் பித்ரு லோகத்தில் வசிக்கும் முன்னோர்கள் யமன் அனுமதியுடன் பூமிக்கு வந்து தங்கள் உறவினர்கள் தங்களை நினைக்கின்றார்களா என்பதை அறிய ஆவலுடன் வருகின்றனர். அந்தக் காலம் புரட்டாசி வளர்பிறை பிரதமையிலிருந்து வரும் 15 நாட்கள் மாளயபட்சம் எனப்படும். அப்போது அவர்களுக்கு நீர்க்கடன் செய்து அவர்கள் தாகத்தை தணிக்கவேண்டும்.

மாளயபட்ச நாட்கள் அனைத்துமே நீத்தார் வழிபாட்டிற்குரியது என்றாலும் மாளயபட்ச அஷ்டமி- மத்யாஷ்டமி, பரணி நடசத்திரத்தன்று மகாபரணி, திரயோதசி திதி கஜச்சாயை என்ற மூன்று நாட்கள் மற்றும் மகாளாய அம்மாவசை பிதுர்க்கடன் செய்ய மிகவும் சிறப்பான நாட்கள்.

ஐப்பசி- வளர்பிறை துவாதசி- பத்மநாப துவாதசி- பத்மநாபசுவாமியைப் பூஜிக்க வேண்டும்.

கார்த்திகை- வளர்பிறை துவாதசி- விஷ்ணு ப்ரீதிக்கான வழிபாடு. பதித பாவன தரணி துவாதசி. வராகம் பூமியை ரட்சித்த நாள். கிருஷ்ணன அல்லது பலராமரை பூஜித்திட வேண்டும்.

மார்கழி- வளர்பிறை துவாதசி- மச்ச துவாதசி- நாராயணனை பூஜிக்க வேண்டும்.

தை- வளர்பிறை துவாதசி- கூர்ம துவாதசி- விஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.

மாசி- வளர்பிறை துவாதசி- சர்வ பாப விமோசனம். வராக மூர்த்தியை பூஜிக்க வேண்டும்.

பங்குனி- வளர்பிறை துவாதசி- நரசிம்ம துவாதசி- நரசிம்மரை பூஜிக்க வேண்டும்.

விஷ்ணுவால் வெறுக்கப்படும் காரியங்கள்.
தூய்மையற்ற பொருள்களை உண்னுதல்
நீராடமல் சாளக்கிராமங்களைத் தொட்டவர்கள்
மாயானத்திலிருந்து வந்து பூஜை செய்பவர்கள்
அழுக்கான தூய்மையற்ற ஆடைகள் அணிந்து பூஜை செய்வது
மற்றவர்கலின் ஆடைகளை அணிந்து பூஜை செய்வது
கோபத்துடனும் வெறுப்புடனும் பூஜை செய்தல் கூடாது.
மாமிசங்களை உண்டபின் பூஜை செய்யக் கூடாது
நெய்வேத்தியம் செய்யாத பொருட்களை மற்றவர்களுக்கு தரக்கூடாது.
மது உட்கொண்டு பூஜை செய்யக்கூடாது
மாமிசம் விற்பதோ உண்னுவதோ கூடாது.

அவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிபதி,

அசுர தேவர் யுத்தத்தில் ஏராளமான அசுரர்கள் அழிந்துபோக தோற்ற அசுரர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியர் வீட்டில் தஞ்சமடைந்தனர். அசுரர்களைக் காக்க மந்திர தந்திரங்களை கற்க சிவபெருமானைக் கைலாயத்தில் சந்தித்தார். பெருமான் இதுவரை யாருமே செய்யாத ஒரு விரதத்தை தலைகீழாக நின்று ஓராயிரம் ஆண்டுகள் தவம்செய்தால் மந்திர உபதேசம் கிடைக்கும் என்றார். தவமிருக்க சுக்கிராச்சாரியர் கானகம் சென்றார். சுக்கிரன் வீட்டில் இல்லாததால் தவித்த அசுரர்களை சுக்கிராச்சாரியாரின் தாயும் பிருகு முனிவரின் மனைவியிடம் தஞ்சம்புக, அப்பெண்மணி என் கற்பின் மகிமையால் உங்களைக் காப்பாற்றுகின்றேன் என்று அபயம் அளித்து அடைக்கலம் தந்தாள். தேவர் குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி தேவேந்திரன் அசுரர்கள்மீது போர் தொடுக்க பிருகுவின் மனைவி தேவேந்திரனை செயலிழக்கச் செய்து விட்டாள். விஷ்ணு சக்ராயுதத்தை அனுப்ப அது தஞ்சம் கொடுத்த முனிவரின் மனைவி சுகிர்தி முதல் அனைவரையும் கொன்றது.

தவம் முடிந்து வந்து விபரம் அறிந்த பிருகு முனிவர் கோபம் கொண்டு பஞ்சாட்சாரம் ஓதி அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் தன் மனைவியை எழுப்பிவிட்டு விஷ்ணுவிடம் போர்தொடுத்து, பெண் கொலை செய்த விஷ்ணுவே, நீ பூலோகத்தில் இழிவான யோனியில் ஓயாமல் பிறந்து, இறந்து, பிறந்து, இறந்து வாழ்வாய் எனச் சாபமிட்டார், ஒவ்வொரு ஜன்மத்திலும் மலமூத்திர சம்பந்தமுள்ள கர்ப்ப வாசத்திலே நீ பிறவி எடுக்க வேண்டும் என்றார். போரில் எதிரி என்று ஆனபின் கொல்வது குற்றமல்ல என்ற நிலையிருப்பினும் விஷ்ணு பிருகு முனிவரின் சாபத்தை சிவன் யோசனைப்படி மக்களின் நன்மைக்காக பயன்படுத்த திட்டமிட்டார்.

வாசுதேவகிக்கு சுதர்சனம் என்ற மகனாகப் பிறந்தார். பிறந்தவுடன் குழந்தை சிவ மந்திரம் சொல்லியது அக்குழந்தை. அக்னீஸ்வரர் கோவில் சென்றது. வாசுதேவர் என்ன சொல்லியும் திருமால் புகழ் பாடாமல் சிவன் புகழைப் பாடியது. ஒருவர் தன் புகழைப் பாடுவது தற்பெருமையாகும். சாபத்தினால் பிறந்த திருமால் எப்படித் தன் புகழ் பாடுவார். சுதர்சனம் திருநீறு பூசவதைக் கண்ட வாசுதேவர் கோபங்கொண்டு அவனை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார். வேறு எதுவும் தெரியாத நிலையில் சிவன்கோவில் சென்று தங்கினார். நள்ளிரவில் தட்சிணாமூர்த்தி வடிவில் அக்னீஸ்வரர் தோன்றி ஹரதத்தர் எனப் பட்டம் அளித்து ஞான உபதேசம் செய்தார். கஞ்சனூர்- (தன் புகழ் பாடுவது தற்பெருமை, போரில் கொன்றால் பாவமில்லை, எந்த செயலையும் பொது நலனுக்கு உபயோகமாக்குதல் என்ற இந்த மூன்று விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன)

சிவன் ஆலோசனைப்படி உலக உயிர்களின் நலன் கருதி தான் அடைந்த சாபங்களின் மூலமாகப் பூலோகத்தில் அவதாரங்களை எடுந்து அதை மக்களின் நல்வழிக்காக செயல்படுத்த முடிவெடுத்தார் விஷ்ணு. இந்த அவதாரங்களில் மானிட உருவம் தரித்தது வாமனர், ராமர், மற்றும் கிருஷ்ணர். இதில் வாமனர், கிருஷ்ணர் அவதாரங்களில் கடவுளின் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். ராமாவதாரத்தில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை அறியாதவராய் எளிய மானிட வாழ்வு வாழ்ந்ததால் இராமாவதாரம் சிறப்பு பெற்றது.

சாக்ஷுஷு மன்வந்திரத்தின் முதலாவது சதுர்யுகக் கிருதத்தில் தருமர் என்பவருக்கு நரநாராயணர்களாக விஷ்ணு பிறந்துள்ளார்.

பின்னர் வைவஸ்வத மன்வந்திரத்தில் முதல் சதுர்யுக கிருதயுகத்தில் அத்திரி முனிவரின் பத்தினி அனுசூயை மும்மூர்த்திகளும் புத்திரர்களாக வர விரும்பியதால் நாராயணர் தத்தாத்திரேயராகப் பிறந்தார்.

அவதாரங்கள்
1. மச்ச அவதாரம்!
2. கூர்ம அவதாரம்! 
3. வராகஅவதாரம்!
4. நரசிம்ம அவதாரம்!
5. வாமனஅவதாரம்!
6. பரசுராம அவதாரம்!
7. ராம அவதாரம்! 
8. கிருஷ்ண அவதாரம்!
9. பலராம அவதாரம்!
10. கல்கி அவதாரம்!

#####

திங்கட்கிழமை, 16 July 2018 09:31

ராஜலட்சுமி சபை!

Written by

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

#####

ராஜலட்சுமி சபை!

லட்சுமி!

பிரம்மன் ஆலோசனைப்படி தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மந்தாரமலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிராக்கி பாற்கடலைக்கடைய அதற்கு மகாவிஷ்ணு கூர்ம வடிவெடுத்து உதவி புரிய மற்றபொருட்கள் தோன்றியபோது லட்சுமியும் தோன்றினாள்.

எல்லா உலகங்களில் உள்ளவர்களாலும் பூஜிக்கப்படுபவள் லட்சுமி. சத்யம் தவறாதவர்கள், சூரிய- சந்திர மண்டலங்கள், பால், தானியம், உடைகள், சந்தனம், நகைகள், தூய இல்லங்கள், புஷ்பங்கள், மங்கலக் கலசங்கள் என மங்களகரமான எல்லா இடங்களிலும் அவள் வசிக்கின்றாள்.

இந்திரன் லக்ஷ்மியை தொடர்ந்து பூஜித்து வந்தான்- ஒருசமயம் துர்வாச மகரிஷி திருமகளிடமிருந்து பெற்ற மாலையை தேவேந்திரனிடம் கொடுத்தார். ஆணவம் சேர்ந்திருந்த நிலையில் அந்த மாலையின் பெருமையை அறியாத இந்திரன் யானையின் தலையில் வைத்தான். செருக்குடன் இருந்த வெள்ளையானையும் அந்த மாலையை பிய்த்துப் போட்டது. லட்சுமி தேவியின் மாலைக்குரிய மரியாதை தராத செயல் பிரமஹத்தி தோஷத்திற்குச் சமம். வெகுண்ட துர்வாசர் உன்னிடமிருக்கும் சகல செல்வங்களும் உன்னைவிட்டு விலகட்டும் எனச் சாபமிட்டார்.

ஒன்றை தவறு என தெரிந்தால் செய்ய மாட்டோம். செய்தபின் தெரிந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்திரன் மன்னிப்பு கேட்டாலும் சாபப்படி லட்சுமி இந்திரனுடைய அமராவதி பட்டணத்தை விட்டு அகல சகல செல்வங்களையும் இழந்தான். பிரம்மனிடம் சென்று ஆலோசனை செய்தான். இருவரும் மகாவிஷ்ணுவிடம் செல்ல அவர் அருள் பெற்று லட்சுமி பூஜை செய்து இழந்த லட்சுமி கடாட்சமான செல்வங்களை பெற்றான்.

தன் கணவன் விஷ்ணு பெண் ரூப மெடுத்து சிவனுடன் கூடியதை அறிந்து அதிர்ச்சியும் கோபமும் கொண்டு சிவனிடம் தன் கோபத்தைக் காட்ட சிவனைத் தேடினாள். எங்கும் காணமுடியாததால் பூலோகத்திற்கு வந்தாள். தவமிருக்க ஆரம்பித்தாள். பல யுகங்கள் கடந்தன. வில்வ மர ரூபங்கொண்டு வில்வத்தை ஈசன்மேல் பொழிந்தாள். காலம் கனிய சிவன் காட்சி கொடுத்தார். ஐயப்பன் அவதாரம் நிகழவேண்டியிருந்த காரணத்தையும் அதற்காக நடந்த நிகழ்வுகள் அவை என்பதை விளக்கி லட்சுமியை அமைதிப்படுத்தினார். வில்வம் வர்ஷித்த லட்சுமியை ஐஸ்வர்ய லட்சுமியாய் திகழ வரம் அளித்தார். தன் அருளின் அடையாளமாக ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமமாக உருவகம் செய்து எப்போதும் விஷ்ணு மார்பில் இருக்கச் செய்தார். மகாலட்சுமியை தன் இதயத்தில் ஏற்று கௌஸ்துப மணியைத் தரித்திருக்கும் மகாவிஷ்ணு ஸ்ரீநிவாஸன் எனப் பெயர் பெற்றார். மகாலட்சுமியால் அவருக்கு மந்திரசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியாசக்தி அனைத்தும் கிடைத்தன. சுக்கிரன் யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இங்கு வழிபட்டுதான். இராவணன் சிவனை வழிபட்டு ஈஸ்வரப் பட்டம் பெற்ற தலம். மன்மதனுக்கு அரூப அழகுடலை அளித்ததால்-திருக்காமேஸ்வரர்- மன்மதபாணம் அம்பிகை மீதுபட்டதால்- சிவகாமசுந்தரி, மன்மதனுக்கு வைத்தியம்- வைத்தியநாதர். போகர், பாம்பாட்டிசித்தர், புலிப்பாணிசித்தர் தவம் மேற்கொண்ட தலம். வெள்ளூர்-முசிறி-6,திருச்சி-31

தஞ்சை மன்னன் கோச்செங்கன் பரிவாரங்களுடன் சிதம்பரம் சென்று தரிசனம் செய்து அடுத்தநாள் காலை திரும்பி வந்து விடுவது வழக்கம். ஒரு நாள் நடராஜரின் அர்த்தஜாம பூஜைக்காக அடர்ந்த காடாக இருந்த ஒருஊரைத் தாண்டிச் செல்லும்போது கொண்டுவந்திருந்த தீவட்டிகள் அனைந்து விடவே கூட வந்தர்கள் அடுத்த நாள் அவருடன் வர பயந்தனர். நடராஜர் தரிசனம் முடிந்து கண்ணயர்ந்த கோச்செங்கன் கனவில் மகாலட்சுமி தோன்றி என்னைக் கவனியாமல் நான் இருக்கும் ஊரை நீ தாண்டி சென்றதால் தீவட்டிகள் அணைந்தன என்றார். தீவெட்டியின் திரிகளை நிறுத்திவிட்டதால் திரி நின்றவூர் என்பது திருநின்றவூர் என்றானது. மகாலட்சுமி தினமும் சிவனை வணங்கியதால் காட்சி- பெருமாள் மார்பில் இருக்கும்படி வரம் பெற்றார்- மகாலட்சுமிபுரீஸ்வரர்.

தன்னை எப்போதும் கேலி செய்து கொண்டிருக்கும் திருமாலின் தலை ஒருநாள் கடலில் போய்விழ எனத் திருமகள் சொன்னது சாபமாக மாறியது. திருமால் ஒருசமயம் களைப்பால் தன்னிடமிருந்த வில்லை தன் மேவாய்க்கு முட்டுக் கொடுத்தபடி உறங்கினார். அப்போது குதிரைமுகம் கொண்ட அரக்கன் ஹயக்கிரீவனுடைய தொல்லைகள் தாளாமல் இந்திரன் பெருமாளிடம் முறையிட வந்தான். வந்தவன் திருமால் அயர்ந்து உறங்குவதைப் பார்த்து எழுப்ப மனமில்லாமல் அங்கேயே காத்திருந்தான். அப்போதும் திருமால் கண் திறக்க வில்லையாதலால் என்ன செய்வது என்று புரியாமல் முக்கண்ணனிடம் சென்று சொன்னான். அவர் ஆலோசனைப்படி கரையான் உருவெடுத்து வில்லின் நானை அறுக்க அறுபட்ட நாண் வேகத்துடன் சென்று திருமாலின் கழுத்தை அறுக்க அவர் தலை திருமகள் கொடுத்த சாபத்தினால் கடலில் போய் விழுந்தது.

திருமால் தலையில்லாமல் இருப்பதைப் பார்த்த இந்திரன் முதலான தேவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிரம்மா மற்றும் தேவர்கள் ஆதி சக்தியை வணங்க அன்னை தோன்றி குதிரை முகம் கொண்ட அரக்கன் தன் இனமான ஹயக்கிரீவனே தன்னைக் கொல்ல வேண்டும் என அரிய வரம் பெற்றுள்ளான். அந்த இனத்தில் அவன் ஒருவனே இப்போது உயிருடன் இருக்கின்றான். அதனால் அவனின் அட்டூழியங்கள் அளவிட முடியததாகிவிட்டது. அவன் அழியும் காலம் கூடிவந்துள்ளது. ஓர் அசுவத்தின் தலையை திருமாலுக்குப் பொருத்துங்கள் எனக் கூறினார். பிரம்மா அப்படியே செய்தார்.

ஹயக்கிரிவர் அசுர ஹயக்கிரிவனை வதம் செய்தார். ஆதி மகாலட்சுமி ஹயக்கிரிவருடன் இனைந்து வழிபடும் மக்களுக்கு அனைத்து செல்வத்தையும் வழங்குகின்றார்.

உலகம் உழிக்காலத்தில் அழிந்து எங்கும் நீர் நிலைகளாக இருக்க இரு உயிர்கள் தோன்றின. உயிர்களே இல்லாமல் தாங்கள் மட்டும் எப்படி உயிருடன் இருக்கின்றோம் என அதிசயப்பட்ட மது, கைடபர்கள் தங்களை உருவாக்கிய சக்தியை நோக்கித் தவம் இருந்தனர். சக்தி காட்சிதர தாங்கள் இருவரும் விரும்பினால் மட்டுக் மரணம் என வரம் பெற்றனர். பெற்ற வரத்தால் தங்களது திறமைகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. தோள்கள் திணவெடுத்தன.

பிரம்மா அந்தப் பக்கம் வர அவரிடம் சண்டையிட்டு அவரிடமிருந்த நான்கு வேதங்களையும் அபகரித்து பாதாள லோகத்தில் பதுக்கி வைத்தனர். பிரம்மா ஹயக்கிரிவரிடம் தஞ்சமடைந்தார். ஹயக்கிரிவர் அரக்கர்களிடம் போர் புரிந்தார். போர் 5000 ஆண்டுகள் ஆகியும் முடிவிற்கு வரவில்லை. ஹயக்கிரிவர் ஞானதிருஷ்டியில் அவர்கள் பெற்ற வரத்தை அறிந்தார். ஆதிசக்தியை நினைத்தார். ஆதிசக்தி அழகிய பெண்ணாக மோகினியாக அங்கு தோன்ற இரு அரக்கர்களின் கவனமும் சிதறியது. சித்தம் குழம்பியது. அழகியைக் கண்ட மயக்கத்தில் இருந்த இருவரையும் நோக்கி நீங்கள் வேண்டும் வரம் என்ன எனக் கோட்டார் திருமால். நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல –தவளை தன் இருப்பிடத்தை தன் குரலால் சொல்வதுபோல- செருக்கு கொண்ட அரக்கர்கள் உன் வரம் எங்களுக்குத் தேவையில்லை, நாங்கள் வேண்டுமானால் வரம் தருகின்றோம் நீ வேண்டுவது கேள் என்று தங்கள் அழிவிற்கு தங்கள் வாயாலே வழிதேடினர். திருமால் புன்னகையுடன் உங்களின் இருவரின் உயிர்தான் எனக்கு வரமாக வேண்டும் என்றார். மயக்கத்தில் தாங்கள் செய்த பிழையை உணர்ந்தனர். இருப்பினும் ஹயக்கிரிவருடன் போரிட்ட அரக்கர்கள் இருவரையும் வதம் செய்தார்.

உக்கிரமாக இருந்த ஹயக்ரீவரின் மடியில் லட்சுமி அமர்ந்தால் சாந்தமானார்-லட்சுமி ஹயக்ரீவர் எனப்பட்டார்.

துளசிச் செடி இல்லாத வீடு, சங்கு இல்லாதவீடு, சாளக்கிராமம் பூஜிக்காதவீடு, விஷ்ணு பக்தர்களை பழிக்கும் இல்லம், வேதியர்களுக்கு மரியாதை செய்து உணவளிக்காத இல்லம், விருந்தினரை வரவேற்று உபசரிக்காத இல்லம் ஆகியவற்றிலிருந்து லட்சுமி விலகிவிடுவாள் என்கின்றது வேதம்.

பூஜைக்கு உகந்த நாட்கள்- செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பௌர்ணமி தினங்கள் சிறப்பு, எந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்- செந்தாமரை, தாழப்பூ, செண்பகம், முல்லை, மல்லி, பவளமல்லி (பாரிஜாதம்) சிறப்பு. தும்பை, அருகம்புல் தவிர மற்ற பூக்களை உபயோகிக்கலாம்.

வரலட்சுமிவிரதம்: வற்றாத செல்வமும், நிலைத்த தாலிபாக்யமும், கீர்த்தியும் பெற அன்னை மகாலட்சுமிக்கு பூஜை- வரலட்சுமிவிரதம் இருந்து பூஜிக்க வேண்டும். ஆடி அல்லது ஆவணி பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை யன்று சுமங்கலிகள் அஷ்ட லட்சுமிகளையும் வணங்கும் பூஜையே வரலட்சுமி விரதம் ஆகும்.

வியாழக்கிழமை மாலையிலிருந்து பூஜைக்கான ஆயத்தங்களைத் துவக்கி வீட்டை நன்றாக சுத்தப்படுத்தி கலசம் தயார் செய்து கொள்ளவும். வெண்கலம் அல்லது வெள்ளிச் செம்பின் உள்ளே பச்சரிசி, காது ஓலை, கருகமணி, காசுகள், எழுமிச்சை பழம் ஆகியவற்றை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயால் வாயை மூடி நான்கு புறமும் மாவிலையை சொருகிவைக்கவும், சந்தனத்தை தேங்காயில் வைத்து அம்மன் முகத்தை பதிக்கலாம். அப்படி உருவம் இல்லாதோர் சந்தனத்தால் அம்மன் உருவம் செய்துகொள்ள வேண்டும். அல்லது சிலையை கலசத்திற்கு பக்கத்தில் வைக்கலாம். தலைவாழை இலையை சுத்தம் செய்து அதில் பச்சரிசி அல்லது நெல்லைப் பரப்பி அதன்மீது கலசத்தையும் சிலையையும் வைக்கவும். அன்னையை சிறப்பாக அலங்கரிக்கவும். அம்மன் கலசத்தின்முன் ஒன்பது (புகழ், அன்பு, கல்வி, செல்வம், வீரம், ஆரோக்கியம், சந்தான பாக்யம், வெற்றி இவைகளுடன் ஒன்பதாவது இழை மகாவிஷ்ணுவை குறிப்பதாகும்) இழைகள் கொண்ட நோன்புச் சரடுகளை வைக்கவும். அப்பம், பாயசம், கொழுக்கட்டை ஆகிய இனிப்பு வகைகளும், சுண்டல், போன்ற உப்பு பண்டங்களும் அன்னைக்கு படையலில் வைக்க தயாரித்து பாதுகாப்பாக வைக்கவும்.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை காலை தலைக்கு குளித்து 1030-1200 மணி வரை ராகுகாலத்திற்குமுன் அம்மனை ‘மகாலட்சுமி தாயே! வரங்களைத் தரும் வரலட்சுமி எனப் புகழப்படும் தாயே எங்கள் இல்லத்திற்கு எழுந்தருள்வாய்’ என மெல்லிய குரலில் சொல்லி அழைத்து ஆரத்தி காட்ட வேண்டும். அர்ச்சனைக்குத் தேவையான் பூக்கள், குங்குமம் ஆகியவற்றைத் தயாராக வைக்கவும்.

மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து குங்கும் வைத்து பூஜை நல்லமுறையில் நடக்க வழிபட வேண்டும் வில்வம், துளசி, உதிரிப் பூக்கள் கொண்டு அன்னையை அர்ச்சனை செய்யவும். அம்மனை கிழக்கு நோக்கி வைத்து பூஜை செய்பவர்கள் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்யவும். அம்மனின் நூற்றியெட்டு நாமாவளி- பெயர்களைச் சொல்லி பூக்கள் / குங்குமத்தைப் அன்னையின் பாதத்தில் போடவும் மகாலட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா தோத்திரம் தெரிந்தவர்கள் பாடலாம். இசைத் தட்டுகளை இயக்கியும் கேட்கலாம். நிவேதனங்களை நீர் சுற்றி படைத்து சிறு கண்ணாடியை கொண்டுவந்து அம்மனுக்கு காட்ட வேண்டும். தெரிந்தவர்கள் வரலட்சுமி கதையைப் படிக்கவும். தசாங்கம், ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றி கற்பூரம் காட்டி தீப ஆராதனை செய்து பூஜை முடித்து பெரியவர்களிலிருந்து ஆரம்பித்து சரடு கட்டி விட வேண்டும். பின்னர் பிரசாதம் வழங்க வேண்டும். ரவிக்கை போன்ற வஸ்திரங்கள் தானம் செய்யலாம். மதியம் உறங்காமல் இருந்து மாலையில் பாடல்பாடி தீப ஆராதனை செய்ய வேண்டும்.

புனர் பூஜை: மறுநாள் சனிக்கிழமை காலை குளித்து அன்னைக்கு பூவிட்டு வணங்கி கற்பூரம் ஆராதனை காண்பித்து கலசத்தை இடப்புறமாக நகர்த்திவிட்டு பூக்களையும் மஞ்சள் பிள்ளையாரையும் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். அல்லது கால்படாத இடங்களில் வைக்கவும். கலச அரிசியை பொங்கல் செய்யவும். காசுகள், காதோலை, கருகமணி ஆகியவற்றை சுத்தம் செய்து பாதுகாப்பாக அடுத்த முறை பயன் படுத்த வைக்கவும். தாயே உன் அருளால் விரதத்தை நல்ல படியாக முடித்து விட்டேன். இதே போன்று வருடா வருடம் எந்த தடங்களுமின்றி இப்பூஜை நடைபெற அருள வேண்டும் என வேண்டி அம்மன் சிலை அல்லது முகம், நகைகள் ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து பத்திரமாக வைக்கவும். பிறகு வழக்கம்போல் உணவு உண்ணலாம்.

குறிப்பிட்ட நாளில் பூஜை செய்ய வசதிபடா நிலையில் உள்ள பெண்கள் வீட்டல் உள்ள ஆண்களைக் கொண்டு ஒரு தேங்காயை எடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லிவிட்டு பின் தொடரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமைகளில் எடுத்து வைக்கப்பட்ட தேங்காயை கலசத்திற்குப் பயன் படுத்தி விரதம் இருந்து பூஜிக்கலாம்.

மகாலட்சுமியை வணங்கும் முறை!
தேவியின் திருப்பாதங்களை மனதில் வைத்து தியானைத்தாள் மோட்சம்,
தேவியை மடிமீது வைத்து குழந்தையாய் தியானித்தால்- தனபாக்கியம்
தேவியை மனதில் வைத்து தியானித்தால்- குழந்தைச் செல்வம்
தேவியை இதயத்தில் வைத்து தியானித்தால்- காரியசித்தி
தேவியை கழுத்தில் வைத்து தியானித்தால்- ரத்ண ஆபரணங்கள்
தேவியை தலையில் வைத்து தியானித்தால்- உதறித் தள்ளுவாள்

ராஜலட்சுமி சபை!
தொழில் முன்னேற்றம், செல்வச் செழிப்பு, தானிய விருத்தி,சந்தான பாக்யம், மனதில் தைரியம், வெற்றிகள் கிட்டும் இல்லத்திலும் மனதிலும் மங்களங்கள் தங்க இந்த அஷ்டலட்சுமிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அந்த இடமே ராஜலட்சுமி சபை.
கஜலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, தான்ய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி, தைரிய லட்சுமி,

#####

செவ்வாய்க்கிழமை, 17 July 2018 09:45

பத்ரகாளி சபை!

Written by

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

####

பத்ரகாளி சபை!

பத்ரகாளி!

துர்க்கையின் பிரமஹத்தி!

விப்ரசித்தி அசுரனின் மகள் மகிஷ்மதி உலாவச் சென்றபோது அழகான ஆஸ்ரமத்தைக்கண்டு அதை தன்னுடையதாக்கிக் கொள்ள தீர்மானித்து பெண் எருமை உருவெடுத்து உள்ளே நுழைந்தாள். அங்கிருந்த முனிவர் எருமையாக வந்த அரக்கியின் எண்ணத்தை அறிந்து அவளை நூற்றண்டு காலம் எருமையாக இருக்க சபித்து விட்டார். மன்னிக்க வேண்டிய அரக்கியிடம் அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறக்கும்வரை அவள் அந்நிலையில் இருப்பாள் என விமோசனம் சொன்னார்.

தணு என்ற அரக்கனின் புதல்வர்கள் ரம்பன், கரம்பன். இருவரும் நன் மக்களைப் பெற தவம் செய்தனர். அப்போது இந்திரன் கரம்பனை அருகிலிருந்த நதியில் மூழ்கடித்துக் கொன்றான். தன் தம்பி அநியாயமாக இறந்தது கண்டு ஹோமம் வளர்த்து தன் தலையை அறுத்து அதில் போட்டு தற்கொலை செய்ய துணிய அக்னி காட்சி கொடுத்து அதிபரக்ரமசாலியான ஒர் மகன் பிறக்க வரம் தந்தான். ரம்பன் காட்டிற்குச் சென்றபோது அங்கு பெண் எருமை உருவில் இருந்த அரக்கியைக் கண்டு மோகித்து அதனுடன் புணர்ந்தான். பாதாள உலகத்தில் அந்த எருமையுடன் உல்லாசமாக இருந்து வந்தான். அப்போது வேறு ஒரு எருமை அந்த பெண் எருமையிடம் வர ரம்பன் அதனுடன் சண்டையிட அது ரம்பனை முட்டிக் கொன்றது. நர்மதை நதிக்கரையில் அவனது சிதைக்கு தீ மூட்டியபோது பெண் எருமையும் தீக்குளிக்க உள்ளே பாய்ந்து இறந்தது.

வரமுனி என்ற முனிவர் தனக்கு நிகர் எவருமில்லை என தலைக்கனம் கொண்டிருந்தார். மற்ற முனிவர்களிடம் மகிஷம்போல் அவமரியாதையாக நடந்து கொண்டதால் முனிவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை எருமையாகப் பிறக்க சாபமிட்டனர். சாபம் பெற்றிருந்த வரமுனி ரம்பனின் மகனாக அப்போது அதன் வயிற்றில் இருந்த ரக்த பீஜனாகிய மகிஷன் சிதையிலிருந்து வெளிப்பட்டான். அவனே மகிஷாசுரன். அவன் பிரமனை நோக்கித் தவமிருந்து ஸ்திரி மங்கையால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்படவேண்டும் என வரம் பெற்றான். அசுரர்களை ஒன்று திரட்டி அசுர வேந்தனாக முடி சூட்டிக் கொண்டான்.

வைஷ்ணவதேவி பூ உலகில் மணம் புரியாமல் தவமிருந்தார். நாரதர் மகிஷாசுரனைக் கண்டு தவமிருக்கும் வைஷ்ணவிதேவின் அழகைக் கூற, அவன் தன் தூதுவனை- வித்யுத்பிரமாவை அன்னையிடம் அணுப்பி தன் வீரதீரச் செயல்களைக் கூறி தன்னை மணக்க வேண்டினான். அன்னையின் தவம் கலையாதிருக்க தேவர்கள் அவன் படையுடன் போரிட்டு தோற்றனர். வித்யுத்பிரமா மகிஷனின் எண்ணத்தை வைஷ்ணவி தேவியிடம் கூறினான். தானே தன் தோழியர்களோ மகிஷனை மணக்கும் எண்ணம் இல்லை என்ற பதிலைக் கேட்ட மகிஷன் பெரும் படையை அனுப்ப மீண்டும் போர் நடந்தது.

பிரம்மனிடம் தேவர்களால் மரணமில்லா நிலையும், அமிர்த பலத்தையும், பிரம்ம தண்டத்தையும் பெற்று எல்லோரையும் துன்புறுத்திய மகிஷாசுரனை அழிக்க பராசக்தி தன் உடலிருந்து மஹேஸ்வரி-காமத்தை அழிக்கும் சிவன் அம்சம், வைஷ்ணவி-லோபத்தை அழிக்கும் விஷ்ணு அம்சம், ப்ராஹ்மீ-மதத்தை அழிக்கும் பிரம்ம அம்சம், கௌமாரி-மோகத்தை அழிக்கும் முருகன் அம்சம், இந்த்ராணி-மாச்சர்யத்தை அழிக்கும் இந்திரன் அம்சம், வராஹி-அசூயை குணத்தை அழிக்கும் விஷ்ணு அம்சம் ஆகிய அறுவரைத் தோற்றுவிக்க அறுவரும் விடாமல் அவனுடன் போர் புரிய அவன் உடலிருந்து பீரிட்ட இரத்தத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் தோன்றி தொடர்ந்து போர் புரிந்து பரிகாசம் செய்தனர்.

ஈசன் தன் நெற்றியிலிருந்து பத்ரகாளியைத் தோற்றுவித்தார். பார்வதி அவரை உருமாறக் கேட்க குரோதத்தை அழிக்கும் சிவன் அம்சமாக (சாமுண்டா-) தோன்றி அருள் பெற்று மற்ற அறுவருக்கும் முதல்வியாய் பெறுப்பேற்று போரிட்டாள். துர்க்கமன் என்ற அசுரனை கொன்றதால் துர்க்கை எனப் பெயர் பெற்றாள். அசுரர்கள் பக்கம் பெரும் அழிவு ஏற்பட தானே போரிடவந்தான் மகிஷாசூரன். நீண்ட யுத்தத்திற்குப்பின் அன்னை துர்க்கை மகிஷனை தன் சூலத்தால் குத்திக் கொன்றாள். மகிஷாசூரமர்த்தினி எனப்பெயர்.

துர்க்கை, மகிஷனை வதம் செய்தபின் அன்னையை சிவன் சாந்தமடையச் சொன்னதால்- மகிஷாசூரனை கொன்ற பிரமஹத்தி தோசம் நீங்க திருவிழிமீலலை வர கையிலிருந்த சூலாயுதம் நழுவி அருகில் உள்ள தடாகத்தில் விழுந்தது. அசுரனின் இரத்தம் சூலத்திலிருந்து தடாகத்திற்கு மாற தடாக நீர் சிவப்பாகியது. துர்க்கை தடாகத்தில் குளித்து சூலத்தை கையில் எடுக்க அசரீரை ஒலித்தது. 12 ஆண்டுகள் இங்கு தவமிருக்க அசரீரி. தவத்திற்கு ஊறு ஏற்படாமல் இருக்க தவஸ்விக்ன விநாயகர் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 12 ஆண்டுகளுக்குப்பின் கையிலைநாதர் பார்வதியுடன் தோன்றி துர்க்கைக்கு பாபவிமோஷனம் அளித்தார். சிவன் கட்டளைப்படி இங்கு மகிஷாசுரமர்த்தினியாக குடி கொண்டதால்-அம்மன் குடி.. நினைத்தது நிறைவேற ராகு காலத்தில் வழிபாடு சிறப்பு. அமாவாசை இரவு 7மணிக்கு சிறப்பு பூஜை. குடும்ப ஒற்றுமை ஓங்கும். எதிரிகள் ஒடுங்குவர்.

போர், பூகம்பம் சூறாவெளி, வெள்ளம் இவற்றின் அச்சங்களைப் போக்குபவள். கால்-காற்று, காலரூபினி கரியநிறமுள்ளவள். காலரூபத்தில் நியதிக்கு அடங்கி வெளி உருவை அழிக்கும் பிராணசக்தி. தீயவர்களுக்கு அச்சம்தரும் விதமாக வாளும் துண்டித்த தலையும் கரத்தில் தாங்கி இருகைகள் அபயவரதத்துடன். நோய்களைத் தீர்ப்பவள். 

ஸ்ரீசக்ர அஷ்டகாளிகள்- ஸ்ரீகாளி, ஸ்ரீபத்ரகாளி, ஸ்ரீமகாகாளி, ஸ்ரீகாளாராத்திரி, ஸ்ரீசர்வமயாமுண்டி, ஸ்ரீசாமுண்டி, ஸ்ரீசரசண்டிகை, ஸ்ரீபைரவி. .

ஸ்ரீதக்ஷிணகாளியின் தாத்பர்யம்- பரந்து அடர்த்தியாக விரிந்த தலைமுடி, கோபக்கனல் வீசும் முகம், செவ்வண்ணத்தில் தொங்கும் அகன்ற நாக்கு கோரைப்பற்கள், கருத்த திருமேனியில் பருத்த தனங்கள், 51 கபாலங்கள் கொண்ட மாலை, வெட்டப்பட்ட பல கரங்கள் கொண்டு புனையப்பட்ட சிற்றாடை, ஒரு கரத்தில் மின்னும் வாள், மறுகரத்தில் குருதி கொட்டும் அசுரனின் தலையுடன் சடலமாக தரையில் கிடக்கும் சிவன் மார்பில் தன் இரு கால்களைப் பதித்து விசித்திர தரிசனம்.

இத் தோற்றத்திற்கான அற்புத தத்துவங்கள்- உயிர்கள் அவளிடமே தோன்றி அவளிடமே ஒடுங்குகின்றன என்பதை அவள் மாலையிலுள்ள கபாலங்கள் உணர்த்தும். மக்கள் செய்யும் நல்வினை, தீவினை அனைத்திற்கும் சக்தியாக இருப்பவள் அவள் என்பதை உடைந்த கரங்கள் கொண்ட உடை அறிவிக்கும். ஆணவத்துடன் மனிதன் செய்யுமற்ப காரியங்களை காலக்கிரமத்தில் அவள் வெட்டி வீழ்த்துகின்றாள் என்பதை வலது மேற்கரத்திலுள்ள வாள் தெரிவிக்கும். இயற்கை நடை முறைகளுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் மனிதன் இறுதியில் தாயின் வாளுக்கு பலியாகி விடுவான் என்பதை வெட்டுண்ட சிரம் விவரிக்கும். காளியை ஆராதிப்பன் வீரனாக இருக்க வேண்டும். பயம் கொண்டவர்களுக்கு அவள் அருள் கிட்டாது. மரண ஸ்வரூபிணியான் அவள் அனுதினமும் சம்ஹாரத் தொழிலை செய்கின்றாள். என்பதை செந்நிற நாக்கு தெரிவிக்கும். காளின் கோரத்தாண்டவம் ஆடும் இடம் சுடுகாடு. ஆசை, காமம், வெகுளி எல்லாம் பஸ்பமாகும் இடமான சுடுகாடாக நம் மனம் மாற வேண்டும் என்பதை தாண்டவம் குறிக்கும்.

தாருகனை வதம் செய்த பின்னரும் காளின் கோபம் தணியாததால் உலக உயிர்களைக் காப்பாற்ற சிவனார் தரையில் சடலம்போல் படுத்திருக்க அவர் மார்பில் ஏறி ஊழிக்கூத்தாடினாள் காளி. உடன் சிவனார் கைக்குழைந்தையாக மாறி அழுக காளியின் கவனம் குழந்தைமீது திரும்ப தாய்ப்பாசம் பீறிட குழந்தையை வாரி எடுத்து ஸ்தன்ய பானம் கொடுத்தாள். குழந்தையான சிவன் காளியின் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த கோபத்தையும் சேர்த்து பாலாக உறிஞ்சி விடவே காளி சாந்தமடைந்தாள். இதனால் சிவனுக்கு சேத்திரபாலன் என்ற பெயர் உண்டானது. அப்போது அந்த கோபசக்தியினால் சிவனிடமிருந்து அஷ்டசேத்ரபாலர்கள் தோன்றினர்.

உக்கிரம் தனியத் தனிய அழகிய நங்கையானாள். அவளை மேலும் சாந்தப் படுத்த மகேசன் நர்த்தனம் புரிந்தார். அதனால் கவரப்பட்ட காளியும் நடனம் ஆடினாள். அன்று முதல் சந்தியா நேரத்தில் ஈசனும் காளியும் சந்தியா தாண்டவம் ஆடலானார்கள்

ஸ்ரீகாளியின் மூல மந்திரத்தால் யாகம் செய்தால் அதிதீயான தைரியம், வாக்குவன்மை, முன்கூட்டியே அறியும் தன்மை, நிலையான செல்வம், நோயற்ற வாழ்வு கிட்டும்.

கிராமங்களில் இந்த எழுவரையும் கன்னிமாராக 1.பட்டரிகா, 2.தேவகன்னிகா, 3.பத்ம கன்னிகா, 4.சிந்து கன்னிகா, 5.அகஜா கன்னிகா, 6.வன கன்னிகா, 7.சுமதி கன்னிகா எனப் போற்றி வழிபடுகின்றனர்

இரண்யன் வம்சத்தில் பிறந்த சும்பன், நிகம்பன் அசுரர்கள் பிரம்மனிடம் பெண்களைத்தவிர மற்ற எவராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று பெற்ற வரத்தினால் ஆணவம் கொண்டு அனைவரையும் துன்புறுத்த தேவர்கள் தேவியை சரணடைய நீராடிக்கொண்டிருந்த தேவி தன் உடம்பிலிருந்து ஒர் சக்தியை தோற்றுவித்து- கௌசிகி அனுப்பியதால் தேவி நீல நிறமானாள். சும்ப நிகம்பர்கள் தேவியைப் பற்றி உளவு பார்க்க அனுப்பியவர்கள் தேவியின் சேனைப் பற்றிச் சொல்லாமல் அவரின் அழகு பற்றிச் சொல்ல சுக்ரீவன் எனும் தூதுவன் மூலம் மணம் புரிய தூது விடுத்தனர். தேவி போரில் என்னை யார் வெல்லப் போகின்றார்களோ அவர்களையே தான் மணமுடிப்பதாகச் சொன்னார். தூம்ரலோசனன் என்ற சேனாபதி தேவியால் எரித்துக் கொல்லப்பட சண்டன் முண்டன் என்ற இரு சேனாதிபதிகள் வர அவர்களையும் சம்ஹரித்தாள் தேவி. அதனால் அன்னை அவளுக்கு சாமுண்டா எனப்பெயர் சூட்டினாள்.

தன் சேனாபதிகள் இறந்ததனால் சும்பன், நிகம்பன் இருவருமே சேனாபதி ரத்த பிந்துவுடன் போருக்கு வந்தனர். ரத்த பிந்து உடம்பிலிருந்து கீழே விழுந்த ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அசுரர்கள் தோன்றிவே அன்னையிடமிருந்து அஷ்ட மாத்ருகா- அஷ்ட துர்க்கைகள்: 1.வசினி, 2.காமெசி, 3.மோதினி, 4.விமலா, 5.அருணா, 6.ஜயினி, 7.சர்வேஸ்வரி, 8.கௌலினி தோன்றினர்.

அன்னையின் உடம்பின் ஒவ்வொரு பாகத்திலிருந்து 64 பேரைத் தோற்றுவித்தாள். எட்டு பேராக பிரித்து அவர்களுக்கு ஒரு தலைவியாக இந்த எட்டு பேரையும் தோற்றுவித்தாள். அஷ்டமாசித்தி பெற்ற அந்த தெய்வங்கள் ஒவ்வொரு தலைவிக்கும் தங்கள் திவ்ய சக்திகளை வழங்கினார்கள். இந்த 64 பேரும் யோகினிகள் எனப்பட்டனர். ஒவ்வொரு யோகினிக்குள்ளும் ஒரு கோடி யோகினிகள். மொத்தம் 64 கோடி யோகினிகள். இவர்கள் இரத்த பீஜனின் உடலிலிருந்து ரத்தம் கீழே சிந்தி உயிர் பெறுவதற்கு முன்பே இரத்தம் நிலத்தில் வீழாமல் குடிக்க ரத்தபீஜன், சும்பன், நிகம்பன் அசுரர்களை வதம் செய்தாள். இவர்கள் உலக இயக்கங்களுக்கு காரணமாகிறார்கள். சாக்தம் எனப்படும் சக்தி வழிபாட்டின் முக்கிய பரிவாரங்கள் இந்த யோகினிகள்தாம்.

துர்க்கா பூஜை ஆஸ்வின் மாதம்-புரட்டாசி கிருஷ்ணபட்சத்தில் நவமியன்று தொடங்கி பதினைந்து தினங்கள் பூஜை செய்து சுக்லபட்ச தசமியன்று நீரில் சேர்க்க வேண்டும். மிருக பலி யில்லாமல் செய்யும் பூஜை வைஷ்ணவி பூஜை-சாத்வீகபூஜை. விலங்குகளை பலிகொடுத்து செய்யும் பூஜை துர்கா பூஜை. பலிகளை சப்தமி, நவமி திதிகளில் செய்யலாம். அஷ்டமியில் செய்யக்கூடாது.

சிவபெருமானின் மனைவி என்பதால் சிவை. விஷ்ணுவின் அம்சம் வைஷ்ணவி/ விஷ்ணுவின் மாயை, நாராயணின் சக்தியைப் பெற்றிருப்பதால் நாராயணி. மேலும் இஷானி, சத்யை, நித்யை, சனாதனி, பகவதி, சர்வானி, சர்வமங்களா, கௌரி, பார்வதி, அம்பிகை என்று பல பெயர்கள் கொண்டவள்.

நரம்பின் அதிபதியான இவள் சினம் கொண்டாள் ஊரில் கலகம் உண்டாகும். தயிர் அபிஷேகம், அவல், சேமியா நிவேதனங்கள் படைத்து விநியோகம் நலன். பக்தர்களின் துன்பங்களை நீக்குபவள்.

“ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ, சாமுண்டா ப்ரசோதயாத்.

துக்கங்களை போக்குவதால் துர்க்கா என்றழைக்கப்படும் துர்க்காவின் மற்ற திருநாமங்கள்!
வனதுர்க்கா-கொற்றவை. மகாவித்யாவே வனதுர்க்கையாவாள். வனம்-காடு. தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய காட்டிலிருந்து காப்பவள். - கதிராமங்கலம், தருமபுரம் (மயிலாடுதுறை)

சூலினிதுர்க்கா- சரபேஸ்வரின் இறக்கை ஒன்றில் இருப்பவள். சிவனின் உக்ரவடிவானவள். முத்தலை சூலத்தினை கையில் வைத்திருப்பதால் சூலினி துர்க்கா. - அம்பர்மாகாளம்

ஜாதவேதோ துர்க்கா- சிவனின் நெற்றிக் கண்னிலிருந்து உருவான தீப்பொறிகளை கங்கையில் சேர்த்ததால் ஜாதவேதோ எனப்பெயர்.

சாந்தி துர்க்கா- தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் சாந்தி நிலவ வழி செய்பவள்.

சபரி துர்க்கா- சிவன் வேடுவ உருவம் எடுத்தபோது வேடுவச்சி உருவம் எடுத்த பார்வதியார் சபரிதுர்க்கா.

ஜ்வால துர்க்கா-ஆதிபராசக்தி பாண்டாசுரன் போரில் எதிரிகள் அருகில் வராமல் இருக்க அக்னி ஜ்வாலையுடன் கூடிய பெரிய நெருப்பு வட்டத்தை அமைத்தவள் இந்த ஜ்வாலாதுர்க்கா.

லவணதுர்க்கா- லவணாசுரனை அழிக்க புறப்பட்ட லட்சுமணன் வெற்றி கிடைக்க வழிபட்ட துர்க்கை லவண துர்க்கா

தீபதுர்க்கா -பக்தர்களின் மனத்தில் இருக்கும் அஞ்ஞானம் என்ற அக இருளை நீக்கி மெய்ஞாசமான ஒளியை வழங்குவது தீபதுர்க்கா.

ஆசுரி துர்க்கா-பக்தர்களிடையே உள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்பவள். ஆசுரி துர்க்கா.


சப்த கன்னியர் -சப்த மங்கையர்-சப்த மாதர்
சப்த மங்கையரும் காளிதேவிக்குத் துணையாகப் போருக்குச் செல்லுமுன் ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் சிவபூஜை செய்தனர். சக்கரப்பள்ளி- சக்ரமங்கை, ஹரிமங்கை- அரிமங்கை, சூலமங்கலம்- சூலமங்கை, நல்லிச்சேரி- நந்திமங்கை, பசுபதிகோவில்- பசுமங்கை, பசுபதிகோவில் -தாழமங்கை, பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை இந்த எழு தலங்களிலும் மங்கைப் பருவ தேவியர் சிவ பூஜை செய்து சிவதரிசனம் பெற்ற ஏழு தலங்களும் சப்த மங்கைத் தலங்கள் எனப்பட்டன. ஏழு தலங்களும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள தலங்கள்.

அந்த தலங்களில் உள்ள அம்மன் பெண்களின் ஏழு பருவங்களையும் காட்சியாக ஒவ்வொரு தலத்தில் காசி தம்பதியினருக்கு அளித்துள்ளனர். சப்த மங்கைகள் தரிசித்த இந்த ஏழு தலங்களுக்கும் பார்வதி வந்தபோது இறைவன் சிறப்பு காட்சி தந்ததால் இத்தலங்களின் தரிசனம் 1.நெற்றிக்கண் தரிசனம், 2.கங்காதேவி தரிசனம், 3. திரிசூல தரிசனம், 4.பாத தரிசனம், 5.உடுக்கை தரிசனம், 6.மூன்றாம்பிறை தரிசனம், 7.நாக தரிசனம் எனப்படும்.

சப்த கன்னியர், மங்கையர், மாதர் !

1. பிராம்மி- - பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். சக்கரப்பள்ளி-சக்ரமங்கை- தேவாரப் பாடல் பெற்ற தலம். பிராம்மி வழிபட்டதால் சக்கரவாகீஸ்வரர் எனும் திருப்பெயருடன் மங்கை சேர்ந்து சக்கரமங்கை என அழைக்கப் படுகின்றது. இந்த அம்பிகை தேவநாயகி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கு இணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் முதலாவதான பேதைப் பருவ சிறுமியாக காட்சி. பிராம்மி-பிரம்மாவின் படைப்புக்கு துணை, அன்னவாகனம். நான்கு கரங்கள். குண்டம், அட்சயப் பாத்திரம், ஜெபமாலை, ஓமக் கரண்டி ஏந்தியிருப்பாள்.

2. மகேஸ்வரி-- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். ஹரிமங்கை- அரிமங்கை. நெல்லிவனமாக இருந்த இந்த இடத்தில் நெல்லிக்கனியை உண்டு சத்ய கங்கை தீர்த்தத்தில் நீராடி ஹரிமுக்தீசுவரரை வழிபட்டு மகாலட்சுமி, திருமாலை ஒருகாலும் பிரியா வரம் பெற்ற தலம். இந்த அம்பிகை ஞானம்பிகை, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் இரண்டாவதான பெதும்பை (பள்ளி) பருவ சிறுமியாக காட்சி. மகேஸ்வரி- ஈசனின் இடப்பக்கம் இருந்து தீமைகளை ஒழிப்பதில் உறுதுணை,

3. நாராயணி-(வைணவிதேவி) பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். நல்லிச்சேரி- நந்திமங்கை. நந்திகேசுவரர் ஈசனை பூஜித்து நடராஜர் பாத தரிசனம் கண்ட தலம். ஈசன் ஜம்புகேஸ்வரர். இந்த அம்பிகை அலங்காரவல்லி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் நான்காவதான கன்னிகை வடிவில் காட்சி. நாராயணி-அனைத்து உலகங்களையும் பரிபாலனம் செய்ய திருமாலுக்கு உதவி.

4. வாராகி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில்- பசுமங்கை. பசுபதி நாதரின் உடுக்கையிலிருந்து எழும் ஆதி நாதத்தைக் கேட்டு அதிலிருந்து பிரபஞ்சங்கள் உற்பத்தி ஆவதை அறிந்தாள் அம்பிகை. ஈசன்- பசுபதீஸ்வரர். பால்வளைநாயகி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஐந்தாவதான அரிவை எனப்படும் தாய்ப் பருவத்தினளாக காட்சி.

பரந்தாமனின் வராஹ வடிவுடன் இனைந்தவள், மேக நிறம். வராஹ-பன்றி முகம். கலப்பை, உலக்கை, வாள், கேடயம், சங்கு, சக்கரம், அபய வரத முத்திரையுடன் காட்சி தருபவள்.. காட்டுப்பன்றிகள் இழுக்கும் கிரி சக்ர ரதம் இவரது வாகனம். எப்பொழுதும் அம்பிகையை விட்டு நீங்காமல் இருக்கும் இரு சக்திகள் சியாமளா என்கிற மந்த்ரிணி, மற்றும் வாராஹி என்கிற தண்டினி ஆவர். இராஜராஜேஸ்வரியின் சேனாநாயகி. பயம் நீக்கி ஜயம் அருள்பவள். குற்றம் புரிந்தோரை தண்டிப்பதில் திட சித்தமும் தீர்க்கமான அறிவும், தீரமும், வீர்யமும் கொண்டவள். ‘வீர்யவதி” பிரளயத்தின்போது பூமியை வெளிக்கொணர விஷ்ணுவிற்கு துணையாகி பூமித்தாயானவள். நம் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்தியில் உறைபவள். காசி நகரை இரவில் உலாவந்து காப்பவள் வராஹியே!

ஆஷாட நவராத்திரி வராஹிக்கு உரியதாகப் கருதப் படுவதால் ஆனிமாத அமாவாசை முதல் ஒன்பதுநாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

காட்சி தலம்: திருமால்பூர் அருகில் உள்ள பள்ளூர், தஞ்சை பெரிய கோவில் அக்னிதிசையில். காசியில்.

வராஹி உபாசனை உள்ளவர்களிடம் வாதாடக்கூடாது என்பதற்கேற்ப வழக்குகளிலிருந்து விடுபட அருள். எலும்பிற்கு அதிதேவதையான வராஹி கோபமுற்றால் வாதமும் பித்தமும் ஏற்படும். பொதுவாக வெள்ளரிக்காயும், முறுக்கும் நிவேதனம். பஞ்சமி தினத்தன்று கிழங்கு வகைகள் சமைத்து விநியோகம் செய்தால் முன் வினைகள் அகலும். 5 பஞ்சமி / ஞாயிறு தினங்களில் நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிபட்டால் நற்பலன்.

“ஓம் சியாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்”

5. இந்திராணி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில் –தாழமங்கை. தட்சன் சாபத்தால் தேய்ந்த சந்திரன் வழிபட்டத்தலம். தாழம் புதரில் தோன்றியவர் சந்திரமௌளீச்வரர். இந்த அம்பிகை ராஜராஜேஸ்வரி,, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கு இணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஆறாவதான தெரிவை வடிவில் காட்சி. இந்திராணி -இந்திரனுக்கு உதவி, ஐந்தீரி எனப்படுபவள். நான்கு தந்தங்களுடைய வெள்ளயானையை வாகனமாகக் கொண்டவள். இந்திர நீலக்கல்லின் நிறம். 1000 கண்களுடைய இவள் கரத்தில் வஜ்ராயுதம், பாசம், அங்குசம், தாமரை, அபயவரத முத்திரையுடன் காட்சி தருபவள். தாமரை மலரில் வீற்றிருப்பவள்.

விரும்பும் ஆடவரை மணக்க அருள் புரிவாள். சிவனை நோக்கித் தவமிருந்து இந்திரனை கணவனாய் அடைந்தாள். சதியின் அதிதேவதையான இவள் கோபம் கொண்டாள் அம்மை நோய் பெருகும். வேப்பிலையால் விசிறி சந்தனம் பூசி, பலாச்சுளை நிவேதனம் நலம்.
‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்”

6. கௌமாரி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். சூலமங்கலம்- சூலமங்கை- சூலதேவர் இங்குள்ள கிருத்திவாஸேஸ்வரிடம் எப்போதும் காவல் காக்கும் வரம் பெற்றார். இந்த அம்பிகை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் மூன்றாவதான மங்கை பருவத்தினளாக காட்சி. கௌமாரி-முருகனின் சக்தி, வாகனம் மயில். இரண்டு கைகள் ஒன்றில் ஈட்டி ஏந்தியிருப்பாள்.

7. சாமுண்டி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை. அஷ்ட நாகங்களுடன் வந்து வழிபட்டதால் நாகதோஷம் நீக்கும் தலம். பிரம்மன் தவம்செய்து வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர். இந்த அம்பிகை அல்லியங்கோதை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஏழாவதான பேரிளம் பருவத்தினளாக காட்சி மஹிஷாசுரமர்த்தினி, சிவகாளி, பத்ரகாளி எனப்படுபவள். ரத்த சாமுண்டா, ப்ரம்ம சாமுண்டா எனவும் துதிக்கப்படுபவள். சிவசக்தியின் அம்சம். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் போரில் வெற்றிபெற அருள் புரிபவள். மனித உடல் ஒன்றின் மீது அழுந்திய பாதம். ஈட்டி, மண்டைஓடு, சூலம், வாள்கள் ஏந்தியிருப்பாள்.

இந்த சப்தகன்னியர் -சப்த மங்கையர்-சப்தமாதர் ஏழு பேரும் தனித்தனியாகவோ அல்லது ஒன்று கூடி செல்லியம்மனாக பக்தர்களின் துயர் நீக்கி அருள்புரிய அருள் புரிந்தார் ஈசன்,

காளியின் பிரமஹத்தி!
அம்பன், அம்பாசூரன் அசுரர்களை கொன்றபாவம் தீர காளி வழி பட்டது.-அப்பர் மாகாளம்

#####

செவ்வாய்க்கிழமை, 17 July 2018 16:24

பூமாதேவி!

Written by

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

####

பூமாதேவி!

பூமி என்கிற வசுந்தராவிற்கு உர்பி, இஜ்யை, க்ஷிதி, காசியபி, க்ஷௌணி, பவை, அனந்தை, விசுவாம், பிருத்வி என பலப் பெயர்கள் உண்டு.

தேவர்கள் அசுரர்களுக்கு அஞ்சி வாழ்ந்திருந்தாலும் தேவர்களின் கௌரவம் மற்றும் இறையருளும் மேலோங்கி இருப்பதன் காரணம் முனிவர்களும் யோகிகளும் செய்யும் ஹோமத்தில் தரப்படும் ஆகுதி என்ற அவிஸ்ஸே தேவர்களின் பலத்திற்கு காரணம் என்பதை அறிந்த இரண்யாட்சன் தேவர்களுக்கு அவிஸ் கிடைக்காமல் இருக்க என்னவழி என்று யோசித்து பூமியிருந்தால்தான் யாகங்கள் நடைபெற்று தேவர்களுக்கு அவிஸ் கிடைக்கின்றது. எனவே பூமியில்லையென்றால் தேவர்களுக்கு யாகம் நடந்து அவிஸ் கிடைக்காது என்று முடிவுசெய்து பூமியை பாயாகச் சுருட்டி பாதாள உலகத்தில் பதுக்கிவிட்டான். அவிஸ் கிடைக்காமல் துன்பமுற்ற தேவர்கள் பூமியைக் காணாததால் பிரம்மனிடம் முறையிட அவர் திருமாலிடம் சென்று வணங்கி தேவர்களின் துயரத்தை தெரிவித்தார்.

திருமால் வராக அவதாரமெடுத்து பாதாளாலோகம் சென்று இரண்யாட்சனுடன் போர் புரிந்து அவனைத் தன் கோரப்பற்களால் குத்தி கிழித்து பூமியை மீட்டு வந்தார். அசுர சம்ஹாரத்தினால் ஏற்பட்ட கோபம் தீராத வராக மூர்த்தியினால் கடல்வாழ் உயிரினங்கள் துன்பமடைந்தன. முனிவர்கள் கயிலைநாதனிடம் சொல்ல சிவன் தன் கைகளினால் வராகத்தின் கொம்புகளை உடைக்க அதன் ஆவேசம் அடங்கி ஸ்ரீ விஷ்ணுவாக மாறினார். புவிமகள் ஸ்ரீவிஷ்ணுவின் மனைவியானாள்.

வீடு கட்டும் போதும், கிணறு, ஏரி, குளம் வெட்டும் போதும் நிலத்தை பயிரிடும் முன்பும் பூமிதேவியை வணங்க விஷ்ணு அருள் வரம். முத்து, வைரம், மாணிக்கம், துளசி, மலர்கள், சிவலிங்கம், ஜபமாலை, சந்தனம், தீர்த்தம், சாளக்கிரமம், தீபம், யந்திரம், புத்தகம் சங்கு, ஆகியவற்றை நிலத்தின் மீது வைக்காமல் ஆசனத்தின்மீது வைக்க வேண்டும்.

”ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் கிலீம் வசுதாயை ஸ்வாஹா” என்ற மந்திரத்தைச் சொல்லி வெள்ளைத் தாமரை நிறமும், சரத்காலச் சந்திரன் போன்ற முகமும் சந்தனம் பூசப்பட்ட சர்வாங்கமும் உடையவளாக நவமணிகளால் அலங்கரிப்பட்டு நெருப்பிலான தூய்மையான ஆடைகளை அணிந்து புன்னகையுடன் தோன்றும் பூதேவியே உன்னை நமஸ்கரிக்கின்றேன் என்று தியானித்து “ஜலத்தை அளிப்பவளே, நீரின் சொரூபமாக இருப்பவளே, நீருக்கு ஆதாரமாக இருபவளே, நீரைப் பரிசுத்தம் செய்பவளே, வராஹ மூர்த்தியின் பத்தினியே, எனக்கு வெற்றியைத் தருவாய், நலன்களை அளிப்பாய், மங்களத் தலைவியே, மங்கள ரூபியே, சம்சாரத்தில் மங்களமுண்டாகச் செய்வாயாக, எல்லாம் அறிந்தவளே சர்வ சக்தியே, சகல விருப்பங்களை வழங்குபவளே, புண்ணிய வடிவினளே, புண்ணியத்திற்கு பீஜமானவளே, அனாதியானவளே, எல்லா பயிர்களுக்கும் இருப்பிடமானவளே, சகல சக்தி தரும் பூதேவியே, சுகத்தையும் நிலத்தையும் வழங்குபவளே எனக்கும் அருள் புரிவாய் அன்னையே! என துதித்து வழிபட வேண்டும்.

#####

 

செவ்வாய்க்கிழமை, 17 July 2018 19:45

பைரவ சபை!

Written by

ஓம்நமசிவய!

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!

####

பைரவ சபை!

பைரவர்!

இரண்யாட்சனின் வளர்ப்பு மகன் அந்தகாசுரன். சிவனை நோக்கி கடுந்தவமிருந்து யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றான். தேவர்கள், முனிவர்களை வென்று பெண்டிரை அவமானம் செய்தான். அனைவரும் சிவனிடம் முறையிட சிவன் தன்னுடைய அம்சமாக காலபைரவரைத் தோற்றுவித்து அந்தகாசுரனை அம்ஹாரம் செய்தார். 

ஆதிசங்கரர் அருளிய “காலபைரவ அஷ்டகம்” - போகம், முக்தி இவைகளை அளிப்பவரும், பிரசித்திபெற்ற அழகிய வடிவினரும், அடியார்களிடம் அன்பு கொண்டவரும், காத்தல் கடவுளாக இருப்பவரும், எல்லா உலகையும் தன் வடிவில் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவரே, காசியம்பதியின் தலைவரே உங்களுக்கு நமஸ்காரம். எனக்கு அருள் புரிவாய் ஐயனே!-

பைரவர் என்றால் எதிரிகளுக்கு பயத்தை தருபவர். தன்னை அண்டியவர்களுக்கு பயத்தைப் போக்கி பலத்தை அளிப்பதால் சிவன் இவருக்கு திரிசூலம் அளித்து காவல் உரிமையை அளித்தார். ஈசனைப்போலவே 64 அம்சங்களை உடையவர் பைரவர். சிவாலயங்களில் பைரவரின் ஏதாவது ஓர் அம்சம் பரிவார மூர்த்தமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அஷ்ட-எட்டு திக்குகளிலும் பைரவரே காவல் புரிகின்றார். இந்த சிறப்பான எட்டு வடிவங்களே அஷ்ட பைரவர் என போற்றப்படுகின்றது. கார்த்திகை தேய்பிறை அஷ்டமியில் தோன்றியவர் காலபைரவர். இவர் சூரியனுடைய அம்சத்தை பெற்றவர். ஆதலால் ராகு காலத்தில் ஞாயிறு தோறும் வழிபடுவது சிறப்பு.

“பைரவ துதி”
ஓம் ஏம் க்லாம் கிலிம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும்
சகவம் ஆப துத்தாரணாய அஜாமல பக்தாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்ரிய வித்வேஷ்ணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ.

சிவபெருமானின் ஐந்து குமாரர்களில் ஒருவர் (கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயப்பன், பைரவர்). பைரவரை க்ஷேத்ர பாலர் என்பதுண்டு. 

க்ஷேத்ரபாலர்:-“பைரவ அஷ்டகம்” - செந்நிறமான ஜ்வாலைகளையுடைய ஜடாமகுடம் தரித்திருப்பவரும், சிவப்பு நிறமுடையவரும், வெண்ணிலவை முடியில் அணிந்திருப்பவரும், தேஜோமயமானவரும் உடுக்கை, சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றைக் கைகளில் வைத்திருப்பவரும், உலகத்தைக் காவல் காப்பவரும், பாதகர்களுக்கு பயங்கரமானவரும், நிர்வாணமேனியரும், நாயை வாகனமாக உடையவரும், முக்கண்ணரும், எப்போதும் குதூகலமாக இருப்பவரும், பூத கணங்கள் பேய் பிசாசுக்களுக்குத் தலைவரும், க்ஷேத்ர பாலர் என்ற பெயரை உடையவருமான பைரவரை வணங்குகிறேன்.

அஷ்ட பைரவரை பூஜித்து வழிபட்டால் க்ஷேத்திரத்தில் செய்த பாபங்கள் நிவர்த்தி. காசியின் எண் திசைக்கும் காவல் தெய்வங்கள். 1.குருபைரவர்- அனுமத்கட்டம், 2..சண்டபைரவர்- துர்க்காகுண்டம், 3.அஸிதாங்கபைரவர்- விருத்தகாலம், 4.கபாலபைரவர்- லாட்டுபஜார், 5.க்ரோதண பைரவர்- காமாக்ஷாமே, 6.உன்மத்தபைரவர்- பீமசண்டி, 7.சம்ஹாரபைரவர்- திருலோசனா சங்கமம், 8.பீஷணபைரவர்- பூதபைரவம்

தன் ஐந்து தலையால் செருக்குற்ற பிரம்மனின் ஐந்தாவது தலையை பைரவரைக் கொண்டு கிள்ளச் செய்தார். அந்தக் கபாலம் அவர் கையில் ஒட்டிக் கொண்டது. பைரவர் பிரமஹத்தி தோஷத்தால் பல தலங்கள் சுற்றி காசியம்பதியில் அன்னபூரணி அம்மன் அன்னம் அளிக்கும்போது கீழே விழுந்த அன்னத்தை எடுக்க் முயன்ற கபாலத்தைத் தன்காலால் நசுக்கினார். கபாலபைரவராக இருந்து காலபைரவராக மாறி காசியில் அருள்புரிகின்றார். ஒரே பைரவர் எட்டு செயல்களை எண் திசைகளில் செய்யும்போது அஷ்டபைரவராகின்றார்.

அஷ்ட பைரவர்கள்
1.ஸ்ரீ அசிதாங்க பைரவர்-6கரங்கள்.அன்னவாகனம். சக்தி-பிராம்மி,  அஸிதாங்க பைரவ அஷ்டகம்”- முக்கண்ணரும், கோரிய வரங்களைத் தானே முன் வந்து அளிப்பவரும், சாந்த சொரூபியும், கபாலமாலை தரித்தவரும், கதை, கபாலம், பாணபாத்ரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றைத் தாங்கியவரும் திகம்பரனாகவும், இளமையாகவும் இருப்பவரும், நாகத்தைப் பூனூலாக அணிந்தவரும், அலங்கார சொரூபரும், ப்ராஹ்மணி என்ற சக்தியை அருகே வைத்திருப்பவரும், அன்னப் பட்சியை வாகனமாக உடையவரும், அழகுள்ளவரும், சுந்தரரும், கேட்டதைக் கொடுக்க வல்லவருமான அஸிதாங்க பைரவரை வணங்கி தியானிக்கிறேன்..

வழிபட எதிரிகள் தொல்லை விலகும். எடுத்த நல்ல காரியங்கள் இனிதே முடியும்

2.ஸ்ரீ குரு பைரவர்-4கரங்கள், காளைவாகனம், சக்தி-மஹேஸ்வரி, "குரு பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், டங்கம், புள்ளிமான் என்ற கிருஷ்ணம்ருகம் ஆகியவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், பான பாத்திரம், கத்தி இவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், காளை வாகனத்தைக் கொண்டவரும், புன் சிரிப்பான முகமுடையவரும், வெண்மையான சுத்த ஸ்படிகம் போன்ற மேனியைக் கொண்டவருமான குரு பைரவ ஸ்வாமியை வணங்கி தியானம் செய்கிறேன்..

வழிபட அரசுப் பணிகளில் சிறந்த முன்னேற்றம் கிட்டும். 

3.ஸ்ரீ சண்ட பைரவர்-4கரங்கள், மயில்வாகனம், சக்தி-கௌமாரி, "சண்ட பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் வில், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், கௌரி என்ற தேவியை சக்தியாகக் கொண்டிருப்பவரும், மயிலை வாகனமாகக் கொண்டு வெண்மையான நிறத்தை உடையவருமான சண்ட பைரவரை தியானிக்கிறேன்..

பரிகார பூஜைகள் செய்து வழிபட இவரது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நவகிரக தோஷங்களும் நீங்கும் 

4.ஸ்ரீ குரோத பைரவர்-4கரங்கள், கருடவாகனம், சக்தி-வைஷ்ணவி,  "க்ரோத பைரவ அஷ்டகம்” முக்கண்ணரும் கதை, சங்கு, சக்கரம், பாசம், பாத்ரம் இவற்றை கைகளில் ஏந்திக் கொண்டிருப்பவரும், வேண்டிய வரங்களைக் கொடுப்பவரும், இளைஞராகவும் திகம்பரராகவும் இருப்பவரும், அமைதியான சுபாவமுடையவராக இருப்பவரும், இடது பக்கத்தில் திருவான சக்தியை கருடவானத்தில் அமர்த்திக் கொண்டிருப்பவரும், நீல நிறமான மேனியைக் கொண்டவருமான க்ரோத பைரவரை வணங்கி தியானிக்கிறேன்...

வழிபட உயிர்களின் மன அழுக்குகளான அழுக்காறு, அவா, வெகுளி ஆகியவற்றை நீக்குபவர்

5.ஸ்ரீ உன்மத்த பைரவர்-4கரங்கள், குதிரைவாகனம், சக்தி-வராஹி,  "உன்மத்த பைரவ அஷ்டகம்” முக்கண்ணரும், சாந்த ஸ்வரூபியும், இளைஞராகவும், திகம்பரராகவும் திகழ்பவரும், பொன் வண்ணரும், அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவரும், கத்தி, கபாலம், உலக்கை, கேடயம் ஆகியவற்றைக் கைகளில் தாங்கி இருப்பவரும், வாராஹி என்ற சக்தியுடன் காட்சியளிப் பவருமான உன்மத்த பைரவரை வணங்குகிறேன்..

மனநிலை பாதிக்கப்பட்டவர்களும், நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களும் தேய்விறை அஷ்டமியில் நெய்தீபமேற்றி வழிப்ட்டால் நலன் பெறுவர்.

6.ஸ்ரீ கபால பைரவர்- 4கரங்கள், யாணைவாகனம், சக்தி-ஐந்த்ரீ, இந்திராணி, "கபால பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், பக்தர்கள் வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் பாசக்கயிறு, வஜ்ராயுதம், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், இந்திராணி என்ற தேவியுடன் காட்சியளிப்பவரும், பத்ராகம் போன்ற ஒளிமயமான மேனியுடையவருமான கபால பைரவரை வணங்கி தியானம் செய்கிறேன்..

பஞ்ச பூதங்களையும் இயக்கும் இவரை வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அகற்றி நல்வாழ்வு அளிப்பார்.

7.ஸ்ரீ பலி பீஷ்ண பைரவர், சிம்மவாகனம், சக்தி-சாமுண்டி, பீஷ்ண "பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் கத்தி, சூலம், கபாலம், உலக்கை ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், சாமுண்டி தேவியுடன் இனைந்து காட்சி தருபவரும், பிரேத வாஹனம் எனப்படும் இறந்த பூத உடல் மீது அமர்ந்திருப்பவரும், சிவந்த நிறத்தையுடையவருமான பீஷணபைரவரை துதித்து வணங்குகிறேன்..

நெய் தீபமேற்றி வழிபட்டால் திருமணத்தடை விலகும். புத்திர பாக்யம் கிட்டும்.

8.ஸ்ரீ கால சம்ஹார (வடுக)பைரவர்-8கரங்கள், நாய்வாகனம், சக்தி-சண்டிகை "சம்ஹார பைரவ அஷ்டகம்” பத்துக் கைகளோடு முக்கண்ணனாக இருப்பவர், சர்ப்பத்தை பூனூலாக அணிந்தவர், கோரைப் பற்களுடன் பயங்கர முகத்தோற்றத்தை உடையவர், பக்தர்களுக்கு எட்டு விதமான ஐஸ்வர்யங்களைக் கொடுப்பவர், இளமையான தோற்றம் கொண்ட இவர், திகம்பரராகவும் இருப்பவர். ஸிம்ஹத்தை வாகனமாகக் கொண்டவர். தம் கைகளில் சூலம், கட்கம், டமருகம், சங்கு, சக்ரம், கதை, பானபத்திரம், கட்வாங்கம், பாசம், அங்குசம் ஆகியவற்றைக் கொண்டவர், அசுரர்களின் மண்டையோடுகளைக் கோத்து பெரிய மாலையாக அணிந்திருப்பவர், பருமனான உடலையும், மத்தமான பயங்கர உருத்தோற்றத்தையும் கொண்டவரான, சம்ஹார பைரவரை ,எப்போதும் எனக்காக வேண்டி தியானிக்கிறேன்..

இவரின் அம்சமே மற்ற ஏழு பைரவர்களும். தேய்பிறை அஷ்டமியில் இவரை பூஜித்தால் அனைத்து பலன்களும் கிட்டும்.  இவர் காலத்தில் நனமை அளிப்பவர். ஆபத் உத்தாரணர். இவரே மகாகாலர், க்ஷேத்ரபாலர், சட்டபாலர் என பூஜிக்கப்படுகின்றார்.

 

#####

செவ்வாய்க்கிழமை, 17 July 2018 20:40

ஞான பண்டிதன் சபா!

Written by

ஓம்நமசிவய!

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

####

ஞான பண்டிதன் சபா!

முருகன்!

சனத்குமாரர் கண்ட கனவு!

பிரம்மாவின் மானசீக புத்திரரான சனத்குமாரர் ஒரு வித்தியாசமான கனவு கண்டார். அதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடப்பதாகவும் அதில் தேவர்கள் சேனாபதியாகத் தான் நின்று அசுரர்களை அழிதத்தாகவும் கண்டார். இது பற்றி தந்தையிடம் வினவ, பிரம்மா, நீ பூர்வ ஜென்மத்தில் தேவாசுரப் போரில் சேனாதிபதியாக இருந்து தேவர்களைக் கொடுமைப் படுத்தும் அரக்கர்களை அழிக்க வேண்டும் என நினைத்தாய். அந்தப் பிறவியின் எண்ணங்கள் பிரதிபலித்ததே இந்தக் கனவு. இந்த ஜென்மத்தில் நீ பிரம்ம ஞானியாய் இருப்பதால் இன்னொரு ஜென்மத்தில் அந்த எண்ணங்களும் அதனால் உண்டான இந்தக் கனவும் நிறைவேறும் என்றார். சனத்குமாரர் தொடர்ந்து தியானத்திலேயே இருந்ததால் கனவைப் பற்றி நினைக்க வில்லை. ஆனால் காரண கர்த்தாவான சிவன் நினைத்தார்.

ஈசன் கேட்ட புத்திர பாக்கியம்!

சதச்ருங்க மலையில் விஷ்ணு அம்சம் கொண்ட சனத்குமாரர் ஈசனைக் குறித்து தவம் செய்ய அவருக்கு அம்பிகையுடன் காட்சி கொடுத்தும், தியானத்தினால் சகலமும் பிரம்மமாகக் காட்சி அளிக்கும் நிலையில் ஈஸ்வர தரிசனத்தை உணராத நிலையில் சனத்குமாரர் காட்சி கொடுத்தவர்களை பூஜிக்கவில்லை. தியானம் என்றால் அப்படியொரு தியானம். சிவன் தன் கையிலிருந்த ‘டமரு’ என்ற உடுக்கையில் ஒலி எழுப்ப சனத்குமரர் கண் திறந்து பார்த்து வணங்கினார். சிவன் தன்னை பூஜிக்காததால் சபித்துவிடப்போவதாக கோபம் கொண்டவர் போல கூற, சனத்குமாரர் “உம் சாபம் என்னையோ என் ஆன்மாவையோ பாதிக்காது” என்றார். அவரது ஞானத்தை அறிந்த சிவன் இந்தப் பிறவியில் பிரம்ம புத்திரராக பிறந்த அவரை இன்னொரு ஜன்மத்தில் தன் புத்திரானாக பிறக்க கேட்டுக் கொள்ள சனத்குமாரர் சம்மதம் தெரிவித்தார். எத்தனையோ பேருக்கு புத்திர பாக்கியம் அருளும் ஈசன் தனக்கு கேட்ட புத்திர பாக்கியம் இது.

பிரம்மபுத்திரன்-சிவபுத்திரன்!

ஈசனோடு எழுந்தருளியிருக்கும் தன்னைப் பார்த்து சனத்குமாரர் ஏதும் கூறாததால் உமை வருத்தமுற்றதை உணர்ந்த சனத்குமாரர், “கேட்காதவர்களுக்கு எதையும் தரக்கூடாது” என்கிறது சாஸ்திரம். எனக்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும் என்று ஈசன் மட்டும் கேட்டார், தேவி கேட்கவில்லை, அதனால் ஈசன் மட்டும் என்னை உற்பவிக்கச் செய்து கொள்ளட்டும் என்றார் சனத்குமார். என்ன வித்தியாசமான வேண்டுகோள். தாயில்லாமற் பிள்ளையா! உடனே உமை “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனால் நான் கேட்காவிட்டாலும் நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்றாள். சனத்குமரர், ”எனக்கு ஸ்திரீபுருஷ சம்பந்தத்தில் பிறப்பதில் விருப்பமில்லை. உங்கள் பதி மட்டுமே என்னை ஜனிக்கச் செய்யட்டும்” என்றார். இதைக் கேட்ட சிவன் புன்னகைக் கொண்டார். அவருக்குத் தெரியும். இது முன்கூட்டியே நிர்ணயக்கப் பட்டது என்று.

தேவர்கள் மனைவியிடம் கரு ஏற்படக்கூடாது என சபம்!.

பிரம்மாவிடம் பெற்ற வரத்தின்படி பார்வதி தன் கருமை நிறம்மாறி பொன்னிற மேனியாளாக வர சிவனும் பார்வதியும் ஆனந்தமாக இருக்க உலகம் இருண்டது. பார்வதி பரமேஸ்வரருக்கு குழந்தை பிறந்தால் அது சொர்க்க ராஜ்யத்தைக் கைப்பற்றும் என்பதால் பயமுற்ற இந்திரன் தேவர்களுடன்கூடி ஆலோசனை செய்தான். உமா சங்கரின் ஏகாந்தத்தைக் கெடுக்க அக்னியை அன்னப் பறவை வடிவில் அனுப்பி தேவர்கள் வெளியில் காத்திருக்கும் தகவலைச் சொல்லச் சொன்னான். சிவன் வெளியில் வந்தார். உலகம் இருண்டு வருகிறது. தங்கள் மோகத்தை விடாவிட்டால் எல்லாம் தலைகீழாகும் என்றனர். புரிந்த காமேஸ்வரரான சிவன் என் வீர்யத்தை யார் சுமப்பர் எனக் கேட்க அக்னி அதற்கும் முன்வந்தான். இதனால் கோபமடைந்த பார்வதி தங்களின் தனிமையைக் கெடுத்த தேவர்கள் யாருக்கும் அவரவர் மனைவியிடம் கரு ஏற்படக்கூடாது என சபித்தாள்.

உமையின் வேண்டுகோள்!

கயிலையில் ஒர்நாள் பார்வதி சிவனை நோக்கி தங்களை நிந்தனை செய்த தட்சனின் மகளாகப் பிறந்து தாட்சாயணி என்ற பெயரை நான் சுமக்க விரும்ப வில்லை. இந்த தேகத்தைக் கரைக்க விரும்புகின்றேன் என்றாள். உன்னை மகளாக அடைய இமவான் தவமிருக்கின்றான். நீ அவனுக்கு மகளாய் பிறப்பாய். தக்க தருணத்தில் நான் உன்னை மணப்பேன் என்றார். இமவான் மகளாகப் பிறந்து பார்வதி என்று அழைத்து இமவான் ஆனந்தித்தனர். பார்வதி வயது வந்தவுடன் சிவனை நோக்கித் தவமிருந்தார்.

சிவன் பஸ்மாசூரனுக்கு வரம் கொடுத்து அவன் அதைச் சோதிக்க வந்தபோது அந்தர் தியானமானார். சிவனைக் கானாத உமை அவர் பிரிவால் வருந்தி உருகி ஓர் நீர் நிலையானாள். அந்த நீர் நிலையே சரவணப் பொய்கையாகும். தேவியின் சரீரமே சரவணப் பொய்கை. பாஸ்மாசுரனை மோகினி உருக்கொண்டு திருமால் அழித்ததும் ஈசன் வெளிப்பட்டார். தியானத்தில் இமயமலைச் சாரலில் ஓர் குடிலில் தவம் செய்ய அமர்ந்திருந்தார்.

சிவனார் இமயமலைச் சாரலில் தவம் புரிவதை அறிந்த பார்வதி அக்குடிலுக்குச் சென்று அவருக்கு இடையூறு செய்யாமல் பணிவிடை செய்ய விரும்பி தன் தந்தை இமவான் அனுமதியுடன் குடிலுக்குச் சென்று அவர் பாதங்களில் மலர்களைச் சமர்பித்து அருகிலேயே அமர்ந்திருந்தாள்..

பிரஜாபதிகள் பிரம்மனின் மானஸ புத்திரர்கள். இவர்களில் ஒருவரான காசியப முனிவர்-திதி என்ற பெண்ணின் வழியாகப் பிறந்தவர்கள் அசுர குலத்தவர்கள். அசுர குரு சுக்கிராச்சாரியாரால் ஏவப்பட்ட மாயை என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்கமுகன், யானைத் தலையுடைய தாரகன், ஆட்டின் தலைகொண்ட அஜமுகி(பெண்) முன் ஜென்மத்தில் சிவபெருமானால் கொல்லப்பட்ட தட்சனே மறு ஜென்மத்தில் சூரபத்மன்

சூரபதுமன், சிங்கமுகாசூரன், தாரகாசுரன் என்ற மூவரும் தேவர்களை எதிரியாகக் கொண்டு அவர்களை அழிக்க ஈசனை நோக்கித் தவமிருந்து சாகாவரம் வேண்டினர். சிவன் பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் இறந்துதான் ஆகவேண்டும். அதனால் வேறு வரம் கேட்குமாறு கூறினார், உங்களுக்குச் சமமான ஒருவன், பெண் சம்பந்தமில்லாமல் தோன்றியவனால் மட்டுமே எங்கள் அழிவு ஏற்படவேண்டும் என்றனர். அவ்வாறே சிவ வரம் பெற்ற அசுரர்கள் அஷ்ட திக்பாலகர்கள், சூரியன், சந்திரன், தேவர்கள் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்திரனும் இந்திராணியும் பூ வடிவெடுத்து மறைந்தனர். இந்திரன் மகன் ஜெயந்திரன் சிறைப்பட்டான். தேவர்கள் பெருமாளிடம் முறையிட்டனர்.

அப்போது ஈசன் தியானத்தில் இருப்பதை உணர்ந்த பெருமாள், ஈசனும் அன்னையும் தனித்தனியே தவமிருந்தால் வரம் பெற்ற சூரபதும சகோதர்களை சம்ஹாரம் செய்ய குமரன் தோன்றுவது எப்படி என ஆலோசித்து நாரதரின் யோசனைப்படி மன்மதனை அழைத்து சிவன்மீது மலர் பாணத்தை எய்யச் சொன்னார். முதலில் மறுத்த மன்மதன் உலக நன்மைக்காக தன்னிடமிருந்த தனது சேனைகளான வசந்தகாலம், இனிய நறுமனம், பூக்களின் மகரந்தப் பொடி, மிகிழ்ச்சிகரமான சூழல் ஆகியவை கொண்டு கயிலை வந்தான். அவன் வந்ததும் மலர்கள் பூத்து இனிமையான சூழல் உருவானது. கரும்பு வில்லை வளைத்து மலர் அம்பை சிவன்மேல் செலுத்தினான்.

யோக நிஷ்டை கலைந்த சிவன் கண்விழிக்க மன்மத பாணமகிமை மகேசனை மதிமயங்கச் செய்தது. கண் திரையில் பார்வதியின் அழகிய ரூபம் சிற்பமென தோன்றியது. பார்வதி இத்தனை அழகா என நினைத்தார் சிவன். மன்மதக்கணை காமத்தை ஊட்டியது. உடலைச் சிலிர்த்து திரும்பினார்.

தவம் கலைந்த சிவன் தன்னை திசை திருப்பிய மன்மதனை கோபத்தால் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தார். அருகிலிருந்த பார்வதி மயக்கமானாள். கணவனின் நிலைக் கண்ட ரதி அழுது புலம்பி வேண்ட ரதியே யாம் பார்வதியை மணக்கும்போது உன் கணவன் மன்மதன் உயிர்பெற்று எழுவான். அனங்கனாக- அங்கமில்லாதவனாக இருப்பான், உன் கண்களுக்கு மட்டும் தெரிவான். மேலும் துவாபரயுகத்தில் மன்மதன் ஸ்ரீகிருஷ்ணன்-ருக்குமணிக்கு பிரத்தியும்னன் என்ற பெயரில் மகனாக தோன்றும் போது அவனுக்கு உருவம் உண்டாகும். பிரத்தியும்னனை சம்பரன் என்ற அசுரன் கவர்ந்து செல்ல பிரதியும்னன் யுத்தத்தில் சம்பாசுரனை அழிக்க சம்பாசுரனின் மகளான மாயாவதியாகிய உனக்கும், பிரத்தியும்னனுக்கும் திருமணம் நடைபெறும் என அருளினார். மன்மதன் சாம்பலானதை அறிந்த தேவர்கள் வருந்தினர். சிவன் அந்தர் தியானமானார். விபரம் அறிந்த இமவான் தன் மகள் பார்வதியை தன் இருப்பிடத்திற்கு அழைத்துப் போனான்.

மகட்கொடை!

சிவனின் தவச்சாலையிலிருந்து வந்த பார்வதி தன் தவத்தை மீண்டும் தொடங்கினாள். ஒர் நன்னாளில் முதிய அந்தணர் வேடம்கொண்டு பார்வதியின் தவச்சாலைக்கு வந்த ஈசன் பார்வதியின் மனதைச் சோதிக்க எண்ணி ‘’சிவனார்க்கு தோலாடை, எருது வாகனம், பாம்பு ஆபரணம், தலை மாலையோ எழும்பு, பன்றிக்கொம்பு இவைகள் மட்டுமல்லாமல் உண்ணும் பாத்திரம் தலைஓடு, உணவோ பிட்சையும் விஷமும், ஆடுகின்ற இடமோ சுடுகாடு, போட்டுக்கொள்வதோ வெள்ளெருக்கு, அறுகு, கொன்றை, நொச்சி, ஊமத்தம்பூ மாலை, தலையில் கங்கை, கழுத்தில் பாம்பு, கையில் மான், மழு, சூலம், உடுக்கு, அக்னி என்று இருப்பவன். பூதங்கள் சூழ இருப்பவன். இன்னும் சொல்லப்போனால் தாயுமில்லை, தந்தையுமில்லை, உற்றார் உறவுமில்லை, குலம், குணம் எதையும் சொல்ல முடியாது. அநாதியானவன். மன்னன் மகளான நீ இவனை மறந்து என்னை மணந்துகொள் என்று தன்னைப்பற்றி தாமே சுயவிமர்சனம் செய்தார். சிவசிவ என காதுகளைப் பொத்திக்கொண்ட அழுத பார்வதிக்கு காட்சிதந்து விரைவில் உன்னை மணமுடிக்க வருவோம் என்று அருளினார்.

சிவன் சப்த ரிஷிகளை நினைக்கத் தோன்றிய அவர்களிடம் இமவானின் வீட்டிற்குப்போய் பெண்கேட்க அனுப்பிவைத்தார். இப்படி மணமகள் வீட்டிற்குப் போய் பெண் கேட்பதை மகட்கொடை என்று இலக்கியங்கள் பகர்கின்றன.

சப்த ரிஷிகளை வரவேற்ற இமவான் தன் சம்மதத்தை சந்தோஷத்துடன் தர மலையரையனிடம் சொன்னார்கள். மலையரையன்-சிவன் தேவர்கள், முனிவர்கள், தபஸ்விகள் எல்லோருக்கும் திருமணத் தகவல் அனுப்ப ஏற்பாடு செய்தார். பங்குனி உத்திர நன்னாளில் மணம் முடிக்க இமயமலைக்கு எழுந்தருளினார்.

இந்த திருமணத்தைக் காண அனைத்து புவனங்களிலிருந்தும் அனைவரும் அங்கு குழுமி விட்டதால் வடபாகம் தாழ தென்பாகம் உயர்ந்தது. சிவன் நந்தியிடம் அகத்திய மாமுனியை அழைத்துவரச் சொன்னார். அகத்தியரிடம் தென்நாடு சென்று இந்த தாழ்நிலையைச் சமன்செய்ய பொதிகைமலை மீது இருக்கக் கடவது என ஆணையிட்டார்.

அகத்தியர் அடியேன் இழைத்த குற்றம் என்ன! தங்களின் திருமணக் காட்சியைக் காணாமல் நான் எவ்வாறு இவ்விடம் விட்டு செல்வது என்றார். நீ சற்றும் சிந்தியாமல் பொதியமலைக்குச் எல் யாம் அங்கு எமது திருமணக் காட்சியை உமக்கு காட்சி அருளுவோம் என்றார். சிவனை வணங்கி அகத்தியர் பொதியமலை செல்ல தென்பால் நிலம் வடதிசை இரண்டும் சமன் பட்டு நின்றது. ரதிதேவி மன்மதனை அனங்கனாக உருவத்துடன் பார்த்தாள். மற்றவர்களுக்கு அருவமாக இருந்து தன் தொழிலை தொடர்ந்து செய்தான். அனங்கனாக உயிர்பெற்ற மன்மதன் வணங்கிய தலம் குத்தாலம்- மன்மதீஸ்வரர். சிவ-பார்வதி கயிலையை அடைந்தனர்.

கயிலையில் நந்தியம்பெருமான் அனுமதியுடன் பிரம்மா மற்றும் முனிவர்கள் தேவர்களது நிலையையும் அசுரர்களது அட்டகாசத்தையும் சிவபெருமானிடம் எடுத்துக் கூறினார்கள். முன்பு கூறிய வீரமகனை உருவாக்கும் நேரம் வந்ததை உணர்ந்தார் சிவன்.

உரிய காலத்தில் பரமேஸ்வர தேஜஸாக சனத்குமாரர் ஜனிப்பது என்றானதும் பார்வதிதேவிக்கு புத்திரனாகப் பிறக்காவிட்டாலும் ஈஸ்வர தேஜஸை நீர்நிலையாக மாறிய பார்வதியின் சரீரத்தில் தாங்கி சுப்பிரமண்ய செரூபமாகத் தருவது என முடிவானது.

சிவன் அம்ச ஆறுமுக முருகன்!

சிவனின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் ஞானிகள் பார்க்கும் ஞானமுகம் அதோமுகம் ஆகியவற்றிலிருந்து யாரும் அனுக முடியாத வெம்மையுடன் நெருப்பு பொறி தோன்றி ஞானம், வீரம், செல்வம், சித்தி, கருணை, இரக்கம் ஆகிய ஆறு பொறிகளாக சனத் குமாரர் தேஜஸாக ஜனித்து வெளிப்பட அக்னி பகவான் வாயுபகவான் இருவரும் அந்த தேஜஸை தாங்கும் சக்தியை இறைவனிடம் பெற்று தேஜஸை முதலில் கங்கையிலும் பின்னர் அன்னை நீர்நிலையாக இருந்த சரவணப் பொய்கையிலும் சேர்த்தனர். சிவன் அன்னை பார்வதியின் அம்சமான கார்த்திகைப் பெண்களை அழைத்து ஆறுவரையும் வளர்க்கச் சொன்னார். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகேயன்.

சிவசக்தி ஐக்கிய நாள்! ஆறுமுகன் பிறந்தநாள்! தைப்பூச நன்னாள்!

அம்மையும் அப்பனும் ஆறு உருவங்களாக சரவணப் பொய்கையில் விளையாடிக் கொண்டிருந்த குழைந்தைகளைக் கண்டு மனம் மகிழ்ந்து அவர்கள் அறுவரையும் அணைக்க ஆறுமுகமும் ஓர் உடலுமாக ஆறுமுகப்பெருமானக மாறினார். இது சிவசக்தி ஐக்கிய நாளாகும். ஆறுமுகனின் பிறந்தநாள்- தைப்பூச நன்னாள். ஆறுமுகனின் அவதார நிகழ்வு இது. உமையும் நீர் நிலையிலிருந்து உருமாறி தன் திவ்விய சரீரம் கொண்டாள்-பழநி.

அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞானத்தை வழங்கி!
தாருகா முனிவர்கள் அபிசார வேள்வி செய்து கஜாசூரனை பிட்சாடனர் மேல் ஏவ கஜாசூரன் பிட்சாடனரை விழுங்கி விடுகின்றான். அம்பாள் இடுப்பில் முருகன் இருக்க கண்ணுற்ற பார்வதி வருத்தம் அடைந்தாள். அப்போது யாணையின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்து கஜாசூரனை வதம் செய்கின்றார் பிட்சாடனராகிய சிவபெருமான்.

அழகிய திருமேனியுடன் தாயின் இடுப்பில் இருக்கும் சிவக்குமரன் முருகன் தாயை நோக்கி ‘இதோ தந்தை’ என தன் விரல் நீட்டி காண்பிக்கின்றார். இந்தக் காட்சியே அஞ்ஞானத்தால் அல்லலுறும் பார்வதியின்(உயிர்களின்) துயர் நீங்கும் பொருட்டு கருணை வடிவான முருகப் பெருமான் ஞானாசிரியராக இருந்து ஆணவத்தை அடக்கி அஞ்ஞானத்தை நீக்கி, ஞான வடிவாகிய பரம் பொருளைக் காணச் செய்து, மெய்ஞானத்தை வழங்கி உயிர்களுக்கு பிறவிப் பயனை நல்குவதை விளக்கும் காட்சியாக ஆன்மீகப் பெரியோர்கள் குறிப்படுவது

சிவனின் ஞானவடிவான ஞானபண்டிதன் சிவபாலனுக்கு காவடி ஏன்!
அகத்தியர் தன் சீடன் இடும்பனிடம் தான் வணங்குவதற்காக இமயமலைச் சாரலிலிருக்கும் சிவகிரி, சக்திகிரி என்ற இருமலைகளையும் கொண்டுவரச் சொன்னார். அம்மலைகளை ஒரு நீண்ட கழியில் இருபுறமும் கட்டி காவடியாக தோளில் தூக்கி வரும்போது ஒர் இடத்தில் களைப்பு மேலிட காவடியை கீழே வைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்தான். பின் காவடியைத் தூக்க முயற்சிக்கும்போது அம்மலைமேல் இருந்த சிறுவன் அம்மலை தனக்குச் சொந்தம் எனக்கூற இருவரும் போரிட்டனர். முடிவில் சிறுவனாக வந்திருப்பது சிவக்குமரன் என்றறிந்து இடும்பன் வணங்க அருளினார் முருகப்பெருமான். இந்நிகழ்வு நடந்த தினம் ஒர் தைப்பூச நன்னாள். அன்றிலிருந்து முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. காவடிகள்- பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, மயில்காவடி, அக்னிகாவடி, பறவைக்காவடி, மச்சக்காவடி, சர்ப்பக்காவடி என பலவிதமுண்டு.

ஒருவனுக்கு வரும் பிரச்சனைகள், சங்கடங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து சுமந்தால் மனதில் அழுத்தம் அதிகமாகும். மூளையின் செயல் குன்றும். எனவே பிரச்சனைகள் தோன்றியவுடன் அதை ஓரமாக ஒதுக்கி வைக்கப் பழகவேண்டும். இதைத்தான் முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுக்கும் பக்தர்கள், முருகா இத்தனை நாட்கள் விரதம் இருந்து காவடி சுமந்து வந்தேன் உன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்தது. காவடி இறக்கி வைத்தது போன்றே என்மனதில் உள்ள சுமைகளை இறக்கி வைத்து அருள்வாய் எனச் சொல்லாமல் சொல்லும் செயலாகும்.

காவடி எடுக்கின்றேன் என மனதாரப் பிரார்த்தனை செய்து அதனைச் செலுத்தும்பொது தன் மனதைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றனர். பக்தியுடன் இறைவன்மேல் பாரத்தைப் போட்டு நம்பிக்கையுடன் சுமந்து செல்கின்றனர், பக்திப் பிரவாகத்தில் தன்னை மறக்கும் நிலை ஏற்படுவதால் அவரது குடும்பம், சுற்றம் சொந்தங்கள் பற்றியும் நடப்பது நடக்கப்போவது எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தெய்வ சிந்தனையால் மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்த நிலையில் இருப்பர். அப்போது சத்து சித்து என்ற ஆனந்த நிலை கிட்டும் உண்மையான பக்தர்களுக்கு.

குருநாதர் ஏன்!
சிவனைத் தரிசிக்க தேவர்களுடன் வந்த பிரம்மன் அங்கிருந்த குமரப்பெருமானை அனைவரும் வணங்க தான் மட்டும் இவர் இளைஞன்தானே என்று செருக்கடைந்து வணங்காமல் சிவனை தரிசிக்கச் சென்றார். சிவனைத் தரிசித்து செல்லும் பிரம்மனுக்கும் மணியும் ஒளியும்போல், மலரும் மணமும் போல் தாமும் சிவமும் பிரிக்க முடியாத நிலையாமை என்பதை உலகிற்கும் உணர்த்தவும் பிரம்மனின் செருக்கை அடக்கவும் விரும்பிய முருகன் பிரம்மனை அழைத்து நீவிர் செய்யும் தொழில் யாது என்றார்.

படைக்கும் தொழில் என்பவரிடம் வேதங்கள் தெரியுமா உங்களுக்கு என்று கேட்க, ரிக் வேதம் பற்றி பிரம்மன் ஓம் என்று கூற ஆரம்பித்தார். ஓம் என்பதன் பொருள் என்ன வென்று கேட்க தடுமாறிய பிரமனை இது அறியாமல் படைப்புத் தொழிலை செய்வது சரியாகாது எனக்கூறி பிரமனைச் சிறையெடுத்தார். அவர் செய்துவந்த படைப்புத் தொழிலை தாமே மேற்கொண்டார்.

திருமால் பிரமனை விடுவிக்க எண்ணம் கொண்டு தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட, புன்னகைப் பூத்த சிவபெருமான் பிரம்மனின் செருக்கை அடக்கவே அவனை சிறையிலடைத்துள்ளான் என்றவர் நந்தியெம்பெருமானை அழைத்து முருகனிடம் சென்று பிரமனை விடுவிக்க சொன்னார். நந்தியின் பேச்சை கேளாதாதால் எம்பெருமான் அனைவருடனும் முருகனைக் காணப் புறப்பட்டார்.

ஓம் எனும் ஓங்கார முதல் எழுத்தின் பொருள் தெரியாமல் படைக்கும் செயலை செய்தல் சரியன்று. இருப்பினும் உங்களது திருவுள்ளப்படி அவனை விடுவிக்கின்றேன் என பிரமனை விடுவித்தார். பெருமான் பிரமனை மீண்டும் தனது படைப்புத் தொழிலைச் செய்ய அனுமதித்தார்.

பெருமான் குமரனை நோக்கி ‘பிரணவத்தின் பொருள் உனக்கு வருமாயின் சொல்லுக‘ என்றார். அப்போது அன்னைக்கு பிறர் அறியாவண்ணம் நீவிர் உபதேசித்த பிரணவத்தின் பொருளை யான் யாவரும் கேட்கும்படி சொல்வது முறையில்லை. இருப்பினும் காலம், இடம், அறிந்து முறைப்படி(குரு-சிஷ்ய பாவனையில்) கேட்கின் யான் கூறுவோம் என்றார்.

 

தன் குமரனிடம் திருவிளையாடல் புரிய நடந்த இந்த நிகழ்விற்காக, ஞானத்தின் பிறப்பிடம் ஓங்காரத்தின் சொரூபமான பெருமான் மைந்தா, நன்கு உரைத்தாய் என்று இருக்கையில் இருந்து எழுந்து, சிரந்தாழ்த்தி, வாய் பொத்தி, செவி சாய்த்து நின்றார்.. கல்லால மரத்தின் அடியில் எழுந்தருளி நால்வருக்கும் ஞான உபதேசம் செய்த ஞானகுரு, சீடனாகி குருவிடம் பாடம் கேட்கும் நிலையில் இருந்தார். குமரன்

தன் மழலை மொழியில் பிரணவ மந்திரத்தின் பொருளை மிகத் தெளிவாகக் கூறினார்-.சுவாமிமலை சுவாமிநாதன்.

இந்த நிகழ்வு ஏன் என்றால் எத்தகைய வாழ்வும் ஞானமும் பெற்றவர்கள் ஆனாலும் ஒன்றை கற்கும்போது குருநாதர் வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்த திருவருள் புரிந்தார்.

சரியான குரு!

உயிர்களுக்குத் தெரியாத ஒன்றை தெரிந்துகொள்ள ஒருவரின் துணை அவசியம். அதற்காக உயிர்கள் தேடிக்கொள்ளும் துணை அதைப்போன்றே தெரியாத ஒன்றாக அமைந்து விட்டால் அந்த உயிர்கள் தெரியாத ஒன்றை எப்படி தெரிந்து கொள்ளமுடியும். ஆரம்பத்திலிருந்து தடுமாற்றங்களும் குழப்பங்களும்தான் மிஞ்சும். எனவே சரியான வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். உலகியல் மற்றும் உயிரியல் பாதைகளில் வழிகாட்ட குரு என்பவர் தேவை.

 குரு என்றால் ஒளி, செம்மை, முளைப்பு என்றாகும். நாரையை குருகு என்று சொல்வது அதன் ஒளிர் வெண்மை நிறத்தால்தான். இரத்தத்தை குருதி என்று சொல்வது அதன் செம்மையை வைத்துதான். வாழையின் அடியில் வளரும்/ தழைத்துவருவதை குருத்து என்று சொல்வது அதன் முளைப்பை வைத்துதான். எனவே ஒளியுடையதாய், செம்மையுடையதாய், முளைத்து பெருகக்கூடியது எதுவோ அதுவே குரு எனப்படும். ஒளியையும் செம்மையையும் முளைப்பையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் கற்றதை இவ்வுலக மக்களுக்கு என தன்னிலிருந்து மற்ற உயிர்களுக்கு கடத்துபவரே குரு ஆவார். அந்த வகையில் குருந்த மரத்தடியில் இருந்து குருவாக மாணிக்கவாசகருக்கு அறிவு தந்தவர் இறைவன். ஒளியும், செம்மையும், முளைப்பும் வேண்டும் உயிர்கள் சரியான குருவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். குருவிடம் உயிர்கள் எதிர்பார்ப்பது அறிவையல்லவா!

மாலின் கண்ணீரில் இரு பெண்கள்!

இந்த நிகழ்வைக் கண்ணுற்ற உமையின் தமையன் திருமாலின் கண்களிலிருந்து ஆனந்த நீர் துளிர்கள் துளிர்க்க அந்த இரு சொட்டு கண்ணீர் துளிகளும் இரு பெண்களாக அமிர்தவல்லி என்றும் சுந்தரவல்லி என்றும் மாறினர். இருவரும் என்றும் இளைமையுடன் இருக்கும் அழகு குமரனை மணந்து கொள்ள விரும்பி சரவணப் பொய்கையில் சடக்கர மந்திரத்தை ஜபித்து தவமிருந்தனர். அவர்கள் முன் தோன்றிய குமரன் மூத்தவள் அமிர்த வல்லியை நோக்கி நீ தேவலோகத்தில் இந்திரனின் மகளாகவும், சுந்தரவல்லியை பூலோகத்தில் சிவமுனியின் மகளாகப் பிறந்து வேடராஜனுக்கு மகளாகவும் வளர்ந்து வாருங்கள் உரிய காலத்தில் யாம் உங்களை திருமணம் புரிவோம் என்றருளினார்.

அமிர்தவல்லி சிறுமி வடிவம் எடுத்து மேருமலையில் இந்திரன்முன் சென்று நான் உன்னுடன் பிறந்த உபேந்திரனுடைய மகள் என்னை உன்னுடைய வளர்ப்பு மகளாக வளர்ப்பாயா என்றாள். இந்திரன் மகிழ்ந்து சஷ்டிதேவி-தேவசேனா எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான். அங்கு ஐராவதம் அவளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியதால் தெய்வயானை எனவும் பெயர் பெற்றாள்

திருமால் சிவமுனிவராக தவம் செய்து கொண்டிருக்கும்போது மகாலட்சுமி மான் உருவில் வர திருமாலான சிவமுனி இச்சை கொண்ட பார்வையை வெளிப்படுத்த அம்மான் கருவுற்று உரிய காலத்தில் வள்ளிக்கிழங்கை அகழ்ந்து எடுக்கும் குழியில் குழந்தையை ஈன்று பின் மறைந்தது. அந்தப் பகுதிக்குச் சொந்தக்காரனாகிய நம்பி பெண் குழந்தை இல்லாததால் அக்குழந்தையைக் கண்டெடுத்து வள்ளி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான்.

நவசக்தி-நவவீரர்கள்! சிவபெருமானின் முகங்களிலிருந்து யாரும் அனுக முடியாத வெப்பத்துடன் தேஜஸ் வெளிப்பட்டபோது அதை தாங்காமல் அருகிலிருந்த பார்வதிதேவியும் பதட்டம் கொண்டபோது பார்வதி காலிலிருந்த சிலம்புகளின் நவரத்தினங்கள் சிதறின. அதை அரனார் நோக்க அம்பிகையின் திருவுருவம் ஒன்பது வடிவங்களாய் ஒன்பது சக்திகளாய் தோன்றின. பரமனாரின் தீட்சப்பார்வையால் ஒன்பதுபேரும் கர்ப்ப முற்றனர், கோபம் கொண்ட சக்தி அவர்களை இக்கர்ப்பத்துடன் பலகாலம் இருக்க சாபமிட்டார்.

நவசக்திகள் இந்த சாபத்தைக் கேட்டு அஞ்சி நடுங்க அவர்கள் வியர்வைத் துளிகளிலிருந்து லட்சம் வீரர்கள் தோன்றினர். மைந்தர்களே நீங்கள் அனைவரும் அவுணர்களை அழிக்க முருகனுக்கு உதவியாய் இருங்கள் என்று சிவன் அருள் புரிந்தார். நவசக்திகளும் பலகாலம் கர்ப அவதியுடன் தவம் செய்து வந்தனர். கர்ப்பம் உள்ளேயிருந்த வண்ணம் சிவயோகம் செய்து வளர்ந்தன. கர்ப்பம் வளர வளர தாங்கமுடியாத நவசக்திகள் பார்வதி பரமேஸ்வரனைப் பர்த்து தங்கள் குறைநீக்க வேண்ட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த புதல்வர்களைப் பெற அருள்.

நவசக்திகளான
மாணிக்கவல்லிக்கு-தீரமிக்க வீரவாகுத்தேவர்,
முத்துவல்லி-மௌத்திகவல்லிக்கு வீரகேசரி,
புஷ்பராகவல்லிக்கு வீரமகேந்திரர்,
கோமேதகவல்லிக்கு வீரமகேசுவரர்,
வைடூர்யவல்லிக்கு வீரபுரந்தார்,
வைரவல்லிக்கு வீரராக்கர்,
மரகதவல்லிக்கு வீரமார்த்தாண்டர்
பவளவல்லிக்கு வீராந்தகர்,
இந்திர நீலவல்லிக்கு வீரதீரர் என மகவாக அவதாரம் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே வாள் கொடுத்து லட்சம் வீரர்களுடன் நீங்களும் கூடி ஆறுமுகனுக்கு உதவி புரிவீர் என ஈசன் அருள்.

11 ருத்திரர்கள் ஏன்!
பதினொரு ருத்திரர்களை ஈசன் நினைக்க அவர்கள் தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டம், வில், மழு என்று 11 படைக்கலன்களாகி முருகனின் கைகளில் அமர்ந்தார்கள். ஆறுமுகனுக்கு 12 கரங்கள். அப்படியிருக்க பெருமான் 11 ருத்திரர்களை மட்டும் உருவாக்கினார். ஏனெனில் 12வது கரத்தில் சக்தியின் வேலை அளிக்க இருப்பதால். மேலும் ஐம்பெரு பூதங்களையும், சகல பிராணிகளையும் அழிக்க வல்லதும், எவ்வளவு வரங்கள் பெற்றிருந்தாலும் அவைகளைக் மறுத்து உயிரை வாங்கக் கூடிய வேலாயுதத்தை சக்தி ஆயுதமாக முருகனிடம் கொடுத்தருளினார். விஷ்ணு, பிரம்மாவின் அலோசனைப்படி ஆகாயத்தில் செல்லும் தேர் மீது தன் இன வாயுக்களுடன் சேர்ந்து முருகப் பெருமானை ஏற்றிக் கொண்டுத் தேரை வாயுபகவான் செலுத்தினான்.

சனத்குமாரர் கண்ட கனவின்படி முருகன் தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி செல்லும் வழியில் நாரதர் தோன்றி, பெருமானே, கிரௌஞ்சமலை என்பது இதுதான்.. அந்தணர், அருந்தவத்தோர் செல்லும் போது வழி காட்டுவதுபோல் மாயை செய்து கொல்லும் கொடுங்குணத்தை உடையது. மகாவிஷ்ணுவை வென்று அவருடைய சக்ராயுதத்தை பதக்கமாக மார்பில் அணிந்துள்ளான் சூரபத்மனுடைய இளயவன் யானை முகத்தோன் தாரகாசூரன் இம்மலையில் வாசம் செய்கின்றான் என்றார்.

கிரௌஞ்சமலை- தாருகன்!

முருகன் படையுடன் வருவதை தூதர்கள் மூலம் அறிந்த தாருகன் தன் படையுடன் எதிர்க்க வீரபாகுத்தேவர் முதலில் போரிட, அவரிடம் தோற்றதுபோல் ஓடிய தாருகனைத் தொடர்ந்து சென்ற வீரபாகுத்தேவரும் அவரைத் தொடர்ந்த வீரர்களும் கிரௌஞ்ச மலையின் மாயையில் சிக்கினார். இதை அறிந்த சிவக்குமரன் தானே நேரில் போரிடச் சென்றார். சிறிது போரிட்ட பின் மனதில் அச்சம் கொண்டு கிரௌஞ்ச மலையில் ஒளிந்தான் தாருகன். முருகன் தன் வேலாயுதத்தைப் பிரயோகித்து கிரௌஞ்சமலையின் மாயைகளை அழித்து வீரபாகுத் தேவர் மற்றும் உள்ள வீரர்களை மீட்டுத் தாருகனை அழித்தார். போரில் தாருகன் செலுத்திய சிவப்படை.-பசுபதி அஸ்திரத்தை கையில் வாங்கிய குமரன் அதை வீரபாகுத்தேவரிடம் அளித்தார். தேவர்கள் விருப்பப்படி கிரௌஞ்ச மலைமீது தானும் தனது தம்பியரும் தங்க ஓர் நகரை உருவாக்க தேவதச்சனிடம் சொல்லி அங்கு எழுந்தருளினார். கிரௌஞ்சமலை-கர்நாடகா-சந்தூர்- 10கி.மீ.(பெல்லாரி மாவட்டம்)

சூரபதுமனுடன் போரிட்டு அவனை இரண்டாகப் பிளப்பதற்குமுன் தன்னை மயில் வாகனமாகவும் சேவல் கொடியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றான். அந்த வேண்டுகோளை முருகப் பெருமான் ஏற்றார். ஆனால் அவர் போருக்குப் போகும் போதே இந்திரன் மயில் வடிவாக தேரிலும் அக்னி சேவல் வடிவாக முருகனின் கொடியிலும் வீற்றிருந்தார்கள் என்கிறார் கச்சியப்ப முனிவர் கந்த புராணத்தில்.

கிரௌஞ்சமலை தேவாசுரப் போரில் தாருகன் இறந்து பட்டதை அவன் மகன் அசுரேந்திரன் வீரமகேந்திரபுரியைத் தலை நகராக கொண்டு ஆண்டு வந்த தன் பெரியப்பா சூரபதுமனிடம் கண்ணீர் மல்க கூறினான். பின்னர் நடந்த போரில் சூரபதுமன் மகன் பானுகோபன் இறக்க, சூரபதுமனின் கடைசி தம்பி சிங்கமுகனும் கொல்லப்பட சூரபதுமன் தானே நேரில் வந்து போர் புரிய குமரனின் வேல்படை. தவம் செய்து 1008 அண்டங்களையும் 108 சதுர்யுகங்களுக்கு அரசாள வரம் பெற்ற சூரபதுமனுடன் போரிட்டு தேவர்களையும் ரிஷிகளையும் மீட்டார். போரில் காயமடைந்தவர்களுக்கு சிவபெருமான் வைத்தியராக பார்வதி தேவியுடன் வந்து தேவையான மருந்துகளை மலைபோல் குவித்து அதன்மீதமர்ந்து உதவி செய்தனர்.-பரளி (ஒளரங்காபாத்) –வைத்தியநாதர்-ஜோ.தலம்-5/12

108 யுகங்கள் அரசாண்ட சூரபதுமனை இறுகூறாக்கி பிளக்க சிவனிடம் பெற்ற வரத்தால் உயிர்பெற்று தான் உருவாக்கிய வீரமகேந்திரபுரம் அழிந்து தன் ஆணவம் அழிந்துபட குமரனை வழிபட்டு நிற்க இருகூறான அவனின் ஒரு கூறை சேவல் கொடியாகவும் மற்றதை மயிலாகவும் குமரன் ஏற்றார். சூரபதுமனின் மகன் இரண்யன் தந்தை இறந்ததைக்கண்டு புத்திரர்கள் செய்யும் கடமைதனை செய்யமுடியாமல் சேவலும் மயிலுமாய் ஆனாய் என புலம்பி நின்றான். முருகப்பெருமான் தனது தம்பியருடன் தங்க ஓர் நகரை உருவாக்க தேவதச்சனிடம் சொல்லி அங்கு எழுந்தருளினார்-திருச்செந்தூர். சனத்குமாரர் கண்ட கனவின்படி முருகன் தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி தேவாசுரப் போரில் அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.

சூரசம்ஹாரத்தின் தத்துவம்!

ஒவ்வொரு உயிருக்கும் மும்மலங்கள் இருக்கின்றன. அந்த ஆத்மாவை அழிக்க அவையே போதுமானவை. மாயாமலமான தாரகாசூரன் உலகமே உண்மை என நம்பி வாழ்ந்து பின்னர் அது பொய் என்றுணர்ந்து அழிகின்றான். சிங்காமுகாசூரன் கன்ம மலம். ஆணவத்தின் அடையாளமான சூரபத்மன் இறக்கும் தருவாயில் அதை உணர்கின்றான். அம்மூன்று மலங்களையும் ஞானவேல் அறுத்து பந்தத்திலிருந்து விடுவிக்கின்றது.

எல்லா அறிவும் சக்தியும் பெற்ற மூன்று அசுரர்களும் இறைவனின் வலிமையை உணராமல் தான் என்ற அகந்தையால் அழிந்தார்கள். சரணடைந்த சூரபத்மனை தன்னோடு வைத்துக்கொள்கின்றார் முருகப் பெருமான். இறைவனிடமிருந்து வந்த நாம் மலங்களை ஒழித்து மீண்டும் இறைவனிடம் சேரவேண்டும் என்பதே சூரசம்ஹாரத்தின் தத்துவம்.

சஷ்டிதேவி-தேவயானையை திருமணம்!

தேவர்களைக் காக்க சூரபதுமனுடன் நடந்த போரில் அவருக்குத் துனையாக இந்திரனின் மகளான சஷ்டி தேவியும் போரிட்டு போர் வெற்றிகரமாக முடிந்ததும் முருகனுக்கு சஷ்டிதேவி-தேவயானையை மணம் முடிக்க இந்திரன் விரும்பி ஏற்பாடுகள் ஆரம்பித்து நிச்சயிக்கப்பட்டது.

ஆசை, அகந்தை, பொறாமை, சினம் இல்லமலிருக்க முசுமுகம்!

திருக்கயிலையில் சிவனும் பார்வதியும் ஏகாந்தமாய் இருக்கையில் அம்மரத்தில் பல முசுக்கள்-குரங்குகள் அமர்ந்திருந்தன. ஓர் ஆண்முசு மரத்திலிருந்த வில்வ இலைகளைப் பறித்து கீழே போட அந்த இலைகள் மரத்தின் கீழே இருந்த சிவ பார்வதிமேல் விழுந்து கொண்டே இருக்க கோபம் கொண்ட பார்வதியிடம் வில்வ இலைகளால் முசு நம்மை அர்ச்சிக்கின்றது, எனவே கோபம் வேண்டாம் என்றார். அப்போது அம்முசுவிற்கு ஞானம் உண்டாகி தன் தவறுக்காக வருந்தி சிவ பார்வதியை வணங்கி நிற்க, சிவன் முசுவிடம் நீ உன்னை அறியாமல் என்னை வில்வத்தால் பூசித்தாய் அதன் பயனாக அடுத்த பிறப்பில் நீ உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் பேறு கிட்டும் என்றார்.

இதைக் கேட்டு மகிழ்ச்சியடையாத முசு, எனக்கு அரச பதவி வேண்டாம் நான் எப்போதும் தங்களையே தொழுது கொண்டிருக்க அருள் புரிய வேண்டியது.. முசுவே நீ மண்ணுலகை ஆண்டபின் இங்கு என்னிடம் வந்துவிடுவாய் என்றார். இதில் விருப்பமில்லாத முசு, பெருமானே மண்ணுலக வாழ்வில் எனக்கு நாட்டமில்லை. இருப்பினும் தங்களின் ஆணைக்கு அடிபணிகின்றேன். உலகில் அரசாட்சி செய்யும் போது எனக்கு மானிட உரு கிடைத்தாலும் என் முகம் முசுவின் முகமாகவே இருக்க வேண்டியது. ஏனெனில் அப்போதுதான் ஆசை, அகந்தை, பொறாமை, சினம், போன்ற குணங்கள் என்னை தீண்டாமல் இருக்கும் என வேண்ட, அதன்படி அரிச்சந்திரன் வம்சத்தில் முசுவின் முகத்துடன் முசுகுந்தன் என்ற பெயருடன் கருவூரை அரசாண்டு வந்தான்.

மன்னுலக மன்னனுக்கு தேவர்கள் வீட்டு திருமண அழைப்பு!

சூரன் மாண்டான் என்பதால் மகிழ்வுற்ற முசுகுந்தன் முருகப் பெருமானின் திருமணத்தைக் காண தன் புடைசூழ வந்திருந்து இந்திரன் முதாலானோர்களைச் சந்தித்து மகிழ்ந்தான்.

திருமணம் பங்குனி உத்திர நாளில் திருப்பரங்குன்றத்தில் இனிது நடந்தது, சஷ்டிதேவி தெய்வானையாக மாறினாள்.

வள்ளி திருமணம்!

சில காலம் கழித்து முருகன் திருத்தணிகை மலைக்கு வந்தார். அங்கு அவரைச் சந்தித்த நாரதர் முன்னைப் பிறவியில் திருமாலின் மகளான சுந்தரவல்லி இங்கு வள்ளியாக இருப்பதும் அவரை தாங்கள் உரிய காலத்தில் மணம் புரிய வேண்டும் என்றார். முருகப்பெருமான் வள்ளிக்கும் நம்பிக்கும் தன் உருவைக்காட்டிட அனைவரும் மகிழ்ந்தனர். விரைவில் திருமணம் இனிது நடந்தது தேவ தச்சனை அழைத்து கோவில் அமைக்கச் சொன்னார்..-திருத்தணி. பின்னர் அங்கு தெய்வானை வர வள்ளியும் அவரும் முற்பிறவியில் திருமாலின் மகள்கள் சகோதரிகள் என்பதை உணர்தினார்.

சிவகுமரனின் பெயர்கள்!

நெற்றிக்கண்களிலிருந்து தீப்பொறிகளை கங்கை சுமந்து சென்றதால் காங்கேயன்.

சரம்-நாணல், வனம்-காடு. பவன் -தோன்றியவன். நாணல்கள் மிகுந்த நீர் காட்டில் சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன்
கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன்
தன்னை நாடும் பக்தர்களை பற்றுக்கொண்டு காப்பவன்.அறுவரையும் ஒன்றாக செய்ததால் கந்தன் அம்மை யப்பருக்கு நடுவில் அமர்ந்ததால் சோமாஸ்கந்தன்.
அழகின் உருவம் முருகன்
முருகனுக்கு ஆறு முகமாதலால் ஆறுமுகன், சண்முகன் (ஷண்-ஆறு)
குரு திருமுருகனின் அருட்பார்வை தன்மீது விழ தவம் செய்து பூஜை குருபரன். கு-அஞ்ஞான இருள், ரு-நீக்குபவன் ஆன்மாக்களின் அஞ்ஞான இருளை நீக்குபவன் குருபரன்.
சிவனுக்கும், அருணகிரியாருக்கும், அகத்தியருக்கும் பிரணவத்தை போதித்ததால் குருநாதன்.
மயிலில் சஞ்சரிப்பதால் விசாகன்.விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் விசாகன். வி- பட்சி, சாகன்- சஞ்சரிப்பவன். பறவையாகிய மயிலை வாகனமாகக் கொண்டு சஞ்சரிப்பவர் எனப் பொருள்.
குன்று இருக்கும் இடமெல்லாம் இருப்பதால் குமரன்..
ஸ்வம்- சொத்து. உலக உயிர்களை சொத்தாக உடையவன் சுவாமிநாதன்.
தேவர்களின் தலைவானக போரிட்டதால்- சுரேசன்.
.குழந்தை முகமாக தோன்றுவதால் சேயோன்.
முத்தைப்போல் இயற்கையாக ஓளிர்பவன் முத்தையன்.
வள்ளிமூலம்-இச்சா சக்தி, தெய்வானைமூலம்-கிரியா சக்தி, வேல்மூலம்- ஞானசக்தி அளிப்பவன் - வள்ளல் பெருமான்.
ஆணவத்தின் வடிவம் மயிலை அடக்கி வாகனமாக்கியதால் மயில்வாகணன்.

பிரணவ ஸ்வரூபியான சிவனே முருகனாக விளங்குகின்றார். முருகனும் சிவனும் ஒன்றேயாதலால் அ கார, உ கார, ம கார மாகிய ஓம் காரத்தின் ஸ்வரூபம் சுப்ரமண்யர். ஒவ்வொரு மந்திரத்திற்கும் உயிராகத் திகழ்வது ஓம். அந்த ஓம் காரத்தினன் ஜீவராசிகளின் இதயக் குகையில் அமர்வதாலே குகன் எனப்பெயர். அனைத்திலும் பரவியிருப்பதாலும், எந்தப் பூஜைக்கும் முதல் அங்கமான ஆத்ம பூஜை செய்தபிறகே என்பதனாலும் அப்போது இதயகுகையில் அமர்ந்திருப்பதாலும் குகபரமன் என்றாகிறது. ஞானத்தின் வடிவாக திகழ்பவன். எங்கும் நிறைந்த அழகுப் பொருளே முருகன் என்று அறிவு கூறினாலும் வடிவத்தை நினைந்து நினைந்து பழகிய நெஞ்சில் அந்த உருவம் மங்குவதில்லை.

முருகனின் திருவுருவங்கள்- 1.சக்திதார், 2.கந்தசுவாமி, 3.தேவசேனாபதி, 4.சுப்ரமண்யர், 5.கஜவாகனர், 6.சரவாபவர், 7..கார்த்திகேயர், 8.குமாரசுவாமி, 9.சண்முகர், 10.தாரகாரி, 11.சேனாபதி, 12.பிரமசாத்தர், 13.வள்ளி கல்யாணசுந்தரர், 14.பாலசுவாமி, 15.கிரஞ்ச பேதனர், 16.சிகிவாகனர்.

முருகனுக்கு உகந்த நாட்கள்- ஐப்பசிமாத சஷ்டி- அவதார நோக்கமாகிய சூர சம்ஹாரம் நிறைவேறிய நாள். கார்த்திகைமாத திருக்கார்த்திகை- ஆறுமுகனை வளர்த்த அன்னையரைச் சிறப்பிக்கும் நாள். தைமாத தைபூசம்- குருபகவான் தன் ஜென்ம நட்சத்திரமான பூசம் சந்திரனோடு சேரும் நாள்-பௌர்ணமி அன்று தவம் செய்து பூஜித்து திருமுருகனின் அருட்பார்வை தன்மீது விழ வழிபாடு செய்தார். அன்று அருள் அலைகள் அதிகம் இருக்கும் நாள். சரணடைந்த பக்தர்கள் விரதம் இருந்து வழிபட சிறந்தது. அசுரனை அழிக்க அன்னையிடம் வேல்வாங்கிய நாள். இடும்பனுக்கு அருள் புரிந்த நாள்.

முருகன் அடைந்த சாபம்! புகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து!

 

ஒங்காரத்தின் பொருள் கேட்டு சொல்லாததால் பிரமனை சிறை செய்த முருகனை அதன் பொருள் சொல்லக் கேட்க பொருள் சொல்லிவிட்டு கடைசியில் சுப்ரமணி ஓம்! என்றார். சதாசிவ ஓம்! என்பதற்குப் பதில் சுப்ரமணி ஓம்! என்று முருகன் சொன்னதைக் கேட்டு தேவர்களும் முனிவர்களும் அதிர்ந்தனர். புகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து. இது தவறு என தன் குமரினிடம் கூறிய சிவன் சர்ப்பமாக மாறச் சபித்தார். ஸ்ரீபிரம்மாவை சிறையிலிருந்து மீட்டார். சர்ப்பமான முருகன் பல தலங்கள் சென்று வழிபட்டு திட்டை வந்தார். பல வருடங்கள் பூஜை செய்து வழிபட்டு அருள் பெற்று தன் பழைய உருவை அடைந்தார்.. ஸ்ரீசுப்ரமணியராகவும், அருவமாக சர்ப்ப வடிவிலும் முருகன் அருள். தென்குடித்திட்டை.தி.த-132.வசிஷ்டேஸ்வரர்(சு)


தந்தைக்கு உபதேசம் செய்தது சரியா!

சின் முத்திரையுடன் தியான நிலையில் தண்டபாணி. தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி முருகன் வருந்த சிவலிங்கத் திருமேனியை வழிபடச் சொல்லி மாமன் பெருமாள் அறிவுறை. வாய்மூடி மௌனியாய் தன் பேச்சுத்தன்மையைக் குறைத்து பலதலங்கள் சென்று வழிபட்டார் சுப்ரமண்யர். சிவானந்தேஸ்வரை வழிபட்டு தன் பேச்சாற்றலைப் பெற்றார். திக்குவாய்க்காரர்கள் தண்டாயுதபாணிக்கு நாற்பத்தைந்து நாள் தேன் அபிஷேகம் செய்து வழிபாடு.

சிவகாமசுந்தரியின் மகன் குமரகுருபரன். குமரகுருபரன் ஐந்து வயது வரை ஊமை. பேச்சாற்றலில்லை. கவிராயர் குழந்தையுடன் இங்கு வந்து உப்பில்லா விரதம் இருந்து தவறு செய்திருந்தால் தண்டணையைத் தங்களுக்குத் தந்திடவும் குழந்தையை பேசவைக்கவும் வேண்டுதல். சரவணப எனத் தொடங்கும் கந்தர் கலிவெண்பாவை குழந்தை வாய்திறந்து பாடியது. பிச்சாடனர் சிறப்பு. வழக்கத்திற்கு மாறாக சந்திரசேகரர் லிங்கோத்பவர் இடத்தில். முருகனுக்கு அருளி சிவானந்தேஸ்வரர் என்ற நாமத்தில்.-திருப்பேணுபெருந்துறை-நாச்சியார்கோவில் அருகில்

வேத உட்பொருளை கவனியாதலால் சிவன் உமையை சபிக்க கோபம் கொண்ட முருகன் வேதாகமங்களை கடலில் வீச பாவம் சூழ்ந்து உருத்திரசன்மராக -ஊமையாய் பிறந்து சாபம் நீங்கிய தலம்- எருக்கத்தம்புலியூர்.

சோமாஸ்கந்த தத்துவம்!

சிவபெருமான் ஓங்கி உயர்ந்து வளர்ந்த தாணு மரமாக நிற்க, அம்பிகை பார்வதி அந்த மரத்தில் பற்றிப் படர்ந்த கொடியாக- அபர்ணாவாக பிணைந்திருக்க அந்த மரத்தின் கீழ் சிறிய கன்றுச் செடியாக முருகன் தோன்ற அதுவே முதல் முதலாக அமைந்த சோமாஸ்கந்த வடிவம் என்கிறது ‘சோமாஸ்கந்த தத்துவ நூல். வைகாசி விசாக நாளில்தான் தாணு அபர்ணா விசாக அவதாரம் நிகழ்ந்துள்ளது.

ஞானவேல்!

ஒவ்வொரு உயிருக்கும் மும்மலங்கள் இருக்கின்றன. அந்த ஆத்மாவை அழிக்க அவையே போதுமானவை. எனவே அவைகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே முருகனின் ஞானவேலால் ஆணவமலம்- சூரபத்மன், கன்மமலம்-சிங்கமுகன், மாயாமலம்-தாரகன் ஆகியோரை வதம் செய்வதன் மூலம் அம்மூன்று மலங்களையும் ஞானவேல் அறுத்து பந்தத்திலிருந்து விடுவிக்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

அம்மன் அம்ச நான்முக முருகன்! தோற்றம்!

விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் வேண்டி தவம் இருக்க ஈசன் தோன்றி பாலதிரிபுரசுந்தரியை நோக்கித் தவம் செய்யச் சொன்னார். குழந்தையாய் வந்த சுந்தரிக்கு திலகமிட அவர் குளத்தில் குணிந்து திலகத்தைப் பார்க்க அதிலிருந்த குங்குமம் குளத்தில் விழ ஒன்றின்பின் ஒன்றாக நான்கு முகங்கள் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க நான்முக முருகா வருக எனக்கூறி அணைத்துக் கொண்டாள். விஸ்வாமித்திரா! ஈசன் அன்று என் அம்சம் இன்றி ஆறுமுக வேலனை படைத்தார். இன்று அவரது அம்சமின்றி நான்முக வேலனை உனக்காக படைத்தேன். இவனே உனக்கு வேண்டியது தருவான் என்றாள். தூரத்தில் கல் மழை பெய்த இடத்திற்கு வரச்சொல்ல அங்கு ஒர் கோவிலில் பாலதிரிபுரசுந்தரியுடன் நான்முக முருகன் சேர்ந்து காட்சி. இறையருள் பெற தவம் செய்யாமல் வேறு எதையோ தேடிக்கொண்டிருந்தேனே என வருந்தினார் விஸ்வாமித்திரர். சதுர்முகமுருகன் சிறப்பு.சின்னாளப்பட்டி

சாமுத்திரிகா லட்சணம் யார் உருவாக்கியது!

கார்த்திகேயன் ஆண், பெண் லட்சணங்களை சீரமைத்துக் கொண்டிருக்கும்போது தம்மை மதிக்காமல் செய்கின்றாறே என்பதால் அவர் செயலுக்கு இடையூறு விளைவித்தார் விநாயகர். சினமுற்ற கார்த்திகேயன் கணேசரை வீழ்த்த எண்ணி அவரின் பல் ஒன்றை பிடுங்கி விட்டார். பரமசிவன் அங்கு வந்து பிள்ளைகளின் சச்சரவிற்கு காரணம் கேட்க. கார்த்திகேயன் தான் ஆண், பெண் லட்சணங்களை சீரமைக்கும் பணியில் இருக்க அதைக் கெடுத்துவிட்டார் என்றார், அப்போது ஆண், பெண் லட்சணங்கள் என்று கூறுகின்றாயே என்னிடம் எத்தகைய புருஷ லட்சணம் எனக்கேட்டார். கபாலி எனப் பெயர் பெற்ற தங்களிடம் எப்படி புருஷ லட்சணம் காணமுடியும் என்பதைக் கேட்ட சிவன் கோபமுற்று ஆண்களின் லட்சணங்கள் பற்றிய சுவடிகளைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டு அந்தர் தியானமானார்.

சமுத்திரராஜனை அழைத்து நீ பெண் லட்சணங்களைப் பற்றிப் பகுத்து ஆராய்ந்து உருவாக்கு. கார்த்திகேயன் சொன்ன புருஷ லட்சணங்கள் அப்படியே இருக்கட்டும் என்றார். அப்போது சமுத்திர ராஜன் இவை என்வசமிருந்து வருவதால் இவற்றிற்கு சாமுத்திரிகா லட்சணம் என்ற பெயரில் விளங்க அணுக்கிரகம் வேண்டினார்.

கார்த்திகேயன் முன் தோன்றி, தேவலோக நியதிப்படி யார் எந்த வேலையைத் துவக்கினாலும் கணேசரின் அனுமதியோடு துவக்கினால் தான் விக்னமின்றி நிறைவேறும். நீ சகோதரின் பல்லை திருப்பிக் கொடுத்துவிடு. உன் விருப்பப்படி லட்சண ஏடுகளை சமுத்ர ராஜனிடமிருந்து பெற்றுக்கொள். ஆனால் அது சமுத்ர ராஜன் விருப்பப்படி சாமுத்ரிகா சாஸ்திரம் என்றே அழைக்கப்படும். என்றார்.

கார்த்திகேயன் தான் அண்ணனின் பல்லைக் கொடுத்து விடுகின்றேன். ஆனால் அவர் அதைக் கையிலேயே வைத்திருக்க வேண்டும் கீழே கண்ட இடத்தில் வைத்தால் அந்த பஸ்பம் அவரை எரித்துவிடும் என்றார். என்வே சாமுத்ரிகா லட்சணம் என்ற சாமுத்ரிகா சாஸ்திரம் முருகனால் எழுதப்பட்டது.


கார்த்திகைப் பெண்கள் யார்!

சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய ரிஷிகள் நால்வரின் வேண்டுகோளுக்கிணங்கி சிவன் அஷ்டமா சித்திகளை அடையும் வழிகளைப் போதித்தார். அருகிலிருந்த ரிஷிபத்தினிகளான நிதர்த்தினி, அப்ரகேந்தி, மேகந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய அறுவரும் தங்களுக்கும் அஷ்டமா சித்திகளை உபதேசிக்க வேண்டினர். மனதில் பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும் என்பதால் சிவன் தயங்க பார்வதி அவர்களுக்காக வாதாட சிவன் அவர்களுக்கும் அஷ்டமா சித்திகளை உபதேசித்தார்.

உபதேசம் பெற்றவர்கள் தாங்கள் உமைக்கு இணையாக இருப்பதால் ஏன் உமைக்கு பணி புரிய வேண்டும் என நினைத்ததால் சிவன் அவர்களை கல்லாக மாற சாபம். உண்மை நிலை உணர்ந்த பெண்கள் வருந்தி அன்னையை மனதால் பூஜிக்க உமை மன்னிக்க சிவனும் மன்னித்தார். மீண்டும் பணிப் பெண்ணான அவர்கள் ஐயனே காரணமின்றி ஏதும் செய்யமாட்டீர்கள் என்ற ஞானம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கல்லாகமாற்றி மீண்டும் பெண்ணாக மாற்றியதின் அர்த்தம் என்ன என்றனர்.

தீயவற்றை அழிக்கவும் தேவர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க சிவ அம்சத்தில் பிறக்கப் போகிறவனை வளர்க்கப் போகின்றீர்கள். மற்றவர்கள் செல்வம் வீடு எனக் கேட்க நீங்கள் ஞானத்தை கேட்டுள்ளீர்கள். ஆனால் அந்த ஞானத்தை முறையாக பயன்படுத்தும் பக்குவம் உங்களிடம் (கார்த்திகைப் பெண்கள்) இல்லை. அதை முறைப் படுத்தவே இந்த நிகழ்வு என்றார்.

கார்த்திகைப் பெண்கள்! கிருத்திகை நட்சத்திரம்! கார்த்திகேயன்!

குழந்தையாய் இருந்த முருகனை எடுத்து பாலூட்டி பாசம் காண்பித்த கார்த்திகைப் பெண்கள், முருகா! உன்னை வளர்த்த எங்களை உலகம் மறந்துவிட்டதே! என வருத்தப்பட, அன்னைக்குச் சமமாக என்னை சீராட்டி பாலுட்டிய நீங்கள் அனைவரும் ஒன்றாகி கிருத்திகை நட்சத்திரமாக வானில் சுடர் விடுவீர்கள். இந்த நாளான ஆடிக்கிருத்திகை இனி எனக்கு மிகவும் உகந்த நாள். இந்தநாளில் விரதமிருந்து வணங்கும் பக்தர்கள் துயர் தீர்ப்பேன். உங்கள் பெயரால் நான் கார்த்திகேயன் என்ற பெயரிட்டு அழைக்கப்படுவேன் என அருள் புரிந்தார். மேலும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தின்போது மக்கள் தீபமேற்றி வழிபடுவர் என அருள்.

முருகனின் அறுபடை வீடு!

முருகனுடைய ஆறு படைவீடுகளும் நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும். பிரமச்சரிய, கிருகஸ்த, சந்நியாச கோலங்களில் முருகன் வணங்கப்படுகிறார்

1.மூலாதாரம்- திருப்பரங்குன்றம். தெய்வானையுடன் மணக்கோலத்தில் உள்ள தலம்.

2.சுவாதிஷ்டானம்-திருச்செந்தூர். செந்தில்வேலவனாக பக்தர்களது துயர் நீக்கும் தலம்.

3.மணிபூரகம்-பழநி. ஞான தண்டமேந்தி யோக நிலையில் உள்ள தலம்.

4.அநாகதம்- திருவேரகம்-சுவாமிமலை. தந்தைக்கு உபதேசம் செய்த அறிவுத் தலம்.

5.விசுக்தி-திருத்தணிகை. தேவசேனாவுடன் களிப்புடன் இருக்கும் தலம்.

6.ஆக்ஞை-பழமுதிர்ச் சோலை. ஞானப் பழமாக இருக்கும் தலம்

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27036978
All
27036978
Your IP: 18.217.194.39
2024-04-19 00:52

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg