குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
பாவம்! யார் கணக்கில் எழுதுவது?
Written by குருஸ்ரீ பகோராபாவம்! யார் கணக்கில் எழுதுவது?
ஒரு செல்வந்தர் யார் பசி என வந்தாலும் அவர் பசியை போக்கி வந்தார். ஒரு திருவிழாவன்று நிறைய பேருக்கு சமையல் செய்து வந்தனர். அப்போது வானில், ஒரு பாம்பை கவ்வி சென்ற கருடனின் பிடியில் தவித்த பாம்பு துன்பம் தாளாது விஷத்தை கக்க அது கீழே தயாராகும் சாம்பாரில் விழுந்தது. அதை யாரும் பார்க்கவில்லை. எல்லோருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. சப்பிட்ட அனைவரும் இறந்து போயினர். சாம்பாரில் எப்படி விஷம் கலந்தது என யாருக்கும் தெரிய வில்லை. காலம் கடந்தது. சொல்வந்தர் சில நாட்கள் துயரத்திலிருந்து விட்டு சிவன்மீது பாரத்தை போட்டுவிட்டு மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தார்.
இந்த அன்ன தானத்தில் எத்தனை உயிர்கள் இறந்துவிட்டன. இந்தப் பாவக்கணக்கை யார் மீது எழுவது என்ற சந்தேகம் சித்திர குப்தனுக்கு. இறைவனிடம் கேட்க இறைவன் நீ யாரை சந்தேகிக்கின்ராய் எனகேட்க, பாம்புதானே விஷத்தை கக்கியது…. என்றபோது அது கருடன் பிடியிலிருந்த அவஸ்தையால் கக்கியது அதற்கு கீழே இருப்பது பற்றி எப்படித்தெரியும் அது வேண்டாம் எனச் சொல்ல.. அப்படியானால் கருடன் மீது எழுதிவிடட்டுமா எனக் கேட்க... கருடன் தன் இறையை கொண்டு சென்றது. அது என்ன செய்யும் எனச் சொல்ல.. அப்படியானல் இந்த அன்னதானத்திற்கு மூலகாரணமான செல்வந்தரின்மீது எழுதி விடட்டுமா என்றான். அவர் பாவம். கொஞ்சநாள் பொருத்திரு, இந்தக் கணக்கை யார் மீது எழுதுவது என்பதை நான் உனக்கு காண்பிக்கின்றேன் என்றார் இறைவன்.
சொல்வந்தர் அன்ன தானத்தை தொடர்ந்து நடத்தி வர வெளியூர் வழிப்போக்கர்களெல்லாம் வந்து உண்டு மகிழ்ந்தனர். ஒரு நாள் வெளியூரிலிருந்து வந்த ஒரு கூட்டம் அன்னதானம் நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழியை அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டனர். அந்த அம்மாள் அன்னதானம் நடைபெறும் இடத்தை சொல்லி விட்டு, வீணாக ஒரு உண்மை வதந்தியை சொல்லி புலம்பிவிட்டாள். அதாவது சென்ற வருடம் நடந்த விருந்தில் உணவு அருந்திய அனைவரும் இறந்துவிட்டனர். நீங்கள் உணவு உண்டு திரும்பி வருவீர்களோ இல்லையோ என வதந்தியை கிளப்பிவிட்டாள். எப்போது நடந்த செயலின் காரண காரியங்களை சரியாக அறியாமல், நன்றாக நடைபெறும் ஒர் அன்னதானத்தை மாசுபடுத்தும் வகையில் குறை சொல்லிய அப்பெண்ணின்மீது அந்த பாவக்கணக்கை எழுதும் படி இறைவன் சித்திர குப்தனுக்கு ஆலோசனை வழங்கினார்.
உண்மை தெரியாமல் பழியை யார்மீதும் சுமத்தாதீர்கள். அது உங்கள் பாவக்கணக்காகி விடும்.
#####
ஓம்நமசிவய!
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
#####
பன்னிரண்டாம் பயிற்சி-சதான்த! (பற்கள் வழி உறிஞ்சும் நிலை)
நற்பயன்கள்: உடல் சூடு குறையும்.நுறையீரல் சுத்தமாகும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.மேல்தாடைப் பற்கள் கீழ்த்தாடைப் பற்களைக் கடித்தவாறு இருக்கட்டும். கடித்த நிலையில் உள்ள இருத்தாடைப் பற்களுக்கும் நடுவில் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ்ஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே மெதுவாக தடையில்லாமல் இழுக்கவும். காற்று உள்ளே போகும்போது ஒருவித குளிர்ந்த நிலையை நாக்கு உணரும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். முடிந்தவரைக்கும் காற்றை உள்ளே இழுக்கவும்.
3.சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.
#####
ஓம்நமசிவய!
வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!
#####
பதினோராம் பயிற்சி-க்ஷீத்தலி! (நாக்கு வளந்த நிலை)
நற்பயன்கள்: உடலுக்கு குளிர்சியை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம் குறையும். அல்சர் போன்ற குடல் புண்கள் குணமாகும். மனதை சுத்தப் படுத்தும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். படபடப்பு குறைந்து மன அமைதி உண்டாகும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.நாக்கை இருபுறமும் மடித்து மெதுவாக வெளியில் சிறிதளவு நீட்டி அழுத்திப் பிடிக்கவும். இருபுறம் மடிந்த நாக்கைச் சுற்றி உதடுகள் இருக்கட்டும். மடித்த நாக்கின் நடுவில் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ்ஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே இழுக்கவும். காற்று உள்ளே போகும்போது ஒருவித குளிர்ந்த நிலையை நாக்கு உணரும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். முடிந்தவரைக்கும் காற்றை உள்ளே இழுக்கவும்.
3.சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம். குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.
#####
ஓம்நமசிவய!
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!
#####
பத்தாம் பயிற்சி-க்ஷீத்கரி! (நாக்கு மடங்கிய நிலை)
நற்பயன்கள்: உடல் வெப்பம் தணியும். வாய்ப் புண்கள் ஆறும். பசியைக் கட்டுப்படுத்தலாம்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
3.நாக்கை பின்புறமாக மடித்து மடித்த நாக்குநுனியை மெதுவாக மேல் வரிசைப் பற்கள் பக்கம் அழுத்திப் பிடிக்கவும். நாக்கின் இரண்டு பக்கத்திலும் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ் சப்தத்துடன் (Hissing sound) காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்)
4.பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.
#####
ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
#####
ஒன்பதாம் பயிற்சி-உஜ்ஜயி!
இந்த ஆற்றல்மிக்க உஜ்ஜயிமூச்சை ஆங்கிலத்தில் Victorious Breath / Hissing Breath / Ocean sounding Breath) என்றழைப்பர்.
நற்பயன்கள்- மூச்சுக் காற்று வழியில் ஏற்படுத்தப்படும் தடை சுவாசிக்கும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும். ஆழ்ந்த மன அமைதியை ஏற்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீராக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். நுரையீரலுக்கு அதிக அளவில் பிராணவாயுவை கொண்டு சென்று சுறுசுறுப்புடன் இயங்க வகை செய்யும். தைராய்டு பிரச்சனைகள் குணமாகும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும்.
3.உள்ளே காற்றை சில நொடிகள் தங்கவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் தொண்டையில் ஸ்ஸ்… என்ற சப்தத்துடன் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். காற்று வெளியில் தாராளமாக வராமல் ஓர் தடையுடன் அனுப்பவேண்டும். அதாவது வெளியில் வரும் காற்றுடன் தொண்டையில் ஓர் சப்தம் எழுப்பவும். அது வெளிவரும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.
#####
ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#####
எட்டாம் பயிற்சி-அக்னிசார்! (வயிற்றை மடக்குதல்)
நற்பயன்கள்: ஜீரண உறுப்புகள் சீரடையும்
1.பத்மாசனம், சுகாசனம் ஆகிய ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்து கொள்ளவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வயிற்றின் மேல்பகுதி அடிப்பகுதி ஆகியவைகள் நெஞ்சிக்கூட்டின் உள்ளே செல்லும் மாறு செய்யவும்.
3.இந்த நிலையில் அப்படியே அடிவயிற்றை உள்ளே இழுத்தும் வெளியில் தள்ளியும் செய்யவும். சில நொடிகள் இருக்கவும். அதன்பிறகு மெதுவாக மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த பயிற்சியை 3/5 முறை செய்யவும்
#####
ஓம்நமசிவய!
நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.
#####
ஏழாம் பயிற்சி-உத்கீத்!
நற்பயன்கள்- அளவிடமுடியா ஓர் பேரானந்த, இன்பத்தை இதயத்தில் ஏற்படுத்தும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.இடது, வலது நாசித் துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். கைகள் சின் முத்திரையில் இருக்கவேண்டும். உடலில் உள்ள சக்கரங்களை நினைத்துக் கொள்ளவும்.
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக ஓங்கார நாதத்துடன் இடது, வலது நாசி வழியாக வெளியே அனுப்பவும். ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
4.காற்றை உள்ளே இழுக்கும்போதும் காற்றை வெளியே அனுப்பும் போதும் காலஅளவு ஒரே அளவாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 15 முதல் 30 தடவை செய்யவும்.
#####
ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#####
ஆறாம் பயிற்சி-பாராம்ரி! (தேனி சப்த நிலை)
நற்பயன்கள்- இந்த பயிற்சி சொல்லி அளவிடமுடியா ஓர் பேரானந்தம், சுவர்க்க இன்பத்தை இதயத்தில் ஏற்படுத்தும். உடல் செல்களை குளிர்சி அடையச் செய்து செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும். ஆள் காட்டி விரல் புருவத்தின் மேலும், மற்ற விரல்கள் கண்களின் மேலும், கட்டைவிரல் காது துவாரத்தின் மேலும் இருக்க வேண்டும்.
2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், காற்றை உள்ளே இழுக்கவும். ஆண் தேனீ ஏற்படுத்தும் ரீங்காரத்துடன் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். அப்போது வயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். ஒம் என்பதில் மனதில் ஒ என நினைந்து ம் என்ற ஒலியை மட்டும் வெளியே கேட்கும்படி உச்சரித்தால் வண்டின் ரீங்கார ஓசை கேட்கும்.
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது வயிறும் மார்பும் சுருங்க வேண்டும். வெளியில் வரும் காற்றுடன் தொண்டையில் ஓர் பெண் தேனீ ஏற்படுத்தும் இனிமையான ஹம்மிங் ரீங்காரத்துடன் சப்தம் எழுப்பி அனுப்பவேண்டும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.
#####
ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால் வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
#####
ஐந்தாம் பயிற்சி-சூரியனுலோமா!
நற்பயன்கள்: உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து ஜீரணசக்தியை அதிகரிக்கச் செய்யும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வலது நாசித் (சூரிய நாடி) துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற ஓங்காரச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் வலது நாசி வழியாக வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற ஓங்காரச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். காற்றை உள்ளே இழுக்கும்போதும், காற்றை வெளியே அனுப்பும்போது ‘ஓம்’ என்ற ஓங்காரச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். இதில் கும்பகம் இல்லை.
முதலில் தினமும் 9 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம். உணவு சப்பிட்ட உடன் / தொடர்ந்து இருபது நிமிடங்களுக்குச் மேல் செய்யக்கூடாது. இதயக் கோளாறு உள்ளவர்கள் செய்யக் கூடாது.
#####
ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
#####
நான்காம் பயிற்சி –சந்திரனுலோமா!
நற்பயன்கள்: நுரையீரல் சுத்தமாகும். வயிறு தசைகள் சீராகும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.இடது நாசித் (சந்திர நாடி) துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது நாசி வழியாக வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். காற்றை உள்ளே இழுக்கும்போதும், காற்றை வெளியே அனுப்பும்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். இதில் கும்பகம் இல்லை.
முதலில் தினமும் 9 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.
#####
More...
ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#####
மூன்றாம் பயிற்சி- அணுலோம்-விலோம்!
நற்பயன்கள்: நுரையீரல் சுத்தமாகும். வயிறு தசைகள் சீராகும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வலது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு இடப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே தங்கவிடாமல் இடைவெளியில்லாமல் இடப்புற நாசியை மூடிக்கொண்டு வலப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும்.
3.பின் இடது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு வலப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே தங்கவிடாமல் இடைவெளியில்லாமல் வலப்புற நாசியை மூடிக்கொண்டு இடப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும்.
4.உள்ளே காற்றை இழுப்பதற்கும் வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் ஒரே அளவாக இருக்கட்டும். இதை ஒரு நாடி சுத்தி எனக்கணக்கிட்டு குறைந்தது 9 முறை செய்ய ஆரம்பிக்கவும்.
5.சில நாட்களுக்குப்பின் காற்றை உள்ளே, வெளியேவிடும் பயிற்சியின் போது ‘ஓம்’ என்ற உச்சரிப்போடு செய்து பழகவும். இதை தினமும் காலை, நண்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு காலங்களில் செய்து பழகவும். பழக்கத்தில் 25 வரையும் அதற்கு மேலும் செய்யலாம்.
#####
ஓம்நமசிவய!
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை!
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்.
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!
#####
இரண்டாம் பயிற்சி-கபால்பட்டி!
நற்பயன்கள்- கபாலத்தை தூய்மை ஆக்கும். நுரையீரலுக்கு போதிய பிராண சக்தியை தரும். அதிக உடல் எடை கணிசமாக குறையும். எப்போதும் தூக்கம் / தூக்கமின்மை போன்ற தூக்க பிரச்சனைகள் சரியாகும். கிட்னி பிரச்சனைகள், அஜீரணம், தோல் வியாதிகள், இரத்த அழுத்த பிரச்சனைகள், பார்வை கோளாறுகள் நிவர்த்தியாகும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வயிற்றை உள்ளே இழுத்து காற்றை வெளியே தள்ள வேண்டும். மூச்சு வெளியே வரும் போது அடுத்து மூச்சு உள்ளே செல்லும். அந்த இயக்கம் தெரியாதவாறு மூச்சு வெளிவிடுதல் மட்டும் தெரியுமாறு தொடர்ந்து செய்யவும். தோள்பட்டை குலுங்ககூடாது. தலை இடுப்பு ஆடக்கூடாது.
முதலில் தினமும் 120 முறை 1 நிமிடத்தில் செய்ய பழகவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.
#####
ஓம்நமசிவய!
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!
#####
முதல் பயிற்சி-பஸ்த்ரிகா!
நற்பயன்கள்- நுரையீரல்கள், இரத்த நாளங்கள், இருதயம், மூளை, தசைகள் சிறந்து இயங்க உதவுகின்றது. மனதை ஒரு முகப்படுத்தும் தன்மையை அதிகரிக்கும். தலைவலி இரத்த அழுத்தம் போன்றவை கட்டுப்படும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும். கைகள் ஞான / சின் முத்திரையில் இருக்கட்டும்.
2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும்.
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். இதில் கும்பகம் இல்லை.
முதலில் தினமும் 9 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.
#####
ஓம்நமசிவய!
தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.
#####
தியானம்!
ஜபம்! தியானம்! ‘ஓம்’ சிறந்தது!
மனதிற்கு அமைதியையும் ஓய்வையும் தர நமது மகான்களால் உறுவாக்கப்பட்ட பயிற்சி முறையே தியானம்.
தியானம் செய்ய இயலாமல் போகும் உயிர்கள் மனதை ஜபம் செய்வதில் ஈடுபடுத்தவும். ஜபம் செய்யும்போது விருப்பமான இறையின் நாமத்தை சொல்லவும். அப்படி நாபஜபம் செய்து கொண்டே இஷ்ட தெய்வத்தை தியானம் செய்யுங்கள். தொடர்ந்து நாம ஜபம் செய்து கொண்டிருந்தாலே அந்த உயிருக்கு இறைவனின் காட்சி கிடைக்கும். மேலும் நாமஜபம் மனதை ஒருமுகப்படுத்த வல்லது. அப்படி ஒரு முகப்படுத்தி நாமஜபம் செய்வதால் அந்த இறையின் கருணைக் கிட்டும். எனவே தியானம் கைவரவில்லை என்று மனம் தளராமல் காலத்தை வீணாக்காமல் மனதின் ஆழத்திலிருந்து நாபஜபம் செய்து கொண்டிருத்தலே உயிர்க்குச் சிறப்பு.
வாழ்க்கைச் சிக்கல்களைச் சந்திக்கும்போது அதைத் தீர்க்க சுலபமான வழி இறைநாமத்தை மௌனமாக ஜபித்தலே. ஒரு நாளைக்கு தொடர்ந்து மௌனமாக இருபத்தைந்தாயிரம் வரை நாமஜபம் செய்து வந்தால் மனதை கண்டிப்பாக ஓர் நிலையில் நிறுத்த முடியும். திருநாம ஜபங்களைச் செய்து கொண்டிருந்தால் மனதில் உள்ள உலகப் பற்றுகள் அறுந்து ஆன்மீக உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.
தொடர் நாம ஜபம் அந்த உயிரின் உடம்பிற்குள் குமிழிகள் போல் ஆண்மீக உணர்வுகள் கிளம்புவதை அந்த உயிர் உணரமுடியும். கடுமையான முயற்சியாக சோம்பேறித்தனத்தை கைவிட்டு குறிப்பிட்ட நேரங்களில் நாமஜபம் செய்து தியானத்தில் ஈடுபட பயிற்சிக்க வேண்டும். மனம் வேறு ஓரிடத்தில் இருக்க எத்தனை ஆயிரம் நாமஜபம் செய்தும் பயனில்லை. ஜபம் செய்யும்போது மனமும் அதில் லயிக்க வேண்டும்.
ஒரு விளக்கின் சுடற் எரியும்போது அதுவாக அசைவதில்லை. சூழ்ந்துள்ள காற்றுதான் சுடரை அசையச் செய்கின்றது. அதுபோல மனம் நீர், காற்று, ஆகாயம் என்பதற்கு உட்பட்டதாக இருந்தாலும் அதுவாக அசைவதில்லை. அலை பாய்வதுமில்லை. அந்த மனதில் தோன்றும் ஆசைகளால்தான் மனம் அலைக்கழிக்கப் படுகின்றது. உயிர்களிடத்து உள்ள ஆசைகளும் பாவனைகளுமே மனதை அலைக்கழித்து அமைதியற்றதாக்குகின்றது.
ஜபம் செய்யும்போது இறை நாமத்தை உயிர்கள் முயன்ற அளவிற்கு பக்தியுடன், நேர்மையுடன், ஆத்ம சமர்ப்பணத்துடன் செய்து வர வேண்டும். மனம் அலைந்து திரிந்தாலும்கூட ஜபம் செய்வதை விடாமல் தொடர்ந்து செய்யவும். மனம் என்ற முரட்டுக் குதிரையை அடக்க தொடர்ந்து ஜபம் செய்தலே உகந்தது. தொடர்ந்து ஜபம் செய்யும்போது ஆனந்தம் அல்லது சோர்வு ஏற்படக்கூடும்.
ஆனந்தம் ஏற்படும்போது அதில் மூழ்கிவிடக்கூடாது. அதிலிருந்து வெளியேறிச் சென்று தொடர்ந்து ஜபம் செய்யவேண்டும். ஆனந்தம் ஆன்மீக சாதனைக்கு இடையூறு விளவிப்பதாகும். சோர்வு என்பது மூளை களைத்து விடுவதாலும் சோம்பலினாலும் ஏற்படலாம். மூளை களைத்து விட்டால் ஜபத்தை நிறுத்தி விடவேண்டும்.. மூளை களைத்திருந்தால் போலிக் காட்சிகள் தோன்றும். அதில் மயங்கினால் பைத்திய நிலையாகிவிடும். சோம்பல் காரணமாக இருந்தால் அதிலிருந்து விடுபட்டு தொடர்ந்து ஜபத்தில் ஈடுபடவேண்டும்.
அஞ்ஞானம் நீங்க அந்த உயிர் பிரமத்தை அனுபூதியில்-பிரமாணங்களைக் கொண்ட அறிவினால் உணரவேண்டும். வேதாந்த தத்துவங்களை ஆன்மீகத்தை உணர உயிர்கள் ‘ஓம்’ என்ற பிரபஞ்ச மந்திரச் சொல்லை உச்சரிப்பது போதுமானது. மனதை ஜபம் செய்து ஒருமுகப்படுத்தியபின் தியானம் தொடரலாம்.
ஜபத்தின்போது 108 / 54 மணிகள் கொண்ட ருத்திராட்ச மாலையை பயன்படுத்தவும். மாலை இணையும் இடத்தில் ஒரு பெரிய மணி கோர்க்கப்பட்டிருக்கும். இதை மேரு என்பர். ஜபத்தின்போது மேருவில் தொடங்கி எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டும்.
தியானத்தை தொடர்ந்து பழகுவதன்மூலம் மன இறுக்கம், படபடப்பு, மற்றும் கோபம் போன்றவை விலகி ஞாபகத்திறன், மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை, மன அமைதி கிட்டும்.
தியானம் செய்யும் இடத்தை ஒரு கோவில் போல் அந்த அறையை சுத்தமாகப் பேணி பாதுகாக்க வேண்டும். அறைக்குள் தியானம் பற்றி தெரியாத / எதிர் மறை எண்ணங்கள் கொண்ட நபர்களை அனுமதிக்கக்கூடாது. குளித்த பின்னர் அறைக்குள் நுழைந்து தியானம் செய்ய வேண்டும். அந்த அறையில் குலதெய்வம், பிடித்த இறைவனின் படம் மற்றும் சிவபெருமானின் படம் இருப்பது நல்லது. சாம்பிராணி தூபம் போடவும். பக்தி புத்தகங்களை வைத்து நேரம் கிடைக்கும்போது படிக்கவும். அந்த அறை அதீத சக்தி நிறைந்த இடமாக மாறி அமைதி தவழும் இடமாக இருக்கும். மனம் சலனமடையும்போது அந்த அறைக்குள் சென்று அமர்ந்தால் மனதிற்கு சாந்தி கிட்டும்.
#####
தியானம்-1
பத்மாசனம் / வஜ்ர ஆசனத்தில் கண்களை மூடியபடி கைகளில் சின் முத்திரை வைத்து முதுகுதண்டு நிமிர்ந்து நேராக இருக்கும்படி அமர்ந்துகொண்டு நாசிகளின் வழி ஆழமாக ஆனால் நிதானமாக காற்றை இழுத்து வெளியேற்றுங்கள். அப்போது உங்கள் கவனமெல்லாம் மூச்சின்மீது இருக்கட்டும். ஆரம்பத்தில் மூச்சை வெளியே விடும்போது மூச்சை எண்ணுங்கள். சில நாட்கள கழிந்தபின் மூச்சைமட்டும் கவனியுங்கள். இப்போது வேறு எண்ணங்கள் தோன்றினாலும் அனுமதியுங்கள். இந்த பயிற்சி முடிந்தவுடன் கண்களை உடனே திறக்காது சிறிது நேரம் கண்களை மூடியபடி அமர்ந்திருந்து பிறகு மெல்ல மெல்ல கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்.
#####
தியானம்-2
பத்மாசனம் / வஜ்ர ஆசனத்தில் கண்களை மூடியபடி கைகளில் சின் முத்திரை வைத்து முதுகுதண்டு நிமிர்ந்து நேராக இருக்கும்படி அமர்ந்துகொள்ளுங்கள். சுற்றுப்புற சூழல் ஆமையாக ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உங்களைச் சுற்றி எதுவும் இல்லை என மனதில் நினைத்துக் கொள்ளவும். அந்த ஏகாந்த இடத்தில் நீங்கள் மட்டும்தான் இருக்கின்றீர்கள் என நினைவு கொள்ளுங்கள். உங்கள் நினைவை இதயத்திற்கு கொண்டு சென்று அது தாமரை வடிவாய் இருப்பதாக நினையுங்கள். உங்களுக்கு பிடித்தமான இறைவன் (சிவன்) அங்கு தியான நிலையில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பின் அவரை நேரில் பார்ப்பது போன்று நினைவு கொண்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அமர்ந்திருக்கவும். பின்னர் அவரது நாமத்தை (ஓம் நமசிவய நம / ஓம் நாராயாணாய நம) ஜபிக்கவும். இதற்கு சிவபெருமானே / நாராயணனே நான் உன்னை சரணடைகின்றேன் என்னைக் காப்பாயாக என அர்த்தம். தொடர்ந்து 108 முறை நாம ஜபம் செய்யுங்கள். ருத்ர மாலையை வைத்து 108 கணகிடலாம். ருத்ர மாலையை மேலிருந்து கீழ்நோக்கி உருட்ட வேண்டும். ருத்ர மாலையில் இருக்கும் மணி மேரு எனப்படும். அதில் ஆரம்பித்து மீண்டும் மேரு வந்தபோது (108) ஜபத்தை முடித்துக் கொள்ளலாம்.
தியானம் பழகும்போது பல்வேறு எண்ண அலைகள் தோன்றும். அவைகளை வெறுக்க வேண்டாம். அது நல்லது / கெட்டதாயிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். தியானம் தொடர்ந்து பழகப் பழக வந்த எண்ணங்கள் எல்லாம் மெல்ல மெல்ல குறைந்து மனதை விட்டு அகன்று விடும்.
#####
தியானம்-3
கண்களை மூடி அமர்ந்து மூச்சை ஒரு தரம் நன்கு இழுத்து விடவும். மனதை உங்களின் இரு புருவங்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தி ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உச்சரியுங்கள். மூச்சை உள்ளே இழுக்கும்போதும், வெளியேற்றும்போதும் ஓம் என்று மனதிற்குள் உச்சரியுங்கள். சுமார் 10 / 15 நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள்.
இதனால் மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
மேலும் தியானம் செய்ய விரும்பும் அன்பர்கள் குருஸ்ரீயின் naavaapalanigotrust.com இணைய தளத்தில் பிறயோகங்கள்- பிரிவில் தியானயோகம் பார்த்து பயன் பெறுக- அன்புடன் குருஸ்ரீபகோரா.
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.