gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வியாழக்கிழமை, 19 September 2013 00:00

ஞானசட்க யோகம்

      ஓம் நமசிவாய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்

மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்

வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்

உள்ளக் கருத்தின் உளன்!

                       ******

ஞானசட்க யோகம்

எல்லா தத்துவங்களையும் கலைகளுடன் ஞானமாக இணைந்துள்ளது. ஓம், பிரணவம், குண்டலினி எல்லாம் ஒரே தன்மையுடையது. அட்டாங்க யோக முறைகள், தெரிந்து பழகியபின் ஞானசட்க யோகம் பயின்றால் நலமாகும். இங்கு ஞானசட்க யோகம் மூலம் சிவாகமத்தில் கூறியுள்ள 16 கலைகளைப் புரிந்து கொள்ள முயல்வோம். சட்கம்- ஆறுபாடல்கள் கொண்டது. இந்த யோகத்தை ஞானமாலை யோகம் பயின்றபின் பயிலவும்.

கலைகளின் நிறமும் இடமும்

நாற்றழலின் கொழுந்து பயகதிர் மின்னுவிளக்கு

நண்ணும் வாளொளி புகை மாணிக்கம் இருமின்னும்

உற்று ஒளிரும் இரவி நூராயிர கோடிஉதய

ஒளியன்ன தொகைவட்டம் ஞான ஆகாயம்

அற்றமில் ஞானவ் வாழி, ஞானக் கண்ணாடி

அவிர்நூறாயிர கோடி மதி ஒளி அத்தொகையே

பெற்ற தினகர வெயில்மேல் பேசவரும் இருளே

பிறங்கு உந்தி முதல் முடிமேல் துவாதசாந்தம் பெறுமே.

1.அகரக் கலை-மேதை- எரியும் தீக்கொழுந்து. 2.உகரக் கலை-அருக்கீசம்- சூரிய சந்திரர் கூடிய ஒளி. 3.மகரக் கலை-விடம்- மின்னல் ஒளி. 4.விந்துக் கலை- விளக்குச் சுடர். 5.அர்த்தசந்திரக் கலை- கூரிய வாள் ஒளி. 6.நிரோதினிக் கலை- புகை நிறம். 7.நாதக் கலை- மாணிக்க ஒளி. 8.நாதாந்தக் கலை-இரு மின்னல்கள் இனைந்தது. 9.சக்திக் கலை- 100 சூரிய ஒளி. 10.வியாபினிக் கலை- 1000 சூரிய ஒளி. 11.வியோமரூபினிக் கலை- ஆகாயம் போன்றது (ஞான ஆகாயம் நீல ஒளி). 12.அனந்தைக் கலை- கடல் நிறம் போன்றது (ஞானக்கடல்). 13.அனாதைக் கலை- கண்ணாடி போன்ற நிறம். 14.அநாசிருதைக் கலை- லட்சகோடிச் சந்திரர் ஒளி. 15.சமனைக் கலை- கோடி சூரியர் ஒளி. 16.உன்மனைக் கலை- இருள்போன்றது.  நாபி முதல் துவாதசாந்தம்வரை இந்தக் கலைகள் இருக்கும்.

நாபி முதல் துவாதசாந்தம்வரை உள்ள அளவும் இடமும்

அங்குலம்நால் அகரத்திற்கு உந்தி மீதே

அடுத்திடும் மூன்றிற்கு எட்டுஎட்டாயே நிற்கும்

துங்கமுள நாலினிக்கும் முன்று மூன்றாம்

துலங்கிய ஓரிரண்டினுக்கு நான்கு நான்காம்

தங்கிய மேல் ஒன்றுக்கு மூன்றே ஆகும்

தயங்கியமேல் ஒன்றுக்கு ஒன்றாகச் சாற்றும்

பங்கமிலா இவைகள் துவாத சாந்தமாகப்

பங்குபெறு கலைகள் எனப் பகரும் நூலே.

1.அகரக் கலை-மேதை- நாபி-உந்தி முதல் 4 அங்குலம், 2.உகரக் கலை-அருக்கீசம்-8. 3.மகரக் கலை-விடம்-8, 4.விந்துக் கலை-8, 5.அர்த்தசந்திரக் கலை, 6.நிரோதினிக் கலை, 7.நாதக் கலை, 8.நாதாந்தக் கலை ஆகிய 5முதல்8வரைக்கும் தனித்தனியே 3, 9.சக்திக் கலை, 10.வியாபினிக் கலை, ஆகிய 9, 10 இரண்டுக்கும் 4, 4, 11.சமனைக் கலைக்கு-3, 12.உன்மனைக் கலை-1 ஆக உந்தியிலிருந்து உன்மனை முடிய உயரம்=4+8+8+8+3+3+3+3+4+4+3+1=52விரல்கள்+ உந்தியிலிருந்து மூலாதாரம் வரை 12 ஆக மொத்தம் 64 விரல்கள். இங்கு வியோமரூபினி, அனந்தை, அனாதை அனாசிருதை ஆகியவை சமனைக்கலை-3 மற்றும் வியாபினிக் கலை-4 க்கு இடையே அடங்கி செயல்படும்.

கலைகளின் வடிவம்

அகரம் உகரம் மகரம் விந்துநல்ல

அர்த்தசந்திரன் இவை அவ்வடிவே ஆகும்

புகலவரு முக்கோணம் இருவிந்து நடுவே

பொருந்தும் மலம் விந்து வலம்நடுவே விந்து;

தகவுடைய திரிசூலம் இரண்டும் விந்து

சாரும் வியோமாதி நால்விந்து நான்காய்

நிகழவரும் இருகுச்சி இரண்டு விந்து

நீடுமொரு விந்து என நிறுத்தும் நூலே.

ஞானமாலையின் பாடலில் கூறப்பட்டுள்ள வடிவம் மாறுபட்டுள்ளது. எனெவே ஏதாவது ஒன்றை பாவித்து தியானம் செய்தால் போதும்.

கலைகளின் அதிதேவர்கள்

மலரயன்முன் நால்வர்களும் ஆகும் உந்திமேல்

மருவுஅகரம் ஆதி ஒருநாலுக்கும்

இலகவரு நான்கினுக்கும் சதாசிவமே தெய்வம்

எழிலுடைய மேலிரண்டின் ஆகதமாம் சிவமே

நலமுடைய நான்கினுக்கு நற்பரம சிவமே;

நண்ணும் அநாகத சிவமே நவிலரிய இராண்டிற்கு

உலகறிய ஐந்து மூன்று இரண்டு இரண்டே

உள்ளாகும் இரண்டு இரண்டிற்கு ஒரு நான்குதானே.

1.அகரக்கலை-மேதை-பிரமன், 2.உகரக்கலை-அருக்கீசம்-திருமால், 3.மகரக்கலை-விடம்- உருத்திரன்,

4.விந்துக்கலை- மகேச்வரன். 5.அர்த்தசந்த்ரக்கலை, 6.நிரோதினிக்கலை. 7.நாதக்கலை. 8.நாதாந்தக்கலை ஆகிய நான்கிற்கும் சதாசிவன் 9.சக்திக்கலை. 10வியாபினிக்கலை ஆகிய இரண்டிற்கும் ஆகத சிவன் (அபர சிவன்). 11.வியோமரூபிணிக்கலை, 12.அனந்தைக்கலை, 13.அனாதைக்கலை, 14.அனாசிருதைக்கலை ஆகிய நான்கிற்கும் பரமசிவன் 15.சமனைக்கலை 16.உன்மனைக்கலை இரண்டிற்கும் அனாகத சிவம் (சுத்தசிவன்=சொரூபசிவன்). 1முதல் 5வரை தூல கலைகள். 6.7.8 சூக்கும கலைகள். 9, 10 அது சூக்கும கலைகள். 11.12 மகா சூக்ம கலைகள். வியாபினிக்கு அடுத்த வியோமரூபினி, அனந்தை இரண்டும் வியாபினியிலும், அதற்கடுத்த அனாதை, அனாசிருதை இராண்டும் சமனையிலும் அடங்கும்.

கலைகளின் மலநிலை

மூலத்தில் ஓங்காரம் அசபைக்காக

மொழிவார் காமிகமலம்; மேல்முகிழ்க்கும் உந்தி

ஏலத்தான் மேவு அசுரமுன் இரண்டிற்கு

இழுக்குமலம்; மேலிரண்டிற்கு இலகு மாயை

சீலத்தான் மேலிரண்டில் திகழ் மாயேயம்;

திறலுடைய மேல் இரண்டில் சேர்மா மாயை;

சாலத்தான் மேலிரண்டில் தகுதி ரோதம்;

தயங்கியமேல் இரண்டிற்கு ஆணவமே சாற்றில்.

12 கலைகளையும் இரண்டு இராண்டாகப் பிரித்து, ஓம் எனும் மந்திரம் அசபை ஆகியவற்றுடன் ஏழு பிரிவாக மலங்களைப் பிரித்தும் கூறப்பட்டுள்ளது.

1

ஓம் + அசபை

காமிகம் (கன்மமலம்)

2

அகரம் + உகரம்     

பிரகிருதி மாயை

3

மகரம் + விந்து

அசுத்த மாயை

4

அர்த்தசந்திரன்+ நிரோதினி

சுத்த மாயையின் காரியங்கள்

5

நாதம் + நாதாந்தம்  

சுத்த மாயை

6

சக்தி + வியாபினி   

திரோதானம் (மறைப்பு ஆற்றல்)

7

சமனை + உன்மனை

ஆணவ மலம்

இதைத் தியானைத்தால் மலங்களின் வாதனை நீங்கும்.

84 லட்சம் யோனி பேதம் மற்றும் கலைகளை அடக்குமுறை

அரிய மூலாதாரம் அதனின் மேவி

அவிரும் ஓம்காரம் எழில் அசபைக்காகத்

தெரிவரிய யோனி தாபரமே யாகும்;

திகழவரும் உந்தியின் மேல் அகர மாதிப்

பிரிவரிய இவ்விரண்டாய் அறுகூறாகிப்

பெறும்யோனி ஊர்வனவும் நீரில் வாழ்வதற்கு

உரியனவும் பறவைகளும் நாற்கால் மானிடரும்

உயர்தெய்வ கதியும் என உரைக்கும் நூலே.

ஓங்காரம் அசபை இரண்டிலும் தாவர வர்க்கமும், அகர உகரத்தில் ஊர்வனவும், மகர விந்துவில் நீர் வாழ்வனவும், அர்த்தசந்திரன், நிரோதினியில் பறவைகளும், நாதம், நாதாந்தங்களில் விலங்குகளும், சக்தி வியாபினியில் மக்களும், சமனை உன்மனைகளில் தேவர்களும் என ஏழு வர்க்கங்களாகும். இவையே 84லட்சம் யோனி பேதம் ஆகும். இதனால் பிறப்பு இனி இல்லாது போகும்.

கலைகளின் மாத்திரையும் சூன்யமும்

மூன்று அகரம் இரண்டு உகரம் மகரம் ஒன்றே

முந்துவிந்து அரை; பிறைகால்; முக்கோணம் அரைக்கால்

ஆன்றமைந்த நாதம் மாகாணி நாதாந்தம்

அரைமாமேல் அரைக்காணி சக்தி ஐமுந்திரிகை

என்ற வியாபினி அரக்காணியின் கீழின் அரையே

இம்முறையே வியோமாதி அரைஅரை மாத்திரையே

தோன்றும் மகரத்தின் மேல் நிரோத சக்தியின்மேல்

தோற்றும் வியாபினி சமனை உன்மனைமேல் சுன்னே.

1.அகரக் கலை- 3மாத்திரை, 2.உகரக் கலை-2, 3.மகரக் கலை-1, 4.விந்து- அரை, 5.அர்த்தசந்திரக் கலை- கால், 6.நிரோதினிக்கலை- அரைக்கால், 7.நாதக்கலை- மாகாணி, 8. நாதாந்தக்கலை- அரைமா, அரைக்காணி, 9.சக்திக்கலை- காணி முந்திரிகை, 10.வியாபினி- அரைக்காணிக்கு கீழ் அரை, 11.வியோமரூபினிக்கலை முதல் 16வது கலை வரக்கும் – இதற்குமேல் பாதி பாதியாக கொள்க.

மகரக்கலையின்மேல் முதல் சூன்யம்-தொப்புளுக்குமேல் -24 விரல். நிரோதினியின்மேல் இரண்டாம் சூன்யம் தொப்புளுக்குமேல் -34 விரல், சக்தியின்மேல் மூன்றாம் சூன்யம்- தொப்புளுக்குமேல் -44 விரல். வியாபினியின்மேல் நான்காம் சூன்யம்- தொப்புளுக்குமேல் -48 விரல். சமனையின்மேல் ஐந்தாம் சூன்யம்-   தொப்புளுக்குமேல் -51 விரல். உன்மனையின்மேல் ஆறாம் சூன்யம்- தொப்புளுக்குமேல் -52 விரல். இதை மனத்தால் தொப்புளுக்குமேல் ஒவ்வொரு முறையும் அளந்து சூன்யங்களைத் தியானிக்க வேண்டும்.

******

வியாழக்கிழமை, 19 September 2013 00:00

ஞானஅகவல் யோகம்

      ஓம் நமசிவாய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்

மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்

செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை

முக்கட் கடாயானை முன்!

                       ******

ஞானஅகவல் யோகம்

தத்துவங்கள் எல்லா கலைகளுடன் ஞானமாக இணைந்துள்ளது. ஓம், பிரணவம், குண்டலினி எல்லாம் ஒரே தன்மையுடையது. அட்டாங்க யோக முறைகள், தெரிந்து பழகியபின் ஞானஅகவல் யோகம் பயின்றால் நலமாகும். இங்கு ஞானஅகவல் யோகம் மூலம் சிவாகமத்தில் கூறியுள்ள 16 கலைகளைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முயல்வோம். இந்த யோகத்தை ஞானமாலை யோகம், ஞானசட்க யோகம் பயின்றபின் பயிலவும்.

சுழுமுனைநாடி மற்றும் இடம்வலம் நாடிகள்

போற்றிய தலமை நாற் சதுரத்துள்

ஓங்காரம் சேர் ரீங்காரத்து

மூலை இரண்டிலும் சாலத் தோன்றி

இடை பிங்கலைகள் இடம்வலம் நிற்கும்.

மூலாதாரம் ஆறு ஆதாரங்களில் முதலும் தலையானதுமாகும். இது நான்கு இதழ் தாமரையாகும். மூலாதாரம் சதுரம் அடையாளமாவதால் நாற்சதுரத்துள் எனப்படும். 1.நடுப்பகுதி சுழுமுனை நாடி தோன்றுமிடம் (ஓம்), 2.வலப்பக்கமூலை பிங்களநாடி தோன்றுமிடம் (ஹ்ரீம்), 3. இடப்பக்க மூலை இடாநாடி தோன்றுமிடம் (ஹோம்)

மேலை மூலை மூலமாகச்

சுழுமுனை சித்திரம் வழுவில் வச்சிரம்

ஒன்றுக்கு ஒன்று சென்று உள்வாங்கி

உரைசெய் கோணத்து ஒருதலை செருகி

இருதலை திரண்ட ஒருவேய் போலக்

கோணற நிற்கும் வீணா தண்டின்

ஊடே ஓடி நாடி மூன்றும்

பிரம்மரந்திரம் உருவி நிற்கும்.

மூலாதாரத்தின் நடுவே உள்ள முக்கோணத்தில் சுழுமுனைநாடி துவங்குகின்றது, வச்சிர நாடியுள் சித்ர நாடி, சித்ரநாடியுள் சுழுமுனைநாடியுமாக முன்றும் ஒன்றில் ஒன்றாக உள்ளடங்கி இருக்கின்றது. மூங்கிலில் இருகொம்புகளைப்போல் தண்டுவடத்தில் இம்மூன்றும் தலை உச்சியாகிய பிரம்மத் துளைவரை செல்கிறது, ஒவ்வொரு ஆதாரத்தையும் கடக்கும்போது இடம்வலம் என தமக்குள் மாறிக்கொள்ளும்.

இடைபிங் கலைகள் நடுவு தண்டுடனே

தொடர்வுறப் பின்னி அடைவா தாரம்

ஆறினும் கூடி வேறு வேறாகிப்

புருவ மத்திமம் மருவி நாசிக்கு

இடமும் வலமும் இடமென நிற்கும்

ஆறு ஆதாரத்திலும் தமக்குள் பின்னிப் பின்னிப் போகும், ஒவ்வொரு ஆதாரத்தின் முன்னும் வேறுபக்கமாகப் பிரியும், இப்படி புருவ மத்திவரைப் போகும் என்பதாகும். வலது மூக்கில் சுவாசம் நடக்கும்போது பிங்கள நாடி செயல்படுகிறது. இடது மூக்கில் சுவாசம் நடைபெறும்போது இடாநாடி செயல்படும். சுழுமுனைநாடி எப்போதும் நடுவில் தண்டுவடத்தில் போகும்.

உந்தியம் தாமரைக் கந்தம் மேவி

இடையிலும் கலையினும் எழுந்து ஐந்துநாடி

இடமும் வலமும் நடுவும் மேல்போய்க்

கண்வாய் செவிஎனக் கண்ணி நிற்கும்.

உந்தியில் உள்ள மணிபூரகமாகிய பத்து இதழ் தாமரையை அடைந்து இடை பிங்களையுடன் ஐந்து நாடிகளாய் மாறி, இடம் வலம் நடு என்று பிரிந்து கண்ணிலும் நாக்கிலும் செவியுலும் பொருந்தி நிற்பதாகும். கந்தம்- தாமரையின் கீழ். காந்தாரி- இடாநாடியில் இருநாடிகள் தோன்றி கண்ணில் நிற்பன. அலம்புடை- பிங்களையில் இருநாடிகள் தோன்றி செவிகளில் நிற்பது, சிங்+குவை=சிகுவை- சுழுமுனையில் ஒருநாடி தோன்றி நாவின் அடியில் நிற்பது ஆகும்.

முன்னர்ச் சொன்ன அந்நிலை தன்னில்

மூன்றுநாடி தோன்றிக் கீழ்போய்க்

குதத்தும் இலிங்கத்தும் பகுத்துடன் நிற்கும்.

முன்பு சொன்ன மூன்று நாடிகளில் மேலும் இருநாடிகள் தோன்றிக் கீழே போகும். ஒன்று எருவாயில் நிற்கும் அதைக் குரு நாடி என்பர். மற்றது ஆண்பெண் குறியில்- லிங்கம் போய் நிற்கும் இது சங்கினி நாடி எனப்படும்.

யோக ஆதாரங்களின் பெயர்கள், தாமரை இதழ் எண்ணிக்கை மற்றும் நிறம்

மன்னும் அபானம் இலிங்கம் உந்தி

உன்னும் மார்பு களம்நுதல் உச்சி

சொன்ன தானம் தன்னின் நாமம்

மூலாதாரம் சுவாதிட்டானம்

மேல்மணி பூரகம் அனாகதம் விசுத்தி

ஆக்கினை பிரம்ம ரந்திரம் இதனின்

மேற் சொல் வள்ளிதழ் விளம்பும் காலை

நாலாறு ஐந்து நண்ணும் ஈராறு

ஏழும் ஈரெட்டு இரண்டு ஒன்று ஆயிரம்

மறுவறு தாமரை நிறமது நிகழ்த்தில்

வெண்மை பொன்மை செம்மை படிகம்

உண்மைதரு குருத்து புகைத்திரன் பளிங்குமுன்.

1.குறிக்குகீழ்- மூலாதாரம்- நான்கு இதழ் தாமரை-வெண்மை, 2.குறிக்குமேல்- சுவாதிட்டானம்- ஆறு இதழ் தாமரை-பொன்மை. 3.தொப்புள்- மணிபூரகம்- பத்து இதழ் தாமரை-செம்மை, 4.மார்பு- அநாதகம்- பன்னிரண்டு இதழ் தாமரை-படிகம், 5.கண்டம்- விசுக்தி- பதினாறு இதழ் தாமரை-பச்சை. 6.புருவமத்தி- ஆக்ஞா- இரண்டு இதழ் தாமரை-புகைநிறம். 7.தலைஉச்சி- ஸஹஸ்ராரம் அல்லது பிரம்மரந்திரம்- ஆயிரம் இதழ் தாமரை-படிகம். என்ற ஆதாரங்களில் அபான வாயு நிற்கும் என்பதாகும். அனைத்தும் முதுகுத் தண்டு வடத்திலேயே உணரப்படும். இந்த நிறங்கள் மட்டும் பிறர் கூறியதிலிருந்து சிறிது மாறுபடும்.

தியான வடிவம்

சொன்னதானம் சொரிதழல் தியானம்

சித் + அக்னி = சிதக்கனி. சிதக்கணி குண்டம்- சித்தமாகிய நெருப்பு. எரியும் தழல் நிறத்தில் மூலாதார முக்கோணத்தை நினைத்து தியானம் செய்யவும்.

சுவாசம் மற்றும் மூச்சுகள்

மன்னும் முக்கோணம் வயங்கும் நாப்பண்

இயங்கும் அசபை நயந்து இனிது உரைக்கில்

இருபத்து ஒராயிரத்து அறுநூறு

மருவிய வாயு வலம் இடமாக

மாறி மாறி வேறு பாடாகிப்

பூதம் ஐந்தினும் தோன்றும் நாழிகை

ஒன்றுக்கு ஒன்று குன்றாது எழுந்து

பன்னிரண்டு அங்குலம் முன்னி ஒடி

இருநாலு மீண்டங்கு ஒருநால் ஒழியும்

இந்தக் கருத்தைச் சிந்தித்து அறிவால்

அந்த ஆதாரம் அசைவுஓர் ஏழினும்

பற்றற நிற்கும் பவனம் அறுநூறு

மூன்றாயிரம் மூன்றிடம் மருவி

ஒன்றிட மூவாயிரம் என நிறுத்தி

மந்திரம் ஆம் எனத் தந்திரம் சொல்லும்.

அ + ஜபா= அஜபா- அசபை- இயற்கையாகவே ஜபம் போலிருக்கும். மூலாதாரப் பகுதியில் முக்கோண உச்சியில் அசபை என்ற மந்திரம் இயல்பாக அசைந்தபடி இருக்கும். ஹம் – ஸம் என்ற இரு மந்திரங்களே அசபை. மூச்சை இழுக்கும்போது ‘ஹம்’ என்றும் விடும்போது ‘ஸம்’ என்றும் சொல்வது ‘ஹம்ஸ’ மந்திரம் ஆகும். ஹம்ஸ மந்திரத்தை மூலாதாரத்தை நினைத்துச் சொல்ல வேண்டும். அது ஸோஹம் என்றபாவனையில் ‘சிவஹோம்’ எனப்படுவதாகும். “ஹம்ஸஸ் ஸோஹம் ஸோஹம் ஹம்ஸஸ்” எனத் தொடர்ந்து கூறலாம். இந்த அசபையால் பிராணன் செயல்படத் தொடங்கி மூச்சை இழுப்பதும் விடுவதும் நடைபெறுகிறது. பிரபஞ்சம் முழுவது உள்ள உயிர்கள் மூச்சுவிடுவது இப்பாவனையில்தான்.

ஒருநாளைக்கு இடம் வலமாக மாறி 21600 மூச்சுகள் ஐந்து பூதங்களுக்கும் சேர்த்து நாம் விடுகிறோம். மொத்தம் 60 நாழிகையில் பகல் 30 இரவு 30 அதில் ஐந்து பூதங்களுக்கும் பிரித்தால் பகலில் 6ம் இரவில் 6ம் வரும். 1 நாழிகை = 24 நிமிஷம். ஆக 6 நாழிகைக்கு 144 நிமிஷம். அது 2 மணி 24 நிமிடங்களாகும்.

காலை 06.00 முதல் 08.24 வரை-ஆகாச பூதப்பகுதி, காலை 08.25 முதல் 10.48 வரை-காற்றுப் பூதப்பகுதி. காலை 10.49 முதல் 01.12 வரை-அக்னிப் பூதப்பகுதி. காலை 01.13 முதல் 03.36 வரை-நீர்ப் பூதப்பகுதி. காலை 03.37 முதல் 06.00 வரை-நிலப் பூதப்பகுதி. இதே போன்று இரவுக்கும் கணக்கிடவும்.

இந்த சுவாசம் மூச்சு விடும்போது 12 அங்குலமாகவும் மூச்சை உள் இழுக்கும்போது 8 அங்குலமாகவும் இதன் வித்தியாசம் 4 அங்குலம் அளவிலும் வேகத்திலும் உள்ளதாகும். 21,600 மூச்சையும் ஏழு ஆதாரங்களுக்கு உரிய முறையில் பகுத்து அந்த எண்வரை அந்த ஆதாரத்தை பாவித்து பிராணாயாமம் செய்ய வேண்டும்.

1.மூலாதாரம்- 600 மூச்சுகள், 2.சுவாதிட்டானம்- 6000 மூச்சுகள், 3.மணிப்பூரகம்- 6000 மூச்சுகள், 4.அநாகதம்- 6000 மூச்சுகள், 5.விசுத்தி- 1000 மூச்சுகள், 6.ஆக்ஞா- 1000 மூச்சுகள், 7.ஸகஸ்ராரம்- 1000 மூச்சுகள். மொத்தம் 21,600 மூச்சுகளாகும் இவை அந்தந்த ஆதரத்தின் அதிதேவர்களுக்குரிய மூச்சு என நினைத்து செய்க.

கோடகலை- குண்டலினி

உன்னும் அசபை ஓங்காரத்து

மன்னும் தாபரம் காமியம் மலமாம்

குண்டலினி என்பது பராசக்தி வடிவமாம். எங்கும் பரவியுள்ள சக்தியாதலால் கால கணக்கு, பஞ்சபூதப்பகுப்பு, நீள அகல கணக்கு, கலைகளின் பகுதி கிடையாது. பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள சக்தி நிர்விகார குண்டலினி அதாவது பகுத்து உணர முடியாத குண்டலினி ஆகும். அந்த குண்டலியின் ஒருபகுதி தானாகப் பகிர்ந்து நம் பிறப்பினால் நமக்குள்ளே இருக்கின்றது, இது விகாரக் குண்டலினி ஆகும். இது பிரபஞ்ச நிர்விகாரக் குண்டலியுடன் எப்போதும் உறக்க நிலையில் தொடர்பு கொண்டிருக்கும். விழித்த நிலயில் தொடர்பு கொள்வதே சமாதி நிலையாகும். நாம் செய்த முன்பிறவிக் கர்மங்களே காமிய மலம் எனப்படும்.

1.மேதை-அகாரக்கலை

உந்தி மேல்நால் அங்குலி அகாரம்

வந்த தெய்வம் மலரயன் மூன்று

சிறந்த மாத்திரை; நிறம்தழல் கொழுந்து

ஆனது பிண்டம்; அண்டம் பிருதிவி

பகரில் நூறாயிர கோடி யோசனை

அகலம் உயரம் கனம் ஒரு கோடி

புவித் திறமான நிவிர்த்தி கலையே

மணிப்பூர ஆதாரமாகிய தொப்புள் உந்திக்குமேல் 4விரல் அளவு

1. அதிதேவர்-பிரமன், 2. மாத்திரை-மூன்று, 3. நிறம் -தழல் கொழுந்து நிறம், 4. இருப்பிடம்-உடம்பிற்குள் பகுதி(பிண்டம்) இதுவரை நம் உடம்பிற்குள் உள்பகுதி, 5. பஞ்சபூதப்பகுதி-நிலம் (பிருதிவி). 6. நீள,அகல,கனம்(பரப்பளவு)-இலட்சம் கோடி யோசனை தூரம். 7. பஞ்ச கலைப் பகுதியில்-நிவர்த்திக் கலை. 8. உடம்பிள் உள்ள பகுதி-4விரல் உந்திக்கு மேல்- இது அண்டத்தில் உள்ள பகுதி)

2.அருக்கீசம்-உகாரக்கலை

அகாரத் துக்கு மேலெட் டங்குலி

உகாரம் ஆகும்; உயர்தெய்வம் விஷ்ணு

இரண்டு மாத்திரை; இருகதிர் நிறமே;

யோனி ஊர்வன; இழுக்கு மலமாம்;

பிண்டம் சேரும் அப்பிண்டம் செப்பில்

பத்து நூறாயிர கோடி யோசனை

ஒத்த அகலம் உயரம் கனமே

இரண்டு கோடி என்பது; இதுவே

பரந்து நிற்கும் பிரதிட்டா கலையே.

அகரக் கலையின் எல்லைக்கு அப்பால் எட்டு அங்குல அளவு வரை உகாரக் கலையின் பரப்பாகும்.

1. அதிதேவர்- விஷ்ணு, 2. மாத்திரை- இரண்டு, 3. நிறம்- சூரிய சந்திரர் இணைந்த ஒளியாம். 4. (யோனி) பிறப்புவகை- ஊர்வன. 5. மலம்-மூலப்பிரகிருதி (இதுவரைஉடலில் பிண்டத்தில் இருப்பது) 6. பஞ்சபூதம்- அப்பு அண்டம் (நீர்). 7. நீள, அகல, (உயரம்)- பத்து இலட்சம் கோடி யோசனை. 8. கனம்-இரண்டு கோடி யோசனை. 9. பஞ்ச கலை-பிரதிட்டா கலை

3.விடம்-மகரக்கலை

உகாரம் மீதே மகாரம் எட்டங்குலி;

நிகரில் தெய்வம் உருத்திரன்; மாத்திரை ஒன்று

மெய் இருள் விலக்கும் மின்னிறம்; பிண்டம்

தேயு அண்டம் தெரியும் காலை

இருபது நூறாயிரகோடி யோசனை

கருதிய அகலம் உயரம் ஆகும்

ஆன்ற கனம் ஒரு மூன்று கோடி

சுத்த மான் வித்தியா கலையே.

உகாரக்கலைக்குப்பின் எட்டங்குலப் பகுதி மகரக் கலையின் பரப்பாகும்.

1. அதிதேவர்- உருத்திரன், 2. மாத்திரை- ஒன்று, 3. நிறம்- மின்னல் ஒளி (இதுவரை உடலில் பிண்டத்தில் இருப்பது), 4. பஞ்சபூதம்- நெருப்பு, 5. நீளமும் உயரமும்- 20 இலட்சம் கோடி யோசனை, 6. அதன் கனம்- மூன்று கோடி, 7. அகலமும் உயரமும்- 30 இலட்சம் கோடி யோசனை, 8. கனம்- 4 கோடி யோசனை, 9. பஞ்ச கலை   - சாந்திக் கலை இவை அண்டத்தில் உள்ளவை.

அகரம்-3 + உகரம்-2 + மகரம்- 1 மொத்தம் 6 மாத்திரை. தனித்தனியே உச்சரிக்காமல் ‘ஓம்’ என்று உச்சரிக்க 6 நொடி ஒலி அளவாகும். உந்திலிருந்து தொண்டைக் குழிவரை 6 நொடி அளவு ஓம் நீட்டி சொல்லும்போது புருவ மத்தியில் அது அரை மாத்திரையாக செல்லும். இது மேலும் மேலும் ஏறி மேலே செல்லச் செல்ல குறைந்து உன்மனைவரை செல்லும். தொடர்ந்து ஓம் உச்சரிப்பதால் ஒலியானது தொடர்ந்து உன்மனைவரை போகும். இது மவுனமாகவே உச்சரிப்பதாகும். இடங்கள், வடிவங்கள், அளவு, அதிதேவர் ஆகியன நினைவு கொண்டு உச்சரிக்கும்போது ஒலி அலை உண்டாகி காதில் ஓசை எழும்பும்.

4.விந்துக்கலை

விந்து- பிந்து- புள்ளி என்பதாகும். வட்டமான ஒளிப் பொட்டையே விந்து வடிவமாக கொள்க.

5.அர்த்தசந்திரக்கலை

அர்த்த சந்திரன் மூன்று அங்குலியே

வைத்த மாத்திரை கால்வால் ஒளியாம்

இவ்வகை ஐந்தும் மெய்பெறு தூலம்.

விந்துக்கலை முடியும் புருவமத்திக்குமேல் 3 அங்குலம் வரை உள்ளது அர்த்த சந்திரக் கலையின் பரப்பாகும். மாத்திரை- ஒலி அளவு கால் நொடியாகும். நிறம் ஒளிவாளின் கூரிய வாய் போன்றது. நெற்றி வடிவம் பாதிச்சந்திரன் போன்றிருப்பதால் அர்த்தசந்திரன் எனப்பட்டது. அதிதேவர்- சதாசிவன். அகரம், உகாரம், மகரம், விந்து, அர்த்த சந்திரன் ஆகிய ஐந்தும் உடம்பில் படர்ந்து இருப்பதால் இவைகள் தூல கலைகள் எனப்படும்.

6.நிரோதினிக்கலை

நேய மான நிரோதி மூன்றங்குலி;

ஆய மாத்திரை அரைக்கால்; நிறம்புகை;

நண்ணும் யோனி நாற்காலாகும்;

எண்ணும் மாயேயம் மலம் என இசைப்பர்.

அர்த்தசந்திரக்கலைக்குமேல் 3 அங்குல பரப்பு கொண்டது, முக்கோண வடிவம் கொண்ட நிரோதினிக்கலை. மாத்திரை- அரைக்கால், நிறம்- புகை, யோனி- நாற்கால் விலங்காம். மலம்- மாயேயம்- மாயையின் காரியமான மலம் ஆகும். அதிதேவர்- சதாசிவன்

7.நாதக்கலை

தோன்றிய நாதம் மூன்ரு அங்குலயே;

ஏன்ற வடிவம் இரண்டு விந்து;

பேணும் மாத்திரை மாகாணி; மணிஒளி

நிரோதினிக் கலைக்குமேல் நாதக் கலையில் பரப்பு 3 அங்குலம். இரண்டு விந்துகள் இதன் வடிவமாகும், ஒலி அளவு- மாகாணியாகும்- அரைகாலில் பாதியாகும். நிறம்- மாணிக்க ஒளியாகும். அதிதேவர்- சதாசிவன். யோனி-பிறப்புவகை-மானிடம். மலம்-மாமாயை (சுத்தமாயை)

முதல் 3 கலைகளுக்கும் அ+உ+ம் என்ற எழுத்துக்களும். நான்காவதற்கு ஒளிப்புள்ளி வட்டமும் ஐந்தாவதற்கு நெற்றிவடிவமாகிய அர்த்த சந்திரனும் ஆறாவதற்கு முக்கோணமும் சொல்லியதில் உடம்பு, எழுத்து ஆகியனவே வடிவங்களாயின. ஏழாவதிற்கு இரு ஒளிப் புள்ளிகள் வடிவமானது. பிரசாத மாலையில் நடுவில் கலப்பையும் வலம் இடத்தில் இரு புள்ளிகளும் சொல்லப்பட்டது. இதில் எதை வேண்டுமாயினும் எடுத்துக் கொள்ளலாம்.

8.நாதாந்தக்கலை

முயன்ற நாதாந்தம் மூன்றங் குலியே;

இயன்ற வடிவோர் அலம் ஒரு விந்து

தெய்வம் சதாசிவம்; சேரும் மாத்திரை

எய்திய அரைமா அரைக்காணி; இதன் நிறம்

இராண்டு மின்னாம்; திரண்டயோனி

மானிட மாகும்; மலம்மா மாயை;

ஆனது பிண்டம்; அண்டம் ஆகாசம்;

நாற்பது நூறாயிர கோடி யோசனை

ஏற்ற அகலம் இசைந்த உயரம்

முந்து வருசனம் ஐந்து கோடி

நோக்கிய மூன்றும் சூக்குமம் ஆகும்

ஓதும் சாந்தி அதீத கலையே.

நாதக்கலையின் எல்லைக்குமேஎல் 3அங்குலம் வரை நாதாந்தக்கலையின் பரப்பாகும், அர்த்தசந்திரன் மதல் நாதாந்தம் வரை ஒரே கடவுள்.

1. அதிதேவர்- சதாசிவன், 2. மாத்திரை- மாகாணியில் பாதியளவு. அரைமா அரைக்காணி.-1/32=0.03125.

3. நிறம்-இருமின்னல் இணைந்தது போன்றதாகும், 4. வடிவம்-ஒரு புள்ளியும் ஒரு கலப்பையும்

5. யோனி-பிறப்புவகை       -மானிடம், 6. மலம்-மாமாயை (சுத்தமாயை) –இதுவரை உடலில் பிண்டம் உள்ளதாகும்., 7. உயர (நீளம்) அகலம்-40 இலட்சம் கோடி யோசனை (ஒரு யோசனை 10 லட்சம் மைல்), 8. கனம் -5 கோடி யோசனை, 9. பஞ்ச கலை-சந்தியாதீதக் கலை

நிரோதினி, நாதம், நாதாந்தம் ஆகிய சூக்குமக் கலையாகும். நிரோதினி உடம்பு பகுதியிலிருந்தலும் ஒலியளவு அரைக்கால் நொடியாக இருப்பதால் உணர்வது கடினமானதால் சூக்குமக்கலையானது, பிரபஞ்சத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு இருக்கும் வட்டம் என்பது எவ்வளவு பெரியது அதை நம் ஞானிகள் மனத்தால் உணர்ந்துள்ளார்கள் என்பது விந்தையான ஒன்ராகும்.

9.சக்திக்கலை

முதிரும் சக்தி சதுர் அங்குலியே;

வடிவொடு கலப்பை நடிவிந்து ஆகும்;

கலந்த மாத்திரை காணிமுந்திரிகை;

இலங்கிய ஒளிநூறாயிரகோடி

மதிக்கும் ஆதித்தர் உதிக்கும் ஒளியே.

நாதாந்தக்கலைக்குமேல் 4 அங்குலம் சக்திக்கலையின் பரப்பாகும். வடிவம்- ஒரு கலப்பையின் நடு வாகும். ஒரு விந்து புல்ளி வட்டமாகும். மாத்திரை நாதந்தத்தில் பாதி-1/64=0.015625. இது காணி முந்திரிகை எனப்படும். நிறம்- ஆதித்தர் ஒளி- ஒருலட்சம்கோடி சூரிய ஒளி. மலம் ஆணவ மலம். பஞ்சகலை- மந்திரக்கலை.

10.வியாபினிக்கலை  

ஒப்பால் வியாபினி செப்பில்நால் அங்குலி;

முரண்டெழு சூலம் இரண்டு விந்து

உருவம் ஆகும்; பொருவில் மாத்திரை

அரைக்காணிக் கீழ் அரையாம் உரைக்கில்;

ஆதவர் வட்டம் நூறாயிர கோடி;

சோதி ஒளியாம் துளங்கிய பேரொளி;

ஒரு தெய்வம் ஆகத சிவமே;

தொடுத்த இரண்டும் சூக்குமா சூக்குமம்;

அடுக்கும் யோனி அலகையாகும்

புலந்தனை ஒழிக்கும் மலம்திரோதாயி.

சாந்திக்கலைக்குமேல் 4 அங்குலம் வியாபினிக்குரிய பரப்பாகும். வியாபினி சூக்குமா சூக்குமக் கலையாகும்.

1. அதிதேவர்- ஆகதசிவன்- தடத்த உருவ சிவன், 2. மாத்திரை-1/28 அல்லது 0.0078125 நொடி, 3. நிறம்- இலட்சம் கோடி சூரிய ஒளியாம்- கண்ணுக்குத் தெரிய முடியாதது. 4. வடிவம்- திரிசூலத்தை இடம் வலமாக இரு புள்ளிகள், 5. யோனி- பிறப்புவகை-அலகையாம்- பேய் வடிவம், 6. மலம் -திரோதாயி- மறைப்புச் சக்தி. 7. பஞ்சகலை-மந்திரக்கலை

11.சமனைக்கலை

தங்கும் சமனை மூன்று அங்குலி வடிவே

இங்குஇரு குச்சி இருவிந்து ஆகும்

வந்த மாத்திரை முந்திரிகைக் கீழ்க்கால்

துய்ய ஆதித்தர் நூறாயிர கோடி வெய்யில் ஒளியாம்

வியாபினிக் கலைக்குமேல் 3 அங்குலம் சமனைக் கலையின் பரப்பாகும். இதன் வடிவம் இரு குச்சிகள் நிற்க அதன் இருபுறமும் ஒவ்வொரு புள்ளியுடையதாகும். மாத்திரை ஒலியளவு- 1/256 அல்லது 0.003900625, நிறம்- ஒரு இலட்சம் கோடி சூரிய ஒளியாகும். கண்ணிற்குப் புலப்படாதது ஆகும். யோனி- தேவர்கள் பிறப்பே. மலம் ஆணவ மலம். பஞ்சகலை- மந்திரக்கலை. இது அதி சூக்கும கலையாகும். குரு உபதேசத்தால் உணரக் கூடியது ஆகும், ஞானமாலையில் சக்தி, வியாபினி, சமனை ஆகியவற்றின் நிறம் மாறியிருக்கும்.

12.உன்மனைக்கலை

விளங்கிய உன்மனை முடிவில் ஓர் அங்குலி; வடிவு

வட்டம் தெய்வம் அநாகத சிவமே; இருள்நிறம்:

மதிக்கும் யோனி துதிக்கும் தெய்வம்;

இவ்வகை இரண்டும் இவை அதி சூக்குமம்

செப்பிலோர் அம்முதல் இப்பதிநாலும்

மந்திரக் கலையாம்; மலமா ணவமாம்;

நந்திய பாச சாலம் நாவிலில்

சமனைக்கு மேல் ஓர் அங்குலம் உன்மனையின் எல்லையாகும், வடிவம்- தனித்தவட்டம். நிறம் இருளாகும். அதிதேவர்- அநாகத சிவந் சொரூப சிவன். யோனி- தேவர்கள் பிறப்பாகும். இது அதி சூக்கும கலையாகும். சக்தி, வியாபினி, சமனை, உன்மனை ஆகியன சாந்தியா தீதத்துக்கு மேல் உள்ள மந்திரக்கலையில் அடங்கும். மலம் ஆணவ மலம். இக்கலை குரு உபதேசத்தால் உணரக்கூடியது ஆகும், ஒவ்வொருவர் அனுபவமும் மாறிமாறி இருக்கும் என்பதால் கலைகளின் அடைவுகள் மாறுபட்டுள்ளதை பொருட்படுத்தாமல் விரும்புவதை ஏற்றுக்கொண்டு செய்க.

13. வியோமரூபிணி, 14.அனந்தை, 15.அனாதை, 16.அனாசிருதை கலைகள்.

மேலும் உரைசெய்வன் நாலு சக்தி;

வினவிய வியோமரூபினி அனந்தை

அனாதை அனாசிருதை அடைவு ஒர் அங்குலி;

விந்து வடிவே; அந்த அம்பரம்

அளக்கர் ஆடி சரற் காலத்தில்

உதய மதியம் நூறாயிர கோடி

கதிர் ஒளி திரண்ட காட்சி ஒளியே

விரவிய தெய்வம் பரமசிவ மாகும்;

பேச அரிய மாசூக் குமமே;

நாலும் தியாணம்; மேல் உப தேசம்

புண்ணிய குருவின் தண்ணளி தருமே.

விந்துவின் வடிவங்களான வியோமரூபிணி, அனந்தை, அனாதை, அனாசிருதை ஆகிய நான்கு கலைகளும் ஒவ்வோர் அங்குலம் பரப்பு உடையவை ஆகும், வியாபினி மற்றும் சமனை கலைகளுக்கு நடுவில் இந்த நான்கு கலைகளும் இருக்கும், இவைகளின் அதிதேவர் பரமசிவன், இவை மகா சூக்குமக் கலைகலாகும். தியான முதிர்ச்சியில் விளங்கும் தியானக்கலைகள்.

வியோமரூபிணி ஆகாய நிறமுடையது. வியோமம்- ஆகாயம், இதை ஞானாகாயம் என்பர், அனந்தை கடல் நிறம் கொண்டது. அனந்தை- பல அல்லது மிகுந்தது எனப்படும். இதை ஞானக் கடல் என்பர், அனாதை- கண்ணாடி. இதை ஞானக்கண்ணாடி என்பர், அனாசிருதை பனிக்காலத்தில் இலட்சம் கோடி சந்திரர்கள் உதயம் போன்ற நிறமுடையது,

அடுத்தொளிர் மும்மண்டலம் ஆறு ஆதாரம் அப்பால்

அடுத்த இரவாளிரண்டுக்கும் அப்பால் அடுத்த ஒளி

அம்பலம் நின்றாடிய கூத்து ஆனந்தம் கண்டிருப்பர்

அம்பலன் தாள் ஏத்துவார்.

மூலாதாரம் முதல் புருவ மத்தி வரை ஆறு ஆதாரம் மூன்று மண்டலம். கீழே அக்னி மண்டலம். அடுத்தது சூரிய மண்டலம், அடுத்தது சந்திர மண்டலம். ஆக்ஞாவிற்கு அப்பால் இருமுறை 12 விரல் அளவுள்ள கலைகள் உள்ளன, அவை விந்து கலைக்குமேல் உள்ள 8 கலைகளாகும். அவை நடுவில் உள்ள வியோமரூபிணி முதலிய நான்கு கலைகள் நீங்கலாக அர்த்தசந்திரன் முதல் உன்மனைவரை 8 என்க. கடைசி கலையாகிய உன்மனைக்குமேல் உள்ள பகுதி அம்பலம் ஆகும், அதில் அம்பலவாணன் ஆனந்தக் கூத்தாடுகின்றான். அந்தத் திருவடிகளை வணங்கி ஆனந்தக் கூத்தைக் கண்டு சமாதியில் இருப்பர் என்பதாக கருதுக.                                                    ******

வியாழக்கிழமை, 19 September 2013 00:00

சிவ யோகம்

                      ஓம் நமசிவாய!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
                            ******
சிவயோக கருத்து:-
தன் உணர்வு கொண்ட ஒரு தனிப் பொருள் பரமசிவம். இதை அநாகத சிவம் எனலாம். இது ஒரு ஜோதியாகும். சோதி-சிவன்-பிரகாசம், பரவிய வெளிச்சம்-சக்தி-விமர்சம் ஆகும். சித்தாந்தத்தில் கூறப்படும் சிவத்தின் அருட்பகுதியாகிய சக்தி இதுவே. சூரியனை சிவனாகவும் அதன் கதிர்களை சக்தியாக கொண்டால், ஆகாயத்தில் சூரியணும் பூமியில் அதன் கதிர்களும் இருந்தாலும் இரண்டும் ஒரு பொருளின் இரு தன்மைகளே அன்றி வேறு வேறு அல்ல. பரம் பொருளாகிய சிவத்தோடு பிரிக்கப்படாத சக்தியை ‘சித்’ / ‘பராசக்தி’ / சித்ரூபிணி சக்தி’ எனக் கூறலாம்.
சித் - தன்னைத்தானே உணரும் கடவுளின் தன்மையாகும். இந்த உலகமும், உடலும், நம்மிடம் உள்ள எல்லாம் கடவுளிடமிருந்துதான் தோன்றியுள்ளன. கடவுள் பெண்ணை விருப்பியதால் தான் உடலில் பாதியை தந்து அந்த உணர்வை நமக்கு தந்துள்ளான். அப்படி கடவுள் விரும்பாவிடில், உலக உயிர்களும் விரும்பாது போய் உலக வாழ்வில் ஈடுபடாது கடவுளிடம் ஒன்றிவிடும். எனவே எந்த ஓர் உணர்வும் கடவுளிடமிருந்துதான் உயிர்களுக்கு வரமுடியும். நம் உணர்வுகள் எல்லாம் கடவுளின் உணர்வுகளே.
‘சச்சிதானந்தம்’ என்பது ஸத் + சித் + ஆனந்தம் ஆகும். 
ஸத்-என்றும் வாழ்ந்து இருப்பது-உயிர்களுக்கு கிடைக்கும் உயிர் வாழும் தன்மையாகும். 
சித் -எங்கும் உணர்வைப் பரப்புவது- நான் என உணரும் அறிவுத் தன்மை உயிர்கள் அடைதல்
ஆனந்தம் -தானே இயல்பாய் இன்பமுடன் இருத்தல்-இன்பம் என்பதை உயிர்கள் அடைகிறது
கண்ணாடியான மனத்தில் அழகு, சுவை, நன்மை, பாசம், ஆசை ஆகியவை பட்டு பிரதிபலிக்கும்போது மனத்தின் ஆத்மாவிற்கு இன்பம் ஏற்படும். அந்த இன்பம் நம் உள்ளே இருப்பதாகும். அந்த பொருள்களால் வரவில்லை. ஒருவருக்குப் பிடித்த பொருள் இன்னொருவருக்குப் பிடிப்பதில்லை. இனிப்புள்ள பதார்த்தங்களில் இனிப்பு இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் எல்லாம் பிடிப்பதில்லை.
இச்சா- இச்சை - விருப்பம் உலகம் முதலியவற்றைப் படைக்கும் எண்ணம்.
ஞானம்- அறிவுடைமை - எண்ணற்ற பொருள்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளை முன்பே அறிந்து படைக்கப்படுதல்.
கிரியா- செயல்படுதல் - இச்சா, ஞானம் ஆகிய இரண்டையும் செயல்களாக ஆக்கும் வாய்ப்பு.
இந்த மூன்றும் நம்மிடம் இருக்கின்றன. ஒன்றை விரும்புவதும், அதை அடையும் வழியை ஆராய்வதும், ஆராய்ந்து அதை அடைவதும் ஆகியவைகள் எல்லா நிகழ்வுகளிலும் நமக்குள் நடைபெறுகின்றது. இதுவே ‘இச்சா, கிரியா, ஞான சக்தி’ எனப்படும்.
முழுமையும் கடவுள் தன்மை கொண்டிருந்த பராசக்தி, உலகத்தையும், உடல்களையும், எல்லா பொருள்களையும் படைத்து உருவாக்குவதற்காக மயாசக்தி என்ற வடிவத்தை பெற்று, கண்ணிற்குத் தெரியாத கடவுள் குணங்களையும் உள் உணர்வுகளையும் படைக்கும்போது சுத்தமயாவாகவும், வெளிப்படையான பொருள்களைப் படைக்கும்போது அசுத்த மாயாசக்தியாகவும் ஆகின்றது. கஞ்சுகம்- உடலை மறைக்கும் சட்டை. மாயா சக்தியின் 1.கலை, 2.வித்தை, 3.ராகம், 4.காலம், 5.நியதி ஆகிய ஐந்து விதச் சட்டைகளால் படைப்புகளும் அதில் வந்து இருந்து போகும் எல்லாமும் அடக்கப்படும். இது மயா கஞ்சுகம் எனப்படும். இந்த ஐந்தினாலும்தான் படைப்புகளில் உயிர் வாழ்தல் நிகழும்.
1.கலை- கடவுள் உணர்வு எல்லாவற்றையும் இருந்த இடத்தில் இருந்தே செய்வதாகும். அந்த உணர்வைக் குறைத்து அணுவளவாக்கித் தன்னளவில் மட்டும் செய்யக்கூடியதாகவும், தன் செயல்களில் மட்டும் செய்யக் கூடியதாகவும் ஆத்ம சக்தியைக் குறைப்பதே கலையாகும்.
2.வித்தை-வித்யா- ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்கும் பரத்துவத்தினால் யாவற்றையும் அறிவது கடவுளின் குணம். அதைக் குறைத்து சிறிய அளவிற்கு சிற்றறிவு தருவது வித்தையாகும்.
3.ராகம்- எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாது எல்லாவற்றையும் நிறைவாக குறைவில்லாததாக உணரும் கடவுளின் பூர்ணத்துவத் தன்மையை நீக்கிச் சில பொருள்கள் மட்டும் தனக்கு விருப்பம் உள்ளவையாகவும் பிறவற்றின்மேல் விருப்பம் இல்லாததாகவும் மாற்றுதல் ராகம் ஆகும்.
4.காலம்- என்றும் எக்காலத்திற்கும் அழிவில்லாத கடவுளின் குணத்தைக் ஒரு காலத்திற்குக் கட்டுப்பட்டு, அழிவு அல்லது மாற்றத்திற்கு உட்படுவதாக மற்றுவது காலம் ஆகும்.
5.நியதி- எங்கும் வியாபித்து பரவியிருப்பது, சுதந்திரமாயிருப்பது என்ற கடவுளின் குணத்தை இடம், வடிவம், காரணம் ஆகியவற்றுக்கு கட்டுப்படுவதாக மாற்றி முறைப்படுத்துதல் நியதியாகும்.
இந்த ஐந்தும் இன்றி உயிர்கள் உயிர் வாழமுடியாது. பரந்த கடவுளின் தன்மையிலிருந்து பிரிந்து மாயா சக்தியால் அணுவாகிய ஆத்மா புருஷன் எனப்படும். எனவே ஆத்மா தெய்வத்தன்மை குறைந்து அணுக்கள் பலவாகப் பிரிந்து நம்மிடம் ஜீவாத்மா’வாகிறது.
சிவம்- பராசக்தி –மாயா சக்தி ஆனதுபோல் சிவம்- மாயாசக்தியினால் புருஷனாகி பல அணுக்களாகப் பிரிவதற்குமுன் மூலப் பிரகிருதி என்றாகும். இம்மூலப்பகுதியே பிரிந்து ‘தநு - உடல், கரண - உள்கருவிகள், புவன - பிரபஞ்சம், போகங்கள் - வாழ்வதாகிய அனுபவம்’ ஆகியது. இந்த மூலப் பிரகிருதியிலிருந்து பிரியும் 1.ஸத்துவம், 2.ராஜஸம், 3.தாமஸம் என்ற மூன்று குணங்களே பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களின் குணங்களாக இருக்கின்றது.
1.ஸத்துவம்-அமைதி, இன்பம், ஒளி, ஒழுக்கம் முதலிய நற்குணங்களைக் கொண்டது.
2.ராஜஸம்-குழப்பம், துன்பம், இருள், சோம்பல், வெறுப்பு ஆகிய தீய குணங்கள்.
3.தாமஸம்-மேல் சொன்ன இரண்டு குணங்களுக்கும் நடுவில் உள்ளவை. பாசம், பற்று ஆகியவைகளினால் ஏற்படும் பலவித உணர்வுகள் மற்றும் செயல் திறம் ஆகிய உணர்வுகளின் தொகுதியாகும்.
புத்தி-ஸத்துவ குணத்திலிருந்து தோன்றியது. எல்லாப் பொருள்களும் புத்தியாகி அறிவில் ஒளியாக பதிவாகிறது.
வெளி உறுப்பாகிய கண் ஒரு பொருளை பார்த்து புத்திக்கு அணுப்புகிறது. காதின் வழி அதன் பெயரும் அனுப்பப்பட்டு, பொருளின் வடிவம், நிறம், பெயர், அசைவு, பயன்கள் யாவும் பதிவு செய்யப்படும். மீண்டும் அந்தப் பொருளைப் பார்க்கும் போதும், அதன் பெயரைக் கேட்கும்போதும் அந்த பொருள் பற்றியவைகள் அறிவுக்குள் உணர்வாகவும் அதன் உருவமும் தோன்றும். இந்த நினைவு அலைகள் ஸம்ஸ்காரங்கள் எனப்படும்,
அகங்காரம்-நான் எனும் உணர்வுப் பகுதியைக் கொடுக்கும் இது புத்தியிலிருந்து உருவாக்கப்பட்டதும் தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு சக்தியும் ஆகும், இந்த அகங்காரப்பகுதி பழுது பட்டால் கோமா என்ற நோய் நிலையாகும். எனவே வாழ்விற்கு முக்கியமானது.
மனம்-அகங்காரத்திலிருந்து தோன்றியது. இந்திரியங்களோடு கூடியும் கூடாமலும் நினைவுகளையும், வடிவங்களையும், காட்சிகளையும் உருவாக்கித் தருவது ஆகும். 
கடவுளின் மூன்று உணர்வுப் பிரிவுகள் மூலப்பிரகிருதியின் முக்குணங்களாக விரிந்துள்ளன, அவை நான்கு பகுதிகளாக மும்மூன்று பொருள்களாக வெளிவந்தன.
ஸத்-இச்சா சக்தி-தாமஸ குணம்-அகங்காரம் 
சித்-ஞான சக்தி-ஸத்துவ குணம்-புத்தி
ஆனந்தம்-கிரியா சக்தி-ராஜஸ குணம்-மனம்
சித்தம் என்பது நன்மையின் பக்கமும் தெய்வத்தின் பக்கமும் உயிர்களை அழைத்துச் செல்லும் பகுதி. இந்த சித்தம் பழுதடைந்த போது புதியவற்றை நினைக்கும் மனமும், அதை ஆராய்ச்சி செய்யும் புத்தியும் பழுதடைவதால் ஆத்மா தான் என்பதில் வெறுப்புற்று வாழ்வில் தோல்வியின் விளிம்பிற்கு சென்று விடுவர்.
தன்மாத்திரைகள் - மூலப் பொருள்களின் அணுவடிவமே தன் மாத்திரைகள். தன்-அதனுடைய, மாத்திரை- அளவு. கடவுளிடமிருந்து மும்மூன்றாக வந்தவைகள் அசுத்தம் காரணமாக ஐந்தாகின. அசுத்த மாயை சுத்த மாயையில் கலந்து மூன்று ஐந்தாக விரிந்தன. வெளியில் தோன்றாதது சுத்தம். வெளியில் தோன்றுவது அசுத்தம். ‘சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்’ என்ற ஐந்து தன்மாத்திரைகள் மூன்றில் அடங்கும்.
அகங்காரம்-நிலம்,நீர்
புத்தி-நெருப்பு
மனம்-காற்று,ஆகாயம்.
1. சப்த-ஒலித் தன்மாத்திரை-ஆகாயம்-செவி
2. ஸ்பரிச-தொடுவுணர்வுத் தன்மாத்திரை-ஊறு-காற்று-தோல்
3. ரூப-வடிவ தன்மாத்திரை-ஒளி-நெருப்பு-கண்
4. ரஸ-சுவைத் தன்மாத்திரை-நீர்-வாய்
5. கந்த-மணத் தன்மாத்திரை-நிலம்-மூக்கு 
என அணு வடிவமாகிய தன் மாத்திரைகளிலிருந்து பெருவடிவங்கள் தோன்றி அவை மகா / பஞ்ச பூதங்கள் (ஆகாயம்,காற்று,நெருப்பு,நீர்,நிலம்) எனப்பட்டன, அகங்காரத்தில் தன் மாத்திரைகள் இணைந்து புத்தியின் தொடர்புடைய ஐந்து ஞானேந்திரியங்கள் (செவி, தோல்,கண்,வாய்,மூக்கு)உருவாகின. கால்-நடத்தல், கை-கொடுத்தல், நாக்கு-பேசல். நீர்வாய்-சிறுநீர் கழித்தல், மலவாய்-மலம் கழித்தல் முதலிய செயல்கள் செய்வதால் கருமம்-கன்மம்-செயல் பொறிகள் அல்லது கன்ம இந்திரியங்கள் எனப்படும். ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் பிராணன் எனும் வாயுவிலிருந்து பிரிந்த தச-பத்து வாயுக்களால் செயல் படுகின்றன.
வாழ்வு- என்பது இருத்தல், மாறுதல், ஆய்தல், அனுபவம் ஆகிய செயல்கள் உடையது. இந்த வாழ்வு போகத்தை அடைய ஆத்மாவிற்கு ஊடலையும் உலகத்தையும் பொருள்களையும் மாயா சக்தி மூலம் கடவுள் தந்து அருள் புரிகின்றார். இருத்தல் - கடல்,நிலம்,மலை,மரம் இடம் மாறாமல் இருந்து வாழ்வது-இது உடலின் செயலாகும். மாறுதல்-இருத்தலில் இருந்து இல்லாது மறைந்து போதல். உடல் வளர்தல், உடல் தேய்தல், வம்சம் தோற்றுவித்தல். ஆய்தல்- ஒப்பிடுதல், எண்ணுதல், நினைத்தல், வகுத்தல்,தொகுத்தல் ஆகியன அறிவு, மனம் இவற்றின் செயலாகும்.அனுபவம்-இன்பம் துன்பம்,உயர்வு,தாழ்வு,அழகு முதலியவற்றை அனுபவித்தல்.
அடிமை- நிலையில்லாதவற்றை நிலையானது என்றும் பொருள்களின்மேல் பற்றும் கொள்வது அறியாமையாகும். இந்த அறியாமையை சென்ற பிறவியின் செயல், மலங்களால் அடைகின்றோம். இதன் பலன் அற்பப் பொருள்களுக்கு அடிமையாவதாகும்.
மலம்- அசுத்தம்-குற்றம்-ஆணவமலம்,கன்மமலம்,மாயாமலம் என மூன்றும் உயிர்களுக்கு ஏற்படுவதாகும். ஆணவமலம்- கடவுளின் குணங்கள் எல்லாம் உரிய அளவில் வராமல் அணு அளவாக வருமாறு செய்தல் இதன் செயல். இதனால் திமிர், அறியாமை அதிகமாகும். கன்மமலம்- பல பிறவிகளில் நாம் செய்து பழகிய உணர்வுகள், செயல்கள்,வாசனை என்ற பெயரில் அசுத்தமாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை, நிறம்,அழகு,செய்கை பிடிக்கும். இது வாசனை மலத்தால் ஏற்படும் கன்ம மலமாகும். மாயாமலம்- மாயையின் காரணமாக பல செய்திகள் நமக்கு மறைக்கப்பட்டுள்ளன. ஒர் இடத்திலிருந்து பார்க்கும்போது பார்வைக்கு மட்டுமே தெரியும். மற்றவைகள் தெரிவதில்லை. சிற்றறிவால் ஒவ்வொரு பொருளிலும் மறைவு உண்டாகிறது. இது மாயா சக்தியாகும்.
விடுதலை- மூவகை மலங்களால், அசுத்தங்களால் மறைதல், மறுபிறவிகள் என்ற பயன் கிடைக்கும். நீர் கலந்து அசுத்தமாகிய பாலைக் காய்ச்சினால் நீர் ஆவியாகி சுத்தமான பாலாவது போல், மும்மலங்களால் சூழப்பட்டு அசுத்தமாகிய ஆன்மாவை யோகத்தினால் சுத்தம் செய்து முக்தி- விடுதலை என்ற பயனை அடையச் செய்ய முடியும். யோகமானது உடல், உள்ளம், ஆன்மா மூன்றையும் சுத்தப்படுத்தி ஆத்மா முக்தியடைய உதவும்.
குண்டலினி - உடம்பிலும் உள்ளத்திலும் எண்ணற்ற நிகழ்வுகளை செய்ய வைப்பது ஆறு கோடி மாயா சக்திகள் ஆகும். இச்சக்திகளை முறைப்படி இயங்க வைப்பது 1.யாராலும் பகுத்து உணரக்கூடிய சக்தி-பிராணசக்தி, 2. யோக வல்லவர்கள் உணரக்கூடிய சக்தி- குண்டலினி. இது முதுகு தண்டின் கீழ்ப்பகுதியில் இருந்து புறப்பட்டு நாபியில் மையம் கொண்டிருப்பதாகும். உலகங்கள் பலவற்றையும் காக்கும் ஆதார சக்தி அணுத்தன்மையாகவும் மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாகவும் உள்ளது. இது ஒரு நெருப்பு சக்தி. வளைவது, சுழல்வது, நாடிகளில் புகுந்து ஓடுவது போன்ற செயல்களால் நாகத்துடன் ஒப்பிடப்பட்டது.
தியானம்- உடலில் உள்ள குண்டலினி சக்தி பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டால் அற்புதச் சித்திகள் கிடைக்கின்றன. பயிற்சியால் பிரபஞ்சக் குண்டலினிக்கும் மேலாகிய பராசக்தியுடன் தொடர்பு ஏற்பட்டு பரமசிவத்திடம் தொடர்பு கொள்ள முடியும். மந்திரங்களையும், உணர்வுகளையும், சிகப்பு நிற ஒளி ஆகியவை நாபியிலிருந்து உச்சந்தலைவரையும் அதற்கு மேலும் செல்ல முயற்சிப்பதால் பிராணசக்தி- குண்டலினி சக்தி நாடிகளில் ஏறி உடல் முழுவதும் பரவுவதே தியானத்தின் உச்சமாகும். காலை உதயம், நண்பகல், மாலை அத்தமனம், இரவு படுக்கைக்கு முன் ஆகிய காலங்களில் தியானம் செய்வது குண்டலினியும் உள் ஒளியையும் தூண்டும். தியானத்திற்கு தன்னுடைய ஆத்மாவையோ, காணும் ஒரு வடிவையோ, கடவுளையோ மையமாக வைத்து தியானம் செய்து பழகவேண்டும். தியானம் செய்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒர் நேர்கோட்டில் நெருங்கி வந்து சிவமும் யோகியும் ஒன்றாக இனைவார்கள்.
எனவே தியானிப்பவன் தியானிக்கும் பொருளை அடைவான். பிரபஞ்சத்தின் கீழ்கண்ட 17 பகுதிகளை நிலம் முதல் சிவம் வரையிலும் பிறகு சிவம் முதல் நிலம் வரையிலும் மனத்தில் நினைத்து தியானிக்க வேண்டும்
பஞ்சபூதங்களாகிய 1.நிலப்பூதம், 2.நீர்ப்பூதம், 3.நெருப்புப்பூதம், 4.காற்றுப்பூதம், 5.ஆகாயப்பூதம், நுண்பூதங்களாகிய தன்மாத்திரைகள் 6.சப்த-ஒசை, 7.பரிச-ஊறு, 8.ரூப-ஒளி, 9.ரஸ-சுவை, 10.கந்தம்-மணம்/நாற்றம், இவைதோன்றிய 11.அகங்காரம், 12.புத்தி, 13.மனம், இவைகளுக்கு காரணமான 14.மூலப்பிரகிருதி, மற்றும் 15.மாயாசக்தி, 16.பராசக்தி, 17.சிவம்
இது பிரபஞ்சம் முழுவதையும் நினைவால் அளப்பது ஆகும். ‘ஜகத்’ என்பது நிலம் முதல் மூலப்பிரகிருதி(பராசக்தி) வரை குறிக்கும் குறியீடு ஆகும். அதோடு சிவத்தையும் இனைத்தால் நிலம்-மூலப்பிரகிருதி-சிவம் வரை நினைப்பது ஆகும். ஜகத் என்பது பிரமாண்டம் என்பதைவிடப் பெரியது. பிரம்மனால் படைக்கப்படும் அண்டமே பிரம்மாண்டம். பல பிரம்மாக்களால் படைக்கப்பெறும் பிரபஞ்சம் பெரியது, எனவே பிரபஞ்சம்-ஜகத் என்பது எல்லாவற்றிலும் பெரியது.
‘ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்’ என்று தியானைத்தால் பிரபஞ்ச தியானம் வசமாகும். மூலாதாரம் முதல் உச்சந்தலை வரை மேல் நோக்கிய நேர் கோடாக உடல் நடுவே இத்தொடரை சொல்வதே பிரபஞ்ச தியானம். மூலாதாரம் முதல் தொப்புள்- நாபி வரைக்கும் கீழ்த் தட்டாக ‘பூர்’ என்றும், நாபி முதல் நடு மார்பு வரை நடுத் தட்டாக ‘புவ’ என்றும், நடு மார்புக்கு மேல் தலை வரை மேல்த் தட்டாக ‘ஸ்வ’ என்றும் அளந்து உணர்வது பிரபஞ்சத்தை உடலில் பாவித்து தியானிப்பது ஆகும். பிரபஞ்ச தியானத்தினால் அணுத்தன்மையாகிய ஆன்ம சக்தி பரந்து விரிந்து கடவுள் சக்தியாக மாறி பயனாகும்.
புரியட்டகம்- உடல் பஞ்சபூதங்கள் மற்றும் மனம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றின் பினைப்பு என்பதால் எட்டு விதமான பினைப்புகள்–புரியட்டகம் எனலாம். இதை பஞ்சபூதம்+சூரியன்+சந்திரன்+அக்னி ஆகிய எட்டு என்றும் கூறலாம். தியானத்தின்போது இந்த எட்டும் அணுத்தன்மையடைந்து ஒன்றுபட்டு ஆன்ம சக்திக்கு துணையாக நிற்கும். சத்+சித்+ஆனந்தம்=சச்சிதானந்தம் என்ற சிவகுணம் தியானிப்பவனை வந்து சேரும்.
துரியம்- நான்காம் நிலை. அட்டாங்க யோகத்தில் கூறப்படும் சமாதி நிலை இதுவே ஆகும். அடுத்த ஐந்தாம் நிலை நான்காம் நிலையின் உச்சமாகி துரியாதீதம் (துரிய+அதீதம்) எனப்படும். சமாதி 1. விகல்ப சமாதி- தாமாக மீண்டு வரும் நிலையாகும் 2. நிர்விகல்ப சமாதி –தன் முயற்சி இல்லாமல் தெய்வாதீனமாகவோ அல்லது குருநாதர் மூலமாகவோ விடுவிக்கப்பெறும் நிலையாகும் என இருவகைப்படும். அவத்தைகள் எனப்படும் 1.நனவு, 2.கனவு, 3.உறக்கம் என்ற நிலைகள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இந்த மூன்று நிலைகளுக்கும் மேலான நிலை உறங்குவது போலிருந்தும் உறங்கா நிலை, நனவு உணர்ச்சியிருந்தும் அயலில் நடப்பதை உணராத நிலை துரிய நிலையாகும். தியானம் முதிர்வு நிலையடையும் போது தானகவே இந்த நிலை அடையலாம்.
பயிற்சி முறைகள்- ஓம் ந ம சி வா ய அல்லது ஓம் சி வா ய ந ம என்ற மந்திர ஒலிகளை யோக ஆதாரங்கள் ஆறிலும் பதியவைத்து சொல்வதாகும். நீர் விடும் வாய்க்கு கீழே இரு விரலும் மலவாய்க்கு மேலே இருவிரலும் அளந்தால் அதுவே மூலாதாரம் நீர்த்துளையே சுவாதிட்டானம். நாபி-தொப்புளின் உட்பகுதி மணிப்பூரகம். மார்பின் இருகாம்புகளுக்கு நடுவே உள்ள புள்ளி அநாகதம். தொண்டைக்குழியின் உட்பகுதி விசுத்தி. இரு புருவங்களுக்கு நடுப்பகுதி ஆக்ஞா.                                             முதல்முறை-

மூலாதாரத்தில் ஆரம்பித்து

ஓம் அல்லது

ஓம்

சுவாதிட்டானம்

சி

மணிபூரகம்

வா

அநாகதம்    

சி

விசுத்தி

வா

ஆக்ஞா

இரண்டாம்முறை-

சுவாதிட்டானம் ஆரம்பித்து

ஓம் அல்லது

ஓம்

மணிபூரகம்

சி

அநாகதம்    

வா

விசுத்தி

சி

ஆக்ஞா

வா

மூலாதாரத்தில்

‘வா’/ந என்ற ஒலி ஆக்ஞா அடையும்போது ‘ய’/ம என்பதை சொல்லத்தயாராகி மண்டைமேல் ஏறி முதுகுவழியாக கீழிறங்கி ஆசனவாயைக் கடந்து முன்புறம் வந்து மூலாதாரத்தில் முடிக்கவும்.

மூன்றாம்முறை-              

மணிபூரகம் ஆரம்பித்து

ஓம் அல்லது

ஓம்

அநாகதம்    

சி

விசுத்தி

வா

ஆக்ஞா

சி

மூலாதாரத்தில்

வா

சுவாதிட்டானம்

               

‘சி/ய’ என்ற ஒலி ஆக்ஞா அடையும்போது ‘வா/ந’ என்பதை சொல்லத்தயாராகி மண்டைமேல் ஏறி முதுகுவழியாக கீழிறங்கி ஆசனவாயைக் கடந்து முன்புறம் வந்து மூலாதாரம், மற்றும் சுவாதிட்டானத்தில் முடிக்கவும்.

நான்காம்முறை-              

அநாகதம் ஆரம்பித்து

ஓம் அல்லது

ஓம்

விசுத்தி

சி

ஆக்ஞா

வா

மூலாதாரத்தில்

சி

சுவாதிட்டானம்

வா

மணிபூரகம்

               

‘ம/வா’ என்ற ஒலி ஆக்ஞா அடையும்போது ‘சி/ய’ என்பதை சொல்லத்தயாராகி மண்டைமேல் ஏறி முதுகுவழியாக கீழிறங்கி ஆசனவாயைக் கடந்து முன்புறம் வந்து மூலாதாரம், சுவாதிட்டானம், மற்றும் மணிபூரகத்தில் முடிக்கவும்

ஐந்தாம்முறை-                

விசுத்தி ஆரம்பித்து

ஓம் அல்லது

ஓம்

ஆக்ஞா

சி

மூலாதாரத்தில்

வா

சுவாதிட்டானம்

சி

மணிபூரகம்

வா

அநாகதம்    

              

‘ந/சி’ என்ற ஒலி ஆக்ஞா அடையும்போது ‘ம/வா’ என்பதை சொல்லத்தயாராகி மண்டைமேல் ஏறி முதுகுவழியாக கீழிறங்கி ஆசனவாயைக் கடந்து முன்புறம் வந்து மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் மற்றும் அநாகதத்தில் முடிக்கவும்.

ஆறாம்முறை-        

ஆக்ஞா

ஓம்

சிகரம்-நெற்றி உச்சி

சி

பிரம்மநாளம்-தலைநடு உச்சி

வா

நிரோதினி

சக்தி

மனோன்மணி

ஆக்ஞாவிலிருந்து தலைக்குமேல் ஒரு சாண் தூரம் உணர்வு பகுதி. இதன் உச்சியில் அணு நிலையில் ஜீவாத்மா இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது இறைவன் திருவடிகள் இருக்குமிடம். இது புருவ மத்தியிலிருந்து நான்கு விரல் அளவு. இந்த முறையில் தூல பஞ்சாட்சாரமாகிய ‘நமசிவாய’ எனும் மந்திரத்தை சொல்லக்கூடாது. உடம்பின் மேல் மட்டுமே கூறவேண்டும். உடம்புக்கு மேல் வெளியில் கூறுவதால் சூக்கும பஞ்சாட்சாரமாகிய ‘சிவாயநம’ என்ற மந்திரத்தைக் கூறவேண்டும். தலைக்குமேல் கூறினாலும் உணர்வினால் அந்த இடங்கள் நினைவுக்கு பதிவாகும்.

ஏழாம்முறை- இது உடம்பின் உட்பகுதியில் கூறுவதால் ‘ஓம் சிவாய நம’ மந்திரம் மட்டும் கூறவும். இது நம் ஆத்மாவை மந்திராத்மாவாக மாற்றும். இதன் முதிர்வில் துரிய நிலை எளிதில் அடையலாம். முதல் நிலை மேல்மூலம் எனப்படும் உண்ணாக்கு ஆகும். உண்ணாக்கின் நடுவே உள்ள துளையை மனத்தில் நினைத்துச் சொல்ல வேண்டும். இது முக்திக்குச் செல்லும் வாயில் ஆகையால் இந்திரயோனி எனப்படும். இதிலிருந்து நான்கு விரல்கள் அளந்தால் ஆக்ஞாவின் உட்பகுதியாகும். ஆக்ஞாவிற்குமேல் பன்னிரண்டு விரல் துவாதசாந்தம் ஆகும். ஒவ்வொரு விரலுக்கும் ஒரு கலை-சக்தியின் பெயர் உள்ளது. ஆக்ஞாவிலிருந்து பிரம்மரந்திரம் நான்கு விரல். மேலும் ஒருவிரல் அளவுதலை உச்சிப் புழையாகிய பிரம்ம நாளம். இது ஆதார யோகம்- உறுப்புக்குள் உள்ள ஆதாரம். இதற்குமேல் 12-5=7விரல் அளவு நிராதாரம்- உடம்பு பகுதியான தூலப் பகுதியில் இல்லாது ஆகும். 
ஆக்ஞாவிற்கு வந்து போகும் 12 சக்திகளின் பெயர்கள்.
1. மேதை 3-ம் நிலை
2. அருக்கீசம்
3. விடகலை

4. விந்து 4-ம் நிலை
5. அர்த்தசந்திரன்
6. நிரோதினி

7. நாதம் 5-ம் நிலை
8. நாதாந்தம்
9. சக்தி

10.வியாபினி 6-ம் நிலை
11.சமனை
12.உன்மனை(மனோன்மணி) 
இந்த ஏழாம் வகை யோகத்தில்
1. இந்திரயோனி-ஓம் | ஆதாரயோகம்-உணர்வுக்கோடு உடலில் ஆறுபோல் பாயும்
2. ஆக்ஞா-சி |  
3. சிகரம்-நெற்றி உச்சி-வா | 
4. நிரோதினி-ய } நிராதாரயோகம்-ஒளிக்கோடாகத் தெரியும்.
5. சக்தி-ந } 
6. மனோன்மணி-ம }
பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் நினைத்ததுமே தலைக்குமேல் உணர்வுக்கோடு செல்வதை உணரலாம். உணர்வுக் கோடு பதியப்பட்டவருக்கு மரணம் ஏற்படாது. துன்பம் குறையும். துன்பத்தினால் துவல்வதும் இன்பத்தில் மிதப்பதும் இன்றி அமைதி காண்பர். நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் முன்னதாகவே தெரியும். வாக்குப் பலிக்கும். இந்த உணர்வை மூன்று முறை உணர்ந்து செய்யும் செயலும் வாழ்த்தும் நலமாகும். இது தெய்வத் தொடர்பாகும்.
விச்வ த்யானம்- பிரபஞ்சமாகிய பெரிய பரப்பைத் தியானம் செய்வது.
விச்வமய த்யானம்- விசுவத்தில் கரைந்திருக்கும் எல்லத் தெய்வ சக்தியையும் இணைத்து தியானிப்பது.
விச்வரூப த்யானம்- விசுவத்தை ஒரு வடிவத்தில் அடக்கித் தியானம் செய்வது. 
இவைகள் துரிய நிலை கூடுவதற்கான பயிற்சிகளாகும். இதைச் செய்வதன் மூலம் நமக்கும், நம் அன்பை விரும்புவர்க்கும் நோய் நீக்கம்,, துன்ப நீக்கம், அருள் கிடைத்தல் முதலியவைகளை பதிய வைத்து பலிக்க வைக்கலாம். விச்வத்யானம் செய்து கடவுளை வணங்கி வாழ்த்துரைத்தால் பலிக்கும்.
பயிற்சி முறை- 1. விநாயகர் வணக்கம். 2.வாழ்த்துரைப்பவரின் குலதெய்வ வணக்கம். வாழ்த்துபெறுபவரின் குலதெய்வ வணக்கம் 3. வாழ்த்துபெறுபவரின் நட்சத்திரம்- அவரின் நோய் / துன்பம் / பகை விலக வாழ்த்து, 4.இஷ்ட தெய்வ பிரார்த்தனை, 5. வாழ்த்துபெறுபவரின் நலத்தை விரும்பாத சக்தியும் தடைசெய்யும் சக்தியும் அவரை விட்டு விலகுவதாக “ஓம் பட்ஸ்வாஹா” 6. வாழ்த்துபெறுபவரும் அவர் குடுப்பத்தினரும் சுற்றத்தினரும் நலம் பெறுக. 7.இப்போது செய்யும் இந்த தியானப்பலன் எப்போதும் பயன் கிடைப்பதாகுக. 8.இந்த தியானமும் அதன் பலனும் நிகழச் செய்த கடவுளுக்கு-இஷ்ட தெய்வத்தின் பெயரை நினைத்து நன்றி வணக்கம் செய்கின்றேன்.
இதை காலை விழித்ததும், குளித்தபிறகும், நண்பகல் 12 மணிக்கும், மாலை சூரியன் அடங்கும்போதும், இரவு படுக்கப்போகும் போதும் ஆகிய ஐந்து நேரங்களில் ஓரிரு நிமிடங்கள் செய்து வந்தால் வாழ்த்திய பலன் முழுவதுமாய் கிடைக்கும். அப்போது உலக உயிர்கள் ஆரோக்கிய ஆனந்தத்துடன் வாழ வேண்டி ஒருநிமிடமாவது தியானிக்கவும்.
பிரபஞ்சத் தியானம் செய்யும் முறை- 
1. கிழக்கு அல்லது வடக்கு பக்கம் பார்த்து பத்மாசனம் அல்லது வசதியான ஆசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
2. தன்னுடைய கால்கள், கைகள், உடல் முன்பும், பின்பும், கழுத்து, தலை முன்பும், பின்பும் அதாவது தோல் பகுதி முழுவதும் மனத்தால் தடவித் தடவி உணர்ந்து கொள்ளவும். எல்லா எலும்புகளும் இணைந்திருப்பதை உணர்க. எல்லா நரம்புகளும் உள் உறுப்புகளும் இணைந்திருப்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளவும்.
3. மூன்று முதல் ஒன்பது முறை பிராணாயாமம் செய்க. மூக்கின் வலப்புறம் இழுத்து மூச்சை அடக்கி இடப்புறம் வெளிவிடுக. பிறகு இடப்பக்கம் இழுத்து மூச்சை அடக்கி வலப்பக்கம் வெளிவிடுக .இடமும், வலமும் சேர்ந்து செய்தால் ஒரு பிரணாயாமம் எனக்கொள்க.
4. தொப்புளில் வலது சுட்டு விரல் வைத்து வலப்பக்கமாகக் கோடு இழுத்து விலாப்பக்கம் வந்து நடு முதுகில் நிறுத்தவும். அதேபோல் இடதுகைச் சுட்டு விரலால் கோட்டைத் தொடர்ந்து வரைந்து இடபக்க விலா வழியாக வந்து தொப்புளில் முடிக்கவும்
5. நடுமார்பில் வலது சுட்டு விரலை வைத்து உடம்பை வளைத்து கோடிட்டு முதுகில் நிறுத்தி அதை இடதுகையால் தொடர்ந்து இடது மார்பு வழியாக தொடங்கிய இடத்தில் முடிக்கவும். கை செல்லாத இடத்தில் பாவனையாக கோடிடவும்.
6. புருவ மத்தியில் வலது சுட்டு விரலால் ஆரம்பித்து பின் மண்டையில் நிறுத்தி அதை இடது சுட்டுவிரலால் தொடர்ந்து ஆரம்பித்த இடத்தில் முடிக்கவும்.
7. இந்த மூன்று வட்டக் கோடுகளையும் கீழ், நடு, மேல் என கருதவும்.
8. பாதம் முதல் தொப்புள்வரை உள்ள உடம்புப் பகுதி, முன்கைப்பகுதி கீழ்த்தளம் ஆகும்.
9. தொப்புளுக்குமேல் மார்பு வரை உள்ள உடம்பும் கையும் சேர்ந்து நடுத்தளம் ஆகும்.
10. மார்புக்கு மேற்பட்ட கை தோள் கழுத்து முகம் முதலிய உடம்பு, புருவம் மேல்தளம் ஆகும்.
11. பிரபஞ்சம் மூன்று அடுக்குகளாக இருப்பதால் இந்த மூன்றும் மூன்று தளங்களாக கொள்க.
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை 
வளப்பரும் காட்சி ஒன்றினொடு ஒன்று நின்று எழில் பகரின் 
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இல்நுழை கதிரின்
துன் அணுப்புரைய சிறிய வாகப் பெரியோன்.
12. இந்த தளங்களில் 101 கோடிக்கு அதிகமான அண்டங்கள்- உலகு இருப்பதாக நினைக்க.
13. ஓர் பிரம்மாவினால் படைக்கப்பட்ட ஓர் அண்டம் பிரம்மாண்டம் ஆகும். இப்படி எண்ணில் அடங்காத பிரம்மாண்டங்கள் உள்ளன.
14. சூரியன் நடுவே. அதைச் சுற்றி புதன், அடுத்த வட்டத்தில் சுக்கிரன், அடுத்த வட்டத்தில் பூமியும், நிலவும், அடுத்த வட்டத்தில் செவ்வாய், அடுத்த வட்டத்தில் குரு, அடுத்த வட்டத்தில் சனி, அடுத்த வட்டத்தில் யுரேனஸ், அடுத்த வட்டத்தில் புளூடோ அடுத்த வட்டத்தில் நெப்டியூன். மேலும் பல வட்டங்களும் கோள்களும் தம் வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன.
15. கைகளின் கட்டை விரலும் சுட்டு விரலிலும் உல்ள வட்ட வளையங்களும் நடுவில் உள்ள அடையாளமும் சூரிய குடுப்பத்தை ஒத்திருப்பதாக நினை. பெரிய வட்டங்கள் சிறியனவாக உள்ளதாக நினைக்க. சின்முத்திரை காட்டி தியானம் செய்க. அவை மேலும் அணு அளவு குறைவதாக கற்பனை செய்.
16. பெரிய வட்டத்தை அங்குலாஸ்தியாக்கி அதை அணுவாக கற்பனை செய்து அது நம் உடம்பில் முன்று தளங்களாக உள்ளும் புறமும் பதிந்திருப்பதாக நினைக்கவும்.
17. ஓம் ஒலி மூலாதாரப் பகுதியிலிருந்து உச்சித்தலைவரை செல்லுவதாக நினைக்க,
18. புருவத்துக்குக் கீழ் மட்டுமே இந்த அண்டங்கள் அணுக்களாக உள்ளன, மூளை என்பது அண்டங்கள் தோன்றக் காரணமான மூலப்பிரகிருதி என நினை.
19. அதற்குமேல் நிராதாரமாக உள்ள பன்னிரண்டு விரல் அளவும் சுத்த தத்துவமாகிய தெய்வங்களின் இருப்பிடம் என்பதை உணர்க.
20. எல்லாவற்றிற்கும் மேலாக பரம் பொருளின் திருவடிகள் என நினை.
21. பாதம் முதல் புருவம் முடிய 8சாண். நம் உடல் 8x12 = 96 விரல்கள் + துரியம் 12 விரல்கள் மொத்தம் 108 விரல்கள். ஆகவே 108 முறை ஓம் சொல்வது நலம். நேரமில்லாபோது 9 அல்லது 12 முறை சொல்லி 108 ஆக வேண்டுக.
22. ஓம் எண்ணும்போது வலது கையால் 10 எண்ணுக. இடது கையால் ஒவ்வொரு பத்துக்கும் ஒன்று என எண்க. வலது கையில் உள்ள சுட்டு விரலிலும் சுண்டு விரலிலும் 4 கோடுகளில் கீழிருந்து மூன்று மட்டும் எண்ணுக. நடுவிரல் மற்றும் மோதிர விரல்களில் மேலும் கீழும் ஆகிய இரு கோடுகள் மட்டும் எண்ணுக. 3+3+2+2=10 என ஒரு வட்டம் பத்து எண்ணிக்கைத் தரும். நுனி விரலையும் கை ரேகையும் எண்ணக் கூடாது.
23. எதையும் முன்று தரம் செய்வது என்பது மனம், மொழி, மெய் சாட்சியாகவும் இந்த விசுவமாகிய மூன்று அடுக்குத் தளங்கள் சாட்சியாகவும் கருதவும். திருநீறு பூசும் மூன்று விரல் முயற்சியில் எல்லாம் இம்மூன்று தளங்களை நினைக்க.
******

சிவ யோகம்

சிவத்தை அடைய செய்யும்  இது ஒரு யோக சைவர்களின் முறையாகும். வேதம் என்பது கடவுள் தாமே வெளிப்படுத்தியது. கடவுள் கூறியதை புரிந்த கொண்டு ஒரு மனிதன் கூறியது ஆகமம் ஆகும். எனவே இது ஆகமம் ஆகும். சாம்பவன்– சிவன், சிவனிடம் இருந்து பிரிந்து வந்த பொருள்களே உலகமாகவும் உடலாகவும் உள்ளது. எல்லாம் சிவமயமாகிய உடம்பின் மூலம் சிவத்தை அடையலாம். உடலால் ஆன்ம முயற்சி பற்றிய யோக முறையாகும். சிவபரம் பொருளே நம் ஆத்மம் ஆகும். நல்ல (தூய), நிகழ்வு (உற்பத்தி). வழிமுறை சிவ யோகம் எனப்படும்.
1.ஆத்மாவின் இயற்கையே சைதன்யம் ஆகும்.
சேதனம் என்பதிலிருந்து சைதன்யம் உண்டானது. சேதனம் – அறிவு. (அசேதனம் - அறிவற்றது.) எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களின்மேல் தன் அறிவை, உணர்வை இணைத்து வைத்திருப்பது. சிவமாகிய பரம்பொருள் எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் தன் ஞானத்தால் உணர்வினால் தழுவி உள்ளது. அதனால் சிவம் சைதன்யம் எனப்பட்டது. இதை தியானத்தால் உணரலாம். தியானத்தில் உண்டாவதும் அதை வளர்ப்பதும் முடிவாக கிடைப்பதும் சிவமே. தியானத்தால் பிரபஞ்சம் முழுவதும் நம் உள் உணர்வால் தொடர்புடையதாகும். எல்லப் பொருளையும் இருந்த இடத்தில் இருந்தே உணர முடிவதற்கு காரணம் பரம்பொருள் சைதன்ய வடிவமாய் இருப்பதே.
2.பந்தத்தால் ஞானம் அளவுக்குட்பட்டதாகும்.
ஆத்மா இயற்கையிலே ஞானம் உடையது. ஆத்மாவின் ஆணவ மலம் காரணமாக ஞானம் தன் பரப்பளவிலும் இயற்கையிலும் குறையும். பல பிறவிகளில் செய்த கருமத்தின் காரணமாக மாயத்தால் மலத்தால் வருவது பந்தம். ஞானம் பந்தம் காரணமாக அளவிற்கு சிறியதாகும்.
3.உடல் வர்க்கம் கலாசரீரமாகும்.
யோனி வர்க்க மூலமாக தோன்றும் உடல். உடலின் இயக்கத்திற்கு காரணமான ஒலி, ஒளி, நிறம் முதலிய தாதுப் பொருள்களான கலைகளால் உருவாக்கப்பட்டது. பொருள்களில் பிரதிபலிப்பது, சூரிய ஒளியின் நிறங்கள் எல்லாம் கலைகள். சூரிய, சந்திர, நட்சத்திர, கோள்கள் மூலம் வெளிப்படும் ஒளிக்கும் நிறத்துக்கும் உள்ள சக்திகளே நம் உடலின் இயக்கங்களைத் தருகின்றன. கலைகள் நாடி நரம்புகளில் இயக்கம் தருவதால் இதயம் துடிக்கிறது. உடலை இயக்கும் வானசக்தி– பிராணசக்தி கலை ஆகும். கலை இயற்கைச் சக்திகள். யோக முயற்சியை வெற்றி பெற செய்யும். எனவே யோனிகளில் தோன்றிய உடல்கள் கலா சரீரமாக இருக்கும்.
4. ஞானம் மொழிகளின் எழுத்தோசையில் அடங்கும்.
ஞானம்-அறிவு. நம் குணங்களாலும் மலங்களாலும் அறிவு குறைக்கப்படுள்ளது. எல்லா எழுத்துக்களும் ஒலியும் ஒளியும் நிறமும் கொண்டு ஒவ்வொரு சக்திக்கும் பொதுவாக பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்தோசையில் உள்ள தாய்ச் சக்தி மாத்ருகா எனப்படும். ஒரு பெயரை அறிந்து கொண்ட ஆத்மா உரிய பொருளை நினைத்தாலும், படித்தாலும் தோன்றும் உணர்த்தும் ஞாபக சக்தியை செயல்படவைப்பது மாத்ருகா ஆகும். நாமார்ந்த பிரபஞ்சம் 1. பொருட் பிரபஞ்சம், 2. சொற்பிரபஞ்சம் என இருவகையாகும். எல்லாப் பொருள்களையும் பொருட்பிரபஞ்சம் என்றும் அப்பொருட்களின் பெயர்கள் மட்டும் சொற்பிரபஞ்சம் எனப்படும். ஒரு பொருளை அதன் பெயர் சொல்லி அழைக்கும்போது அப்பொருளுக்கும் அதைச் சொல்லுபவனுக்கும் தொடர்பு மாத்ருகா சக்திகளால் ஏற்படும். ஒரு கட்டளைச் செய்தி சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் சக்தி அறிவிப்பாகிறது. நன்மை, தீமை முதலிய எல்லாப் பொருளுக்கும் நினைப்புச் சக்தி பயன் தரும்.
வடமொழியின் எழுத்து ஓசையும் அதன் மாத்ருகா சக்தியும் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது,

1

வடமொழி 16 உயிர் எழுத்துக்கள்

மகாலட்சுமி

2

க1, க2, க3, க4, ங   

பிராஹ்மி

3

ச1, ச2, ஜ1, ஜ2, ஞ

மஹேஸ்வரி

4

ட1, ட2, ட3, ட4, ண  

வைஷ்ணவி

5

த1, த2, த3, த4, ந

கௌமாரி

6

ப1, ப2, ப3, ப4, ம

வராஹி

7

ய, ர, ல, வ  

இந்திராணி

8

ச’, ஷ, ஸ, க்ஷ     

சாமுண்டா

இம் மாத்ருகா சக்திகள் 1.நிவிர்த்தி, 2.பிரதிஷ்டா, 3.வித்யா, 4.சாந்தி, 5.சாந்தியாதீதா என்ற ஐந்து விதக் கலைகளை செயல்படுத்தும். மேலும் 1.வர்ணம், 2.பதம், 3.மந்திரம், 4.கலை, 5.தத்துவம், 6.புவனம் என்ற ஆறு அத்துவாக்கள்-வழி மூலம் இச்சக்திகள் நாமார்ந்த பிரபஞ்சத்தை செயல்பட வைக்கும்.
5.உடலில் மேல் நோக்கி எழும் தியான உணர்ச்சியே பைரவர்.
உத்-மேல், யம்-கைப் பற்றுவது. சிவத்தின் இன்னொரு பெயர் பைரவர். ஒவ்வொருவர் உள்ளும் இருக்கும் இச்சக்தி, தியானமுயற்சியை உண்டாக்குபவர், தாமே அந்த வடிவமாய் உள்ளவரே பைரவர்.
6.சக்திகளை ஒன்றாகச் செய்யும் ஆழ்ந்த தியானத்தால் பிரபஞ்சம் முழுவதும் நினைவுக்கு வராது மறைந்து போகும்.
ஸந்தானே- ஒன்றில் ஒன்று தோன்றி நிற்கும் தொடர்ந்த பொருள். ஸம்ஹாரம்- பிரபஞ்சம் மறைவது. விச்வம்-பெரிய பரப்புள்ள பிரபஞ்சம். ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு நிலையிலும் உள்ள சக்திகள் காரணம், ஞாபகம் முதலிய செயல்களால் பிரபஞ்சத்தை நினைவூட்டினாலும் அச்சக்திகள் தியானதிற்கு துணையாவதால் பிரபஞ்சம் மறையும்.
7.நனவு-விழிப்பு, கனவு, உறக்கம் என்பது தனித்தனி தன்மை உடையது. துரியநிலை ஆழ்நிலைத் தியானத்தினால் உச்சமாய் இருக்கும்.
உணரும் கருவிகளால் உலகைக் காண்பது முதலிய அனுபவங்கள் நனவு ஆகும். காணுதல், கேட்டல் முதலியன கருவிகள் இல்லாமல் உள் உணர்வால் காணுதல், கேட்டல் ஆகிய செயல்களை உடையது கனவு ஆகும். உறங்குவதைக்கூட அறியாமல் மூச்சை இழுப்பது மட்டுமே நடப்பது உறக்கமாகும். செவியும் திறந்திருந்தாலும் கேட்கும் திறனின்றி இருப்பதும் உறக்கத்தின்போது நடைபெறும். இந்த மூன்றும் உயிர்களுக்குப் பொதுவானவை. துரியம் யோகியர்களுக்கு உரியது ஆகையால் இந்த மூன்றிற்கும் அடுத்த நான்காம்நிலை எனப்பட்டது.
துரிய நிலையில் ஐம்புல உணர்வின்றி எல்லாவற்றிற்கும் சாட்சியாகத்தான் இருக்கும் உணர்வு இருக்கும். நான் என்ற ஆணவமாக அன்றி சிவத்தோடு ஒன்றும் போகத்தை உணருவதாக இருக்கும்.
8.அறிவு நனவு நிலையில் தொழில்படும்.
நனவு நிலையில் கண்ணை மாற்றி மாற்றி நாம் நினைத்தபடி நம் புலன் உணர்வை மண்ணைப் பார்த்தல், விண்ணைப் பார்த்தல் கடலைப் பார்த்தல் என தொழில்பட செய்யலாம்.
9.மனத்தின் ஆதிக்கத்தில் மட்டும் புலன் உணர்வு கனவு நிலையில் தொழில்படும்
மனம் காட்டும் காட்சிகலையே நாம் கனவு நிலையில் உணர முடியும். அது விகற்பம் ஆகும்.
10.விழிப்புணர்வு இல்லாதிருந்திருந்து மாயையில் ஆழ்வதால் வருவது உறக்கம்
உறக்க நிலையில் நமக்கு இயல்பான விவேகம் இல்லாததால் மாயையில் ஆழ்கின்றோம்.
11.நனவு, கனவு, உறக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் அனுபவம் அடைந்தால் எல்லாப் பொறிகளையும் வசம் செய்யலாம்.
நனவில் பொறிகளை விருப்பம்போல் வசம் செய்யலாம். கனவில் மனத்தளவில் நிகழும். உறக்கத்தில் மனமும் உடலும் உறங்குவதால் எல்லாம் அவற்றுடன் அடங்கி இருக்கும்.
12.கவர்ச்சியான அதிசயங்களை உருவாக்கும் யோகம் பல்வேறு நிலைகளைக் கொண்டது.
யோகபூமிகா-துரிய நிலை. விஸ்வமயம்- அளவிடற்கரியது. பூமியில் பல இடங்கள் போல யோகம் பல நிலை கொண்டது. கோவில்களில் துவாரகபாலகர் காண்பிக்கும் முத்திரை விஸ்மய முத்திரையாகும். விஸ்வமாகிய பிரபஞ்சம் முழுவதும் சென்று உணர முடிவதாலும், தெய்வ சந்நிதானத்தை அடையும் நிலை கிடைப்பதாலும் யோக நிலை விஸ்மயமானது ஆகும்.
13.இச்சா சக்தியான யோக முயற்சி மேற்கொள்ளும் யோகி உமா என்ற சக்தி யாகின்றார்.
இச்சா-விருப்பம். சிவனை அடைவது யோக முயற்சியாதலால் அந்த முயற்சி சிவனின் துணைவியாகிய உமா தேவியாகிறது. உ+ம்+அ=உமா என்பது அ+உ+ம் என்ற பிராணவ மந்திரத்தின் உருவமேயாகும். ஸகஸ்ராரத்தில் 1000 தாமரை நடுவே சிவனும் கீழுள்ள மூலாதாரத்தில் நான்கிதழ் தாமரையில் சிவனை அடைய விரும்பும் சக்திதேவி குமாரியாக உமாவாக இருப்பதாக கருதவும்.
14.யோகியின் உள்ளிலும் வெளியிலும் உள்ள எல்லாப் பொருள்களும் அவன் உடம்பாகவே இருக்கும்.
த்ருச்யம்- உள்ளும் வெளியும் ஆன பொருள்கள். கடவுளிடம் இருந்து பிரிந்து வந்த பிரபஞ்சத்தின் எல்லப் பொருட்களையும் யோகி பிரிந்து நில்லாமல் தன்னோடு ஐக்கியப்படுத்தி தெய்வத்தை நெருங்குகின்றான்.
15.சித்தத்தின் தொடர்பால் உள்ளும் வெளியுமான பொருள்கள் யோகியின் இதயத்தில் காணப்படும்போது அதன் உள்ளீடுகளை அவனால் உணர முடியும்.
பிரபஞ்சம் முழுவதையும் உணரும் புள்ளியாக மார்புக் காம்புகளுக்கு நடுவில் ஊள்ள புள்ளியை நினைப்பதால் அது சித் + ஆகாசம் = சிதாகாசம் அல்லது தகராகாசம் (தகரம்- சிறியது) –சிறிய ஆகாசம் – சிற்றம்பலம் – சிதம்பரம் ஆகும். சித்தஸம்காத்தாத்- சித்தத்தால் தொடர்பு. த்ருச்யம்- உள்ளும் வெளியுமான எல்லா பொருள்கள். ஸ்வாதர்சனம்- அப்பொருளின் தன்மையை உணர்வது. எல்லாப் பொருள்களுக்கும் வர்ணம், பதம், மந்திரம், கலை, தத்துவம், புவனம் என்ற ஆறு உள் இயற்கை உண்டு. இதனுடன் பொருள், இடம், காலம், சினை, குணம் தொழில் ஆகியனவும் சேர்த்து எண்ணப்படும். பொருள் இயற்கையை யோகியே உணரமுடியும். இயக்க முடியும்.
16.சுத்த தத்துவமாகிய பரம் பொருளை இடைவிடாது தியானித்தால் நாமும் நம் சிற்றறிவும் விடுபட்டுப் பரம் பொருளின் தன்மையை அடைவோம்.
சுத்த தத்துவம்- சிவம். ஸந்தானாந்- தொடர் தியானம். அபசு சக்தி – சிற்றறிவு. காந்தத்தின் அருகில் இருக்கும் இரும்பு காந்தத்தின் சக்தியை அடைவது போல சுத்த தத்துவத்தை தியானிப்பவன் சுத்த தத்துவமாகின்றான். மழையை தியானித்தல் உடல் குளிர்ந்தும், தீயைத் தியானித்தால் வெப்பம் மிகுதியாவதும் உண்மை. அதுபோல் சிவனைத் தியானித்தால் சிவமே ஆகுவாய்.
17.தளர்ச்சியற்ற ஆன்ம ஞானம் இது.
விதர்க- தடுமாற்றம் இல்லாத. சிற்றறிவு சிறுமைகளை உணராது இருப்பதே விதர்க ஆகும். ஆத்ம ஞானம்- பரிபூர்ண திருஷ்டி. அஹம் ப்ரஹ்மாஸ்மி – தானே சிவம். சிவ அஹம்- சிவோஹம். தன்னைச் சிவன் என்று உணர்ந்தால் சிவத்தன்மை உண்டாகி எண் குணமும் உருவாகி ஆத்மஞானம் சிறக்கும். வழிபடுவோன் தான் வழிபடும் கடவுள் உருவைத் தன் உருவமாக்கி வழிபடவேண்டும் –ஸர்வ தர்மோத்திர ஆகமம்.
18.தான் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருந்து காண்பதாகிய ஆனந்தம் எப்போதும் அப்படி இருக்கும் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும்.
லோகம்- யோகி காணும் பொருளும் அவரின் ஆத்மாவும். எல்லாப் பொருள்களிலும் தன்னைக் காணும் ஆனந்தத்தை அறியும்போது தானே யாவற்றிற்கும் சாட்சி என்பதை அறியலாம். ஸ்மாதி சுகம்- இந்த சுகம் தனக்கு உரியது என உணர்ந்து அதை தன்னுள் தக்க வைப்பதாகும்.
19.ஏகாக்ர சித்தத்தோடு யோகம் செய்தால் பரம்பொருளோடு ஒன்றி தான் வேண்டும் உடலையும் உண்டாக்கி கொள்ளமுடியும்.
சக்திஸந்தானே-ஏகாக்ர சித்தம்- யோகத்தை ஒரே நினைவுடன் செய்யும்போது எல்லாச் சக்தியோடும் தொடர்பு கொள்ள முடியும். சரீர உற்பத்தி –தான் விரும்பும் உடலைத் தேடிக்கொள்வது. பூத உடலாகவும், ஞான தேகமாகவும், சூக்கும உடலாகவும் மாற்ற யோகியால் முடியும்.
20.பூதப் பொருள்களோடு ஒன்றுதல், அவற்றிலிருந்து பிரித்தல், நினைத்த எதையும் கொண்டு வருதல் ஆகியன யோகியின் செயல்.
பூத ஸந்தான- ஐம்புதங்களுடன் ஒன்றுதல். பூத ப்ருதக்த்வ- பூதங்களில் இருந்து பிரிதல்.விச்வஸந்தாஹ- ஆக்கல், அழித்தல், காத்தல் முதலியன செய்தல். விச்வம்- பிரபஞ்சம் முழுவதும் பரவிய பரம்பொருள்.
21.சுத்த வித்யாவாகிய பரம ஞானத்தை அடையும்போது எல்லாச் சக்திகளையும் ஆளும் சித்தி உண்டாகும்.
சுத்த வித்யா- ஞானம். சத்வஸித்தி- பரம் பொருள்போல் சத்துவ குணத்தோடு ஆளும் தகுதி.
22.இருதயத்தில் உள்ள தெய்வீக ஆற்றலின் யோகத்தால் தொடர்பு கொள்ளும்போது எல்ல மந்திர சக்திகளின் வீரியமும் கை வரப் பெற்றுப் பரம்பொருள் நிலை அடையலாம்.
மஹாஹ்ருதயம்- மார்பின் நடுவில் உள்ள சிதாகாசப் பகுதியாகும். மகா என்றால் யாவற்றிற்கும் காரணமான உள்ளார்ந்த ஒன்று என கொள்க. அனுஸந்தானாத்- யோகத்தால் மகாஹ்ருதயத்தை இடைவிடாது தொடர்பு கொளவது ஆகும். மந்த்ர வீர்யானுபவஹ- மந்திரங்களின் சக்தியால் ஸித்தி. அஹம் பிரஹ்மாஸ்மி என்பது இந்த யோக பாவனையின் பயனாகும்.
22 சிவ யோகக் கருத்துகளின் தொகுப்பு:-
1. சிவமே சைதன்யப் பொருளாக எங்கும் நிறைந்துள்ளது.
2. பந்தங்களால் நம் அறிவு குறைவுபட்டுள்ளது.
3. எல்லா உடல்களும் கலைகளால் உருவாக்கப்பட்டதாகும்.
4. எழுத்துகளின் ஒசைகள் யாவும் மாத்ருகா சக்தியாகும்.
5. மேல் நோக்கி எழும் தியான உணர்ச்சி பைரவரேயாவார்.
6. சக்திகளை ஒன்றாகச் செய்யும் ஆழ்ந்த தியானத்தால் இப்பிரபஞ்சம் மறைந்து போகும்.
7. நனவு, கனவு, உறக்கம் மூன்றும் தனித்தனி வேறுபாடுகள் உடையன, துரியம் நான்காவது நிலை யாவற்றிற்கும் சாட்சியாய் நிற்கும்.
8. நனவு நிலையில் அறிவு தொழில் படும்.
9. கனவு நிலையில் மனத்திற்கு மட்டும் அறிவு அடங்கி நிற்கும்.
10.விழிப்புணர்வு இல்லாதிருத்தல் மாயையில் ஆழ்வதால் வருவது.
11.நனவு, கனவு, உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் அனுபவம் கொள்பவர் பொறிகள் எல்லாவற்றையும் வசம் செய்பவர் ஆவார்.
12.பல்வேறு நிலைகளைக் கொண்ட யோகம் மிகவும் கவர்ச்சியான அதிசயங்களை உருவாக்கும்.
13.இச்சா சக்தியாகிய யோகமுயற்சி உமா எனும் சக்தி ஆகும்.
14.யோகியின் உள்ளிலும் வெளியுலுமுள்ள எல்லாப் பொருள்களும் அவன் உடம்பாகவே உள்ளன.
15.உணர்வுகளின் நடுவாகிய இதயத்தில் சித்தத்தின் தொடர்பால் பொருள்களின் உள்ளீடுகளை அறிய முடியும்.
16.பரம்பொருளை இடைவிடாது தியானிப்பவருக்குப் பரம்பொருள் தன்மை வந்து சேரும்.
17.திட சித்தமாகத் தான் சிவமே என உணர்தலே ஆத்ம ஞானம்.
18.காணும் யாவுக்கும் தானே சாட்சியாக இருப்பதை உணருதலே ஆனந்தத்தை தக்க வைத்தல்.
19.ஏகாக்ர சித்தத்தோடு யோகம் செய்பவர் விரும்பிய உடலை தமக்கு என உருவக்க முடியும்.
20.யோகியால் பரம்பொருள்போல் ஐந்தொழில் புரிய முடியும்.
21.பரம்பொருளை அடையும்போது சுத்த வித்யாவாகிய பரமஞானம் கைவரும். சகலமும் ஸித்தி அடையலாம்.
22.மஹா ஹ்ருதயத்தில் யோகம் கூடுமானால் பரமஞானம் கை வரப்பெறும். எல்லா மந்திரங்களின் வீரிய சக்தியும் யோகிக்கு கிடைக்கும்.                                                             ******

வியாழக்கிழமை, 19 September 2013 00:00

சித்தர் யோகம்

                         ஓம்நமசிவாய!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
                                      ******

சித்தர்கள் சித்தத்தில் சிவனை சிந்தனை செய்து சிவத்தைக் கண்டவர்கள். தாங்கள் பெற்ற சித்திகளை அனுபவத்தின் மூலமாக மனித வாழ்வு மேநிலையடைய உதவி செய்பவர்கள். பிறக்கும்போதே ஞானியாக, சித்தராக பிறந்தவர்கள்- கருவிலே திருவுடையவர்கள் பிரகலாதன், ஞானசம்பந்தர், பிறந்தபின் ஆண்டவன் அடியவராகி அருளில் ஒன்றியவர்கள்- நாயன்மார்கள், ஆழ்வார்கள். கல்பமருந்துகள், மூலிகைகள், பாஷாணங்கள் மூலம் உடலை இறுக்கி முக்தி அடைந்த காயசித்தர்கள்- போகர், கோரக்கர். உடலைத் தவம், யோகம் ஆகியவற்றாலும் ஒளஷதங்களாலும் சுத்தி செய்து முக்தியடைந்தவர்கள். சிவனிடம் உபதேசம் பெற்ற மகேஸ்வரசித்தர்கள். திருமூலரை குருவாகக் கொண்ட மூலவர்க்க சித்தர்கள், பாலமுருகனை குருவாகக் கொண்ட பாலவர்க்க சித்தர்கள், அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தர்கள் என பலவகைச் சித்தர்கள் இருந்தாலும் சித்தர்கள் என்றால் முதலில் பதினெண் சித்தர்கள்தான் நினைவில் தோன்றும்.

சித்தர் யோகப் பாடல்கள்
சித்தர்கள் மொத்தம் பதினெண்மர் ஆவர். இவர்கள் வாலை- பாலா எனும் சாக்த சமயக் கடவுளையே தங்களின் யோகத்திற்கு துணைசெய்யும் கடவுளாக கொண்டனர். சிவவாக்கியர், திரிகோணச் சித்தர், கடேந்திரநாதர் சித்தர், புண்ணாக்குச் சித்தர், கல்லுளிச் சித்தர், கஞ்சமலைச் சித்தர், வகுளிநாதர்(எ) மௌனச் சித்தர், ஆதிநாதர்(எ) வேதாந்தச் சித்தர், அகத்தியர், அகப்பேய் சித்தர், அழுகணிச்சித்தர், இடைக்காட்டுச்சித்தர், இராமதேவர், குதம்பைச் சித்தர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், வால்மீகர் ஆகியோர் தந்த பாடல்கள் சிறப்பானவை. அவற்றின் கருத்துகள் யோகம் பற்றியதாக இருப்பதால் அதை நாடும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

ஆன அஞ்சுஎழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்சுஎழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்சுஎழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்சுஎழுத்துளே அடங்கலாவல் உற்றதே-சிவவாக்கியர்-2
அகண்டமும், பிரபஞ்சமும், மும்மூர்த்திகளும், அ, உ, ம எனும் ஓங்கார மூல ஓசைகளும் மற்றயாவும் அஞ்சு எழுத்திலே சிவாயநம என்பதில் அடங்கியவை.
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே-சிவவாக்கியர்-4
சுழுமுனை நாடியில் பிராணன் வாயுவின் உருவில் ஒடுங்கியுள்ளது. மனத்தை அதில் செலுத்தி கீழே அம்மையின் பாதமும் முடியில் அப்பன் பாதமும் உள்ளதாக கருதி தலைவரையில் மேலே ஏறுவதாகக் கருதினால் நாடிக்குள் அசைவு ஏற்படும். உடல் சிவக்கும். இளமை கொள்வர். பிராணசக்தி தன் போக்கில் நாடிவழியாக மெதுவாகச் சென்று கொண்டுதான் இருக்கும். யோகத்தின் மூலம் அதை வேகப்படுத்துகிறோம். இறைக்க இறைக்க நீர் ஊருவதுபோல் பிராணன் மேலே செல்லச் செல்ல மேலும் பிராணன் உடலில் வந்து புகும். இதுவே உடல் இளமை, நிறம் முதலியன தரும்.
பிரபஞ்சத்தை அண்டம் என்றும் நம் உடலைப் பிண்டம் என்றும் கூறுவர். பிரபஞ்சத்தில் உள்ள எல்லா மூலகங்களும் பஞ்சபூமுதங்களும் நம் உடலில் இருப்பதால் நம் உடலை நுண்ணிய பிரபஞ்சம் எனலாம். பிரபஞ்சமும் அதில் உள்ள யாவும் தன்னுள் இருப்பதாக உணர்வது சித்தர்கள் வழியாகும்.
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லாரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே-சிவவாக்கியர்-6
யோகத்திற்குமுன் எனக்குள் இருந்த ஒன்றை நான் அறியவில்லை. நான் அறிந்து கொண்டவாறு யோகம் அறிந்த யாரும் அறியவில்லை. என்னிலே இருந்ததை பிறர் கூறாமலே நான் அறிந்து கொண்டேன், அவருக்குள் இருந்த பிரபஞ்சம் பரபிரம்மம் ஆகியன யோகத்தால் அறிந்து கொண்டதால் அவரைப்போல் பிறர் அறியவில்லை.
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு அது எங்ஙனே-சிவவாக்கியர்-7
உன்னைத்தவிர வேறு எதையும் என்னால் நினைக்க முடியாது. நினைப்பும் மறப்பும் உள்ள எனக்குள் நின்ற மாயை இப்போது இல்லாது மாயமாய் மறைந்தது, பிரபஞ்சமும் அளவு மனமும் கருத்தும் விரிவதால் எல்லாமுமாய் விரிந்தாய் உன்னுள்ளே நான் இருப்பது சரி,. அநாதியாய் சிரியவனாகிய எனக்குள் அவன்இருப்பது எப்படிஎன்று புரியவில்லை என்றார்.
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
எந்தை ராமராம ராமராம என்னும் நாமமே-சிவவாக்கியர்-10
அந்தி நேரம், உச்சிபொழுது, உதயம், ஆகிய காலங்களில் ஆடும் தீர்த்தமும், சந்தியா காலங்களில் செய்யும் தர்ப்பணங்களூம், தவம் ஜபம் முதலியவையும், சிந்தையில் இருக்கும் ஞானமும் தினம் சொல்லும் மந்திரம் எல்லாம் ராம ராம என்பதே. ஒன்றை ஏற்றுகொண்டு அதையே ஜபித்து வந்தால் பலன் கிட்டும். 
அஞ்சும் மூணும் எட்டதாய் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்து கொண்டு நீர் உருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்கும் என்று நான்மறைகள் பண்ணுமே-சிவவாக்கியர்-16
ஐந்தெழுத்து, மூன்று எழுத்து, எட்டெழுத்து ஆகியன அநாதியான மந்திரங்களே. இதில் ஒன்றை நெஞ்சிலே நினைத்து பல நூறாக உருச் செய்து ஜெபம் செய்தால் பஞ்சபாதகங்கள் நூறு கோடி செய்தாலும் பஞ்சு பறப்பது போல் பறக்கும் என நான்கு வேதங்களும் சொல்கின்றன.
செய்ய தெங்கிலே இளநீர் சேர்த்தகாரணங்கள் போல்
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே-சிவவாக்கியர்-32
தென்னை மரத்தில் காயினுள் நீர் சேருவதுபோல் காரண காரியங்களால் கடவுள் என் மனத்தில் வந்து கோயில் கொண்டதால் அது பற்றி யாரிடமும் கூறினால் அகங்காரம் மிகும் ஆதலால் பேசாமல் மௌனமாகினேன்.
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே-சிவவாக்கியர்-34
கோயிலும் குளமும் நம்மனத்திலேயே நாம் தோன்றியது முதல் இருப்பதால் கோயில் என்று வெளியில் தேடி அலைந்து பயன் இல்லை. யோகத்தால் கோயில் தீர்த்தம் ஆகிய வழிபாட்டுப் பயன் தரும் உணர்வுகளை உணரலாம்.
கலத்தின் வார்த்து வைத்துநீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுகத்ததீக் குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கியே மந்த்துள்ளே கரந்ததோ-சிவவாக்கியர்-38
குடத்தில் நீரிட்டு நெருப்பு மூட்டினால் நீர் மறைகிறது. அது குடத்தில் மறைந்ததா, நெருப்பில் மறைந்ததா, மண்ணில் மறைந்ததா, வானத்தில் மறைந்ததா, காண்போர் மனத்திலிருந்த மயையை நீக்கித் தானே மாயை ஆகிவிட்டதா. உருவமுடைய நீர் அருவமாகி வானில் மறையும். அதுபோல எல்லா உருவப்பொருளும் ஒரு காலத்தில் அருவம் ஆகும். அந்த அருவமே உருவமாக வந்துள்ளது. எனவே அருவ வெளியை தியானிக்கவும்
பிறப்பதற்கு முன் எல்லாம் இருக்குமாறது எங்ஙனே
பிறந்துமண் இறந்து போய் இருக்குமாறு அது எங்ஙனே
குறித்து நீர் சொல்லாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அணுப்பன் நின்செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால்-சிவவாக்கியர்-42
ஓர் உடல் பிறப்பதற்குமுன் அதனுள்ளே உயிரோ ஆத்மாவோ எங்கே இருந்தது. மண்ணில் பிறந்து இறந்தபின் அவ்வுயிரோ ஆத்மாவோ எங்கே போனது என்பது பற்றி விடை சொல்லாவிடில் அஞ்செழுத்தை ஓதியே உம் செவியிரண்டும் அறுப்பேன். அஞ்செழுத்தை ஓதினால் உயிர் முன்பும் பின்பும் போய் இருக்கும் இடமாகிய இருப்பு நிலை தெரியும். உயிர் அதற்குரிய உடலை கடவுளருளால் தேர்வு செய்யும்,
தீர்த்தம் ஆடவேணுமென்று தேடுகின்ற தீனர்கள்
தீர்த்தம் ஆடல் எவ்விடம் தெளிந்து நீர் இயம்புவீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்லதும் சிவாய அஞ்சு எழுத்துமே-சிவவாக்கியர்-64
சிறந்த தீர்த்தம் எங்கே உள்ளது என்று எவரும் சொல்ல இயலாது. அதை ஆடவேண்டும் எனத்தேடும் நபர்களே தெளிந்து வாருங்கள் ‘சிவாயநம’ எனும் அஞ்சு எழுத்து மந்திரத்தை ஓதுபோது அந்த யோகத்தால் நமக்குள்ளே தீர்த்த சிறப்பு வரும்.
மூலநாடி தன்னிலே முளைத்து எழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே-சிவவாக்கியர்-69
மூலநாடியில் பிராணனும் சோதியும் இருக்கின்றது. தினமும் 4 நாழிகை இந்த ஒளியை பிராணனுடன் மேல் நோக்கி எழச் செய்தால் இளைஞன் ஆகலாம். பரப்பிரம்மமும் ஆகலாம். இது ஆலகால விஷத்தை உண்ட சிவன் மேலும் பராசக்தி மீதும் ஆணையிட்டுக் கூறுவது ஆகும். மூலாதாரம்வரை நீண்டநாடி மற்ற நாடிகளுக்கு மூலமானது ஆகையால் ‘மூலநாடி’. பூமிக்குள் நெருப்பும் வெப்பமும் இருப்பதுபோல், அதன் தத்துவமான உடம்பில் மூலாதாரத்தில் பிராணனும் நெருப்பும் இயற்கையாகவே இருக்கின்றது. இது ‘மூலாக்கினி’ எனப்படும். இதை சித்+அக்னி=சிதக்னி-சித்தமாகிய அக்னி-சிதக்னி குண்டம் என்பர். நினைக்க நினைக்க அந்த இடத்தில் நெருப்பு இயற்கையாக வளரும். இது மூலச்சூடு ஆகும். நாழி-24 நிமிடங்கள். காலை சூரிய உதயத்திற்கு முன் 4 நாழிகை-4 x 24 = 96 -1மணி 36 நிமிடங்கள் இந்த மூலச்சூட்டை நினைத்து யோகத்தில் இருக்கவும்.
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடீர்
மந்திரங்கள் ஆவதும் மனத்திலூறல் அன்றுகாண்
மந்திரங்கள் ஆவது மதர்த்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே-சிவவாக்கியர்-92
மந்திரம் நினைத்து மயங்கும் மனிதர்களே மனத்தில் ஊறிவரும் வெறும் சொற்களே மந்திரம் அல்ல. நினைவில் உடலில் எழும் பிராண வாயுவின் வடிவமே மந்திரமாகும். அதை வசப்படுத்துவோர் மரணமின்றி வாழலாம்
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பன்னுகின்ற செந்தமிழ்ப் பதங்கடந்த பண்பு என
மின் அகத்தில் மின் ஒடுங்கி மின்னது ஆனவாறுபோல்
என் அகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே-சிவவாக்கியர்-93
இப்படித்தான் இருக்கும் என இலக்கணம் சொல்ல முடியாத கடவுள், செந்தமிழ் சொற்களால் பண்பு கூறமுடியாத அந்தப் பொருள், மின்னலில் மின்னல் சேர்ந்து மின்னலாக ஆனது போல் என் உள்ளத்து ஆத்மாவோடு இணைந்துள்ளது. வேறு ஒன்றும் என்னிடமில்லை.
நவ்விரண்டு காலதாய் நவின்ற மவ்வயிறதாய்ச்
சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வை ஒத்து நின்றதே சிவாய அஞ்செழுத்துமே-சிவவாக்கியர்-96
ந-காலிரண்டில்,ம-வயிற்றில்,சி-தோள்களில்.வா-வாயில்.ய-கண்களில், எனக் கடவுள் உருவில் அமைத்து நம் உடம்பில் இனைத்து மந்திரம் சொல்லி உணர்வது. 
கடலிலே திரியும் ஆமை கரையில் ஏறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே இருக்கும் எங்கள் மணியரங்க சோதிஅயை
உடலுளே நினைந்து நல்ல உண்மையானது உண்மையே-சிவவாக்கியர்-98
கடலில் வாழும் ஆமை கரையில் தான் இட்ட முட்டையை நினைப்பதால் அது அடைகாக்கப் பட்டு பக்குவமாகும். அதுபோல கடவுளாகிய சோதியை நினைத்துப் பழகும்போது அது நம் உடலில் உண்மையாகவே வந்து சேரும். நினைவு என்ற சக்தி தொலைதூரம் சென்று பயன் தரும், ஆமையின் நிணைவுச் சூடே முட்டைக்கு கிடைக்கின்றது.
ஒளியதான காசிமீது வந்து தங்கு வோர்க்கெல்லாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதன் ஆனவன்
தெளியும் மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமாமிர்த நாமமமே-சிவவாக்கியர்-107
ஒளி என்ற பெயருக்குரியதான காசியில் ஜோதிர்லிங்கமாக இருக்கும் விஸ்வநாதர் விசாலாட்சியுடன் இருந்து சொல்லிக் கொண்டிருக்கும் நாமம் இராமநாமம். அங்கு விஸ்வநாதருக்கு வில்வத்தில் இராமநாமம் எழுதி அர்ச்சனை செய்யப்படுகிறது.
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே-சிவவாக்கியர்-109
ஓம் நமசிவாயத்தை உண்மையாக உணர்ந்து அதையே கடவுள் வடிவமாகவும் நம் வடிவமாகவும் உணர்ந்து பாவித்தால் நமசிவாயம் என்ற மந்திரம் சோதிப்பொருளாக மனத்தில் நிற்கும். 1.மெய்-உண்மை, 2.மெய்-கடவுள்வடிவம், 3.மெய்-நம்வடிவம் ஆகும்.
விண் கடந்து நின்ற சோதி மேலைவாசலைத் திறந்து
கண்களிக்க உள் உளே கலந்துபுக்கு இருந்தபின்
மண்பிறந்த மாயாமும் மயக்கமும் மறந்து போய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே-சிவவாக்கியர்-122
யோக முயற்சியால் நமக்குள் இருந்த சோதி தலை உச்சியாகிய பிரம்மநாளம் மேல் வாசலைத்திறந்து கொண்டு போய் விண்வெளியைக் கடந்து நின்ற சோதியானது நமக்குள்ளே கண் களிக்க காணுமாறு நம்மோடு கலந்து புகுந்திருந்ததேயாகும்
மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாளும்நாளும் முன்னில் ஒரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே-சிவவாக்கியர்-123
மூலத்தில் உள்ள பிராணன் தான் ஒரு ஆத்மா மூச்சு விடுவதற்கு மூலமாக உள்ளது. அதில் நாம் மூச்சு விடுவதையும் ஒன்றாக இணைத்து அதன் மேல் கருத்தைச் செலுத்தினால் இளைஞனாவதும் பரப்பிரம்மம் ஆவதும் பயன். ‘அயம் ஆத்மா பிரம்மம்’- நம் ஆத்மாவே பிரம்மாகிய கடவுள் என்ற வேதாந்தை யோகப்பயிற்சியில் உறுதியாகும். மூலாதாரத்தில் உள்ள பிராணசக்தி நாடிகள்வழி மேலே சென்று நுரையீரலை இயக்கி மூச்சு விடும் செயலை செய்விப்பதால் அந்த அசைவிற்கு ஏற்ப மூச்சு விடுதலை பயிற்சி செய்ய வேண்டும்.
மின் எழுந்து மின்பரந்து மின் ஒடுங்கு மாறுபோல்
என்னுள்நின்ற என்னுள் ஈசன் என்னுள்ளே அடங்குமே
கண்ணுள்நின்ற கண்ணில் நேர்மைகண் அறிவிலாமையால்
என்னுள் நின்ற என்னையன்றி யான் அறிந்த தில்லையே-சிவவாக்கியர்-124
மின்னல் தோன்றி அதுவே விரிந்து மின்னலாய் ஒடுங்குவது போல் எனக்குள் நின்ற கடவுள் எனக்கு உள்ளேயே அடங்குவான். வெளிப் பொருள்களை அறியும் கண், அதற்குள் உள்ள கண்ணையும் அதில் நேர்வதையும் அறியாது போல், என்னுள் நின்றதை அறிந்தநான் என்னையே அறியவில்லை. யோகப்பயிற்சியால் அறிந்து கொண்டேன்.
நெருப்பறைத் திறந்தபின்பு
நீயும் நானும் ஈசனே-சிவவாக்கியர்-125
நமது உள்ளத்தே ஒளித்தெரியும் அறைக்கதவு திறந்து கொண்டால் நானும் நீயும் ஈசன் ஆவோம்.
அம்மையப்பன் உப்புநீர் அறிந்ததே அறிகிலீர்
அம்மையப்பன் உப்புநீர் அயன் அரி அரனுமாய்
அம்மையப்பன் உப்புநீர் ஆதியாதி ஆனபின்
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை ஆனதே-சிவவாக்கியர்-144
உப்பு நீரும் போல் அம்மையப்பன் இனைந்துள்ளனர். அரியும் அயனும் அரனும் இப்படியே இணைந்துள்ளனர். இப்படி யாவும் இணைந்தபின் நீயே அம்மையப்பன் ஆவாய். உப்பு ஒரு பங்கும் நீர் இரு பங்கும் சேர்ந்தால் இரண்டும் சேர்ந்து ஒன்றாகவே தோன்றும். உப்பு தன் வடிவம் இழந்து சுவையளவில் நிற்குமாதலால் இரண்டு வடிவங்கள் இல்லை. ஒன்று வடிவமாகவும் மற்றது சுவையாக அதில் கலந்தும் இருக்கும். இதேபோல் சக்தியும் சிவனும் இணைகின்றனர். மும்மூர்த்திகளும் இணைகின்றனர். அம்மையப்பர் இணைகின்றனர். நாமும் இணைந்து அம்மையப்பர் ஆகிறோம்.
கருத்தரிக்கும் முன் எல்லாம் காயம் நின்றது தேயுவில்
உருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்றது தேயுவில்
அருள்தரிக்கும் முன் எலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கரத்துக் கொண்டதே சிவாயம் என்று கூருவீர்-சிவவாக்கியர்-168
கரு உற்பத்தியாவதற்கும் முன்பும் உருவம் தெரியும் முன்பும் உடம்புக்கு வேண்டிய எல்லாம் அக்னியில் இருந்தன- அருளால் உயிர் உண்டாக ஏற்படும் ஆசை வாயுவிடம் நின்றது. சிக்கலும் ஏற்படாது நீக்கியது சிவாயமே.
சுக்கிலத்தில்–ஆண்விந்து கரு உற்பத்திக்கு முன்பு உடம்பு நின்றது. சுரோணிதத்தில்- பெண்கருமுட்டை உருவம் உண்டாவதற்கு முன் உடம்பு நின்றது. இராண்டுமே அக்னியாகையால் நெருப்பில்—தேயு நின்றது. ஆணும் பெண்ணும் கூடி அருளால் ஓர் உயிர் உடம்பு தோன்றுவதற்கு முன்பு உள்ள ஆசையானது வாயுவில் நின்றது,தச வாயுக்கள் தத்தம் தொழில்கலைச் செய்யும்போது காமமாகிய ஆசையும் உண்டாகும்.
உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது
இருக்கில் என் மறைக்கில் என் நினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்து போதலோ தளிந்ததே சிவாயமே-சிவவாக்கியர்-200
உருவத்தோடு வந்தபோதுதான் உன்னை நான் அறிந்தேன்.நீ இருந்தாலும் கண்ணை விட்டு மறைந்தாலும், உன்னை நினைக்கும் பொழுதெல்லாம் உன் உருவம் என் நெஞ்சில் கலந்து நிற்கிறது. நீயும் நானும் ஒருமாதிரி நினைவால் கடவுள் நிலை வந்தபிறகு தெளிவாக உணரலாம்.
பட்டமும் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப்
பட்டறிவினாலே பார்த்து நீ படுமுடிச்சு போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்வனை-சிவவாக்கியர்-203
கயிற்றின் நுனியை பிடிப்பதால் பட்டம் பறப்பது போல் அருள் என்ற கயிற்றால் சீவன் என்ற பட்டத்தை இறைவன் பற்றியிருப்பதால் பிறக்கின்றது என உணர்ந்து சீவனையும் இறையருளையும் இணைத்து கட்டுவாயாக.
அல் இறந்து பகல் இறந்து அகப்பிரம்மம் இறந்துபோய்
அண்டர் அண்டமும் கடந்த அநேக அநேக ரூபமாய்ச்
சொல் இறந்த மனம் இறந்த சுக சொரூப உண்மையைச்
சொல்லியாற என்னில் வேறு துணைவர் இல்லை ஆனதே-சிவவாக்கியர்-204
இரவு பகல் கடந்து இவ்வுலகுக்கும் மேலாய் நானே பிரம்மம் என உணர்ந்து பல கோடி அண்டங்களையும் கடந்து, பல வடிவம் உடைய பொருளகள் யாவும் கடந்து, சொல்லாலும் மனத்தாலும் விளக்க முடியாத ஆனந்த வடிவமாகிய உண்மைப் பொருளைப் பற்றி விளக்கமாகச் சொல்லி மகிழ எனக்குள் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. 
அக்கரம் அநாதியோ ஆத்துமா அநாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அநாதியோ
தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அநாதியோ
மிக்கவந்த யோகிகள் விரைந்துரைக்க வேணுமே-சிவவாக்கியர்-209
அட்சரம் ஆகிய எழுத்து ஓசையும், ஒளியும், உயிரை இயக்கும் ஆத்மாவும், பஞ்சபூதங்களினால் தோன்றிய ஐந்து புலன்களும், வேதம் முதலிய நூல் கருத்துக்களும், சதாசிவம் என்ற கடவுள் உண்மையும் அநாதிகளாகும். எதன் மூலமும் உருவாக்கப்படாமலும் தானாக இருப்பதும் தோன்றிய காலம் தெரியாமல் இருப்பதும் அநாதிகள் ஆகும். 
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பது ஏது நிற்பதுஏது நீர் நினைந்து பாருமே-சிவவாக்கியர்-214
உலகில் உற்பத்தியாகும் சக்தியும், இறந்தபின் பிரிந்து போகும் சக்தியும், பிரபஞ்சம் முழுவதும் பரந்து போகும் நினைப்பு சக்தியும், உயிர் நிற்பதாகிய வாழ்வு சக்தியும் எது என எண்ணிப் பாருங்கள். பிரியும் சக்தியால் சாவும், சேரும்போது உற்பத்தியும், நினைக்கும்போது பரவெளியில் நகர்ந்து போவதும் உயிர் நின்று வாழ்வதாகிய சக்தியும் ஒன்றே. ஒன்றின் பிரிவே என உணரவும், கடவுளின் ஒரு சக்தியே பலவிதமாக செயல் படும். தாபரம்-பரவெளி ஓசையை எங்கும் எடுத்து போவதுபோல் நினைவையும் கொண்டு செல்லும்.
உயிர் இருந்தது எவ்விடம் உடம்பு எடுப்ப தன்முனம்
உயிரதாவது ஏதடா, உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பு எடுத்த உண்மைஞானி சொல்லடா-சிவவாக்கியர்-219
உடம்புக்கு முன்பு உயிர் எங்கே இருந்தது. உயிரும் உடம்பும் எனத் தனித் தனியானதா. உயிரையும் உடம்பையும் ஒன்றுமாறு செய்வது எது, உயிரினால் உடம்பைப் பெற்ற உண்மை ஞானியே சொல்வாய், ஆத்மா தாய் வயிற்று முட்டையால் உடம்புவரையும் தந்தையின் சுக்ல விந்துவால் உயிர் வந்து ஓர் உடம்பு வளர்கிறது. உடம்பில் சூரிய ஒளி பட்டதும் வெப்பம் தெரிவதுபோல உடம்புக்குறிய சாதனங்கள் உயிர் வெளியாகி கருப்பையில் அமரும்போது தாமே அங்கு வந்து சேர்கின்றன். உயிரும் உடம்பும் பரந்து உள்ளன.
சுழித்தஓர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப இன்ப மும்கடந்து செல்லும் மூலநாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆறுபங்கயம் கலந்து அப்புறத் தலத்துளே-சிவவாக்கியர்-220
மந்திரம் சொலவதற்கு முன் ஓம் எனும் எழுத்தை சொல்லி, மூலாதாரத்து நாடிகள் வழியாக அழுத்தமாகப் கூறப்படும் அட்சர மந்திர எழுத்துக்களை மூலாதார அக்னியுடன் சேர்ந்து எழுப்பினால் ஆதார கமலம் ஆறையும் கடந்து உச்சிக்குமேல் புறவெளியில் ஓசையும் ஒளியும் சேரும். சுழித்த ஓர் எழுத்து- ஓங்காரம்.
சக்திநீ தயவுநீ முயங்குசங்கின் ஓசைநீ
சித்திநீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்துநீ
முத்திநீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபூரம் உம்முளே அறிந்து உணர்ந்து கொள்லுமே-சிவவாக்கியர்-247
சக்தி, தயவு, சங்கின் ஓசையான ஓங்காரம், சித்தி, சிவம், சிவாயநம் என்ற மந்திரம், முத்தி, முதல் கடவுள், மும்மூர்த்திகள் அடிப்படையான பூரணம் ஆகிய யாவும் உனக்குள் அடங்கியிருக்கும்.
மூலமண்டத்திலே முச்சதுரம் ஆதிபோல்
நாலுவாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம்
கோலிஎட்டு இதழுமாய்க் குளிர்ந்தலர்ந்து ஈட்டமாய்
மேலும் வேறு காண்கிலேன் விளைந்தே சிவாயமே-சிவவாக்கியர்-253
முச்சதுரம்- முக்கோணம், நாலுவாசல்- 4 இதழ் தாமரை. மூலாதாரத்தில் முக்கோணம் முதல் நாலு வாசலின் நடுவே எம்பிரான் உதிக்கின்றான். ஓம் எனும் மந்திரம் மூலாதாரத்தில் புறப்பட்டு எட்டு இதழ் விரிந்த தாமரை நடுவே சென்று சேர்கிறது. இதனால் சிவனருள் விளைந்து யோகம் முழுமையடைகிறது.
என்னகத்துள் என்னைநான் எங்கும்நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாதது ஆகையால்
என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னை அன்றியாதுமொன்றும் இல்லையே-சிவவாக்கியர்-261
என்னை எனக்குள் எப்படி தேடுவது. எனக்குள் என்னை நான் அறியாதபடியால் எங்கே தேடுவது என்று நினைத்தேன். எனக்குள் நான் இருப்பதை உணர்ந்தபின் எனக்குள் என்னைத்தவிர வேறு எதுவும் இல்லை அதுவே உயரியது என்று உணர்ந்தாய் விட்டது.
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்று உரைக்கும் அன்பர்கள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே-சிவவாக்கியர்-275
அஞ்சு எழுத்து, மூன்று எழுத்து, எட்டு எழுத்து ஆகியவை பரம்பொருளாக இருக்கவில்லை. அவற்றை நெஞ்சில் வைத்து அதன் பொருளை அறிந்து சொன்னால் அவை கடவுளை உணர்த்தும். அ+உ+ம் அல்லது ஐம்+க்லீம்+ஸௌ என்பது 3எழுத்து.
முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுரம் ஆகியே அடங்கிஓர் எழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே-சிவவாக்கியர்-287
மூலாதாரத்தின் முக்கோணத்திலிருந்து தலை உச்சிவரை ஒரே ஒளிக்கற்றையாக நிறுத்தி ஓம் எழுத்தையும் ஒலித்தூணாக நிறுத்தி மந்திரம் உச்சரித்தால் அந்த தூண் ஞான தீபமாக மாறும்.
அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய்ப் பரந்துநின்ற சிற்பரமும் நீயலோ
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே-சிவவாக்கியர்-291
வான்வரை செல்லுமாறு உச்சரித்தா ஐந்தெழுத்துமே இறவனாக மிளிரும். சிம்பு வைத்து கட்டியதுபோல் பரம்பொருள் எங்கும் பரவியுள்ளது. எம்பிராண் எல்லா உயிர்க்கும் தானே தலைவனாய் இருப்பதால் நானும் எம்பிரானுமாய் இணைந்துள்ளோம். 
நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை
நீர்னோடு கூடிநின்றும் நீரிலாத வறுமைபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பீரே-சிவவாக்கியர்-313
நீரிலே தோன்றி முளைத்து வாழ்ந்து நீரிலேயே இருக்கும் தாமரையின் இதழ்மேல் ஒடும் நீர் ஒட்டாது நின்று நீரை அந்நியமாக்கி காட்டுவதபைப்போல் பாரினில் பரம்பொருளும் அந்நியம் போல் தோன்றுவது உண்மையல்ல. நினைவு முதலிய சக்திகள் அருவமாக பிரபஞ்சத்தில் பரவி நிற்பது போல பரம்பொருளும் அருவமாக எங்கும் பரவி உள்ளது.
மவுன அஞ்சு எழுத்திலே வாசிஏறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனும் நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனும் உண்டு நானும் இல்லை யாருமில்லை ஆனதே-சிவவாக்கியர்-327
மவுனமாக அஞ்சு எழுத்து ஓதியும் பிராணாயாமும் செய்தால் தலையில் உள்ள சோதி மண்டலத்திற்குப் போய் கடவுளுடன் நானும் மெய் கலந்து அனுபவிக்கலாம். அப்போது அவர் வேறு நான் வேறு பிறர் வெறு என்று இல்லாமல் எல்லாமே ஒன்றுதானாகும்.
வடிவு பத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே
மாருதத் தினால் எழுப்பி வாசல் ஐந்து நாலையும்
முடிவு முத்திரைப்படுத்தி மூலவீணாத் தண்டினால்
முளரி ஆலயம் கடந்து மூலநாடி ஊடுபோய்-சிவவாக்கியர்-370
அடிதொடங்கி முடியளவும் ஆறுமாநிலம் கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதி எங்கள் சோதியை
உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகி நல்ல யோகியே-சிவவாக்கியர்-371
பத்ம ஆசனத்தில் அமர்ந்து ஒன்பது உடல் வாயில்களயும் மனத்தால்மூடி மூலாதாரத்தில் உள்ள நெருப்பை காற்றினால் எழுப்பிய உணர்வும் செய்கையும் ஆறு ஆதாரங்களைத் தாமரைக் கோவில்களை வீணைபோல் வளைந்து இருக்கும் முதுகுத்தண்டின் சுழுமுனைநாடிவழி கடந்து போய் தலை உச்சிக்கு மேல் உள்ள வெளியையும் கடந்து பரம்பொருளாகிய சோதியை கண்டு சந்திரமண்டலத்தில் அமுதம் உண்டு உண்மையான ஞானம் பெற்று முடியிலிருந்து கீழ் இறங்குபவர் யோகியாம். உடுபதி-நட்சத்திரங்களின் நாயகன் சந்திரன்.ஆறுமாநிலம்-ஆறு ஆதாரம்.மாருதம்-காற்று.
அக்கரம் அநாதியல்ல ஆத்துமா அநாதிஅல்ல
புக்கிருந்த பூதமும் புலன்களும் அநாதிஅல்ல
தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அநாதிஅல்ல
ஒக்கநின்று உடன்கலந்த உண்மைகாண் அநாதியே-சிவவாக்கியர்-399
அட்சரம் ஆகிய எழுத்து ஓசையும், ஒளியும், உயிரை இயக்கும் ஆத்மாவும், பஞ்சபூதங்களினால் தோன்றிய ஐந்து புலன்களும், வேதம் முதலிய நூல் கருத்துக்களும், சதாசிவம் என்ற கடவுள் உண்மையும் அநாதிகளாக அப்பால் இல்லை. பிறந்தபோதே நம்முடன் தோன்றி உரிய காலத்தில் நமக்கு உரிய காலத்தில் வெளிப்பட்டன. நாம் பிறக்கும் போது நம்மிடம் நமக்காக பிரபஞ்சத்திலும் இவை இருந்து கலந்தன எனவே அநாதியல்ல.
அகரம் ஆனது அம்பலம் அநாதியானது அம்பலம்
உகரம் ஆனது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகரம் ஆனது அம்பலம் வடிவானது அம்பலம்
சிகரம் ஆனது அம்பலம் தெளிந்ததே சிவாயமே-சிவவாக்கியர்-406
அ. உ. ம் என்னும் ஓங்காரத்தின் உறுப்பு எழுத்துக்களாயும், அநாதியானதும், உண்மையாய் இருப்பதும், புலனாகும் வடிவம் உடையதாகவும் சிவனைக் குறிக்கும் சி ஓசையுமாகவும் பிரபஞ்சமான அம்பலமாகவே உள்ளன. ஒரு மையப் புள்ளியை யோகம் மூலமாக தியானித்தால் பிரபஞ்சம் வசமாகும்.
மடை திறக்க வாரியின் மடையில் ஏருமாறுபோல் 
உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றியே-சிவவாக்கியர்-439
வயலின் கால்வாயில் நீரைப் பாய்ச மடையில் ஏறிமிதிப்பர். தண்ணீர் அவ்வப்போது பாயும். அது போன்றே சுழுமுனையை நினைத்து மூலக்கனலை உயர ஏற்ற வேண்டும். மேலே போவது பிராணன், வாயு, நெருப்பு மூன்றிற்கும் இயல்பு. அதனால் மூலநாடியை ஏற்றுவதற்கு வாய்ப்பாக நினைத்தால் போதுமானது.
சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லீரேல்
சோதிவந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடும்
ஆதிசக்ரந்தனில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன்
பேதியாஅது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே-சிவவாக்கியர்-443
உமக்கு உள்ளே சோதியாக இருக்கும் இறைவனை தெளிந்து நோக்குவீராகில் அந்த சோதி உனக்குள் உதிக்கும். துரியா தீதம் என்ற பிரக்ஞை இல்லாத சமாதி நிலையும் உடன் தோன்றும். ஆதி சக்கரமாகிய மூலாதரம்வரை அமிர்தம் ஊறி வருதலே தீர்த்தம் ஆடுதலாகும். கடவுளும் நீயும் வேறு வேறு என பிரிக்காமல் பிராணாயாம நெறியை உணர்க.
உந்திமேலே நாலுமூன்றும் ஓம்நம சிவாயமே
சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
முந்தவந்த தம் முளே மூலநாடி ஊடுபோய்
அந்திசந்தி அற்றிடம் அறிந்து உணர்ந்து பாருமே-சிவவாக்கியர்-466
உந்திக்கும் மேலே ஓர் ஒலிக்கு 2விரல் அளவில் 12விரல் அளவு உயரம் ‘ஓம்நமசிவாய’ என்று சொல்லிப் பழகினால் உச்சி வெளி உணர்வு பெற்று சந்தியா வந்தனத்தைவிட அதிக பயன் கிடைக்கும். சுழுமுனை நாடியின் உள்ளேபோய் அந்தி உதயம் முதலான சந்திகள் இல்லாத இடத்தின் நிலையை அறியலாம்

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ-சிவவாக்கியர்-494
கல் ஒன்றை நிறுவி அதைத் தெய்வம் என்று நினைத்து சில பூக்களை அதன்மேல் இட்டு சுற்றிவந்து மந்திரத்தை முணுமுணுப்பதால் நட்டதொரு கல் பேசாது கடவுள் நம் உள்ளே இருப்பதால். கறியைச் சமைத்த சட்டுவம் அக்கறியின் சுவையை உணராது. அது வழி படுவதற்குரிய கருவியே ஆகும்.
நானும் அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன்
வானில் உள்ல சோதி அல்ல சோதிநம்முள் உள்ளதே
நானும் நீயும் ஒத்தபோது நாடி காணலாகுமோ
தான தான தந்தான தாதனான தானனா-சிவவாக்கியர்-495
நானோ, நீயோ, கடவுளோ என சோதியின் காரணத்தை தேட வேண்டாம். வானில் உள்ள சோதியல்ல. நமக்குள்ளேயே உள்ள சோதியது. நீவேறு நான் வேறு என எண்ணாமல் எல்லோருள்ளும் அச்சோதி உள்ளது என ஒத்துக் கொள்ளும் போது தானாகத் தெரியும்.
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான்
நல்லது என்ற போது அது நல்லதாகி நின்றபின்
நல்லது அல்ல கெட்டது என்றால் கெட்டது ஆகும் ஆதலால்
நல்லது என்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே-சிவவாக்கியர்-496
நல்லது கெட்டது என்று வேறு வேறாக எதுவும் இல்லை. நடுவில் ஒன்றுதான் உள்ளது. நல்லது என்று நாம் நினைப்பது நல்லதாகவும் கெட்டது என நாம் நினைப்பது கெட்டதாகவும் நிற்கும். எனவே நல்லது என்ற முடிவுடன் இறைவன் நாமத்தைச் சொல்ல வேண்டும். நினைவு எண்ணம் நம்பிக்கை எல்லாம் எப்படி இருக்கின்றனவோ அப்படியே நடக்கும் என்பதால் இறைவன் நாமத்தைச் சொல்லி நல்லதாக எண்ணுக.
கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும்
சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும்
வெட்டவெளியது அன்றி மற்றுவேறு தெய்வம்இல்லையே-சிவவாக்கியர்-504
கட்டை, கல், மட்டை, மஞ்சள், சட்டை, சாணி ஆகியவற்றால் வடிவு அமைக்கப்படும் எல்லாத் தெய்வங்களும் வெட்ட வெளித்தெய்வம் சக்தியேயன்றி வேறில்லை.
அகப்பேய் சித்தர்

ஆறு தத்துவமும்- அகப்பேய் ஆகமம் சொன்னதடி
மாறாத மண்டலமும்- அகப்பேய் வந்தது மூன்றடியே
பிருதிவி பொன்னிறமே- அகப்பேய் பேதமை அல்லவடி
உருவது நீரடியோ- அகப்பேய் உள்ளது வெள்ளையடி
தேயு செம்மையடி - அகப்பேய் திடனடி கண்டாயே
வாயு நீலமடி- அகப்பேய் வான்பொருள் சொல்வேனே
வானம் அஞ்சடியோ- அகப்பேய் வந்தது நீகேளாய்
உனது ஆகாதே- அகப்பேய் உள்ளது சொன்னெனே. 
நிலமாகிய மூலாதாரம்- பொன்னிறம், நீராகிய சுவாதிட்டானம்- வெள்ளைநிறம், தீயாகிய மணிபூரகம்- செம்மை நிறம், வாயுவாகிய அநாகதம் நீலநிறம், ஆகாயமாகிய விசுத்தி- புகைநிறம் என்பதாகும். பிரம்ம மண்டலம், விஷ்ணு மண்டலம், ருத்ரமண்டலம் என்ற 3 மண்டலங்களுக்கும் இரண்டு இரண்டாக ஆறு ஆதாரங்களையும் கொள்க.
இடைக்காட்டுச்சித்தர்

அண்ணாக்கை யூடே அடைத்தே அமுது உண்ணேன்
அந்தர தலத்தை அப்போதே எண்ணேன்
விண்ணளும் மொழியை மேவிப்பூசை பண்ணேன்
மெய்ஞ்ஞானம் ஒன்றுஅன்றி வேறுஒன்றை நண்ணேன்
ஓம் எனும் மந்திரத்தை ஓதினால் அமுதம் உண்டு மெய்ஞானத்தையும் பரம்பொருளையும் அடையலாம். உண்ணேன்-உண்ணுக, பண்ணேன்-பண்ணுக, எண்ணேன்-எண்ணுக,நண்ணேன்-நண்ணுக என பொருள் கொள்க.
பாம்பாட்டிச் சித்தர்

காயக்குடத்திலே நின்ற பாம்பைக் கருணைக் கடலிலே தியங்க விட்டு
நேயச் சுழுமுணை நீடுபாய்ச்சி நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி
மாயப்பெருவெளி தன்னில் ஏறி மாசற்ற பொருளினை வாய்க்கத்தேடி ஆயத்துறை 

கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே
உடம்பகிய குடத்தின் அடியில் உள்ள குண்டலினி சக்தியாகிய பாம்பைக் கடவுளின் கருணையினால் பெற்று சுழுமுனையில் நீண்டு போக அனுப்பி நிலையான பரம் பொருளைத்தேடி உச்சிப் பெருவெளியில் ஏறி தடையாக உள்ள கிரந்தி முடிச்சு யாவற்றையும் கடந்து பாழான வெளியில் ஆனந்தம் அடைந்தோம் என ஆடு பாம்பே என்றார்.
பத்திரகிரியார்

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம். 
ஆங்காரமாகிய கோபம் முதலியவற்றை அடக்கி அன்பு மிகக் கொண்டு ஐந்து புலன்களை தலையெடுக்காமல் செய்து சமாதி நிலையடையலாம். தூங்குவது போலிருந்தாலும் தூங்காமல் இருந்து சுகம் அடைவது ஆகும். ஆங்காரம்- அகங்காரம்.
ஆதார மூலத்து அடியில் கணபதியைப்
பாதாரவிந்தம் பணிந்து நிற்பது எக்காலம்
மண்வளைந்த நாற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்
கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம்
அப்புப் பிறைநடுவே அமர்ந்திருந்த விட்ணுவை
உப்புக் குடுகையுள்ளே உணர்ந்து அறிவது எக்காலம்
வாயு அறு கோணத்தில் வாழும் மகேச்சுரனைத்
தோயும்வகை கேட்கத்தொடங்குவதும் எக்காலம்
வட்ட வழிக்குள்ளே மருவும் சதாசிவத்தை
இட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்
உச்சிக்கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி எக்காலம். 
மூலாதாரத்தின் அடியில் கணபதி, நாற்கமல நடுவில் பிரம்மா, சுவாதிட்டானப் பிறை நடுவே திருமால், மணிபூரகத்தில் ருத்திரன், அநாகதத்தில் மகேச்சுவரன், ஆக்ஞையில் சதாசிவம், உச்சிக்கும் புருவ நடுவுக்கும்மிடையில் குருவின் பாதம் என வழிபடவும்.
தோலேணி வைத்துஎறித் தூரநடந்து எய்க்காமல்
நூலேணி வைத்து ஏறிப் போக்குவது எக்காலம் 
உடம்பு பகுதியகிய தோலின் வெளித்தோற்றத்தை வைத்து யோகம் செய்யாமல் உள்முகமாக நூலில் செய்த ஏணிபோல் நாடிகளை நினைத்து யோகம் செய்யவும்.
உதயச் சுடர்மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி
இதயத் திருநடனம் இனிக்காண்பது எக்காலம்.

உதயச்சுடர்- சந்திரன், சூரியன், அக்னி ஆகிய ஒளியாக இடா, பிங்களா, சுழுமுனை நாடிகளில் உணர்வு ஏற்றுவதே உள்வீட்டில் ஒளி ஏற்றுவது என்றார்.
பட்டினத்தார்

மூக்குமுனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே. 
கேசரி யோகம் என்னும் மூக்கு முனையைப் பர்த்து மரணத்தை வெல்ல யோகம்செய்க.
முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்டதீ மூள்கவே. 
சிவன் முன் நெற்றிக்கண்ணால் முப்புரத்தை எரித்தார். அனுமன் பின்னால் வைத்த தீ தென் இலங்கையில் எரிந்தது. தாயார் தந்த தீ நீ பிறக்கும்போதே மூலாதாரத்தில் உள்ளது. இம்மூன்றும் இயற்கைத் தீ. நான் அன்னைக்கு இட்ட தீ செயற்கையானது.
குதம்பைச் சித்தர்

வெட்ட வெளிதன்னை மெய் என்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி
தலைக்குமேல் உள்ள வெறும் வெளியை மெய்யான பொருள் என நம்பி இருப்போர்க்கு பிறர் கூறும் அடியாள வார்த்தைகள் தேவையில்லை.
ஆதார மன் அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி குதம்பாய் வாதாட்டம் ஏதுக்கடி
அடியாகிய மூலாதாரம் முதல் முடியாகிய ஆயிரம் இதழ்த் தாமரை வரை ஒளித்தூணாக இருப்பதைக் கண்டவர்கள் வாதாடத்தேவையில்லை.
தந்திரமான தலம்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி குதம்பாய் மந்திரம் ஏதுக்கடி
வழிபடும் முறை,பக்தியோகம்,ஜெபம்,தவம் ஆகியன தந்திரம் எனப்படும், இதைச் சரியாக செய்தலே மந்திர யோகம் செய்வதாகும். 
உச்சியில் சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பு இங்கு ஏதுக்கடி குதம்பாய் இச்சிப்பு இங்கு ஏதுக்கடி 
உச்சியில் ஏறி உயர்வெளியைப் பார்த்தபின் அவர்கள் இவ்வுலகில் விரும்பக்கூடியது ஏதும் இல்லை.
அந்தரம் தன்னில் அசைந்தாடும் முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய் தந்திரம் ஏதுக்கடி
உச்சிக்குமேல் உள்ள வெளியில் அசைவதைக் கண்டு சமாதியிலிருக்கும் ஜீவன் மூத்தர்களுக்கு சடங்கு சம்பிரதாய தந்திரங்கள் தேவையில்லை.
முக்கோணம் தன்னில் முளைத்த மெய்ஞ்ஞானிக்குச் 
சட்கோணம் ஏதுக்கடி குதம்பாய் சட்கோணம் ஏதுக்கடி
மூலாதார முக்கோணத்திலோ மணிபூரக முக்கோணத்திலோ தொடங்கி மேல் நோக்கி யோகம் செய்வோர் அறு கோணமாகிய மார்பு நடுவில் தொடங்க வேண்டியது இல்லை.
வேகம் அடங்கி விளங்கும் மெய்ஞ்ஞானிக்குச் 
யோகம்தான் ஏதுக்கடி குதம்பாய் யோகம்தான் ஏதுக்கடி 
மனத்தின் வேகம் அடங்குவதே யோகம் அது அடங்கிய பின் வேறு யோகம் வேண்டாம்.

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால்ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப்பால்ஏதுக்கடி
மாங்காய்போல் தோற்றம் தரும் இதயத் தானத்திலே உள்ள உள் உணர்வை மாங்காய்ப்பால் என்றார். மலை-தலை. தேம்-தேன். தேன் போல் இனிக்கும் காய்கனியும் பாலும் அவர்களுக்கு தேவையில்லை.
அழுகணிச்சித்தர்

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை அம்பாக்கி
மந்திரத்தேர் ஏறியல்லோ மான் வேட்டை ஆடுவதற்கு
சந்திரரும் சூரியரும் தாம் போந்த காவணத்தே
வந்து விளையாடியல்லோ என்கண்ணம்மா
மன மகிழ்ந்து பார்ப்பது ஒன்றோ.
புருவத்தை வில்லாக்கி, ஐந்து எழுத்து மந்திரத்தை அம்பாக்கி அது போகும் வேகம் தேராகி அகங்காரமாகிய மான் வேட்டையாட சந்திர சூரிய நாடிகள் உடம்பில் உதவி புரியும்.
கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன் புதுமை மெத்த உண்டு
கண் மூக்கு என்ற முன்பக்க எல்லையும் காதோரம் முதல் மேல் வரை இடம் வலமாகவும், தலைக்குப் பின்பக்கமாகவும் நினைவைச் செலுத்தி மையத்தில் உள்நாக்குத் துளைவழியாக உணர்வைச் செலுத்தி ஒளியை உணர்ந்தால் புதுமைகள் வெளிப்படும்.
மாணிக்கத்து உளொளிபோல்-ஆத்தாடி
மருவி இருந்தாண்டி 
அந்த சுழுமுனையை நோக்கும்போது உள் ஒளியானது மாணிக்கம் போலிருக்கும்.
உச்சிக்கு நேரே உண்ணாக்கு மேல்நிதம் நிதம் வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ளவிளக்கு வாலையடி அவியாமல்எரியுது வாலைப்பெண்ணே
உள்நாக்கு முதல் உச்சிவரை எப்போதும் ஒளி தோன்றுவதை வாலைப் பெண் அருளால் எரியும் விளக்கு அது என்றும் அவியாது எரியும்.
அகத்தியர் ஞானம்

கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து 
குருபாதம் இருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாமல் ஒரு நினைவாய்க் காக்கும்போது
நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டி ஊதே. 
பிராணாயாமத்தின் மூலம் சுழுமுனையில் மூலாக்னி மேலே ஏறும். எட்டிதழ் தாமரை ஆக்ஞை மேல் குருபாதம் உள்ளது. அதுவும் நாழிதழாகிய மூலாதாராமும் ஒன்றாகுமாறு இணைக்கும் சுழுமுனை நாடியில் மனம் வைத்து பிராணாயாமம் செய்தால் யோக சித்தியாகும்.
விண்ணின் விண்ணுக்குள் அண்ணாக்கு அப்பா
மதிரவியும் பூரணமும் கண்வாய் மூக்கும்
மகத்தான செவியோடு பரிசம் எட்டும்
பதிய இடம் சுழுமுனை என்று அதற்குப் பேராம்
பகருவார் சோர்க்கமும் கைலாசம் என்றே
புரியட்டகம் என்பதே மனித உடலின் அடிப்படையாகும். அவை ஐந்து புலன்களுக்கும் உரிய தன்மாத்திரைகளும், சூரிய சந்திரர் கடவுள் அல்லது ஆத்மா ஆகியவை புரியட்டகம் என்னும் எட்டாம். அவை சுழுமுனை நாடியில் பதிந்து உண்ணாக்கை ஒட்டி போகிறது. அது இந்திரயோனி என்பர், இதை சொர்க்கம் கைலாசம் செல்லும் வழி என்பர்.
வால்மீகர் ஞானம்

நாக்குவாய் செவிமூக்கு மத்திக்கு அப்பால்
நடுவீதி குய்யம்முதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
தாயாரைப் பூசித்து வேதம் ஓது
வாக்குவாய் அசையாமல் மவுனம் கொண்டு
வாசிவரும் இடத்தில் மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியோடு மனம் தான் புக்கு
நினைவதனில் அடங்கிவரும் வரிசை காணே. 
நடுவீதி- மூக்கு, செவிகளின் இருதுருவம் சந்திக்கும் நேர்கோடு. குய்யம்- மூலாதாரம் இருக்கும் உடலின் கீழ்ப்பகுதி. வாசிவரும் இடம்- பிராணன் மூலாதாரத்தில் இருந்து சுவாசத்தை இயக்குவதை உணர்தல். வாய், மூக்கு, செவி இவைகளுக்கு நடுவே உண்ணாக்குமேல் ஒளிபடரும் வழியே மனம் செலுத்தி மூலம் முதல் உச்சந்தலைவரை உணர்வை மூட்டுமாறு பராசக்தியை வணங்கி வேத மந்திரம் ஓதுவாயாக. வாயிலிருந்து நாக்கு வெளிப்பட்டமலும் அசையாமலும் மௌனமாக வாசியாகிய பிரணாயாமம் தொடங்கும் இடத்தில் கருத்தைச் செலுத்தும்போது நம் நினைவு மெல்ல மெல்ல அடங்கிவரும்.நடுவீதியாகிய சுழுமுனை நாடியில் மூலாதாரம் முதல் வாயுவை நிறுத்துக. தாய்த் தெய்வத்தைப் பூசித்து மவுனம் கொள்க
இராமதேவர்

ஆதி என்ற மணி விளக்கை அறிய வேணும்
அகண்ட பரி பூரணத்தை காண வேணும்
சோதி என்ற துய்யவெளி மார்க்கம் எல்லாம்
சுகம்பெறவே மனோன்மணியாள் ஆத்தாள் தன்னை
நீதிஎன்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிர்குணத்தின் நின்ற நிலை யாரும் காணார்
வேதி என்ற வேதாந்தத்து உள்ளே நின்று 
விளங்கவரு பூசையிது வீண் போகாதே.
பிறந்தபோதே உடலில் தோன்றியிருக்கும் மணிவிளக்கு ஒளியை அறிய வேண்டும். அது பிரபஞ்சம் முழுவதும் விரிந்த பரிபூரணத்தை காண்பதாகும். வெளியில் தோன்றும் சக்தி மனோன்மணியாகிய சக்தி. படிப்படியாக உணரத்தக்க பரஞ்சோதியின் பராசக்தி பாதமாகும். நிர்க்குணமுடைய பரம்பொருள் நிற்கும் நிலை இது. வேதாந்தம் தெரிந்தவர் இதைக் காண்பர். அதுவே பூசை செய்வது ஆகும்.
தானென்று மூலமுடன் சித்தி பண்ணு
தனதான நூற்றெட்டுக்குள்ளே சித்தி
ஆனென்ற அண்டர்பதி எட்டும் ஆடும்
அறுபத்து நால்மூலி எல்லாம் ஆடும்
கோனென்ற கோடிவித்துக் கணக்கில் ஆடும்
குண்மாக ரேவதிநாள் செய்ய நன்று
வானென்ற அட்டமில் செய்ய நன்று
வளர்பிறயில் செய்தானே யோகியாமே.
ஆத்மா மூலாதாரத்தில் இருப்பதாகப் பாவித்து யோகம் செய்க. அது முதல் 108 விரல் முடிய உபாசாந்தம் வரை யோகம் செய்தால் யோக சித்தி பெறலாம். எட்டு திசை அண்டப்பதி இதற்குள் அடக்கம். காயகல்ப மூலிகை 64 இன் பலன் இதுவே. கோடி சித்துக்கள் கொண்ட தலைமை பெறலாம். ரேவதி நாளில் செய்க.அல்லது வளர்பிறை அட்டமியில் தொடங்கி செய்க.
திரிகோணச் சித்தர்:- 
சிவனே பரமகுரு தேசிகனே பாதம்
அவனே அனுதினமும் ஆகும்-நவநீத
பொன்பூத்த நீலப்புயல்வண்ணனும்பொறிவாய்
மின்பூத்த நான்முகனா வேதாவும்-தென்பூத்த
செக்கச்சடையானும் தேசுபெற வேயுருவாய்
ஒக்கத் தனிவந்து உதித்தபிரான்-தர்க்கமிடும்
வேதமும் சாத்திரமும் வேண்டும் பலசமயம்
பேதமும் காணாப் பெருஞ்சமயம்-நாதத்தில்
ஓசை அடங்க ஒளியும் பரமனையில்
ஆசை அடங்க அனுபவிப்போன் பூசைபுரி
தொண்டர் இதயச் சுனைமடலில் வேரூன்றி 
விண்ட நறைக்கமல மெல்லடியான் எண்திக்கும்
தினமும் பரமகுரு தேசிகனாகவும் சிவனாகவும் இருக்கும் அவன் பாதம் பணிக. நவநீதம்- வெண்ணெய் தின்ற வாய் உடைய நீல நிறமான திருமாலும், பிரம்மனாகிய நான்முகனும், சிவந்த சடை கொண்ட உருத்திரனும் ஆகிய மும்மூர்த்திகள் கூடிச் சென்று உதித்தவனாகிய குரு, தர்க்க சாத்திரம், வேதாந்தம், பல சமயங்கள் ஆகிய வற்றால் பேதம் காணாத பெரும் சமயமாய், நாதத்தின் ஓசை உடலில் அடங்கும் இடம் கண்டு, அது கடவுள் இருக்குமிடம் என உணர்ந்து அங்கு யோகம் செய்து ஆசையை விட்டு அனுபவிப்பவன். தொண்டர்கள் இதமாகிய சுனையில் வேரூன்றி மலர்ந்த வாசம் மிகுந்த தாமரைத் திருவடி கொண்டவன்.
சாதியான் தோன்றும் சமரச மாயிருந்து
பேதியான் வஞ்சம் இலாப் பேதைமையான்-ஆதி
முதலாய் நடுவாய் முடிவாய் முடிந்து
சிதலாய் வெளியொளியாஞ் சென்மம்-சதகோடி
சத்தியும் மந்திரமும் தானாக்ப் பாவித்து
முத்தி கொடுக்கும் முழு முதல்வன்-சுத்திய
செஞ்சடையான் யோகநிலை தேர்ந்து தனைக்குறியார்
நெஞ்சடையான் பிஞ்சுநிலாச் சடையான்-நஞ்சார்ந்த
கண்டத்தான் தேடரிய காட்சியான் பல்கோடி
அண்டத்தான் சோதி அருவுருவான்-முண்டகச்செம்
போதம் கடலும் பொருப்பும் விருப்பாகிச்
சூதுபுரி மூன்று தொழிலுடையோன்-ஓதும்
எங்குமுள்ள சாதிகளுக்குள் சமரசம் காத்து வேற்றுமையை நீக்கி வஞ்சமிலாது அறியாதுள்ளான். ஆதியாகவும் முதல் நடு முடியாகவும் எங்கும் பரவி வெளியில் பரவும் ஒளியாகியவன், சதகோடி சக்தியும் மந்திரமும் தான் என்றே பாவித்து முத்தியை வழங்கும் முழுமுதல்வன், சுற்றியசடைக்கோலம் கொண்டவன், யோக நிலையில் தெளிவடையாது தன்னை நினைக்காதவர் நெஞ்சை சேராதவன், பிற நிலவைச் சடையில் வைத்தவன். நஞ்சுண்ட கண்டன், தேடமுடியாத காட்சியுடையவன், பலகோடி அண்டங்கள் உடையவன், சோதியாகிய அரு உருவமானவன். தாமரைப் பாதத்தில் ஞானம் தருபவன், கல், மலைகளில் விரும்பி இருப்பவன், ஆக்கல் காத்தல், அழித்தல் ஆகிய தொழில்கள் செய்பவன்.
சரியை கிரியை தவ்யோக ஞானம்
தெரிய அமைத்த சிவ சித்தன்-துரியத்தில்
தோத்தி அணுவாய்த் திகழும் சுடரொளியாய்த்
தேத்தியுரு வாகவந்து சென்மிப்போன்-சாத்தரிய
முக்குணமும் ஐம்பொறியும் மும்மலமும் உண்டாகி 
எக்குணமும் தானாய் இருந்தருள்வோன்-அக்கரமாம்
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் எங்கும் பிராணவமாய்க்-கொஞ்சப்
பொருளாய் மருளாய்ப் புரையாய் உரையாய்
அருளாய்த் தனியிருந்த ஆனந்தன்-இருளாத
காட்சியான் கண்டவர்க்குக் காணாத பேர்க்கு உருவும்
சூட்சியாய் நின்ற தொழிலாளி-ஆட்சி
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு படிகளில் பயிற்சியடைந்தவர் தெரியுமாறு உள்ள சிவனாகிய சித்தன். தூங்காமல் தூங்கலாகிய யோக நிலை துரியத்தில் தோன்றி அணுவாகவும் திகழும் சுடர் ஒளி ஆகவும் தெளிவாக உருவமும் கொண்டு தோன்றுபவன். சொல்லுவதற்கு இயலத மூன்று குணங்களும் (சத்துவம், ராஜஸம், தாமசம்). ஐந்து பொறிகளும், மூன்று மலங்களும் (சஞ்சிதம், ஆகாமியம், கன்மம்) உள்ள உயிர்களுக்கு எல்லக் குணமும் உடையவனாகத் தோன்றுபவன். சிவாயநம எனும் ஐந்து எழுத்தாய், ஓம் நமோநாராயணாய எனும் எட்டு எழுத்தாய் ஐபத்தொரு எழுத்தாய். பிஞ்செழுத்தாகிய ஓரெழுத்து பீஜங்களாய் பிரணவமாகிய ஓம் எழுத்தாய் உள்ளவன். சிறுபொருளாய், அறியமுடியததாய், உவமையாய், உரைபொருளாய், அருளாய், தனியாக இருக்கும் ஆனந்த மயமானவன். காட்சி வடிவில் தவத்தினர்க்குக் காணப்படுபவன். காணமுடியாதவர்க்காக உருவ மேனியில் வணங்கப்படுபவன். இப்படி சூட்சியாய் இருக்கும் தொழிலும் உடையவன்.
இடைபிங் கலைசுழியினை எட்டாமல் மூலக்
கடையில் நடக்கும் கழலுடையோன்-விடையேறும்
பாசன் குடிலைப் பராசக்தி வீட்டிலுறை
ஏகன் பிறப்பிறப்பு ஒன்று இல்லாதான்-யோகன்
சிறியன் பெரியன் சிவன் கருப்பன்
குறியன் நெடியன் எனக் கூறாதான்-பொறிகலந்த
பாசத்தான் பாசக் கட்டை அறுத்தவர்க்கு
மாசத்தான் சோதிமணி மண்டலத்தான்-நேசத்தான்
பொய்யர்க்குப் பொய்யன் பொருந்தி உளந்தோறும்
மெய்யர்க்கு மெய்யாய் வெளிநின்றோன்-ஐயன்
உருவும் அருவும் ஒளியும் வெளியும்
கருவும் கடந்தன மாயன்-குருவாகித்
இடா பிங்களா இரண்டு நாடிகளிலும் சுழுமுனையிலும் எட்டாதபடி மூலாதாரத்தில் திருவடி கொண்டவன். காளை வாகனத்தில் ஏறும் குடிலை-நாதம் இருக்கும் பராசக்தி வீட்டில் தனியானவனாய் பிறப்பும் இறப்பும் இன்றி இருப்பவன். குறுகிய வடிவமும் விசுவாசமாகிய பெரிய வடிவமும் சிவப்பு கருப்பு நிறவடிவமும் குட்டை நெட்டை உயரம் என்ற பல வற்றில் தனக்குரியது எது எனக் கூற இயலாதவன், பக்தியாகிய பாசம் உடையவன், உலகினர் பாசக்கட்டை அவிழ்த்து மாசின்றி செய்பவன், சோதியான மாணிக்க மண்டலம் உடையவன். பொய்யர்க்கு பொய்யாக இருந்து உள்ளங்கள் யாவற்றிலும் மெய்யுடையார்க்கு மெய்யாய் இருந்து வெளியில் நிற்பவன். உரு அரு ஓலி வெளி ஆதாரமாகிய கரு எல்லாம் கடந்து கனமாய் உள்ள மாயமானவன்.
தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கியுரு
மாத்தித் தனதுவசம் ஆக்கியே-சாத்தரிய
மானிடச் சட்டை வடிவெடுத்த மாயோகி
யானிடப முந்தும் அருள் ஆனந்தன்-தேனடர்ந்த
செங்கமலத் தோற்கு அரிய தேவன் அடியவர்கள்
அங்கமலத் தேயுறையும் ஆனந்தன்-எங்கள்குரு
நேசிக்கும் அன்பர்துயர் நீக்கி நிலைபெறவே
யாசிக்கும் எங்கள் குரு ஆனந்தன்-பூசிக்கும்
பொன்மலைக்கும் வெள்ளிப் பொருப்புக்கும் பொற்புடைய
கன்மலைக்குந் தானே கடவுளாய்-பன்மலைக்கும்
எட்டாச் சிகரம் எழுத்துக் கொழுந்தோட
மட்டமான ஓங்கார வன்மலையான்-கட்டாகத்
பழைய அடியார்களின் வினைகளை நீக்கி அவர்கள் துன்ப உருவை மாற்றித் தன்வசம் ஆக்குபவன், மானிட உடம்பாகிய குரு வடிவு தாங்கிய பெரும் யோகியாவான். அவனை நினைக்கும்போது முன்னதாக நந்தி அருள் கிடைக்கும். அவன் ஆனந்தம் தரும் குருவாவான். பிரமன் முதலிய தேவர்களுக்கு அரியவன், அடியவர் உள்ளத் தாமரையில் வாழும் இன்ப வடிவினன். அன்பு கொள்வார் துயரத்தை நீக்கி நிலையாகச் செய்யும் எங்கள் குருவாகிய ஆனந்தன். பொன் மலையாகவும் வெள்ளிமலையாகவும் காட்சி தரும் கைலை மலை முதலிய பலமலைகளிலும் வாழும் கடவுள். மலைகளில் எட்ட முடியாத நாதம் எழுந்து தொடரும்படியான ஓங்காரமாகிய வலிய மலையான்.
தேடும் அடியார்கள் சின்னம் துகளறவே
ஆடுஞ் சிவகருணை ஆற்றினான்-நாடுதவம்
பண்ணும் அடியார் பழவினைபோய்ப் பாதமலர்
நண்ணும் மொழியிற் பேரின்பம் நாட்டினான்-எண்ணும்நிறை
கற்புடையான் என்னக் கலங்காத நெஞ்சுகொண்ட
பொற்புடைய காயா புரிநகரான்-அற்பவிசை
வண்டு தொடாமல் மது ஒழுகி வாய்ந்தாறைக்
கொண்டு மணத்த குணமலையான்-துண்டத்
தரமே கரமாய் ஒருநாளும் ஓயாச்
சரமே முழங்கும் தவத்தோன்-கரமெடுக்கும்
தொண்டர் பலபகைச் சூறைகொள வேணும் எனக்
கொண்டதவ வேடக் கொடியினான்-சண்டமிகும்
தேடிடும் அடியார்கள் மனத்தில் கருதிய வடிவுகள் நீங்கிடத்தானே நடனமாடிக் கருணை புரிபவன். தவம் செய்வோரின் பழைய வினைகள் போய் அவன் பாதமலரில் இன்பம் அடையுமாறு செய்வான். நினைப்பதால் கிடைப்பது எனத் தவறாத நிலையை உடையவன், கலக்கம் தோன்றாத நெஞ்சுடையான், பொலிவுடைய காயாம்பூ போலும் நிறமுடைய நகரில் உள்ளவன். வண்டுகள் மொய்க்காததால் தானே தேன் வெளிப்பட்டு ஆறு தாமரைகளையும் மலர்ந்து மணம் வீசச் செய்பவன். தான் எங்கும் விட்டுவிட்டுத் தோன்றுவதால் என்றும் ஓயாது சஞ்சரிக்கும் தவமானவன். தொண்டர்கள் தம் பகையை நீக்குமாறு வேண்ட தவ வேடத்தையே கொடியாகக் கொண்டவன்.
சமையப் பகை துடைத்துச் சாதிமுறை எல்லாம்
குமைய மிதித்துக் குளப்பி-அமையாத
ஆணவத்தை வேரோடு அறுத்து விழுத்தாட்டி
நாணமுற்ற பாகம் நறுக்கியே-காணத்
தொடர்ந்த கிளைநிகழச் சூரைபட வீசி
அடர்ந்தமக வாகைக்கு அடங்காப்-படர்ந்ததெரு
வீதியும் அம்பலமும் மிக்கதொரு சாதிகட்குப்
பூதிப் பொடி அணிந்து பொய்மிதித்துக்-காதிச்
சினக்குறும்பை வாரிச் சிதறித் திரட்டி
மனக்குறும்பைப் பற்றி வளைத்து-உனக்கென்
ஓது குறும்பை உழக்கி எமராசன்
தூதனைப் பாய்ந்து துரத்தியே-தாது செறி
பல சமயங்களின் பகைமையை நீக்கிச் சாதி முறைகளை எல்லாம் மிதித்துச் சமம் செய்து, ஆணவத்தை வேரோடு அறுத்து விழுதுபடாது பாகங்களைத் துண்டித்தவன். தொடர்ந்த இடமெல்லாம் ஆணவத்தின் கிளைகளை வெளிப்பட வீசி வாகை பெற வைப்பான். வீதிகளிலும் அம்பலத்திலும் நிறைந்த பல சாதியர்க்கும் விபூதி அணிந்து பொய்ய நீக்கியவன். கொடிய குணமாகிய சினத்தின் பற்றை அறுத்து மனத்தின் கெட்ட செய்கைகளை முழுதும் வளைத்து நீக்கி, எல்லாக் குணக் கேடுகளையும் நீக்கி எமனின் தூதனை உயிர் கவராமல் துரத்தியவன்.
அஞ்ஞான மோகம் அறுக்கும் அனுபோக
மெய்ஞ்ஞான மோனமத வேளாத்தான்- பைநாகம்
நெட்டுடலை மாறி நெருக்கிப் பரிபடுத்திக் 
கட்டும் இசைக்கும் கடிவாளந்-தொட்டுத்
திசைவாயு என்னுஞ் சின்னூல் அகப்பட்டுக்
குசையால் இறுக்கிக் குணப்படுத்தி-அசையா
மனம் என்னுங் கல்லணையை வைத்திறுக்கி வாய்ந்த 
சினமென்னும் அங்கவடி சேர்த்துக்-கனமான
நாகபந்தஞ்சாரி நடைதுலுக்குத் தூவான
மாகமுற விட்டுள்ளடக்கிய-சோகப்
புரியட்ட காயப் பொருப்பைத் தகர்த்துச்
சரியட்ட ஐம்பொறியைத்தாண்டித்-துரியத்தில்
அறியாமையாகிய மோகத்தை அறுக்கும் அனுபோகத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் மவுனத்தையும் மேற்கொண்டு மன்மதனை வென்றவன். உடலை நெருக்கிப் பரிபக்குவம் செய்து வைக்கும் நாதத்திற்குக் கடிவாளமாய் இருப்பவன். உடலின் எல்லாப் பக்கங்களிலும் பரவும் வாயுவைச் சிறிய சொல்லால் பிடித்து அகப்படுத்திச் சுருதியோட்டும் இசையால் இறுக்கி குணம் செய்பவன். மனம் எனும் கல்லணையைக் கட்டுப்படுத்திக் கோபம் என்பதைத் தன் திருவடியில் மிதித்துள்ளவன். நாகபந்தத்தைச் சாரியாக தன் மார்பில் வரச் செய்துள்ளவன். புரியட்டமாகிய எட்டு பொருள்களால் ஆன உடம்பை கட்டுப்படுத்தியவன்.
ஓடிவிந்து நாதமெனும் உட்கோட்டை யும்கூத்து 
வாடியிடும்நாடி வரம்பு அழித்து-ஆடியிடும்
தொண்டுபரி அன்பர் தொடர் நரகில் வீழாமல்
மண்டுசினம் கொண்டெழுந்த வாசியான்கண்டுதொழும்
தன்னாணை தானே தனக்காணை யாவதன்றிப்
பின்னாணை இல்லாத பெற்றியான்-எந்நாளும்
மாறாத கீர்த்திமது மாலையான் வாய்திறந்து
சீறாத மோனச் சிவயோகி-நேராக
ஆண்டகுரு சிற்றம் பலவன் அடி அருளும்
வேண்டி வளர்த்த இருபதத்தான்-பூண்டசிவ
வேடந்தான் ஓங்கி விளங்கும் செழுங்கமல 
பீடந்தான் ஞானப் பிரகாசன்-ஆடில்
உடம்பினுள் நாதம், விந்து-களையும் அவை கூத்தாடும் நாடிகளின் எல்லையையும் அழித்து, தொண்டர்கள் தொடரும் நரகில் சேராமல் அவர்கள் கோபத்தை தன் சினத்தால் மறித்த பிராணாயாமத்தான். அவன் ஆணையே அவனுக்குண்டு, வேறு ஆணையோ விதியோ இல்லாத தன்மையன். மாறாத புகழ் உடையவன், தேனமுத மாலையான், வாய் திறந்து யாரையும் சினக்காத மோனமுடைய சிவ யோகி. நேரில் ஆண்டு கொண்ட குரு, சிற்றம்பலம் உடையவன், அருள் தரும் திருவடியான். சிவ வேடம் கொண்டவன், தாமரையிலிருக்கும் பிரமனின் பீடத்தை கொண்டவன், தெளிவான ஞானம் உடையவன்.
பரியான் உரியான் பசியான் பொசியான்
பெரியான் அரியான்பேர் இல்லான்-துரியா
தீதம் கடந்து திகழ் அம்பரம் கடந்து
போதம் கடந்து நின்ற பொற்பதத்தான்-சீதம்
கருணை ஆனந்தமுனி கண்டுதொழ வந்த 
வருணன் ஆனந்த மழைமேகம்-அருணப்
பிரகாசம் கொண்டுநின்ற பேரொளிபோல் மாயைப்
பிரகாசம் மாற்றும் பெருமையான்-இறவாத
மெய்ப்பொருளைக் காட்டி விரும்பும் அடியாரைக்
கைப்பொருளாய்க் கொண்ட கருணையான்-தூய்க்கும்
உடல்பொருள் ஆவி யுதகத்தாற் கொண்டு
சடவினையை மாற்றும் சமனன்-இடைபிங்
பரிந்து வருதலோ உரியவனாகக் காட்டுவதோ பசிப்பதோ உண்பதோ இல்லாத அவன் பெரியவனோ அரியவனோ ஆகமாட்டான். ஒரு பெயரும் இலாதவன். துரியாதீதம் கடந்து திகழும் பரம் பொருளையும் கடந்து ஞானத்தையும் கடந்து நிற்கும் பொன் அடிகள் உடையவன். கருணையும் ஆனந்தமும் கொண்ட முனிவன், யாவரும் கண்டு தொழ வந்த வருணன், ஆனந்த மழை பொழியும் மேகம். அருணனின் பிரகாசத்தைக் கொண்டு நிற்கும் பேரொளிபோல் மாயையை மாற்றும் பெருமை உடையவன். என்றும் அழியாத மெய்ப் பொருளைக் காட்டித் தன்னை விரும்பும் அடியவர்களைத் தன்கைப் பொருளாகக் கொண்ட கருணையுடையவன். உடல் பொருள் ஆவி யாவும் தன் கலையால் கொண்டு சடமாகிய இந்த வினையை மாற்றிச் சமம் செய்பவன்.
கலைசுழினைக்கு எட்டாத காட்சியான் காமம்
கொலைகளவு தீர்த்த குடோரி-அலையாமல்
ஆட்கொண்ட சித்தம் பலவன் அடிக்கமலத்து
ஆட்கொண்ட தொண்டர் தனக்கு அடியேன் ஆட்கொண்ட
தூர்த்தன் இவன் என்பர் சொல்லத் துயருஎழுந்து
பார்த்தவிடம் எல்லாம் பகையாகி-வேர்த்துக்
கலங்கி விதிர்விதிர்த்துக் கண்ணீர் ஒழுக
மலங்கிக் குருநாட்டில் வந்தேன்-துலங்குமெனக்
காயா புரிநகரைக் கண்ணுற்றேன் அவ்வூரில்
போய் ஆதரித்துப் பொருந்தினேன்-மாயாத
மாது சிவானந்த வல்லி எனப் பேரிட்டாள்
ஓதுதிரி கோணவல்லி யூர்தான்-ஆதரவாய்
கலைகொண்ட சுழுமுனைக்கும் எட்டாத காட்சியினன், காமம், கொலை, களவு தீர்த்த குடோரி- மருந்து. என்னை ஆட்கொண்ட சிற்றம்பலவனின் திருவடியில் ஆட்கொள்ளப்பட்ட தொண்டர்களுக்கு அடியவன். காமம் கொண்டவன் எனப் பலர் பேசத் துயரம் அடைந்து பார்க்குமிடம் எங்கும் பகையாகி, வியர்த்து கலக்கமடைந்து நடுங்கிக் கண்ணீர் வழிந்தோடக் கலக்க முற்று குரு நாட்டிற்கு வந்தேன். விளக்கமுறும் காயாபுரி நகரைக் கண்டேன், இங்கு ஆதிக்கம் பெற்று பொருந்தினேன். சிவானந்தவல்லி என்ற பெயர் பெற்றவளால் வெளிப்பட்டேன். பலர் புகழும் திரிகோணவல்லி எனும் ஊர் மக்களால் ஆதரிக்கப்பட்டேன்.
கொஞ்சிவளர்த்த குடிலை மகள்தனையே
மிஞ்சுசிலம் பத்தொழிற்கு விட்டாளே-ரஞ்சிதமாய்
கால்மாறியாடக் காலாதி கரணவித 
மேல்மாறிச் சுத்தி விளையாட-நூல்மாறிக்
கைலாகு பாயக் கலந்து பலசமய
மெய்வாகு தாவி அதன் மேல்மிதிக்கப்-பையப்
பரதத் தொழிலும் பலகோடி வேத 
கரதத் தொழிலும் தொகுத்து-விரதவுறை 
தென்னூல் வடநூலைத் தேர்ந்து பலகோடி
முந்நூலுந் தானே மொழிந்திட்டாள்-இந்நிலத்தில்
ஆடப் பதுமைதனை ஆட்டிவிக்க அப்பதுமை
பாடத் தொழிலும் பலகற்றாள்-நாடறிந்த
குடிலை- ஓம் எனும் பிராணவ மந்திரம் தனை நாதத்தொழிலுக்கு அவள் அனுப்பினாள். கால் மாறி-இடது வலது என பிராணயாமம் செய்ததனால் கரணங்களில் உள்ள கலைகள் மேல் உடம்பில் சுற்றி விளையாடின. பழகுவதற்கு எளிதானதில் கலந்து பல சமய மெய்களும் தாவிக் கடந்து அவற்றை நீக்கி, நடனமும் பல கோடி வேத மந்திரத் தொழிலும் தொகுத்து விரித்து, தொன்மையான வடநூலைத் தேர்வு செய்து முன்னொர் செய்த நூல் நூலாகத் தானே வெளிப்படுத்தினான். பொம்மையை ஆடுமாறு ஆட்டுவிக்க அது பாடும் தொழிலும் பலவாகக் கற்றது.
வம்பி திரிகோணவல்லி வடகிரியைக்
கெம்பூரம் எல்லாங் கிரகித்தேன்-அம்புவியில்
மின்னே எரிந்தெழுந்த மேகம்போல் மெய்குளிர்ந்து
தன்னை அறிந்து தளதளத்தாள்-பொன்னனையாள்
பக்குவத்தை நோக்கிமுகம் பார்த்துப் பரிமளிக்க
முக்குணமும் கற்ற முது கிழவி-தொக்கு அறுத்து
மின்னே அமுதம் விளைந்த மனக்கமலப்
பொன்னே உருதியுள்ள புத்திகேள்-பன்னரிய
வேத புராணர் வெறும்பிலிக்காய் உன்கமலப்
பாதம் பணிவர்முகம் பாராதே-நாதத்
துரியமணி வாசலிலே தோன்றிமுகம் சற்றே
தெரியநின்று பின்னை உள்ளேசென்று-அரிதாகச்
திரிகோண வல்லியானவள் வடக்கு மலையைப்போல் கம்பீரமாய் இருந்ததைக் கிரகித்தேன். உலகில் மின்னல் தோன்றிய மேகம் போல் மெய் குளிர்ந்து தன்னை அறிந்து தளதளத்தான். பொன்னை ஒத்த அவள் பக்குவத்தைப் பார்த்து முகத்தின் வழியே புகட்டினாள். அவள் முக்குணமும் கொண்ட வாலைக்கிழவி. மின்னல் போன்றவளே அமுதம் விளைந்த மனமாகிய தாமரையில் உள்ள திருமகளே உருதி கொண்ட என கருத்தைக் கேள். வேதம் புராண்ம் மட்டும் பயின்றவர்கள் பொய்யாக உன் திருவடிகளைப் பணிவர், அவர்களுக்கு அருள் செய்யாதே. துரிய நிலையின் தொடக்கத்தில் எதிர்ப்பட்டு சிறிதே முகம் தெரியுமாறு நின்று பிறகு உள்ளே யோகப் பயிற்சிக்காக செல்க.
சாற்றுஞ் சரியைச் சளுக்கர் உனைத்தழுவப்
போற்றுவார் அங்கவர்பின் போகாதே-ஏற்றும்
அவலக் கிரியை அசடர் உனைமேவக்
கவலைப் படுவார் கடத்திச்-சிவயோக
ஆதியர்கள் வந்துன் மலரடியைத் தெண்டனிட்டால்
பேதியாது உள்ளழைத்துப் பேசிக்கொள்-ஆதி
தவஞான மோனத் தனக்காரர் வந்தால்
அவமானம் பண்ணாது அழைத்துச்-சிவபொருளைத்
தேடாத மூடரிடம் சிக்காதே சிந்தையிலே
நாடாத வஞ்சரிடம் நத்தாதே-கோடாத
சாத்திரத் தூர்த்தர்தமைச் சாராதே தர்க்கமிடும்
கோத்திரப் பஞ்சியரைக் கூடாதே-சூத்திரப்
சரியை மட்டும் பழகியவர்கள் உன்னைப் பற்றிப் புகழ்வார்கள். அவர் பின் செல்லாதே. கிரியைப் பயின்றவர்கள் உன்னை அடையக் கவலைப்படுவர். போகாதே, சிவயோகம் பயின்றவர்கள் உன் மலரடியைத் தொழுதால் அவர்களை அந்நியமாக்காமல் உள்ளே அழைத்துப் பேசிக்கொள். தவஞானப் பயிற்சி கொண்டவர்கள் வந்தால் அவமானம் செய்யாமல் அவர்களை ஏற்றுக் கொள். சிவமாகிய பொருளைத் தேடாத மூடரிடம் சிக்காதே. சிந்தையில் இதை நாடாத வஞ்சரிடம் பரிவு கொள்ளாதே. சாத்திரம் மட்டும் படித்து வாதிடுவாரோடு சேராதே. தர்க்கம் செய்யும் குலகோத்திர பேதம் உடையவருடன் கூடாதே.
பொய்வீணர் ஆசை பொருந்தாதே புத்தகப் பேய்
மெய்வீணர் ஆசை விரும்பாதே-கையோகக்
காமத்துக்கு ஆன கலாதிவேள் நூல் கற்ற 
வாமத்தார் பால் மனது வையாதே-நாமமிட்டுப்
பஞ்சரிக்கும் பாசிப் பதப்பிலுக்கர் வந்தக்கால் 
நெஞ்செரியத் தள்ளிவிடு நில்லாமல்
சித்தக் கருவியிடம் செல்லாதே சீலமதக்
கொத்தவன் தன்னாசை குறியாதே-பற்றற்ற
மோனக் குறுப்பரசர் மோகித்தால் நீ அவருக்கு
ஆனபடியே அழைத்து விடு-ஞானப் 
பொருள்தேடும் வல்லாரைப் போற்றிப் பொருத்தி
அருளோடு நீ சென்றிடு.
பொய் வீணர்கள் ஆசையை ஏற்காதே. புத்தகப் பேய் ஆகிய மெய் வீணரின் ஆசையை விரும்பாதே. காமத்துக்கு ஆளாகி மன்மதன் நூல் கற்ற வாமாச்சரர் பக்கம் மனம் வைக்காதே. வெறும் சொற்களுக்கு மட்டும் ஆதரவு தந்துவிடும் மனிதர் வந்தால் அவர்களுக்கும் இடம் தராதே. சித்தமாகிய கருவியிடம் செல்லாதே. மதவாதிகளின் ஆசைக்கு அடிபணியாதே. மவுனம் பயின்றவர்கள் விரும்பினால் அவர்களை உன்பக்கம் அழைத்திடுக. ஞானப் பொருளைத் தேடுவோரை நீயே அவர்களோடு சேர்ந்து அருளுடன் கொள்க.
கடேந்திர நாதர் (எ) விளையாட்டுச் சித்தர்:-
ஆதிசிவ மானகுரு விளையாட்டை-யான்
அறிந்துரைக்க வல்லவனோ விளையாட்டை
சோதிமய மானசக்தி யென்னாத்தாள்-சுய
சொரூபத்து அடங்கி நின்ற விளையாட்டை
பார்தனி லுள்ளவர்க்கு விளையாட்டாய்-ஞானம்
பற்றும்வழி யின்னதெனச் சொன்னதினால்
சீர்பெறுஞ் சித்தர்களு மென்னை விளையாட்டுச்
சித்தனென்றே அழைத்தார்க ளிவ்வுலகில்.
இகபர மிரண்டுக்குஞ் சரியாகும்-இதை
இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி-முன்பு
சாற்றினார் எந்தனுக்கு ஈது உண்மையுடன்
நானென்று சொல்வதும் விளையாட்டே-இந்த
நானிலத்து இருப்பதுவும் விளையாட்டே
தானென்று அறிவதும் விளையாட்டே-பெற்ற
தாயென்று உரைப்பதுவும் 
ஆதிசிவமாகிய குருவின் விளையாட்டை என்னால் அறிந்து சொல்லமுடியாது. சோதிமயமான சக்தியாம் என் தாயின் சொரூபத்தில் அடங்கி நின்ற விளையாட்டை. உலகில் உல்லவர்க்கு விளையாட்டாகப் புரிய வைக்கவும் ஞானம் பெறும் வழியைச் சொல்ல முயன்றதால் எல்லோரும் என்னை விளையாட்டுச் சித்தர் என்பர். இகம் பரம் என்ற இரண்டு வாழ்வுக்கும் சரியானதை முன்பு பிரமமுனி எனக்குக் கூறியதை மகிழ்ச்சியுடன் சொல்கிறேன். நான் சொல்வதும் உலகில் இருப்பதும் தன்னை அறிவதும் தாயை உணர்வதும் எல்லாம் விளையாட்டே.
தாய்தந்தை கூடுவதும் விளையாட்டே-பூவில் 
தநயனாய் வந்ததுவும் விளையாட்டே.
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே-பத்து
வயது தெரிந்ததுவும் விளையாட்டே
பெற்றபிள்ளை என்றதுவும் விளையாட்டே-தந்தை
பேரிட் டழைத்ததுவும் விளையாட்டே
மற்றதை யுணர்வதும் விளையாட்டே-இந்த
வையகத்து இருப்பதுவும் விளையாட்டே.
பெண்டுபிள்ளை யென்பதுவும் விளையாட்டே-எங்கும்
பேரோங்க வாழ்வதும் விளையாட்டே
கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே- பணம்
காசுவட்டி போடுவதும் விளையாட்டே.
தாயும் தந்தையும் கூடி மகிழ்வதும் வயிற்றில் மகனாக வந்ததும் பிறகு வளர்ந்ததும் பத்து வயதில் பலவும் தெரிந்ததவும் எல்லாம் விளையாட்டே. தன்மகன் என அறிவதும் மகனுக்குத் தந்தை பெயரிட்டு அழைப்பதும் மற்றச் செய்திகள் உணர்வதும் இவ்வுலகில் வாழ்வதும் எல்லாம் விளையாட்டே. மனைவி மக்களோடு எங்கும் புகழ் பெற வாழ்வதும் பொருள் தேடுவதும் காசு வட்டியாக வளர்வதும் எல்லாம் விளையாட்டே. மாடி வீடு மனைகள் வீடு, வாசல் என்மனைவி, மக்கள் என்பதும் தேடிய பொருளூம் உலகில் திரிவதும் எல்லாம் விளையாட்டே.
ஆடுமாடு தேடுவதும் விளையாட்டே-சதுர்வேத
ஆகமநூ லாய்வதுவும் விளையாட்டே
கூடுவிட்டுப் போகுமுயிர் விளையாட்டே-உற்றார்
கூடி மகிழப் பேசுவதும் விளையாட்டே.
பிணமாயிருப்பதுவும் விளையாட்டே-அதைப்
பெற்றோர்கண் டழுவதும் விளையாட்டே
குணமாய்க் கழுவியதும் விளையாட்டே-ஈமங்
கொண்டுபோய்ச் சுட்டதுவும் விளையாட்டே
செத்தோர்க்கு அழுவதுவும் விளையாட்டே-சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதுவும் விளையாட்டே-குளித்து
வீடுவந்து மறப்பதும் விளையாட்டே.
வீணாள் கழிவதும் விளையாட்டே-சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதும் விளையாட்டே- குளித்து
வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே.
ஆடு மாடுகள் பெறுவதும் நான்கு வேதங்களையும் ஆகமங்களையும் ஆய்வதும் உடலை விட்டு உயிர் போவதும் உற்றவர்கள் கூடி மகிழப் பேசுவதும் எல்லாம் விளையாட்டே. பிணமாய் இருப்பதும் அது கண்டு பெற்றோர் அழுவதும் அதைக் குளிப்பாட்டி ஈமத்தில் சென்று அடக்கம் செய்வதும் விளையாட்டே. செத்தவர்க்காக அழுவதும், சுடுகாடு போகும்வரை அழுவதும் ஞானம் பற்றிப் பேசுவதும் அடக்கம் செய்து குளித்து வீடு வந்ததும் அவரையும் தமக்கும் இது நிகழும் என்பதையும் மறப்பதும் விளையாட்டே. வீணாக வாழ்நாள் கழிவதும், சுடலை சேரும்வரை துக்கமடைவதும் மிகவும் ஞானம் பற்றிப் பேசுவதும் குளித்து வீடு வந்ததும் நிலையாத வாழ்வை மறப்பதுவும் எல்லாம் விளையாட்டே.
கனவுநினைவு என்பதுவும் விளையாட்டே-இக்
காசினியோர் உழல்வதும் விளையாட்டே.
நினைவாய்ச்செய் வஞ்சகமும் விளையாட்டே-மிக்க
நிதிநிலம் பெண்ணென்பதும் விளையாட்டே.
பெண்ணாசை யென்பதுவும் விளையாட்டே-அவர்
பின்னால் திரிவதும் விளையாட்டே.
மண்ணாசை யென்பதுவும் விளையாட்டே-நல்ல
வயல்தோட்டம் புஞ்சையெல்லாம் விளையாட்டே.
சீராக வாழ்வதுவும் விளையாட்டே-செம்பொன்
சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே
நேராய்ப்பொய் சொல்லுவதும் விளையாட்டே-நெஞ்சில்
நினைக்காமற் செய்வதும் விளையாட்டே
பந்துசனம் என்பதெல்லாம் விளையாட்டே-லோகப்
பற்றுடனே வாழ்வதும் விளையாட்டே
சொந்த நிதி தேடுவதும் விளையாட்டே-இதைச்
சொப்பனம் போலெண்ணாததும் விளையாட்டே
கனவு நனவு என்பதுவும் உலகினர் துன்பப்படுவதும் நினைத்துச் செய்யும் வஞ்சகமும் பணம் நிலம் பெண் என்பதுவும் விளையாட்டே. காமமும் பெண்கள் பின் திரிவதும் மன்னாசை என்பதும், வயல் தோட்டம் புஞ்சை என்பனவும் எல்லாம் விளையாட்டே. சீராக வாழ்வதும், பொன் சேர்ப்பதும், பொய் புகல்வதும், நினைக்காமல் ஒரு செயலைச் செய்வதும் விளையாட்டே. உறவினரென்பதும், உலகப் பற்றுடன் வாழ்வதும் சொந்தச் செல்வம் சேர்ப்பதும் இவற்றை ஒரு கனவாக எண்ணாததும் எல்லாம் விளையாட்டே.
யோகம்வந்து மகிழ்வதும் விளையாட்டே-அதன்
உண்மைதெரி யாததுவும் விளையாட்டே
சாகசஞ் செய்வதுவும் விளையாட்டே-ஒருவர்
தஞ்சமென்று நினைப்பதுவும் விளையாட்டே
கோடிபணந் தேடுவதும் விளையாட்டே-அதைக்
குழிவெட்டிப் புதைப்பதுவும் விளையாட்டே
தேடியலைவதும் விளையாட்டே-மனந்
தேறுதலாய் திரிவதும் விளையாட்டே
கற்பனையுங் கபடமும் விளையாட்டே-அதைக்
காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே
சற்பங்கள் ஆட்டுவதும் விளையாட்டே-ஒரே
சாதனையாய்ப் பேசுவதும் விளையாட்டே
நம்பினோருக்கு ஆசைசொல்லல் விளையாட்டே-பின்பு
நட்டாற்றில் போக விடுதல் விளையாட்டே
கும்பிக்கு இரைதேடுதல் விளையாட்டே-கடன் 
கொடுத்தாரைக் கெடுத்தலும் விளையாட்டே.
யோகம் பயின்று மகிழ்வதும் அதன் உண்மைகள் தெரியாதிருப்பதும் அரிய செயல் செய்வதும் ஒருவரைத் தஞ்சமடைவதும் எல்லாம் விளையாட்டே. கோடிக்கணக்கில் பணத்தைப் புதைப்பதும் பிறகு அதைத் தேடியலைவதும் மனம் தெளிந்து திரிவதும் எல்லாம் விளையாட்டே. கற்பனையும் கபடமாக இருப்பதும் காணாது ஒன்றை மறைப்பதும் பாம்பைப் பிடிதாட்டுதலும், சாதனையாய் பேசுவதும் எல்லாம் விளையாட்டே. நம்பியவர்க்கு ஆசைவரப் பேசுதல் பிறகு நட்டாற்றில் விடுதல் வயிற்றுக்கு உணவு தேடல் கடன் கொடுத்தவரைக் கெடுத்தல் ஆகிய யாவும் விளையாட்டே.
இச்சையால் மயங்குவதும் விளையாட்டே-அதை
இய்ல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே
பிச்சையெடுத்து உண்பதுவும் விளையாட்டே-பொல்லாப் 
பேய்போ லலைவதும் விளையாட்டே
முத்தி யறியாததும் விளையாட்டே-மேலாம்
மோட்சங் கருதாததும் விளையாட்டே
புத்திகொள் ளாததுவும் விளையாட்டே-மனம்
பாழிற் செலுத்தினதும் விளையாட்டே.
கேடுவருவதுவும் விளையாட்டே-எதற்கும்
கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே
பாடு வருவதும் விளையாட்டே-மனப்
பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே
ஆசையால் மயங்குவதும் அதைத் தம் இயல்பாக நினைப்பதும் பிச்சை எடுத்து உண்பதும் பேய் போல் அலைவதும் எல்லாம் விளையாட்டே. முத்தியை அறியாதிருப்பதும் மோட்சத்தை நினையாதிருப்பதும் பத்தி கொள்ளாததும் மனத்தைப் பாழான வழிகளில் செலுத்தியதும் எல்லாம் விளையாட்டே. கெடுதி வருவதும் எதற்கும் கலங்காது பேசுவதும் துன்பம் வருவதும் மனம் பற்றாமல் நிற்பதும் எல்லாம் விளையாட்டே. பந்த பாசத்தையும் ஊழ்வினையையும் போக்காததும் பெண்ணைப் பதுமையாய் ஆசையுடன் அழைப்பதும் நேசம் தேடுவதும் நிமிஷ நேரம் காணாது மறைவதும் எல்லாம் விளையாட்டே.
நித்திரையிற் சொக்குவதும் விளையாட்டே-அதில்
நினைவுதடு மாறுவதும் விளையாட்டே
சித்தியடையாததும் விளையாட்டே-ஞானம்
சிந்தியா திருப்பதும் விளையாட்டே
சொற்பனமுண்டாவதுவும் விளையாட்டே-மனம் 
சொக்கா திருப்பதுவும் விளையாட்டே
விற்பனங்கண்டறிவதும் விளையாட்டே-வந்த
விதமறி யாததுவும் விளையாட்டே
பகலிரவு என்பதுவும் விளையாட்டே-இகப்
பயனடைந்திருத்தலும் விளையாட்டே
சுகவாழ்விற் சிக்குவதும் விளையாட்டே-யோக
சாதன மறியாததும் விளையாட்டே
புத்திமானென்பதும் விளையாட்டே-இப்
பூதலத்தோர் ஏத்துவதும் விளையாட்டே
வெற்றியடைவதுவும் விளையாட்டே- நான்
வீரனென்று சொல்லுவதும் விளையாட்டே
நித்திரையில் மயங்குவதும் அப்போது நினைவு தடுமாறுவதும் சித்தி பெறாததும் சிந்திக்காமல் இருப்பதும் எல்லாம் விளையாட்டே. கனவு வருவதும், மனம் விரும்பாதிருப்பதும் திறங்கள் கண்டறிவதுவும், வந்த விதத்தை அறியாதிருப்பதுவும் விளையாட்டே. பகலும் இரவும் இவ்வுலக பயனை அடைந்திருப்பதுவும் உலக வாழ்வில் சிக்குவதும் யோகசாதனம் அறியாதிருப்பதும் எல்லாம் விளையாட்டே. அறிவுடையனாய் இருப்பதும் உலகினர் புகழ்வதும், வெற்றி பெறுவதும், தன்னை வீரன் என சொல்லிக் கொள்வதும் எல்லாம் விளையாட்டே.
தவநிலை தோணாததும் விளையாட்டே-ஞானத்
தத்துவந் தெரியாததும் விளையாட்டே
பவமது போக்காததும் விளையாட்டே-ஏக
பரவெளி காணாததும் விளையாட்டே
யோகந் தெரியாததும் விளையாட்டே-அதன்
உண்மைதனைக் காணாததும் விளையாட்டே
பாகம் அறியாததும் விளையாட்டே-இகப்
பற்றறுக்காது இருப்பதுவும் விளையாட்டே
பெரியோரைக் காணாததும் விளையாட்டே-கண்டு
பேரின்பஞ் சாராததும் விளையாட்டே
தெரியாது இருந்ததுவும் விளையாட்டே-சிவ
தேகநிலை பாராததும் விளையாட்டே
அஞ்ஞானம் உட் கொண்டதுவும் விளையாட்டே-பேர்
அறிவால் தெரியாததும் விளையாட்டே
மெய்ஞ்ஞானங் காணாததும் விளையாட்டே-இந்த 
மேதினியே போதுமெனல் விளையாட்டே
தவநிலையை அறிய முடியாததும் ஞானத்தத்துவம் தோன்றாததுவும் பிறப்பை மாற்றாததும் பரவெளியைக் காணாததும் விளையாட்டே. யோகத்தை தெரியாதிருப்பதும் அதன் உண்மையைக் காணாமல் இருப்பதும் தமக்குச் சொந்தமானது எது என்று அறியாததும் இவ்வுலகப்பற்றை நீக்காதிருப்பதும் விளையாட்டே. பெரியோரைச் சேராததும் அதனால் பேரின்பம் அடையாததும், எதுவும் தெரியாமலிருப்பதுவும், சிவனின் தேகத்தன்னைப் பாராதிருப்பதும் விளையாட்டே. அறியாமையை வளர்த்ததும் பேரறிவால் பயனை அடைவது தெரியாதிருத்தலும் மெய்ஞ்ஞானம் காணாமல் இருப்பதும் இவ்வுலகமே போதுமெனத் தெரிவதும் விளையாட்டே.
ஆதியான் மூலத்தில் அமர்ந்திருந்த சோதிதான்
வாதியானோன் கண்டறிய வாய்க்குமிது மந்திரம்
சுக்குச்சுக்கு வெள்ளைக்கல் சுண்ணாம்பு வெள்ளைக்கல்
காசுக்கு இரண்டுகல் கருணைக்கிழங்கடா கருணைக்கிழங்கடா.
குடுகுடு ஆனைக்கல் கோமானுக்கும் ஆனைக்கல்
தேசதேச வாசக்கல் தெக்கு நல்ல சீமைக்கல்
பக்குவம் ஆகாமுன் பார்தெடுத்துக் கொண்டபின்
சுக்குச்சுண்னாம்புக்கல் சோதிக்கல் சோதிக்கல்.
ஆதியாகிய மூலாதாரத்தில்; சோதியாக அமர்ந்திருந்ததை கண்டு அறியவைக்கும் மந்திரம். சுக்கு வெள்ளைக்கல் சுண்ணாம்புக்கல் இவை மந்திரமல்ல. மூலாதாரத்தை உணர்ந்தால் இவைகூட மந்திரமாகும். கடவுள் கருணையால் அடியில் உள்ளதை அறிக (கருணைக் கிழங்கு). சுண்ணாம்பு பக்குவம் ஆகாதபோது எடுத்தாலும் அது சோதிக்கல் ஆவது மூலாதாரத்தை அறியும் சிறப்பை அறிவிக்கும்.
வாகடதோகட மதுரக்கல் வைப்புச் சுண்ணாம்புக்கல்
பாகுடன் செய்தால் பசுமைக்கல் பசுமைக்கல்
மேலாஞ்சாதி பாரடா வெட்டவெளியைத் தேரடா
நாலாஞ்சாதி ஆகாது நமக்குப் பருப்பு வேகாது
தாய்போலு மாகுமே தங்கைபோலுமாகுமே
சேய்போலிமாகுமே திரும்பப் பெண்டீராகுமே
வாலையான சிறுபெண்ணாம் வயதுவந்த தோர்பெண்ணாம்
பாலைமங்கை தானடா பருவம்வந்த வழலைதான்
மதுரமான கல்லைப் பாசத்துடன் செய்தால் பசுமைக் கல்லாகும். இப்படி மூலம் உணர்ந்து பக்குவம் கண்டால் சித்தியாகும். மேல் பகுதியைப்பார். வெட்டவெளியை ஆய்ந்திடு. சாதி வேறுபாடு கருதினால் சித்தியடைய முடியாது. பெண்டிர் தாய் போன்றும் தங்கை போன்றும் குழந்தை போன்றும் நினைக்கத் தக்கவர். வாலை என்ற சிறு பெண் வயதுக்கு வந்த கன்னிப்பெண். மங்கைப் பருவம் உள்ளவளாம். பருவம் கண்டவளாம், வாழலை-பாதரசம்.
வழலை வாங்கிக் கொள்ளடா மருந்துசூடன் போடடா
குழவியர்க்கு உணர்வதாகக் கொடுத்ததை நீ வங்கடா
வாங்கின் மூலத்தையே மருந்துபோட்டு வைப்பையே
தூங்கிடாமற் சேநீர்கொண்டு சுருக்கினில் உப்பு ஆக்கடா
நீறுநீரெடுத்துமே இரண்டையும் ஒன்று ஆக்கியே
சீறுடனே காய்ச்சியே செய்ததொரு உப்படா
கோவனூர் தன்னிலே கொழுந்துபோல் முளைத்ததை
ஏகாலிகள் போகுமுன் எடுத்துவந்து காய்ச்சடா.
வழலையுடன் சூடத்தை மருந்தாகச் சேர். சிறு பிள்ளைக்கும் உணர்த்து. மூலம்- கிழங்கு. சேநீர் போடுதல்- பக்குவமாக்கும் முறை. மூலாதாரத்தை அறிந்து மந்திரம் சொல்லிப் பற்று நீங்கித் தியானிப்பதே சேநீர் சேர்ப்பதாகும். இதனால் யோகம் சித்துக்கும். நீறிய நீர்- ஆவியாக்கியது. அதையும் நீரையும் இனைத்து மீண்டும் காய்ச்சி அதில் உள்ள உப்பை எடுத்தல் போன்று யோக முயற்சியையும் செய்க. கோவனூரில் கொழுந்தாக முளைத்த மூலிகையைச் சலவை செய்வோர் எடுத்துப்போகுமுன் கொண்டுவந்து காய்ச்சி புடம் போடுவதுபோல் யோக முயற்சியையும் செய்க.
காய்ச்சியும் பெருத்துநீ கஞ்சிஉப்பு சேர்த்து நீ
மாட்சிமையாய் மல்லிகை மலர்ந்தது போல் ஆமடா
ஆதியுப்பும் அந்தவுப்பும் இந்துவுப் பெடுத்து நீ
சோதியுப்பும் ஆச்சடா சுருக்கமிது தானடா
கண்டறிந்து கொள்ளடா கணக்கறிந்து விள்ளடா
கொண்டறிந்து தள்ளட குருவறிந்து கொள்ளடா
சூதங்கட்ட லாகுமே சொர்ண உப்பு மாகுமே
வாதம் வாத மென்றறிந்த வாதியே நீ பாரடா.
விட்ட குறையானவன் மேதினியில் வந்தவன்
தொட்டகுறைக் காரனுக்குத் தோற்றுமே மெய்ஞ்ஞானமே.
காய்ச்சியபின் உப்பும் சேர்த்துவிட்டால் மல்லிகை போல் வெளுக்கும். ஆதி உப்பும்- மூலாதாரம், அந்த உப்பும்-தலைமேல் உள்ளது, எடுத்து இந்து உப்பும்-மார்பு நடுப்பகுதி எடுத்து முப்பூ செய்க, இனைத்தால் சோதி தெரியும். உனக்குள் எல்லாம் கண்டு கொள் கணக்காய் எல்லாம் அறிந்து கொள். தேவையற்றதை வெளியே தள்ளுக. குருவை அறிந்து கொள்க. சூதம்-பாதரசத்தை காணலாம். தங்கம் போல் உப்பாகும். இரசவாதம் என அலைபவனே வந்து பாரும். விட்டகுறையால் உலகில் பிறந்தான். தொட்ட குறையால் (குருவின் பரிசம்) மெய்ஞ்ஞானம் வெளிப்பட்டது.
ஏகாந்தம் பழம்பழம் எழுத்தில்லாதவன் தலைச்சுமை
பெண்டில்லாதவன் பெருவழி பிள்ளையில்லாதவன் கைவீச்சு.
காய்த்தவாழை பூப்பூக்கும் காயாதவாழை தானுமில்லை
பாய்ச்சின பயறு தலையெடுக்கும் பாய்ச்சாத பயறு தானுமில்லை.
இறைத்தகிணறு தானூறும் இறையாக்கிணறு தானுமில்லை
விதைவிதைத்தால் முளைதேறும் விதையாநிலதி லொன்றுமில்லை
அழுதபிள்ளை பால்குடிக்கும் அழுகாபிள்ளைக்கு ஏதுமில்லை
உழுதநிலந்தான் பயிரேறும் உழுகாதநிலத்திலொன்றுமில்லை
ஆசையுளானுக்கு ரோசமில்லை ஆசையிலானுக்கு ஒன்றுமில்லை.
தனித்திருப்பதால் உருவாகும் பலனிது. மந்திர எழுத்தறியாதவன் தலையில் உள்ள சக்திகள் சுமையாகவே இருக்கும். பெண்ணாகிய வாலையைத் தொழாதவன் பெருவழி செல்வது பிள்ளை இல்லாதவன் கைவீசி நடந்தது போல் குறையாம். காய்க்கும் வாழைக்குத்தான் பூவுண்டு, காய்க்காத வாழைக்குப் பூவில்லை. நீர்பாய்ச்சினால் தெளித்த பயிறு முளைக்கும். இல்லாவிட்டால் இல்லாது போகும். இறைத்த கிணறு ஊறும். இறைக்காத கிணற்றில் நீர் ஊறாது. விதைத்த நிலத்திலேதான் முளை தோன்றும். விளைக்காத இடத்தில் முளை இல்லை. அழுத பிள்ளைக்குப் பால் கொடுப்பாள் தாய். அழாத பிள்ளைக்கு அது இல்லை. உழுத நிலத்தில்தான் பயிர் சிறக்கும். உழாத நிலத்தில் அது இல்லை. ஆசைப் பட்டவன் ரோசத்தைக் கொள்ளமாட்டான். ஆசையற்றவனுக்கோ ஒன்றுமில்லை.
புண்ணாக்குச் சித்தர்:-
தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காண என்று
தாவித் திறந்தேனே-ஞானம்மா சரணம் சரணம் என்றே.
அஞ்ஞானமும் கடந்து அறிவை மிகச்செலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டு கொண்டால்-ஞானம்மா விலையில்லா ரத்தினமடி.
முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
சட்டையாம் தேகத்துள்ளே-ஞானம்மா தான் உயிரும் நிற்பதடி
விட்டகுறை வாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
தொட்டகுறை ஆனதினால்-ஞானம்மா தோன்றுமெய்ஞ் ஞானமடி.
தம்முளம் அறியாமல் பரத்தைத் தெரியாமல்
சம்சாரம் மெய்யென்று-ஞானம்மா சாகரத்திலே உழல்வார்.
மனோன்மணியின் திருப்பாதம் அடைய வேண்டும் என்று சரணம் செய்வதால் உன் பாதங்க்ளையே விடாது பற்றிக்கொண்டு உய்வு பெற்றேன் ஞானம்மா. அறியாமையை நீக்கி அறிவைப் பயன்படுத்தி உண்மையறிவைக் கண்டு கொள்ளலாம். அது விலைமதிக்க முடியாத இரத்தினமாகும். முட்டையினுள் முழுவதுமாகிய குஞ்சு இருப்பது போல் சட்டை போன்ற இவ்வுடலுக்குள் உயிரும் உள்ளது. விட்டகுறை தொட்ட குறைகளால் தடைப்படாமல் மெய்யறிவைத் தேடினால் அது உறுதியாகக் கிடைக்கும். தமது மனத்தை அறியாமல் உள்ளிருக்கும் பரத்தை தெரியாமல் சம்சார வாழ்வே நிலையென்று நினைப்பவர் அந்தக் கடலிலேயே விழுவர், துன்புறுவர்.
இட்டார்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம்-ஞானம்மா சொன்னால் வரும்மோசம்.
முத்திபெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும் 
நித்திரையும்விட்டு-ஞானம்மா நினைவோடு இருக்கனுமே.
நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும்-ஞானம்மா தெண்டனிட்டுப் போவானே
யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல் மோகம் எனும் குழியில்- 
ஞானம்மா மூழ்கியே போவார்கள். சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து-ஞானம்மா அலைவார் வெகுகோடி
யோகத்தைத் தெரிய விரும்புவோர்க்கு உபதேசம் என்றைக்கும் சொல்லி விடலாம். ஆனால் பிறர்க்குத் துன்பம் தருவோருக்கு உபதேசம் செய்தால் மோசம் வரும். முத்தி பெறுவதற்குத் தம்மையே முதல்வனாக நினைத்து நித்திரையை விட்டு நினைத்தபடியே இருக்கவேண்டும். நினைவில் நடப்பதையும் கனவுபோல் கருதினால் சினத்தோடு வரும் எமன் உன்னை வணங்கி நிற்பான். யோக விளக்கத்தின் ஒளியால் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் மோகம் என்னும் குழியில் பலர் மூழ்கிவிடுவர். சாத்திரமும் அறியாது சாமியார் வேடத்தில் திரிந்து தமக்குச் சொத்து சேர்க்க நினைத்து அலைவர் பலர்.
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்ச்சும்
ஏச்சுக்கு இடந்தானே-ஞானம்மா ஏதொன்றும் இல்லையடி.
கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலை விரித்து
கணக்கைத் தெரியாமல்-ஞானம்மா கலங்கி அழுதாரடி.
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ-ஞானம்மா நலிந்தே அழுவாரடி
கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
தேவமாதா இரவல்-ஞானம்மா தெரியாதே அலைவாரே
செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம் 
உத்தமர்போலப்பேசி-ஞானம்மா உலகில் திரிவாரடி. 
வெளிவேடமாகிய பூச்சும், உண்மை கண்டவர் போல் பேசுவதும், பூசை செய்வதும், கைவீசும் அகங்காரமும் பிறர் ஏசுவதற்கு இடமாகுமல்லது வேறு பயன் இல்லை. நகைகளால் அலங்காரம் செய்து இருந்த பெண்கள் மரண காலம் தெரியாதவர். அது வந்தபின் தலை விரித்து அழுதனர். மேளமும் தாளமும் முழக்குவதும் பலரும் கூடுவதும் எல்லாம் மரண நாளை எண்ணாமல் செய்வதாம். அது வந்ததும் நலிவடைந்து அழுவார்கள், உடையும் அலங்காரமும் தேவரைப் புகழ்வதும் ஆகிய எல்லாம் சிலகாலமே. இது தெரியாமல் அலைகின்றனர். செத்த வீட்டில் அடக்கம் செய்யும் வரை நிலையில்லா வாழ்வைப் பற்றியும் விதியைப் பற்றியும் ஞானம் வந்த உத்தமர் போல் பேசுவர். பிறகு முன்புபோல் எல்லாம் மறந்து திரிவர்.
காட்டில் இருந்தாலுங் கனக்கதவஞ் செய்தாலும்
காட்டில் குருவில்லாமல்-ஞானம்மா கண்டறிதல் ஆகாதே.
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லா வெளிச்சமது-ஞானம்மா ஈன வெளிச்சமடி
சம்சாரம் என்றும் சாகரமாம் என்றும்
இம்சை யடைவோர்கள்-ஞானம்மா இருந்துபயன் ஆவதென்ன.
காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது-ஞானம்மா உப்பிலாப் பொய்க்கூடு.
அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி
சஞ்சாரஞ் செய்ய-ஞானம்மா தானமைத்த பொய்க்கூடே.
காட்டில் வாழ்ந்தாலும் அங்கு போய் நிறைய தவம் செய்தாலும் குரு இல்லாமல் மெய் நெறியைத் தாமாகக் கண்டறிய முடியாது. நல்லதும் ஞானமானதும் வேறிடத்து இல்லாததும் ஆகிய வெளிச்சத்தை இறைவனே அருள் செய்வான். சமசாரத்தில் வாழும்போது அதைச் சாகரம்- சமுத்திரம் என்றே துன்பம் அடைவர். அதில் இச்சை கொண்டோர் அதனால் பயன் அடைவதில்லை. காற்று அடைத்த பொருள், கசமாலமாகிய பாண்டம், நாற்றம் உடையது, உப்பில்லாத பொய்க்கூடு இந்த உடல் என அறிய வேண்டும். ஐந்து புலன்கள் தேடி வந்து அரசாளவும் சஞ்சாரம் செய்யவும் தானே அமைத்த பொய்க்கூடே இந்த உடல்.
கல்லுளிச் சித்தர்:-
பிர்ம சொரூபத்தை நாடு-உள் கர்ம வினைஓட வழிதனைத் தேடு
எட்டி பழுத்தாலும் என்ன-காசு ஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன,
கட்டி வராகனிருந்து என்ன-அதைக் காவல்கள் போட்டு நீ காத்திருந்து என்ன,
நீரிலாக் கிணறு இருந்தென்ன-மனம் நேராய் நடவாத பிள்ளையிருந்து என்ன,
ஊரிலா ஆறிருந்து என்ன-நமக்கு உதவி இல்லாத மனிதர் உறவிருந்து என்ன,
தவமது செய்தாலும் என்ன-நீ சமத்தன் என்றேபேரெடுத்தாலும் என்ன,
சிவபூசை செய்தாலும்என்ன-அரன் சேவடியை மறவாமல்இருந்தாலும் என்ன,
பிரம்மத்தின் வடிவத்தை நாடுக. செய்த கர்மங்களாகிய வினைகளை ஓடச்செய்யும் உள் ஒளியே பிரம்ம சொரூபம். நச்சாகிய எட்டி பழுத்து பயனில்லை. ஈயாத உலோபிகள் வாழ்ந்தும் பயனில்லை, வராகன் அளவு கட்டிப் பொன் இருந்தும் பயன் இல்லை, காவல் போட்டுக் காத்தும் பயன் இல்லை. நீரில்லாத கிணறும், நடக்கத் தெரியாத பிள்ளையும், ஊர் வழியாக ஓடாத ஆறும், உதவாத மனிதர் உறவும் பயனற்றவை. தவம் செய்தாலும், திறமைசாலி என்ற பெயர் பெற்றிருந்தாலும், சிவ பூசை செய்தாலும், திருவடியை மறவாமல் இருந்தும் பயனில்லை.
காசிபோய் வந்தாலும் என்ன-பெரிய கனக தண்டிகையேறித் திரிந்தாலும் என்ன,
வாசியைத் தெரிந்தாலும் என்ன-நாலும் மகராசன் என்றுபேர் பெற்றாலும் என்ன,
புராணம் படித்தாலும் என்ன-இந்தப் பூலோகம் தன்னில் மறைந்திருந்து என்ன,
திராசு நிலையாய் இருந்து என்ன-தினம் சிவசிவா என்றே செபித்தாலும் என்ன,
வித்தைகள் பலபடித்து என்ன-நீ மென்மேலுஞ்சாத்திரம் கற்றாலும் என்ன,
சித்துகள் தரிந்தாலும் என்ன-நாளும் சிறப்பாக வார்த்தை உரைத்தாலும் என்ன.
பெண்டாட்டி பிள்ளை இருந்து என்ன-முதிர்ந்த பெரியோர்கள் பாதத்தை பூசித்தும் என்ன,
துண்டாகப் போயிருந்தென்ன-நீ துலையாத கற்கோட்டை கட்டியிருந்தும் என்ன,
காசிக்குப் போய் வந்தாலும், பொன் பல்லக்கில் ஏறிவந்தாலும். பிராணயாமம் தெரிந்தாலும், மகராசன் என்ற பெயர் வந்தாலும் பயன் உண்டோ. புராணம் படித்தாலும். பூவுலகில் மறைந்தே வாழ்ந்தாலும். தராசு போல் நடுநிலையில் இருந்தாலும், சிவசிவா என்று ஜெபித்தாலும் என்ன. பலவித மந்திரங்கள் பயின்றாலும் மேலும் பல சாத்திரங்கள் கற்றாலும் சித்துகள் தெரிந்தாலும் சிறந்த வார்த்தைகள் சொன்னாலும் என்ன, மனைவி மக்கள் இருந்தாலும் பெரியோரைப் பாதபூசை செய்தாலும் தனித்து இருந்தாலும் அழியாத கல் கோட்டை கட்டியிருந்தாலும் என்ன.
மாடிமேல் வீடிருந்து என்ன-இந்த வையகத்தோர்மெய்க்க வாழ்ந்தாலும் என்ன,
கூடிக்குலாவி இருந்ததென்ன-கையெடுத்துக் கும்பிட்டுக் கூத்தாடித் திரிந்தாலும் என்ன,
தாய்தந்தை துணையிருந்து என்ன-உற்றசனங்களும் உபகாரமாய் இருந்தென்ன,
நாய்போல் அலைந்தாலும் என்ன-வரும் நமனுக்குத் தப்பிஒழிந்தாலும் என்ன
சரியை கடந்திடவும் வேணும்-இந்தச் சகத்தினுடமாயை ஒழித்திடவும் வேணும்
கிரியையைப் பார்த்தறிய வேணும்-மனவாக்குக்கு எட்டாத சொரூபத்தைத் தெரிந்திட வேணும்
மாடிமேல் வீடிருந்தாலும். உலகினர் புகழ வாழ்ந்திருந்தாலும், பலருடனும் கூடி மகிழ்ந்திருந்தாலும் கும்பிட்டுக் கூத்தாடித்திரிந்தாலும் பயன் இல்லை. தாய் தந்தை துணை இருந்தும், பிறர் உதவியாக இருந்தும் நாய் போல் பலவிதமாக உழைத்தாலும் இயமனுக்கு தப்பி ஒழிந்தாலும் பயன் இல்லை. சரியை எனும் வழியைக் கடந்திட வேணும். சகமாகிய மாயையை ஒழித்திட வெண்டும், கிரியை எனும் வழியைப் பார்த்து அறிய வேண்டும். கிடைக்காத பிரம்ம சொரூபம் தெரிய வேண்டும். 
யோகந்தெரிந்திடவேணும்-உனக்கு உண்டிமுதல் ஆனதைச் சுருக்கிடவேணும்
பாகமது தெரியவேவேணும்-குரு பாதன் அதை மறவாமல் இருந்திடவேணும்
கொலைகளவு நீக்கிவிடவேணும்-உலகில் கொடியோன் எனும்பேரைப் போக்கிடவேணும்
புலைகளைத் தொலைத்துவிடவேணும்-இன்று பொல்லாத மாயையை விலக்கிவிட வேணும்,
சோதியைக் கண்டு அறியவேணும்- வேதச் சுடரெனும் தீபத்தைப் பார்த்தறிய வேணும்
ஆதிப்பிர் மந்தெரிய வேணும்-அதை அன்புடன் சாத்திரத் தால் தெரிய வேணும் யோகமாகிய வழியைத் தெரிய வேண்டும்.                                    

உணவு முதலியவற்றைச் சுருக்க வேண்டும். எது பக்குவம் எனத்தெரிய வேண்டும். குருவின் பாதத்தை மறவாமலிருக்க வேண்டும். கொலை களவு பாபங்களை நீக்கவேண்டும். கொடியவன் எனும் பேரைப் போக்க வேண்டும். புலால் உணவைத் தவிர்க்க வேண்டும். உடலுக்குள் உள்ள சோதியைக் கண்டு அறிய வேண்டும். சுடராகிய அத்தீபத்தைப் பார்த்து அறிய வேண்டும். ஆதியாகிய பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அன்பாகிய சாத்திரத்தால் அதை அறிய வேண்டும்.
ஞானநிலை தெரியவேவேணும்-இதில் நால்வேத உண்மை தெரிந்திட வேணும்
மோனநிலை தெரியவேவேணும்-யோக முடிவான வத்துவை முன்தெரிய வேணும்
அட்டகருமம் தெரியவேணும்-அதற்கு ஆதாரமான ஆலை தெரியவேணும்
திட்டமாய் வாசிநிலைவேணும்-இதைத் தெரிந்துகொண்டால் சித்தன் ஆகவே வேணும்.
பந்தக் கடந்தவனே சித்தன்-பாரில் பஞ்சமா பாதத்தை விட்டோனே பத்தன்
இந்தவிதந் தெரிந்தவனே சித்தன்-அதில் என்நிலைமை கண்டவனே சீவ முத்தன்
ஞானத்தின் நிலை தெரிய வேண்டும் நான்கு வேதங்களின் உண்மை தெரிய வேண்டும். மவுன நிலையை உணர வேண்டும். முடிவான கடவுள் பொருளை முன்னதாகத் தெரிய வேண்டும். எட்டுவித கருமங்களும் தெரிய வேண்டும். அதற்கு ஆதாரமான பெரிய வடிவம் தெரிய வேண்டும். வாசியின் திட்டமான நிலைகள் தெரிந்து கொண்டவன் சித்தன் ஆவான். பந்த பாசம் கடந்தவன், பஞ்சமாபாதகம் (பொய், காளவு, கொலை, சூது, காமம்) விட்டவன். பக்தன் இவற்றோடு எல்லா நிலையும் கண்டு தெளிந்தவனே சித்தன்
பிர்ம சொரூபத்தைநாடு-உன் கர்மவினையோட வழிதனைத் தேடு
மர்மம் தெரிவிக்கும் வீடு-கண்டு தர்ம நெறிமுறை தன்னில் நீ கூடு
ஆதிபரம் பொருளைப் போற்றி-எந்தன் ஆத்தாளின் பாதத்தை மனதினிலேற்றி
சோதிச் சுடரொளியை நோக்கி-எங்கள் தூய குருபதமதைச் சிரமீது ஆக்கி
முக்தர்கள் தன்னை துதித்து-மேலாம் மோனத்தின் நிலையை மனத்தினில் ஏற்றி
சுத்த நிராமயங் கண்டு-வேதச் சுடரெனும் பொருளை உன்னிதயத் துட்கொண்டு  

பிரம்ம வடிவாகிய உள் ஒலியை நாடு. அதனால் உன் கர்ம வினை ஓடும் வழியைத்தேடு. எளிதில் தெரியாது இருப்பது வீடு. அதைக் கண்டு தர்ம நெறியில் வாழ்ந்தால் இறைவனைச் சேரலாம். ஆதியாகிய பரம் பொருளை போற்றி வாலையாகிய தாயின் பாதத்தை மனத்தில் பதிய வைத்து ஒளியாகிய சோதியைக் கருதி தூய குரு பாதத்தை தலை மீது ஏற்றி முத்தி அடைந்தவர்களை வணங்கி மவுன நிலைக்கொண்டு சுத்தமான அருவத்தை உணர்ந்து சுடர் வேதப் பொருளை இதயத்தில் நினைக்க.
ஞான நிலை அறிய வேண்டி-இந்த ஞாலத்தில் ஆபாச வழிதனைத் தாண்டி
மோன நிலையினில் சேர்த்து-ஆதி முச்சுடர் ஆகிய தீபத்தைப் பார்த்து
நித்தியா னந்தமெனத் தேர்ந்து-சதா நிர்மலமானதோர் பரவெளி சார்ந்து
பத்தியாய் வாழ்ந்திட வேணும்-ஆசா பாசத்தை நீக்கில் மெய்ஞ் ஞானமது தோணும்
தன்னையே தானறிந்தோன் சித்தன்-வாசி தனித்திருந்தே பழக்கம் உற்றோனே முத்தன்
உன்னை உன்னாலறிவோன் சத்தன்-ஞான யோகநிலை தன்னையும் அறிந்தோனே முத்தன்
ஞான நிலையையும் அறிவதற்காக ஆபாச உலகில் மவுனம் சேர்த்து மூன்று சுடராகிய தீபத்தை நெற்றியில் பார்த்து அழியாத ஆனந்தம் எது என்று தேர்ந்து கொண்டு மாசில்லாத பரவெளியை மனத்தில் பதித்து பக்தியோடு வாழவேண்டும் அப்போது மெய்ஞ்ஞானம் தோன்றும். தன்னையே தான் அறிந்தவன் சித்தன், பிராணாயமத்தை தனித்திருந்து பழகியவன் முத்திக்கு உரியவன். உன்னை உன் அறிவால் உணர்பவன் சத்தன். ஞானயோகம் அடைந்தவன் முக்தி அடைவான்.
பவுரணை நாள தனிலேதான்-வாசிப் பழக்கமது செய்ய ஆரம்பிக்க வேதான்
நவநாதர் செய்முறைகள் இதுதான்-கண்டு நாட்டத்தைக் கொண்டு வழிபார்ப்பர் இதுதான்.
வாசிப் பழக்கத்தை நாட்டு-தீட்சை மார்க்கப் படியே வழிகண்டு தீட்டு
பாசிப் பயறு அன்னம் ஊட்டு-தினம் பத்தியமாகவே காலத்தை ஓட்டு
பெண்போகத்து ஆசை வையாதே-நல்ல பிராண சொரூபத்தை நழுவ விடாதே
மண்பொன்மேல் இச்சை கொள்ளாதே-பொல்லா மாயையில் அகப்பட்டு நீயுழலாதே.
பவுர்ணமி நாளில் யோகம் பயில தொடங்கு, நவநாதர்கள் செய்த முறை இதுவே. அவர்கள் தம் கண்களாலேயே வழிகாண்பர். வாசியாகிய பிறணாயாமப் பழக்கத்தைத் தொடர்க. தீட்சையில் அறிந்த வழியே செல்க. பாசிப் பயறு கலந்த அன்னம் புசித்து வருக. தினம் பத்தியமாய் நடக்க. பெண் இன்பத்தில் ஆசை கொள்ளாதே. பிராணாவத்தின் உள் ஒளியை விடாதே. மண், பொன் மீது ஆசை கொள்ளாதே. மாயையில் அகப்பட்டு துன்பப்படாதே.
அட்டாங்க யோகமது செய்வாய்-அதி ஆனந்த நிலைகண்டு மோனத்தில் உய்வாய்
கட்டாக ஓர்நிலையில் நில்லு-அந்தக் கரணம் அடக்கியே மேலேறிச் செல்லு.
நந்திதன் கொலுவை விடாதே-அந்த நாட்டத்தை விட்டுநீ அலைந்து கெடாதே
அந்தணன் பீடத்தில் நீயே-நின்று ஆத்தாளைக் கண்டு பணிந்திடு வாயே
தானாக மேலே ஓர்வீடு-கதவு தான்சாத்தி இருக்கின்ற வழி திறந்து ஓடு
மேனாட்டுக் கப்பலை ஓட்டு-பாயை விரித்து நீ மேல் தூக்கிச் சுக்கானைப் பூட்டு
ஆதாரம் அறையும் பார்த்து-உன்றன் அறிவினுக்கு எட்டிய நங்கூரங் கோர்த்து
மாதா தெரிசனை அறிந்து-அந்த வழியிலே திட்டியின் வாசல் திறந்து.
எட்டுவகை யோகங்களையும் செய்க. இன்பநிலை கண்டு மவுனம் செய்து உய்க, ஒரே எண்ணத்தில் மனத்தை அடக்கி மேல் உடம்பில் யோகம் செலுத்து. சிவ குருவின் சபையை நினைக்காமல் அலையாதே. மூலாதாரத்தில் நின்று வாலைப் பெண்ணையும் வணங்குக. மேல்வீடாகிய சகஸ்ராரத்தின் கதவைத் திறந்து உள்ளே செல்க. மேனாட்டுக் கப்பலைத் தலைக்குமேல் அந்தரத்தில் செலுத்தும் யோகம் எனும் பாயை அகல விரித்துச் சுக்கானாகிய மணிப் பூரகத்தை நிறுத்து. ஆறு ஆதாரங்களைப் பார்த்து உன் அறிவால் அவற்றை நிலை நிறுத்தி வாலை என்ற தாயை தரிசித்து அவளைக் காணும் வழியில் திட்டிவாசலை (சுழுமுனை நாடியின் வாயில்) திறந்து கொள்.

ஆறுதவ்வீட்டையும் கண்டு-அங்கே அவரவர் வாசஞ்செய் அருமையை விண்டு
தேறுவதைநீ வெளிவிடாதே-நல்ல திருவான மேல்வாசல் கண்டு பின்னிடாதே
பாதைவழி ஏறியே செல்லு-மயிர்ப் பாலத்தின் வழியேபோய்ப் பட்சமாய் நில்லு
தாதை இருப்பிடம் பாரு-யாரும் சஞ்சாரம் இல்லாத தனித்திடஞ்சேரு
மூலாதாரத்தையும் பார்த்து-நல்ல முச்சந்தி வீதியின் வாசியைச் சேர்த்து
நாலா விதங்களும் தெரிந்து-அங்கே நவகோணச் சக்கரத்து உண்மை அறிந்து
சங்குத் தொனிகேட்கில் ஆகும்-அந்தச்சத்தமுங் கேட்கப்பயம் விலகிப் போகும்
எங்கும் நிராமயமாய்த் தோணும்-மேலும் இயல்பாக நாதத் தொனியங்கே காணும்
ஆறு ஆதாரங்களையும் கண்டு அங்கங்கே இருக்கும் கடவுளரையும் அவர்களின் அரிய சக்தியையும் காண்க. கண்டதை வெளியில் சொல்லாதே. மேல் துவாரமாகிய உச்சந்தலை துவாரம் வரைப் போகாமல் தடைசெய்யாதே. உரிய பாதையில் செல்க. பருவமத்தியில் செல்க. சிவன் இருப்பிடம் அறிக. யாரும் இல்லா தனியிடத்தில் சேர்க, மூலாதாரத்தையும் முச்சந்தியையும் தெரிந்து ஒன்பது கோண சக்கரத்தின்(ஸ்ரீ சக்கரம்) உண்மை அறிக. சங்கு ஒலி கேட்டால் அச்சம் விலகி எங்கும் அருவம் உருவம் போல் தோன்றும். அங்கே நாதத்தின் இனியதொனி கேட்கும்.
சதுரகிரி உச்சிமீது ஏறி-அதைத் தானங்கே பார்த்து பிரமானந்தம் மீறி
இது கயிலாச கிரியென்று-போற்றி இனிமையாய் வழிதெரிந்து அவ்விடம் சென்று.
கருநெல்லிக் காட்டுக்குள் சென்றே-உட் கருவான தாமரைத் தடாகத்துள் நின்றே
பெருவாரித் தீர்த்தங்கள் ஆடி-வாய் பேசாமல் ஊமைபோல் மோனத்தை நாடி
கருஞ்சாரை வெண்சாரை யோட-அதைக் கண்டு ஒடுங்கி வழிதனைத் தேடப்
பெரும்பாலும் அருவி செறிந்து-வரப் பிறங்கும் பிரமானந்த மிதுவென்று அறிந்து
மூலக் கணேசனைக் கண்டு-அவர் முன்னின்று போற்றியே தெரிசித்துக் கொண்டு 
கோலத்துடன் அங்கு இருந்தும்- செல்லக் குண்மாகும் ஆனந்தப் பரவெளி பொருந்தும்.
சதுரகிரியாகிய உச்சந்தலையில் சுழுமுனை வழியாக ஏறுவதே பிரம்மானந்தமாகும். அதுவே கைலாசகிரியாகும். அங்குப் போகும் வழியை அறிந்து இனிதுடன் செல்க. கற்பகாலம் வாழச் செய்து ஆயுள் நீடிக்கும் கரு நெல்லிக்காடாகிய சகஸ்ராரத்தில் உள்ள ஆயிரம் தாமரை குளத்தில் யோக சித்தியால் ஊறும் அமுதினை பருகிடு. கடுஞ்சாரை வெண்சாரை எனும் நாடிகளை அறிந்து அதை சார்ந்து அமுதூறும் பகுதியே பிரமானந்தம் ஆகும். மூலாதாரத்தில் கணேசனைப் பார்த்து வணங்கி நின்றால் நற்குண நிலமாகிய ஆனந்த பரவெளியை அடையலாம்.
சோதி சொரூபத்தைப் பார்த்து-அதிற் சொக்கியே நின்றிடத் தேகமும் வேர்த்து
ஆதி மகாலிங்கங் கண்டு-அதில் ஐம்புலன் ஒடுங்கியே ஆனந்தங் கொண்டு
சுந்தர தெரிசனம்செய்து-சிற் சொரூப நிலையதனில் நின்று நான் உய்ந்து
அந்தரத் தோர்களைப் போற்றி-இது ஆச்சரியம் என்றேதான் வாசியை ஏற்றி
கண்டுகொண்டேன்சிற் பரத்தை-ஞானக்கண் கொண்டு பார்த்தறிந்தேன் அட்சரத்தை
விண்டுயான் சொல்ல முடியாது-இந்த மேதினியோர்க்குலெகு விற்கிடையாது
மனமானது அடங்கியே போச்சு-இந்த மாயையை விட்டுக் கரையேறல் ஆச்சு
சினமெனுங் கோபம் அறுத்தாச்சு-யோகம் சித்தியதாகவே முத்தியும் ஆச்சு.
சோதியாகிய வடிவத்தைப் பார்த்து அதில் சொக்கி நின்றிடுக. அப்போது உடல் வியர்க்கும். நடு நாடியில் ஒளி ஏறுவதே மகாலிங்கம். அதைக்கண்டு ஐந்து புலன்களையும் ஒடுக்கி ஆனந்தம் காண். சிவ சொரூபத்தைச் தரிசித்து தானே அதுவாக இருக்கிறேன் என உணர்ந்து அந்தரத்தில் உள்ள உத்திகளை வணங்கி வியப்புடன் பிராணாயாமத்தை ஏற்றுக. சித்தத்தில் உதிக்கும் பரத்தையை கண்டு கொண்டேன். ஞானக்கண் பெற்று அதன் எழுத்தை அறிந்தேன். உலகின் சாதாரணமானவர்களுக்கு கிடைக்காத அதை வெளியில் சொல்ல முடியாது. மனம் அடங்கி விட்டது, மாயையை விட்டுக் கரையேறினேன். சினத்தை அறுத்துவிட்டேன். யோகமும் சித்தியடைந்து முத்தி கிடைக்கும்.
ஆசையை ஒருநாளும் வேண்டேன்-மேல் ஆறு தலத்திலும் கண்டதைப் பூண்டேன்
ஓசை ஒளிக்குளே நின்றேன்-அதை உற்றுற்றுப் பார்த்துபின் அங்கங்குச் சென்றேன்
ஆயிரத்து எட்டிதழும் கண்டேன்-கண்டு அந்தந்த நிலையையும் மனத்தினிற் கொண்டேன்
தாயின் சொரூபத்துள் ஆச்சு-இன்னும் சகல புவனங்களும் பிண்டத்தில் ஆச்சு
அஞ்ஞானம் என்பதும் போச்சு-பரமானந்த மென்பது அதி நிசப்பேச்சு
மெய்ஞ்ஞானம் என்பது பொய்யோ-இந்த மேதினி யோர்கள் அறியார்கள் ஐயோ.
இல்லறம் உள்ளதும் நாமே-அதி ஏற்கையாயிருந்தோர்க்குச் சாதனமாமே
நல்லறம் தேடியலையாதே-மேலாம் நாதாந்த வெட்டவெளி யாயிருக்குமப்போதே
ஆசையை ஒருநாளும் விரும்பமாட்டேன். ஆறு ஆதாரங்களில் கண்டதை அணிந்தேன். ஓசையால் வரும் ஒளியில் ஒன்றி அங்கெங்கும் சென்றேன். ஆயிரத்து எட்டிதழ் தாமரையும் தலையில் பார்த்து மனதில் பதித்தேன். தாயின் வடிவத்தில் கலந்து எல்லா உலகங்களுக்கும் இந்த உடம்போடு சென்றேன். அரியாமை அகன்றது. பரமானந்தம் உண்மையில் வந்தது. மெய்ஞ்ஞானத்தை பொய் எனக்கருதும் ஏனையோர்க்கு இது தெரியாது. இல்லறத்தில் இருந்தாலும் இவ்வழியை கொண்டோர்க்கு சாதனம் ஆகும். நாதாந்த வெட்டவெளி யிருக்கும்போது வேறு அறம் வேண்டாம்.
மோன நிலைக்கண்டு தேறு-பர முத்திக்கு வித்தான் கருத்தில் நின்றேறு
ஞான நிலையதுவும் கிட்டும்-பூவில் நாடி இருக்கலாம் வெகுகால மட்டும்
சுழுமுனை திறக்கும் வழி பாரு-அந்தச் சூட்சாதி சூட்சத்தைக் கண்டதின் சீரு
வழியுடன் சுந்தரர் நூறே-சொல்லும் மார்க்கத்தின் வழியாகச் சென்று நீதேறே.
மச்சரும் எண்ணூறிற் சதமாய்க்-கொஞ்சம் வாய்விண்டு சொல்லினர் தெரியவே பதமாய்
இச்சை ஒழித்துநீ பாரு-அதனால் இகபர இரண்டையும் காணவெகு சீரு
தீட்சையின் மார்க்கமும் தெரிய-குருதேசிகன் இருநூறில் வழிதுறை அரிய
மாட்சிமையாக உரைத்தார்-அதை வாங்கித் திருமூலர் குகைக்குள் மறைத்தார்.
மவுன நிலையை யோகமாக்கி முத்தி பெறுவதே முடிவு என கருத்து கொள்க. ஞான நிலை கிடைத்து பலகாலம் அதில் நீடிக்கலாம். சுழுமுனை நாடியைத் திறக்கும் சூக்கும வழியை அறிந்து அதனுடன் இணைக. சுந்தரர் கூறிய வழிசென்று அடைவாய். மச்ச நாதரும் தாம் பாடிய எண்ணூற்றில் இதுவே சதம் என வெளிப்பட்டார். ஆசையை விட்டுப் பார்த்தால் இம்மை மறுமையைக் காணலாம். தீட்சையில் சொல்லிய வழியில் தேசிகனார் (கடவுள்) இரு நூறு பாடல்களில் சொல்லியதை திருமூலர் பெற்று யோகக்குகையில் சென்றார்
சட்டமுனி கற்பவிதி நூறு-அதனைக் தான்பார்த்து நல்ல வழியினில் தேறு
வெட்டவெளியாகவே தோணும்-ரோமர் விரித்துச் சொன்னாரரந்த ஐஞ்ஞூறிற் காணும்
செய்பாக மானதுவும் முன்னே-கருவைத் தெரிந்துகுரு முறையாகச் செய்வாய்

நீ பின்னே கைபாகத்துடன் செய்தால் ஞானம்-கிட்டுங் கடைத்தேறல் ஆம் இந்தத் திடத்துடன்

மோனம் பத்திய பாகங்கள் ஆக-முறையாய்ப் பங்குடன் தானுண்பாய் நரைதிரை போக 
முத்திவழியைத் திறந்து-பார்த்து மோசங்கள் வாராமற் செய்வாய் சிறந்து.
சட்டைமுனி கற்பவிதி நூறும் பார்த்து நல்வழியில் வெட்டவெளியாகத் தோணுவதை ரோமர் ஐநூறு பாடல்களில் விரிவாகச் சொல்லியுள்ளார். முன்னே செய்து பழகியதை குரு மூலம் பின்னே செய்கிறாய். இதை அப்படியே செய்தால் ஞானம் கிடைக்கும். கடைத்தேறலாம் இதுவே திடமான மோனம். பத்திய பாகங்களில் கூறிய பழைய முறைப்படி உண்ணுவதால் நரை திரை போகும். முத்திக்குரிய வழியைத் திறந்து பார்த்து மோசம் வாராது செய்க.

பூலோக ஆசையைத் தள்ளு-ஞானம் போதிக்குங் குருகண்டு அடுத்துநீ கொள்ளு
சாலோக பதவியது கிட்டும்-வேறே சம்பத்து வேண்டுமோ இதுவந்த மட்டும்
யோக முறைகை விடாதே-விட்டுவிட்டு ஒன்றுந்தெரியாமல் நீயும் கெடாதே
பாகம தாகவே செய்வாய்-பய பத்தியா எப்போதுஞ் சரத்தினில் உய்வாய்.
ஞான வழிகண்டு கூடு-வரும் நலமான முத்தி வழிதனைத் தேடு
மோன நிலையிலே நில்லு-குரு முத்திக்கு இடமான வழியிலே செல்லு,
பூலோகத்திலுள்ள ஆசைகளைத் தள்ளுக. ஞான குருவைக் கண்டு உபதேசம் பெருக. இதனால் சாலோக (சிவலோக) பதவி கிட்டும். யோகமுறைகளை கைவிடாதே. விட்டால் நீயும் கெடுவாய். பரிபாகத்துடன் பயபக்தியுடன் சஞ்சாரத்தில் உய்வாயாக. ஞான வழியைக் கண்டு மோனவழியிலே நின்றிடுக. நல்ல முத்தி வழியைத் தேடி முத்திக்குரியவற்றில் செல்க.
வாழ்நளை வீணீல்விடாதே-கெட்டமாய வலை அகப் பட்டுழலாதே
பாழ்போகில் எதுவும் வாராத்தே-பரி பக்குவம் ஆகிடில் நீ பின்னிடாதே
மாயவலையில் அகப்பட்டு வாழ்நாளை வீணாக்காதே. பாழான வழியில் சென்றால் எதுவும் வாராதே. பரிபக்குவமானால் நீ எதிலும் பின் தங்கமாட்டாய்.
துக்கத்தில் ஆசையை வையாதே-இது சுகமெனக் காண்பித்து மயக்குமப்போதே
ஊக்கத்துடன் இருப்பாயே-தூங்கி உலகோர் சிரிக்க உடம் பெடுக்காதே.
தூக்கத்தில் சுகம் கண்டு அதை விரும்பாமல் ஊக்கத்துடன் இருப்பாய். உலகினர் சிரிக்கும்படி மறு பிறவி எடுக்காதே.
மீறித் திரிவதும் வீணே-பரியாச மேசெயும் வார்த்தைக்கு இடமது காணே
தேறித் தெளிவது பாரம்- உன்றன் சித்தம் அடக்கித் திரிவது சாரம்.
இதை மீறித் திரிந்து தொடர்புக்குரிய வார்த்தைக்கு இடம் கொடுத்து வீணாகாதே.
ஆணவத்தால் வரும் கேடு-அதை அறியாமல் நடப்பது சுணைகெட்ட மாடு
தாணுவின் பாதத்தை நாடு-என்றும் தன் தேகம் போகாமல் சற்பங்கள் தேடு.
ஆணவத்தால் கேடுவரும் என்பதை உணர்வு கெட்ட மாடு போன்றவர் அறியார்கள். சிவனின் பாதத்தை நாடுக. தேகம் அழியாது கற்பகாலம் வர வாழ்வதைத் தேடுக.
ஆசை மயக்கில் செல்லாதே-நீ அன்புடன் தெரிந்ததை வெளியில் சொல்லாதே
பாசத்து அகப்படாது நீயே-ஞான பரிபூரணாந்த பதம் அடைவாயே.
ஆசையில் மயங்கிப் போகாதே. அன்பால் உணர்ந்ததை வெளியிடாதே. பாசத்தில் சிக்காதே. ஞான பரிபூரணனின் ஆனந்தமாகிய பாதத்தை அடைக.
பார்த்துத் தெரிந்துகொள் என்றே-எனக்குப் பட்சமாய்ப் போகரும் சொல்லினார் என்றே
ஆத்தும சுத்தியாய் நானே-அவரை அன்புடன் போற்றிப் பணிந்து கொண்டேனே.
பார்த்தே எல்லாம் தெரிக என்று பரிவாகப் போகரும் சொன்னதை ஆத்ம சுத்தியுடன் பணிந்து ஏற்றுக் கொண்டேன்.
குருநாதன் என்னை மதித்து-பேர் கொடுத்தாரே கல்லுளி என்றே விதித்து
திருநாமம் பெற்றபின் நானே-அவரை தெரிசித்து யோகத்தின் சித்தி பெற்றேனே.
குருநாதரும் போகரும் என்னை மதித்துக் கல்லுளி என்று பெயர் கொடுத்த பின்னும் நான் அவரைத் தரிசித்து சித்தியடைந்தேன்.
கல்லுளிச் சித்தன் என்றேதான்-வாயால் கனிந்துமே கூப்பிட்டார் சித்தர்களேதான்
சொல்லியபடியென்னைத் தானே-எவரும் சுட்டி அழித்திடில் நேரில் வருவேனே.
சித்தர்களே, என் குருநாதர் என்னைக் கல்லுளிச் சித்தன் என்றே வாயால் கனிவோடு கூப்பிட்டார். அப்பெயரால் என்னைச் சுட்டி அழைத்தால் நான் நேரில் தோன்றுவேன்.
என்னாலும் அறுபதோடு ஆறு-நானும் இயம்பினேன் சக்கரத்து இயல்பதின் கூறு
முன்னாலும் பின்னாலும் ஆய்ந்தே-நீ முக்கியம் இன்னதென மனதுக்குள் வாய்ந்தே.
என்னுடன் அறுபத்தாறு சீடர்கள். இதில் நானும் சக்கரத்தின் இயல்பைக் கூறினேன்.
முன்னும் பின்னும் ஆராய்ந்து சொல்லிய இதை மனதில் வைப்பாயாக.
சாத்திரம் எத்தனையோ கோடி-சித்தர் தான் சொன்ன வாத வயித்தியம் கோடி
சூத்திரம் பத்தொன்பதாக-யானும் சொல்லிய நூல்தனை வழிதுறையாக
சாத்திரங்கள் பலகோடி. சித்தர்கள் கூறிய இரசவாதம் மருத்துவம் ஆகியன ஆராய்ந்து பத்தொன்பது சூத்திரங்களாக நான் கூறிய நூலை வழியாக பின்பற்றுக.
பார்த்துத் தெளிந்தவனே சித்தன்-பரி பக்குவமாக அறிந்தோனே பத்தன்
நேர்த்தியாய் என்நூல் கற்றோனே-அவன் நீடுழிகாலம் வரை யோகம் பெற்றேனே.
பலவும் பார்த்து தெளிந்தவன் சித்தன். பக்குவத்தை அறிந்து உயர்வு அடைந்தனே பக்தன். நேர்த்தியாய் என் நூலைக் கற்பவன் நீடூழிக் காலம்வரை யோகம் பெற்றவன் ஆவான்.
கஞ்சமலைச் சித்தர்.
பரிபூரணானந்த போதம்-சிவ பரப்பிர்மமான சதாசிவ பாதம்
உரிதாம் பரம் பொருளை உள்ளு-மாயம் உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு-சிவன் அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு
துச்சமுசார விசாரம்-அற்பச் சுகமது துக்கம தாம்வெகு கோரம்
நிச்சய மானவி சாரம்-ஞான நிர்மல வேதாந்த சாரமே சாரம்.
முழுமையும் பூரணமும் ஆனந்தமாகிய அறிவு சிவமாகிய பரப்பிரம்மம் ஆகிய சதானந்தத்தின் பாதமாகும், பரம்பொருளையே நினைத்து மாயத்தாலாகிய பிரபஞ்சத்தை நீக்கு. சிவ நாமத்தையே சொல்லுக. சிவனடியார்களுக்குப் பணி செய்வதை அன்பாய் செய். நிலையில்லாதவற்றை விசாரித்து நிற்பது மிகச் சிறிய சுகம். அது துக்கமாக மாறி வெகு கோரமாய் ஆகும். நிலையான பொருள் பற்றி விசாரித்தால் ஞானமும் நிர்மலமும் தரும். வேதாந்தத்தின் சாரமே உயர்வுக்கு வழியாகும்.
கற்பனையாகிய ஞாலம்-அந்தக் கரணங்களாலே விளந்த விசாலம்
சொற்பன மாம் இந்த்ரசாலம்-அன்று தோன்றி விட்டாலது சூட்சானுகூலம்.
அற்பமதானப் பிரபஞ்சம்-அது அனுசரித் தாலே உனக்கிது கொஞ்சம்
நிற்பது அருள்மேவி நெஞ்சம்-அன்று நிகரில்லை நிகரில்லை மெய்ஞ்ஞானம் பொஞ்சம்
ஆங்காரத் தால்வந்த கேடு-முதல் ஆசையைக் கட்டோடே அப்பாலே போடு
தாங்காமல் ஆனந்தவீடு-அன்று தாக்கும் மனோலயம் தானாகக்கூடு.
இந்த உலகம் கற்பனையானது. மனம் முதலிய அந்தக் காரணங்களால் விரிவான உலகை உணரலாம். நிகழ்காலம் முதலிய கனவு காண்பதாகிய இந்திரசாலமே. அதில் அறிவு தோன்றினால் அது சூக்குமமாகிய துணையாகும் பிரபஞ்சமே அற்பமானது என்பதை அதை எண்ணி உணர்வதால் அது சிறிது தெளியும். நெஞ்சமோ கடவுள் அருளுக்காகவே காத்துள்ளது. அதனால் மெய்ஞ்ஞானம் நிகரற்றதாக விளங்கும். ஆங்காரத்தால் வந்தது கெடுதி. ஆகவே முதலில் ஆசையை விடுக. அப்போது ஆனந்த வீடு உன் மனதில் பொருந்தும்.
தத்துவக் குப்பைகள் ஏது-சித்தி சாத்திர மான சடங்குகள் ஏது
பத்தி யுடன் மறவாது-குரு பாதத்தைக் கண்டாற் தெரியும் அப்போது.
தூராதி தூரங்கள் இல்லை-அத்தைத் தொட்டுப் பிடிக்க என்றால் வெகு தொல்லை
காரண தேசிகன் சொல்லை-நம்பிக் கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை
ஆணவத்தால் வந்த காயம்-அதில் ஐவரிருந்து தொழில்செய்யும் ஞாயம்
காணவமாம் போகும் மாயம்-நன்றாய்க் கைகண்ட சூத்திரம் சொன்னேனுபாயம்.
தத்துவமாகிய குவியல்கள் எது. சித்திக்கான சாத்திரம் சடங்கு எது. பத்தியுடன் குரு பாதத்தை மறவாமல் தொழுது வந்தால் எல்லாம் விளங்கும். தூர தூரமாகத் தெரிவதெல்லாம் உண்மையில்லை. அதை தொட்டுப் பிடிப்பது என்றால் தொல்லை. அறிவு தரும் குருவின் சொல்லை நம்பிக் கருத்தில் வைத்தால் அத்தூரங்கள் ஓர் எல்லையில் அகப்படும். ஆணவம் மறுபிறப்பையும் இந்த உடலையும் தந்தது. ஐந்து புலன்கள் எல்லாவற்றையும் நடத்துகிறது. அறிவால் காண நேர்ந்தால் மாயம் கழியும். நல்ல சூத்திரத்தால் உபாயம் சொன்னேன்.
மூடர் உறவு பிடியாதே-நாரி மோக விகாரத் தால் நீ மடியாதே
ஆடம்பரம்படியாதே-ஞான அமுதம் இருக்க விஷம் குடியாதே.
தான் என்று வாது கூறாதே-பேசி தர்க்கங்கள் இட்டுச்சள் என்று சீறாதே
ஊனென்ற பாசம் மாறாதே-போனால் உன்னானை உன்மனஞ் செத்துந் தீராதே
வந்த பொருளைத் தள்ளாதே-நீயும் வாராததற்கு வீணாசை கொள்ளாதே
சிந்தை வசமாய்த் துள்ளாதே-சும்மா சித்திரம் போலிருந்து ஒன்றும் விள்ளாதே.
தேக பாச பவபந்தம்-அப்பொருள் சிற்றின்ப மானது சிச்சீர்க் கந்தம்
பாகமது ஆனவே தாந்தம்-பொருள் பாவித்துப் பார்க்கில் உனக்கிது சொந்தம்.
அறிவிலாதார் உறவைக் கொள்ளாதே. மங்கையர் மோகத்தால் மடியாதே. ஆடம்பரமாக இருக்காதே. ஞானமாகிய அமுது இருக்க நஞ்சைக் குடிக்காதே. தான் என்று அகந்தையாய் வாதம் செய்யாதே. தர்க்கம் பேசிச் சண்டையால் சீறாதே. உடம்பின் பாசத்தை மறுக்காதே. உடம்பு போனால் உன் மேல் ஆணை உன் மனமும் செத்து விடும் எதுவும் தீர்வாகாது. தானாக வந்த பொருளைத் தள்ளி விடாதே. கிடைக்காத ஒன்றுக்கு வீண் ஆசை கொள்ளாதே. சிந்தை வசமானதாகத் துள்ளாதே. சித்திரம் போல் இருந்து மவுனம் செய்க. தேகத்துக்குரிய தொடர்புகள் பாவமான தொடர்புதருவது சிற்றின்பமாகும். அது மிகச் சிறிய வாசனையால் வந்தது. பாகம் செய்யப் பெற்ற வேதாந்தத்தைப் பொருளாகப் பாவித்து உணர்ந்தால் உன் சொந்தம் உனக்கு விளங்கும்.
வஞ்சியர் ஆசை ஆகாதே-அந்த மயக்கமானாற் கொஞ்சமட்டிற் போகாதே
அஞ்சியமன்கைச் சாகாதே-கெட்ட ஆசா பாசமாம் நெருப்பில் வேகாதே.
கல்வி மயக்கங் கடந்து-எல்லாம் கற்றோம் என்று எண்ணுங் கசட்டைத் தொலைத்து
சொல்வெப்பினாலே கிடந்து-இரு சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து.
ஓடித் திரியும் கருத்து-அதை ஓடாமல் கூட்டிப் பிடித்துத் திருத்து
நாடிக் கொண்டு அம்பைப் பொருத்து-அந்த நாதந்த வெட்ட வெளிக்குள் இருத்து.
சாண்வயிற்றால் அலையாதே-நிதம் சஞ்சலப்பட்டுக் கொண்டே மலையாதே
ஆணவத்தால் உலையாதே-உனக்கு ஆனந்த முத்தி அது நிலையாதே.
பெண்கள் மீதான் ஆசை வழியில் போகாதே. அந்த மயக்கம் எளிதில் மாறாது. எமன் கையில் அஞ்சிச்சாக நேரும். ஆசாபாசங்கள் நெருப்பிலும் வேகாது. கல்வியாகிய மயக்கத்தையும் எல்லாம் கற்று விட்டோம் என்ற கர்வத்தையும் தொலைத்து நாதமாகிய வெப்பத்தில் இடா பிங்களா எனும் சூக்குமத்தில் ஆசை கொள்க. எங்கும் திரியும் கருத்தை ஓடாமல் கட்டி வைத்து அம்புபோல் நாதந்த வெளியில் மனத்தைச் செலுத்து. சாண் வயிற்றுப் பசிக்காக அலையாதே. எதற்காகவும் மனம் வருந்தாதே. ஆணவம் கொள்ளாதே. இதனால் உனக்கு முத்தி நிலைக்காது.
அபிமானியாகிய சீவன்-அவன் அஞ்ஞானத்தாலே அழிவுண்டு போவான்
தபம் நினைந்தால் போதம் சார்வான்-நிலை சார்ந்துகொண்டால் சத்திரூபமும் ஆவான்
நற்குரு சொன்னதே சொல்லு-தம்பம் நட்ட மென்றால் வன்னி நிலைமையிலே நில்லு
தற்சமயங்களை விள்ளு-உண்டு தன்மய மாகவே தானே நீ கொள்ளு
துன்ப இன்பங்களைத் தொட்டு-அந்தத் தொந்தங்கள் எல்லந்துருசு அறச் சுட்டு
பின்பு பாசத்தைக் கைவிட்டு-ஒன்று பேசாமல் அந்தப் பெருமையை விட்டு.
பேச்சினால் என்னென்ன தோணும்-சும்மா பேசப் பேசப் பிழைஅல்லோ
வாச்சுதலால் அம்பு பூணும்-நல்ல மாசற்ற விசாரணை வேணும்.
எதிலாவது பற்று மிகக் கொண்ட சீவன் அறியாமையால் அழியும். தவத்தை நினைத்தால் அறிவு வந்து சேரும். நல்ல நிலையை ஏற்றால் சத்தி வடிவமும் உண்டாகும். நல்ல குரு சொன்னதே சொல்லாகும் தீத்தம்பத்தை உடலுக்குள் நாட்ட குண்டலினி நிலையை விட்டுப் பிரியாது வேண்டும். நிலையான சமயத்தில் இருந்து கடவுள் மயமாகி நில். இன்ப துன்பங்கள் இரண்டையுமே சுட்டு நீக்கு. பிறகு பாசத்தை கைவிட்டு மவுனத்தில் தன் பெருமையை விட்டு நீக்கு. பேசிக் கொண்டே இருப்பதால் பிழைகள் தாம் உண்டாகும் மாசற்ற ஞானத்தைப் பற்றிய ஆராய்ச்சி வேண்டும்.
அநித்தியமானது தேகம்-அதில் ஆசையும் ஒன்றால் அடங்காது மோகம்
தனித்திருந்தால் அந்தபோகம்-ஒன்று தானாகி நிற்பதுவே சிவ யோகம்.
விரும்பாசைக்கு இடங்கள் கொடாதே-காய வேதனைக்குள்ளேநீ கட்டுப்படாதே
திரும்பச் செனனம் எடாதே-குரு தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே
கோடான கோடி தவங்கள்-அந்தக் கோவிலைச் சுற்றிச் செபிக்குஞ் செபங்கள்
பாடான தல்லோ பவங்கள்-இது பண்னுமுன் நண்ணும் துன்ப அவலங்கள்
அந்தக் கரணவிலாசம்-அதை யாராலும் தள்ளக் கூடாது பிரயாசம்
தொந்தித்து நிற்பதே பாசம்-அதிற் தோன்றாமற் தோன்றுஞ் சுயம் பிரகாசம்
நாமசொரூபமே சித்தி-அதை நாடித் தெளிந்து கொண்டால் அல்லோ முத்தி
நேமசொரூபமே வித்து-எங்கும் நிச்சய மாகும் நிரந்தர வத்து.
இந்த உடல் நிலையானது அல்ல. அதில் ஆசை வந்தால் மோகம் அதிகமாகும். தனித்து மவுனமிருந்தால் இன்பம். பரம்பொருளுடன் ஒன்றி நிற்பது சிவயோகம். ஆசைக்கு இடம் தராதே. உடல் வேதனைக்குள் சிக்காதே. மறுபிறவி எடுக்காதே. குருவின் பாத அன்பை விடாதே. கோடித் தவங்கள், கோவிலைச் சுற்றி ஜெபிக்கும் ஜெபங்கள் ஆகியவை பரிகாரமாகாது. அவலங்களே மிஞ்சும். அந்தக் கரணங்களை விரித்தால் யாரும் தடுக்க முடியாது. தொடர்பு விடாது பாசம். அதனுள் சுயமான ஆன்ம ஒளியும் மறைந்திருக்கும். நாமத்தை இறை வடிவமாகக் காண்பது சித்திக்கு வழி. அதைநாடித் தெளிவு கொண்டால் முத்தி வரும். நியமங்களே விதையாகும். கடவுள் எங்கும் நிலையாய் உறுதியாய் நிலைத்திருப்பதை உணர்க.
வகுளிநாதர் (எ) மௌனச் சித்தர்
ஆதிபெருஞ்சோதிதனை அனுதினமும் நாடி 
ஐயர்பதந்தேடிக்கொண்டு அருள்பெறவே பாடிச்
சோதியனும் மனோன்மணியாள் அருளதனைப் பெற்றுச் 
சுகருடைய பாதமதை மனந்தனிலே உற்று.
ஆங்காரம் தனையடக்கி அருள்நிலையை நோக்கி
அரியபுவனங்களெல்லாம் அறிய மனதாக்கி
பாங்காகப் பெரியோர்கள் பாதமது பணிவோம்
பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம்
பேய்க்குணத்தைச் சுட்டல்லவோ பிரமநிலை கண்டோம்
பிரமபதி தான் கடந்து சுழுமுனையுள் கொண்டோம்
நாய்போல அலையாமல் நாமிருந்தோம் தவசில்
நல்லதொரு ஆங்காரம் அடக்கிமிகப் பவுசாய்
வஞ்சகமாம் வாழ்வைநம்பிச் சஞ்சலங்கள் அடையோம்
மகத்தான மகரிடிகள் பதங்காணச் சடையோம்
பஞ்சமா பாதகரை ஒருநாளும் பாரோம்
பாவினை பற்றறுத்தோர் சிநேகிதங்கள் மறவோம்,
ஆவியாகிய பெரிய சோதியை நாள்தோறும் நாடி குருவின் பாதத்தை தேடி அருள்பெறவே துதித்து சோதியாகிய மனோன்மணியின் அருளைப் பெறச் சுகமுனிவராகிய குருவை மனத்திலே நிறுத்தி, அகங்காரத்தை அடக்கி, அருள் நிலையை வளர்த்துச் செல்வதற்கு அரிய உலகங்களில் செல்ல மனம் கொண்டு பெரியோர் பாதத்தைப் பணிவோம். பக்தி கொண்டு யோகத்தைத் தினமும் செய்வோம். பேய்க்குணங்களை நீக்கினால் பிரம்ம நிலை கண்டு பிரம்ம பதியாகிய மூலாதாரத்தைக் கடந்து சுழுமுனையுள் மனம் கொண்டோம். நாய்போல் எங்கும் திரியாமல் தவத்தில் இருந்து அகங்காரத்தை அடக்கி இருந்தோம். வஞ்சமாகிய வாழ்வை நம்பி துன்பம் அடையாமல், மகிமை கொண்ட ரிஷிகளின் திருவடி காணச் சோர்வின்றி முயல்வோம், பஞ்சமாபாதகம் செய்வோரை ஒருநாளும் சேரமாட்டோம். பாவ வினைக்ளின் பற்றுகளை அறுத்தவர் நட்பை மறக்க மாட்டோம்.

ஆயிரம்பேர் சித்தருடன் அனுதினமும் பாடி
ஆனந்த திருநடனம் ஆடுவோமே கூடி
தாயிஉமை மனோன்மணியாள் எனக்குச் சொன்ன சித்தைத்
தானறிந்து நடந்து கொள்வோம் பெரியோரை அடுத்தே
நிலையைக்கண்டு கொள்வதற்கு நினைந்து உருகிவாடி
நிர்மலமாம் ஐயன்பதம் தினந்தினமும் தேடி
கலை அறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம்
கனல் எழுப்பி மூலமதைச் சுகமுடனே படித்தோம்.

ஊணுறக்கம் நீக்கியல்லோ யோகநிட்டை புரிந்தோம்
உற்றாரைப் பற்றறுத்து மலைக் குகையில் இருந்தோம்
காணுதற்கும் எட்டாது பரவெளியைக் கண்டோம்
கற்பமது சாப்பிட்டு உடல் வளர்த்துக் கொண்டோம்
தந்தையார் கற்றமொடு தளர்ந்து உறவாடோம்
தவநிலையைப் பெற்றுணராச் செய்கையைத் தேடோம்
விந்தையுடன் ஞான்மதை மேன்பாடாய்த் தெரிந்தோம்
மேலான பரவெளியின் அருளதனை அறிந்தோம்.
ஆயிரம் பேர்களான சித்தர்களைத் தினமும் பாடி ஆனந்த நடனம் ஆடுவோம், யாவரும் சேர்ந்து பெரியோரைச் சேர்ந்து தாயான உமையம்மையான மனோன்மணியாள் சொன்ன சித்தை நயமாக அறிந்து அப்படியே நடப்போம். ஐயன் நிலையை அறிந்து கொள்ளத் தினமும் நினைந்து உருகவேண்டும். நிர்மலமான குருவின் பாதத்தை தினமும் தேடவேண்டும். சந்திரகலை சூரியகலையறிந்து பிராணாயாமம் செய்து குண்டலினிக் கனலை எழுப்பி மூலாதாரத்தை உணரவும். உணவும் உறக்கமும் விட்டு யோக நிட்டையில் இருந்தோம் உற்றாரை விட்டுப் பற்றுகளை நீக்கி மலை குகைகளில் தவமிருந்தோம். காணமுடியாத பரவெளியையும் காண்போம் கற்பமருந்து சாப்பிட்டு உடல் வளர்ந்தோம். தாய் தந்தையரோடும் சுற்றத்தாரோடும் தளர்ச்சியடைந்து உறவு கொள்ள மாட்டோம். தவநிலைக்குப் புறம்பாகச் செயல்படோம். ஞானத்தை மேம்பாடய்த் தெரிந்தோம். பரவெளியின் கருணையை அறீவோம்.
நாசிநுனி வழியதனில் நாட்டமதைத் தெரிந்தோம்
நல்லதொரு மூலவட்டம் சுழியை அறிந்தோம்
வாசியேற்ற வகையறிந்து ஆசைகளை அறுப்போம்
வையகத்தின் செய்கைதன்னை வழுவாமல் மறுப்போம்
சக்திசக்ர பீடமேறிச் சுத்தவெளியைக் கண்டோம்
சகலமும்பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம்
சித்திபெற்ற முத்தர்களை எத்தினமும் அறிவோம்
சீவகலை இன்னதென்று நாட்டமுடன் தெரிவோம்
தொண்ணுத்தாறு தத்துவத்து உரைத்தனகள் கொண்டோம்
துய்யபர வெளிதனிலே அய்யர்பாதம் கண்டோம்
விண்ணுலகு இன்னதென்று அறிந்து கொண்டேன்யானே
மேலான பரவெளியின் ஒளியைக் கண்டுதானே
நானென்ற ஆணவத்தை நயந்தறுத்து விடுத்தேன்
நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன்
தானென்ற கருவமதைத் தணித்துவிட்டு வந்தோம்
தவமேதான் கதிஎன்று சரவழியில் உகந்தோம்.
மூக்கு நுனி வழியாகப் புருவமத்தியை அடைந்தோம். மூலாதாரத் தாமரையில் உள்ள சுழியை அறிந்தோம். பிராணாயாமம் செய்யும் முறையறிந்து ஆசைகளை நீக்கிடுவோம். உலகில் செய்யத்தக்கதை தவறாமல் செய்வோம். சக்தியின் சக்கரத்தை வழிபட்டுச் சுத்தவெளியைக் கண்டோம். எல்லாம் பரவெளியில் அடக்கம். சித்தி பெற்ற முக்தர்களை தினமும் அறிவோம். சீவகலையை கண்வழியே அறிவோம். தொண்ணூற்றாறு ததுவங்களையும் அடக்கினோம். தூய்மையான பரவெளியில் தலைவரின் திருவடியைக் கண்டோம். வானுலகத்தை பரவெளியின் ஒளியால் அறிந்தோம். நான் எனும் செருக்கை அறுத்தேன். குகைக்குள்ளே நன்மை பெற்று வாழ்ந்தேன். தான் என்னும் கர்வத்தயும் குறைத்துவிட்டு தவமே உரிய வழி என சஞ்சார வழியில் மகிழ்ந்தோம்.
ஆதிநாதர் (எ) வேதாந்தச் சித்தர்
ஆதிமத்யாந்தமதைக்-கிளியே அன்பாய் அறிவதற்குச்
சோதிசுடரொளியைக்-கிளியே தோத்திரம் செய்து கொள்ளே
வாசாம கோசரத்தின்-கிளியே மார்க்கம் அறிந்து கொண்டு
நேசா அனுபவத்தில்-கிளியே நின்று தெளிவாயே
அசல மூலம்திற்-கிளியே அந்தம் அறிவாயோ
விசனம் அற்றவிடம்-கிளியே மேவித் தெளிந்து கொள்ளே
சுத்தபிர மத்திலேகில்-கிளியே தோன்றிய சத்தி தன்னில்
வித்தாரம் உண்டான-கிளியே விபரம் அறிந்து கொள்ளே.
சத்தாதி வாக்காதி-கிளியே தனுகரணங்கட்கு எல்லாம் 
வித்தான மூலமதைக்-கிளியே மேவித் தெளிந்து கொள்ளே
சத்தியில் உண்டான-கிளியே சதாசிவம் ஆனதென்று
நித்தியம் நீஅறிந்து-கிளியே நின்று தெளிவாயே
அச்சிவமானதிலே-கிளியே அண்டபிண்டங்களெல்லாம்
உச்சிதமாய் உதித்தே-கிளியே உண்மை அறிந்துகொள்ளே
நாலுவகையோனி-கிளியே ஏழுவகைத் தோற்றத்
தாலும் மகரசரம்-கிளியே தத்துவம் உற்றதடி.
ஆதி நடு முடிவு ஆகியவற்றை அன்பாய் அறிவதற்குச் சோதி சுடராய் உளொளி இருப்பதை தோத்திரம் செய்து கொள் கிளியே. பேசும் முயற்சிக்கு வாக்கு எழும் இடம் சார்ந்த வழி மூலாதாரம் அறிந்து கொண்டு நேசம் கொண்டு அணுபவிப்பாயாக கிளியே. மலையின் அடியாகிய மூலத்தில் உட்பகுதி அறிவாயோ. அதுவே துன்பம் இல்லாத இடம். அதை மேவித் தெளிவாய் கிளியே. சுத்தபிரம்மத்தில் ஏகினால் அதில் தோன்றிய சத்தியையும் அதில் உண்டன ஞானத்தையும் பற்றிய விவரம் அறிந்துகொள் கிளியே. சத் குணம் வாக்கு ஆகியவற்றுக்குத் தொடக்கமாகவும் உடல் கருவிகளுக்கு இருப்பிடமாகவும் உள்ள மூலாதாரத்தில் உணர்வைச் செலுத்தி தெளிந்து கொள் கிளியே. சத்தியில் மலர்ந்த சதாசிவத்தை நாள்தோரும் நீ ஆறிந்து தெளிவாயாக கிளியே. எல்லா அண்டங்களும் அவற்றில் உண்டான பொருள்களும் சிவத்தில் உதித்தன என்ற உண்மையை அறிந்து கொள்வாய் கிளியே. பிறப்பு வகையான முட்டை, யோனி, விதை, வியர்வை ஆகிய நான்கும், ஏழுவகையான பிறந்து இறந்து மீண்டும் பிறக்கும் பிறவிகளும், நாக்கால் ஒலி எழுப்பும் தத்துவம் பெற்றன கிளியே.
அகாரம் உகாரம் ரெண்டும்-கிளியே யகாரம் உருவாச்சு
சிகாரம் வந்தவிதம்-கிளியே தேறித்தெளிவாயே.
சத்துச்சித்தானந்தன்-கிளியே தத்துவஞ் சொல்லுகிறேன்
நித்தியானந்தமதைக்-கிளியே வித்தாரம் செய்யுகிறேன்
சாமி அருள்வேணும்-கிளியே சாதனை நால் வேணும்
வாமிதயைவேணும்-கிளியே வத்தவனாக வேணும்
அஞ்சுபஞ்சகோசம்-கிளியே ஆராய்ந்து பார்க்க வேணும்
நெஞ்சந்தெளிய வேணும்-கிளியே நீயேநான் ஆகவேணும்
ஆசாபாசங்களையே-கிளியே லேசமும் எண்ணாதே
வாசனை மூன்றினாலே-கிளியே மோசமும் போகாதே.
மானாபி மானம் அற்று-கிளியே தானென்று அகமும் அற்று
நானப்பிர பஞ்சமற்று-கிளியே நாதமயத்தைப்பற்ற
பத்தரை மாற்றுத்தங்கம்-கிளியே சுத்த வெளியாகும்
எத்திசை பார்த்தாலும்-கிளியே தத்துவமாயிருக்கும்
மூலாதாரமுண்டு-கிளியே முக்கோண வட்டமுண்டு
வாலை கணேசனுண்டு-கிளியே வல்லபை சத்தியுண்டு
அகரம் உகரம் இரண்டுமே யகரமாகிய புருவ மத்தியை உண்டாக்கின. சிகரம்- நடுமார்பு. இது ஆகாசமாவதை தெளிந்து காண் கிளியே. சத்+சித்+ஆனந்தம் மூன்றுமே சதாசிவத் தத்துவமான நாள்தோறுமான ஆனந்தத்தின் விவரம் கேள் கிளியே. வாமி- இடப்பக்கத்தில் இருக்கும் பராசக்தி. இறையருள் வேண்டும். சாதிக்க வேண்டிய நான்கு இதழ் தாமரை தொடர்பு வேண்டும். பராசக்தியின் அருள் வேண்டும். ஐந்துவிதக் கோசத்தை ஆரய்ந்து தான் பார்த்தறிய வேண்டும் கிளியே. நெஞ்சமாகிய நினைவு உள்ள இடத்தைத் தெளிந்து கொண்டு நீயே நானாக வேண்டும். ஆசாபாசமான பற்றுகளை ஒரு சிறிதும் எண்ணாதே. மண், பெண். பொன் ஆகிய மூன்று வித வாசனையால் மோசம் போகாதே. மானமும் விருப்பமும் தான் என்னும் செருக்கு இல்லாது நானே பிரபஞ்சம் என்பதும் இன்றி நாதத்தை பற்றுக கிளியே. தூயதான பத்தரை மாற்றுத் தங்க நிறத்தில் சுத்த வெளி தோன்றும் எல்லா திசைகளிலும் தத்துவம் வெளிப்படும். மூலாதாரமும் அதன் நடுவே முக்கோண வட்டமும் வாலை பெண்ணும் கணபதியும் வல்லபையான் சத்தியும் உண்டு கிளியே.
சுவாதிட்டானமுண்டு-கிளியே சுத்த பிரமாவுமுண்டு
உவாதினி வாதிக்கெல்லாம்-கிளியே உற்றவர் கண்டு கொள்ளே
மேலே மணிப்பூரகம்-கிளியே விட்டுணுக்கு உற்றவிடம்
கலா தீதத்துக்கும்-கிளியே கருத்தர் அவர்தாமே.
பாரு மனாகிதத்தில்-கிளியே பார்வதி நாதர் அங்கே
சேரும் தலம் இதுவென்று-கிளியே தெரிசித்துக் கொள்வாயே
கண்டம் விசுத்தியல்லோ-கிளியே கஞ்சம் பதினாறு
அண்ட பிண்டங்களெல்லாம்-கிளியே ஆஞ்ஞை மகேசனுக்கு
இரண்டு கண்நடுவே-கிளியே இருக்கும் மயேசுரனை
திரண்ட சிந்தையினால்-கிளியே தேறித் தெளிந்து கொள்ளே.
ஆயிரத்து எட்டிதழில்-கிளியே அமர்ந்த சதாசிவத்தை
நேய மதாகவேதான்-கிளியே நிதம் பணிந்து ஏற்றிக்கொள்ளே
ஈதோர் குணமாச்சு-கிளியே இரண்டாம் குணந்தனையும்
மூதோர் மொழியெனவே-கிளியே முற்றிலும் எண்ணுவையே
சாதனம் நாலுவகை-கிளியே சற்று நிதானமாய்
போதம் மிகுதியினால்-கிளியே புத்தி என்றே உணர்வாய்
சுவாதிட்டானமும், பிரம்மாவும், பிறைச் சந்திரனும் இருக்குமிடம் அறிக கிளியே. இதற்குமேல் உந்திச் சுழியில் மணிப்பூரகம் இருக்கும். எல்லாக் கலைகளும் மிகுந்த அந்த இடம் திருமால் இருக்குமிடம். கருதுவதற்கு உரியவரும் அவரே கிளியே. பார்வதி கணவராகிய சிவம், மனம் தங்குமிடமாகிய மார்பு நடுவில் அநாதகத்தில் இருப்பார். இவர்கள் சேரும் இடம் அறிவாய் கிளியே. தொண்டைக் குழியில் இருப்பது விசுத்தி பதுனாறு இதழ்த்தாமரை உடையது. அண்டங்கள் பிண்டங்கள் அனைத்துக்கும் ஆணை யிடுபவன் மகேசனின் இடமது கிளியே. இருகண் நடுவான புருவ மத்தியில் மயேசுரன் இருப்பதைத் தெளிந்துகொள். தலைக்குள் ஆயிரத்து எட்டிதழ்த் தாமரையில் அமர்ந்த சதாசிவத்தை நேசமாய் நித்தமும் பனிவாய் கிளியே. இவைகள் ராஜஸ தாமச குணங்களுக்குரியது அறிவாய் கிளியே. இறைவனைக் காணச் சாதனம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வகையையும் நிதானித்து புத்தியில் உணர்க கிளியே,
சமாதி ஆறுகுணம்-கிளியே சாமா வகையம் அலவே
உமாமகேசனுக்கே-கிளியே உற்றது என்றே தெளிவாய்
உற்ற சமந்தானும்-கிளியே ஒன்றவைக் கும்பினும்
மற்றுள் தமகுணத்தைக்-கிளியே மாற்றல் அரிது அலவே
விடல் சகித் தல்தனைக்-கிளியே மேன்மைய தாகக் கொண்டு
தொடர் சமாதானம்-கிளியே தொந்தன் நமக்காமே.
சிரத்தை எப்பொருட்டும்-கிளியே தீவிரம் ஆகுமதே
பரத்தைத் தானடையக்-கிளியே பற்றொன்றும் இல்லை கண்டாய்
பத்தியை விட்டுவிட்டுக்-கிளியே பாவனையைக் கடந்து
அத்துவிதானத்தைக்-கிளியே அனுபவித்து உய்வாயே.
பெண்ணாசை பொன்னாசை-கிளியே புமியி மீதாசை
மண்ணாசை எண்ணாதே-கிளியே வாசிஎன்னால் அறியே.
தேகம் தேகிரெண்டு-கிளியே தேகம்பொய் தேகிமெய்யே
மோகாந்தம் விட்டாக்கால்-கிளியே முத்தியடைவாயே
பாவ அபானம் அற்று-கிளியே பரத்தினுடன் பொருத்திச்
சுவானுபவந் தனிலே-கிளியே சொக்கி நீவாழ்வாயே.
சமாதி என்பது ஆறு வகையாகும். (தத்துவலய சமாதி, சவிகற்ப சமாதி, நிர்விகற்ப சமாதி, சஞ்சார சமாதி, ஆருட சமாதி, மவுன சமாதி) உணர்வதற்கு அரியன. உமாமகேஸ்வரனுக்கே உரியது கிளியே. சமம் என்பது இறைவனுடன் ஒன்ற வைக்கும் தாமஸ குணத்தை மாற்றுவதுமாம். விடுதல், சகித்தல் என்ற நடவடிக்கைகளால் மேன்மை பெற்றுத் தொடர்ந்து சமமாக இருக்கும் கிளியே. எப்பொருள் இடத்திலும் சிரத்தை கொள்வதே தீவிரம். பரம் பொருளைச் சென்று அடையப் பற்றுகள் இல்லாதிருக்க வேண்டும். பத்தியை விடுத்துப் பாவனை செய்வதையும் கடந்து, அத்துவிதமாய் (கடவுளும் நாமும் இரண்டு இல்லாதபடி ஒன்றுதல் அத்து விதமாகும்)- ஏகமாய் இருப்பதை அனுபவிப்பாயாக. பொன், பெண், மண் ஆசைகளும் உலகாளும் ஆசையும் விட்டு விட்டுப் பிராணாயாமத்தால் என்னை அறிக கிளியே. உடல் என்பதும், உடலுக்குள் இருப்பது உயிர் ஆத்மா என்பதும் உண்டு. இவற்றில் உடல் அழிவது. ஆன்மா அழியாதது ஆகும். மோகத்தை முழுவதுமாக விட்டதும் முக்தியடையலாம். பாவித்தலும், அனுபவியாமையும் இல்லாமல் பரம்பொருளில் பொருந்திச் சுய அனுபவத்திலே ஒன்றி வாழ்வாயே.
*******

புதன்கிழமை, 18 September 2013 11:40

குருந்தகவல்கள்

ஞாயிற்றுக்கிழமை, 15 September 2013 00:00

சக்தி/ஞான யோகம்

             ஓம் நமசிவாய!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்

கடிகணபதி வர அருளினன் மிகு கொடை

வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

                     ******

சக்தி-ஞான யோகம்

சக்தி, மந்திர சக்தியைப் பற்றியது ஆகும். சக்தி யோகம் அல்லது ஞான யோகம் எனப்படும். மந்திரங்களை உச்சரித்து உபாசிப்பவன் ஆத்மா. மந்திர வழி முறையாகும். மந்திரத்தால் சித்தமும் அவ்வாறு ஆகும் என சக்திகளால் உண்டாகும் வழிமுறைகளை கொண்டது. சிவ யோகத்திற்குப் பின் பயிலவும்.

1.சித்தம் மந்திரத்தில் விளங்கும் மாபெரும் சக்தியாக விளங்கும்.

சித்தம்-தெய்வத்தன்மையை உணருவது. மந்திரம்- ஒரு தேவதையை உள்ளடக்கி சொல்லப்பட்ட ஓர் ஓசை. சித்தம் மந்திரத்துடன் ஐக்கியப்படும்போது சித்தமே மந்திரமயமாகும். அந்த தேவதையின் சக்தியை பெறுவதால் மந்திராத்மா எனலாம்.

2.தீவிர முயற்சியே சாதகம். மந்திரத்தை பலமுறை சொல்லுதல், அதையே தியானித்தல், அந்த தேவதையை மனதில் ஆழமாகப் பதித்தல் ஆகியன தீவிர முயற்சி. சாதகம்- பயிற்சி. இரண்டும் சித்தத்தை மந்திரமயம் ஆக்கும்.

3.மந்திரத்தின்-ரஹஸ்யம் மறைவுப் பொருள் வித்யா என்கிற ஞானமயமான உடலைப் பெறுதல் ஆகும். வித்யா சரீரஸத்தா- தானும் கடவுளும் ஒன்று என உணருதல். பிரபஞ்சம் தனக்கு வேறானது இல்லை, தன்னால் உருவாக்கப் பெற்றதே பிரபஞ்சம் என்ற ஞான உணர்வை வளர்த்துக் கொள்வது. அஹம் பிரஹ்மாஸ்மி என்ற நிலையாகும்.

4.மயா சக்தியின் காரணமாக மனத்தின் விருப்பம் நிறைவேறுவது என்பது தெளிவில்லாத கனவு போன்றது. கர்பே-மாயா சக்தி. சித்த விகாஸோ- மனத்தின் விருப்பம் நிறைவு பெறுவது. அவிசிஷ்ட வித்யாஸ்வப்னஹ- குறைவான அறிவினால் தெளிவில்லாத கனவைக் குறிக்கும். விசிஷ்ட- தனித்த. தனித்த அறிவுடைய ஆத்மா உலக மாயையின் கர்ப்பத்தில் தெளிவற்ற கனவு போல் பல செய்திகளை மனம் தெளிய உணரமுடியாத நிலையில் இருக்கும்.

5.எல்லையில்லாத விரிந்த தியானத்தில் மட்டுமே இயல்பான மெய்யறிவான சிவநிலை கிடைக்கும். வித்யாஸமுத்தானே-கடவுளைப் போன்ற உயர்ந்த மெய்யறிவு. ஸ்வாபாவிகே- ஆத்மாவின் இயற்கை அறிவு. கேசரீ- பரந்து விரிந்த தியானம். சிவாவஸ்தா- சிவத்தின் அவஸ்தை நிலை. பரந்து விரிந்த தியானமே சிவநிலையையும் மெய்யறிவையும் தரும்.

6.ஒருவரை குருவே வழிநடத்த முடியும்.

குரு- யோக நெறியில் முன்பே பயிற்சி பெற்றவர். உபாய- வழி. குரூர்+உபாயா= குருருபாய= குருவே வழியாவார். குருவழியாக கடவுளின் சைதன்யம் ஒரு மாணவனை அடையும். மந்திரம், யோகம், தந்திரம், தத்துவம் ஆகிய எல்லாச் சித்திக்கும் குருவே வழியாக இருப்பது மரபு.

7.எழுத்தோசைப் பட்டியல் மெய்யறிவு தரும்.

சக்கரம்- வரிசை. மாத்ருகா சக்ரம்- தாய்ச் சக்தியைத் தனக்குள் கொண்டிருக்கும் உயிர், மெய், உயிர்மெய் எழுத்து வரிசையாகும். ஸம்போதா- குருவழியில் சென்றால் எழுத்து ஓசைகள் மந்திர ஓசையாக மலர்ந்து பலன் தரும். எழுத்தோசைகளும் தத்துவங்களும் கீழே உள்ளது.

க1, க2, க3, க4, ங

பஞ்சபூதம்

ச1, ச2, ஜ1, ஜ2, ஞ

பஞ்ச தன்மாத்திரை

ட1, ட2, ட3, ட4, ண

கன்மேந்திரியம்

த1, த2, த3, த4, ந

ஞானேந்திரியம்

ப1, ப2, ப3, ப4, ம

அந்தக்கரணம் மற்றும் சீவன்

8.எழுத்தோசைப் பயன் அறிந்தோர்க்கு அவர் உடலே வேள்விக்குரிய ஹவிஸாகும். ஹவிஸ்- வேள்வியில் போடும் பொருள்கள். எழுத்தோசையின் மாத்ருகா சக்தியை உணர்ந்து பயிற்சியடைந்த யோகியின் உடல், யோகமாகிய வேள்வியில் சொரியப்படும் அவிர்பாகம் ஆகும்.

9.யோகிக்கு அவன் பெற்ற அறிவே உணவாகும். சமாதி நிலையடைந்த யோகிக்கு பசியும் உணவும் தேவையில்லை. உலகியல் அறிவு குறைவுடையது. அந்த அறிவை இழந்து மெய்யறிவு உண்டாகும்.

10.புதிய பேரறிவு வந்ததும் சுத்த வித்யாவான அவரிடம் கனவுகள் போல பல புதிய ஞானத்தை தரிசிக்கலாம். வித்யாஸம்ஹாரே- உலகியல் அறிவு அழிவது. ஸம்ஹாரம்- தெய்வீகமான அறிவு தானே தோன்றும்.

 

சக்தி/ஞான யோக பாக்களின் தொகுப்பு:-

1. மந்திரத்தை தியானிக்கும் சித்தம் அம்மந்திர சக்தி மயமாகும்.

2. முயற்சியே சாதகம் எனப்படும்.

3. ஞான மயமான உடலைப் பெறுவதே மந்திரத்தின் மறை பொருளாகும்.

4. மாயா சக்திகளின் காரணமாக மனம் திருப்தியடையாது, தெளிவற்ற கனவாக உணரும்.

5. பரந்து விரிந்த தியானமே இயற்கையான மெய்யறிவைத்தரும் சிவ நிலையாகும்.

6. குருவே வழியாக இருந்து ஸித்தி அருள்வார்.

7. எழுத்தோசைப் பட்டியலே மெய்யறிவைத் தரும்.

8. யோகமாகிய யாக குண்டத்தில் யோகியின் உடலே அவிர்ப்பாகமாகும்.

9. யோகி தன் அறிவையே உணவாக உண்பான்.

10.பழைய அறிவு மறைந்து மெய்யறிவு தோன்றும். எல்லாம் கனவு போல் காட்சி தரும்.

&&&&&&

ஞாயிற்றுக்கிழமை, 15 September 2013 00:00

அணு/கிரியா யோகம்

          ஓம் நமசிவாய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்

மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்

வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்

உள்ளக் கருத்தின் உளன்!

                     ******

அணு-கிரியா யோகம்

அணுத்தன்மையாவது, கிரியா யோகம் எனப்படும். யோகத்தின் போது இந்திரியங்கள், பிராணன் ஆகியன அணுத்தன்மையடைந்து ஒரு நிலைப்படும் வழி முறை. அணு/கிரியா யோகம் சிவ யோகம், சக்தி-ஞான யோகத்திற்குப்பின் பயிலவும்.

1.சித்தமே ஆத்மாவின் அடையாளம். மனம்- விருப்பம், புத்தி– ஆராய்தல், அகங்காரம்– வெறுப்பு ஆகிய மூன்று பகுதிகள் ஒடுங்கிய நிலையில் நான்காவதான சித்தம் தலை எடுக்கும். நன்மையினை நாடும் நடுநிலை உணர்வே சித்தமாகும். அப்போது எல்லாவற்றிற்கும் பின் உள்ள ஆத்மாவின் வெளிச்சம் தெரியும். ஆத்ம, உடல் இரண்டிற்கும் தொடர்பாக இருப்பது சித்தம்.

2.நம்முடைய ஞானம் பந்தங்களால் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அது சிற்றறிவாக இருக்கும்.

3.பகுத்தறிய முடியாத கலை, தத்துவம், எல்லாம் அறிவற்ற மாயையால் வந்தது. ஐம்பெரும் பூதங்கள், ஐம்பொறிகள், ஐம்புலன்கள் யாவும் தத்துவம். இதை இயங்கச் செய்வது ஒலி, ஒளி, நிறம் முதலியவற்றின் அணுத்துகள்களாய் உள்ள கலைகள். ஜீவாத்மாவைத்தவிர தனு- உடல், கரண- உறுப்பு, புவன- உலகம், போகங்கள்- இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் உருவாக்கியது மாயாசக்தி. பரமாத்மா, ஜீவாத்மா தவிர யாவும் மாயை. இதனால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஐக்கிய உணர்வு ஏற்படும்.

4.உடம்பிற்குள் பல்வேறு கலைகளும் ஒன்றாக கலந்துள்ளன.

உடல்- தூல உடல் ஆகும். புரியட்டகம் எனப்படும் எட்டுப்பகுதியும் உடையது சூக்கும உடல். அதற்குமேல் தத்துவம், கலை கொண்ட தூல உடல் ஆகும். பிறவியின் கருமங்களை ஏற்று நிற்கும் ஜீவாத்மாவே காரண உடம்பு ஆகும். தியானத்தால் உடம்பிற்குள் கலைகள் ஒன்றாகும்.

5.நாடியில் பிராண சக்தியை நிறுத்தும்போது பஞ்ச பூதங்களை வெல்வதும், அவைகளில் செல்லும் மனதை மீட்பதும், அவற்றை வேறுபடுத்துவதும் நிகழும். நாடி- சுழுமுனைநாடி. பூதகைவல்ய- பூதங்களில் ஒன்றிய மனதை மீட்பது. பிராணாயாமத்தால் நாடியில் பிராணன் செல்வதைக் கட்டுப்படுத்துவதாகும். பஞ்சபூதங்களால் ஆகிய ஞானேந்திரியம், கர்மேந்திரியம், அந்தக்கரணம் முதலியன பூத ஜய பலன்கள் ஏற்படும் இடம்.

6.இயற்கையை வெல்லும் அபூர்வ சித்திகள் அறியாமையை முதலியன மறைந்த பின்பே நிகழும். மோஹ+ஆவரணாத்-மோகமாகிய அறியாமையை மறைத்தல். ஸித்தி– இயற்கையை வெல்லக் கூடிய சக்தியுடைய சித்திகள். பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியன மூலம் உடல் புனிதமாகி சக்திகள் கைகூடும்.

7.மோகத்தை வென்றால் எல்லையற்ற எங்கும் பரவிய இயற்கை அறிவு கைகூடும். மோகம்-அறியாமைக்கு காரணம், மோஹஜயாத்- மோகத்தின்மேல் கொள்ளும் வெற்றி. அபோகாத்-பெரிய விரிவு. ஸஹஜ வித்யா- எப்போதும் இயல்பாயிருக்கும் அறிவு.

8.விழிப்புணர்வுடையவனுக்கு உலகம் தெரியாது. உள் ஒளியே தெரியும். ஜாக்ரத்- பரம்பொருளுடன் ஒன்றி உணரும் விழிப்புணர்வு. த்விதீய- யோகியின் இரண்டாவது காணும் உலகம். ஒன்று அவரும் பரமும் ஒன்றியதாகும். இரண்டு அவரை நீக்கிய புவனம். கரஹ- கை,செயல் பரம்பொருளோடு ஒன்றி உணர்வதை செய்வது.

9.உலக வாழ்வெனும் நாடகத்தில் ஜீவாத்மா ஒரு நடிகன். ஆத்மா-ஜீவாத்மா. நர்தக- நடிகன், ஜீவாத்மா வாழ்வு எனும் நாடகம் முடிந்தபின் பரம் பொருளை அடைகிறது.

10.அந்தராத்மாவே ஆத்மா எனும் நடிகன் நடிக்கும் அரங்கமாகும். ரங்க- வாழ்க்கை நாடகம் நடைபெறும் மேடை. அந்தராத்மா- ஆத்மாவின் உள் உணர்வு. அந்தராத்மா மூலம் ஆத்மா செயல்படும்.

11.இந்திரியங்களே இந்நாடகத்தை காண்பவர்கள். ப்ரேக்ஷகாணி- நாடகம் காணுவோர். இந்திராணி- ஞானேந்திரியம் ஐந்தும், கர்மேந்திரியம் ஐந்தும், அந்தக் கரணம் நான்கும் ஆகும். யோக முயற்சி அற்றவர்க்கு இந்திரியங்கள் மாயா உணர்வு தரும்.

12.மெய்ஞானத்தால் ஆத்மாவின் உள் ஒளியை உணர முடியும். தீர்வசாத்- உயரிய மெய்யறிவு. ஆத்மா. அந்தராத்மா இவைகளின் இயக்கத்தால் உள் ஒளித் தோன்றும்.

13.ஸித்தியடையும் யோகி விடுதலை அடைவான். ஸித்திஹ்- உள் ஒளியை உணரும் மெய்யறிவு நிலை. ஸ்வதந்த்ர பாவஹ –விடுதலை பாவனை. சுதந்திரம் என்பது யாவருக்கும் அடிமையற்ற பூரண நிலை,

14.தன் அளவில் பெறும் விடுதலை எங்கும் எல்லாவற்றிலும் யோகிக்கு கிடைக்கும் அந்யத்ர-எங்கும் எதிலும். தத்ர-தன் அளவில். ததா- அதுவே. யதா- எதுவோ. உடல் அளவானாலும் அது ஆத்மாவில் உணரப்படும் விடுதலையாகும்.

15.யோகியானவன் அடிப்படையான உள் ஒளியை உற்று நோக்குபவன் ஆவான். பீஜா (உலக உற்பத்திக்கு காரணமான உள் ஒளியை)+ அவதானம் உற்று நோக்கி இருப்பது= பீஜாவதானம்.

16.மிக உயரிய சித்தியடைந்த யோகி சாகாமை என்ற கடலில் எளிதில் மிதப்பான். ஆஸனஸ்தஹ- மிக உயரிய யோக ஸித்தி. ஸுகம்- மிக எளிதில். ஹ்ரதே- பெரிய நீர் நிலை அழியாமை என்ற கடலாகும். நிமஜ்ஜதி- ஆழ்தல், திளைத்தல், என்ற மிதத்தல் ஆகும். சாகாமை கடலாகையால் மூழ்கினாலும் சாவு இல்லை.

17.தன் அளவில் கருதிய எதையும் சித்தியடைந்த யோகி படைப்பவனாவான். ஸ்வமாத்ரா- மனதில் தியானிக்கும் யோகசக்தியின் அளவில். நிர்மாணம்- புதியன படைப்பது. ஆபாதயாதி- புதிய பொருள்கள். எல்லாவற்றையும் நன்கு அறிந்த பராசக்தியின் சக்தியால் யோகி எதையும் படைக்க வல்லவன்.

18.சுத்த வித்தை அழியாதிருக்கும்போது பிறவிப்பிணி அழிவது உறுதி. வித்யா-சுத்தவித்தை எனும் தெய்வீக ஞானம். அவிநாசே- அழியாதிருக்கையில். ஜன்ம விநாசஹ- பிறவியாகிய பிணி அழிவது உறுதி. பரஞானம் பிறவியை அழிக்கும்.

19.மஹேஸ்வரியும் மற்றச் சக்திகளாகிய எழுத்தொலிச் சக்திகளும் பிற சிற்றறிவு உயிர்களுக்கு தாய் ஆவர். மஹேச்வரி-பராசக்தி. ஆத்யாஹ- பராசக்தி முதலாகிய பிற சக்திகள். கவர்காதிஷு- எழுத்து வர்க்கங்களுக்குரிய மாத்ருகா சக்தி. பசு- சிற்றறிவு உயிர்கள். பசுமாத்ரஹ- சிற்றறிவு உயிர்களின் தாய்.

20.துரியமாகிய நிலை பிற மூன்று நிலைகளைத் தொடர்ந்து தைலாதாரைபோல் தொடர்ந்து வரும். த்ரிஷு- நனவு, கனவு, உறக்கம் ஆகிய நிலைகள். சதுர்தம்- நான்காவதாகிய துரியம். அஸேச்யம்- ஊற்றும்போது. தைலவாத்- தைலம் போல் இடைவிடாது வரும். துரியம்- இயற்கையான மூன்றையும் தொடர்ந்து நான்காவதாக வருவது.

21.தன் சித்தத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுபவன் நான்காம் நிலையாகிய துரியத்தை அடைவான். மக்னஹ- ஆழ்தல். ஸ்வசித்தேன- தன் சித்தத்தில். ப்ரவிசேத்- உறுதியாய் அடைவர்.

22.துரிய நிலை எய்திய யோகிக்குப் பிராணவாயு முறையாகவும் மெல்லியதாகவும் எங்கும் பரவும். அவன் எல்லா உயிர்களையும் தன்னதாக உணர்வான். ப்ராண- உடம்பில் உள்ள தலையான பிராணன் எனும் வாயு. ஸ்மாசாரே-ஸம+ஆசாரே. ஒழுகுதல் –பரவுதல். எல்லா உறுப்புகளிலும் சமமாக பரவும் தன்மை உடையது. ஸமதர்சனம்- சம்மாகப் பாவித்தல்.

23.துரியத்தில் இருப்பதற்குள் நடுவே தாழ்ந்த நிலைக்குச் சிலர் மீண்டு வரலாம். மத்யே- உயரிய துரியத்தில் நிலையாவதற்கு நடுவே. அவர- நான்காம் நிலைக்கு கீழான மூன்று நிலைகள். துரியாதீத நிலைக்குப் போன பிறகு கீழான நிலைகள் வருவதில்லை. துரியநிலை- விகல்ப ஸமாதி, .துரியாதீத நிலை– நிர்விகல்ப சமாதி

24.காணும் காட்சி யாவும் தானே என்று ஆகும்போது அவை பார்வையிலிருந்து மறைந்தும் அப்படி மறைந்தவை நான்காம் நிலைக்குப் போவதற்கு முன் மீண்டும் யோகியின் காட்சிக்கு வரும். மாத்ரா- உலகில் காட்சிதரும் ஜீவன்கள், ஸ்வப்ரத்யய- தானே யாவுமாய் இருப்பதாய் எண்னுவது. நஷ்டயஸ்ய – காட்சியிலிருந்து மறைதல், புனருத்தானம்– மீண்டும் காட்சிக்கு வருதல்.

25.துரிய நிலைக்கு மேல் உயரத் தகுதி கொண்ட யோகி சிவமாகவே ஆவான். சிவதுல்யோ– முழு அளவான சிவம். ஜாயதே –ஆகுவான். ஐந்தொழில் புரியும் ஆற்றல் உடைய தெய்வமாவதே சிவமாகுதல் என்பது.

26.யோகி கடைபிடித்த விரதங்களால் சிவமான பிறகும் அவன் உடலில் ஆத்மா தடையின்றி ஒளிர்ந்து கொண்டு இருக்கும். சரீரவ்ருத்திர்- உடலுக்குள் ஆத்மா அஞ்ஞானமயமாகாது சுத்தமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும். வ்ரதம்– பக்தி வசத்தால் யோகி கொண்ட வாழ்க்கைமுறை மனநெறியை குறிக்கும்.

27.யோகியின் உரையாடல் ஜபமாகச் செய்வது ஒன்றேயாகும். கதா- உரையாடல். ஜபஹ- மந்திரம், நாமம் முதலியவற்றை திரும்ப திரும்ப கூரும் ஜபம். யோகிக்கு ஜபமே உரையாடலாகும்.

28.தானம் வழங்குவது ஆத்ம ஞானம் ஆகும். ஜீவாத்மாவின் ஞானம் என்றாகாமல் பரிபூர்ண தெய்வத்தை உணரும் ஞானம் ஆகும். எங்கும் நிறைந்த ஆத்மாவை அறியும் ஞானம்.

29.பல்வேறு சக்திகளைச் சித்தியாகப் பெற்ற யோகி உறுதியானஞானத் திரளாவான், ய+அவிபஸ்த- யோவிபஸ்த என்றானது. சக்திகள் எல்லாம் கைவரப் பெற்றவன் ஞானத்தை ஆள்பவனாவான்.

30.சுயமான சக்திகள் அளவிட முடியாத பிரபஞ்சம் தழுவியனவாகும். ஸ்வ– சுயமான. சக்தி– கைவரப் பெற்ற சக்தி.  ப்ரச யோஸ்ய– ப்ரசய+ அஸ்ய= கட்டுக் கடங்காத. விச்வம்– பிரபஞ்சம்.

31.நிலை பெறுத்தலும் நீக்கலுமாகிய சக்தி அந்த யோகிக்குரியதாம். ஸ்திதி – காத்தல் தொழிலை குறித்தல். நிலைப்பெறச் செய்தல். லயௌ- லயமாதல்- மீண்டும் அது ஆதல். தோன்றியது அழிந்து முன்பு இருந்த நிலையாகுதல்.

32.தோற்றம் அழிவு முதலியவை ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் போதும் யோகியின் உள் உணர்வு என்றும் அழியாது இருந்து யாவற்றிற்கும் சாட்சியாக இருக்கும். தத்ப்ரவ்ருத்தாவ்அப் – அந்த பிறவிருத்திகளாகிய தோற்றம் அழிவு என்பன. அநிராசஹ– தடையின்றி அடுத்தடுத்து நிகழுவது. ஸ்வேத்தர் பாவாத்- யோகியின் உள் உணர்வு சாட்சியாய் பாவித்திருப்பது.

33.யோகிக்கு இன்பதுன்பங்கள் அப்பாற்பட்டவையாகும். ஸுகதுஹ்க- இன்ப துன்பமாய் உணரப்படுதல். பஹிர்மனனம்- தனக்கு வேறுபட்டது. யோகிகள் இன்பத்தில் திளைப்பதும் துன்பத்தில் வருந்துவதும் இல்லாத சம நிலையில் இருப்பர்.

34.இன்ப துன்பங்களுக்கு ஆட்படாமல் இருக்கும் யோகி தனித்திருந்து ஆத்மாவில் ஆழ்வதாகிறான். தத்விமுக்தஸ்து– இன்ப துன்பங்களிலிருந்து விடுபட்டிருப்பதாம். கேவலீ- ஆத்மா உடலில் எதனையும் பற்றுக்கோடாக கொள்ளாது இருத்தல். கேவலநிலை என்ற எதிலும் ஒட்டாமலும் பற்றாமலும் இருப்பதாகும்.

35.மோக உணர்வு கொண்டிருக்க காரணம் அந்த ஆத்மா செய்த இருவினைப் பயனாம். மோஹம் –அறியாமை, மயக்கம் முதலியவற்றால் வரும் ஆசை. ப்ரதி ஸம்ஹதஸ்– நெருங்கி வந்து சேர்தல். து– ஆனால். கர்மாத்மா-முன் ஞன்ம கருமங்களால் பெற்ற பயன்- இருவினை-நல்வினை தீவினைப் பயன்.

36.பேதங்கள் விலகுவது என்பது அவரவர் வேறுபட்ட வாழ்க்கை அமைப்பை பொறுத்தது. பேதம்– ஒன்றாக நினைக்க வேண்டியதை வேறாக நினைத்தல். திரஸ்காரே– விலக்கி வாழ்வது. ஸர்காந்தர– ஸர்க– அந்தர் =பலவகைப்பட்ட வாழ்வு முறைகள். கர்மத்வம்- செய்யும் செயல்களைப் பொறுத்தது. சகலர்- மும்மலம் உடைய ஆத்மா. பிரளயகலர்- இருமலம் உடையவர். விஞ்ஞானகலர்- ஒரு மலம் உடையவர்.

37.படைப்புக்கான காரண சக்தி அவரவர் அனுபவத்தால் வருவது. கரணசாக்தி– செயலுக்கு காரணமான சக்தி.  ஸ்வதே- அவரவர்க்கு உரிய. அனுபவாத் –அனுபவம். ஒவ்வொருவருடைய நினைவு, கற்பனை, சிந்தனை முதலிவையின் அடிப்படையில்தான் செயல் நிகழ்வுக்கு காரண சக்தி உண்டாகும்.

38.ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் ஆதி சக்தியில் உள்ளன. துரியத்திலிருந்து பிற மூன்று நிலைகளும் உண்டாகின்றன. த்ரிபதா – மூன்று நிலைகள். ஆக்கல், ஐத்தல், காத்தல் உடன் நனவு, கனவு, உறக்கம் ஆகியவற்றையும் சேர்க்கலாம். பதாத்ய-பத+ஆத்ய –பதங்களுக்குத் தலைமையான. அனுப் ராணனம்–அடங்கி வாழ்வது. ஆதி–துரியம். ஆதிசக்தி சுதந்தர்ய சக்தி ஆகும்.

39.துரிய நிலையில் உள்ள யோகிக்கு சித்தமே உடலாகவும் அதன் உள் வெளி ஆகியன உறுப்புகளாகவும் கருதவும். துரிய நிலை யோகிக்கு சித்தமே உடலாகவும் அதன் உறுப்புகளாகவும் அருளப்படும்.

40.அபிலாஷையின் காரணமாக யோகியானவன் வெளி உலகப் பொருள்களை விரும்பி தன் வடிவம் விட்டு அந்த வடிவம் ஆவான். அபிலாஷாத்- அடங்காத ஆசையின் காரணமாக. பஹிர்திஹி – வெளியில் உள்ள பொருள்கள்.  ஸம்வாஹ்யஸ்ய– வேறு வடிவில் வாழ்வர், பிறவி முடிந்ததும் ஆசை காரணமாக வேறுவடிவில் வாழ்வர்.

41.துரிய நிலையில் முழுவதும் ஆழ்ந்தார்க்கு ஆசைகள் அடங்கிப் போவதால் வேறு வடிவங்களில் வாழத் தேவையில்லை. ப்ரமிதேஸ் தத் – ப்ரமிதேஹே + தத். ஸ்- ஹே. தத்- துரியம். தத்க்ஷயாஜ்-ஆசைகள் அடங்கும்.  ஜேவஸம் க்ஷயஹ- ஜீவன் என்று தனித்து உணரும் பாவனை இல்லாமல் ஆகும்.

42.துரிய நிலையில் இருப்பவர்க்கு ஆசைகள் அடங்கப்பெற்று உடம்பு பஞ்சபூதங்களால் ஆன சட்டையைப் போன்றது. வீடுபேறு அடையும்போது சிவனைப் போன்று எல்லாம் சிறந்த உணர்வு அடைவான். பூதம்- பஞ்ச பூதம். கஞ்சுகீ - சட்டை.  ததா – அதன்பின். விமுக்தோ –வீடுபேறு. பூய – அளவற்ற. பதி ஸ்மஹ- சிவனைப்போல. பரஹ- பர்மராவர். பஞ்ச பூதக் கலப்பாலான இவ்வுடம்பு யோகிக்கு ஒரு சட்டை போலாகும்.

43.பிராணசக்தி உடல் முழுவதும் பரவி இயற்கையாக இருக்கும். நைஸர்கிகஹ– இயற்கையாக. ப்ராணஸம்பந்தஹ- பிராணனின் சக்தி உடல் முழுவதும் தொடர்பு. பிராண சக்தி தெய்வீக சக்தியாகும். துரியநிலையில் தெய்வ சக்தி மிகுந்து பிராணனும் அதிகமாகும்.

44.துரிய நிலையில் உள்ளார்ந்து நிற்கும்போது இடா, பிங்களா, சுழுமுனை ஆகிய நாடிகளில் பிராணன் அதிகரிக்கும்.     நாஸிகா – மூக்கில் பிரியும் பிராண சக்தி. அந்தர்மத்ய – உள்ளார்ந்த நடுநிலைதியானம்- துரியம். கிமத்ர– சொல்வதுபோல். ஸவ்யா– இடா நாடி. அபஸவ்ய– வலது நாடி பிங்களை.  ஸௌஷும்னேஷு- மத்ய நாடி சுழுமுனை.

45.துரிய நிலைக்குச் சென்ற யோகி மேலும் மேலும் உள்ளிலும் வெளியிலும் தெய்வீகத்தை உணர்வான். பூய– மீண்டும். ஸ்யாத்– துரியம்.  ப்ரதி மீலனம்- தெவீகத்தை உள்ளிலும் வெளியிலும் உணர்வான். முக்தியடைவான்.

&&&&&&

அணு/கிரியா யோகத்தின் தொகுப்பு:-

1.  சித்தமே ஆத்மாவின் தொடர்பைத்தரும்.

2.  பந்தத்தால் அறிவு குறைவுபடும்.

3.  கலைகளும் தத்துவங்களும் மாயையால் வந்தனவாகும்.

4.  உடம்பிற்குள் பல்வேறு கலைகளும் ஒன்றாக கலந்துள்ளன.

5.  சுழுமுனை நாடியில் பிராண சக்தி செல்லாது தடுத்தால், பஞ்சபூதவெற்றி அவற்றை விட்டு மனத்தை மீட்டல், அவற்றை வேறுபடுத்தல் ஆகியன நிகழும்.

6.  மோகம் முதலான அறியாமை மறைந்த பிறகு அதிசய சக்திகள் கை கூடி வரும்.

7.  மோகத்தை வென்றால் எல்லையற்ற எங்கும் பரவிய இயற்கை அறிவு கூடும்.

8.  பரமும் தானும் ஒன்றாகக் காணும்போது புவனம் தோன்றாது உள் ஒளியே தோன்றும்.

9.  உலக வாழ்வில் ஜீவாத்மா ஒரு நடிகனாகும்.

10. வாழ்க்கை நாடகத்தை நடிக்க அந்தராதமாவே ஆத்மா விற்கு அரங்கமாகும்.

11. இந்திரியங்கள் ஆத்மா நடிக்கும் நாடகத்தைக் காண்பவராவர்.

12. மெய்யறிவு ஆத்மாவின் உள் ஒளியை உணர இயலும்.

13. பரிபூரணமாக விடுதலையை ஸித்தியின் மூலம் யோகி அடைகிறான்.

14. உடம்பளவில் பெற்ற விடுதலை எங்கும் எதிலும் காணப்படும்.

15. உள் ஒளியாகிய உற்பத்தி மூலத்தை யோகி உற்று நோக்கத்தக்கவன்.

16. ஸித்தி அடைந்த யோகி சாகாமையை அடைந்தவன்.

17. ஸித்தி அடைந்த யோகி தன் ஸித்தியின் அளவிற்கு புதியவைகளைப் படைக்க வல்லவன்.

18. பரஞானம் பிறவி நோயை அழிக்கும்.

19. மஹேச்வரியும் மற்ற மாத்ருகா சக்திகளும் சிற்றறிவு உடைய உயிர்களின் தாயாவர்.

20. மூன்று இயற்கை நிலைகளைத் தொடர்ந்து நான்காம் நிலை தைலம் ஊற்றியதுபோல் தொடர்ந்து வரும்.

21. சித்தத்தில் கொண்ட ஆழ்ந்த தியானத்தால் துரிய நிலைக்குள் யோகியால் செல்ல முடியும்.

22. துரியநிலை எய்திய யோகிக்கு முயற்சி இல்லாது பிராணன் எங்கும் பரவும் நிலையில் உயிர்கள் எல்லாம் சமமாகத் தோன்றும்.

23. துரியத்தில் இருப்பதற்குள் நடுவே பிற மூன்று கீழ் நிலைகள் வந்து போகும்.

24. பிரபஞ்சப் பொருள்கள் யாவும் நானாக இருக்கிறேன் என்ற நினைவில் மறைந்த காட்சிகள் துரிய நிலைக்கு முன்பு மீண்டும் நினைவில் எழும்.

25. துரிய நிலைக்குள் மேலும் போகவல்ல யோகி சிவத் தன்மை முழுவதும் அடைவான்.

26. சிவமான யோகியின் உடலில் சுத்த நிலையில் ஆத்மா திகழ்வது அவன் பக்தியாலாகும்.

27. ஜபம் செய்வதே யோகியின் உரையாடலாக இருக்கும்.

28. தானம் தரும் குணம் ஆத்மஞானமாகும்.

29. எல்லாச் சக்தியும் கைவரப் பெற்ற யோகி ஞானத்தை மிகவும் பெற்றவன் ஆவான்.

30. யோகியின் சுயமான சக்திகள் பிரபஞ்சம் தழுவியவனவாகும்.

31. உலகில் எதையும் நிலைக்கச் செய்வதும் அழிக்கச் செய்வதும் யோகின் ஆற்றலாகும்.

32. தோற்றம், நிலை பெறுதல், அழித்தல் முதலியவற்றை இயற்றும் யோகியின் ஆத்மா அழியாது, உணர்வும் குறைவதில்லை.

33. இன்ப துன்பங்களூக்கு தான் தொடர்பு உடையவன் அல்லன் என்றும், அவை தனக்கு வெளியில் உள்ளதாகவும் யோகி உணர்வான்,

34. இன்ப துன்பங்களூக்கு ஆட்படாமல் இருக்கும் யோகியின் ஆத்மா எதையும் பற்றாமல் தனித்திருப்பதாகும்.

35. ஓர் ஆத்மா செய்த நல்வினை தீவினைகளால்தான் மோக உணர்வு வரும்.

36. அவரவர் வாழ்க்கை அமைப்பு அல்லது செய்கைக்கு ஏற்பவே பேத நீக்கம் பெறுவர்.

37. அவரவர் பெறும் அனுபவத்தின் விளைவாகவே செயல்களைச் செய்யும் காரண சக்தி உண்டாகிறது.

38. ஆதி சக்தியிலிருந்தே படைத்தல், முதலிய மூன்று சக்திகள் பிரியும். துரியமாகிய ஆதியிலிருந்தே நனவு முதலிய மூன்றும் உண்டாகும்.

39. துரிய நிலை சென்ற யோகிக்குச் சித்தமே உடலும் அதன் உறுப்புகளாகவும் அருளால் இயங்கும்.

40. ஆசை அழியாதபோது ஒருவடிவை விட்டு மறுவடிவைப் பெற்று வாழ்வர்,

41. துரியத்தில் ஆழ்வோர்க்கு எல்லா ஆசையும் அடங்கிப் போகும்.

42. துரிய நிலையில் ஆழ்ந்தார்க்கு உடம்பு பூதங்களால் ஆகிய சட்டையாகும். விடுதலை பெற்று சிவமாக ஆவர்.

43. பிராணசக்தி மிகுந்த அளவில் துரியத்தை அடைந்த யோகிக்கு உடல்முழுவதும் பரவும்.

44. இடா, பிங்களா, சுழுமுனை நாடிகளில் பிராணசக்தி மிகுதியாவதை உணரலாம்.

45. துரிய நிலையில் தெய்வீக உணர்வை உள்ளும் புறமும் மீண்டும் மீண்டும் உணர்வான்.

&&&&&&

செவ்வாய்க்கிழமை, 13 August 2013 00:00

பொது


“அரசமர துதி”:--
பிரம்மா, விஷ்னு, சிவன் ஆகியோரின் அம்சம்- தெளிவும், புத்துணர்ச்சியும், முழுமையான சுவாசத்திற்கும் காலை/ மாலை சுற்றும் போது. பிரமஹத்தியால் பீடிக்கப்பட்டவனும், குருவைக் கொன்ற தோஷமுள்ளவனும், பரம தரித்திரனும், தீராப்பிணி உள்ளவனும், இந்த துதியினை தொடர்ந்து ஜபித்து தோஷம் நீங்கி சகல சுகத்தையும் பெற!
விருட்ச ராஜனே! ஆயுள், பலம், கீர்த்தி, காந்தி, குழந்தைகள், பசுக்கள், பொருட்கள், வேதம், புத்தி, மேதமை ஆகிய அனைத்தையும் நீ எனக்கு தந்தருளவேண்டும்.
வருண பகவான் தங்களை நாலா திசையிலும் ரட்சிக்க வேண்டும். தாங்கள் வளர்ந்துள்ள இடத்தில் எப்போதும் மழையிருக்க வேண்டும், தங்களைச் சுற்றி பசுமையான புற்கள் படர்ந்து இருக்க வேண்டும். தங்களுக்கு சுகமுண்டாகட்டும்.
எங்களின் பார்வைக் குறைபாடு, கை நடுக்கம், கெட்ட கனவு, வீண் கவலை, எதிரி பயம் ஆகியவற்றை தாங்கள் தான் போக்க வேண்டும்.
மிகமிக உயர்வானவனும், எல்லாவிதமான பாக்கியங்களையும் அளிக்கின்றவனும், கெட்ட கனவுகளைத் தடுப்பவனும், நல்ல கனவுகளின் பயனை அளிக்கின்றவனுமான அஸ்வத்தமே, பேரரசே தங்களுக்கு என் நமஸ்காரங்கள்.
அடிபாகம் பிரமனின் அம்சமாகவும், நடுவில் விஷ்னுவின் சொரூபமாகவும், நுனியில் சிவனின் வடிவமாகவும், மரங்களின் அரசனாக உள்ளவனுக்கு என் வணக்கங்கள்.
அரசமரமே! பல நூற்றாண்டுகளில் என்னால் சம்பாதிக்கப்பட்ட பாவமூட்டைகளை நீதான் அழிக்க வேண்டும். மரங்களுக்குள் ராஜாவானதாலேயே அரசமரம் என்றழைக்கப் படுபவரே அஸ்வத்தமே! எல்லாச் செல்வங்களையும் எனக்கு அருள வேண்டும்.
எந்த அரசைப் பார்த்தாலே வியாதிகள் போகுமோ, தொட்டால் பாவங்கள் விலகுமோ, எதை நாடினால் வெகுகாலம் வாழலாமோ, அப்படிப்பட்ட அரச மரத்தை வணங்குகின்றேன்.
நல்ல பாக்யசாலியும் பேரழகும் கொண்ட அரச மரமே! நான் வேண்டிடும் அனைத்து நன்மைகளையும் கொடுத்தருள வேண்டுகிறேன், எதிரிகளை வெல்லும் ஆற்றலையும் அருள வேண்டும்.
ஆயுள், மக்கட்செல்வம், பொருள், தானியம், அழகு, சகல செல்வங்கள் யாவற்றையும் கொடுக்க வேண்டும். தேவ சொருபமான அரச மரமே உம்மைச் சரணடைகின்றேன்.
ருக் யஜுர், சாம, அதர்வன வேதங்களின் மொத்த உருவமாகவும், சர்வரூபியாகவும், வேதத்திற்கு காரணமாயும் உள்ள அரச மரமே- நீ எப்பொழுதும் மகரிஷிகளால் போற்றப்படுகின்றாய். உனக்கு என் நமஸ்காரங்கள்.

“ஆத்ம சுப்ரபாதம்”:-
தடைகள், உடல்நலக் குறை, விபத்து இல்லா நாளாக இருக்க- எல்லா நாட்களிலும்.
பிரம்மா, முராரி என்கிற விஷ்னு, திரிபுராந்தகாரி என்கிற சிவன், பானு என்கிற சூரியன், சசி என்கிற சந்திரன், பூமியின் பிள்ளையான அங்காரகன் என்கிற செவ்வாய், புதன், குருபகவான், சுக்ர பகவான், சனீச்வரர், ராகு, கேது எல்லோரும் சுபமான அதிகாலைப் பொழுதை அமைக்கட்டும்.
வாழ்க்கைப் பாதையை முறையாக அமைத்துத் தந்த மகரிஷிகளான பிருகு, வசிஷ்டர், க்ரது, அங்கீரஸ், மணு, புலஸ்தியர், புலஹரி, கௌதமர், ரைப்யர், மரீசி, ச்யவனர், தஷன் ஆகியோர் எனக்கு நற்காலைப் பொழுது அமைய அருளட்டும்.
பிரம்மாவின் மானச புத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரும் ஆசூரி, சிம்ஹலர் ஆகியவர்களும் ‘ஸரிகமபதநி’ என்ற ஏழு ஸ்வரங்களும் அதலம், விதலம், நிதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், பாதாளம் என்று பூமிக்கு கீழுள்ள ஏழு ரசாதலங்களும் எனக்கு சுபமான காலைப் பொழுதை அளிக்கட்டும்.
லவண என்ற உப்பு, இக்ஷு என்ற கரும்பு, ஸூரா என்ற மது, சர்பி என்ற பாம்பு, ததி என்ற தயிர், துக்த என்ற பால், சுத்த நீர் என்ற ஏழு உலகங்களில் உள்ள கடல்களும், மைனாகம், மந்தாரம், மேரு, கைலாசம், கந்தமாதனம், ஹேமகூடம், ஹிமாசலம் ஆகிய உயர்ந்த ஏழு மலைகளும், அத்ரி, ப்ருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய சப்த ரிஷிகளும், ஜம்பு, பாலாசம், சால்மலி, குல, க்ரௌஞ்சம், சாகம், புஷ்கரம், ஆகிய ஏழு தீவுகளும், தண்டகாரண்யம், கண்டகாரண்யம், சம்பகாரண்யம், வேதாரண்யம், நைமிசாரண்யம், ப்ரம்மாரண்யம், தர்மாரண்யம் ஆகிய ஏழு வனங்களும், புவனம் முதல் கூர்ம மண்டலம் வரையான ஏழு உலகங்களும் எனக்கு காலை வேளையை சுபமாக்கித் தரட்டும்.
பூமியிலிருந்து கந்தம் என்கிற வாசனை, நீரிலிருந்து ரசம் என்கிற ருசி. காற்றிலிருந்து ஸ்பர்சம் என்கிற தொடு உணர்ச்சி, அக்னியிலுருந்து ஒளி, ஆகாயத்திலிருந்து வானொலி, பிரக்ருதியிலிருந்து மஹத் ஆகிய தத்துவங்கள் இனைந்து என் விடியற்காலைப் பொழுதை மங்களமாக்கட்டும்.
இவ்விதம் அதிகாலையில் மிகப்புனிதமானதும், விடியற்காலையில் கண்ட கெட்டகனவுகளை பலிக்காமல் போகச் செய்யக் கூடியதுமான இந்த சுபவிடியல் துதிகளைப் படிப்பதாலும், நினைப்பதாலும், கேட்பதாலும் பகவான் அருளால் சர்வ மங்களங்களும் உண்டாகும் என்பது நிச்சயம்.
காலையில் எழுந்து மகாபாரதம் படிப்பதுடன் பூமி, பசு, சரஸ்வதி, உத்தம அந்தணர்கள், கேசவனாகிய மகாவிஷ்னு ஆகியோரை நினைத்துப் போற்ற வேண்டும்.
இந்த துதியைச் சொல்வதோடு நளன், தர்மராஜர், வைதேகி, ஜனார்த்தனர், ஆகியவர்கள் பெயரைச் சொல்வதால் எனக்கு புண்ணியம் கிடைக்கட்டும்.

“கோமாதா துதி”:- 
நோய் தீர்ந்து பாவங்கள் விலக- தினமும்-வெள்ளிக்கிழமை சிறப்பு.
தெய்வப்பிறவியான பசுவை வணங்கி அதனை வலம் வந்து துதித்தால் ஏழு தீவுகளுடன் கூடிய பூமியை வலம் வந்த புண்ணியம் கிட்டுகிறது. நற்குணங்கள் நிரம்பிய, அமுதம் போன்ற பாலை நல்கும் பசுவை வழிபட்டால் நம் விருப்பங்கள் எல்லாம் நிறைவேரும். இந்த வழிபாடு அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலனைத் தரவல்லது. நம்மை பரிசுத்தம் செய்யக்கூடியவள் இந்தப்பசு. கேட்டதையெல்லாம் அருளும் காமதேனுவாகத் துலங்கும் கோமாதாவே, உன்னை வணங்குகிறேன்.

“கார்த்தவீர்யார்ஜுனர் துதி”:- 
இழந்த பொருட்கள் திரும்பபெற-காணாமல்போனவர் திரும்பிவர-வியாபாரம் பெருக-ஞாயிறு காலை, மாலை இருவேலைகளிலும்.
ஆயிரம் கைகள் கொண்ட கார்த்த வீர்யார்ஜுனரே! என் முறையீட்டைக் கேட்கட்டும். இழந்த பொருட்களை, காணாமல் போனவர்களைப் பற்றி முறையிட்டால் தன் கரங்களை எல்லா திக்கையும் நோக்கி நீட்டி, பிரிந்தவற்றை மீட்டுக் கொண்டுவரும் வல்லமை பெற்ற அவரை வணங்கித் துதிக்கின்றேன். அந்த மன்னரின் பெயரை உளமாற உச்சரித்தலேயே இழந்த பொருட்கள் திருப்பக் கிடைக்கும். காணாமல் போனவர்கள் திரும்பி வருவர் என்று நான் பரிபூரணமாக நம்புகின்றேன். அருள்புரிவீராக!

“மந்திர பீஜாக்ஷரங்கள்”:-
‘அங்க நியாஸம்’ அகத்தியருக்கு ஹயக்கீரீவ பகவான் போதித்தது- நியாஸம்-தேவி ஒலி வடிவத்தில் உடலில் வீற்றிருக்கும் பகுதியை தொட்டு வணங்குதல்-தினமும்.
1. ‘அம்’-காமரூபாயை நம- தலையில் 
2. ‘ஆம்’-வாராணஸ்யை நம- முகவட்டத்தில் 
3. ‘இம்’-நேபாலாயை நம- வலது கண்ணில்
4. ‘ஈம்’-பௌண்ட்ரவர்த்தனயைநம- இடது கண் 
5. ‘உம்’-புரஸ்திரகாஷ்மீராயைநம- வலது காது 
6. ‘ஊம்’-கன்யாகுப்ஜாயை நம- இடது காது 
7. ‘ரூம்’-பூர்ணசைலாயை நம- வலது மூக்கு மடிப்பு
8. ‘ரூம்’-அர்புதாசலாயை நம- இடது மூக்கு மடிப்பு
9. ‘லும்’-ஆம்ராதகேசவராயைநம- வலது கன்னம்
10. ‘லூம்’-ஏகாம்பராயை நம- இடது கன்னம்
11. ‘எம்’-த்ரிஸ்ரோதஸ் நம- மேல் உதடு
12. ‘ஐம்’-காமகோட்யை நம- கீழ் உதட்டில்
13. ‘ஓம்’-கைலாஸாயை நம- மேற்பற்கள்
14. ‘ஒளம்’-ப்ருகுநகராயை நம- கீழ்ப்பற்கள்
15. ‘அம்’-கேதாராயை நம- நாக்கு நுனி
16. ‘அ’-சந்த்ரபுஷ்கரிண்யைநம- கழுத்து
17. ‘க1ம்’-ஸ்ரீபுராயை நம- வலது தோள்
18. ‘க2ம்’-ஓங்காராயை நம- வலது முழங்கை
19. ‘க3ம்’-ஜாலந்தராயை நம- வலது மணிக்கட்டு
20. ‘க4ம்’-மால்வாய் நம- வலது கைவிரல் அடி 
21. ‘த3ம்’-குலாந்தகாயை நம- வலது கைவிரல் நுனி.
22. ‘ச1ம்’-தேவிகோடாயை நம- இடது தோள்.
23. ‘ச2ம்’-கோகர்ணாயை நம- இடது முழங்கை.
24. ‘ஜம்’-மாருதேச்வராயைநம- வலது மணிக்கட்டு.
25. ‘ஜ4ம்’-அட்டஹாஸாயைநம- இடது கைவிரல்.
26. ‘ஞம்’-விராஜாயை நம - இடது கைவிரல் நுனி
27. ‘டம்’-ராஜகோஹாயைநம- வலது தொடை மேற்பகுதி.
28. ‘ட2ம்’-மகாபதாயை நம- வலது முழங்கால்.
29. ‘ட3ம்’-கோலாபுராயை நவ- வலது கணுக்கால்.
30. ‘ட4ம்’-ஏலாபுராயை நம- வலது கால் விரலடி.
31. ‘ணம்’-காலேச்வராயை நம- வலது கால் விரல் நுனி.
32. ‘தம்’-ஜயந்திகாயை நம- இடது தொடைமேல்பகுதி
33. ‘த2ம்’-உஜ்ஜயின்யை நம- இடது முழங்கால்.
34. ‘த3ம்’-சித்ராயை நம- இடது கனுக்கால்.
35. ‘த4ம்’-க்ஷீரிகாயை நம்- இடது கால் விரல் அடி.
36. ‘நம்’-ஹஸ்தினாபுராயைநம- இடது கால் விரல் நுனி.
37. ‘பம்’-உட்டிசாயை நம- வலது விலாப்புறம்.
38. ‘ப2ம்’-ப்ரயாகயை நம- இடது விலாப்புறம்.
39. ‘ப3ம்’-ஷஷ்டி சாயை நம- முதுகு.
40. ‘ப4ம்’-மாயாபூர்யை நம- நாபி.
41. ‘மம்’-ஜலேசாயை நம- வயிறு.
42. ‘யம்’-மலயாயை நம- இதயம்.
43. ‘ரம்’-ஸ்ரீசைலாயை நம- வலது தோள்பட்டை
44. ‘லம்’-மோரவே நம- பிடரி.
45. ‘வம்’-கிரிவராயை நம- இடது தோள்பட்டை.
46. ‘ச1ம்’-மஹேந்திராயை நம- இதயம் முதல் வலது கை நுனிவிரல்வரை.
47. ‘ஷம்’-வாமனாயை நம- இதயம் முதல் இடது கை நுனிவிரல்வரை.
48. ‘ஸம்’-ஹிரண்யபுராயைநம- இதயம் முதல் வலது கால் நுனிவிரல்வரை.
49.‘ஹம்’-மகாலக்ஷ்மிபுராயைநம- இதயம் முதல் இடது கால் நுனிவிரல்வரை.
50. ‘ளம்’-ஓட்யாணாயை நம- இதயம் முதல் இன உறுப்பு வரை.
51. ‘க்ஷம்’- சாயச்சத்ராயை நம- இதயத்திலிருந்து தலை உச்சிவரை.

“கங்காஷ்டகம்”:-
பாவங்களும் துன்பங்களும் நீங்க- தீப ஒளி நாளான்று.
விண்ணுலகிலிருந்து பூமியை நோக்கி பிரவாகிக்கும் தெய்வீக கங்கையின் பிரவாக வேகம்தான் இந்த பிரபஞ்சத்தை, அண்டத்தை அதிர, அஞ்ச வைப்பதாகும். இத்தனையும் சிவன் தன் செஞ்சடையை அசைத்து சிதறவிட்ட துளிகள்தான் இந்த தெய்வீகமான ஆகாய கங்கை. இவள் பொன்மயமான மலைக்குகைகளிலும் முகடுகளிலும் ஓடி காடுகளைப் புனிதமாக்கி பிரவாகிக்கின்றாள். சமவெளியில் தன் விருப்பம்போல் பாய்ந்து வருகின்றாள். தடைகளை தகர்த்து தெறிகிறாள். பாவங்களையும் துன்பங்களையும் விரட்டுகின்றாள். உன்னை வணங்குகின்றேன்.

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:- 
மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.
பிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.
சரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.
மத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.
விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.
மநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.
கருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.
அந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.
சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.                                                                                                         ******

செவ்வாய்க்கிழமை, 13 August 2013 00:00

நவகோள்கள்

 

சூரியன் உலகிற்கு கண்ணால் காணும் முதல் கடவுள், சூரிய நாராயணன் என்பர்.
வேறுபெயர்கள் ஆதவன், பாஸ்கரன், ஞாயிறு. லோகமித்ரன்
பன்னிரண்டு மாதத்திலும் ஒவ்வொரு வடிவில் தோன்றுவதால் காலநிலையும் மாறும்.

சித்திரை-தத்தா, ததா- உயிர்களுக்கு வெப்பத்தை தருபவன்-கத்ரி.

வைகாசி-ஆர்யமா- காற்று.

ஆனி-மித்ரன் -சந்திரனுக்கு ஒளி, சமுத்திரங்களை கட்டுப்படுத்துதல்.

ஆடி-வருணன்- காற்று, மழை.

ஆவணி-இந்திரன்- மழை, இடி.

புரட்டாசி- விவஸ்வான்- அக்னிக்கு ஆதாரம்.

ஐப்பசி-துவஷ்டா- மூலிகைகளும் தாவரங்களும் வளர ஒளி. கார்த்திகை- சூர்யநாராயணன்- சிவஞோதி, விஷ்ணு தீபப்பிகாசர்.

மார்கழி- அம்சுமான்- குளிர்ப்பனி, இதமான வெப்பம். 

தை-பகலவன்- உயிர் நிலைக்க வெம்மை.

மாசி- பூஷன்- விதை முளைக்க வெப்பம்.

பங்குனி-பர்ஜன்யன்- ஆறு, குளநீரை அள்ளி மேகமாய் பரவி தெளிப்பது. 

உகந்த நாட்கள்- ஞாயிற்றுக்கிழமை. எந்நாளும் வழிபடலாம்(சூரிய உதயத்தின்போது)

உகந்த மலர்கள்- செந்தாமரை மற்றும் சிகப்பு நிற மலர்கள்

நிவேதனம்- சூடான நிவேதனம்- கோதுமையால் செய்த இனிப்பு அல்லது சர்க்கரைப் பொங்கல்

விழாதினம் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள்- மகர சங்கராந்தி. உயிர்களின் உணவுக்கு தாவரங்கள் தானியங்கள் மிக மிக முக்கியம். தாவரங்களுத் தேவையான வெப்பத்தையும், நீரையும் சூரியன் மூலமாகவே பெறுகின்றன.

சூரியகதிர்கள் வெப்பம், ஒளி, மழை தருவன. சர்வேஸ்வரனின் பிரதிநிதியாகிய சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவே இந்நாளில் பொங்கலிட்டு படையல் சாத்துகின்றோம்.
சிறப்புகள் பொதுவான காயத்திரி மந்திரம் சூரியனின் ஆற்றலை நோக்கி கூறியதாகும். சிவனின் அட்டமூர்த்தங்களில் சூரியனும் ஒன்று. உயிருள்ள, உயிரற்ற பொருளகள் எல்லாவற்றின் ஆத்மா சூரியன் என ரிக் வேதம் சொல்கின்றது. எல்லாப் புராணங்களிலும் சூரியன் சிறப்பாக போற்றப்படுகின்றது. நம் வாழ்வின் ஓர் அங்கம். ஆரோக்கிய வாழ்வு தரும் நம் கண்களாலேயே காணப்படும் கண்கண்ட கடவுள். தினமும் காணும் ஓர் அற்புத சக்தி.
ஏற்ற திதி- ரத சப்தமி- சூரிய ஜெயந்தி, ரத சப்தமி- உத்ராயண தை அமாவாசைக்குப் பின் சுக்லபட்ச சப்தமி அன்று வரும். அன்றுதான் ரத சப்தமி எனப்படும். சூரியன் தன் தட்சிணாயனப் (தெற்கு நோக்கிய) பயணத்தை முடித்துக் கொண்டு வடக்கு நோக்கிப் பயனப்படும் நாள். அன்று காலையில் வாசலில் தேர்க் கோலமிட்டு, ஏழு எருக்கு இலைகள், அருகம்புல், ஏகாமயம் (சாணம்) அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக் கொண்டு சூரிய பகவானை தியானம் செய்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஸ்நானம் செய்யவும்."யத்யத் கர்மக்ருதம் பாபம் மயாஸப்தஸூ தன்மே ரோகம் சசோகம்சமா கரீ ஹந்து சப்தமீ" அதாவது ஏழு ஜென்மங்களில் என்ன பாபம் செய்திருந்தாலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளை இந்த ரதசப்தமி ஸ்நானம் நீக்கட்டும் என்பதாகும். அதிகாலையில் எழுந்து குளித்து ஆதித்ய ஹிருதயம், சூரிய அஷ்டோத்திரம் படிப்பது நன்று. திரு அண்ணாமலை சேஷாத்திரி, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் அவதரித்த நாள். பீஷ்மர் மனம், வாக்கு, செயல் மூன்றாலும் பாவம் செய்யாமலிருந்தும் பாஞ்சாலியின் துகில் உரியப்படும் பாவச்செயலை கண்டித்து தடுக்கவில்லை  என்பதனால் அவர் விரும்பும்போது உயிர்போகும் என்ற வரம் பெற்றிருந்தும் உத்ராயண காலம் வந்ததும் உயிர்போக விரும்பியும் போகமல் துன்பம் மேலிட வியாசரிடம் கேட்டபோதுபோது  2எருக்க இலைகளை கண்களின்மீதும் 3 எருக்க இலைகளை கழுத்திலும் வைத்து அதன் மீது சூரிய ஒளி படும்படிச் செய்து சூரியனை வேண்டச் சொல்லி கங்கை நீரால் நீராட்ட அவரது பாவங்கள் தீர்ந்தன. சூரியன் கதிர்கள் அவருக்கு முக்தி வழங்கிய நாள். 
வணங்கும் முறை- தினமும் காலை குளித்ததும் தூய உடம்புடன் சூரியனைப் பார்த்து வணங்கவும். நீர் நிலைகளில் குளித்தாலும் அங்கிருந்தபடியே சூரிய வணக்கம் செய்வது சிறந்தது. வீட்டில் சூரிய கிரணங்கள் உங்கள்மேல் விழும் இடத்தில் நின்று கொண்டு சூரிய வணக்கத்திற்குரிய சுலோகங்களைச் சொல்லி வணங்கவும். குருஸ்ரீ பகோராயின் நவகிரக துதிப்பாடல்கள் பகுதியிலிருந்து உங்கள் விருப்பினைப் பொறுத்து தேர்வு செய்து சொல்லவும். நிரந்தர பலன் கிடைக்கும். தினமும் ஆதித்தன் வழிபாடு அன்றைய நிகழ்வுகளுக்கு உதவி புரிவதாய் அமையும்.

சூரிய ஜெயந்தி  காரண நிகழ்வு: காஷ்யப முனிவரின் மனைவி அதிதி. கணவனுக்கு உணவளித்துக் கொண்டிருந்த காரணத்தினால் வாசலில் யாசகம் கேட்ட அந்தணருக்கு மெதுவாக உணவளித்ததால் கோபமுற்ற அந்தணர், எந்தக் கர்பத்தைக் காக்க மெதுவாக வந்து யாசகமிட்டாயோ அந்தக் கர்ப்பம் கலைவது என சாபமிட்டான். முனிவரிடம் நடந்ததைக் கூற காஷ்யப முனிவர் சிவபெருமானைத் தியானித்து ஏழு எருக்க இலைகளை அவள் தலையிலும், தோள்களிலும் வைத்து சூரியன்முன் சிறிது நேரம் நிறுத்தி வணங்கி  நீராடச் செய்தார். அமுதம்போல் அணைவரையும் வாழவைக்கும் மகன் பிறப்பான் என ஆசி கூறினார். அவ்வண்ணமே சூரிய பகவான் ரதசப்தமியன்று தோன்றினார்- அதனால் அன்று அவரது ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

சூரியனின் ரதசாரதி கருடனின் சகோதரனான அருணன். சூரியனின் புதல்வர்களே யமன், சனி, சுக்ரீவன், கர்ணன். சூரியன் அருளால் அட்சய பாத்திரம் பெற்றனர் பாண்டவர்கள்.

உள்ளே.....

1.“சூரியன் துதி”-சூரியோதயத்தின்போது தினமும்-சகல நன்மைகள். 

2.“சூரியன்துதி”-அகத்தியர்-சூரியோதயத்தின்போது தினமும்- கவலை, நோய் நீங்கி வாழ்வு பிரகாசமடைய. 

3.“சூரிய துதி”- சூரியோதயத்தின் போது தினமும்/ ஞாயிறுக் கிழமை -சகல நன்மைகள் 

4.“சூரியசதகம் துதி”-மயூரகவி-சூரியோதயத்தின்போது தினமும்/ ஞாயிறுக் கிழமை -சகல நன்மைகள். 

5.“சூரிய கவசம்”- தினமும்/ ஞாயிற்றுக் கிழமை

6."சூரியன்”-சீரானவாழ்விற்கு-தினமும்/ ஞாயிறு 

7.“சூரியகீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-சூரியோதயத்தின் போது தினமும்/ ஞாயிறுக் கிழமை -கோளின் அனுக்கிரகம்- சகல நன்மைகள். 

 

சந்திரன்- அதிதேவதை- பார்வதி தேவி

உகந்த நாட்கள்- திங்கள்கிழமை. வளர்பிறை திங்கள் சிறப்பு. பௌர்ணமி திங்களிலும் வழிபடலாம். 

உகந்த மலர்கள்- அல்லி மற்றும் வெண்ணிற மலர்கள்

நிவேதனம்- அரிசிகலந்த நிவேதனம்

8.“சந்திரன்துதி”-தினமும்/ திங்கள்கிழமை-சகல நன்மைகள். 

9.“சந்திரன்”-சீரானவாழ்விற்கு- தினமும்/திங்கள் 

10.“சந்திரன் துதி”- உறுதியான மனநிலை பெற, பிணிகள்அகல, மனநோயநீங்க- பௌர்ணமி / சித்ராபௌர்ணமி. 

11.“சந்திரன்கீர்த்தனை”-முத்துசாமிதீட்சிதர்- தினமும்/திங்கள் கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள். 

12.“சந்திர கவசம்”- தினமும்/ திங்கட் கிழமை 

 

செவ்வாய் (அங்காரகன்)- அதிதேவதை-  முருகன்

உகந்த நாட்கள்- செவ்வாய்கிழமை. 

உகந்த மலர்கள்- செண்பக மலர்கள்

நிவேதனம்- துவரை தானியம் கலந்த நிவேதனம் உடன் குங்குலிய தூபம் சிறப்பு

13.“செவ்வாய் துதி”- சீரானவாழ்விற்கு- தினமும்/ செவ்வாய்க் கிழமை 

14.“அங்காரகன் துதி”-துர்பாக்யம், வறுமை நீங்க,பாக்யங்கள் பெற- தினமும்/ செவ்வாய்க் கிழமை. 

15.“அங்காரகன்”-சீரான வாழ்விற்கு- தினமும்/ செவ்வாய்க் கிழமை 

16.“அங்காரகன் கீர்த்தனை”- முத்துசாமி தீட்சிதர்- தினமும்/ செவ்வாய்க்கிழமை-கோளின் அனுக்கிரகம்- சகல நன்மைகள். 

17.“அங்காரகக் கவசம்”- நோய், கடன் நீங்க, பாக்யங்கள் பெற- தினமும்/ செவ்வாய்க்கிழமை 

 

புதன் அதிதேவதை-  மகாவிஷ்ணு

உகந்த நாட்கள்- புதன்கிழமை. 

உகந்த மலர்கள்- வெண்காந்தாள் லர் பச்சை நிற வஸ்திரம்

நிவேதனம்- பச்சைப்பயிறு சுண்டல் நிவேதனம் பாசிப்பருப்பு பாயசம்

18.“புதன் துதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/புதன் கிழமை 

19.“புதன்”-சீரான வாழ்விற்கு-தினமும்/ புதன்கிழமை 

20.“புதன்கீர்த்தனை”- முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ புதன் கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள். 

21.“புத கவசம்- நோய், துன்பம் நீங்க, புண்ணியங்கள் பெற- தினமும்/ புதன் கிழமை 

 

குரு- தேவகுரு- பிரஹஸ்பதி, வியாழபகவான்

உகந்த நாட்கள்- வியாழக்கிழமை. 

உகந்த மலர்கள்- முல்லை லர் மஞ்சள் நிற வஸ்திரம்

நிவேதனம்- கொண்டைக்கடலை நிவேதனம் உடன் ஆம்பல்மலர் தூபம்

22.“குரு துதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/வியாழக்கிழமை 

23.“குரு”-சீரான வாழ்விற்கு-தினமும்/வியாழக்கிழமை 

24.“குரு துதி”- வாழ்வில் வளம் பெற- தட்சிணாமூர்த்தி சன்னதியில்- தினமும் / வியாழக் கிழமை. 

25.“குருகீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ வியாழக் கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள். 

26.“குரு கவசம்”- துன்பம் நீங்க, வெற்றி பெற-தினமும்/ வியாழக் கிழமை. 

 

சுக்கிரன்- வெள்ளி- அசுரகுரு- பார்க்கவன்

உகந்த நாட்கள்- வெள்ளிக்கிழமை. 

உகந்த மலர்கள்- பவளமல்லி

நிவேதனம்- மொச்சை தானியம் நிவேதனம் கல்கண்டு கலந்தபால்

27.“சுக்கிரதுதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/வெள்ளிக்கிழமை 

28.“சுக்ரன் துதி”-சீரான வாழ்விற்கு-தினமும்/வெள்ளி

29.“சுக்கிரன் கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/வெள்ளிக்கிழமை  -கோளின் அனுக்கிரகம்- சகல நன்மைகள்.  
30.“சுக்கிர கவசம்”- துன்பம் நீங்க, நினைத்தவைகூட- தினமும்/ வெள்ளிக் கிழமை 

 

சனிபகவான்- சனீஸ்வரன்- சனைச்சரன் 

உகந்த நாட்கள்- சனிக்கிழமை. 

உகந்த மலர்கள்- கருங்குவளைலர், கறுப்பு நிற வஸ்திரம், வன்னி பத்ரம்(இலை), 

நிவேதனம்- எள் தானியம்

31.“சனி துதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/சனிக்கிழமை 

32.“சனி”- சீரான வாழ்விற்கு-தினமும்/சனிக்கிழமை 

33.“சனி கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ சனிக் கிழமை -கோளின் அனுக்கிரகம் -சகல நன்மைகள். 

34.“சனிகவசம்”-வெற்றி, புகழ், பெருவாழ்வு கிடைக்க,துயர்,விணை, பிணி, கவலை போக்க-தினமும்/சனிக்கிழமை. 

35.“சனி கவசம்”- காரியங்களில் தடையின்றி வெற்றி மற்றும் பெருவாழ்வு கிடைக்க, தினமும்/ சனிக் கிழமை. 

 

இராகுபகவான்-நிழல் கிரகம்

உகந்த நாட்கள்- சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினம் 

உகந்த மலர்கள்- மந்தாரலர்

நிவேதனம்- உளுந்து கலந்த பலகாரங்கள்

36.“ராகு”- சீரான வாழ்விற்கு-தினமும்/ஞாயிற்றுக்கிழமை 

37.“ராகு”- சீரான வாழ்விற்கு-தினமும்/ ஞாயிறு 

38.“ராகு கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ ஞாயிற்றுக்கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள். 

39.“ராகு கவசம்”- புகழ், நீண்ட ஆயுள் கிடைக்க, நோய் நீங்க - தினமும்/ ஞாயிற்றுக் கிழமை. 

 

கேதுபகவான்-நிழல் கிரகம்

உகந்த நாட்கள்- சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினம் 

உகந்த மலர்கள்- செவ்வல்லிலர்

நிவேதனம்- கொள்ளு தானிய நிவேதனம் மற்றும் பலவகை கலந்த சாதம்

40.“கேது”- சீரான வாழ்விற்கு-தினமும்/ஞாயிற்றுக்கிழமை 

41.“கேது”-சீரானவாழ்விற்கு- தினமும்/ஞாயிறு 

42.“கேது கீர்த்தனை-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ ஞாயிற்றுக் கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள். 

43.கேது கவசம்- வேண்டுவன கிடைக்க, நோய், பகை நீங்க - தினமும்/ ஞாயிற்றுக் கிழமை. 

 

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--மங்களங்கள் பெருக-மனக்குறை- பாவங்களிலிருந்து விலகி-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

1.“சூரியன் துதி”-சூரியோதயத்தின்போது தினமும்-சகல நன்மைகள்.

o சூரியனால் தான் காலமும் நேரமும் பகுக்கப்படுகின்றன! ஐம்பூத இயக்கங்களுக்கும் மூலகாரணமாக விளங்குபவரே! சூரியனே! வேதங்களின் சாரமாகத் திகழ்பவரே! ஒளி பரவாத இடமே இல்லாதவரே! சூரிய ஒளியைக் கண்டதுமே பிறப்பு, இறப்பு, முதுமை, நோய், குடும்ப சோதனைகள் இவை மீதான பயம் விலகிவிடுகின்றது. உதய காலத்தில் பிரம்மா, மதிய காலத்தில் ஈசன், அஸ்தமன காலத்தில் திருமால் என மும்மூர்த்திகளின் வடிவங்களாகத் தோன்றும் சூரியனை நான் வணங்குகின்றேன்.

o செம்பருத்திப் பூ போல ஒளிர்பவரும், காஸ்யப பிரஜாபதியின் குமாரரும், மிகுந்த ஓளியினையுடையவரும், இருட்டின் எதிரியும், சகல பாவங்களையும் போக்குபவருமான திவாகரனை, பகலை உருவாக்கும் பகலவனை வணங்குகின்றேன்.

ஆதித்தாய நமஹ! சூர்யாய நமஹ! பாஸ்கராய நமஹ! ரவியே நமஹ! தினகராய நமஹ! திரைலோக்ய சூடாமணியே நமஹ! திவாகராய நமஹ! லோகமித்ராய நமஹ! ஜோதிஸ்வரூபாய நமஹ! அருணாயை நமஹ! வரத ஹஸ்தாய நமஹ! சூரிய நாராயண சுவாமியே நமஹ!

2.“சூரியன் துதி”- அகத்தியர்- சூரியோதயத்தின்போது தினமும்- கவலை நோய் நீங்கி வாழ்வு பிரகாசமடைய.

o தாமரை மீது வீற்றிருக்கும் ஆதவனே, தேவர்களுக்கெல்லாம் முதன்மையான சூரிய பகவானே, பானுமூர்த்தி எனப் போற்றப்படும் தங்களை வணங்குகின்றேன். தர்மம், கருனை வடிவாகவும், அனைத்து தத்துவ வடிவினராகவும் ஒளிரும் தினகரனே, தங்களை வனங்குகின்றேன். க்ஷயம் எனும் காசநோய், அபஸ்மரம் எனும் வலிப்பு நோய், குன்மம் எனும் வயிற்று நோய் போன்ற கொடிய நோய்களையும், எல்லாவகை தோஷங்களையும் நீக்கி நலம் அளிக்கும் கதிரவனே உனக்கு எனது வணக்கங்கள். எனக்கு அருள் புரிவாய்!

3.“சூரிய துதி”- சூரியோதயத்தின் போது தினமும்/ ஞாயிறுக் கிழமை -சகல நன்மைகள்.

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
விரியா போற்றி வினைகள் களைவாய்

4.“சூரிய சதகம் துதி”- மயூரகவி- சூரியோதயத்தின் போது தினமும்/ ஞாயிறுக் கிழமை -சகல நன்மைகள்.

oதேவர்கள் தமது சித்தாந்த முறைப்படி சூரியனை வழிபடுவர். சாரணர்கள் சொற்களாலும், கந்தர்கள் கானமிசைத்தும் துதிப்பர். நாகர்கள் அடிபணிந்து வணங்குவர். பைசாசர் மனதை அடக்கி வழிபடுவர். சாக்கியர் தமது ஆகம விதிப்படி பூஜிப்பர். மகரிஷிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனதால் துதிப்பர். யோகியர் ஆத்ம சொரூபமே சூரியன் என உணர்ந்து அன்புடன் கும்பிடுவார்கள். விடியற்காலையில் எல்லோராலும் இவ்வாறு நமஸ்கரிக்கப்படும் பகலவன் எங்களைப் பாதுகாப்பாற்றட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஆகாயவீதியில் செல்லும் சூரியன், ஆகாயகங்கை வற்றிவிடாதபடி தன் வெப்ப ஒளியை மென்மையாக்கிக் கொண்டான். அதனால் அது மலர்ந்த தங்கத் தாமரையோடு பொலிவு பெற்றது. சோலைகள் அழகு குன்றாமல், மணமிக்க பிரதேசமாயின. பனிபடர்ந்த மேருமலையின் பொற்சிகரங்கள் உருகாமல் தூய்மை பெற்றன. ஜடப் பொருட்களான அவை மீதும் கூட இத்தகைய அருள் கொண்ட சூரியன், எப்போதும் எம்மைக் காப்பானாக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியன் இருளை மட்டுமின்றி பாபங்களையும் அழிக்கின்றான். உயர்வான தாமரைகளை மட்டும் மலரச் செய்வதில்லை. சிறிய குன்றின் அருகிலுள்ள தாவரங்களையும் செழிக்கச்செய்து அவற்றையும் மலரச் செய்கின்றான். சரணமென்று சொல்பவர்களுக்கு தனது சத்ய சொரூபத்தைக் காட்டுவதோடு முக்தியையும் அளிக்கின்றான். சூரியன் எல்லோருடைய விருப்பங்களையும் நிறைவேற்றிடும் ஆற்றல் மிக்கவன். வல்லமை மிக்க பகலவன் எங்களைக் காப்பாற்றட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஉலகங்களை ஒவ்வொன்றாகத் தாண்டிச் செல்லும் மாறி மாறிச் செல்லும் சஞ்சல சுபாவம் உள்ளவர் சூரியன். ஆனால் தான் தாண்டி செல்லும் அத்தனை உலகங்களுக்கும் உதவி நன்மை செய்வதையே அசைக்க முடியாத கொள்கையாகக் கொண்டவன். மனிதர்கள் பார்வையைத் தன் ஒளியால் கூசச் செய்யக்கூடியவன். ஆனால் அப்படிக் கூசச் செய்வதன் மூலம் அந்தப் பார்வையைத் தெளிவாக்குபவன். தீட்சண்யமாக்குபவன். மனிதர்களுக்கு நன்மையே செய்யும் எண்ணமுள்ளவன். அனைத்தையும் எரிக்கும் இயல்புடையவன் சூரியன். யோகியர்க்கு முக்தியை வழங்குபவனாக இருப்பவன் அவனே. சூரியன் சகல உலகிறக்கும் செல்வமெல்லாம் அருள்பவன்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oமூவுலகத்திலும் பருவங்கள் ஒழுங்காக வந்து போகின்றன. முரண்பாடுகள் இல்லை. தானியங்கள் செழுமையாக விளைகின்றன. செடியும் கொடியும் மரமும் நன்றாகப் பழம் தரவும், மழைக்காலத்தில் நன்றாக மழை பொழியவும், தெய்வ காரியங்கள் நன்கு நடைபெறவும், அதனால் எல்லோருடைய மனமும் மகிழ்ந்து காற்று நன்கு வீசவும், நட்சத்திரங்கள் பிரகாசிக்கவும், எல்லா திக்குகளுக்கும் மகிழ்ச்சி பரவவும், கடல் தன் எல்லையை கடக்காதிருக்கவும் சூரியன் தான் காரணம். அத்தகைய சூரியன் அனைத்து செல்வங்களையும் அருள்வாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oகைலாயத்தில் மான் தோலணிந்த சிவன், அம்பிகையை தன் உடலில் பாதியாக இணைத்துக் கொண்டுள்ளார். பரந்தாமனாகிய பத்மநாபன், சேஷசயனராக பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார். பிரமன் யோக நிஷ்டையில் சிந்தைகொண்டு சிருஷ்டியைச் செய்கிறார். இவை அத்தனைக்கும் காரணம் சூரியன். மூவுலகிற்கும் தலைவனாக எப்போதும் மூவுலகையும் பற்றிய சிந்தனையுடனேயே பணியாற்றிக் கொண்டிருப்பதுதான். மும்மூர்த்திகளும் ஒரே சிந்தையோடு அவரவர் பணியைப் புரிந்துகொண்டு இருக்கக் காரணம், சூரியன் மூவுலகையும் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதுதான்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியமண்டலம் வேதங்கள் அறிந்த அனைவரையும் தன்னகத்தே கொண்டது. சூரிய மண்டலமே ரிக்வேதம். சூரிய ஒளிக்கதிர்கள் சாமவேதம். யோகத்தால் மட்டுமே காணக்கூடிய புருஷன் யஜுர்வேதம். மூன்று வேதத்தின் உருவமாகவும் உள்ளவர் சூரியன். அவன் விகாரமற்றவன், வேதங்களால் அறியத்தக்கவன். அந்தச் சூரியன் செல்வமெல்லாம் வழங்கட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oதேவமாத எனப்பெயர் பெற்ற அதிதிக்கு இந்திரன் முதலான தேவர்கள் மக்களாகப் பிறந்திருந்தாலும் தாயின் பெயரால் ஆதித்யன் என்ற பெயரோடு திகழ்பவன் சூரியன் ஒருவரே! சூரியன் மட்டுமே தேவர்களின் பகைவர்களை அடக்கும் ஆற்றல் பெற்றவன் என்று மூவுலகத்தோரும் போற்றி மகிழ்கின்றனர். இத்தகைய பெருமை கொண்ட சூரியன் எல்லா நலமும் தருவானாக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியனையும் பரமசிவனைப் போல் அஷ்டமூர்த்தியென்பர். அதாவது எட்டு வடிவங்களை எடுப்பவன். பூமி, நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், தலைவன், திங்கள், சூரியன் ஆகிய எட்டு மூர்த்தங்களைக் கொண்டவன். ஒளிக்கு இருப்பிடம்-பூமி, மழை நீர், தூய்மையான காற்று, எரிப்பதால் நெருப்பு, ஆகாய வீதியில் பவனி வருவதால் ஆகாயம், அன்றாட பிரத்யக்ஷ தெய்வம்-தலைவன், அமாவாசையன்று திங்களுடன் இணைவதால் சந்திரன், தனி உருவம் கொண்டதால் சூரியனும் அஷ்டமூர்த்தி-பரமசிவன்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசெந்தாமரையாளின் கைகளால் வருடப்பெறும் மகாவிஷ்னுவின் திருவடியில் தோன்றும் ஒளிக்கதிர் போல சூரியனின் கதிர்கள் உள்ளன. விநதையின் புத்திரனான கருடன் மேல் ஏறிக் கொண்டு விண்ணில் ஏழு உலகையும் கடந்து உலகைக் காக்கின்றான் பரந்தாமன். அதேபோல சூரியனும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில், அருணன் சாரதியாகப் பணியாற்ற வலம் வந்து மேற்கு திக்கின் எல்லையைக் காண்கின்றார். மகாவிஷ்னுவைப்போல விளங்கும் சூரியநாராயணன் காப்பாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

o சூரியனை முன்னிரு ஸ்லோகங்களில் சிவனுக்கும் திருமாலுக்கும் ஒப்பிட்டது போல, பிரம்மாவுடன் ஒப்பிடப்படுகிறார். பிரம்மா நீரைப் படைத்ததுபோல, சூரியனும் இருகூறு கொண்டு முதலில் நீரைப்படைத்தார். பிரம்மா குலமகளுக்கு சிருஷ்டியின்போது பெருமை சேர்ப்பது போல, சூரியனும் மேருமலைக்கு உதயகிரி எனப் பெருமை சேர்த்தார். பிரம்மா பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம், என மூவுலகுக்கும் எட்டாத மேனியுடையவர். சூரியனும் மூவுலகுக்கும் மேலான பிரகாசமான ஒளியோடு விளங்குகின்றார். நாற்றிசைக்கும் நான்முகன் பெருமைசேர்க்க சூரியன் நாலா திசையிலும் ஒளிபரப்புகிறார். இவ்வாறாக பிரமனைப்போல் விளங்கும் சூரியன் காப்பாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியன் மறைந்தபிறகு நீர்நிலைகள், குளங்கள், தடாகங்கள் மற்றும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் நீராடிய பலன் கிடைக்காது. ஆதவன் அஸ்தமித்த பிறகு கடலில் நீராடினாலும்சரி, தேவகங்கையில் நீராடினாலும் சரி, பாவங்கள் போகாது. அனைத்து நீர் நிலைகளையும் புண்ணிய தீர்த்தமாக விளங்கச்செய்யும் பகலைத்தரும் சூரியன் நம்மைக் காப்பாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஉலகத்தில் கிழக்கு திசை, காலை வேளை ஆகியவை நன்மை பயப்பனவாகக் கருதப்படுகின்றன. அதற்குக் காரணம் அவை சூரியனின் ஆதிக்கத்திலிருப்பதுதான். ஒரு தீவுக்கு அல்லது கண்டத்திற்கு மாலை வேளையாகவும், இரவுக்காலமாகவும் விளங்குவது, எதிர்த் தீவில் விடியற்காலமாகவோ நண்பகலாகவொ விளங்கும். இப்படி உதயம், அஸ்தமனம், பகல், இரவு என்பவை மாறி, மாறி உண்டாகக் காரணமாக இருந்து காலச்சக்கரத்தை சுழலச் செய்யும் சூரியன் எக்காலத்திலும் நம்மைக் காப்பாற்றட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஎட்டு வகையான சித்திகளைப் பெற்ற அருட்சித்தர்கள் வழிபடும் ஆதித்யனின் ஒளிக்கற்றைகள், அழியச்செய்யும் கொடிய பெரு நோய் உள்ளிட்ட எல்லாவித நோய்களையும் போக்கக் கூடியவை. உயிர்களின் துன்பத்தையும், பாபத்தையும் முற்றிலும் போக்க வல்லது. நோய் உள்ளவர்கள் தினம் பராயணம் செய்தால் சூரியபகவான் அருள்பெற்று நோயிலிருந்து விடுபடுவர்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oமூவுலகிற்கும் கண்ணாக விளங்கும் சூரியஒளி, கண்ணொளியிலிருந்து மாறுபடுகிறது. தாமரை போன்றது கண். பரிதியின் ஒளியைப் பெற்று தாமரை பிரகாசிக்கும். ஆனால் சூரியஒளி, தாமரையின் ஓலியைத் தான்பெறாது, அந்த தாமரையின் ஒளியை மேலும் பிரகாசமாக்குகிறது. கண், கருவிழியால் பெருமை பெறுகிறது. ஆனால் சூரியனோ விண்ணின் கண்ணான விண்மீன்களின் ஒளியைப் பறித்து விடுகின்றது. கண் இமைத்தால் ஒரு நொடி. சூரியன் ஒரு நாளையே உருவாக்கிறது. இவ்வாறு கண்ணினும் சிறந்து விளங்கும் சூரியனின் ஒளி எங்கள் பாவத்தைப் போக்கட்டும். இதை தொடர்ந்து படிப்பதனால் கண் நோய்கள் நீங்கட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஉலக நன்மைக்காக, மயூரகவியினால் செய்யப்பட்ட இந்த சூரிய சதகத்தின் பாடல்களை பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள், அனைத்து பாவங்கள், பழிகளிலிருந்தும் விடுபடுவர். உடல்நலம், கவிபுனைதல், நல்லபுத்தி, ஆற்றல், ஒப்பற்றபலம், ஒளிமயமான வாழ்வு, நீண்ட ஆயுள், கல்வி, பொருள், நன்மக்கட்பேறு போன்ற சகல நலன்களையும் சூரியன் அருளால் பெறுவர் என்பது திண்ணம்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

5.“சூரிய கவசம்”- தினமும்/ ஞாயிற்றுக் கிழமை

முடி புனைந்து அரும்பொற்பைம்பூண் முயங்க மெய் முழுதும் 
பூண்டு வடியிசை மறை புகன்று மாதவர் அங்கி ஓம்பக் கொடி
அணி நெடுந்தேர் ஏறிக் குலம்படு கமல மங்கை கடிமணம்
செய்யத் தோன்றும் கதிரவன் திருத்தாள் போற்றி!

திருவளர் தலை புரக்கச் சீர்மலி கிருணி என்றும்
உருமலி நெற்றி காக்க! ஓங்கு சூரியன்
ஆதித்தன் குருமலி நயனம் காக்க! குழைச்செவி 
திவாகரன் தாள் மருவினான் காக்க!

நாசி வளரொளி பானு காக்க! மலர்முகம் இரவி காக்க! வளை 
கடல் உலகுக்கு எல்லாம் பலர்புகழ் விழியாய் நின்றோன் 
பவளவாய் புரக்ககண்டர் கலர் அறிவரிய செய்யகதிர் விபாவசு 
புரக்க வலர் கிரகபதி கந்தம் அகம் மகிழ்ந்து என்றும் காக்க!

அரும் பிரபாகரன் தான் அமர்புயம் இரண்டும் காக்க!
தரும்புகழ்க் கையிரண்டும் தழற்கதிர் புரந்து காக்க!
வரும் பெரும் பானுமான் என் மனநெறி வாழாது காக்க!
விரும்பும் ஏழ்பரி உகைப்போன் மேவரு மருங்குல் காக்க!

விண்மணி நாபி காக்க! மேவு பன்னிருவர் ஆனோன்
நண்ணிய கடி புரக்க நயம்பட பொலியுஞ் சக்தி 
எண்ணுறு சவிதாக் காக்க! எழிற்படு தொடை இரண்டும்
பண்ணவர் தலைவன் காக்க! பாற்கரன் முழந்தாள் காக்க!

நயம்படு சங்கம் காக்க! நயக்கும் மார்த்தாண்டச் செல்வன்
பயம்படு பரடு காக்க! பயில் உறு கோள்கட்கு ஈசன்
சயம்படும் அடிகள் காக்க! சார் தினமணி சரீரம்
வயம்படு மித்திரன்தான் மனமகிழ்ந்து என்றும் காக்க!

அறமாதி தருபானு கவசநூல் வைகறையில் 
அமர்ந்து போற்றில் திறமாகும் தேவரொடும் 
அறிஞர் புகழப்படுவார் சித்தத்துள்ளே!
உறமேவும் பொருள் பெறுவர் கிரகபயம் 
ஒழிவர் உயிர் உடல் நீங்கில் பெறலாய 
கனலிபதம் பெற்று உய்வர்!

அவனிமிசைப் பிறந்துள்ளாரே! ஆண்டு ஒன்று போற்றி 
செயின் அறன்கடையும் கொடுநோயும் அரியகோளும் 
மூண்டொன்றும் செயாதோட்டும் முடிசூடி உலகம் ஒரு மூன்றும்
காவல் பூண்டொன்று அரசு செய்யும் வாழ்வளிக்கும் புகழ் 
அனைத்தும் பொருந்தக்கூட்டும் காண்டகும் ஏழ்பரி நெடுந்தேர் 
உகைந்து உலவும் கதிர்கடவுள் கவசக் கல்வி!

வேறுபடும் ஒளிபடைத்து விளங்கும்பல் மணியிழைத்து மேவும் பைம்பொன் வீறுமணி பலபுனைந்து கற்பகம் போல் பொலிவு எய்தி விரவும் தண்தேன் ஆறுபடு கடம்ப மலர் நிகர்மேனிச் செங்கதிரை அகத்திருத்தின் ஊறுசெய வருநோய்கள் எவையும் 
அனல்கொளும் பஞ்சின் ஒழிந்து போமே!

6.“சூரியன்”-சீரானவாழ்விற்கு-தினமும்/ஞாயிற்றுக்கிழமை

காசினி யிருளை நீக்கும் கதிரொளி வீசி எங்கும் 
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும் 
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த 
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!

(பிரகாசமான தனது கதிர்களால் உலகின் இருளைப் போக்குபவரும், வழிபடும் பக்தர்களுக்கு வளமும் நலமும் அளிப்பவரும், ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் ஏறி மேருமலையை இடைவிடாது வலம் வருபவருமான சூரிய பகவானே, உம்மை வழிபடுகிறேன் எம்மைக் கப்பாற்றுவீராக!)

7.“சூரிய கீர்த்தனை”- முத்துசாமி தீட்சிதர்- சூரியோதயத்தின் போது தினமும்/ ஞாயிறுக் கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

oஅழகான சாயாதேவியின் கணவரான சூரியபகவானே! உன்னை வணங்குகின்றேன்! காரணம், காரியம் என இரண்டுமாயிருப்பவரே, உலகத்திற்கு ஒளியைக் கொடுப்பவரே, சிம்மராசியின் அதிபதியே, மகான்களால் துதிக்கப்படும் தேஜஸை உடையவரே, ஆரோக்யத்தை அளிப்பவரே. உன்னை வணங்குகின்றேன்.

oநீர் தாமரையின் தோழன். உலகின் நண்பர். பிரகாசிப்பவர். அயிரக்கணக்கான கதிர்களை உடையவர். கர்ணனை மகனாகக் கொண்டவர். கொடிய பாவங்களைப் போக்கடிப்பவர். அக்னி வடிவினர். குருகுஹனின் வழிபாட்டால் ஆனந்தப்பட்டவர். நல்ல கிரணங்களை உடையவர். உன்னை வணங்குகின்றேன்.

oபண்டிதர்களால் செய்யப்படும் நற்காரியங்களுக்கு சாட்சியாக இருப்பவர். சந்திரன் முதலான கிரகங்களுக்கு அதிபதி. நற்காரியங்களுக்கெல்லாம் நீயே சாட்சி. மிகவும் அழகான ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை உடையவர். எட்டு எழுத்துள்ள மந்திர ஸ்வரூபியாய் உள்ளவர். பொன்மேனியை உடையவர். உன்னை வணங்குகின்றேன்.

oபிரும்மா, விஷ்னு, சிவன் ஆகியோரின் அம்சமாக விளங்குபவர். இகபர சுகங்களைதருபவர் நீயே, உன்னை வணங்குகின்றேன்.

8.“சந்திரன்துதி”-தினமும்/ திங்கள்கிழமை-சகல நன்மைகள்.

எங்கள் குறைகளெல்லாந் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய் 
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுராய் போற்றி

9.“சந்திரன்”-சீரான வாழ்விற்கு- தினமும்/ திங்கட்கிழமை

அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்து உதித்தபோது
கலைவளர் திங்களாகிக் கடவுளார் எவரும் ஏத்தும் 
சிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய்

மேரு மலை வலமாய் வந்த மதியமே!

10.“சந்திரன் துதி”- உறுதியான மனநிலை பெற, பிணிகள் அகல, மனநோய் நீங்க- பௌர்ணமி / சித்ராபௌர்ணமி.

அமிர்தம் போன்ற தண்ணொளிக் கிரணங்களால் உலகம் முழுவதையும் உயிர்ப்பிக்கும் சந்திர பகவானே! உங்களுக்கு நமஸ்காரம்! அமிர்த மண்டலத்தில் சஞ்சரிக்கும் நீங்கள், எனக்கு பூரண உடல் நலத்தை அருளுமாறு வேண்டிக் கொள்கிறேன். எனக்கு ஆரோக்கியத்தை அருளுங்கள்! தாங்கள் அனைவருக்கும் அரசன்! மகாலட்சுமியின் சகோதரர்! பச்சிலைகள் எல்லாம் உங்களால்தான் துளிர்கின்றன! இரவு நேரத்து அதிபதியே, தாங்கள் என்னை உடல், மன நோய்களிலிருந்து காக்க வேண்டும். என் வாழ்வில் பரிபூரண மகிழ்ச்சி நிலவவேண்டும்! நமஸ்காரம்!

தயிர், சங்கு, பனி ஆகியவை போன்ற வெண்ணிறமுள்ளவரும், பாற்கடலைக் கடையும்போது உதித்தவரும், ஈஸ்வரனின் சிரத்தினை அலங்கரிப்பவருமான சந்திரனை வணங்குகின்றேன்.

11.“சந்திரன் கீர்த்தனை”- முத்துசாமி தீட்சிதர்- தினமும்/ திங்கள்கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

oஏ மனமே, நல்லோரின் மனம் போன்ற குளிர்ந்த சுபாவத்தை உடைய சந்திரனை வணங்குவாயாக.

oஇந்திரன் முதலிய லோக பாலர்களினால் வணங்கப்பட்டவன். தாரையின் நாயகன். மனத்தைச் குளிரச் செய்பவன். பதினாறு கலைகளைத் தயாரிப்பவன். இரவை உண்டுபணுபவன். லஷ்மிக்கு சகோதரன். எப்போதும் அமிர்தத்தை உண்டு பண்ணுபவன். உன்னை வணங்குகின்றேன்.

oசிவனின் தலையை அலங்கரிப்பவன். குளிர்ந்த கிரணங்களை உடையவன். நான்கு புஜங்களை உடையவன். மன்மதனை குடையாகக் கொண்டவன். வெங்கடேசனின் ஒரு கண்ணாக இருப்பவன். விராட புருஷனுடைய மனதிலிருந்து தோன்றியவன். மூலிகைகளை உண்டு பண்ணுபவன். உன்னை வணங்குகின்றேன்.

oஆம்பல் பூக்களுக்கு நண்பன். பிரும்மா, குரு, குஹன் முகத்தில் இருப்பவன். முயலை அடையாளமாகக் கொண்டவன். பிருஹஸ்பதியின் சாபத்திற்கும், பின் அனுகிரஹத்திற்கும் பாத்திரமானவன். உன்னை வணங்குகின்றேன்.

oசரத்கால நிலவைப்போல் வெளுத்த பிரகாசிக்கும் மேனியை உடையவன். கங்கணம், கேயூரம், பூமாலை, கிரீடம் முதலியவற்றை அணிந்திருப்பவன். தாமரைப் பூக்களுக்கு விரோதி. ரோஹினியை மகிழ்வூட்டுவதில் சாமர்த்தியமானவன். இவ்வளவு பெருமைகளை உடைய சந்திரனே உன்னை வணங்குகின்றேன்.

12.“சந்திர கவசம்”- தினமும்/ திங்கட் கிழமை

o நஞ்சம் அமுதமா நயக்கு நாயகன் 
செஞ்சடைக் கானகம் செறியும் அம்புலி 
விஞ்சிடு பண்ணவர் விருந்து அருந்துறும் 
தஞ்சமாம் தானவன் தாள் வழுத்துவாம்!

o நலம்படு சென்னி காக்க! நயம்படு மோடதீசன்
வலம்படு நெற்றி காக்க! வளர் கலாநிதி வாழ்நோக்கம்
தலம்படு நெடிய கீர்த்திச் சந்திரமன் புரக்க!
புலம்படு செவி இரண்டும் பொலி கலாநிதி புரக்க!

o ஆங்கமை சபாகரன் தான் அமர்தரு நாசி காக்க!
தேன்கமழ் குமுத நண்பன் திருமுகம் புரக்க! செங்கை
ஓங்கு சோமன் புரக்க! உயர் சுதாகரந்தான் தந்த
நீங்குறா தென்றும் காக்க! நிசாகரன் கடி புரக்க!

o வளர்ச்சி தொடை புரக்க! மான்படு மதியப் புத்தேள்
தளர்வறு முழந்தாள் காக்க! சார் துவிசாதிபன் தான்
கிளர்சங்கம் காக்க! என் சொற்கேட்டிடு கிரணச் செல்வன்
உளர்தரு மடி புரக்க! உடலம் சந்திரன் புரக்க!

o பூவேறு மணிமகுடம் கேயூரம் அழகு ஒழுகப் 
பூண்ட மூர்த்தி சேவேறு சிவன் சடைமேல் 
சென்று ஆபரணம் திருமால் செங்கண்
மாவேறு நான்கு புயம் உடையன் என மதி 
உருவம் மனத்தில் எண்ணிப் பாவேறு கவச முறை 
படிப்பவர் கேட்பவர் வெற்றிப் பயன் கொள்வாரே!

13.“செவ்வாய் துதி”- சீரானவாழ்விற்கு- தினமும்/ செவ்வாய்க் கிழமை

சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் போக்கு.

14.“அங்காரகன்துதி”- துர்பாக்யம், வறுமை நீங்க, பாக்யங்கள் பெற- தினமும்/ செவ்வாய்க் கிழமை.
சிவந்த மணமிக்க பூமாலை அணிந்தவனே, காதுகளில் தங்க குண்டலங்களைத் தரித்தவனே, கிரகங்களுக்கொல்லாம் நாயகனே, அங்காரகனே, செவ்வாயே, உனக்கு வணக்கம். உம்முடைய திருப்பார்வையால் எமக்கு ஏற்பட்டிருக்கும் துர்பாக்யங்களை விலக்குவாயாக, என் ஏழ்மையை விரட்டுவாயாக, அளவற்ற செல்வத்தை அருள்வாயாக, அன்பு அகலாத உத்தம பத்தினியை நான் அடையச் செய்வாயாக, அங்காரகனே உன்னை வணங்குகின்றேன்.

பூமி தேவியின் கர்ப்பத்தில் பிறந்தவரும், மின்னலைப் போல் பிரகாசிப்பவரும், குமாரனும், சக்தி ஆயுதத்தைக் கையில் உடையவருமான மங்களனை, செவ்வாயை வணங்குகின்றேன்.

15.“அங்காரகன்”-சீரான வாழ்விற்கு- தினமும்/ செவ்வாய்க் கிழமை

வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம் தனில் அளிக்கும்
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி! போற்றி!

16.“அங்காரகன் கீர்த்தனை”- முத்துசாமிதீட்சிதர்- தினமும்/ செவ்வாய்க்கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

தன்னை வணங்குபவரை கற்பகமரம் போல் ஆதரிப்பவரும், கிழமைகளுக்குள் செவ்வாய் மங்களவாரமாக விளங்குபவரும், பூமாதேவியின் குமாரருமான அங்காரகனை நான் வணங்குகின்றேன்.

சிருங்காரமான மேஷ விருச்சிக ராசிகளுக்கு அதிபதியும், சிவந்த மேனியரும், செவ்வாடை அணிந்தவரும், சக்தி, சூலம் என்ற ஆயுதங்களைத் தாங்கியவரும், மங்களமானவரும், சங்கு பொன்ற கழுத்தையுடையவரும், மிருதுவான பாதங்களையுடையவரும், மகர ராசியில் உச்சமாக இருப்பவரும் ஆன அங்காரகனை நான் வணங்குகின்றேன்.

தேவாசுரர்களால் வணங்கப்பட்டு மந்தஹாசமுகத்தினராய் விளங்குபவரும், நிலத்தை தருபவரும், சகோதர பாசத்தை அளிப்பவரும், சிவந்த கண்களையுடயவரும், எளியோர்களைக் காப்பாற்றுபவரும் ஆன அங்காரகனை நான் வணங்குகின்றேன்.

வைத்தியநாத ஷேத்திரத்தில் விஷேசமாக பூஜிக்கப்படுபவரும், தேவகணங்கள், குருகுஹன் ஆகியோரின் கடாக்ஷத்திற்கு பாத்திரமானவரும், சூரியன், சந்திரன், குரு ஆகியோருக்கு மித்திரனும், அழகான மனைவியையுடையவரும், முழங்காலில் கைவைத்து அழகாக தோற்றமளிப்பவரும், நான்கு கரங்களையுடையவரும், மிக விசித்திரமானவருமான அங்காரகனை நான் வணங்குகின்றேன்.

17.“அங்காரகக் கவசம்”- நோய், கடன் நீங்க, பாக்யங்கள் பெற- தினமும்/ செவ்வாய்க் கிழமை.

நம்பு முழந்தாள் படுக்கும் இடக்கையும் 
அபநல நன்கு கொண்ட வம்புபடு மலர்
பொருவும் வலக்கையும் நாற்புயமும் வானநாடும்
அம்புவியும் தொழுமேடம் உகைத்துவரும் பேர் 
அழகும் அமையக் கொண்ட செம்பொன் அணி பல 
புனையும் செம்மேனிச் சேய் உருவம் சிந்தித்தி உய்வாம்!

நாட்டும் அங்காரகன் தான் நயம்படு சென்னி காக்க!
கூட்டும் வையத்தரணி மைந்தன் குளிர்மதி முகம் புரக்க!
கேட்டு உணர் செவி இரண்டும் கேழ்த்த செந்துகிலோன் காக்க!
நட்டம் செங்கண்ணோன் காக்க! நாசி வெற்புடையோன் காக்க!

நிலமகன் நோட்டம் காக்க! நெடும்புயம் அரத்த மாலை
நலமலி புயத்தோன் காக்க! நலம்படு கையிரண்டும் 
வலமலி வேலோன் காக்க! மனநான்கு புயத்தோன் காக்க! 
பலவுநோய் கடியும் ஈசன் பருமணி உதரம் காக்க!

கடலுடைப் பூமி மைந்தன் கடிதடம் புரக்க ஊரும் மிடல்படு 
கதையோன் காக்க! வியன் முழந்தாள் கணைக்கால் படர்புகழ்க் 
குசன் புரக்க பரவடி பௌமன் காக்க! உடல்படும் அங்கம் 
எல்லாம் உறுதகர் ஊர்வோன் காக்க!

படிக்கும் அங்காரக கவசம் பகைகடியும், பூதமொடு பகர் 
பிரேதம் இடிக்குரல் வெம்பிசாசம் அழிந்திடும், சித்தி 
எவ்வகையும் இசைய நல்கும், முடிக்கவரும்
நோய்முடிக்கும் செல்வமொடு புத்தி முத்தி 
முழுவதும் நல்கும், பிடிக்கும் எழில் பாக்கியங்கள்
பெருவிக்கும், கடன்போக்கிப் பெருமை ஈட்டும்!

வகுக்கும் அங்காரக கவசம் ஓதுவோன் வளர் 
குருதி வாரந்தன்னில் தொக்குநிறஞ் சிவக்குமலர் 
செவ்வொளிச் சந்தனக் கலவை தூபம் தீபம் 
பகுக்கும் அக்காரம் கலக்கு நல்லடிசின் முதல் 
பலவும் பயிலக் கொண்டு மிகுக்குமனப் பத்தியொடு 
நிலமகன் பூசனை மறைநூல் விதியால் செய்து!

ஒருநால்வர் பன்னிருவர் எண்மருள்தன் பொருள் 
தகுதிக்கு உற்றவற்றால் பெருவாய்மை மறையவருக்கு 
ஊட்டி நிலமகன் விரதம் பேணிக் கொள்ளில் கருநாகம்
தேள் முதலாம் கொடியவற்றால் வருந்துயரம் கழிந்து 
போகும்! திருஏறும் வினையகலும் நோய் ஒழியும்! 
உரைக்கு மொழி திண்ணம்! திண்ணம்!

செவ்வாய் தோஷங்கள் விலக தினமும் 51முறை

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசே நாய தீமஹி
தந்நோ ஷண்முக ப்பிரசோதயாத்

18.“புதன் துதி”- சூரியோதயத்தின் போது தினமும்/ புதன் கிழமை -சகல நன்மைகள்.

 இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்பொலியானே
உதவியே ய்ருளும் உத்தமா போற்றி

19.“புதன்”-சீரான வாழ்விற்கு- தினமும்/ புதன் கிழமை

 மதன் நூல் முதலாய் நான்கு மறை புகல் கல்வி ஞானம் 
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன் பசு பாரி பாக்கியம் சுகம்பல கொடுக்க வல்லான்
புதன்கவி புலவன் சீர்மால் பொன்னடி போற்றி! பொற்றி!

20.“புதன் கீர்த்தனை”- முத்துசாமி தீட்சிதர்- தினமும்/ புதன் கிழமை-கோளின் அனுக்கிரகம்- சகல நன்மைகள்.

அதிபதி யாகிய புத பகவானை நான் வணங்குகின்றேன். தேவர்களால் போற்றப்படுபவரும், சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்த புத பகவானை நான் வணங்குகின்றேன்.

அறிவாளிகளால் அறியப்பட்டவர், அந்தணர்களால் சந்தோஷிக்கப்பட்டவர், இனிய கவியியற்றுபவர், புகழத்தக்க செல்வங்களை அளிப்பவரான புத பகவானை நான் வணங்குகின்றேன்.

குங்கும வண்ணமுள்ளவர், குருகுஹனுக்கு சந்தோஷம் அளிப்பவர், செவ்வாய்க்கு எதிரி, ரத்ன கிரீடம், மாலை, தோள்வளை, காப்பு ஆகியவைகளை அணிந்தவர். மிக அழகான மிதுன, கன்யா ராசிகளுக்கு

கையில் புத்தகங்களை வைத்துக் கொண்டிருப்பவர். அடியார்களால் போற்றப்படுபவர், பாபம் முதலிய துர்க்குணங்கள் இல்லாதவர், சிவனடியார்களுக்கு நன்மை செய்பவர். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவராகிய புத பகவானை நான் வணங்குகின்றேன்.

ஞாழல்- கோங்கு- குங்குமம் மொட்டு போன்ற கருநிறம் உள்ளவரும், உவமையேயில்லாத அழகுடையவரும், ஞான வடிவமானவரும், சந்திரனின் குமாரரும், நற்குணங்களின் இருப்பிடமானவருமான புதபகவானை வணங்குகின்றேன்.

21.“புத கவசம்”- நோய், துன்பம் நீங்க, புண்ணியங்கள் பெற- தினமும்/ புதன் கிழமை.

 அம்பொனாடை அழகுபடப்பனை 
பம்பு குங்கும மேனியும் பார் எலாம் 
நம்பு புத்தக கையும் நயந்துகொள் 
தம்பிரான் புதன் தால் மலர் ஏத்துவாம்!

 வரும்புதன் சென்னி காக்க!
வளர்தரு மதியின் மைந்தன்
அரும்பிறை நெற்றி காக்க!
அறிஞன் கண் இரண்டும் காக்க!

 விரும்பு உறு செவி இரண்டும் 
விதுமகன் காக்க! மெய்க்கண்
தரும்பல சுகந்தம் பூசும்
சவுமியன் உயிர் புரக்க!

 புத்தகம் ஏந்து நாதன்
புயவரை இரண்டும் காக்க!
நித்தமும் தேவர் போற்று 
நின்மலன் மருங்குல் காக்க!

 வித்தக வன நாதன்
விழைகரு நாபி காக்கச்
சுத்தநூல் கலைவல்லாளன்
சொலும்கடி தடம் புரக்க!

 தேவர்கள் தலைவன் என்றும் 
திருமலி தொடை புரக்க! 
மேவரும் உரோகிணி மைந்தன் 
விழைதரு முழந்தாள் காக்க!

 ஆவன தருவோன் சங்கம்
அளிக்க வில் அமர் கரத்தோன் 
பாவடி காக்க மேனி 
பனிமதி புதல்வன் காக்க!

 நலமேவும் புதகவசம் படிப்பவர் 
கேட்பவர் கேட்க நயந்து செய்வோர் 
வலமேவும் துன்பு ஒழிய நோய் ஒழியப்
பல்லாண்டு வாழ்க்கை எய்தி
நிலமேவும் புத்திரரும் பௌத்திரரும்
மிகப்பெருக நினைந்த எல்லாம் 
அலமேவும்படி பெறுவர் புண்ணியமும் 
மெய்க்கதியும் அடைவர் அன்றோ!

22.“குரு துதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/வியாழக்கிழமை

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்திவ் யாழ பரகுரு நேசா
க்ரகதோஷமின்றிக் கடாக்ஷீத் அருள்வாய்

23.“குரு”-சீரான வாழ்விற்கு- தினமும்/வியாழக்கிழமை.

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி 
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும் 
இறையவன் குரு வியாழன் இருமலர்ப் பாதம் போற்றி!

24.“குரு துதி”- வாழ்வில் வளம் பெற- தட்சிணாமூர்த்தி சன்னதியில்- தினமும் / வியாழக் கிழமை.

குருவும், பிரகஸ்பதியும், ஜீவனும், ஆச்சார்யனும், புத்திமான்களுள் சிறந்தவனும், வாக்கிற்கு ஈஸ்வரனும், நீண்ட தாடி, மீசை உள்ளவனும், பீதாம்பரம் தரித்தவருமான உம்மை வணங்குகின்றேன். அமிர்தமயமான பார்வையுள்ளவனும், கிரகங்களுக்குத் தலைவனும், கிரகங்களின் பீடையைப் போக்குகிறவனும், கருணைப் பார்வை உள்ளவனும், அழகிய உருவம் கொண்டவனும், தேவர்களால் பூஜிக்கத் தகுந்தவனுமான குருவே உன்னை வணங்குகின்றேன்.

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் ஆசார்யரும், தங்க நிறமுள்ளவரும், மூன்று உலகங்களிலும் வணங்கப்படுபவருமான குருபகவானை வணங்குகின்றேன்.

25.“குருகீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்- தினமும்/ வியாழக் கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

பிரும்மனுக்கு பிறந்தவரும், தாரையின் கணவருமான பிருஹஸ்பதியே உன்னை வணங்குகின்றேன்!

மிகவும் பலம் வாய்ந்தவரும், வாக்குகளுக்கு அதிபதியும், அழகான தனுர், மீன ராசிகளுக்கு அதிபரும், இந்திரன் முதலானோர்களால் போற்றப்படும் ஆக்ருதியை உடையவரும், விஷ்னு முதலியவர்களால் புகழப்படும் மிகுந்த அறிவாளியான குரு பிரஹஸ்பதியே நான் உன்னை வணங்குகின்றேன்!

தேவகுரு, வஜ்ரதாரி, நல்ல அழகர், மூவுலகிற்கும் குரு, கிழத்தன்மையில்லாதவர். கோபமில்லாதவர். கசனின் தந்தை, தன்னை அண்டியவர்களுக்கு கற்பக விருஷம் போன்றவர். பரமசிவன், குரு, குஹன் ஆகியோரின் மகிழ்ச்சிக்கு ஆளானவராகிய குருவே நான் உன்னை வணங்குகின்றேன்!

புத்ர பாக்யத்தைக் கொடுப்பவர். எளியோரின் பந்து, பரா முதலிய நான்கு வாக்குகளின் லக்ஷணத்தைப் பிரகாசிக்கச் செய்பவர். கருணைக்கடல். சுத்தமானவர். குறையற்ற நீதிசாஸ்திரத்தை இயற்றியவர். தடங்கலில்லாதவர். உலகத்தை ஆட்சி செய்பவர். களங்கமற்றவர். உலகைக் காப்பவர். நிர்க்குணஸ்வரூபி. வேள்விகளின் பயனை கொடுப்பவராகிய குரு பிரகஸ்பதியே நான் உன்னை வணங்குகின்றேன்!

26.“குரு கவசம்”- துன்பம் நீங்க, வெற்றி பெற- தினமும்/ வியாழக் கிழமை.

 சீரியன் மனத்துள் வேண்டும் 
சித்தி தந்து அளித்துச் செய்யும்
பாரியல் கருமம் கூட்டிப்
பரவு மெய்ஞான வாழ்வு 
மேரியல் செல்வப் பேறும் 
யாவையும் ஒருங்கு நல்கும் 
தெரியல் அறிஞன் தேவர்
தேசிகன் திருத்தாள் போற்றி!

 அரும் பிரஸ்கபதி பேர்
ஆண்டகை சென்னி காக்க!
வந்திரு நெற்றி காக்க!
வானவர் குரவன் கன்னம்
விரும்பினன் காக்க! நாட்டம்
வேண்டுவ தருவோன் காக்க!
பருங்குமிழ் பொருவு நாசி 
பண்ணவர் அரசன் காக்க!

 பாட்டு அமர் செவ்வாய் வேத
பாரகன் காக்க! துண்டம்
கூட்டு முற்றறிவன் காக்க!
குலவரைப் புயம் இரண்டும் 
வேட்டமர் சுகம் தந்து ஆள்வோன்
விரும்பினன் காக்க! செங்கை 
வாட்டும் வச்சிரம் கைக்கொள்ளும்
வான்வன் வழாது காக்க!

 பருவரை பொருவு மார்பம்
பயிலுங்கீட்பதி புரக்க!
விருதனம் வாக்கு வல்லோன் 
என்றும் வந்து எய்திக் காக்க
வருசுகம் நல்கும் நாதன்
வயங்கு எழில் வயிறு காக்க!
பொருவரு நீதி வல்லோன்
பொற்பு உரு நாபி காக்க!

 எங்கும் சென்று அளிக்கும் ஈசன்
எழிற்கடி புரக்க! ஊருத்
தங்கு புண்ணியன் புரக்க!
சங்க மெய்ஞானம் ஈயும்
புங்கவன் புரக்க! பாதம்
புகல் உலகெல்லாமாகும்
அங்கணன் புரக்க! மேனி
அமர் குருப் புரத்து காக்க!

 காலையும் உச்சிப் போதும்
கதிரவன் குடபான் மேவு
மாலையும் வானோர் போற்ற
வருகுரு கவசம் என்னும்
நூலை அன்போடு உரைக்கும்
நுண்ணியன் வேட்டாங்கு எய்திச்
சோலை அம் தரு விண்ணாட்டுச் 
சுரரையும் வெற்றி கொள்ளும்!

குருதிசை தோஷங்கள் விலக தினமும் 11முறை

ஓம் தட்சிணா மூர்த்தியே வித்மஹே
த்யா நஸ்தாய தீமஹி
தந்நோ தீச ப்பிரசோயாத்

27.“சுக்கிரதுதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/வெள்ளிக்கிழமை

சுக்கிர மூர்த்தியே சுபமிக ஈவாய்
வக்ரமின்றி வரமிக அருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்கருளே.

மூர்க்கவான் சூரன் வாணன் முதலியோர் குருவாய் வையம்
காக்க வான்மழை பொய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன்
தீர்க்க வானர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும் 
பார்க்கவன் சுக்கிரன் தன் பாதபங்கயங்கள் போற்றி!

28.“சுக்ரன்துதி”-சீரானவாழ்விற்கு-தினமும்/வெள்ளிக் கிழமை.

வீரத்தில் சிறந்தவர்களும், மூர்க்ககுணம் உடையவர்களுமான அசுரர்களின் குல குருவாக இருப்பவரும், பூவுலகம் செழித்திட அவசியமான மழையைப் பொழியச் செய்பவரும், கவிமகன் என்று அழைக்கப் படுபவரும், தன்னை வழிபடுவோருக்கு பொன், பொருள், போகம் போன்ற சகல செல்வங்களையும் அளிப்பவரும் இறந்தவரையும் மீண்டும் எழச்செய்யும் மிருத சஞ்சீவி மந்திரத்தினை அறிந்தவருமாகிய சுக்ரபகவானின் திருவடித் தாமரைகளைப் பணிக்கின்றேன்.

பனி, மல்லிகை, தாமரை போன்ற நிறமுள்ளவரும் அசுரர்களின் பரமகுருவும், சகல சாஸ்திரங்களையும் அறிந்தவருமான சுக்கிரனை வணங்குகின்றேன்.

29.“சுக்கிரன் கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ வெள்ளிக் கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

சகல தத்துவங்களையும் அறிந்த ஸ்ரீசுக்ர பகவானை நான் வணங்குகின்றேன்!

ஹே! சுக்ர பகவானே! என்னை எப்போதும் காப்பாயாக! விருஷப, துலா ராசிகளுக்கு அதிபரே! அசுரர்களின் நலனைக் கோருபவரே, விஷ்னுவின் கருணையால் இழந்த ஒரு கண்ணை மீளப்பெற்றவரே, கிரீடத்தை தரித்திருப்பவரே, வெண்மையான மேனியை உடையவரே உன்னை நான் வணங்குகின்றேன்!

இருபது வருச தசாகாலமுடையவரே. எட்டு கர்வங்களுக்கு உட்பட்டவரே. அற்புதமான கவியே. மனைவியைக் கொடுக்கவல்ல களத்திராகார அதிபதியே, சூரியன், குரு ஆகியோரின் எதிரியே. நவாம்சம், ஹோரை, த்ரேக்காணம் முதலியவைகளையும், வர்கோத்தம ஸந்தர்ப்ப காலத்தில் வக்ரம், உச்சம், நீசம், தன்வீடு, கேந்திரம், த்ரிகோணம் இவைகளை உடையவரே உன்னை நான் வணங்குகின்றேன்!

ஜனன லக்னத்தை முப்பாதாகப் பிரிக்கும் த்ரிம்சாம்ஸம், ஜனன லக்னத்தை அறுபதாகப் பிரிக்கும் ஷஷ்டியாம்ஸம், ஐராவதாம்ஸம், பாரிஜாதாம்ஸம், கோபுராம்சம் ஆகியவைகளில் ராஜ யோகத்தைச் செய்து கொடுப்பவரும், குருகுஹனால் சந்தோஷிக்கப் பட்டவருமான சுக்ரபகவானே நான் உன்னை நான் வணங்குகின்றேன்!

30.“சுக்கிர கவசம்”- துன்பம் நீங்க, நினைத்தவைகூட- தினமும்/ வெள்ளிக் கிழமை.

பங்கய நாளம் குந்தம்
படர்மதி பனியான் பால்போல்
தங்குறும் வெள்ளை மெய்யும்
சத்தும் வெண்துகிலும் செவ்வி
பொங்குறும் அக்கமாலைப்
பொலிவு நூற்கேள்வியும்கொள்
புங்கனவன் புகரா மேலோன்
பொன்னடிக் கமலம் போற்றி!

பாங்கொடு வணங்கும் சென்னி 
பார்க்கவன் பரிந்து காக்க!
தீங்கறு கிரகநாதன்
திருநுதல் புரக்க நாட்டம்
ஓங்குதானவர்தம் ஆசான்
ஓம்புக செவி இரண்டும்
தாங்குவெண் சாந்தம் போன்று
தயங்கு ஒளி மெய்யோன் காக்க!

பொலி கவி நாசி காக்க!
புதுமதி பொருவும் துண்டம்
வலிகெழு திதியின் மைந்தர்
வழுத்திடப் பாடுவோன் காக்க!
நலிவறு முசனன் செவ்வாய்
நயந்தனன் புரக்க கண்டமலி
சிவ பத்தியாளன்
வைகலும் புரந்து காக்க!

ஒளிபடு மேனி அண்ணல்
உயர்வரைப் புயம் புரக்க
தெளிவு உறுயோகச் செல்வன்
திருமலி மார்பம் காக்க!
விளிவரும் அக்க மாலை
மேனியில் தரிக்கு அண்ணல்
அளிபடு கருணையோடும்
ஆலிலை வயிறு காக்க!

புவமலி கலைஞன் காக்க!
புணர்கடி உலகுக்கு எல்லாம்
நிலவு உயிராகி நின்றோன்
நெடுந்தொடை புரக்க யாரும் 
பலதுதி புகன்று போற்றும்
பண்ணவன் முழந்தாள் காக்க!
நலமலி பிருகு மைந்தன்
நயம்படு கனைக்கால் காக்க!

பண்ணவர் தலைவன் என்றும்
படர்தரு பரடு காக்க!
நண்ணுறு குணக்குன்று அன்னான்
நடைப்படு பாதம் காக்க!
வண்ண வெண்துகில் புனைந்த
வள்ளல் என்மேனி முற்றும்
அண்ணுநோய் பலவும் போக்கி
அந்தியும் பகலும் காக்க!

தக்கவர் பரவிப் போற்றும்
தைத்தியர் குருவை வேண்டிச்
சுக்கிர கவசமென்னும்
தோத்திரக் கவிநூல் பாடி
நெக்குநெக்கு உருகு நெஞ்சோர் 
நினைந்தன யாவும் கூடும்
மக்களும் மனையும் வாழ்வும்
வைகலும் பெருகு மாதோ!

31.“சனி துதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/சனிக்கிழமை

சங்கடந்தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே
இச்சகம் வாழ இன்னருள் தாதா

32.“சனி”- சீரான வாழ்விற்கு- தினமும்/ சனிக் கிழமை

முனிவர்கள் தேவர்கள் ஏழு மூர்த்திகள் முதலினோர்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ?
கனிவுல தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனியனே உனைத் துதிப்பேன் தமியனேற்கு அருள்செய்வாயே!

33.“சனி கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ சனிக் கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

சூரிய குமாரரும், மிகவும் தைரியம் உள்ளவருமான சனீஸ்வரபகவானை நான் வணங்குகின்றேன்.

சம்சாரக் கடல் பற்றிய பயத்தை மக்களுக்கு உண்டாக்குபவர். மிகக் கொடூரமான பலன்களை அளைப்பவர். பரமசிவனின் பக்தர்களுக்கு அதிசய பலன்களைக் கொடுப்பவர். சனீஸ்வரபகவானை நான் வணங்குகின்றேன்.

கருமையான தேகமுள்ளவர். யமனின் சகோதரர். காகவாகனர். நீலவஸ்திரம், பூமாலை உடையவர். நீல ரத்தினங்களை அணிந்தவர். மாலினி மந்திரத்தால் துதிக்கப்பட்டவர். சனீஸ்வரபகவானை நான் வணங்குகின்றேன்.

மகர கும்பராசிகளின் அதிபர். எள்ளன்னம், நல்லெண்ணெய் தீபத்தில் பிரியமுள்ளவர். கருணைக்கடல். பயமற்றவர். காலதண்டத்தால் முழங்காலை இழந்தவர். அண்டினவர்களுக்கு காமதேனு போன்றவர். காலசக்ரத்தை உடைப்பதில் சூரியனைப் போன்றவர். கற்பிக்கப்பட்ட சாயாதேவியின் புதல்வரை வணங்குகின்றேன்.

நீலவண்ண ஆடைகளில் ஜொலிப்பவரும், நீல வண்ணமாயுள்ளவரும், சூரியகுமாரரும், யமனுடைய சகோதரரும், சாயாதேவி, சூரியன் என்ற தேவ தம்பதிகள் இனைந்ததால் உண்டானவருமான சனி பகவானை வணங்குகின்றேன்.

34.“சனி கவசம்”-வெற்றி, புகழ், பெருவாழ்வு கிடைக்க, துயர், விணை, பிணி, கவலை போக்க- தினமும்/ சனிக் கிழமை.

 நெருங்கிடு பிணியெல்லாம்
நீக்கு நோன்மையும்
ஒருங்கு மொய்ம்பு இரண்டும்
ஆங்குறும் கருத்துகில்
மருங்குலும் கழுகிவர் 
வனப்பும் கொண்டு அமர்
அருங்கதிர் மதலை தாள்
அன்போடு ஏத்துவாம்!

 மறுவறும் எனது சென்னி
வளர்புகழ் சனி புரக்க
பெறுமுகம் அன்பர் அன்பன்
பேனுக செவி கறுக்கும்
அறுவை நன்கு அணிவோன் காக்க!
அச்சமே விளைக்கும் மெய்யோன் 
நறுமலர் விழிபுரக்க 
நாசி கை காரி காக்க!

 கருங்களம் உடைய தேவன்
கவின்படு கண்டம் காக்க!
பெருங்கவின் படுபுயத்தோன்
பெருவரைப் புயம் புரக்க!
வருங்கை நீலோற்பலம்போல்
வளர் ஒளி அண்ணல் காக்க!
ஒருங்குறும் எனது நெஞ்சம்
உடல்கரியவன் புரக்க!

 சுந்தரம் தழுவும் உந்தி
கட்கமாம் வயிற்றோன் காக்க!
சந்தமார் விகடம் செய்வோன்
தடம்படு கடிபுரக்க
நந்திய கோர ரூபன்
நற்றொடை புரக்க நாளும்
முந்துறு நெறிய ரூபன்
மொழிதரு முழந்தாள் காக்க!

 மங்கலம் ஈயும் ஈசன்
வனப்புறு கணைக்கால் காக்க!
தங்குறு பரடு இரண்டும்
தகு குணாகரன் புரக்க!
மங்கெனப் படுவோன் பாதம்
பழுதறப் புரக்க! பார்மேல் 
செங்கதிர் அளிக்கும் மைந்தன்
திருந்துமென் அங்கங் காக்க!

 நன்றிததமும் சனிக்கவசம் நாள்தோறும் 
அன்பினொடு நவின்று போற்றில் வென்றிதரும் 
விறல் உதவும், புகழ் அளிக்கும், பெருவாழ்வு 
மேவ நல்கும் கன்றுபவத் துயர் ஒழிக்கும், விணை 
ஒழிக்கும், பிணி ஒழிக்கும், கவலை போக்கும், 
அன்றியும் உள் நினைந்தவெலாம் அங்கை 
நெல்லியம் கனியாம் அவனியோர்க்கே!

 அருஞ்சுவணம் முதலவற்றின் அமைக்கும்
இயந்திரம் எள்ளுள் அமரவைத்து
வருஞ்சுகந்த மலராதிக்கு அரியவற்றால்
பூசித்து மனுப்புகன்று பெருஞ்சுகம் 
கொண்டிட விழைவோன் கருந்துகிலோடு 
அந்தணர்க்குப் பெட்பின் ஈயில் கருஞ்சனி 
உள் மகிழ்ந்து உறுநோய் சுளைந்து
நலமுழுதும் உளங்கனிந்தே நல்கும்!

 ஆங்கதனோடு அரும்பொருளும் 
மற்றவனுக்கு அளிப்பன் எனில்
அவனுக்கு என்றும் தீங்கு அகல 
மேன்மேலும் பெருகி எழும்
வாழ்நாளும் செல்வப் பேறும்
ஈங்குமனை மக்கள் முதல்
பற்பல சுற்றப் பொலிவும்
உதவும் காண்பீர்!

35.“சனி கவசம்”- காரியங்களில் தடையின்றி வெற்றி மற்றும் பெருவாழ்வு கிடைக்க, தினமும்/ சனிக் கிழமை.

• கருநிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும்
ஒருபெரும் கிரகமான ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள்கேட்டு வணங்குகின்றேன்! ஆதரித்தெம்மைக் காப்பாய்!
பொருலோடு பொன்னை அள்ளி பூவுலகில் எமக்குத் தாராய்!

• ஏழரைச் சனியாய் வந்தும் எட்டில் இடம் பிடித்தும்
கோளறு நான்கில் தந்து கொண்டதோர் கண்டகத்தில்
ஏழினில் நின்ற போதும் இன்னல்கள் தாரா வண்ணம்

ஞாலத்தில் எம்மைக் காக்க நம்பியே தொழுகின்றேன் நான்!

• பன்னிரு ராசிகட்கு, பாரினில் நன்மை கிட்ட
எண்ணிய எண்ணம், எல்லாம் ஈடேற வழிகள் காட்ட
எண்ணையில் குளிக்கும் நல்ல ஈசனே உனைத்துதித்தேன்!
புண்ணியம் எனக்கு தந்தே புகழ் கூட்ட வேண்டும் நீயே!

• கருப்பினில் ஆடை ஏற்றாய் காகத்தில் ஏறி நின்றாய்!
இரும்பினை உலோகமாக்கி எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீலவண்ணம் அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா பேரருள் தருக நீயே!

• சனியெனும் கிழமை கொண்டாய் சங்கடம் விலக வைப்பாய்!
அணிதிகழ் அனுஷம், பூசம், ஆன்றதோர் உத்திரட்டாதி,
இனிதே உன் விண்மீனாகும்! எழில் நீலா மனைவியாவாள்!
சனியாக உனக்கு ஆண்டு பத்தொன்போதென்று சொல்வர்!

• குளிகனை மகனாகப் பெற்றாய் குறைகளை அகல வைப்பாய்!
எழிலாள சூரியன் உன் இணையற்ற தந்தை யாவார்!
விழிபார்த்து பிடித்துக் கொள்வாய்!விநாயகர்,அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச்செல்வாய்! துணையாகி அருள் தாராய்!

• அன்னதானத்தின் மீது அளவிலாப் பிரியம் வைத்த
மன்னனே! சனியனே! உன்னை மனதாரப் போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்! உய்ர்வெல்லாம் எமக்குத் தந்தே
மன்னர் போல் வாழ்வதற்கெ மணியான வழிவகுப்பாய்!

• மந்தனாம் காரி, நீலா மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே சனியெனும் எங்கள் ஈசா!
வந்திடும் துயரம் நீக்கு! வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும் இனிய நாளாக மாற்று!

36.“ராகு”- சீரான வாழ்விற்கு-தினமும்/ஞாயிற்றுக்கிழமை

அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா அருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கன்னியே ரம்மியா போற்ற

37.“ராகு”- சீரான வாழ்விற்கு- தினமும்/ஞாயிற்றுக் கிழமை

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன் பரன் கையில் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய்! ரட்சிப்பாயே!

38.“ராகு கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ ஞாயிற்றுக் கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

சூர்ய சந்திரர்களால் பார்க்கப்படுபவரும், விகாரமான சரீரத்தை உடையவருமான ராகுவை நான் வணங்குகின்றேன்.

தேவன், அசுரன் என்ற இருசுபாவமுள்ளவர். வியாதிகளைப் போக்குபவர். சர்ப்பங்களால் ஏற்படும் பயத்தைப் போக்குபவர். முறத்தை சுகமான ஆசனமாக உடையவர். ராகுவை நான் வணங்குகின்றேன்.

கையில் சூலத்தை ஏந்தியிருப்பவர். பயங்கரமான முகத்தையுடையவர். கடினமான மனதையுடையவர். ‘கயாந’ எனத் தொடங்கும் மந்திரத்தை சொல்பவர்களை கருணையுடன் பார்ப்பவர். ராகுவை நான் வணங்குகின்றேன்.

கத்தி, கேடயம், நீலவஸ்திரமணிபவர். கோமேதகத்தை ஆபரணமாக்கிக் கொண்டவர். சனி, சுக்ரன் ஆகியோரின் நன்பர். குருகுஹனை சந்தோஷப்படுத்துபவர். ராகுவை நான் வணங்குகின்றேன்.

பாதி சரீரமுள்ளவரும், மிகுந்த வீர்யமுள்ளவரும், சந்திர சூரியரை கதிகலங்கச் செய்பவரும், சிம்ஹிகையின் கர்பத்தில் உதித்தவருமான ராகுவை வணங்குகின்றேன்.

39.“ராகு கவசம்”- புகழ், நீண்ட ஆயுள் கிடைக்க, நோய் நீங்க - தினமும்/ ஞாயிற்றுக் கிழமை.

 வெம்கடு உமிழ்முகம் விளங்கு பாம்பு உருவ
பொங்கொளி மணிமுடி பூண்ட பொற்சிரம்
அங்கு அமை வடிவொடும் அன்பர் போற்றிச்செய்
சிங்கிகை அளித்திடு சேயைப் போற்றுவோம்!

 பொலியும் நீலாம்பரத்தோன்
பொற்பு உறு சிரம் புரக்க!
நலிவறும் உலகம் போற்றும் 
நாயகன் நெற்றி காக்க!
மலிபகழ் இராகு நாட்டம் 
வரம்படப் புரக்க கன்னம்
மெலிவறும் பாதி மேனி
வித்தகன் மேவிக் காக்க!

 நஞ்சு உமிழ் பவள வாயான்
நாசிகை புரக்க கண்டம்
விஞ்சு எழில் சூலபாணி
விழைவொடு புரக்க, செவ்வாய்
வஞ்சி சிங்கி கைதன் மைந்தன்
மருவினன் புரக்க! கண்டம்
துஞ்சு உறு கண்டம் உண்போன்
தொலைவறப் புரந்து காக்க!

 பொன்பொலி புயங்க நாதன்
புயவரை புரக்க! பூங்கை
மின்பொலி நீலமாலை
வித்தகன் புரக்க! மார்பம்
மன்பொலி தவமே என்றும்
வடிவு எனக் கொள்வோன் காக்க!
தென்பொலி உந்தி என்றும்
செழுமதி உண்போன் காக்க!

 நயம்படு விகடச் செல்வன்
நற்கடி தடம் புரக்க!
பயம்படு வானோர் போற்றும்
பண்ணவன் தொடை புரக்க!
வயம்படு முழந்தாள் கோலமலி
சுவர்ப்பானு காக்க!
சயம்படு நாக வேந்தன்
தளர்வறு கணைக்கால் காக்க!

 விண்ணெழு கிரகநதன்
விளங்கு ஒளிப் பரடு காக்க!
மண்ணுறும் அடி இரண்டும் 
மலிபுகழ்க் கோர ரூபன்
நண்ணினன் புரந்து காக்க!
நயக்குமென் அங்கமெல்லாம்
தண்ணிய நீலச் சாந்தம்
தரிப்பவன், புரந்து காக்க!

 தண்ணமரும் புனலாடிச் சந்திமுதல்
கடன் அனைத்தும் தவறாது ஓம்பி
விண்ணமரும் மதிவிழுங்கும் ராகு கவசம்
புகல்வோன் விரும்பும் உள்ளத்து
எண்ணம்வரும் அவை பெருவன் 
புகழ்பெறுவன் செல்வம் எலாம் எய்தி 
வாழ்வன், மண்ணமரும் நோய் அகன்று 
வளர்ந்து ஏறும் பேராயுள் மருவி வாழ்வன்!

40.“கேது”- சீரான வாழ்விற்கு-தினமும்/ஞாயிற்றுக்கிழமை

கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேது தேவே கேண்மையாய் ரக்ஷீ.

41.“கேது”-சீரான வாழ்விற்கு- தினமும்/ஞாயிற்றுக் கிழமை

பொன்னையின் னுதிரத்தில் கொண்டோன் புதல்வர்தம் பொருட்டால் ஆழி தன்னையே கடைந்து முன்னத் தண் அமுது அளிக்கல் உற்ற பின்னைநின் கரவால் உண்ட பெட்பினில் சிரம்பெற்று உய்ந்தாய் என்னைஆள் கேதுவே இவ்விருநிலம் போற்றத்தானே!

42.“கேது கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ ஞாயிற்றுக்கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

அசுரர்களுக்குள் பெரியவரும், நவகிரகங்களில் சாயாகிரகம் என போற்றப்படும் கேது பகவானை நான் வணங்குகின்றேன்.

மிக விசித்திரமான கிரீடத்தை அணிந்திருப்பவர். மங்களகரமான வஸ்திரம் அணிந்திருப்பவர். மனிதனையே ஆசனமாகக் கொண்டு அவன்மீது அமர்ந்திருப்பவர். சுகமாக இருப்பவர். ஒன்பது கிரகங்களுடனும் கூடியிருப்பவர். கேதுபகவானை நான் வணங்குகின்றேன்.

‘கேதும் க்ருண்வன்’ என்ற மந்திரத்தையுடையவர். கோபமே தனமாகக் கொண்ட ஜைமினி வம்சத்தில் உதித்தவர். கொள்ளு முதலான தான்யங்களைப் புசிப்பவர். முக்கோண வடிவ கொடியை உடையவர். குருகுஹனின் வெண் சாமரத்தை ஏந்தியிருப்பவர். கேதுபகவானை நான் வணங்குகின்றேன்.

குணம், தோஷம் இவைகளை வென்ற ஞானிகளுக்கு ஆபரணமாக இருப்பவர். கிரஹணம் முதலிய கார்யங்களைச் செய்பவர். கிரகங்களை அப்பிரதக்ஷிணமாகச் சுற்றுபவர். கேதுபகவானை நான் வணங்குகின்றேன்.

பூவரசம் பூவினைப் போல் பிரகாசிப்பவரும், நட்சத்திரங்களுக்குத் தலைமையானவரும், ருத்ரகுமாரரும், பயங்கரமானவருமான கேதுவை வணங்குகின்றேன்.

43.கேது கவசம்- வேண்டுவன கிடைக்க, நோய், பகை நீங்க - தினமும்/ ஞாயிற்றுக் கிழமை.

 சித்திர வண்ணமே, திருந்து மேனியும்
அத்துவசம் பொரு மணிகொள் காட்சியும்
புத்தொளி மணிமுடிப் பொலிவும் கொண்டருள்
வைத்தமர் கேதுவை வணக்கம் செய்குவாம்!

 சித்திர வண்ணன் காக்க!
சிரம்நெற்றி தூமவண்ணன்
நித்தமும் காக்க! நாட்டம்
நீடு பிங்காக்கன் காக்க!
பக்தர் கைதொழும் செங்கண்ணன்
பலகறு செவி புரக்க! 
வித்தநேர் மேனி அண்ணல் 
மேம்படு நாசி காக்க!

 சிங்கிகை அளிக்கும் மைந்தன்
திருமலி சுபுகம் காக்க!
கங்குலும் பகலும் கேது
சுந்தரம் காக்க! கந்தம்
போங்கு ஒளிக் கிரகநாதன்
புரக்க தோள் புலவர் கோமான்
அங்கு அமர்ந்து அளிக்க உந்தி
அரவுரு அமைந்தோன் காக்க!

 காண்டகு கோர ரூபன்
கடிதடம் புரந்து காக்க!
மாண்டகு மருங்குல் காக்க!
வான்வரும் அசுரர் கோமான்
தூண்டகு தொடை இரண்டும் 
சுடர்ச்சிரம் பெரியோன் காக்க!
வேண்டகு கோபமூர்த்தி
எழில் முழந்தாள் புரக்க!

 வெற்றிசேர் குரூர ரூபன்
மேம்படு பதம் புரக்க!
பற்றிலா மக்கள் யார்க்கும்
பலவகைத் துன்பஞ் செய்யும்
செற்றமார் கிரக வேந்தன்
தெரிக்கும் என் அங்கமெலாம்
அற்றமொன்றானு மேவாது
அமர்ந்து இராப் பகல் புரக்க!

 காண்டகு கேதுவின் கவசம் போற்றிடின்
முண்டெழு பகையெலாம் முடிந்து மாய்ந்திடும்
வேண்டுவ யாவையும் விரைவின் எய்திடும்
பூண்டநோய் போமெனப் புகலும்நூல் எலாம்.

ராகு, கேது தோஷங்கள் விலக தினமும் 11முறை

ஓம் காத்யாய நாய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்பிரசோயாத்

நவக்கிரக தோஷங்கள் விலக தினமும் 11முறை

ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்பிரசோயாத்

44.“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

oசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

o‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’

oகடற்கரையில் உலாவும்போது அப்போது வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுறுவதால், அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழந்து விடுகின்றீர்கள். புதிய சூழலில் இருந்தாலும் மனம் பழையதில் கிடந்து தவிக்கின்றது.

oஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம்.

oசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.

oமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

oஉனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன்! இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

oகாலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.
“சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

செவ்வாய்க்கிழமை, 13 August 2013 00:00

சரஸ்வதி

உள்ளே.....

1.“ஸ்ரீ சரஸ்வதி”-சரஸ்வதி கடாட்சம்பெற-தினமும் / வேண்டும் போது.

2.“கலைமகள் துதி”- அறிவு, கலைகளில் தேர்ச்சி பெற- தினமும் / வேண்டும் போது. 

3.“சரஸ்வதி கவசம்”-தினமும்/நேரம் கிடைக்கும்போது 

4.“ஸ்ரீ சரஸ்வதிதுதி”- சரஸ்வதி கடாட்சம் பெற-வாக்கு வன்மை பெற-தேர்வுகளில் வெற்றிபெற-அகத்தியர் பாடியது- தினமும் / வேண்டும் போது. 

5.“சரஸ்வதிதுதி”-புண்ணியத்தலபுராணம்/ வரலாறு எழுதும் போது பாடியது- பள்ளி/ கல்லூரி படிப்பவர்கள் தினமும் முடிந்த வரை 

6.“பத்மபுராண சரஸ்வதி துதி”-கல்விசிறக்க-தினமும் 

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட-தினமும். 

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
சங்கத் தமிழ் மூன்றும் தா!

1.“ஸ்ரீ சரஸ்வதி”- சரஸ்வதி கடாட்சம் பெற- தினமும் / வேண்டும் போது.

வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப்போல அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாக காண்பதெல்லாம் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிறபாள் மலரடி சூழ்வோமே!

வெள்ளைத்தாமரைப் பூவினிலே
வீற்றிருக்கும் கலைவாணி!
விண்ணவர் போற்றும் சுகபாணி
வந்தருள்வாயே கலைவாணி!

உள்ளம் எல்லாம் உன் புகழ்பாடி
உயர்ந்திட அருள்வாய் கலைவாணி!
உயர்கலையோடு நலம்பெறவும்
நீ அருள்வாய் கலைவாணியே!

அண்ட புவனங்களினை ஆக்குமயன் தேவியுனை
மண்டலத்தில் போற்றி வரம் பெற்ற தொண்டருக்கு
ஆதரவாய் நின்று அருளினாய் முத்தமிழும்
போதமளி வாணி உன்தாள் போற்றி.

வெண்மலரும் வெண்பணியும் வெண்கலையும்
வெண்மணியும் வேய்ந்து வாச
வெண்கமலம் வீற்றிருந்து பழங்கருணை
பூத்துவண்டு விளரி பாடக்
கண்மலர் ஆயிரந்தோட விழ்ந்து முகை
நெகிழ்ந்த கமலத்தில் வாழ என்
கண்மலருந் சதுர்முகத்தோனா வில்வளர்
வாணி பதங் கருத்துள் வைப்பாள்.

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளப்பணி பூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்
வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னைச்
சரியாசனம் வைப்பாய் தாயே!

அம்மா கலைவாணி எனக்கு அருளவாய் மகாராணி
சிம்மாசனமாய் எந்நாவிலே தேவி நீ வருவாய்!
பிரமன் வித்தை தொழில் ஆனான்
வேதமுதல் ஆனான் அவன்!

காதல் இளங்களியே என்றும் 
கைதொழுவேன் உன்னையே!
வெள்ளை மலர்மேலே அன்னம்
வீற்றிருந்தால் போலே மெள்ள

எழுந்தருள்வாய்! அம்மா வேண்டும்
வரம் அருள்வாய்! ஏது படித்து விட்டேன்!
பெரியதாய் என்ன முடித்து விட்டேன்!
உன் காலைப் பிடித்தேன்! அதனால்

கவிதை வடித்தேன்! பூவும்
உனக்காக! தேடும் பொன்னும் 
உனக்காக! கூடும் எனக்காக
அருள்வாய் கோடிக் கணக்காக!

2.“கலைமகள் துதி”- அறிவு, கலைகளில் தேர்ச்சி பெற- தினமும் / வேண்டும் போது.

பிரம்மனின் வடிவம் கொண்டாய் பரமனின் ஜோதி கொண்டாய்!
கர்மத்தை அளிக்க வல்ல காரணி கலையும் நீயே!
மர்மமாய் இயற்றுகின்ற மங்கையே! வெண்மை நேர்ந்த
சொர்ணமே வித்தை நல்கும் சொர்க்கமே போற்றி! போற்றி!

ஆரெனக் கருணை கொண்ட அன்னையே உண்மை நீயே!
கூறென முக்குணத்தைக் கொண்டவள் நீயே தாயே! 
வீறென வந்தவர்க்கு விளைந்த வோர் தோழியேனும் 
ஆறுதல் அறிவை நல்கும் அணங்குணை வணங்கு கின்றேன்!

வாக்கதின் ரூபமான சாரதை நீயே அம்மா!
வாக்கினில் நன்மை சேர்க்கும் வாணியும் நீயே தாயே!
வாக்கினைப் பிரயோகிக்கும் வல்லவர் வாக்கும் நீயே!
வாக்கதன் பொருளும் நீயே! வல்லபி போற்றி! போற்றி!

காலங்கள் முடிவு கூறும் கமலைநீ கருதினாயேல்
மூலங்கள் எல்லாம் உன்றன் முகிழ்ப்பினில் வருதல் உண்மை
ஆலங்கொள் அண்ணனார்க்கு அமைந்ததோர் தங்கையன்றோ!
நீலங்கொள் விழியாய் பிரம்ம சித்தாந்தம் நீயே அன்றோ!

மறைகளின் சக்தி நீயே! மறைஞான சக்தி நீயே!
மறப்பொருள் ஆன புத்தி மாபொரும் சக்தித் தாயே!
பரையெனில் உனையே சாரும் பராசக்தி வடிவம் கொள்ளும்
நிறைகுணப் பெண்மை நீயே! நிமலையே வணங்குகின்றோம்!

அருளதே உருவாய்க் கொண்ட அன்னையே உன்னை 
என்றும் அருமையாய்க் கொண்டோன் தன்னை 
அன்னையே என்றும் காக்கும்! அலங்கலைத் தொழுதேன் நானே! 
அருளொடு ஞானம் கேள்வி அனைத்தையும் அளித்து நீ காக்க!

கருவமே கொண்ட என்னைக் கனிந்துடன் 
காக்கக் காக்க! உருவமொன்றில்லா அன்னை 
உனையினித் தொழுவ தெவ்வாறு! இறுவென நீயும் 
சொன்னால் எனக்கெனப் பணியொன்றேது!

உருவமும் அருவுமான ஒருவளே! 
அறிவே என்றன் ஒருதனி உன்னையே 
நான் பணிந்தனம் கருவமே கொண்டாய் 
என்றால் கலந்தவன் நானே என்று இருவரும்

பொருதல் தீது என்னை நீ காக்க தாயே!
மருமமே மருமத்துள்ளும் மருமமாய் 
இயங்கும் தேவீ உருவிலி நீயே!
உண்மை உன்வலி தெரிதல் உண்மை!

துருவமும் நீயே ஆனாய் துரந்தரி அறிவே உன்னைச்
செறிவுடன் நினைக்கும் மாந்தர் செம்பொருள் அடைவதுண்மை
அருவமாய் உருவமான அமலையே உன்றன் பாட்டை 
அறிவுடன் அறிந்தோர் என்றும் அறிகுவர் மேதை தானே!

3.“சரஸ்வதி கவசம்”-தினமும்/நேரம் கிடைக்கும்போது

சரஸ்வதி என் தலையைக் காக்க! வாக்கின்
தலைவியாம் வாக்தேவி நுதலைக் காக்க!
விரசு பகவதி கண்ணைக் காக்க! 
நாசி விமலை வாக்வாதினியாள் காக்க!

வித்தைக்கு உரிய தனித் தேவதை என் உதடு காக்க!
உயர் புகழ்ப் பிராம்மி பல் வரிசை காக்க!
மருவும், ஐம், என்றிடுமனு கண்டம் காக்க!
வாழ் ஹ்ரீமாம் எழுத்து என்றன் பிடரியைக் காக்க!

எழுத்தான ஸ்ரீம் எந்தோள் காக்க! வித்யா திருஷ்டாத்மா
என் மார்பில் இருந்து காக்க! எழுத்து வித்யா ரூபிணி 
என் நாபி காக்க! வாணி கரம் காக்க! எல்லா எழுத்தின் 
தேவி விழுத்தக என் அடி காக்க!

வாக்கிற் சென்று மேய அதிட்டான தேவதைதான் 
என்றான் மழுத்த உறுப்பு எவற்றினையும் காக்க! காக்க!
முன் கிழக்கில் சர்வகண்ட நாசி காக்க!
அங்கியெனும் திசைக்கண்ணே நின்று பீஜாட்சரி காக்க!

மந்திரராஜத்தின் தேவி பொங்கு தெற்கிலேயிருந்து காக்க! 
காக்க! புகல்மூன் அக்கரவிருவாள் நிருதி திக்கில் 
தங்கியெனைப் புரந்து அருள்க! மேற்குத் திக்கில் 
சாற்று நாநுனியுறையும் அன்னை காக்க!

துங்கமிகு சர்வாம்பிகைதான் வாயு துன்னு திசையில் 
என்னைக் காக்க! சத்யவாகினி வடக்கில் காக்க! எல்லா
கலையினிலும் உறைவாள் ஈசானம் காக்க! நத்து சர்வ 
பூசிதையாள் ஊர்த்துவத்தில் நயந்திருந்து காத்தருள்க!

அதோமுகத்தில் புத்தகவாசினியாகும் தேவி காக்க!
புகழ் கிரந்த பீஜத்தின் உருவாய் நின்றாள்
எத் திசைகளிலும் இருந்து காக்க! காக்க!
எளியேனைக் கலைமகள் தான் என்றும் காக்க! காக்க!

4.“ஸ்ரீ சரஸ்வதிதுதி”- சரஸ்வதி கடாட்சம் பெற-வாக்கு வன்மை பெற-தேர்வுகளில் வெற்றிபெற-அகத்தியர் பாடியது- தினமும் / வேண்டும் போது.

குந்தமலர் என்கிற வெள்ளொளுத்திபூ, சந்திரன், பனிநீர் போன்ற வெண்மையான மாலையை உடையவள, வெண்ணிற ஆடை அணிந்திருப்பவள், கையில் வீணையேந்தி வெண்தாமரை மலர்மேல் அமர்ந்திருப்பவள், பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட முக்ய தேவர்களால் போற்றப்படுபவள். அஞ்ஞானத்தைப் போக்கும் சரஸ்வதிதேவி என்னைக் காப்பாற்றட்டும். உன்னை வணங்குகின்றேன்.

வாக்தேவி சரஸ்வதிக்கு நான்கு கரங்கள். ஒரு கரத்தில் ஸ்படிக மணியாலான அட்சமாலை. ஒரு கரத்தில் வெண்தாமரை. மற்ற இரு கரங்களில் கிளியையும் புத்தகத்தையும் வைத்துக் கொண்டிருக்கின்றாள். இவள் குந்தமலர், சந்திரன், சங்கு போன்று வெண்மையானவள். அவள் எப்போதும் என்னுள் தங்கட்டும். அவளை வணங்குகின்றேன்.

குந்தமலர், சந்திரன், சங்கு, படிகமணி, ஆகியவைகளைப்போல் வெண்ணொளியில் ஒளிர்பவளும், எப்போதும் பிரஸன்னமாயிருப்பவளும் என் முகத்தில் தங்கட்டும். அவளை நான் வணங்குகின்றேன்.

பனி, கர்ப்பூரம், சந்திரன் இவைபோன்ற வெண் நிறமுடையவளும், பொன்மாலை, சம்பகமாலை அணிந்திருப்பவளும், நிமிர்ந்த பருத்த கும்பம் போன்ற தனங்களுடன் எழிலுற விளங்குபவளுமான சரஸ்வதி தேவியை வாக்குவன்மை அளிக்க வேண்டி வணங்குகின்றேன்.

நீரின்மீது தாமரையாசனத்தில் அமர்ந்திருப்பவளும், வகுள புஷ்பத்தில் சோபிப்பவளும், தபஸ்விநியாக காட்சியளிப்பவளும், கமலாசனத்தில் அமர்ந்திருப்பதில் பிரியமுள்ளவளும், அழகிய தனங்களையுடையவளும்மான சரஸ்வதி என் மனதில் நிறைந்திருக்கட்டும். என்னை அறிவு நிரம்பியவன் ஆக்கட்டும். நான் அவளை வணங்குகின்றேன்.

தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் பாத கமலங்களை உடையவளும், கையில் அழகான புத்தகத்தை வைத்திருப்பவளும், பிரும்மாவின் மனைவியும் கமலாசனத்தில் அமர்ந்திருப்பவளுமான சரஸ்வதி என் நாவில் நடமாடட்டும். வாக்கு வன்மைதரட்டும்.

நினைத்த ரூபம் எடுக்கக்கூடியவளும், வரம் அளிப்பவளுமான சரஸ்வதியே, கல்வியைத் தொடங்கப் போகிறேன் எனக்கு எப்போதும் எல்லா கலைகளும் சித்தியடைய வரம் அளி.

எங்கும் நிறைந்திருக்கும் தேவியான தேவி சரஸ்வதியே. உன்னை வணங்குகின்றேன். சாந்த வடிவினளும், சந்திர கலையைத் தரித்தவளும் யோகீஸ்வரியுமான உன்னை போற்றி வணங்குகின்றேன்.

எப்போதும் மகிழ்ச்சியினைத் தருபவள். அனைத்துக்கும் ஆதாரமானவள். களங்கம் அற்றவள். கலைகளின் அன்னை விசாலமான கண்களைஉடைய பூரண ஞானியான உனக்கு என் வணக்கங்கள்.

சுத்தமான ஸ்படிகக் கல்போன்றவளும் சூட்சும வடிவானவளும் பரபிரம்மஸ்வரூபியும், நான்கு கரங்களையுடையவளும், அனைத்து சித்திகளுக்கும் அதிபதியானவளுமான சரஸ்வதிக்கு எனது வணக்கங்கள்.

உடல் முழுவதும் முத்துக்களால் அலங்கரிக்கப் பட்டிருப்பவளும், மூலாதாரமானவளும், மூலமந்த்ர வடிவினளும், மூல சக்தியுமானவளுக்கு எனது வணக்கங்கள்.

மனோன்மணி மற்றும் மகாயோகினிக்கு நமஸ்காரம், வாக்கினில் வரமளிக்கும்படி வரதஹஸ்தம் உடையவளிடம் வணங்கிக் கேட்டுக்கொள்கின்றேன்.

வேதத்துக்கும், வேதரூபிணிக்கும், வேதாந்தத்திற்கும் வணக்கங்கள். குற்றங்களுக்கு அப்பாற்பட்ட நிறைவான குணங்களினால் ஒளிர்பவளுக்கு எனது வந்தனம்.

சர்வ ஞானியும் சதானந்தரும், சர்வ ரூபியுமானவளுக்கு வணக்கம். சம்பந்தரும் இளைஞியும் அதே சமயம் சர்வக்ஞசொரூபியுமானவளுக்கு வணக்கம்,

யோகநாரியானவளும், உமா தேவியானவளும், யோகானந்த வடிவினளும், திவ்யஞான சொரூபியும் முக்கண்ணியும் திவ்ய மூர்த்தியுமானவளுக்கு வணக்கம்.

பிறைச் சந்திரனை தலையிலணிந்தவளும், சந்திரனைப் போன்ற முகமுள்ளவளுமான சரஸ்வதிக்கு வணக்கம். சந்திர சூரியனை சிரசில் தரித்தவளும் சந்திரனைபோன்ற குளிர்வான ஒளியுள்ளவளுமான கலைவாணிக்கு வணக்கம்.

அணுவுக்கு அணுவாகவும், பரமாணுரூபியாகவும், விஸ்வ ரூபமெடுப்பவளும், அணிமாதி அஷ்டசித்திகளுக்கு அதிபதியும் ஆனந்த சொரூபியுமான தேவிக்கு வணக்கம்.

ஞானம். விஞ்ஞானம் என்ற இரண்டுமானவாளும் ஞான மூர்த்தியாக விளங்குபவளும் ஆகிய சரஸ்வதிக்கு வணக்கம். பல்வகையான சாஸ்திரரூபியும் பல்வேறு உருவமுள்ளவளுமான தேவிக்கு வணக்கம்.

தாமரையில் பிறந்தவளும், தாமரையின் வம்சத்தவளும் தாமரை சொரூபியுமானவளுமாகியவளுக்கு வணக்கம். பரமேஷ்டிக்கும் மேலான மூர்த்திக்கும் பாபநாசினிக்கும் வணக்கம்.

மகாதேவியும், மகாகாளியும், மகாலக்ஷ்மியுமாக திகழ்பவளுக்கு வணக்கம். பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் பரப்பிரம்ம வடிவாக விளங்குபவளுக்கு வணக்கம்.

தாமரை பூந்தோட்டமாக விளங்குபவளும் நினைத்த உருவமெடுப்பவளுமாகிய தேவிக்கு வணக்கம். கபாலியானவளும் செயல்வீரம் மிக்கவளும் அதேசமயம் செயலாகமிருப்பவளுக்கு வணக்கம். செயலும் அவளே. செய்பவளும் அவளே.

நாள்தோறும் காலை மாலை என்று இந்த துதியை ஆறு மாதகாலத்திற்கு தினமும் படித்துக், கோரிய எல்ல பயனும் எனக்கு நிச்சயம் கிடைக்க அருள் புரிவாய்.

அகஸ்திய மகரிஷியால் சொல்லப்பட்ட இந்ததுதி எனக்கு சகல சித்திகளையும் அளிக்கவல்லது. எனது பாவங்களிலிருந்து விடுவிக்க வல்லது.

5.“சரஸ்வதிதுதி”- புண்ணியத் தலபுராணம்/ வரலாறு எழுதும் போது பாடியது- பள்ளி/ கல்லூரி படிப்பவர்கள் தினமும் முடிந்த வரை

புத்தகத்துள்ளுறை மாதே! 
பூவில் அமர்ந்துறை வாழ்வே!
வித்தகப் பெண்பிள்ளை நங்காய்! 
வேதப் பொருளுக்கிறைவி!
முத்தின் குடையுடையாளே! 
மூவுலகுந்தொழும் தேவி!
செப்புக்கவித் தனமுலையாய்! 
செவ்வரி ஓடிய கண்ணாய்!
முத்து நிறந்த வெண் பல்லாய்! 
முருக்கம்பூ மேனி நிறத்தாளே!
தக்கோலந் தின்ற துவர் வாயாய்! 
சரசுவதி என்னுந் திருவே!
எக்காலுமுன்னைத்தொழுவோம்! 
எழுத்தறிபுத்தி பண்ணுவிப்பாய்!

ஆக்கா எம்பெருமாட்டி! 
அழகிய பூ அனை மீதாய்!
நோக்கா என்மிடி தீர நொடிக்கும் 
பிராமணத்தி நோக்காயே!
சாலி நெல்லரி கொண்டு 
சரசுவதி பூஜை பண்ணி 
பாலொடு பழத்தை நிரப்பிப் 
பராவித் தொழுவோம் நங்காய்!
நங்காய்!நங்காய்!நமோஸ்துதே 
ஞானக்கொழுந்தே! நமோஸ்துதே
கல்விக் கரசே! நமோஸ்துதே 
கணக்கறிதேவி! நமோஸ்துதே
சொல்லும்பொருளே! நமோஸ்துதே 
சூட்சும ரூபி! நமோஸ்துதே!

எழுத்து அசை சொற் பொருள் 
உதவும் அணிகள் இரு
வகைபெறு பாவினங்கள் 
கொண்டு மழுத் தடக்கைக் 
கடவுளிடை மருதவன வட
சொல்உறு மான்மியத்தை
வழுத்திடத் தென் தமிழதில் 
நாம் இனிது புரிந்திடுக 
என மகிழ்ந்து வண்டின்
குழுத்தமைப் போற்றிடும் 
தவள பங்கயத்தின்
உறைந்திடு பூங்கோதை தானே.

உரைதமிழ் மூவர்நாவில் 
நீற்றெழும் அமுதைச் சங்கத்து
இருக்கும் வெண்முத்தை 
சுற்றோரென்னும் கூட்டுந்தேனை
வரைதமிழ் முனிவன் நெஞ்ச 
மலர்க் கமலப்பூஞ் சேக்கைத்
திருத்தகும் அரச வன்னப் 
பேட்டினைச் சிந்தை செய்வாம்.

சாற்று நற்றமிழ்ப் 
பேற்றுக்கு என்குறை
நோற்று வாணி தாள் 
போற்று நெஞ்சமே.

நான்முகன் நாவின் மேவி 
நான்மறை வடிவாய் இன்னந்
தானரும் பொருள்கள் ஏடரத் 
தடக்கையின் முறையுந் தாங்கித்
தேனலர் கமலப் போதிற் 
செழித்து வீற்றிருக்கும் அம்மை
கான்மலர் போற்றி நாளும் 
கருத்துற வணக்கம் செய்வாம்.
பொருப்பிலே பிறந்து தன்னன் 
புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலேயிருந்து வைகை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் 
நினைவிலே நடந்தோரேன 
மருப்பிலே பயின்ற பாவை 
மருங்கிலே வளருகின்றாள்.

ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய 
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பாள் இங்கு வாராது இடர்.

பழுதகன்ற நால்வகைச் சொல் 
மலரெடுத்துப் பத்திபடப் 
பரப்பித் திக்கு முழுதகன்று 
மணந்து சுவையொழுகி 
அணிபெற முக்கண்மூர்த்தி 
தாளில் தொழுதகன்ற 
அன்பெனும் நார் 
தொடுத்த அலங்கள் சூட்ட 
வரிச்சுரும்புந் தேனும் 
கொழுதகன்ற வெண்டோட்டு 
முண்டகத் தாளடி 
முடிமேற் கொண்டு வாழ்வாம்.

அகரமாதி அக்கரத்தால் 
அறுபானான்கு கலைகளெல்லாம்
பகரும் வாணி தனைப்போற்றி 
பதத்தால் மயிடன் தலை மிதித்தாள் 
உகள மலரைப் போற்றி செய்தே 
ஓதுமறை நான்முகத்தோனை 
அகமே மகிழ்ந்து போற்றி அமு
தளித்தோன் பதம் போற்றிடுவாம்.

கருமழைத் தண்டுளிபொழியும் 
காலமதி ஒளியும் ஒளிகாலு 
முத்தின் பருமணி மலையும் 
அபயவரதமும் புத்தகமும்வடப் 
பளிங்குந் தாங்கி முருகு உயிர்க்கு 
நறுந்தவள முளரியாலயத்திலிருந்து 
அமுது பிராட்டி இருபதமு கடிபிடித்தே 
எப்பதம் வாராத பதம் எனக்கு மன்னோ.

புத்தகம் ஜெபவடம்- புனித ஞான மா 
முத்திரை குண்டிகை முழுதும் ஏந்து எழிற் 
கைத்தலத்து அமிர்தனைக் கலைமடந்தையை 
முத்தமிழ்க் கிழத்தியை முடிவணங்குவாம்.

ஞானமுத்திரை நற்குண்டிகை அறி
வான புத்தக் மங்கைச் செவபடம்
தான் அமைத்து வெண்தாமரை மேவிய
பானிறத்தவள் பாதம் பணிகுவாம்

விரைப் போதன் முகப்போது பியாத தனி
வண்டு வெண்பால் வேலைத் திரைப்போதும் அமுத 
நிறத் தேனடைந்தோர் பவக்கடலைத் தீர்த்து முத்திக்

கரைப்போதும் படியெடுக்கும் திருஞானத் தனிப்புணை வெண்கமலை செந்தாள்

மரைப் போது மனப்போது வைத்தினிது முப்போதும் வாழ்த்தல் செய்வாம்.

எண்கமலக் கரம் சலிப்ப ஒரு கமலத்து அயன் 
பிறப்பில் எழுதா வண்ணம் தண் கமலப் பதம்சிரமேல் வைத்தருள்வார் குற்றாலத் தமிழ்நூல் வாய்ப்பக் 
கண்களெனும் கருங்கமலம் கரங்களெனும் பசுங்கமலம் 
கவினப் பூத்து வெண்கமலத்து இருந்தாளைச் செங்கமலத்திருந்து தாளை வேண்டல் செய்வாம்.

கவள மதகரி உரிவைப் போர்வை மூடுங் கண்ணுதலோன்
புகழ் விரிக்குங் கலைகள் யாவும் பவள இதழ்ப்

பசுங்குதலை மொழியிற் காட்டும் பைந் தொடியை

அந்தணன்றோய் பரும வல்குற் துவளும் அணி மருங்கும்

இளநிலவெண்மூரற் சுந்தரியை வெண்கமலத் தோட்டு

வட்டத் தவளமதி நடுவமர் வாலெகினம் போலும்

தையலை மையலை அகற்றித் தாளில் தாழ்வாம்.

ஆரணம் நான்கும் ஓராறு அங்கமும் அலகிலாத 
காரணம் காட்டும் ஞானக் கலைகளும் தானாய்

நின்ற ஓரணங்கினைப் பூமேலோன் தனது நாவுறையும்

தெய்வ ஆரணங்கு இளமென் கொங்கை மயிலினை வணக்கஞ் செய்வாம்.

பாணியிற் கொள் படித வடத்தினள்
ஆணி முத்தின் அழகிய மேனியள்
சேண் இருக்குமத் தேவரெலாம் புகழ்
வாணி பொற்பத மாமலர் போற்றுவாம்.

வெண்ணில தருங்கமல மலரில்
உறை நாமகளில் வெளியே 
நாயேன் உண்ணிறைந்து 
பரிதீசர் தலமகிமை செந்தமிழால் 
உரைக்க நாளும் கண்ணருள் 
செய்து ஆள்கின்றாள் 
உண்மையிது ஆதலினாற் 
கார்யென்று பண்ணமைந்த 
பாமகள்மேல் பாவிசைக்கும் 
செயலுளதோ பகருங்காலே.

திருவருள் உருக்கொண்டு உலகு உயிர்

யாவும் திருவுயிர்த்து அருளும் மாதேவி பொருளும் 
மெய்ப் பொருளும் ஞானமும் தருமப் 
புனிதமும் நயன நோக்கெய்தி வருபெருஞ் 
செல்வி வாணி மெய்ஞ்ஞான மாதெனும்
மூவர் பொன்மலர்த்தாள் ஒருமை இருமை, 
மும்மையின் இறைஞ்சி உறத்துதித்து 
உன்னி வாழ்வுறுவாம்.

வெண் கமலத்திருப்பவளைச் 
செந்தமிழின் தெய்வத்தை 
விளங்குபாரில் கண்ணுதல் 
தன் பெருங்கருணை பாடிடவே
அருள் புரியும் கடைக் 
கண்ணாளைத் தண்கவிதை 
பொழிகின்ற புலவரும் 
விட்டகலாத் தையல் தன்னை உள்
நினைத்தே அடிவணங்கி உலாத 
பேரின்பம் உற்று வாழ்வாம்.

வெல்லும் வெவ்வினைகள் 
வீட்டி வீட்டினை விளைக்குஞ் 
செய்கை வல்லவாம் கலைகளுக்கு 
வயங்கொரு வடிவமாகிப்
பல்லுயிர் நாவு தோறும் 
பயின்று நின்றருளா நின்ற
சொல்லின் இறைவி பாதம் 
தொழுது சொற்பொருள்கள் தேர்வாம்.

கரும் பங்கயம் போல் 
கண்மலரும் செம்பங்கயம் போல் 
கதிர்முகமும் இரும்பங்கயத் 
தினரும் பேய்க்கும் இளமா
முலையும் ஏந்தி வெள்ளை 
அரும்பங் கயத்தின் அனகத்
துறையும் மனத்தை யம்மா 
திருவுந்தி தரும் பங்கயத்தோன் 
ஆவாளைத் தமியேன் உளப் 
பங்கயத்தில் வைப்பேன்.

தளர்ந்து உதவி அழிவுறாக் 
கல்வித் தனத்தினை 
ஏற்றவர்க்கு ஈந்தே இளங்களியளி
சூழ்தவள முண்டகத்தில் 
இனிது வீற்றிருப்பது போல 
வளந்தறியாத வான்ம 
கோடியினாய் அகந்தொறும் 
அமர்ந்து நான்முகற்குத் 
துளங்கலில் சுகஞ்செய் சுந்தரி 
பாதத் துணைமலர் தருமே.

தெள்ளோதப் பயக்கடலில் 
அரவணையில் துயில்கூருந் 
திருமால் உந்தி உள்ளோ
என் நாவுகைமீக் கொள
வந்தவன் வதனமொரு 
நான்கிற்குங் கள்ளோதிக் 
கயல்விழிச் செவ்வாயினொரு 
முகங்காட்டிக் காதலுட்டும் 
வெள்ளோதி மத்தினை நம் உள்ளம் 
எனும் கமலமதின் மேவச் செய்வாம்.

கறைத் திருமிடற்றினானைக் 
கண்ணுதலுடைய கோவை
பிறைச் சடையவனை நல்லூர்ப் 
பெருமண் நம்பன் தன்னை 
மறைப்பெரும் பொருளினானை 
வாழ்த்து சொற் பொருள்கள் 
நல்கு நறைத்தனி சரோருகத்தோன் 
நாமகள் கமலத் தாளே.

ஆதி நாளின் அருமறை சொற்றிட
வேதம் நாவினும் வெண்மரைப் பூவினும்
போதர் நெஞ்சினும் பொற்பின் அமர்பவள்
பாதம் தாழ்ந்து நற்பா தந்தருளவே. 

சேவிலிருந்த பரன் சரிதம் 
சிறிது பகரத் திசைமுகத்தோன்
நாவிலிருந்து சுருதி மறை 
நான்கிலிருந்து வெண்கமலப்
பூவிலிருந்து வாகனமாம் 
பூததிருந்து கவிஞர் இயற்பாவிலிருந்து 
இவ்வுலகுநிறைந்து இருந்தாள் 
இருதாள் பரவுதுமால்.

ஆவிய கமண்டலத் தோன்றாலுவின் 
அமர்ந்திட்டு அன்பர்
சாவிய கமல வேணித் 
தற்பரனருள் பெற்றுய்வான்
கோலியாகமமெய்ந் நூல்கள் 
குறித்து உணரறிவு கூட்டும்
வாலிய கமலத்து அன்னை 
மலரடி மனத்துள் வைப்பாம்.

எண்மை உற்றனன் புலமையில் 
என்னினும் இனமாம்
பெண்மை உற்றனள் 
ஆதலிற் பிழைபல நீங்க
வெண்மை உற்ற பங்கயமயில் 
விருப்பொடும் அருளும்
உண்மை உற்ற செந்தமிழினை 
எனது நாவோங்க.

மலைமிசை உதிக்குந் தண்ணார் 
மாமதியெனவே செய்ய
நிலமிசை மாக்கட் கெல்லாம் 
நீடிய விருப்பு நல்கும்
மலைமகளுக்கு இனியதாதை 
வண்மைசேர் புகழைச் சொல்லக் 
கலைமகளுபய பொற்பூங்
கழலிணைக் கூப்புவாமால்.

புண்ணியச் சுருதியாதிப் 
புனிதநூல் தொகுதியாவும்
வெண்ணிறக் கமலப் போதில் 
வீற்றிருந்து அருள்வாள் தன்னைத் 
திண்ணிய உணர்வால் நாடிச் 
செழுந்தமிழ்ப் புலவர் காதை 
மண்ணில் பலரும் தேறி 
மகிழ்வுற வகுக்கின்றேனே.

விண்ணவரயன் மால் போற்றும் 
விடைவலான் வேளை வென்ற
கண்ணுதல் அமலன் முன்னோன் 
கதிதரு புராணம் பாடப்
பெண்ணமுது அனையாள் 
கோலபிறைநுதல் வாணி நாவிற்
பண்ணமை பனுவாலாள் 
பொற்பதமலர் பணிதல் செய்வாம். 

காரதிருங் கயிலைமலைக் 
கண்ணுதன் முப்புரம் எரிக்கக் 
கருதும் அந்நாள் நீரதிகந் 
தருந்தரங்கத் தடங்கடல் 
சூழ்ந்திடும் புடவி நெடுந்தேர் 
ஊர்ந்த சாரதிதன் திருநாவில் 
அடியார் உள்ளத்தினில் 
இருக்கும் தவளமேனிப் 
பாரதி செம்பதப்பதுமத் துணைப்
போது முப்போதும் பரவல் செய்வாம்.


தேவுறை தன்மலை முளைத்துச் 
சங்கப் பாத்தியில் வளர்ந்து
திசை முகத்தோன் நாவெனும் 
நாற்கொழு கொம்பில் தழைந்து 
கற்றோரிடம் படர்ந்து நானாக்
கேள்வி மூவுலகுங் கிளைத்து 
மணந்தது அன்பரும்பித் தவமலர்ந்து 
முதிர்ந்த போகப் பாவின 
நற்கனியையருள் கொடியின் எழில் 
அடியை முடி படிய வாழ்வாம்.

கூந்தல் நிகர் இயற்றமிழும், 
குமுதவாய் நிகரிசையும், 
கோலம் போல்வது ஆந்தகைய 
நாடகமும், அறிந்துவக்கும் 
புலவர் சிலர் அகிலத்துள்ளார் 
காந்தழுக்காற்று இளங்கஞர் 
பலருளரால் எனைக் கருணைக் 
கடலிற்றோய்த்தாள்! மாந்தர் 
சிலர் நாவில் நின்றும் அரிபிரமர் 
தொழில்செய் கலைவாணித் தாயே!

முற்றும் ஆவியம் மூகத்துவம் ஓரீஇச் 
செற்றும் ஆவியல் இன்பரு ணூறெரீஇ 
உற்று மாவியனுதனொண் பாதமே
பற்று மாவியக் கன்னையைப் பாடுவோம்.

நிலமுதற் படைத்தவன் நேய நாவில் நின்று
உலகுதன் துணைவியாம் எழில்கொள் பாரதி
உலவுவெண் கமலமேல் உறையும் வாணிதன்
மலரடி முடிமிசை வணக்கஞ் செய்குவாம்.

முதிர்பொறுமைக் கரைசிறந்து கருணை
நறும் புனல் பருகி முழுமெய்ஞ் ஞானப் 
புதியமலர் விரிந்தடக்கம் எனுங்கமடங்
குடியிருந்து புகழ்கொண்டோங்கு 
மதிவலவர் தமது இதய வாவி
தோறும் விளையாடி வளர் பேரின்
பத்து அதிமதுர குணநய வெள் அன்னப்
பேடு தனைப்பாடி அருள் பெற்றுய்வாம்.

உலகுயிர் அனைத்தும் ஈன்ற 
சதுர்முகத் தொருவன் மேவும்
தலைவியை மதுபசாலஞ் 
சாலமொய்த்து இசைகள்பாடும்
இலகுவெண் கமலப்பூவில் 
இனிதுவீற்றிருக்கும் செஞ்சொற்
கலைமடந்தையை எம் உள்ளக் 
கமல மாமலரில் வைப்பாம்.

வெண்டாமரை உறையும் வேதாந்த நாயகியைத் 
தண்டாமரையோன் தலைவிதனைக் கண்ணடு 
வழுத்தித் துதிக்க வருமே மதுரம்
பழுத்த கவிபாடும் பண்பு.

வெள்ளைநிறத்து அஞ்சுகத்தை 
வெண்டாளப் பூண்மயிலை 
விரிஞ்சன் நாவின் உள்ளிருந்த 
ரத்தினத்தை உம்பரெலாம் 
தொழற்கரிய ஒருத்திதன்னை 
கள்ளமிலா அடியருளக் 
கமல்மதை அகலாத 
கலையினாளைத் தெள்ளுதமிழ் 
உதவுமெந்தன் திருத்தாயை 
அனுதினமும் சிந்தை செய்வாம்.

பன்னரும் உலகெலாம் படைத்த பங்கயன்
இன்னுயிர்த் தேவியாய் இயைந்து பல்லுயிர்
துன்னு நாமிசை தொறும் துலங்கு வாணிதன்
மன்னிய சேவடி வணங்கி வாழ்த்துவாம்.

எம்பெருமான் திருக்கோவல் இறைசீர்த்தி 
இயற்றமிழால் இம்பரினாம் உரைப்பதனுக்கு 
அணிமதுரம் இனிதளிப்பாள் தம்பெருமான் 
சரிதமெனத் தனிமகிழ்ந்து வணங்காமுன்
உம்பரெலாம் தொழுதேத்தும் 
உயர் ஞானக் கலைமகளே.

எச்சமயத்தரேனும் இணங்கி 
வணங்கினர்க்கும் அதியிரங்கி 
யாரும் மெச்சமையத் தாரணியிற் 
புகழ்கொடுத்துக் கவிநான்கும் 
விளங்கச் செய்தே அச்சமையத் 
தானடுங்காது அவையிடத்துச் 
செல நல்கும் அருளினாளைக் 
கச்சமைய தார் புனையுங் 
கொங்கையுடை வாணியை 
நன்கருத்துள் வைப்பாம்.

ஆக்கு சொற்சுவை மணமனைத்தும் வீசவும்
தேக்குநற் பொருட்சுவைத் தேன் துளிக்கவும்
பாக்கியப் பாரதி பாதத் தாமரை
வாக்கினும் மனத்தினும் மலர்ந்தது என்றுமே.

சாற்று நற்றமிழ்ப் பேற்றுக் கென்குறை
நொற்று வாணிதாள் போற்று நெஞ்சமே

இலக்கண இலக்கியங்கள் 
இமைப்பொழுதேனும் கல்லா
தலக்கணார் புலைகுறும்பன் 
அமுதமே இலிங்கமாகும்
தலத்து உயர் மான்மியத்தைச் 
சற்குரு அருளால் ஓதக் 
கலைக்குயர் வாணிபாதங் 
கருத்தினில் இருத்திவாழ்வாம்.


வேதன் நாவிலும் வெண் தாமரைச்செழும்
போதலர்ந்த பொகுட்டினும் மேவிய
காதல் கூருங் கலைமகள் மென்மலர்ப்
பாதம் நாளும் பணிந்து வாழ்த்துவாம்.

தேவரும் முனிவரும் சேர்ந்த பல்லுயிர்
யாவையும் உளக்கருத்து உணர நாவினின்
மேவி நன்கு அருள்புரி விமலை வெண்மலர்த்
தேவிதன் சேவடி சிரத்திற் சேர்த்துவாம்.

வெள்ளைக் கமலத் தவிசில் உறை 
வித்தகியைப் பிள்ளையெனவே தன் 
அருளைப் பேணிடும்- தள்ளை
தனை என்னுளத்திலே இருத்தி 
ஏத்தி அறியாமைதனைத்
தன்னிடத்திலே குவித்தேன் நான்.

பூமடந்தையும் பொன்மலர்க் கற்பகக்
காமடந்தையுங் காமுறு கற்பினெண்
கோமடந்தை வெண் கோகனத்து வாழ் 
நாமடந்தையை நாமறவாமரோ.

தவளமலர்க் கமலமிசை வீற்றிருக்கும் 
அம்மனையைச் சாந்தம் பூத்த குவளை 
மலர்க் கண்ணாளைப் பெண்ணாளும் 
பெண்ணமுதைக்கோதிலாத பவளஇதழ்ப் 
பசுங்கொடியை நான்முகனார் நாஒங்கும் 
பாவை தன்னைக் கவளமத சுயக்கொம்பின் 
முலையாளைக் கமலமாதைக் கருதுவோமே.

சங்க வளர்ந்திட வளர்ந்த 
தமிழ்க்கொடியைச் சரசுவதி 
தன்னை அன்பர் துங்கமுறக் 
கலைபயிற்றி உணர்வளிக்கும்
கலைஞானத் தோகை தன்னைத் 
திங்கள் நுதல் திருவை அருட் 
குருவை மலர்- ஓங்கிய பெண் 
தெய்வந் தன்னைத் தங்கமலை 
முலையாளைக் கலையாளைத் 
தொழுது புகழ் சாற்று கிற்பாம்.

கலைபயின்ற உளத்தினுக்குங் கரும்பினை 
முக்கனியை அருட்களை ஓங்கும்

நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த

நான்முகனார் நீண்டநாவின் தலைபயின்ற

மறைபயின்று மூவுலகும் காக்கின்ற 
தாயை வாகைச் சிலைபயின்ற நுதலானைக் 
கலைவாணி அம்மையை நாம் சிந்திப்போமே.
அலைகடல் சூழ் உலகமெல்லாம் ஒரு
பிரம நாவிலிருந்து அறிந்தே யாரும்
நலமையுற மறைதல் எக்கலையும்
சொல்லியருள் ஞான மூர்த்தி

ஆகம் வேதம் நான்கும் அருங்கலை
பலவும் இங்கே வாகையாய்த்
தழைக்க தந்து மால் மருமகளாய்
வந்தே தாகமாய் உலகளித்த
சதுர் முகன் நாவில் வாழும் மாகனவாணி.

கதிர் வெண்கலையும் துடியிடையும்
கமலப் பதமும் சசி ஒளிர் சேர்
கருணைக் கடலாம் திருவுருவாய்த்
தவளக் கமலந்தனில் மிக 
வீற்றிருக்கும் வடிவு.
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்- வெள்ளை
அரியாசனத்தில் அரசரோடு என்னை
சரியாசனம் வைத்த தாய்.

வானி கலைத்தெய்வம்- மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
கானுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மானுயர்ந்து நிறபாள் மலரடியே சூழ்வோமே.

சரஸ்வதி தேவியே! உன் கரங்கள் தாமரை மலர் போன்றவை. அந்த அழகிய கரங்களில் ஞானத்தின் சாரமாகிய புத்தகமும், ஸ்படிகமணி ஜபமாலையும், தூண்டுகோலும், பாசக்கயிறும் தரித்தவளே! உண்னை வணங்குகின்றேன்! உன்னை தியானிப்போரின் நாவின் மூலம் உரை, நடை மற்றும் செய்யுள் வடிவமான வாக்கு சாதுர்யம் உன்னருளால் தானாகவே வெளிப்படுவதை நான் உணர்கின்றேன்! அன்னையே உனக்கு நமஸ்காரம்!

6.“பத்மபுராண சரஸ்வதி துதி”-கல்வி சிறக்க-தினமும்

பக்தர்களின் இதயத்தில் வசிப்பவளே! பிரம்மாவின் கழுத்தில் வாசம் செய்பவளே! எப்போதும் சந்திரனுக்குப் பிரியமாய் உள்ளவளே! என்றென்றும் மங்காத பிரகாசமாக விளங்கும் அன்னையே! சரஸ்வதிதேவியே உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன், நல்லறிவு, எல்லாவற்றிலும் உயர்ந்தவை, பரிசுத்தம் போன்றவற்றை அருள்பவளே! கையில் வீணையைத் தாங்கியிருப்பவளே! ஐம், ஹ்ரீம், ஹ்ராம் போன்ற மந்திர ஒலிகளில் பிரதிபலிப்பவளே! எங்களுக்கு உன் பேரருள் கிட்ட வேண்டும் அம்மா!

கல்விச் செல்வம் கைகூட:

சகலகலாவல்லியே! சரஸ்வதி தேவியே! வேதத்தால் போற்றப்படுபவளே! பஞ்சபூதங்களிலும் பரவி நிறைந்திருப்பவளே! அன்பர்களின் கண்ணிலும் கருத்திலும் நிறைந்து இருப்பவள் நீயே! நான் எண்ணும் போது கல்விச் செல்வம் எளிதாக எனக்குக் கைகூடும்படியாக அருள்வாயாக!

பொருள் உணர்ந்து படிக்க:

சகலகலாவல்லியே! வெண்மையான அன்னத்தைப் போன்றவளே! கல்வியும் அதன் பொருளும், அந்தக் கல்வியால் உண்டாகும் பயனும் எனக்கு கிடைக்க வேண்டும். உன் கடைக்கண்ணால் எனக்கு அருள் புரிவாய்!

தேர்வில் நன்கு தேர்ச்சி பெற:

சகலகலாவல்லியே! அழியாத செல்வமான கல்விச் செல்வத்தை அருள்பவளே! நா வன்மையும், கலைகள் பலவற்றில் தேர்ச்சியும்பெற்று அறிந்த கல்வியைத் தெளிவுற வெளிப்படுத்தும் ஆற்றலும் எனக்கு அருள்வாய்.

சரஸ்வதிகாயத்திரி- 64கலைகள்பெற தினமும் 108 முறை

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச திமஹி 
தந்நோ வாணி ப்பிரசோதயாத்

ஸ்ரீபிரம்மாகாயத்திரி- ஆயுள்விருத்திபெற தினமும் 

ஓம் வேதாத் மனாஹாய வித்மஹே
ஹிரண்யகர்ப் பாய திமஹி 
தந்நோ ப்ரம்ம ப்பிரசோதயாத்

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

பிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

சரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

மத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

மநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

கருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

அந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

o“மனதின் வினைகளான பிறர்பொருளை அபகரித்தல், பிறருக்கு தீங்கு செய்ய நினைத்தல், பிறர் உயர்வு கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகியவைகளின்றி புண்ணியமான பிறர் பொருள் வேண்டாம் என எண்ணுதல், அனைவரும் நலமாக வாழ நினைத்தல், அவர்தம் நல் வாழ்வு கண்டு மகிழ்வு அடைதல்” ஆகியவை உங்களின் மேலான வாழ்வுக்கு சிறப்பானதாகும்.

o‘அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.

o மீண்டும் மீண்டும் ஆசைகொண்டு, நீங்கள் நினைத்த அளவுக்கதிகமான ஆசைகள் நிறைவேறுவது என்பது, “கடல் நீரைப்பருகி உங்கள் தாகத்தைப் போக்கிக்கொள்வது நினைப்பது போலாகும்.”

oஒர் மலர் மலர்ந்து, இந்த உலகின் அழகை, அது எடுத்த பிறவியின் இடம் இவற்றை ஆவலாக கண்டு மகிழ்வு கொள்கின்றது. அதைச் சுற்றியுள்ள இடத்தை தன் வண்ணத்தால் மலரவைத்து ஆனந்தமயமான சூழலை உருவாக்குகின்றது. இது நமக்கு அதன் பாடம். நாமும் பிறவியில் மலர்ந்து நம்மை சுற்றியுள்ள அனைத்துக்கும் பெருமை சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்

oபழம் விழுங்கிய வாய், ஆன்மா உயிர் நீங்கியபின் மண்ணையும் விழுங்கும்! மறக்கலாமா!
“சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26952934
All
26952934
Your IP: 54.226.210.133
2024-03-29 21:13

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg