gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

கடற்கரையில் வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுற்று அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழக்காதீர்!

THIRUPUTKUZI-PERUMAL/திருபுட்குழி#பெருமாள்/விஜயராகவர்.தி.தே-57

செல்லும் வழி: காஞ்சி-வேலூர்சாலை-11 பாலூட்டி சத்திரம் அருகில்.
படம்: Sri Vijaya Raghava Perumal temple_tiruputkuzhi
தகவல்கள்:

ஊர்:திருபுட்குழி#தி.தே-57 
மூலவர்: ஸ்ரீவிஜயராகவபெருமாள்-4புஜங்கள் வீற்றிருந்தகோலம், போரேறு, ஸமரபுங்கவன் 
இறைவன்:
இறைவி:
தாயார்-ஸ்ரீமரகதவல்லி தனிகோவில் 
உ:ஸ்ரீராமர்
பிறசன்னதிகள்: ஸ்ரீஸ்மரபுங்கவன் ,ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீஜடாயு
3நிலைராஜகோபுரம்,
இரண்டு பிரகாரங்கள்
தீர்-ஜடாயு/க்ருத்ரபுஷ்கரணி, கிணறு
வி-விஜயகோடி. வீரகோடி
வைகானசம் ஆகமம்
தி.நே.07-12,16-19.

சிறப்புகள்:

#29062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

அலைபேசி: 90474 89295

கொடிமரம் பலிபீடம் ராஜகோபுரத்திற்கு வெளியே. ஸ்ரீதேவி இடப்பக்கம் மூலவர் தெடைமீது. ஜடாயு-மோட்சம். ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெண்கள் மடியில் வறுத்த பயறு கட்டி இரவில் மரகதவல்லி தாயார் முன்படுக்க காலையில் பயிறு முலைத்திருக்குமாயின் குழைந்தைபேறு- வறுத்த பயிறு முலைக்க வைக்கும் தாயார். இராவணன் சீதை கவர்ந்து செல்லும்போது இராவனனுடன் ஜடாயு போரிட்ட தலம். ஜடாயுவி உயிர் அவர் சிறகிலிருந்ததால் அதை இராவணன் வெட்டியதும் ஜடாயு கீழேவிழ இராவனன் சீதையை தூக்கிச் சென்றான். உயிர் ஊசலாடும் நிலையில் இராமனைச் சந்தித்து இராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற தகவல் அளித்து இராமனின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஜடாயு உயிர் நீத்தார். தன் தந்தை இறந்தபோது தான் வனவாசத்தில் இருந்ததால் அவருக்கு ஈமக்கிரியை செய்ய முடியாமல் போனதை நினைத்து வருந்தி தனக்கு பெரியப்பா ஸ்தானத்தில் இருந்த ஜடாயுவுவைக் குழியில் வைத்து தகனம் செய்தார். ஜடாயுதீர்த்தத்தை உருவாக்கினார். மனைவியின்றி ராமர் ஈமக்கிரியை செய்த போது குளத்திலுள்ள பொற்றாமரை மலரில் பூமாதேவி காட்சி தந்து இராமருக்கு உதவிட இறுதி காரியங்களைச் செய்த தலம். அமாவாசை தர்ப்பணம் இரட்டிப்பு பலன். கீல் குதிரை வாகனம்- மரத்தால் 3 பகுதிகளைக் கொண்டது. திரு+புள்+குழி. இராமானுஜர் யாதவப் பிரகாசரிடம் அத்வைதம் கற்றார். வழக்கத்திற்கு மாறாக வலப்பக்க ஸ்ரீதேவி இடப்பக்கம்,  இடப்பக்க பூதேவி வலப்பக்கம். ஸப்தராமசேத்திரம்-6/7. ராமானுஜர் யாதவப்பிர்காசரிடம் கல்வி பயின்ற தலம். பகவானே, என்மகள், உன்மீது கொண்ட காதல் கொஞ்சமும் குறையவில்லை. பித்துப் பிடித்து அலைகிறாள். சொல்லமுடியாத காதலுடன் திருகிறாள். கண்ணபிரானின் இதழைக் கவ்வ வேண்டும் என்கிறாள். திருப்பதி பெருமாளின் பெயரையெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்கிறாள். திடீரென அவளுக்குத் திருபுட்குழி பெருமாளின் நினைவு வருகிறது. அவரைப் பாடுகிறாள். திருநீர்மலை பெருமாளின் நினைவு வருகிறது. அங்கே உடனே போகமாட்டேனா என மருகுகிறாள். கோமள வதனமும், கொடியிடையும், மழைமேகம் போன்ற அழகிய கூந்தலில் மலர்சூடி, எழில் கொஞ்சும் தோள்களைக் கொண்டு காண்போரைக் காதலிக்கும் கொல்லிப்பாவையைப் போல் பேரழகு பொருந்திய இவளைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றாய் என மகளுக்காகத் தாய் பரிந்து பேசுவது போல் பாசுரம் அமைந்துள்ளது.- திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்-பெரிய திருமொழி-1115அழகிய தாமரை மலர்களின் மேலே அன்னப் பறவைகள் உறங்கப்பெற்ற அழகிய நீர் நிறைந்த வயல்களைக் கொண்ட திருவாலியிலே எனக்கு இனிமையாக சேவை சாதிப்பவனாய், திருவள்ளூரிலே பெரிய மலை சாய்ந்தது போல் சாய்ந்தபடி தரிசனம் தருபவனாய், நிரந்தரமான மதில்களால் சூழப்பட்ட திருக்கண்ண மங்கையிலே நினைத்ததைத் தரும் கற்பக விருட்சம்போல் எழுந்தருளியிருப்பவனாய், மின்னல் போல் விளங்குகிற பிராட்டியை உடையவனாய், சூர்ய , சந்திரர்களோ என்று எண்ணும்படியாக திருவாழி, திருச்சங்குகளை உடையவனாய், திருவெள்ளறையிலே கருங்கல்லால் கட்டப்பட்ட சன்னதியில் உள்ளே தங்கம்போல் இருப்பவனாய், மரகதப் பச்சைபோன்ற வடிவை உடையவனாய், திருப்புட்குழியில் எழுந்தருளியிருக்கிற பெருமாளாய், திருவரங்கத்தில் எப்போதும் இருப்பவனாய், நீலமணிபோன்றவனாய் விளங்கும் எம்பெருமானை வணங்குகின்றேன்- திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்-திருநெடுந்தாண்டகம்-2769-2770

வரை படம்:விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-26

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17914090
All
17914090
Your IP: 173.245.54.147
2020-07-14 22:06

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg