Print this page
திங்கட்கிழமை, 07 May 2018 01:56

வைகாசி மாத விரதங்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

&&&&&

வைகாசி மாத விரதங்கள்!

வைகாசி பௌர்ணமி வைகாசியில் வைரலிங்கம் வழிபாடு சிறப்பு பகலில் உபவாசம் இருந்து சிவ வழிபாடு செய்தல் நன்று.

வைகாசிமாத அஷ்டமி சக்தி-சிவன்- வணங்கினால் 10000 யாகபலன்.

வைகாசிமாத அஷ்டமி சக்தி-சிவன்- வணங்கினால் 10000 யாகபலன்.வைகாசி விசாக விரதம்-கருவில் உதித்தவர் எவராலும் அழிக்க முடியாத வரம் பெற்ற சூரபதுமனை அழிக்க சிவன் தனது ஆறு முகங்களிலிருந்து அக்னி ரூபனாக தோன்றச் செய்த அந்த ஆறுமுகன் அவதரித்த நாளே வைகாசி விசாகம். இந்நாளில் விரதம் இருந்து வழிபடுவோர் நல்ல வேண்டுதல்கள் யாவும் ஈடேறும். இன்று பால் குடம், காவடி எடுத்து வணங்கினால் ஞானமும் கல்வியும் அடைவர்.

விசாகம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். இதனால் முருகன் விசாகன் எனப்படுகின்றார். அதாவது வி- பட்சி- மயில் என்றும் சாகன் என்றால் சஞ்சரிப்பவர் என்றும் பொருள். மயில் மீது சஞ்சரிப்பவர் விசாகன்.

தமிழில் இரண்டாவது மாதம் வைகாசி. இளவேனிற் என்ற வசந்த காலத்தில் இம்மாதம் வருவதால் ஆலயங்களில் வசந்த விழாக்கள் சிறப்புடன் நடத்தப் படுகின்றன. வைகாசம் என்றால் மலர்ச்சி என்பது பொருள்.

இந்த மாதத்தில் முருகனை தோன்றினான் என்றோ பிரந்தான் என்றோ சொல்வது கிடையாது. உயிர்களின் நன்மைக்காக உருவமில்லா இறைவன் உருவமெடுத்து உதித்தான் என்றுதான் கூறுவர். முருகன் என்றும் உள்ளவன் என்ற அர்த்தத்தில் பிறவா யாக்கைப் பெரியோன் எனச் சிறப்பித்தனர். முருகன் வழிபாடு 5000 ஆண்டுகள் பழமையானது.

சூரிய உதயத்திற்கு முன் விழித்தெழுந்து சுப்ரமண்யனை சிந்தையில் நிருத்தி ‘ஓம் சரவணபவாய நம’ என்பதை மந்திரமாகச் சொல்லியவாரு அன்றைய இறை வழிபாடுகளைச் செய்ய வேண்டும். முருகன் படத்தின் முன்னால் தீபமேற்றி கந்த சஷ்டிகவசம், திருப்புகழ், கந்தர் புராணம், கந்தகுரு கவசம் ஆகிய துதிகளைச் சொல்லவும். பூஜை முடிந்தபின் ஒருவேளை பகல் உணவு மட்டும் உண்ணவும். மாலை சிவன் அல்லது முருகன் கோவிலுக்குச் சென்று அங்கு நடைபெரும் நிகழ்ச்சிகளில் உளமாற பங்கெடுத்து பிரசாதம் பெற்று விட்டுக்கு வந்து பால், பழம் அருந்தி விரதம் இருக்கவும். அன்றைய பொழுது அதிர்ந்து பேசுதல் மற்றவரிடம் கோபம் கொள்ளாமை ஆகியவற்ரை கடை பிடிக்கவும். தொடர்ந்து இந்த விரதம் கடைபிடிப்போருக்கு பகை விலகும், திருமணப்பேறு குழந்தைப் பேறு கிட்டும்.

வைகாசி ஏகாதசி விரதம். கிருஷ்ணபட்ச ஏகாதசி விரதம் அனுஷ்டித்தால் மகாவிஷ்ணுவின் அருட்பார்வை கிட்டும். வித்யா தானம் செய்த பலனுடன் எதிர்பாராத இடர்கள் வாழ்வில் பனிபோல் விலகும்.

சதாஷ்டமி விரதம்- வைகாசி மாத அஷ்டமிக்கு சதாஷ்டமி என்று பெயர். சிவபெருமானை நோக்கி வெறும் நீரை மட்டும் அருந்தி கடுமையான விரதம் மேற்கொண்டால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விலகி நன்மை அடையலாம் என்கிறது வேதங்கள்.

ரிஷப விரதம்- வைகாசி சுக்லபட்ச அஷ்டமிதிதியில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் நாளில் மேற்கொள்ளும் சிவ விரதமாகும்.

விடியற்காலைப் பொழுதில் எழுந்திருந்து ரிஷபத்தின்மேல் எழுந்தருளியிருக்கும் சிவ பார்வதி வடிவினை மனதால் நினைத்து ‘ஓம் நமச்சிவய’ என்று சொல்லியவாறு நீராடி அன்றைய வழிபாடுகளை செய்ய வேண்டும். சிவபார்வதிக்குரிய துதிகளைச் சொல்ல வேண்டும். பால் பாயசம் அல்லது வெல்லத்துடன் கூடிய பருப்பு பாயாசத்தை நிவேதனமாக வைத்து பூஜை செய்து தீப ஆராதனை செய்து யாரேனும் ஒரு ஏழைக்காவது உணவு அளித்து இயன்றால் ஆடை மற்றும் தானியம் சேர்த்து தானம் செய்து ஆசி பெறுவது சிறப்பு. மாலை சிவன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி அர்ச்சனை செய்து சிவபுராணம் போன்ற துதிகளை கோவிலில் பாடி அல்லது ’ஓம் நமச்சிவய’ என்ற மந்திரத்தினை 108 முறை சொல்லி வழிபடவும். வீடு திரும்பிய பின் பால் மட்டும் அருந்தி சம தரையில் படுத்துறங்கி இறை சிந்தனையுடன் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் நீண்ட வளமான ஆரோக்கியமான ஆயுள், தனம், கல்வி, அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெறுவது திண்ணம் என்கிறது வேதம்.


&&&&&

Read 5121 times Last modified on செவ்வாய்க்கிழமை, 24 September 2019 17:38
Login to post comments