Print this page
சனிக்கிழமை, 09 September 2017 10:18

வராக சம்ஹாரமூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

இருபதம் ஏக தந்தர் காக்க! வாழ்கரம்
க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! முன்கையை
வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபுரகர் காக்க!
கேழ்கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!


வராக சம்ஹாரமூர்த்தி!

 

இரனியாக்கன் என்ற அசுரன் நான்முகனை நோக்கித் தவம் செய்து பல வலிமை மிக்க வரங்களை வேண்டி பெற்றதனால் ஆணவம் கொண்டு உலகத்தை பாய்போல் சுருட்டிக் கடலில் மறைத்தான். தேவர்கள் திருமாலிடம் முறையிட அவர் வராக வடிவமெடுத்து கடலினுள் புகுந்தார். வராக வடிவம் மலயைவிட இரட்டிப்பு உயரத்துடன் அதன் கால்களுக்கு இடைப்பட்ட தூரம் 1000காத தூரம் கொண்டு அது விடும் மூச்சுக் காற்று உலகை உலுக்குவதாகவும் வடவாமுகாக்கினி போன்ற பார்வையுடன் இருந்தது. வடவாமுகாக்கினி என்பது கடலினுள் இருக்கும் பெரிய நெருப்புப் பகுதி. கடலின் நீர் அதிகமாகாமலும் குறையாமலும் இருக்கச் செய்வது இந்த நெருப்புதான் என்கின்றது நமது புராணங்கள்.
வராகம் கடலைக் கலக்கி இரணியனைக் கண்டு அவனை கொம்பினால் குத்தி அவனிடமிருந்த பாய்போல சுருண்டிருந்த உலகை தன் கொம்பினால் கொண்டுவந்து ஆயிரம் தலையுடைய ஆதிசேஷன் தலைமீது விரித்தார்.
இந்த வெற்றியினால் வராகம் அகந்தைக் கொண்டது. மலைகளை இடித்து கடலைக் கலக்கி உயிர்களுக்குத் துன்பம் தர தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். பெருமான் வேடுவனாக வடிவமெடுத்து தமது கரத்தில் உள்ள முத்தலை வேலினால் வராகத்தின் நெற்றியில் குத்தி நிலத்தில் அழுத்தினார். அதன் கொம்புகளில் ஒன்றைப் பறித்தார். அதனால் வராகத்தின் அகந்தை அகன்றது. தேவர்களின் வேண்டுதலின் பேரில் அக்கொம்பை தன் உடலில் அணிகலனாக அணிந்தார். அகந்தை அகன்ற திருமால் சிவனைத் துதித்து வைகுந்தம் சென்றார்.
இரணியாக்கன் தன் வலிமையால் பூமியை பாய்போல்ச் சுருட்டி கடலினுள் ஒளித்து வைக்க திருமால் வராக அவதாரம் எடுத்து அவனை அழித்து பூமியை மீட்டும் ஆவேசம் தனியாமல் இருக்க வேடுவனாக வராகத்தை அடக்கிய வடிவம் வராக சம்ஹார மூர்த்தி.

#####

Read 6704 times Last modified on புதன்கிழமை, 15 November 2017 04:57
Login to post comments