gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

கைவல்யபாதம்

Written by

4.கைவல்ய பாதம் 
4-1 ஜன் மௌஷதி மந்த்ர தப ஸமாதிஜா ஸித்தய.

ஜன்மம், ஔடதம், மந்திரம், தவம், சமாதி ஆகியவைகளால் சித்திகள் உண்டாகும்.

4-2 ஜாத்யந்தர பரிணாம ப்ரக்ருத்யா பூராத்.

மூலப் பிரகிருதியில் சத்வ, ராஜஸ, தாமஸ குணங்கள் பின்னிக் கிடக்கின்றன். இவைகளின் விகிதக் கலப்பால் பல ஆயிரம் பொருள்களை உருவாக்கலாம். பிரகிருதியை நிறைவு செய்யும்போது ஒன்று மற்றொரு ஜாதியாக பரிணாமம் கொள்ளும். சத்துவம் 100 பகுதி என்றும், ராஜஸம் 100 பகுதி என்றும், தாமஸம் 100 பகுதி என்றும் வைத்துக்கொண்டால் 50:60:70 என ஒரு பொருளும் 60:70:80 என வேறு ஒரு பொருளும் இப்படி பலப்பல ஜாதிகள் உண்டாக்கலாம்.

4-3 நிமித்தம ப்ரயோஜகம் ப்ரக்ருதீனாம் வரணபேதஸ்து தத க்ஷேத்ரிகவத்.

பிரகிருதியின் பரிணாமத்திற்கு தடையாக உள்ளவைகளை நல்வினையும் தீவினைகளும் நீக்குகின்றன. கதவைத் திறக்க மட்டும் முயற்சி செய்தால் வெளிக்காற்று உள்ளே வருகிறது. பரந்து கிடக்கும் பரிபூரணநிலையே பரிணாமம் ஆகிறது. உயிர்களின் உள் புதைந்து கிடக்கும் பராசக்தியின் நிலைகள் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளும் முயற்சியே உயிர்களின் வாழ்க்கையாகும்.

4-4 நிர்மாணசித்தான்யஸ்மி தாமாத்ராத்.

தன்னுடைய அகங்காரத்தில் உள்ள வேறு பல சித்தங்களை ஒருவனால் உருவாக்க முடியும் அது நிர்மாண சித்தமாகும். முந்திய பிறவி வினைகளை ஆத்மா வேறு ஒரு பிறவி உடம்பின் மூலம் அனுபவிக்கின்றது. அப்பிறவியிலே எல்லா வினைகளையும் அனுபவித்து விடுதல் சிறப்பு. மீதி இருக்கும் வினைகள் அடுத்த பிறவியில் வேறு உடல் மூலம் அனுபவிப்பதற்குப் பதில் இப்பிறவியிலேயே வேறு உடல்கள் எடுத்து அனுபவிக்கலாம். நம் உடலும் ஆன்மாவும் பிரியாமல் பல உடல்களை எடுத்து வினைகளை நீக்கலாம். பல சித்தங்கள் பிறவியில் உண்டாகுமானால் பல உடல்களும் உண்டாவது உறுதி. நம் உடம்பில் ஜீவாத்மாவுடன் இருந்து கொண்டே நம் மனம் புத்தி அகங்காரங்களை விரிவு செய்து வேறு பொருள்களில் நுழைவது பல சித்தங்களையும் உடல்களையும் உருவாக்கும் முயற்சியாகும். வேறுப் பல பிறவிகளில் தீரும் வினைகள் இப்பிறவியிலே தீரும். மனம், புத்தி, அகங்காரம் மூன்றும் மூலப் பிரகிருதியிலிருந்து பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது. அதன் சிறு பகுதிகள்தான் உடம்பு. அவை ஓர் உடல்விட்டு வேறு உடலினுள் நுழைந்தால் அது பழைய வினைகளோடுதான் இருக்கும்.  4-5 ப்ரவ்ருத்தி பேதே ப்ரயோஜகம் சித்தமேக மனேகேஷாம்.

நிர்மாண சித்தங்கள் வேறு வேறாக வினைகளால் நடக்கின்றன என்றாலும் அவனின் மூலமனமே எல்லாச் சித்தங்களையும் ஆட்சி செய்யும்.

4-6 தத்ர த்யான ஜமனாச்யம்.

ஒருவனால் உருவாக்கப்பட்ட வேறு வேறான சித்தங்களுள் தியானத்தால் உருவாகிய சித்தத்திற்கு மட்டும் பழைய வினை தொடர்பு இருக்காது. ஆசைகளின் விரிவினால் மனிதரின் சித்தம் பலவகைகளில் வேறுபடும். சமாதி நிலைக்குப் போனவரின் சித்தம் ஆசைகள் வற்றி தூய்மையானதாகும்.

4-7 கர்மசு க்லாக்ருஷ்ணம் யோகி னஸ்த்ரிவித மிதரேஷாம்.

யோகியின் அகக் கண்களுக்கு தன் கர்மங்கள் மற்றவர்களைப்போல் தீவினைகள் கருப்பாகவோ, நல்வினைகள் வெள்ளையாகவோ தெரியாது.

4-8 தத ஸ்தத விபாகானு குணானமேவாபி வ்யக்திர் வாஸனானாம்.

பாவம், புண்ணியம் இரண்டும் கலந்த மூன்று கர்மங்களில் எது அந்த நிலைக்கு உரியதோ அது முன்னால் வந்து சேரும். மற்றவை பின்னால் போகும். புலி பாயும், மனிதன் நடப்பான் என்பதில் ஒவ்வோர் உடம்பிலும் அதற்குரிய கருமங்கள் முன்வரும்.

4-9 ஜாதி தேச கால வ்யவஹிதானாம ப்யாநந்தர்யம் ஸ்ம்ருதி ஸம்ஸ்காரயோ ரேக ரூப வாத்.

ஞாபகமும் ஸம்ஸ்காரம் என்கிற பிறவி வாசனையும் அழியாதிருப்பதால் பிறவி, இடம், காலம் ஆகியவைகளால் பாகுபடுத்தப்பட்ட பின்னும் ஆசையிடையே மாறாத தொடர்பு வரும். ஒன்றைத் தெரிந்து கொள்வது பின் அதைச் செய்வது அனுபவம். அது பல பிறவிகளிலும் தொடரும். ஞாபக சக்தியால் நுண்ணிய அனுபவங்கள் தேவைப்படும்போது மீண்டும் நினைவிற்கு வரும். மனம், ஞாபகம், நினைவு ஆகியவை சக்தி வடிவங்களாதலால் பிரபஞ்சம் முழுவதும் பரவும். பிறவி தோறும் பின் தொடரும்.

4-10 தாஸாமனாதி த்வம் சாஆசிஷோ நித்யத் வாத்.

எல்லா உயிர்களுக்கும் இன்பம் பெறும் விருப்பம் உண்டாவது அநாதி ஆவதால் ஆசைகளும் அநாதியாகும். அநாதி என்பது தனித்தன்மையுடையது. தோன்றிய காலம் தெரிய முடியாதது. விருப்பம் தோன்றும் இச்சா சக்தி, விருப்பத்தை செயல் படுத்தும் கிரியா சக்தி, அதை அறிவாக அனுபவமாகத் தொகுக்கும் ஞானசக்தி ஆகிய மூன்றும் அநாதியானவை. பிரபஞ்சம் முழுவதும் இவற்றைப் பரப்புவதும், பிறவிதோறும் ஆன்மாக்களை இவை தொடருவதும் ஞானத்தின் பணி. எல்லா உயிர்களுக்கும் இச்சக்திகள் செயல்பட்டு அனுபவமாக நினைவில் இருக்கும்.

4-11 ஹேது பலாச்ரயாலம்பனை ஸம்க்ருஹீதத்வாதே ஷாமபாவே தத்பாவ.

காரணம், விளைவு, இருப்பிடம், இன்பம் தரும் பொருள் ஆகியன ஒன்றாக கூடும்போது இன்பம் உண்டாகும். ஒரு பொருள் தின்ற அனுபவம் காரணமாக ஆசை நிலைப்படுதுகிறது. அதனால் அதைத் தேடி கடைக்குச் செல்வோம். அது உற்பத்தியாகும் இடம் வந்ததும் அந்த நினைவு வரும். அதை கண்ணால் பார்த்தபோதும் ஆசை உண்டாகும். எனவே இந்த நான்கும் சேர்ந்தால் இன்பம்.

4-12 அதீதானாகதம் ஸ்வரூபதோஅஸ் த்யத்வ பேதாத் தர்மாணாம்.

பொருளின் இறந்தகால எதிர்கால நிலைகள் அவற்றின் இயல்புகளில் மறைந்து இருப்பதால் அந்த இயல்புகள் வேறுபட்டிருக்கும். நிகழ்காலம் தோற்றத்தில் இருந்தாலும் அதன் இறந்தகால எதிர்கால நிலைகள் அழியாமல் சூக்கும நிலையில் இருக்கும். தேவையானபோது அவை வெளிப்படுகின்றன. இது தர்மம் எனப்படும்.

4-13 தே வ்யக்த ஸூக்ஷ்மா குணாத்மான.

பொருள்களில் முக்குணங்களால் காணப்படும் இந்த இயல்புகள் தூல பருவடிவமாகத் தோன்றியும் சூக்குமமாகத் தோன்றாமலும் இருக்கும். பிரபஞ்சமே அக்குணங்களின் தோற்றமாகும். அதன் வகைகளைக் கொண்டு இறந்தகாலம், எதிர்காலம் எனச் சொல்லலாம்.

4-14 பரிணாமைகத்வாத் வஸ்து தத்வம்.

குணங்கள் துணை செய்வதால் பரிணாமத்தின் ஒற்றுமையே பொருள்களிலும் உள்ளது. ஒன்றின் வளர்ச்சியே மற்றதாக இருப்பதால் எல்லாப் பொருள்களிலும் காணலாம்.

4-15 வாஸ்து ஸாம்யே சித்த பேதாத்தயோர்விபக்த பந்தா.

பொருளைக் காண்பதிலும் அதைப் பற்றி ஆசை கொள்வதிலும் வேறுபாடுகள் உள்ளதால் மனமும் காணும் பொருளும் வேறு வேறு என்பது புரியும்.

4-16 ந சைகவித்த தந்த்ரம் வஸ்து தத ப்ரமாணகம் ததா கிம்ஸ்யாத்.

நம் மனத்தைச் சாரத வெளியில் உள்ள பொருள்களை மனம் உணர்த்தாத போது அப்பொருள் இருப்பதே நமக்குத் தெரியாமல் போகும். நம்மிடம் அசையாமல் இருக்கும் பொருள் ஆத்மாவே என்பதை உணர்ந்தால் ஆத்ம தத்துவங்கள் அசைவதைக் காணலாம். ஓடுவதை உணர ஒடாத ஒன்று கருவியாக செயல்படும். ஓடும் மேகத்தை காண்பதற்கு ஓடாத சூரிய சந்திரனும், ஒடும் ரயிலின் வேகம் புரிய அசையாத பாலம், மரம் முதலியனவே கருவிகளாகும்.

4-17 தது பராகா பேட்சித்வாத் சித்தஸ்யவஸ்து ஞாதா ஞாதம்.

மனதின் உணர்சிகளைப் பொறுத்து பொருள் அறியப்பட்டதாயும், அறியப்படாததாயும் இருக்கும். பொருளின் தொடர்பு கிடைத்தால்தான் மனம் ஒரு பொருளை அறிய முடியும். அதனால் அதுபற்றிய விஷயங்கள் தெரிந்தவை என்றும் தெரியாதவை என்றும் சொல்லலாம். உணர்வு கொள்வதற்கு முன்பே பொருள் இருப்பதால் மனம் அதை உருவாக்குவதில்லை. மனத்தால் உணராதபோதும் அந்தப் பொருள் இருக்கின்றது.

4-18 ஸதாஜ்ஞாதாச் சித்த வ்ருத்தயஸ்தத் ப்ரபோ புருஷஸ்யா பரிணாமித்வாத்.

மனதின் ஆத்மா மாறுபாடு இல்லாதாதாய் இருப்பதால் மன அலைகள் எப்போதும் அறியப்பட்டனவாய் உள்ளது. ஆத்மாவின் கருவியாகிய மனம் ஞானி அல்ல வருவதை உரைக்க. மனதின் புரிந்து கொள்ளும் தன்மை அலைகளுக்கு எற்ப வேறுபட்டு மாறிக்கொண்டே இருக்கும். ஆத்மா மாறாதிருப்பவன். புரிந்து கொள்ளும் திறனை அளவிட விதிமுறை வைத்திருப்பவன். அசையாப் பொருள்களைக் கொண்டு அசையும் பொருள்களின் வேகம் அறியப்படுவதுபோல் ஆத்மா வைத்திருக்கும் அளவீடு முறையும் இருக்கும்.

4-19 ந தத்ஸ்வாபோஸம் த்ருசயத்வாத்.

சைத்ன்யமாகிய சுயம்பிரகாசம் உள்ள ஆத்மாவின் துணையால் மனம் முதலிய ஜடப்பொருள்கள் விளங்குவதால் மனம் சுயம்பிரகாசம் இல்லாதது ஆகும்.

4-20 ஏக ஸ்மயே சோபயானவதோ ரணம்.

சுயம்பிரகாசம் என்பது தன்னையும் தன்னால் காட்டப்படும் பொருளையும் விளக்குவதாகும், அவ்வாறில்லாமல் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட பொருள்களை உணரும் தன்மை மனத்திற்கு இல்லாததால் அது சுயம் பிரகாசம் இல்லாதது ஆகும். சூரியனின் வடிவமும் தெரிந்து அதன் ஒளியில் உலகப் பொருள்களும் தெரிவதால் சூரியன் சுயம்பிரகாசமாகும். ஆத்மா தன்னையும் உணர்த்தி பிறபொருள்களையும் உணர்த்திடுவதை உணராமல், கண்ணாலும், மனத்தாலும் உணர்வதாய் தவறாக எண்ணுவது மாயை. வெளிப்பொருளை ஆத்ம உடன்பாட்டால் மனம் காட்டும். ஆனால் மனத்தை மனமே உணரமுடியாது.

4-21 சித்தாந்தர த்ருச்யே புத்திர் புத்தேரதி ப்ரஸங்க. ஸ்ம்ருதி ஸங்கரஸ்ச.

சித்தத்தை அறிய வேறு ஒன்று இருப்பதாக எண்ணினால், பின் அதை அறிய ஒன்று, அதன்பின் மற்றதை அறிய வேறொன்று என்று சித்தங்கள் தோன்றினால் குழப்பம்தான் மிகும். ஞாபகசக்தி குறையும். எனவே பல சித்தங்கள் நம்மில் இல்லை.

4-22 சித்தே ப்ரதிஸம் க்ரமாயாஸ் ததா காராபத்தௌ ஸ்வபுத்தி ஸம்வேதனம்.

ஆத்மா பரிணாமம் படாத சித்த வடிவமாகும். ஆத்மாவின் தன்மையை சித்தம் கிரகித்து ஞானமடைகிறது

4-23 த்ருஷ்ட்ரு த்ருச்யோ பரக்தம் சித்தம் ஸர்வார்த்தம்.

காண்போனாகிய புருஷனோடு காணப்படும் பொருள்களோடும் சித்தம் பொருந்துவதால் எல்லவற்றையும் அறியும் தன்மை சித்தத்திற்கு ஏற்படும். ஆத்மாவாகிய கண்ணில் போடும் சித்தம் எனும் கண்ணாடியால் பொருள்கள் காணப்படுகின்றன. ஆத்மாவின் சைதன்யம்- அறிவாகிய ஒளி பட்டதும் சித்தம் அறிவுடையதாகி எல்லப் பொருள்களையும் அறிந்து ஆத்மாவிற்கு சொல்லும். ஆனால் நாம் மனம் எனும் சித்தமே எல்லாம் அறிகிறது என்ற மாயையில் இருகின்றோம்.                                                         4-24 தத ஸங்க யோயவாஸனா பிஸ்சித்ரமபி பரார்த்தம் ஸம்ஹத்ய காரித்வாத்.

முன்பிறவி வினைகளால் மனம் பிரிந்து இருந்தாலும் ஆத்மாவின் அருகில் இருந்து இன்பத்திற்கு பணி செய்யும். பணியாளர்களுக்கு பலவித எண்ணங்களிருந்தாலும் கண்காணிப்பாளரிடம் பணிந்து நடப்பது போல் ஆத்மாவிற்குப் பணிந்து இந்திரியங்கள் நடக்கின்றன.

4-25 விசேஷ தர்சின ஆத்மபாவ பாவனா நிவ்ருத்தி.

ஆத்மா தன்னைத்தானே விளங்கச் செய்யும் சுயம்பிரகாசம் உடையதால் விவேகத்தைக் கொண்டு ஆத்மாவையும், ஆத்மா மூலம் இந்திரியங்களையும் அறிவதால் ஆராயும் அறிவுடையார்க்கு சித்தம் வேறு, ஆத்மா வேறு என்பது புரியும்.

4-26 ததா விவேக நித்ரம் கைவல்ய ப்ராக பாவம் சித்தம்.

விவேகம் உடையவனுக்கு பிரபஞ்சம் முழுவதும் அனுபவிப்பதற்காகவே ஆன்மாவுக்கு உடல் முதலிய தத்துவங்கள் உள்ளன என்ற உண்மை புரிந்ததும் இதுகாறும் கண்ட உலகம் மாயயை என்பதும் புரியும். விவேகத்தோடு சேர்ந்த சித்தமாகிய மனத்திற்கு கைவல்யம் வந்து சேரும். ஆத்மாவைத்தவிர மற்றயாவையும் பொய்யானவை நிலையற்றவை என்று தோன்றினால் கைவல்ய நிலை உண்டாகும்.

4-27 தச்சித் ரோஷு ப்ரத்யயாந்த்ராணி ஸம்ஸ்கா ரேப்ய.

கைவல்யத்திற்கு தடையாக வரும் எண்ணங்கள் இவ்வுலக இன்பங்களில் அழுத்தி அந்த அனுபவங்கள் சூக்கும வடிவில் நம்முடன் படிந்திருக்கும் ஸம்ஸ்காரத்திலிருந்து வந்தவையாகும். வண்டி ஓட்டுபவன் உறங்கினாலும் பழகிய மாடு அனுபவத்தில் பழைய வழியில் போய் சேரவேண்டிய இடம் நிற்கும், அது போன்றே சித்தங்கள் உலக இன்பங்களை சிறந்ததாகக் கருதி அங்கேயே செல்லுவது கைவல்யத்திற்குத் தடையாக அமையும்.

4-28 ஹானமேஷாம் க்லேச வதுக்தம்.

உலக இன்பங்களை அனுபவித்துப் பழகிய சித்தம் அங்கேயே நாட்டம் கொள்வதால் அறியாமையும், அகங்காரமும் மேலும் வளரும். ஸம்ஸ்காரங்களை அதன் காரணங்களில் வெளிப்படுத்தி தியானம் செய்தால் அறியாமையும் அகங்காரமும் அழியும்.

4-29 ப்ரஸங்க்யானேஅப்ய குஸீதஸ்ய ஸர்வதா விவேக க்யாதேர் தர்மேக ஸமாதி

தத்துவங்களைச் சரியாக உணரும்போது அவைகள் தனக்கு யோக மார்க்கத்தில் கிடைக்கும் சித்திகளை துறந்தால் மெய்ஞானம் உண்டாகி தெளிந்த விவேகம் காரணமாக அது தர்மமேக சமாதி யை தரும்.

4-30 ததக் லேச கர்மநிவ்ருத் தி.

தர்மயோக சமாதியால் துன்பமும் கர்மமும் நீங்கும். யோக முயற்சிக்கு தடையில்லை என்பதால் அச்சமும், அதனால் துன்பமும், முன்பிறவி வினையும் அவனைத் தொடராது.

4-31 ததா ஸர்வாவரண மலாபபேதஸ்ய ஞானஸ்யாஅனந்த்யாஜ் ஜ்ஞேயமல்பம்.

ஞானம் மெய்ஞானமாகும்போது ஆத்மாவை மூடியிருக்கும் மறைப்பாகிய ஆவரணம் நீங்குவதால், மலங்களாகிய அழுக்குகளும் நீங்கி மெய்ஞானமானது பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்த அகண்ட பொருளாகக் காட்சி தரும். உலகப் பொருள்களின் அளவு அப்பொருள்களின் எல்லைவரை பரவி சிறிதாக தெரியும். ஞானவடிவம் ஆத்மாவின் முன்னே பிரபஞ்சம்கூட சிறிய பொருளே ஆகும்.

4-32 தத க்ருதார்த்தானாம் பரிணாமக்ரம ஸ்ப்திர் குணாணாம்.

அந்நிலையில் குணங்களால் உண்டாகும் விளைவுகள் முழுமையடைந்து விடுவதால் அவைகளிலிருந்து பரிணாமங்கள் தோன்றாது. அதாவது கைவல்ய நிலையை அடைந்தபின் பிறப்பும் இறப்பும் இல்லையாதலால் குணங்களின் பயன்களும் தேவையில்லை.

4-33 க்ஷணப்ரதியோகீ பரிணாமாபராந்த நிர் க்ராஹ்ய க்ரம.

க்ஷணம் ஒன்றை ஒன்று தொடர்ந்து வருவதால் அதை இறுதில் உணர முடியும். ஒரு எண்ணச் செயலை நாம் எண்ணிக்கொண்டிருந்தால் அதற்குள் இவ்வளவு காலம் கழிந்துவிட்டது என்பதை சில நேரம் வியக்கின்றோம் அல்லது வருந்துகிறோம். இறந்த கால நினைவு நழுவி விட்ட வியப்பால் நிகழ்காலத்தில் மனம் செல்லவில்லை. எதிர்காலம் என்ன என்பதும் தெரியாது. ஆனால் காலம் முதலிய தத்துவங்கள் சமாதி நிலைக்குப் போன யோகியின் மனத்தில் அழிந்துவிடும்.

4-34 புருஷாரத்த சூன்யானாம் குணானாம் ப்ரதிப்ரஸவ கைவல்யம் ஸ்வரூப ப்ரதி ஷ்டா வா சிதி சக்தேரிதி.

புருஷன் கர்மங்களுக்கு அப்பாலாகவும், குணத்தில் அடங்காதவனாகவும் ஆகும் உயர்ந்த நிலை கைவல்யம் ஆகும். அது அவனின் ஞானவடிவம்.

36 அல்லது 96 என்று கூறப்பட்ட தத்துவங்கள் உயிர் வாழ்வதற்கு துணையாக வந்தவைகளாகும். ஞானேந்திரியங்கள்- மெய், வாய், கண், மூக்கு, செவி , தர்மேந்திரியங்கள்- கால், கை, நாக்கு, நீர்வாய், மலவாய் மற்றும் பிராணன்கள் பத்தும் இந்தத் தத்துவக் கூட்டத்தில் சேர்ந்தவை. இவைகள் நம் வாழ்விற்குப் பயன் தரும் கருவிகள் ஆகும்.                                                                                                                                                           ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879734
All
26879734
Your IP: 44.213.80.174
2024-03-19 11:11

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg