gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வியாழக்கிழமை, 24 August 2017 11:28

பரிகசித்தால் பாவங்களில் பங்கு!

பரிகசித்தால் பாவங்களில் பங்கு!

முனிவர் ஒருவர் தவத்தில் ஆழ்ந்திருப்பார். தொடர்ந்து அவ்வாறு இருக்கும்போது தினமும் ஒருமுறை தன் கையை சிறிது நேரம் நீட்டுவார். அப்போது அவர் கையில் வைப்பதை உண்டுவிடுவார். அப்படி ஒருசமயம் கையை நீட்டும்போது அவரை பரிகாசம் செய்ய நினைத்த செல்வந்தர் தன் மாட்டுச் சாணத்தை எடுத்து அவர் கையில் வைத்தார். அதை அவர் அப்படியே தன் வாயில் போட்டு விழுங்கி விட்டார். சில நாட்கள் கழிந்தபின் வேறு ஒரு யோகி அவ்வூருக்கு வந்தார். அவரை செல்வந்தர் சந்தித்தார். அப்போது யோகி நீங்கள் கொடுத்த மாட்டுச்சாணி நரகத்தில் உங்களுக்கு உணவாக மலை அளவிற்கு காத்திருக்கின்றது என்றதும் மிகவும் வருதப்பட்டவர் யோகியின் ஆலோசனைப்படி அன்றிலிருந்து தான தர்மங்கள் செய்து வந்தார். இளம் பெண்கள் திருமணத்திற்கு பொண்ணும் பொருளும் கொடுத்து உதவினான். இதை அந்த ஊர் மக்கள் சிலர் தவறான எண்ணத்துடன் கொடுக்கின்றான் என்று வதந்தி பரப்பினர்.
கண்பார்வையற்ற கணவனுடன் அவ்வூருக்கு வந்த ஏழைப் பெண் அந்த செல்வந்தரைச் சந்தித்து உதவி கேட்க கணவனின் அனுமதி கேட்டாள். செல்வந்தரைப் பற்றி தவறாகக் கேள்விப்பட்டிருந்தவன், தானம் கொடுப்பதாகச் சொல்லி பெண்களின் கற்பை சூறையாடுபவனிடமா என்று கேட்டான். தன் கற்பின் சக்தியினால் உண்மை நிலையை அறிந்த அப்பெண் அந்தச் செல்வந்தன் தன் விளையாட்டல் அடைந்த கர்மத்திற்கு பிராயசித்தமாக இந்த தான தர்மங்களைச் செய்து வருகின்றான். செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் செய்பவர்களை பரிகசிக்கவோ கூடாது. அப்படிச் செய்தால் அந்த பாவம் அவர்களைச் சென்றடையும் என்றாள். இப்போது அவரின் பாவத்தில் நீங்கள் பங்கு அடைந்துள்ளீர்கள் அடுத்த பிறவியிலும் இதே போன்று ஊனத்துடன் பிறப்பீர்கள் என்றாள். ஒவ்வொரு உயிரும் முன்வினைகளை தீர்த்துக் கொள்ள படாத பாடு படும் நிலையில் தவறு செய்தவர்கள் அவர்கள் பாவங்களை குறைக்க எடுக்கும் முயற்சியை தவறாக விமர்சிப்பதால் அந்த பாவங்களில் பங்கு கொள்ளும் பரிதாப நிலைக்கு ஆளாக வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.-குருஸ்ரீ பகோரா

செவ்வாய்க்கிழமை, 20 June 2017 10:00

ஆனந்த சந்தோஷம்!

ஆனந்த சந்தோஷம்!
பல லட்சங்கள் செலவு செய்து ஒரு பிளாட்டை வாங்குகின்றோம் அதில் எதுவும் நமக்கு செந்தமில்லை என்பதை புரிந்திருக்கின்றோமா!. சுற்றியிருக்கும் சுவர்கள் மேல் தளம் கீழ்தளம் எதையும் நாம் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்ற முடியாது. ஏனெனில் அது சுவருக்கு அடுத்த பக்கத்தில் நம்மைப் போன்று வீடு வாங்கி யிருப்பவருக்கும் அந்தச் சுவற்றில் உரிமை உள்ளது. அப்படியானால் நாம் கொடுத்த லட்சங்களுக்கு அந்த சுவர்களுக்கிடையே உள்ள காற்று நிரம்பிய காலி இடத்தை உபயோகித்துக் கொள்ளும் உரிமைதான் நமக்கு. இதற்குத்தான் நாம் அத்தனை லட்சம் செலவு செய்திருக்கின்றோம் என்பதை உணரவேண்டும்.
இதைப் போன்றே இப்புவியில் பிறந்த அனைவருக்கும் எந்த உறவாயிருந்தாலும் எவ்வளவு பணம் செலவு செய்திருந்தாலும் எதுவும் சொந்தமில்லை. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்காள், தங்கை, மனைவி என எதுவும் உங்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற உறவிற்கும் சொந்தமானவர்கள். உங்களின் பாசமான எந்த உறவையும், நீங்கள் அரும்பாடுபட்டு சேர்த்த சொத்தையும் நீங்கள் போகும்போது ஒரு குண்டுமணி அளவுகூட கொண்டு செல்ல முடியாது. அப்படியானால் நிரந்தரமாக இங்கிருந்து இவற்றையெல்லாம் அனுபவிக்க முடியுமா என்றால் அதுவுமில்லை.
உண்மையான யதார்த்தம் இப்படி இருக்க நமக்கு ஏன் கோபம் ,போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சம், சுயநலம் எல்லாம்! இவைகளை விட்டு இருக்குமிடத்தில் இருக்கும் வரை ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்க முயல்வோம். மற்ற உயிர்களை நேசித்து அவர்களும் ஆனந்தப் படும்படி ஏதாவது செய்ய முயலுங்கள். அதுவே இருக்கும்வரை நீங்கள் ஆனந்த சந்தோஷமாக இருக்க நல்வழி-

செவ்வாய்க்கிழமை, 21 March 2017 12:03

உலக நியதி!

உலக நியதி!

      சன்னியாசி ஒருவர் மலை உச்சியில் இருந்து இயற்கை அழகைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பறவை ஓர் இறைச்சித் துண்டினை வாயில் வைத்து பறந்திருக்க மற்ற பறவைகள் அதை துரத்துவதைப் பார்த்தார். எவ்வளவு வேகமாகப் பறந்தும் மற்ற பறவைகளிடமிருந்து அதனால் தப்பிக்க முடியவில்லை. அருகில் வந்தப் பறவைகள் இறைச்சி வைத்திருக்கும் பறவையைத் தாக்கத் தொடங்கின. அவைகளிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்து அத்தனையும் பலனிற்றிப் போகவே தன்னிடமிருந்த இறைச்சித் துண்டினை கீழே விட்டது/ உடனே துரத்தி வந்த வேறு ஓர் பறவை அதைக் கவ்விப் பறக்க மற்ற பறவைகள் அதைத் துரத்த ஆரம்பித்தன. இறைச்சியை இழந்திருந்தாலும் அந்த பறவை நிம்மதி பெருமூச்சுவிட்டு ஆசுவாசம் அடைவதைப் பார்த்தார்.

      அப்போது ஓர் உண்மை அவர் மனதில் பளிச்சிட்டது. ஊண் துண்டை இழந்த பறவை நிம்மதி யடைந்ததுபோல் உலகப் பற்றைத் துறப்பவர்கள் மன நிம்மதி  அடைவர் என்பதே உலக நியதியாக இருக்கும்போது பலர் அதை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து அவதிபட்டுக் கொண்டிருக்கின்ற உயிர்களை நினைத்து வருந்தினார்! 

நல்ல முயற்சிக்குத் தெய்வம் துணை நிற்கும்!

     ஒரு பக்தன் எந்தத் தொழிலை தொடங்கினாலும் இறைவனை வணங்கி விட்டுத்தான் செய்வது வழக்கம். தனக்கு கடவுளின் அனுக்கிரகம் இருப்பதால்தான் தன்னால் எல்லாம் நன்றாகச் செய்ய முடிகின்றது என்று நம்பினான். அவன் வாழ்க்கைச் சீராக சென்று கொண்டிருந்தது.

      வழக்கம்போல் செயல் பட்டுக்கொண்டிருந்த அவனுக்கு திடீரென்று ஒரு சின்ன சந்தேகம் வந்துவிட்டது. அதாவது உண்மையிலே கடவுள் உதவுகின்றாரா! அல்லது தன் உழைப்பின் பயனால் நன்றாக நடக்கின்றதா என்று தோன்ற அதை சரி பார்க்க  நினைத்தான். அப்போது அவன் செய்து கொண்டிருந்த வேலை திடிரென்று நின்றது. இயந்திரங்கள் இயங்கவில்லை.  மின்சார தொடர்பில் ஏதோ கோளாறு. அப்போது அவன் நினைத்தான் இறைவன் எனக்கு உதவி செய்து மீண்டும் முன்புபோல் இயந்திரங்களை இயக்கட்டும் என்று ஒன்றும் செய்யாமல் அமைதியாக அமர்ந்து விட்டான்.

      மதிய உணவு வேலை கடந்து மாலை நெருங்கிற்று. இயந்திரங்கள் சரியாகி ஓடவில்லை. பொறுமை இழந்தான். இனி இறைவனை நம்பிப் பயனில்லை. தன் உழைப்பே தனக்கு உதவும் என்று மின் இனைப்பை பார்த்தான். அது சரியாயிருக்கவே இயந்திரத்தில் என்ன கோளாறு என்று பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த இயந்திரத்தைப் இதற்குமுன் பழுது பார்த்தவர் அகஸ்த்தமாக அங்கு வந்தார். அவன் கேட்டுக் கொள்ள இயந்திரம் பழுது பார்க்கப் பட்டது. அப்போது அவர் சொன்னார் நான் பக்கதில் ஒரு கம்பனியில் பழுது பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்ல நினைத்தேன். எதிர்பாரமல் திடிரென்று உங்கள் நினைவு வர உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று இங்கு வந்தேன். நான் இங்கு வந்ததிற்கு நீங்கள் அந்த இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எனெனில் நாளை நான் ஊருக்குப் போகின்றேன்  திரும்பி வர ஒரு வாரம் ஆகும் என்றான்.

      அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. இறைவன் தானாக வந்து உதவி செய்யமாட்டார். நாம் சிறிதளவாவது முயற்சி செய்யவேண்டும் என்பதை உணர்ந்தான். நீங்கள் செய்யும் நல்ல முயற்சிக்குத்தான் தெய்வம் துணை நிற்கும்!          

உரிமை கொண்டாடுவதே துன்பத்திற்கு காரணம்!

      ஆற்றில் ஒருவன் குளித்துக் கொண்டிருந்தான் திடிரென்று அவன் மேல் ஒரு கம்பு மோதியது அதை பிடித்தான். அது மிகவும் நேர்த்தியான அழகுடன் இருக்கவே அதன்மேல் பற்று கொண்டு அதனுடன் கரையேர முயற்சித்தான். வழியில் ஒரு சுழலில் மாட்டிக்கொள்ள அதிலிருந்து மீளமுடியாமல் கையிலிருந்த கம்பை விட்டுவிட்டு ஒருவழியாக கரை சேர்ந்தான். சுழலிருந்து மீண்டது அவனுக்கு பெரியதாகத் தெரியவில்லை. கையில் கிடைத்த மனதைக் கவர்ந்த அந்த கம்பை விட்டு விட்டோமே என்று மனம் வருந்தியது.

      அருகில் இருந்த ஞானி கேட்டார். புனித தீர்த்ததில் குளித்தும் புத்துணர்ச்சி அடையாமல் சேர்ந்துபோய் இருக்கின்றாய் ஏன்! என்று கேட்க கையில் கிடைத்ததை நழுவ விட்டேன் என்று வருத்தப்பட்டு நடந்ததைச் சொன்னான்.

      ஞானி சொன்னார்! உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது. அந்தக் கம்பு இப்போதும் மிதந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சில நிமிடங்கள் அந்தக் கம்பைப் பற்றியிருந்ததிற்கே சொந்தம் கொண்டாடி அதை இழந்ததாக வருத்தப் படுகின்றீர்கள். அது உங்கள் கைத்தடி என்று எப்படி சொந்தம் கொண்டாட முடியும். வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. நிரந்தரமும் இல்லை. பிறக்கும் போது எதையும் கொண்டுவராத மனிதன் இறக்கும்போதும் எதையும் கொண்டு போவதில்லை. இருந்தாலும் அவன் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடி துன்பங்களைச் சேர்த்துக் கொள்கின்றான் உங்களைப் போல். தெளிவு கொள் மனிதா!

சனிக்கிழமை, 11 March 2017 14:57

மனங்கோணா தர்மம்!

மனங்கோணா தர்மம்!

      பெண் ஒருத்தி தன்வாழ்விற்கு ஆதாரமாக இட்லி கடை வைத்திருந்தாள். தினமும் கடை ஆரம்பித்த கொஞ்சம் நேரம் கழித்து வயதான முதியவர் வந்து கையை மட்டும் நீட்டி யாசிக்க இப்பெண்ணும் தவறாமல் இரண்டு இட்லி கொடுப்பாள். தினமும் இட்லி பெற்றுக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவன் செல்வது அவளுக்கு வருத்தத்தை அழித்தது.. வருத்தம் கோபமாக மாறியது. இட்லி நன்றாய் இருக்கின்றது என்று சொன்னால் பரவாயில்லை என்ற எதிர்பார்ப்பு அவளிடமிருந்தது. எதிர்பார்ப்பு ஓர் இனம் புரியாத வெறியாக மாற நாம் ஏன் அவனுக்கு தினமும் இட்லி தரவேண்டும். இனி தராமல் இருந்துவிடலாம் என்று நினைத்தாள். ஆனால் அடுத்த நாள் அவன் வந்த போது அவளை அறியாமல் பழக்க தோஷத்தில் இரண்டு இட்லிகளை எடுத்து கொடுத்து விட்டாள். என்ன நினைத்திருந்தோம் இப்படி செய்து விட்டோமே என வருந்தி அந்தக் கிழவனுக்கு விஷம் கொடுத்துவிட்டால் நமக்கு தினமும் இந்த தொல்லை இல்லை என்று நினைத்தாள். அதன் படி செய்ய நினைத்து இரண்டு இட்லிகளில் எலி மருந்தை தடவி தயாராக வைத்திருந்தாள். நேரம் ஆக ஆக அவள் நல்ல மனது விழித்தது. இந்தப் பாவத்தை நாம் ஏன் செய்ய வேண்டும். நமக்கு அவனுக்கு இட்லி கொடுக்க விருப்பமில்லையெனில் இட்லி இல்லை என்று சொல்லாமல் தன் மனம் இப்படி மோசமாக நினைத்தற்கு மிகவும் வருதப்பட்டாள். அந்த கிழவன் வந்ததும் இன்முகத்துடன் வேறு இரண்டு இட்லிகளைப் கொடுத்தாள். சந்தோஷத்துடன் வாங்கிச் சென்றான்.

      அன்று மதியம்  அவள் வீட்டு கதவு தட்டப்பட கதவை திறந்த அவள் அங்கு தன் மகன் அலங்கோலமாக நிற்பதைப் பார்த்து அதிர்ந்தாள். வீட்டில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுப் போனவன் இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வருகின்றான். வேலை எங்கும் கிடைக்கவில்லை. கிடைத்த சின்ன வேலைகளைச் செய்து எப்படியே வாழ்ந்துவிட்டு வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்ப நினைத்தவன் கையில் இருந்த காசு போதாமல் நடந்தே வந்திருக்கின்றான். வரும் வழியில் பசி மிகுதியால் களைப்படைந்து மயக்க மடையும் நிலையில் ஓர் பெரியவர் அவன் நிலைக் கண்டு தன்னிடமிருந்த் இரு இட்லிகளை அவனுக்கு கொடுத்து உதவ அதை சாப்பிட்டபின் அந்த தைரியத்திலே ஊருக்கு வந்து சேர்ந்திருக்கின்றான். இதை அறிந்த அவள் மனம் தான் தினமும் இட்லி அளிக்கும் பெரியவரைத்தான் முதலில் நினைத்தாள். அன்று அவருக்கு விஷமிட நினைத்திருந்தென். அப்படி பாவம் செய்திருந்தால் இன்று என் மகனுக்கு அந்த ஒரு வேளை உணவு கிடைத்திருக்குமா என்று எண்ணி கண் கலங்கினாள். அன்றே முடிவு செய்தாள். தர்ம காரியத்தினை மனம் கோணாமல் சந்தோஷத்துடன் செய்வது என்று! நீங்கள் எப்படி!

வியாழக்கிழமை, 24 November 2016 18:55

உன்னை நீ எண்ணிப்பார்!

உன்னை நீ எண்ணிப்பார்!

ஒரு மனிதனுக்கு தன் வீடும் சுற்றமும் அசிங்கமாகத் தெரியவே வீட்டைவிட்டு வெளியேறி பக்கத்து ஊருக்குச் சென்றான். அங்கும் குப்பையும் கூளமுமாக அசிங்கமாக இருப்பதாக அவன் மனம் நினைக்க காட்டுக்குச் சென்றான். செல்லும் வழியில் விலங்குகளின் கழிவுகளை மிதிக்க வேண்டியதாயிற்று. போதாக் குறைக்கு மரங்களின் அடியில் செல்லும்போது பறவைகளின் எச்சங்கள் அவன் மீது விழ காடும் மோசமாக இருப்பதாக நினைத்தான். ஆற்றில் இறங்கி நீரில் தன் ஆடைகளை சுத்தம் செய்ய நினைத்தபோது தொடர்ச்சியாக மனித சடலம், விலங்கின் சடலம் வரவே மிகவும் சங்கடப்பட்டான். சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் பிடித்து திண்பதைக் கண்டான். அருவருப்படைந்தான்.
உலகம் எங்கும் அசிங்கம் நிறைந்துள்ளது என உலக வாழ்க்கையை வெறுத்து தீ மூட்டி அதில் இறங்க தயாரானான். அவ்வழி வந்த ஞானி ஒருவர் அவனைத் தடுத்து நீ ஏன் இறக்க விரும்புகின்றாய் என்று கேட்டு விபரம் அறிந்தார். சரி நீ இப்போது தீயில் கருகி உன் உடலிலிருந்து துர்நாற்றம் வீசும். அப்போது அதுவும் இவ்வுலகில் பரவும் என்பதை எண்ணிப் பார்த்தாயா என்றார். தன்னை தன் உடலைப் பற்றிய உலக ஞானம் அவனுக்கு அப்போதுதான் வந்தது!.

கூலி! ஓர் தங்க காசு! ஏமாற்ற நினைத்தால் ஏமாறுவாய்!

வியாபார நோக்கில் பணம் கையுடன் எடுத்து செல்ல வேண்டிய நிலையில் ஞானி ஒருவரின் ஆலோசனையைக் கேட்க, ஒருவனைத் துணைக்கு அமர்த்தி அதற்குண்டான கூலியை புறப்படுமுன் கொடுத்துவிட்டால் உன் பணம் எந்த சேதாரமும் இன்றி வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என்றார். அதன்படி துணைக்கு முரடனாகத் தோற்றம் கொண்ட ஒருவனை அமர்த்தினார். அவனின் வெகுளித் தன்மையைப் பயன்படுத்தி அவனுக்கு ஒரு தங்ககாசு தருவதாக பேசிமுடித்தார். ஊருக்குச் செல்லும் நாள் அன்று துணைக்கு வருபவனுக்கு தங்க காசு கொடுக்க எடுத்தவர் அவனின் வெகுளித்தனத்தைக் கருத்தில் கொண்டு அவனிடம் ஒரு செம்பு காசைக் கொடுத்தார். அவன் கண்டு பிடித்து கேட்டால் அவனுக்கு தங்க காசு கொடுத்துவிடலாம் இல்லை என்றால் அது மிச்சம் என்று கணக்குப் பேட்டார்.
இருவரும் பயணம் செய்தனர் ஒரு நாள் கழிந்தது. இரவு வந்தது. இருவரும் ஒரிடதில் தங்கினார்கள். துணைக்கு வந்தவன் வெளித் திண்ணையில் ஓய்வாக இருந்தான். அப்போது அங்கு வந்தமுரடன் துணைக்கு வந்தவனிடம் பேச்சுக் கொடுத்து ,பார்ப்பதற்கு முரடனாக இருந்தாலும் அவன் ஓர் அப்பாவி எனத் தெரிந்து கொண்டு அவனிடம் காசு வைத்திருக்கின்றாயா என மிரட்ட தன்னிடம் இருந்த ஒரு செப்புக் காசை தர, என்ன! இந்த ஒரு செப்புக் காசுதான உன்னிடம் இருக்கின்றது என கேட்க, அது செப்புக் காசு இல்லையே, தங்க காசு என்றுதான் அவர் கொடுத்தார் என உள்ளே இருந்த வியாபாரியைக் காட்டினான்.
வியாபாரியை அடித்து உதைத்து அவனிடமிருந்த அத்தனை பொற்காசுகளையும் பிடிங்கிக் கொண்டு செல்லும்போது துணைக்கு வந்தவன்மேல் பரிதாப்பட்டு ஒர் தங்ககாசுசைத் தந்துவிட்டுப் போனான்.
யார் என்ன முயற்சித்தாலும் ஒருவருக்குக் கிடைக்க இருப்பதைத் தடுக்க முடியாது! நம்மை விட்டுப் போவதை தக்க வைக்கவும் முடியாது.

திங்கட்கிழமை, 01 August 2016 06:05

குரங்குப்பிடி!

குரங்குப்பிடி!
மரத்திற்கு மரம் தாவிக் கொண்டிருந்த குரங்கு கொடியைப் பிடிப்பதற்குப் பதில் தொங்கிக் கொண்டிருந்த பாம்பை பிடித்தது. பிடித்தவுடன் தான் அது கொடியல்ல பாம்பு என அறிந்து குழம்பியது. பாம்பைக் கையிலிருந்து விடுவித்தால் அது தன்னைக் கடித்துவிடுமோ என்ற பயத்தினால் பாம்பைப் பிடித்த பிடியைத் தளர்த்தாமல் அங்கும் இங்குமாக குதித்துக் களைப்படைந்தது. பசியினால் மிகவும் சேர்வடைந்தது. மற்ற குரங்கள் கையில் பாம்பு இருப்பதால் உதவிக்கு வரமுடியாமல் ஒதிங்கின. குரங்கின் பிடியில் நீண்ட நேரம் பாம்பை வைத்திருந்ததால் அது இறந்தது. அது இறந்தது தெரியாமல் பிடியையும் விடாமல் இருந்து பசி தாகத்தால் குரங்கும் உயிர் துறந்தது.
இந்த நிகழ்வு என்ன சொல்கின்றது என்றால் வேண்டாத எண்ணங்களை வளர்த்துக் கொண்டு அவற்றை விட்டுவிடத் தெரியாமல் துன்பத்தில் சுழன்று கொண்டிருக்கும் மனத்திற்கு உயிர் உடலை விட்டு நீங்கும் காலம் வரை என்றும் துயரம்தான்!
பயம் நீக்கி மனம் தெளிவடைய ஆன்மீக சிந்தனைகளை வளர்த்து ஆன்மீகத்தில் ஈடுபடுவாய் மனமே!

திங்கட்கிழமை, 01 August 2016 04:46

எது உன்னுடையது!

எது உன்னுடையது!
ஒரு யோகியிடம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அளவு சொல்லி இந்த வயல், தோட்டம் எல்லாம் என்னுடையது என்றான். அதற்கு யோகி, இவையெல்லாம் என்னுடையது என்று ஒருவன் சொன்னானே என்றார். யார் அவன்! எப்போது சொன்னான் என்றதற்கு 50 வருடங்களுக்கு முன் என்றார் யோகி. அது எங்கள் தாத்தா. கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாகவே இது எங்களுக்குச் சொந்தமானதாகவே இருக்கின்றது என்றான் நிலத்தை சொந்தம் கொண்டாடியவன். இருபது ஆண்டுகளுக்குமுன் இதே நிலத்தை சொந்தம் என வேறு ஒருவர் சொன்னாரே என்று சொன்னார் யோகி. அவர் என் தந்தை. அந்த இருவரும் எங்கே என்று யோகி கேட்க அவர்கள் இருவரும் இறந்ததால் எங்கள் தோட்டத்திலேயே புதைத்து விட்டோம் என்றான் சொந்தம் கொண்டாடியவன்.
என் நிலம், என் சொத்து எனச் சொல்லிய உன் முன்னோர்கள் இன்று இந்த நிலத்திற்குச் சொந்தமாகிவிட்டனர். அவர்கள் இல்லை. ஆனால் இந்த நிலம் இருக்கின்றது. இதேபோல் இன்று என்னுடையது எனச் சொல்லும் நீ ஒருநாள் இருக்கமாட்டாய் இந்த மண்ணுக்குச் சொந்தமாவாய். அப்போது உன்மகன் இந்த நிலம் எனக்குச் சொந்தம் என்பான்! உண்மை அதுவல்ல!
எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. உன்னுடையது என உரிமை கொண்டாடுவதை இறுதியில் உன்னோடு எடுத்துக் கொண்டு சொல்ல முடியாது.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26928903
All
26928903
Your IP: 3.226.254.255
2024-03-28 16:56

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg