gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
திங்கட்கிழமை, 03 January 2022 09:54

கபால்பட்டி!

Written by

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை!
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்.
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

#####

இரண்டாம் பயிற்சி-கபால்பட்டி!

நற்பயன்கள்- கபாலத்தை தூய்மை ஆக்கும். நுரையீரலுக்கு போதிய பிராண சக்தியை தரும். அதிக உடல் எடை கணிசமாக குறையும். எப்போதும் தூக்கம் / தூக்கமின்மை போன்ற தூக்க பிரச்சனைகள் சரியாகும். கிட்னி பிரச்சனைகள், அஜீரணம், தோல் வியாதிகள், இரத்த அழுத்த பிரச்சனைகள், பார்வை கோளாறுகள் நிவர்த்தியாகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.வயிற்றை உள்ளே இழுத்து காற்றை வெளியே தள்ள வேண்டும். மூச்சு வெளியே வரும் போது அடுத்து மூச்சு உள்ளே செல்லும். அந்த இயக்கம் தெரியாதவாறு மூச்சு வெளிவிடுதல் மட்டும் தெரியுமாறு தொடர்ந்து செய்யவும். தோள்பட்டை குலுங்ககூடாது. தலை இடுப்பு ஆடக்கூடாது.

முதலில் தினமும் 120 முறை 1 நிமிடத்தில் செய்ய பழகவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

திங்கட்கிழமை, 03 January 2022 09:52

பஸ்த்ரிகா!

Written by

ஓம்நமசிவய!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

#####

முதல் பயிற்சி-பஸ்த்ரிகா!

நற்பயன்கள்- நுரையீரல்கள், இரத்த நாளங்கள், இருதயம், மூளை, தசைகள் சிறந்து இயங்க உதவுகின்றது. மனதை ஒரு முகப்படுத்தும் தன்மையை அதிகரிக்கும். தலைவலி இரத்த அழுத்தம் போன்றவை கட்டுப்படும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும். கைகள் ஞான / சின் முத்திரையில் இருக்கட்டும்.

2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும்.

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். இதில் கும்பகம் இல்லை.

முதலில் தினமும் 9 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

சனிக்கிழமை, 01 January 2022 10:57

தியானம்!

Written by

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

#####

தியானம்!

ஜபம்! தியானம்! ‘ஓம்’ சிறந்தது!

மனதிற்கு அமைதியையும் ஓய்வையும் தர நமது மகான்களால் உறுவாக்கப்பட்ட பயிற்சி முறையே தியானம்.

தியானம் செய்ய இயலாமல் போகும் உயிர்கள் மனதை ஜபம் செய்வதில் ஈடுபடுத்தவும். ஜபம் செய்யும்போது விருப்பமான இறையின் நாமத்தை சொல்லவும். அப்படி நாபஜபம் செய்து கொண்டே இஷ்ட தெய்வத்தை தியானம் செய்யுங்கள். தொடர்ந்து நாம ஜபம் செய்து கொண்டிருந்தாலே அந்த உயிருக்கு இறைவனின் காட்சி கிடைக்கும். மேலும் நாமஜபம் மனதை ஒருமுகப்படுத்த வல்லது. அப்படி ஒரு முகப்படுத்தி நாமஜபம் செய்வதால் அந்த இறையின் கருணைக் கிட்டும். எனவே தியானம் கைவரவில்லை என்று மனம் தளராமல் காலத்தை வீணாக்காமல் மனதின் ஆழத்திலிருந்து நாபஜபம் செய்து கொண்டிருத்தலே உயிர்க்குச் சிறப்பு.

வாழ்க்கைச் சிக்கல்களைச் சந்திக்கும்போது அதைத் தீர்க்க சுலபமான வழி இறைநாமத்தை மௌனமாக ஜபித்தலே. ஒரு நாளைக்கு தொடர்ந்து மௌனமாக இருபத்தைந்தாயிரம் வரை நாமஜபம் செய்து வந்தால் மனதை கண்டிப்பாக ஓர் நிலையில் நிறுத்த முடியும். திருநாம ஜபங்களைச் செய்து கொண்டிருந்தால் மனதில் உள்ள உலகப் பற்றுகள் அறுந்து ஆன்மீக உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.

தொடர் நாம ஜபம் அந்த உயிரின் உடம்பிற்குள் குமிழிகள் போல் ஆண்மீக உணர்வுகள் கிளம்புவதை அந்த உயிர் உணரமுடியும். கடுமையான முயற்சியாக சோம்பேறித்தனத்தை கைவிட்டு குறிப்பிட்ட நேரங்களில் நாமஜபம் செய்து தியானத்தில் ஈடுபட பயிற்சிக்க வேண்டும். மனம் வேறு ஓரிடத்தில் இருக்க எத்தனை ஆயிரம் நாமஜபம் செய்தும் பயனில்லை. ஜபம் செய்யும்போது மனமும் அதில் லயிக்க வேண்டும்.

ஒரு விளக்கின் சுடற் எரியும்போது அதுவாக அசைவதில்லை. சூழ்ந்துள்ள காற்றுதான் சுடரை அசையச் செய்கின்றது. அதுபோல மனம் நீர், காற்று, ஆகாயம் என்பதற்கு உட்பட்டதாக இருந்தாலும் அதுவாக அசைவதில்லை. அலை பாய்வதுமில்லை. அந்த மனதில் தோன்றும் ஆசைகளால்தான் மனம் அலைக்கழிக்கப் படுகின்றது. உயிர்களிடத்து உள்ள ஆசைகளும் பாவனைகளுமே மனதை அலைக்கழித்து அமைதியற்றதாக்குகின்றது.

ஜபம் செய்யும்போது இறை நாமத்தை உயிர்கள் முயன்ற அளவிற்கு பக்தியுடன், நேர்மையுடன், ஆத்ம சமர்ப்பணத்துடன் செய்து வர வேண்டும். மனம் அலைந்து திரிந்தாலும்கூட ஜபம் செய்வதை விடாமல் தொடர்ந்து செய்யவும். மனம் என்ற முரட்டுக் குதிரையை அடக்க தொடர்ந்து ஜபம் செய்தலே உகந்தது. தொடர்ந்து ஜபம் செய்யும்போது ஆனந்தம் அல்லது சோர்வு ஏற்படக்கூடும்.

ஆனந்தம் ஏற்படும்போது அதில் மூழ்கிவிடக்கூடாது. அதிலிருந்து வெளியேறிச் சென்று தொடர்ந்து ஜபம் செய்யவேண்டும். ஆனந்தம் ஆன்மீக சாதனைக்கு இடையூறு விளவிப்பதாகும். சோர்வு என்பது மூளை களைத்து விடுவதாலும் சோம்பலினாலும் ஏற்படலாம். மூளை களைத்து விட்டால் ஜபத்தை நிறுத்தி விடவேண்டும்.. மூளை களைத்திருந்தால் போலிக் காட்சிகள் தோன்றும். அதில் மயங்கினால் பைத்திய நிலையாகிவிடும். சோம்பல் காரணமாக இருந்தால் அதிலிருந்து விடுபட்டு தொடர்ந்து ஜபத்தில் ஈடுபடவேண்டும்.

அஞ்ஞானம் நீங்க அந்த உயிர் பிரமத்தை அனுபூதியில்-பிரமாணங்களைக் கொண்ட அறிவினால் உணரவேண்டும். வேதாந்த தத்துவங்களை ஆன்மீகத்தை உணர உயிர்கள் ‘ஓம்’ என்ற பிரபஞ்ச மந்திரச் சொல்லை உச்சரிப்பது போதுமானது. மனதை ஜபம் செய்து ஒருமுகப்படுத்தியபின் தியானம் தொடரலாம்.

ஜபத்தின்போது 108 / 54 மணிகள் கொண்ட ருத்திராட்ச மாலையை பயன்படுத்தவும். மாலை இணையும் இடத்தில் ஒரு பெரிய மணி கோர்க்கப்பட்டிருக்கும். இதை மேரு என்பர். ஜபத்தின்போது மேருவில் தொடங்கி எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டும்.

தியானத்தை தொடர்ந்து பழகுவதன்மூலம் மன இறுக்கம், படபடப்பு, மற்றும் கோபம் போன்றவை விலகி ஞாபகத்திறன், மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை, மன அமைதி கிட்டும்.

தியானம் செய்யும் இடத்தை ஒரு கோவில் போல் அந்த அறையை சுத்தமாகப் பேணி பாதுகாக்க வேண்டும். அறைக்குள் தியானம் பற்றி தெரியாத / எதிர் மறை எண்ணங்கள் கொண்ட நபர்களை அனுமதிக்கக்கூடாது. குளித்த பின்னர் அறைக்குள் நுழைந்து தியானம் செய்ய வேண்டும். அந்த அறையில் குலதெய்வம், பிடித்த இறைவனின் படம் மற்றும் சிவபெருமானின் படம் இருப்பது நல்லது. சாம்பிராணி தூபம் போடவும். பக்தி புத்தகங்களை வைத்து நேரம் கிடைக்கும்போது படிக்கவும். அந்த அறை அதீத சக்தி நிறைந்த இடமாக மாறி அமைதி தவழும் இடமாக இருக்கும். மனம் சலனமடையும்போது அந்த அறைக்குள் சென்று அமர்ந்தால் மனதிற்கு சாந்தி கிட்டும்.

#####

தியானம்-1

பத்மாசனம் / வஜ்ர ஆசனத்தில் கண்களை மூடியபடி கைகளில் சின் முத்திரை வைத்து முதுகுதண்டு நிமிர்ந்து நேராக இருக்கும்படி அமர்ந்துகொண்டு நாசிகளின் வழி ஆழமாக ஆனால் நிதானமாக காற்றை இழுத்து வெளியேற்றுங்கள். அப்போது உங்கள் கவனமெல்லாம் மூச்சின்மீது இருக்கட்டும். ஆரம்பத்தில் மூச்சை வெளியே விடும்போது மூச்சை எண்ணுங்கள். சில நாட்கள கழிந்தபின் மூச்சைமட்டும் கவனியுங்கள். இப்போது வேறு எண்ணங்கள் தோன்றினாலும் அனுமதியுங்கள். இந்த பயிற்சி முடிந்தவுடன் கண்களை உடனே திறக்காது சிறிது நேரம் கண்களை மூடியபடி அமர்ந்திருந்து பிறகு மெல்ல மெல்ல கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்.

#####

தியானம்-2

பத்மாசனம் / வஜ்ர ஆசனத்தில் கண்களை மூடியபடி கைகளில் சின் முத்திரை வைத்து முதுகுதண்டு நிமிர்ந்து நேராக இருக்கும்படி அமர்ந்துகொள்ளுங்கள். சுற்றுப்புற சூழல் ஆமையாக ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உங்களைச் சுற்றி எதுவும் இல்லை என மனதில் நினைத்துக் கொள்ளவும். அந்த ஏகாந்த இடத்தில் நீங்கள் மட்டும்தான் இருக்கின்றீர்கள் என நினைவு கொள்ளுங்கள். உங்கள் நினைவை இதயத்திற்கு கொண்டு சென்று அது தாமரை வடிவாய் இருப்பதாக நினையுங்கள். உங்களுக்கு பிடித்தமான இறைவன் (சிவன்) அங்கு தியான நிலையில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பின் அவரை நேரில் பார்ப்பது போன்று நினைவு கொண்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அமர்ந்திருக்கவும். பின்னர் அவரது நாமத்தை (ஓம் நமசிவய நம / ஓம் நாராயாணாய நம) ஜபிக்கவும். இதற்கு சிவபெருமானே / நாராயணனே நான் உன்னை சரணடைகின்றேன் என்னைக் காப்பாயாக என அர்த்தம். தொடர்ந்து 108 முறை நாம ஜபம் செய்யுங்கள். ருத்ர மாலையை வைத்து 108 கணகிடலாம். ருத்ர மாலையை மேலிருந்து கீழ்நோக்கி உருட்ட வேண்டும். ருத்ர மாலையில் இருக்கும் மணி மேரு எனப்படும். அதில் ஆரம்பித்து மீண்டும் மேரு வந்தபோது (108) ஜபத்தை முடித்துக் கொள்ளலாம்.

தியானம் பழகும்போது பல்வேறு எண்ண அலைகள் தோன்றும். அவைகளை வெறுக்க வேண்டாம். அது நல்லது / கெட்டதாயிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். தியானம் தொடர்ந்து பழகப் பழக வந்த எண்ணங்கள் எல்லாம் மெல்ல மெல்ல குறைந்து மனதை விட்டு அகன்று விடும்.

#####

தியானம்-3

கண்களை மூடி அமர்ந்து மூச்சை ஒரு தரம் நன்கு இழுத்து விடவும். மனதை உங்களின் இரு புருவங்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தி ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உச்சரியுங்கள். மூச்சை உள்ளே இழுக்கும்போதும், வெளியேற்றும்போதும் ஓம் என்று மனதிற்குள் உச்சரியுங்கள். சுமார் 10 / 15 நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள்.

இதனால் மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

மேலும் தியானம் செய்ய விரும்பும் அன்பர்கள் குருஸ்ரீயின் naavaapalanigotrust.com இணைய தளத்தில் பிறயோகங்கள்- பிரிவில் தியானயோகம் பார்த்து பயன் பெறுக- அன்புடன் குருஸ்ரீபகோரா.

 #####

சனிக்கிழமை, 01 January 2022 10:44

பிரணாயாமம்!

Written by

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

#####

பிரணாயாமம்!

பிரணாயாமம் பழகும் முன்னர் இமயம், நியமம், ஆசனம் போன்றவற்றில் முடிந்தவரை சொல்லப்பட்ட நியமங்களை கடைபிடித்திருக்க வேண்டும். அதன் பின்னரே பிரணாயாமப் பயிற்சியை ஆரம்பிக்கவும். பதினெட்டு வயது பூர்த்தி அடைந்தவர்களே பிரணாயாமம் செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள். அப்போதுதான் அவர்களது நுரையீரல் இந்த பயிற்சிகளை தாங்கும் நிலையை அடைகின்றது.

பிரணாயாமம் தொடர்ந்து காலை 0530-0630, மதியம் 1230-1330, மாலை 1730-1830 இரவு 2330-0030 என்ற அந்தி சந்தி நேரங்களில் சுமார் 80 பிரணாயமங்கள் வீதம் செய்தால் மொத்தம் 320 பிரணாயாமங்கள் ஒரு நாளைக்கு. குரு ஆசியுடன் இப்படி தொடர்ந்து செய்வதால் வாசியைக் கட்டுப்படுத்தி பல சாதனைகள் செய்யலாம் என்பது சித்தர்கள் கண்டறிந்த முறையாகும்.

பிரணயாமத்தை அதிகாலையில் செய்ய வெறும் வயிற்றுடன் இருப்பது முழு பயனைத் தரும். நா வரட்சி தந்தால் சிறிதளவு நீர் அருந்தலாம். உணவு உண்டபின் பயிற்சியை ஆரம்பிக்கக்கூடாது. உணவு உட்கொண்டால் சுமார் மூன்று மணி நேரம் கழித்து ஆரம்பிக்கலாம். பயிற்சியை குளிர் சாதன அறைக்குள் செய்யக் கூடாது. பயிற்சி முடிந்த ஒரு நாழிகை கழிந்த பின்னரே குளிக்க வேண்டும். அதிக அளவு சுடு நீரில் குளிக்க கூடாது. குளிர்ந்த நீர் சிறப்பு.

அந்தி சந்தி நேரங்களில் பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்க முதலில் குருவிடம் தீட்சை பெற வேண்டும். அப்போதுதான் முழுமையான சித்தி கிட்டும். வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் மானசீகமாக கணபதி மற்றும் யோக தட்சிணாமூர்த்தியை மனதார குருவாக நினைந்து ஏற்று வழிபட்டு சிவன் கோவிலில் வழிபட்டு உண்டியலில் தட்சணை போட்டு பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்கவும். குருவின் ஆசியில்லாத பிரணாயாமத்தின் பலன் குறைவாகவே இருக்கும்.பிராணன்- ஆகாசம்- பிராண சக்தி -பிரணாயாமம்

சித்து பிராணான்-இடகலை-பிங்கலை-நரம்பு ஓட்டங்கள் -ஞானேந்திரிய நரம்புகள் -கர்மேந்திரிய நரம்புகள் சுழுமுனை-“குண்டலினிக் கமலம்” -சுழுமுனை வழி செல்லும் இதை சித்து பிராணன் எனலாம்- -இயல்பாக உண்டாவதைவிட மூச்சை அடக்கும்போது பிராணன்-சித்து பிராணனைக் கட்டுப்படுத்துதல் (பயிற்சிகள்).

பிரணாயாமம் என்பது பூரகம், கும்பகம், ரேசகம் என்ற மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. பிரணாயாமம் பயிற்சியை ஆரம்பிக்குமுன், மூச்சை இழு 2, 3, 4 என மனதில் சொல்லிகொண்டு மூச்சை உள்ளே இழுங்கள். பின்னர் அடக்கு 2, 3, 4 என மனதில் சொல்லியவாறு மூச்சை அடக்கிப் பழகுங்கள். இந்த ஆரம்பநிலைப் பயிற்சியில் 1:4:2 என்ற விகிதம் பின் பற்றப்படவில்லை. ஆரம்ப நிலைப் பயிற்சி முடிந்தபின் 1:4:2 என்ற விகிதாச்சாரத்தை பயன்படுத்தி பயிற்சிகளை செய்யவும்.

ஒருநாளைக்கு ஒரு மனிதனுக்கு 21,600 சுவாசம் என்பர்.
ஒருமணிக்கு-21600/24 = 900 சுவாசம்.
ஒரு நிமிடத்திற்கு-900/60 = 15 சுவாசம்.

சராசரியான மனிதர் அனைவருக்கும் நான்கு விநாடிக்கு 1 சுவாசம். இப்படிச் செய்வதால் 120 ஆண்டுகள் வாழ்க்கை வழலாம். வாழ்நாளை அதிகப்படுத்த சுவாசித்தின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் அதற்காண பயிற்சியே பிரணாயாமம்.

#####

ஓம் கம் கணபதியே நம
ஓம் ____________ குலதெய்வமே நம
ஓம் குருதட்சிணாமூர்த்தியே, __________சித்தரே நம (உங்கள் நட்சத்திரத்திற்குரிய சித்தர்)
ஸ்ரீ தண்டஹி நம! ஓம் கிலீம் லிம் ஹிரீம்

ஓம் ஹ்ரீம் கணபதியே நம!
இடது கை மிருது-மான் முத்தரையுடனும் வலது கை மிருது முத்திரையில் ஆள்காட்டி விரலுடன் நடு விரலைச் சேர்த்துத்தவண்ணம் இடது நாசியை மூடியவண்ணம் ஓம் ஹ்ரீம் கணபதியே நம! 18 முறை உரு கொடுக்கவும். பின்

ஓம் சர ஹணபவ நம!
இடது கை மிருது-மான் முத்தரையுடனும் வலது கை மிருது முத்திரையில் ஆள்காட்டி விரலுடன் நடு விரலைச் சேர்த்துத்தவண்ணம் வலது நாசியை மூடியவண்ணம் ஓம் சர ஹணபவ நம! 18 முறை உரு கொடுக்கவும். பின்

ஓம் சிவய நம!
ஓம் வசிய நம!
ஓம் யவசி நம!
ஓம் யசிவ நம!
ஓம் வயசி நம!

ஒன்பது முறை உரு கொடுக்கவும்.

காலனில்லை! கல்லப்பா தேகமது!
ஓங்….ரீங்….அங்….உங்….
(பதினாறு உருகொடுத்தால் கணபதி பிரகாசிப்பார்.)
சுழுமுனையில் அவரைப் பார்த்து நுண்மையுடன் கீழ்வுள்ள
மந்திரம் ஜபித்தால் பிரமந்திரி சனமுமாம்.

ஓம் நமசி வய!

முழு மனதுடன் கீழேயுள்ள ஐந்தெழுத்து மந்திரம் ஓதி
திருநீறு நெற்றியில் தரிக்கவும்- இதயத்தில் நிலையில்லாத
தூல சடலம் நிலைக்கும் ஆதாரம் சித்தியாகும்.

ஓம் ந ம சி வ ய!
ஓம் நம சிவ ய!
ஓம் நமசி வ ய!
நமசிவயநம! வய நமசி! வய நமசி!
நமசிவய சிவய நம! சிவய நம!
சிவ நம! சிவ நம! நமசிவய!
நமசிவயநம!
ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்!
ஓம் ந ம சி வ ய ஓம்

கலையறிந்து அந்தந்த நிலையில் இருந்து பக்தியுடன் ஆதார சூட்சம் சித்தி.
கண்ணடங்கி விண்ணென்றூணி நிலையறிந்து பிராணாயஞ் செய்தால்
காலனில்லை! கல்லப்பா தேகமது! வியாதி காணாதோடும்.

ஓம் கிலி அங்…
அங் கிலி நங்…
வங் கிலி சிங்…
சிங் கிலி வங்…
வங் கிலி யங்…
அங் கிலி மங்…
வங் கிலி சிங்…
அங் கிலி சிங்…
அங் கிலி மங்…
மங் கிலி ரீங்…
ரீங் கிலி ஓம்!

சோதியுடன் சுழுமுனையில் மணக்கண் சார்த்தி விபூதி தரித்துக் கொள்.

ஓம் கிலி ரீங்…
ரீங் கிலி மங்…
மங் கிலி சிங்…
மங் கிலிங்…
சிங் கிலி மங்…
வங் கிலி சிங்…
சிங் கிலி மங்…
மங் கிலி நங்…
நங் கிலி யங்…
மங் கிலி ஓம்!

மூலாதாரத்தில் கணபதியையும் பிரமந்திரியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் உயர நகர்த்தி
சுவாதிஷ்டானத்தில் பிரம்மாவையும் சரஸ்வதியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
மணிபுரகத்தில் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
அநாகதத்தில் ருத்திரனையும் பார்வதியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
விசுத்தத்தில் மகேஸ்வரனையும் மகேஸ்வரியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
ஆக்ஞேயத்தில் சதாசிவனையும் மனோன்மணியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
ஸஹஸ்ராரமில் உள்ள ஒன்றுசேர்ந்த ஐக்கியமாகிய
பரமசிவன்,பராசக்தியை வழிபடு.

பின் பிராணாயாமம் செய்க.

காலனில்லை.கல்தேகம்.
பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்கவும்.

#####

பயிற்சி- உள் கும்பகம்

நற்பயன்கள்- குண்டலினி சக்தியை எழுப்பும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.வலது நாசித்துளையை வலதுகட்டை விரலால் மூடுங்கள். பின்பு இடது நாசித் துளை வழியாக நுரையீரலைக் காற்றால் நிரப்புங்கள். சில நொடிகள் காற்றை உள்ளே நிறுத்துங்கள். இரு நாசித் துவாரங்களையும் விரல்களால் மூடவும்.

3.அப்பொழுது மனதை நரம்புகளின் இயக்கத்தின் மீது குவியுங்கள். அந்த நரம்புகளின் இயக்கம் தண்டுவடம் வழியாக கீழே உள்ள முக்கோண வடிவிலான குண்டலினி இருக்கும் மூலாதாரப் பகுதியைச் சென்று தாக்குவதாக நினைக்கவும். அந்த நினைவை அப்படியே அங்கு சிறிது நேரம் வைத்திருந்து பின் அந்த நிலை நிறுத்திய நரம்பு இயக்கத்தை மேலே வலது நாசித் துளைக்கு மெதுவாக இழுப்பதாக நினைக்கவும்.

4.சுண்டு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் இடது நாசித் துளையை அழுத்தி மூடி, கட்டைவிரலை வலது நாசியிலிருந்து நீக்கி பிங்கலையான வலது நாசித்துளை வழியாக காற்றை வெளியில் விடுங்கள்.

5.உள்ளிழுக்கும் பூரகத்திற்கு 1 நொடிகள், மூச்சை உள்ளே அடக்கும் கும்பகத்திற்கு 4 நொடிகளும், வெளியே விடும் ரேசகத்திற்கு 2 நொடிகளும் என எடுத்துக் கொள்ளவும். இடது வலது மாற்றிச் செய்யவும். பின் படிப்படியாக அதிகரித்து 1:4:2 என்ற விகிதத்தில் செய்து பழகவும்.

6.இறுதியாக உள்ளிழுக்கும் பூரகத்திற்கு 4 நொடிகள், மூச்சை உள்ளே அடக்கும் கும்பகத்திற்கு 16 நொடிகளும், வெளியே விடும் ரேசகத்திற்கு 8 நொடிகளும் என எடுத்துக் கொள்ளவும்.

இடது வலது மாற்றிச் செய்யவும். இதை ஒருபிராணாயாமம் எனலாம்.

தினசரி காலை, மாலை 4 பிராணாயாமம் செய்யலாம்.

பின்னர் படிப்படியாக 1:4:2 என்ற விகிதத்தில் அதிகரிக்கவும். கீழே கொடுத்தவாறு அந்தி சந்தி நேரங்களில் பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்கும்போது வாசியை- மூச்சுக்காற்றை வங் என்று சொல்லி உள்ளே இழுத்து நேர எண்ணிக்கையை ஆரம்பித்து 16 நொடிகள் கழிந்த பின்னர் அங் என்று சொல்லி வாசியை கும்பகம் செய்ய ஆரம்பித்து ஓம் என்று சொல்லி 64 நொடிகள் உள்ளே பயனிக்கவும். பின்னர் சிங் என்று சொல்லிகொண்டு வாசியை வலது நாசிவழியாக வெளியே 32 நொடிகள் முக்கியம் மிக மிக மெதுவாக விட்டு பழகவும். இப்படி ஒரு வேளைக்கு 80 பிரணாயாமம் (மொத்தம் 320) ஆசனத்தில் இருந்து செய்து பழகவும். நான்கு அந்தி சந்திகளிலும் செய்யவும். நான்கு அந்தி சந்திகளில் செய்ய முடியாதவர்கள் மூன்று அந்தி சந்திகளிலும் 108 முறை வீதம் செய்து மொத்தம் 324 பிரணாயாமம் செய்யவும்.

#####

பயிற்சி- வெளிக் கும்பகம்.

நற்பயன்கள்- குண்டலினி சக்தியை எழுப்பும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.வலது நாசித் துளையை வலது கட்டைவிரலால் மூடுங்கள். பின்பு இடது நாசித் துளை வழியாக நுரையீரலைக் காற்றால் நிரப்பும் பொழுது (பூரகம்) மனதை நரம்புகளின் இயக்கத்தின் மீது குவியுங்கள்.

3.முதலில் 1:4:2 என்ற விகிதத்தில் செய்து பின்னர் படிப்படியாக அதிகரித்து வரவும்.

4.அந்த நரம்புகளின் இயக்கம் தண்டுவடம் வழியாக கீழே உள்ள முக்கோண வடிவிலான குண்டலினி இருக்கும் மூலாதாரப் பகுதியைச் சென்று தாக்குவதாக நினைக்கவும். இதற்கு 4 நொடிகள்.

5.பிறகு சுண்டுவிரல், மோதிரவிரல்களால் இடது நாசித் துளையை அழுத்தி மூடி, கட்டைவிரலை வலது நாசியிலிருந்து நீக்கி பிங்கலையான வலது நாசித்துளை வழியாக காற்றை உடனே வெளியில் (ரேசகம்) 8 நொடிக்கு அனுப்புங்கள்.

6.பிறகு இடது நாசித் துளையைச் சுண்டு விரல், மோதிர விரல்களாலும், வலது நாசித்துளையை கட்டை விரலாலும் அடைத்துக்கொண்டு வெளியில் காற்றை 16 நொடிகள் நிறுத்தவும் (கும்பகம்). இடது வலது மாற்றிச் செய்யவும் இதை ஒருபிராணாயாமம் எனலாம்.

மேல் பயிற்சியில் கும்பம் உள்ளே நிகழ்ந்தது. அடுத்த பயிற்சியில் கும்பம் வெளியே நடைபெறுகிறது. காற்றை உள்ளே சுவாசப்பையில் நிறுத்திவைக்கும் பிராணாயாமத்தின் எண்ணிக்கையை அதிகமாகச் செய்யக்கூடாது.

தினசரி காலை, மாலை 4 பிராணாயாமம் செய்யலாம். நன்கு பழகிய பின்னர் அதிகரிக்கலாம். உள் கும்பகத்தில் இறுதியில் சொல்லப்பட்ட மந்திர உச்சரிப்புகள் இதற்கும் பொருந்தும்.

#####

சனிக்கிழமை, 25 December 2021 11:45

பயிற்சிகள்!

Written by

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

@$@$@$@$@$@

பிரணாயாமம் பயிற்சி செய்து பழகாதவர்கள் நலனுக்காக!

அமைதியில்லாமல் அவதிப்படும் உயிர்கள் கண்களை மூடியபடி நிதானமாக நாசிகளின் வழி மூச்சை மெல்ல மெல்ல ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் கொண்டு எவ்வளவு உள்ளே இழுக்க முடியுமோ அதுவரை இழுத்து பின் மூச்சை வெளியேற்றும் போது தளர்வாகுக, இரண்டு, மூன்று என்று மனதில் எண்ணிக் கொண்டு அல்லது மூச்சை உள்ளே இழுக்கும் போதும் வெளியே விடும்போதும் உயிர்களுக்கு பிடித்தமான கடவுளின் பெயரை மனதில் நினைத்து குறைந்தது ஐந்து நிமிடங்கள் / வேண்டும் வரை பயிற்சி செய்தால் அவ்வுயிர்களுக்கு அமைதி கிட்டும். முச்சுக் காற்று உள்ளே செல்லும்போதும் வெளியே செல்லும்போதும் கவனத்தை அதன் மீது செலுத்துங்கள். மனதில் சஞ்சலம், கோபம், படபடப்பு மற்றும் பயம் நீங்கி சுவாசத்தின் வேகம் குறையும்.

#####

எல்லா செயல்களுக்கும் முன் உயிர்கள் தங்கள் உடலைத் தயார் செய்து தளர்த்திக் கொள்ள வேண்டும். அது உடல் தசைகள் இறுக்கத்திலிருந்து விடுபட்டு செயல் செய்ய ஆயத்த நிலையாகும். அந்த ஆயத்த நிலைக்கு உடலைத் தயார் செய்யவது பயிற்சிகள். பிரணாயாமம் / தியானம் செய்வதற்கு முன் உடலை சீர்படுத்தும் பயிற்சிகளை செய்து உடலுக்கு தகுதி நிலை ஏற்படுத்திய பின்னரே பிரணாயாமம் / தியானம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் எந்த சிக்கல்களும் ஏற்படாமல் வெற்றிகரமாக பிரணாயாமம் / தியானம் செய்து முடிக்க முடியும்.

நாடிசுத்தம், பிரணாயாமம் பயிற்சிகளுக்கு முன் அனைவரும் யோக ஆசனங்களில் இதற்குப் பயன்படும் ஆசனங்களான பத்ம ஆசனம், வஜ்ர ஆசனம் ஆகியவற்றை பற்றி அறிந்து அவைகளை கற்றுக் கொள்ளவேண்டும் இந்த இரு ஆசனங்களே நாடிசுத்தம், பிரணாயாமம் ஆகியவற்றிற்கு மிகச்சிறந்த ஆசனங்களாகும்.

ஆசனம் என்றால் இருக்கை என்று அர்த்தம். இந்த பயிற்சி முறையில் ஸ்தூல உடலில் உள்ள ஆதார சக்கரங்களின் சூட்சும சக்திகள் தூண்டப்படும். ஆசனத்தில் முதுகெலும்பு பகுதிதான் அதிக, பயன்படுத்தப்படும். எனவே எல்லா பயிற்சிகளும் முதுகெலும்பைச் சுற்றியே அமைந்திருக்கும். நாடிசுத்தம், பிரணாயாமம், தியானம் ஆகியவற்றிற்கு அமரும்போது நிலையாக உடல் ஆடாமல் அசையாமல் அமர வேண்டும். முடிந்தளவு ஆசனங்களை ஒரு குருவிடம் முறைப்படி கற்பது நல்லது. நீண்ட நேரம் தன்னை மறந்து அமர்ந்திருக்கும் தியான நிலை உறுதியாக இருக்க வேண்டும். கால்களில் வலி ஏற்பட்டு நாடிசுத்தம், பிரணாயாமம், தியானம் ஆகியவற்றை கலைக்க வழிவகை செய்துவிடும். எந்த வித உபாதையினாலும் பயிற்சிகள் பாதியில் கலையாமல் இருக்க ஆசனங்களை நன்றாக பழகவேண்டும்.

பத்ம ஆசனம்!

ஓரணையப்பதம் ஊருவின் மேலேறிட்டு
ஆரவலித்ததன் மேலவைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே. திருமூலர்.

பத்மம் என்றால் தாமரை. இந்த ஆசனம் தாமரைமலர் விரிந்து இருப்பதுபோல இருப்பதாகும். ஒரு சமதள விரிப்பின்மீது அமர்ந்து வலதுகாலை இடது தொடையின்மீது வைத்து இடதுகாலை வலது தொடையின்மீது வைக்க வேண்டும். இரண்டு குதிகால்களும் அடிவயிற்றைத் தொட்டபடி இருக்க வேண்டும். முதுகுத் தண்டுவடம் கழுத்து ஆகியவை ஓர் நேர் கோட்டில் நிமிர்ந்த வண்ணம் இருக்க கைகள் இரண்டையும் இரண்டு பக்கமும் உள்ள முழங்காலின் மேல் சின்முத்திரை காட்டியபடி வைக்கவேண்டும். கண்கள் மூடிய நிலையில் இருக்க வேண்டும்.

இந்த ஆசனம் யோகம் தியானம் பழகுபவர்களுக்கு மிக மிக நல்ல பலன் தரும். தொடர்ந்து செய்து வந்தால் அடிவயிற்றுப் பகுதின் இரத்த ஓட்டம் சீராகும். இரப்பையில் ஜீரண சக்தியை தூண்டும். மூட்டு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படாது. மேலும் மனதிற்கு அமைதிதரும் ஆசனமிது. இதில் அமர்ந்து தியானம் செய்தால் மனதை ஒருமுகப்படுத்தும் திறன் அதிகரிக்கும்.

முதன் முதலில் செய்யும் போது கால்களில் வலி ஏற்படலாம். அதனால் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து பழகியபின் பத்மாசனத்தை செய்ய ஆரம்பிக்கலாம். அர்த்த என்றால் பாதி எனப்பொருள். பத்மாசனத்தின் பாதிநிலையில் செய்யப்படுவதால் அர்த்தாசனம் என்றானது. வலதுகாலை இடது தொடையின்மீது வைத்து வலது குதிகால் அடிவயிற்றைத் தொட்டபடி அமரவேண்டும். கண்களை மூடியவண்ணம் இரண்டு கைகளையும் சின் முத்திரை காட்டியபடி இரண்டு முழங்கால்மீது வைத்து நிமிர்ந்து நேராக அமரவேண்டும். இதை நன்றாக பழகியபின் முழுமையாக பத்ம ஆசனத்தை செய்து பழகுக!

வஜ்ர ஆசனம்!

வஜ்ரம் என்றால் வைரம். இந்த ஆசனத்தில் அமரும்போது உடல் வஜ்ரம்போல் உறுதியான நிலையில் இருக்கும். மூச்சுப் பயிற்சிக்கு பொருத்தமான ஆசனம். இதை செய்யும்போது கால்களில் வலி ஏற்படக்கூடும். பழகிய பின்னர் எளிமையான நல்ல பலன்களைத் தரக்கூடிய ஆசனம்.

இரண்டு கால்களையும் நன்றாக நீட்டி அமருங்கள். வலது காலை மடித்து குதிகாலை சாய்த்து அதன்மீது அமர்ந்து கொண்டு இடது காலை அதேபோல் மடக்கி சாய்த்து வைத்து அதன் மீதும் சேர்ந்தவாறு புட்டம் இருக்கும்படியாக அமர்ந்து கொள்ளவும். இப்போது இரண்டு குதிகால்களும் ஆங்கில் எழுத்து V வடிவில் இருக்கும். முதுகுத் தண்டை வளைக்காமல் நேராக கழுத்துடன் நிமிர்ந்து உட்காருங்கள். இரண்டு கைகளையும் இரண்டு முழங்கால்மீது வைத்துக் கொண்டு கண்களை மூடியபடி சீரான மூச்சை இயக்க வேண்டும். சிறிது நேரத்தில் வயிறானது சகஜ நிலையை அடையும். உணவு உண்டபின்னரும் இந்த ஆசனத்தில் அமர்ந்து யோகப் பயிற்சிகள் செய்யலாம்.

இந்த ஆசனம் முழங்கால் மூட்டு மற்றும் கால்களுக்கு ஓய்வைத் தந்து நன்றாக இயங்க உதவும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். தொடைப்பகுதி சதைகள் வலுவடையும். மலசிக்கல் பிரச்சனை தீரும். மூல நோய் உள்ளவர்கள் இந்த ஆசனத்தில் அமர்ந்து செய்யக்கூடாது.

சவாசனம்! சவ ஆசனம்!

இந்த ஆசனம் ஒரு சிறந்த பயிற்சியாகும். இறந்த நிலையில் உடலை இருக்க வைக்கும் நிலையாகும். இதை யோக நித்ரா என்றழைப்பதுண்டு. யோகம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் முடிந்ததும் இந்தச் சவாசனத்தை செய்து பின் விழிப்படையச் செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு அரைமணி அல்லது பயிற்சி முடிந்த பின்னர் சவம்போல் சவாசன நிலையில் படுத்திருக்க வேண்டும். தரை விரிப்பின்மீது மெல்ல மல்லாந்த நிலையில் படுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் உடலுக்குப் பக்கவாட்டில் சற்று விரித்து வைத்து உள்ளங்கைகள் வயிற்றின்மீது இருக்க உடலை நன்கு தளர்ந்த நிலையில் வைக்க வேண்டும். இரண்டு கால்களும் V ஆங்கில எழுத்து போல் விரிந்த நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இந்த சவாசன நிலையை சிறுது நேரத்தில் முடித்துக் கொண்டு வலது பக்கமாக திரும்பி சில நிமிடங்கள் அமைதியாக படுத்திருந்து பின்னர் மெல்ல எழுந்து அமர்ந்து மூச்சை மூன்றுமுறை நன்றாக இழுத்து வெளியேற்றிவிட்டு பின்னர் கண்களை திறக்கவும்.

இந்த ஆசனம் உடலுக்கும் மனதிற்கும் நல்ல ஓய்வைத் தரும். மன அழுத்தம் போக்கும். தொடர் தலைவலியை போக்கும். குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

ஆசனங்கள் செய்ய ஓர் பலகையில் / மான் தோல் / புலித்தோல் மீது அமரவேண்டும். ஏனெனில் தரையில் நேரிடையாக அமர்ந்தால் பூமியின் ஈர்ப்பு விசையின் ஆதிக்கம் மூலாதாரத்தின் காந்த சக்தியுடன் மோதி எண்ண ஒட்டங்களையும் மனோ மற்றும் சித்த சலனம் ஆகியவற்றை சரியான முறையில் அடக்கி வைக்க முடியாமல் போகும்.

முத்திரைகள்!

பிரணாயாமம் / தியானப் பயிற்சிகளைச் செய்வதற்குமுன் சில முத்திரைகளை தெரிந்து அவைகளை முறையாகப் பயப்படுத்த வேண்டும்.

ஞான / சின் முத்திரை:

பத்மாசனத்தில் கண்களை மூடியபடி அமர்ந்து கை மணிக்கட்டை முழங்காலின்மீது படியவைத்து உள்ளங்கைகளை வான் பார்த்திருக்கச் செய்து கட்டைவிரல் நுனியையும் ஆள்காட்டிவிரல் நுனியையும் சேர்த்தவண்ணம் பார்ப்பதற்கு இரண்டு விரல்களும் ஓர் வளையம்போல் இருக்கச் செய்யுங்கள். மீதமுள்ள மூன்று விரல்களையும் மடங்காமல் நீட்டி வையுங்கள். இது ஞானத்தை தரும் ஞான / சின் முத்திரை எனப்படும்.

பிரம்ம முத்திரை:

பத்மாசனத்தில் கண்களை மூடியபடி அமர்ந்து இரு முழங்கைகளையும் தொடைமீதி படியும் படிவைத்துக் கொண்டு இடது உள்ளங்கையின் பாதம் வான் நோக்கியிருக்கும் படியாகவும் அதன்மேல் வலது கையின் பாதம் வான் நோக்கியிருக்கும்படியாக வைத்துக் கொள்வதே பிரம்ம முத்திரை.

இந்த ஞான / சின் இரு முத்திரைகளும் வெகுவாக தியானப் பயிற்சிக்குப் பயன்படும். பிரணாயாமத்தின்போது ஒருகை சின் முத்திரையை பயன்படுத்த வேண்டும்.


ஓங்காரம்!

அ உ ம என்ற எழுத்துக்களை தனித்தனியே உச்சரித்தால் அதை உணரமுடியாது. மூன்று எழுத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்து முறையாக உச்சரித்தால் அது ஓம் எனும் பிரணவ மந்திரம் ஆகும். எல்லா ஓசை ஒலிகளுக்கும் ஓம் என்பதே பிரதானமானது. எல்லா மந்திரங்களுக்கும் முன் ஓம் சேர்த்து சொல்லப்பட்டால் அதன் ஆற்றலும் வலிமையும் அதிகரிக்கும். ஓம் என்ற தொடர் உச்சரிப்பால் உடலில் அதிர்வலைகள் தோன்றி மனதில் அமைதி உண்டாக்கும். முறைப்படி உச்சரித்தால் மரண பயம் நீங்கும். உடலிலும் உள்ளத்திலும் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

பத்மாசனம் / வஜ்ர ஆசனம் ஏதாவது ஒன்றில் அமர்ந்து கண்களை மூடிக் கொள்ளுங்கள். ஞான / சின் முத்திரையில் கைகள் இருக்கட்டும். இரண்டு முறை காற்றை ஆழமாக சுவாசித்து வெளியேற்றுங்கள். பின்பு சுவாசத்தை முடிந்தளவு உள்ளே இழுத்து வெளியேற்றும் சமயத்தில் ‘ஓ’ என்ற எழுத்தை அடிவயிற்றிலிருந்து ஒரு பங்கு அளவிற்கு உச்சரித்து பின்னர் ‘ம்’ என்ற எழுத்தை இரண்டு பங்கு அழுத்தம் என்ற அளவில் உச்சரியுங்கள். இப்போது உடலில் ஓர் இன்ப அதிர்வு தோன்றும். தொடர்ந்து உச்சரித்து வாருங்கள். காலையில் யோகம், பிரணாயாமம் மற்றும் தியானம் செய்வதற்கு முன்னாலும் இரவு சயனத்திற்கு செல்லும் முன்பு ’ஓம்’ பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.

வழிபாடு!

ஓஜஸ் சக்தி உள்ள அந்த அளவிற்கு ஒருவன் ஆற்றல் உள்ளவன் ஆகின்றான்- ஆன்மீக ஞானம். பிரபஞ்ச சக்தியை, இறையை பணிந்து செயல்பட்டால் நலம் கிட்டும் என்ற நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம். அதனால் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும்போது வழிபாடு செய்தல் வேண்டும்..

எல்லா உயிர்களுக்கும் குலதெய்வம் என்ற முறைதனை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். எந்தச் செயலை செய்வதாயிருந்தாலும் உயிர்கள் அவர்களுடைய குலதெய்வத்தை வணங்கி செயல்களைச் செய்ய ஆரம்பித்தால் அந்த காரியம் விநாயகர் துணையுடனும் குலதெய்வ ஆசியுடன் சிறப்பான வெற்றிகளைத் தரும். எனவே விநாயகரையும் குலதெய்வத்தையும் வழிபட்டு பயிற்சிகளைத் தொடருங்கள்.

பிரபஞ்சத்தின் அனைத்துமாக இருக்கும் இறையான அவர் எங்களைப் பாதுகாத்து காப்பாற்றட்டும். அவர் எங்களுக்குச் சக்திகளை ஊட்டி அருள் புரியட்டும். எங்களுக்குச் சக்தி தந்து எங்களின் செயல்களுக்கு வலிமை தரட்டும். இந்த பயிற்சிகள் எங்களுக்குள் ஒளியூட்டி நல்ல பலன் தரட்டும். ஒருவரை ஒருவர் புரிந்து அன்புடன் நேசித்து எங்கும் அமைதி நிலவட்டும். அமைதி பரவட்டும். வாழ்க இந்த பூமி.

பதஞ்சலி முனி யோக, பிரணாயாம நெறிமுறைகளுக்கு முன்னோடி என்பதால் அவரை வணங்குகின்றோம்.

மனதில், எண்ணங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி உடல் மற்றும் மனத்திற்கான இலக்கண நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்த முனிவர்களில் பெயர் சொல்லக்கூடிய நிலையில் முதலாக இருப்பவரும் சக்தி நிறைந்தவருமான “பதஞ்சலி முனி” அவர்களே உங்களை நான் இருகரம் கூப்பி மரியாதை கொண்டு வணங்குகின்றேன். உங்களுக்கு எனது பனிவான வணக்கங்கள்.

சூர்ய உதயத்திற்குமுன் செய்வது சிறந்தது என்பதால் அந்த நேரத்தில் சூரியனை வணங்குதல் சிறப்பு.

“ஓ சூரியனே!” பாத்திரத்தை மூடியிருக்கும் மூடியைப்போல் உன்னுடைய தங்கநிற மேனியின் ஒளிக்கற்றைகள் உண்மையின் கதவுகளை மூடியுள்ளது. எனக்காக, அதை திறந்து உண்மைதனை அறிய அதை நோக்கிச் செல்ல எனக்கு வழிவிடுவாயாக! உன்னை நான் வணங்குகின்றேன்.

மூச்சுப் பயிற்சிகளைச் செய்வதற்கு முன் சிறிது தொலைவிற்கு நடைப் பயிற்சி செய்து சுத்தமான காலைநேரக் காற்றை சுவாசித்தால் உயிர்களின் உடலும் மனதும் புத்துணர்ச்சி பெற்று நாள் முழுதும் சுறுசுறுப்புடன் இயங்க ஏதுவாகும். வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டில் சில உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

வலது பக்கம் படுப்பது ஏன்!

பிரணாயாமம் / தியானம் / யோகப் பயிற்சிகள் செய்து முடிந்தபின்னர் சவாசனத்தில் படுத்து வலது பக்கம் திரும்பி சிறிது நேரம் படுத்திருந்து எழுந்திருக்க வேண்டும். வலது பக்க நுறையீரலானது மேற்பகுதி, நடுப்பகுதி, கீழ்ப்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடது பக்க நுரையீரலானது மேற்பகுதி மற்றும் கீழ்ப்பகுதி என் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இடது பக்க நுரையீரலானது வலது பக்க நுரையீரலைவிட சற்று சிறியதாக அமைந்துள்ளது.

வலது பக்கம் சாய்ந்து படுத்தால் உடலில் அதிக அளவு பிராண வாயு கிடைக்கும். பயிற்சிகள் முடிந்ததும் வலது பக்கம் திரும்பி படுத்து எழுந்து உடகாரச் செய்வதால் அதிக அளவு பிராணவாயு கிடைக்கும் என்பதாலேயே அவ்வாறு செய்ய சொன்னார்கள் முன்னோர்கள்.

உணவு பழக்கங்கள்!

யோகம், பிராணாயாமம், தியானம் ஆகிய பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதற்குச் சிறந்த உணவு பாலாகும். பாலை நெருப்பில் வைத்துக் காய்ச்சி நீண்டநேரம் கொதிக்க விடக்கூடாது. கொதிநிலையை அடைந்ததும் இறக்கி வைக்கவும். அப்போதுதான் அதிலுள்ள வைட்டமின் போன்ற சத்துப் பொருட்கள் வீணாகாமல் இருக்கும்.

உணவே மருந்தாகும். இதை நினைவில் கொண்டு உணவை அளவிற்கு அதிகமாகவும் அடிக்கடி உண்ணாமலும், சத்தில்லாதவற்றை உண்ணாமலும், பசித்தபின்பே உணவை உட்கொள்ளுவதும் சிறந்த பழக்கம்.

வயிற்றின் கொள்ளளவில் பாதி பாகம் அளவுள்ளா உணவை சப்பிட்டு பின்னர் கால் பாக அளவிற்கு நீரைக் குடிக்க வேண்டும். மீதி கால்பாகம் வெற்றிடமாக இருக்க வேண்டும்.
#####


பயிற்சிகள்!

நாடி சுத்தம்!
பிரணாயாமம்!
தியானம்!

#####

சனிக்கிழமை, 25 December 2021 11:37

நாடிகள் சுத்தம்!

Written by

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

#####

நாடிகள் சுத்தம்!

நாடி சுத்தி மூளை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவை சிறந்த முறையில் இயங்க வழிவகை செய்கிறது. கோபத்தைக் குறைத்து மனதிற்கு அமைதியை உண்டாக்கும். படப்படப்பு குறைந்து இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவும். இதயக் கோளாறுகள் நிவர்த்தியாகும்.


முதலில் நாடிகளைத் சரிசெய்து தூய்மைபடுத்துதல்

சுழுமுனையில் பயனிக்கும் பிராணனைக் கட்டுப்படுத்துதல் நாடிகளைத் சரிசெய்து தூய்மைபடுத்த - பல வகையானப் பயிற்சிகளைப் செய்து பழகுவோம்.
1.பஸ்த்ரிகா * 2.கபால்பட்டி * 3.அணுலோம்-விலோம்-நாடிசுத்தி * 4.சந்திரனுலோமா * 5.சூரியனுலோமா * 6.பாராம்ரி(தேனி சப்தநிலை) * 7.உத்கீத் * 8.அக்னிசார்-(வயிற்றை மடக்குதல்) * 9.உஜ்ஜயி * 10.க்ஷீத்கரி-(நாக்குமடங்கிய நிலை) * 11.க்ஷீத்தலி-(நாக்குவளந்தநிலை) * 12.சதான்த-(பற்கள்வழி உறிஞ்சும் நிலை)

முதல் பயிற்சி-பஸ்த்ரிகா!
இரண்டாம் பயிற்சி-கபால்பட்டி!
மூன்றாம் பயிற்சி- அணுலோம்-விலோம்!
நான்காம் பயிற்சி –சந்திரனுலோமா!
ஐந்தாம் பயிற்சி-சூரியனுலோமா!
ஆறாம் பயிற்சி-பாராம்ரி!
ஏழாம் பயிற்சி-உத்கீத்!
எட்டாம் பயிற்சி-அக்னிசார்!
ஒன்பதாம் பயிற்சி-உஜ்ஜயி!
பத்தாம் பயிற்சி-க்ஷீத்கரி!
பதினோராம் பயிற்சி-க்ஷீத்தலி!
பன்னிரண்டாம் பயிற்சி-சதான்த!

இந்த பன்னிரண்டு பயிற்சிகளை மூன்று மாதத்திற்கு தொடர்ந்து தினமும் காலை செய்து வந்தால் நாடி சுத்தியாகிவிடும். அதன் பின்னரே பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 13 June 2021 10:42

சமுதாய சீர்திருத்தம்!

Written by

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந்
தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி
இடைப்படுத்தித் தறுகட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை
நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

சமுதாய சீர்திருத்தம்!

 தந்தை தன் மகளை மூன்றுவருடமாக கற்பழித்தார்.
 ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி ஒரு கும்பலால் கற்பழிப்பு.
 ஆதிவாசிபெண்கள் அதிகாரிகளால் கற்பழிப்பு
 பள்ளி மாணவியிடம் ஆசிரியர் முறைதவறி நடந்தார்
 சிறுமியை காவவெறியுடன் சிதைத்து கொலை
 கல்லூரி மாணவன் காதலிமேல் ஆசிட் வீச்சு


இப்படி நாளும் எங்கோயோ ஓரிடத்தில் ஏதாவது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பல நிகழ்வுகளில் ஒரிரண்டு மட்டும் செய்திகளாக வருகின்றது. பல தெரியாமல் போய்விடுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் தெரிவிப்பதில்லை. தெரிந்த செய்திகள் சம்பந்தப் பட்டவர்களுக்கு பல சிக்கல்களை உருவாக்குகின்றது. சட்டங்களும் சமுதாயமும் ஒன்றும் செய்யமுடியாமல் திணறுகின்றது. நீதி துறையும், பாதுகாப்பும் கேள்விக் குறியாகிறது. சமுக ஆர்வலர்கள் தங்கள் உணர்வுகளை தங்கள் அனுபவத்திற்கேற்ப கட்டுரைகளாகவும் கருத்துக்களாகவும் தெரிவிக்கின்றனர். பத்திரிக்கைகள் விமர்சனம் செய்கின்றன. மக்கள் சிந்தனை வயப்படுகின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து அந்த நிகழ்வுகளை ஒவ்வொருவிதமாக கணித்து நியாப்படுத்தியும், கண்டித்தும் மற்றவர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டு அந்த நிகழ்வை மறந்து விட்டு அடுத்த செய்திக்கு தாவுகின்றனர். மறுபடியும் எங்கேயாவது ஏதாவது நிகழ்ந்தால் அப்போது பழையதை எல்லாம் சொல்லி நினைவு கூறி பட்டி மன்றம் நடத்துபவர்களாக மாறி விடுகிறார்கள். தொலைக்காட்சியில் பார்க்கும் சிலர் அழுத்தம் காரணமாக உடல்சூடேறி உணர்ச்சி வயப்பட்டு கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி தங்கள் கோபத்தை ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கின்றனர். சற்று மாறுபட்ட வடிவில் நாங்கள் இவர்களுக்கு பாதுகாவலர்கள் எனதன்னை முன்னிலப்படுத்தும் ஆர்வலர்களும் அமைப்புகளும் தொலைக்காட்சி மூலம் விவாதம் நடத்தி தங்கள் பங்கை முடித்துக் கொள்கின்றனர். சிலர் கட்டுரைகள் எழுதிவிட்டு அமைதியாகி விடுகின்றனர். தொடர்ந்து என்ன நடவடிக்கை என்பதற்கு நமது சமுதாய அமைப்பில் உள்ள வழிமுறைகளை அதிகாரத்தில் உள்ளவர்களிடம் எடுத்துச்சென்று வென்றிட முனையுமாறு சமூக அமைப்பில் ஆர்வமாக உள்ள அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

சிறுவயதினில் சிறார்கள் தன் வளரும் அங்கங்களை, இன உறுப்புகளை தொட்டு பார்க்கும் தன் உறவினர்களால், நண்பர்களால் அவர்களின் செயல் புரியாமலும் தடுக்கும் நிலையில் இல்லாமலும் இருக்கும் நிலையில் உள்ளனர் நாளைய சமுதாய அங்கத்தினர்கள். தாய் தந்தை முன்னிலையிலும் இது நடப்பதாலும் அவர்களில்லாதபோது நடப்பதை அவர்களிடம் சொல்ல வேண்டுமென்றுகூட தோன்றுவதில்லை. மீண்டும் மீண்டும் அப்படி தொடும் போது அது தவறல்ல என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பாகின்றது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களில் பலர் சிறார்களை கொஞ்சும்போது இனக்குறிகளைத் தொட்டு முத்தமிடல், இது யாருக்கு என சொல்லி கேலி பேசுவதுமான நிகழ்ச்சிகள் இன்றும் பல இடத்தில் நடந்து கொண்டுதானிருக்கின்றது. புரிந்தோ, புரியாமலோ இவைகள் குழைந்தைகளின் மனதில் பதிந்து விடுகின்றது.

வளரும் பருவத்தில் கேட்கும், படிக்கும் கதைகளும், பார்க்கும் சினிமா காட்சிகளும், எதிர்பாரமல் நேரில் பார்க்கும் காட்சிகளும் அவர்களுக்கு புரியாத நிலையில் தன் நட்புகளுடன் பரிமாரிக் கொள்ளும்போதும் இனம்தெரியா மயக்க உணர்வினை அடைகின்றனர். சிலருக்கு அது பிடிப்பதில்லை. தவறு என நினைத்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். சிலர் மேலும் அரிந்துகொள்ள முயன்று முன்னெச்சரிக்கையும் அடைகின்றனர். சிலர் தடம்மாறியும் விடுகின்றனர். தவறு பாவம் என்பவர்கள் மற்றவர்களிடமிருந்து பிரித்து நிற்பதால் இது போன்ற தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

பருவமடைந்து பலவருடங்கள் ஆகியும் திருமணமாகாமல் உணர்வுகளுடன் அடங்கியிருக்கும் ஆண் அல்லது பெண், பருவமடைந்தபின் எதிர்பாராமல் ஆண்,பெண் உறவை தங்கள் வீட்டிலோ வேறு எங்கேயோ பார்த்த ஆண் அல்லது பெண், ஒளிவுமறைவு இல்லாமல் வரும் கதைகள் மற்றும் வண்ணப்படங்கள் பார்த்த ஆண் அல்லது பெண், வாழ்நாள் முழுவது துணை என்று மணந்தபின் ஆசை அறுபது மோகம் முப்பது என்றபடி ஒதுங்கும் ஆண் அல்லது பெண், கணவன் கைவிட்ட மனைவி அல்லது மனைவியால் கைவிடப்பட்ட கணவன், வாழ்வில் பணம் அல்லது வேரொன்று குறிக்கோள் என நினைக்கும் ஆண் அல்லது பெண், திருமணத்திற்கு பின் முற்றிலும் மாறிய ஆண் அல்லது பெண், நாற்பது வயதிற்குமேல் என்ன வேண்டியிருக்கின்றது எனும் ஆண் அல்லது பெண் ஆகிய இவர்களே இந்த சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு காரண கர்த்தாக்கள்.

ஒரு ஆணோ பெண்ணோ தன் மறுபாலினரின் விறுப்பு வெறுப்புகளை மதித்து விட்டுக்கொடுத்து அவர்களின் சின்ன ஆசைகளை நிறைவேற்றினால் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ வக்ர உணர்வுகள் எப்போதும் ஏற்படாது. தினமும் ஒருவனுக்கு ஒருத்திக்கு அவர்கள் விரும்புவது கிடைத்தால் வேறு மாற்று எண்ணங்கள் தோன்றாது. இதுவே அடிப்படை. அப்படி வேண்டியது கிடைக்காதவர்கள்தான் திருட்டுப்பாலில் சுவைகாண விரும்புவர். அது பூனை குணம். அவர்களின் பார்வையில் ஓர் கள்ளத்தனம் குடியிருக்கும். அது நாளடைவில் வக்ரத் தன்மையுடையதாகிவிடும். பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகள் அமைதி அடைய சமுதாய திட்டமிடல் வேண்டும்.

இந்த ஆண் அல்லது பெண் நமது சமுதாய அமைப்பிற்குப் பயந்து பெறும்பாலும் அமைதியாகவே இருக்கின்றார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த உணர்வுகள் கூடிய உணர்ச்சிகள் அவர்களிடையே நீறு பூத்த நெருப்பாக தனலாக எரிந்து கொண்டுதானிருக்கின்றது சாம்பலின் அடியில் கனல் இருப்பது போன்று. அவர்கள் எல்லோரும் நல்லவர்களே நல்ல சந்தர்ப்பம் வரும்வரை. உணர்வுகள் அமைதியாய் இருக்கும்வரை. ஏதோ ஓர் சூழல் பூத்த சாம்பலில் இருக்கும் கனல் பூத்து அவர்களை தன் நிலை மறைக்க வைக்கும். அதுவே அவர்களின் உடல் செயல்களும் அதைத் தொடர்ந்த திட்டங்களும். செயலாக்கமும். இது அவர்களுக்குள் இருக்கும் யாருக்கும் தெரியாத ஒரு உணர்வு. வேகம் கொண்டு அமைதியாக இருக்கும் வியாதி எனக்கூட கூறலாம். ஓர் செயலைக் கண்டதும் அல்லது கேட்டதும் அழுத்த நோயுள்ளவர்களின் செயல்பாடு எப்படி வீறு கொண்டிருக்குமோ அது போன்ற தன்மையுடையது. பல சூழ்நிலைக் காரணங்களால் அவர்கள் செயல்படுத்தும்போது பலர் தப்பிவிடுகின்றனர். சிலர் மாட்டிக்கொள்கின்றனர்.

உணர்வுகள் என்பது சாதாரணமான விஷயமில்லை. எவ்வளவு காலமானாலும் உள்ளத்திலிருக்கும். எந்த சூழலிலும் மீண்டும் அது தோன்றும். உங்களுக்கு சிறுநீர் பையில் அடைப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் சிரமங்களும் சிக்கல்களும் அதை அனுபவிக்கும்போதுதான் தெரியும். அந்தப் பை முழுவதும் நிரம்பினால் மருத்துவர் உதவியுடன் அதை சரி செய்தவுடன் ஓர் நிம்மதி ஏற்படும். மலம் கழித்தலிலும் சிறுநீர் கழித்தலிலும் வெளியேற்றத்திற்குப்பின் ஏற்படும் ஆனந்தம் அளவிடமுடியாதது. இதைப் போன்றதே உணர்ச்சிகள் நிறைந்த ஆண் / பெண் அதனை நீண்ட நாள் அடக்கி வைத்தலும் ஆரோக்கியமானது அன்று. எனவே அதற்கு இந்த சமுதாயம் ஓர் மாற்றம் காணவேண்டியது அவசியம். உணர்வுகளை அடக்கிவைத்த இருபாலருமே முகம் களையிழந்து கண்கள் ஒளியிழந்து சொற்களில் சுவராசியமில்லாமல் செயல்களில் ஓர் உந்துதல் இல்லா சலிப்பான நிலையில் இருப்பார்கள்.

இதிலிருந்து விடுபட எத்தனையோ வாய்ப்புகளும் வழிமுறைகளும் இருக்கின்றது. ஆனால் அதைஎல்லாம் நமது சமுதாயம் அங்கீகரிக்கின்றதா என்பதைப் பார்க்க வேண்டும். சிலர் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்களுடன் பழகும் ஆண் அல்லது பெண் உதவியை நாடுகின்றனர். சிலர் சிலரின் பழக்கத்திற்கு உடன்பட்டு போதை வஸ்துகளை உபயோகிக்கின்றனர். சிலர் ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபாடு கொள்கின்றனர். எல்லாவற்றையும் மறந்து தொழிலில் கவனம் செலுத்துகின்றனர். எப்படியிருப்பினும் உணர்ச்சிகள் அமைதியடையா நிலையில் இருந்து வரும் ஆண் அல்லது பெண் ஓர் நாள் ஓர் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களின் உணர்வுகளில் கிளர்ச்சி தோன்றி கட்டுக்கடங்கா நிலையில் தவறு செய்ய தூண்டப்படுவர். அந்நிலையில் அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவர்களின் உணர்ச்சிக்குத் தீர்வு ஒன்றோயாகும். அதுவே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். தீர்வுகாண முயற்சி செய்து வென்றாலும் தோற்றாலும் நாம் இப்படிச் செய்துவிட்டோமே என வருந்துவர். என்ன செய்ய! காலம் தாழ்ந்த எண்ணம்! இந்த நோயின் தாக்கத்தில் இருக்கும் அந்த சகோதர சகோதரிகளுக்கு நம்மிடையே என்னென்ன வழிமுறை கொண்டு அவர்களை அந்த தாக்கத்திலிருந்து எப்படி காக்க முடியும் என்பதை சமுதாய ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

இப்படி உணர்ச்சிகளின் அடிப்படையில் நிகழ்வுகள் நடப்பதை, ஏன் நடக்கின்றது என விவாதிக்க வேண்டியதில்லை. ஆனால் அந்த உணர்வுகளின் தாக்கத்தை புரிந்துகொள்ள நாம் அந்த நிகழ்வுகளை ஆராய வேண்டும். அப்படியின்றி ஒரு நிகழ்வைக்கண்டு அது தவறு அவர்களை அடி, உதை, தூக்கிலிடு என்பதாலாயோ அல்லது சட்டதிட்டங்கள் போட்டதாலோ இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்கும் என்பதற்கு யார் பொறுப்பு!. உண்மைதனை அலசி ஆராயவேண்டும். எல்லோருக்கும் பொதுவான சட்டங்கள் இந்த சமுதாயத்தில் பாதுகாப்பும் தவறு செய்பவர்களை தண்டிக்கவும் இதுபோன்று இனி நடக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே.

ஒர் சிறு பெண்ணுக்கு என்னவென்று அறியாத புரியாத நிலையில் நிகழ்வுகள் நடப்பது கொடுமையிலும் கொடுமை. இதுபோன்று சமுதாய கொடுமைகள் நடக்காமலிருக்க ஆரம்ப அடிப்படை உண்மைகளை தெளிந்து வளரும் சமுதாயம் ஆரோக்கியமாக வளர உரிய நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஏதோ சமூக ஆர்வலர்கள் சொல்கின்றார்கள் என்பதற்காக ஏனோதானோவென்று முடிவுகள் இருக்கக்கூடாது. இந்த வேகம் விவாத மேடைகளுடன் நின்றுவிடக்கூடாது.

பாலியல் பலாத்காரம் என்பது இருபாலருக்குமே உரியது, வெளியில் தெரியாத நிலையில் எத்தனை பேர் என்ன நிலையில் இருக்கின்றார்கள் தெரியுமா! சொல்ல முடியா நிலையில் உணர்வுகளை அடக்கிவைத்த நிலையில் பலர். எந்த இனத்தவருக்கும் யாருக்கும் யாரும் ஆமோதிக்க வேண்டியதில்லை. ஆதரவு காட்ட சார்ந்திருக்க வேண்டியதில்லை. ஆணாலும் பெண்ணாலும் அவர்களும் ஓர் ஆத்மா. இவ்வுலகின் வாழ்வியல் இன்பங்களை நுகர்ந்து அனுபவித்து ஆரோக்கியமுடன் சந்தோஷமாக வாழ உரிமையுள்ளவர்கள். இருபாலருக்கும் அந்த ஆனந்த சந்தோஷம் சரியாக குறைபாடியின்றி கிடைக்கின்றதா! என்பதை தெரிந்து சமுதாய சீர்திருத்தம் ஏற்படவேண்டும். இந்த குறைபாடுகளின் வெளிப்பாடே நடக்கும் நிகழ்வுகளுக்கு காரிய காரணம்.

சட்டங்கள் அனைவருக்கும் பொது. சட்டங்கள் நிறைவேற்றினாலும் அது பயனுள்ளதாகவும் மீண்டும் உபயோகமின்றி போகாததாகவும் மாற்றமில்லாத நிலையானதாகவும் இருக்க வேண்டும். சிந்திக்க சிந்தனையாளர்களும் அறிஞர்களும் ஆன்மீகவாதிகளும் நிறைந்த புண்ணிய பூமி இது. எல்லா சமூக அமைப்புகளும் ஆர்வலர்களும் இந்நிலையை ஆய்ந்து நம் வரும்கால சமுதாயத்திற்கு ஓர் நல்ல வழியை தெரிவு செய்து முறைப்படுத்தி வழங்கி அந்த வருங்கால சமுதாயம் நிம்மதிகொண்ட சந்தோஷமுடன் இயங்கிட உதவிடுங்கள் என அன்புடன் அழைக்கும்- குருஸ்ரீ.

ஆன்மாவை வளமுடன் வைத்திருங்கள்!

Written by

ஆன்மாவை வளமுடன் வைத்திருங்கள்!

ஒருவனுக்கு நான்கு மனைவிகள். ஒரு மனைவியுடன் உயிர்கள் திண்டாடும்போது நான்கு மனைவிகளா என்பீர்! ஆம் அந்த நான்கு மனைவிகளுடன் அவன் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.
நான்கு மனைவிகளில் நான்காவது மனைவியை அவன் மிகவும் அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி இன்பமடைந்தான், தன் மூன்றாவது மனைவியை நேசித்தாலும் அவளை தன் உலகியல் வாழ்க்கைப் பயணத்தில் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. தன் இரண்டாவது மனைவியிடம் தனக்கு பிரச்சனைகள் ஏற்படும் பொழுதெல்லாம் ஆலோசனை கேட்டுப் பெற்று ஆறுதலடைவான். ஒருபோதும் தன் முதல் மனைவியை மட்டும் அவன் நேசிக்கவேயில்லை. ஆனால் அவள் அவனது தேவைகள் அனைத்தையும் கவனித்து வந்தாள்.

அவனது மரண காலத்தில் நான்காவது மனைவியிடம் இறப்பிற்கு பிறகும் தன்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என விரும்பினான். அவள் மறுத்து விலகினாள். மூன்றாவது மனைவியைக் கேட்டபோது நீயே சாகப் போகிறாய். நான் வேறு ஒருவரிடம் செல்வதுதான் நன்று என்றாள். இரண்டாவது மனைவி என்னால் உன் கல்லறைவரை கூட வரமுடியாது என நழுவினாள். நொந்து போனான். அவனுடன் இருந்த அவனது நான்காவது மனைவி நீ எங்கே சென்றாலும் இறுதிவரை நான் உன்னுடன் இருப்பேன் என்றாள். அந்த அன்பைக் கண்டு மனம் உருகி இதுவரை அவளை தான் கண்டு கொள்ளவில்லையே என மிகவும் வருந்தினான். வருத்தத்தில் மன உலைச்சலில் மாண்டு போனான்.

இந்த நான்கு மனைவியரும் நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என நினைத்துக் கொள்ளுங்கள்.
அதாவது நான்காவது மனைவியான உங்கள் உடலை என்னதான் வாழ்நாள் முழுக்க சிறப்பாக கவனித்துக் கொண்டாலும் இறுதியில் அது உங்களுடன் வரப்போவதில்லை. நீங்கள் இறந்ததும் அதுவும் அழிந்துவிடும்.
மூன்றாவது மனைவி என்பது நீங்கள் சேர்த்து வைத்த சொத்தாகும். நீங்கள் மறைந்தால் அவை வேறு யாருக்கோ உரிமையாகிவிடும்.
இரண்டாம் மனைவியாகப்பட்டது உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் இறுதிச் சடங்கிற்காக மாயானம் வரையில் வருவார்கள். அதற்குமேல் வருவதற்கில்லை.
நீங்கள் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி உங்களது ஆன்மா. நீங்கள் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அதனை சரியாக கவனிக்காமல் நலிந்து போயிருந்தாலும் உங்கள் இறப்பிற்குப் பிறகும் உங்களுடையதாகவே உங்களுடனே மறைவது உங்கள் ஆன்மா மட்டுமே. அதைப் பேணிக் காப்பாற்றுங்கள். அதை வளமுடன் வைத்திருக்க நினையுங்கள்.-குருஸ்ரீ

வியாழக்கிழமை, 16 July 2020 12:35

சர்வ வியாபி!

Written by

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

#####

சர்வ வியாபி!

3026. ஞானப் பயிற்சியால் சிவானுபவம் பொருந்தும். இதுவன்றி ஆன்மா ஆராய்ச்சியால் பெறும் அறிவையும் மாயையின் சேர்க்கையால் பொருந்திய பெரிய உடம்பையும் தன் வயமாய் அடையும்படி செய்யும். அப்போது தன் விடய வாசனைகள் கெடும். பின் ஆன்மாவின் நிறைவுத் தன்மை பொருந்தும்.

3027. யான் அறிந்துள்ள சிவபெருமான் எங்கும் நீக்கம் இன்றி நிறைந்திருத்தலால் சென்று அடைய வேண்டிய இடம் இல்லை. தலையின் மீதுள்ள வான் மண்டலத்தை அறிந்து வழிபடில் அது சிறந்து விளங்கும். அப்போது உடலின் தன்மையை அறிந்து அங்கு விளங்கும் ஒளிமிக்க சுடரையும் தன் உண்மை நிலையை அறிந்தவர் எங்கும் போய் மீண்டு வரும் ஆற்றலைப் பேறுவர்.

3028. கடலில் உண்டாகும் அலை பொன்ற ஓயாத துன்பம் வரும் தன்மை கொண்டது உலக வாழ்வு. இதில் உடலில் வாழும்போது சீவர்களின் உள்ளத்தில் விளங்கும் ஒளியை நாடி அங்கு ஒளிக்குள் விளங்கும் சிவத்தைக் கடலினது அலை போல வரும் துன்பத்திலும் கண்டு கரை சேர முடியும்.

3029. தேவ தேவனான இறைவன் சந்திரன் சூரியன் அக்கினி ஆகிய மூன்று சுடர்களுக்கும் ஒளி தருவனவாய் அவற்றுக்கு உடலாய் விளங்குபவன். முன் சொன்ன சந்திரன் சூரியன் அக்கினியைக் கடந்த பேரொளியாக மாறுபாடுடைய உலகம் எல்லாம் அவன் பரிவுடன் சீவர்களைத் தொடர்ந்து செல்லும் நுண்மையன் ஆவான்.

3030. உலகம் இன்பம் தருவது என்ற உறுதியால் பெற்ற வினையில் அழுந்தித் துன்பப்பட்டு முடிவாகத் தன் அடியவரை இறைவன் காப்பான் ஆவான். சிறுதிசையில் ஒன்றான ஈசான திக்கில் உள் ஒலியாய் விளங்கும் அற்புதக் கடவுளை அடையப் பெற்றால் தலையின் மீது விளங்கும் பெரும் பேரொளியாக அவன் விளங்குவான்.

3031. பற்றப்படும் பொருளகளும் மிகவும் மேலானது சிவமே. அது எங்கும் நிறைந்த சந்திரன் சூரியன் அக்கினி என்ற மூன்று ஒளியாய் நெற்றி நடுவில் நினைப்பவர்க்குத் தன் இருப்பை உணர்த்தி நிலை கொள்ளும். பின்பு நினைப்பவர் வண்ணமாய் அவன் விளங்குவான்.

3032. சிவமான சீவன் ஒளி உருவம் உடைய தேவன். அவன் மேம்பாடு உடைய பத்துத் திசைகளிலும் உள்ளாவரை ஏவல் செய்யும் ஆற்றல் உடையவன். விரிந்த நீரால் சூழப்பெற்ற ஏழ் உலகங்களிலும் நிறைந்திருக்கும் ஆற்றலை அவன் பெறுவான். மேலும் அவன் உலகம் எங்கும் அறிந்து கூறவல்ல நாவன்மை கொண்டவன் ஆவான்.

3033. கூரிய பார்வையுடைய கருடனைப் போல் ஏழ் உலகத்தையும் கூர்ந்து பார்த்துக் காக்கின்ற உலக நாதனும் அங்கே அடியார் படும் துன்பத்தைப் போக்கும் மலமில்லாதவனும் பிறப்பு இல்லதவனும் ஆகிய எம் தலைவன் எங்கும் போவதும் வருவதும் எல்லாவற்றோடு புணர்தலிலும் வல்லவன்.

3034. சிவ ஞானியரிடம் விளங்கும் சிவன் ஒளிக்கதிர்களை உடையவன். அவனது உடல் செம்பொன் போல் மிளிரும் அவன் உலகத் தொடர்பு இல்லாதவனாயும் எல்லா உலகங்களிலும் தொடர்பு கொண்டும் விளங்குவான். அவன் எங்கும் விலகி நிற்பவன் அல்லன். பிறப்பிலாத சிவன் ஏழுலகங்களிலிருந்து நீங்கினவனாயும் கலந்தவனாயும் விளங்கினான்.

3035. சிவ ஞானியரிடம் பொருந்திய உணர்வும் உயிரும் சிவனே ஆகும். பொருளகளுடன் கூடி அறிகின்ற அறிவும் அதனால் அறியப்படும் பொருள்களும் சிவனே ஆவான். அங்ஙனம் தொடர்ந்து வரும் அவனை எண்ணத்தில் அகப்படுத்த முடியாது. அவன் கொத்தாயுள்ள மலர்களின் நறுமணம்போல் எவனிடத்தும் பரவி அருள்பவன் ஆவான்.

3036. எம் தந்தையான சிவபெருமான் கல்வியைக் கற்று அடைய வேண்டிய எதையும் வேண்டாதவன். அவன் உயிர்களுக்கு அளிக்க வேண்டிய நல்ல ஞானத்தை முழுவதும் உடையவன். விலை மதிக்க இயலாத அந்தணர் கூறும் வேதத்தில் உள்ள பல பொருளகளிலும் நிறைந்து நிற்கின்றான்.

3037. சிவன் வான்மயமாய் ஏழு உலகங்களுக்கும் அப்பால் உள்ளவன். அவன் பூமி மயனாய் அதைச் சூழ்ந்துள்ள ஏழ் கடல்களுக்கும் குளிர்ச்சியைத் தருபவனாய் அக்கடலைப் போன்ற தன்மையுடைய வலக்க்ண்ணின்மேல் விளங்குபவனாய் உயிருடன் கலந்துள்ளான்.

3038. சிவபெருமான் நான்முகன் திருமால் ஆகியவருடன் தானே நிலைபெற்று நின்றான். அவனே நிலத்தின் இயல்பால் கீழும் வானத்தின் இயல்பால் மேலுமாய் நின்றவன். அவனே உய்ர்ந்த மேருமலையாகவும் ஏழு கடலாகவும் உள்ளான். அவனே சாதனையாளர்க்கு வலமான கனியைப் போல் பயன் அளிப்பவனாயும் இருக்கின்றான்.

3039. எம் இறைவன் எல்லா உலகங்களுக்கும் தலைவனாகிய் புண்ணிய மூர்த்தியாவான். அவனே எங்கும் உள்ள உயிர் வர்க்கத்தைச் செலுத்துபவன். அவனே எண்ணரிய உயிர்க் கூட்டமாகவும் உள்ளான். இத்தகைய இயல்புடைய சிவனையே தலைவன் என்று சிவஞானையர் விரும்பி நின்றனர்.

3040. சீவரின் உடம்பின் உள்ளே உள்ள கெடாத உயிரும் அண்டகாயத்தில் விளங்கும் பிராணனும் விரிந்த கதிர்களை உடைய சந்திரனும் பூமித் தானத்தில் பொருந்தியிருக்கும் அபானனுமாய் ஆகி நிற்பவன். கண்ணின் பார்வையில் விளங்கும் சிவமே ஆவான்.

3041. தியானத்துக்குரிய பிரணவ்த்தைக் குருகாட்டிய வழியே சாதனையும் அச்சாதனையின் வழியே செல்லும் வகையும் தோற்றுவித்ததருளிய பரமசிவனை அகக்கண் கொண்டு காண்கின்ற தன்மையில் அப்பொருள் சீவனது உடம்பில் பொருந்தி அதன் இயலபை மாற்றி ஒப்பில்லாத ஊதியப் பொருளும் ஆவான்.

3042. சுற்றிலும் இருக்கின்ற எட்டுத் திக்கும் அண்டமும் பாதலமும் தோன்றித் தன்னிடம் ஓங்க மஞ்சள் ஒளியிலே அறிவின் வடிவாக விளங்கும் சிவபெருமான் இத்தன்மையுடன் நுண்மையாய் எல்லாத் தத்துவங்களிலும் கலந்து விளங்குகின்றான்.

3043. பலவகைப்பட்ட தத்துவங்களாய்ப் புவியில் உள்ளவர்க்கு விளங்கும் இறைவனின் உண்மை இயலபை அறிபவர் இல்லை. தொலைவில் உள்ளவனாகவும் அண்மையில் இருப்பவனாகவும் மாறுபாடு அற்றவனாகவும் உயிர்களுக்கு இன்பம் செய்பவனாகவும் உள்ள அநாதியானவன் எம் சிவன். அவன் பல தத்துவங்களாக இருப்பதல்லாமல் யாவற்றையும் கடந்தும் உள்ளான்.

3044. சிவன் எல்லா உயிர்களின் அறிவுக்கு அறிவானவன். மிகவும் சிவனே தொன்மையானவன். அங்ஙனமாயினும் அவன் நிற்கும் நிலையைச் சீவர்களால் எவ்விதத்தாலும் அறியப்படாதவன். பொதுவாக எட்டு உலகங்களிலும் எம் தலைவனான நந்தியம் பெருமான் ஒவ்வொரு சீவனையும் அறிய வல்லவன்.

3045. நிலம் நீர் நெருப்பு வாயு விண் ஆகிய ஐந்து பூதங்களாகவும் அவற்றைத் தாங்கி நிற்கும் ஆதாரமாகவும் உடலில் பொருந்தும் ஒளியாகவும் உள்ளான். அவனது பெயரும் பராபரன். அணுவடிவான எம் தலைவன் சகல தத்துவங்களுடன் கூடியவனாய் உள்ளவன் அழிவு இல்லாதவன்.

3046. திருமூலர் அருளிய இம்மூவாயிரம் பாடல்களும் அவர் அருளிச் செய்த முந்நூறு மந்திரப் பாடல்களும் அவர் அருளிய முப்பது உபதேசப் பாடல்களும் அவர் அருளிச் செய்த இம்மூன்று வகைப் பாடல்களும் ஒரு பொருளையே விளக்குவனவாம்.

3047. சிவ குருநாதனான நந்தியின் திருவடி வாழ்க. மலக்கட்டினைப் போக்கியருளிய அவனது திருவடி வாழ்க. மலம் அறுத்தலோடு உண்மையான ஞானத்தை அருளிய திருவடி வாழ்க. மலமற்றவன் திருவடி வாழ்க.


திருச்சிற்றம்பலம்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:34

தோத்திரம்!

Written by

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

#####

தோத்திரம்!

2982. ஊனக் கண்ணுக்குப் புலப்படாத இறைவன் என்ற கள்வனை அடைய மனம் என்ற தேரில் ஏறி அலைந்த நாட்டின் இயல்பை அல்லது கணக்கைச் சொல்ல முடியாது. புலம்புவர் யானும் அப்படியே பல இடங்களுக்கும் போய் அலைந்தேன். காணாமல் வருந்தினேன். இத்தகைய என் இறைவனை மின்னல் போல் தோன்றி அழியும் இந்த உடலான நாட்டில் விளங்குவதைக் கண்டேன்.

2983. நிலையான தலையின் மீது சாத்துவீக அகங்காரத்தின் உச்சியில் நாத கீதத்தில் விளங்கியிருந்தவர் எவர் என்றால் பல காலமாக முதல்வனான சிவனின் திருப்பெயரை வணங்கி வழிபட்டவர்கள் அவரது பெருமையை உணர்வீராக.

2984. சிறந்த ஆணி முத்தைப் போன்றவனும் தோன்றும் இளங்கதிரவனைப் போன்றவனும் பல வான மண்டல வாழ்நர் வழிபடும் இறைவனும் ஆகிய் என் தந்தையைக் காணாமல் புலம்பும் என்னை ஒரு பித்தன் என்று உலகத்தார் கூருகின்றனர்.

2985. புண்ணியம் செய்தவரால் உணரப்படும் சிவக்கதிரவன் என்னிடம் போந்து திகழ்ந்தான். அங்ஙனம் புகுந்து நின்றவன் எம் பேரறிவாளன். அப்பொருமான் அடியார்கள் உள்ளத்தில் விளங்கிக் கொண்டிருந்தான். அவ்விதம் என்னிடம் புகுந்து நிற்கின்ற இறைனை நான் போற்றி வழிபடுகின்றேன்.

2986. சிவக்கதிரவன் ஊனக் கண்ணினால் காணக் கூடாதவன். தலையில் உள்ள சகசிரதளத்தில் விளங்குபவன். ஞானக் கண்ணால் சிந்தை நாடினால் வெளிப்பட்டுத் தோன்றுவான். அற ஒழுக்கத்தில் நின்றவர் மன மண்டலத்தில் எழுந்தருளியிருப்பவன். நானோ அவனை நாதமயமாக உணர்ந்து வழிபடுகின்றேன்.

2987. சிவபெருமானை அவனுடைய ஆயிரம் திருப்பெயர்களால் பரவி வழிபாடு செய்யுங்கள். ஒராயிர வகையான சுகத்தை அடைவீர்கள். தலையின்மீது மனத்தை வைத்து ஞான சாதனையைச் செய்பவர். ஆயிரக்கணக்கான ஆசைகளினின்று நீங்குவர்.

2988. நான் சிவபெருமானை ஞானத்தால் புகழ்ந்து போற்றுகின்றேன். தலையின்மீது விளங்கும் விந்து நாதங்களே அப்பெருமானின் திருவடிகள் என்?று தெளிந்தேன். ஆகவே சிவயோகத்தை யாவரும் அறியுமாறு பறையறைகின்றேன். அத்திருவடிகளே எம் தலைவன் என்று போற்றி வணங்குகின்றேன்.

2989. பலவகைப்பட்ட தொண்டுகள் செய்து சிவனை நாடுங்கள். உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களின் வழியே நடு நாடி வழிபோய் வான் மண்டலத்தார் வணங்கி வழிபட ஒளிநிலை பெறலாம். பெற்ற பின்பு சிவானந்தத்தை வேண்டும் அளவு இலயம் அடையலாம்.

2990. சிவஞானியர்களின் உள்ளத்தில் அவர் வேண்டி நிற்கும் அரிய பொருளான சிவன் போந்து நிலை கொள்வான். ஆனால் இந்திரர் முதலிய அடியார் விரும்பி வேண்டினாலும் அவர்களுக்கு அழகிய தேவ மங்கையரின் தேவகானம் கிட்டுமே அல்லாமல் தெவர் உலகத்துக்கு அ[ப்பாற்பட்ட சிவகதி கிடைக்குமோ கிடைக்காது.

2991. சேற்றில் கலங்கியுள்ள நீரின் தன்மை தெரியாதவாறு போன்று மக்கள் உடல் மயமான எண்ணத்தால் கலக்கம் அடைந்து இறைவன் இன்ன இய்ல்புடையவன் என்று அறியார். குடித்தற்குரிய நீரைக் குளத்தினின்றும் முகந்து ஒரு குடத்தில் வைத்துத் தெளியச் சொல்வதைப் போல் சிந்தையை சிவத்தில் வைத்துத் தெளிவுபடுத்தின் சீவன் சிவம் ஆவான்.

2992. உண்மைத் தவத்தில் விளங்கும் சிவபெருமானை விரும்பும் ஒருவர்க்கு உள்ளங்கையில் பொருந்திய நெல்லிக்கனி போல் அவன் விளங்குவான். ஆதலால் தூய்மையானவனும் துய நெறியாயும் விளங்கும் தேவதேவனை விரும்பினேன். அவனிடம் பொருந்தினேன். உலகைக் கடந்து நின்றேன்.

2993. அளவு படுத்திக் கூற இயலாத புகழை உடைய ஞானத்தைப் பெற்றுத் தத்துவக் கூட்டங்களைக் கடந்து நின்றேன்.. ஐயப்பாட்டு எண்ணம் என்னிடம் இல்லாததால் சிவ வடிவம் பெற்றேன். இருளான மலங்களினின்றும் நீங்கி நின்றேன். அப்போது மூலாதாரத்தில் உள்ள அக்கினி தலையின்மீது ஒளிமயமான புண்ணிய மூர்த்தி பொருந்தி உடல் வேறு உடலையுடையவன் வேறு என்று வகைப்படுத்தி உண்ர்த்திய வள்ளாகவும் உள்ளான்.

2994. வள்ளல் தனமை உடையவர்க்கு எல்லாம் மேலானவனும் ஒளி மண்டலத் தலைவனும் ஒளிக்கதிர்க் கற்றையான சடையையுடைய நாத தத்துவ முதல்வனும் ஆகிய சிவனை வஞசத் தன்மையுடைய உலகினர் கண்டு விடுவார் என்று அவன் அவர் உள்ளத்தில் மறைந்திருந்து ஆட்கொள்வான்.

2995. திருவடியை அளித்து ஆண்டு கொண்ட இறைவனை நாள்தோறும் வழிபாடு செய்து சன்மார்க்கத்தில் நின்றவாறு தீய குணத்தையும் தீய செயலையும் ஒழிக்கும் சிவனிடம் நானும் ஒளியுடைய நோக்குடன் உள்ளத்தையும் வைத்து இவ்வுலகப் பற்றை விட்டு நின்றேன்.

2996. மனம் பொருந்திச் சிவத்தின் திருவடியை வணங்க வல்லார்க்கு உலகப் பற்றை விட்டு அவர்கள் விரும்பினால் அவனுடைய அடிகளே வீரர்கள் போய்ச் சேரும் சொர்க்க உலகமாகும். திருவடிப் பேற்றை அடைவதே புண்ணிய உலக்த்தை அடைவதாகும். திருவடி உணர்வால் திருந்தியவர்க்குத் தலையின் மீது விளங்கும் பரவிந்து மண்டலமே பெருமையுடைய தீர்த்தம்.

2997. இந்த உடலைச் சூழ்ந்துள்ள மன மண்டல இருளைப் போக்கியருள் செய்தான். தனக்கு ஓர் உடல் இல்லாமல் தனித்து நிற்கும் அறிவொளிமயமான சிவகுருநாதன் சீவரிடம் பொருந்திய அஞ்ஞானமான கனியைச் சுவைத்து ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். சிவானந்தத்தை அருளும் சோதியைப் பற்றி நின்றேன்.

2998. அறிவாகாய ஒளியே உயிர்களின் தலையெழுத்து வண்ணமாய் ஆவது. அதுவே தேவர் வாழும் தலம். அங்குப் பரவி ஓடும் வான் கங்கையும் உள்ளது. வணங்குவதற்குரியது அதுவே. பழைய வினைக் கூட்டங்களை அழிக்கும் இடமாகும். அதுவே அருட் சத்தியைத் தாண்டிய இடமாகும். உலகைக் கடந்து நிற்கும் முடிவு நிலையும் அதுவே ஆகும்.

2999. அறிவாகாய ஒளியில் மேல் உள்ள இடம் தேவர் இனத்தவர் உள்ளது. அதன் கீழ் உள்ள இடம் மாட்சிமையுடைய தவத்தினர் நிலையாகும். துன்பத்தை அனுபவிக்கும் மனிதரின் நிலை அதன் கீழதாகும். அறிவானந்த சத்தியானது வில்வமாலையால் அலங்கரிக்கப்பட்ட சடையுடைய சிவத்துடன் அங்குப் பொருந்திய அரிய உயிர்க்கு வேண்டிய போக போக்கிய நியதிகளைச் செய்யும்.

3000. சூழ்ந்திருக்கும் கருங்கடல் நஞ்ஸை உண்டு கழுத்தில் அடக்கியவன். ப்தினான்கு உலகுக்கும் கருவாய்ப் பிறப்பில்லாதவன் ஆவான். அவன் ஆழ்ந்துள்ள சுனையும் காடும் உடைய கயிலை மலையில் வீற்றிருப்பவன். அவனே வாழ்வை நல்கும் ஐந்தெழுத்தில் விளங்குபவன்.

3001. உலகத்து உயிராகவும் மண்ணாகவும் உயர்ந்த காற்றாகவும் கதிரவனாகவும் திங்களாகவும் அக்கினியாகவும் ஆதியாகவும் உள்ள பெருமான் பெரிய மேகம் பொருந்தும் வானமாகவும் நீராகவும் ஆகி விளங்குகின்றான். பின் அவற்றை அழிப்பவனாகவும் திக்குப் பாலர்க்குத் தலைவனாகவும் உள்ளான்.

3002. அக்கினி கதிரவன் என்பவற்றின் தனமை அறிந்து இறைவன் அவற்றுள் பொருந்தியிருப்பவன். அது போன்று பெருமையுள்ள காற்றிலும் பொருந்தியுள்ளான். சந்திர மண்டலத்தின் தன்மை அறிந்து அதனுள்ளே விளங்குவான். அச்சந்திர மண்டல அறிவு விளங்க அதைப் பெருகச் செய்வான்.

3003. பூதங்களின் பகுதியை கட்ந்து முடிவை அடைந்தாலும் அவை நுட்பத்தில் ஒளீ அணுக்களாய் சிவ சோதியில் நிற்கும். பதப்படுத்தும் உலகத்தில் அவனை அடைக்கலமாய்க் கொண்டவர்க்குத் தாங்கும் பெரும் பொருளாகவும் விளங்குகின்றான். தன்னால் படைக்கப்பட்ட உலகம் அனைத்துக்கும் தான் முழுமுதற் பொருள் ஆவான். பக்குவ ஆன்மாக்களுக்கு தானே சிவ குருவாய் எழுந்தருளி ஆட்கொள்வான்.

3004. வீடு பேற்றுக்கு நிலைக்களமாக உள்ள சிவவுலகமே சிவபெருமனின் திருமுடியாகும். ஆயினும் உலகம் ஏழும் அப்பொருமானுடைய வடிவம் ஆகும் அத்தனின் திருவடி பாதலம் ஏழுக்கும் கீழ் ஊடுறுவி நிற்பது. ஆனால் அறிவில்லாதவர் அவ்வியலபை உணர மாட்டார்.

3005. மேலே சிவமே நம்மை எல்லாம் நடத்தும் தலைவன் ஆவான். அப்பொருமான் முத்தி உலகத்தில் பேரொளியாய் விளங்குவான். அவனே திங்கள் கதிரவன் அக்கினி என மூன்று சுடர்களாய் விளங்குபவன். அவனே மேல் உலகங்களுக்கு மேலாகவும் கீழ் உலகங்களுக்கு கீழாகவும் இருப்பவன். இவ்வுலகங்களுக்கு நடுவாய் இருந்து இவற்றை இயக்குபவனும் அவனே ஆவான்.

3006. உலகம் ஏழினையும் கடந்து மேலும் உய்ர்ந்துள்ள பெருமை கொண்டவன். உருவம் பொருந்தும் நிலைகளை இயல்பாகவே கடந்தவன். மிக நுட்பமானவன். அடியார் விரும்பி அடைந்த ஒலிக்கின்ற திருவடியை காணும் போது அவர்கள் செல்லும் நெறியில் நின்று அழைத்துக் கொண்டு செல்பவனாக உள்ளான்.

3007. நான்கு பக்கங்களிலும் உலவும் நோக்கத்துடன் பெருங்கடல் சூழ்ந்த நிலவுலகம் எல்லாம் இறைவன் நிறைந்து விளங்குகின்றான். அந்த உலகத்தில் வாழ்பவர்க்குப் பயன் தரக்கூடியவை யாவும் முன்னமே படைத்தான். உலகில் உள்ள உயிர்கலையெல்லாம் காக்கும் பொருட்டுப் பொன் ஒளியில் விளங்கி நின்றான்.

3008. சிவன் பரனாகவும் அபரனாகவும் பொருந்திப் பல ஊழிகளிலும் நுண்மையாகவும் பருமையாகவும் விளங்கி அகன்ற உலகங்களைத் தாங்கி அவற்றைக் காத்து வருகின்றான் என்ற உண்மையை உலகத்தார் அறியவில்லை. அவன் பரவியிருக்கும் எல்லையைக் கடந்தும் ஆன்மாவினூடும் நிறைந்து விளங்குகின்றான்.

3009. பருமை நுண்மை ஆகியவற்றிலும் சிவமே நிறைந்து விளங்கும். அதனால் வேறே பெரிய வணங்கக்கூடிய தெய்வம் ஒன்று இல்லை. ஆதரமான உடம்பும் ஆதாரம் கடந்த நாதமும் நாதாந்தமும் உயிர்க்கு வேறாக விளங்கும். அகண்ட வடிவமும் ஆகிய அவனே பெரிய தெய்வம் ஆகும். அவனே பருமை நுட்பம் ஆகியவற்றை இனைக்கும் பிராணனாகவும் விளங்குகின்றான்.

3010. சுற்றியிருக்கும் திசைகளில் எல்லாம் சிவனே அவ்வாறு ஆன போது அவனுக்கு அப்பால் ஒரு கடவுள் உண்டு என்று மனிதரே நீங்கள் சொல்ல வேண்டா. புகையானது மேல் தோன்றிக் காணப்பட்டாலும் அது தீயின்றே தோன்ரறியது.. அது போல் உண்டானவை எல்லாம் எங்கள் ஆதிபெருமானான சிவத்தினிடமிருந்தே தோன்றின என்று அறிவீர்.

3011. சிவன் கீழ் மேல் என்று கூறப்படும் எல்லாப் புவனங்களாகவும் அவற்றின் வேறாகவும் நிறைந்துள்ளான். இப்பெருமான் எல்லாமாகி நிற்பினும் உலகத்தவரால் காணப்படத் தோன்றுபவன் அல்லன். சிவனே பல வகையான உயிர் இனங்களில் உயிர்ச் சத்தியாய் இருந்து இயக்குபவனாய் உலக நிலையில் பொருந்தி உலகத்தவரால் நம்புதற்குப் பாத்திரமாகவும் உள்ளான்.

3012. சிவன் தந்திரக்கலை மந்திரக்கலை உபதேசக்கலை என்னும் மூன்றையும் கடந்து அப்பால் நின்றவன். அவனை விரும்பி நில்லுங்கள். அவனே எல்லாத் தத்துவங்களுக்கும் தலைவன் ஆவான். அவன் விலை மதிக்க முடியாதவன். அவனைத் தேவர்களுள் ஒருவனாய் வைத்து எண்ண இயலாது. அத்தகைய அரியவன் நீங்கள் எண்ணியபோது சிறந்து உங்களிடம் விளங்குவான்.

3013. தலைமுறை தலைமுறையாக நான்முகன் செய்வதற்குக் காரணமான படைபுச் செயலை ஒழித்து திருமால் காக்கும் தொழிலால் விருப்பம் பெருகுவதற்குரிய பற்றை நீக்கி அடயோகம் முதலிய துன்பம் அளிக்கக் கூடிய செயல்களினின்றும் நீக்கி நான் உய்யும்படி என்னை அன்பால் அகப்படுத்திக் கொண்டான்.

3014. இறைவனின் திருவடியே எட்டுத் திக்குகளிலும் விளங்கி ஒளி தருவதாயிற்று. நாதமே வைகரி வாக்குக் காரணமாவதைப் போன்று அழியாது இருப்பவன் அவன் ஒருவனே. ஒளிமயமாகி நிலம் நீர் தீ காற்று வானம் சந்திரன் கதிரவன் அக்கினி ஆன்மா ஆகிய ஒன்பது பகுதிகளிலும் மலரில் மணம் போன்று விளங்குகின்றான்.

3015. எம்பெருமான் புறக்கண்னுக்குக் காணப்படாமல் அகக் கண்ணில் விளங்குபவன். ஆதலால் அவன் இல்லாதவன் அல்லன். கல் போன்ற நெஞ்சத்தை கசியச் செய்து நிற்பவரிடம் விளங்கித் தோன்றுபவன். பழைமையானவன். தூய்மையானவன். நடுக்கம் அற்றவன். குற்றம் இல்லாத மாணிக்கம் போன்ற ஒளியுடையவன். இவ்வாறு விளங்கும் சொல்வதற்கு அரிய பேரொளி ஒளியாகவும் இருளாகவும் சீவர்களைத் தொடர்ந்து நின்று அருளினான்.

3016. இறைவன் உள்ளம் என்ற மண்டலத்தில் ஒடுங்குபவனாய் உள்ளவன். உயிர்கள் உலக மயமான போது அவற்றின் உள்ளே நிலை பெற்றவன். அப்போது ஒளிமயமான சடையையுடைய நந்தியெம்பெருமான் பொறிகளை இயக்கும் கள்ளத் தலைவனாக உள்ளான். பல்வேறு வள்ளல் தன்மையை அறிந்து அவனைச் சிந்திக்கும் உயிரின் துன்பம் தருவதான பிறப்பை அறுத்து நிற்பவனாக உள்ளான்.

3017. ஒருவருக்கொருவர் மாறுபட்ட தேவரும் அசுரரும் நாள்தோறும் தோத்திரம் செய்து சிவபெருமானின் ஒலிக்கின்ற அடியை விரும்பி வணங்குவர், ஆனால் அடியார்கள் அகமும் புறமும் ஒத்து அவனது உதவும் தன்மையை நினைத்து உள்ளம் கசிந்து நிற்பர். அவ்வடியார்க்கு அவரது ஊனை நீக்கி உணர்வைப் பெருக்கிப் பேரொளியாய் விளங்குவான்.

3018. இறைவன் பூதாகாயத்தில் மட்டும் நிலைபெறுபவன் அல்லன். பெரிய கதிராகவும் அறிவாகாயம் என்ற ஆகாய வடிவில் உள்ளவன். அவன் புறக்கண்ணுக்குக் காட்சி தருபவன் அல்லன். ஆனால் அகக்கண்ணுக்குப் புலப்படுபவன் ஆவான். உள்ளப் பண்பின்றித் தோத்திரங்களால் மட்டும் அறியப் படுபவன் அல்லன். உள்ளப் பண்போடு அவன்பால் அன்பும் உடையவர்க்கு வெளிப்பட்டருள்வான். உயிர்கள் அடையும் எல்லா ஆனந்தத்துக்கும் காரணமாக உள்ளவனும் எம் சிவபெருமானே ஆவான்.

3019. எம் சிவபெருமான் எங்கும் உள்ளவரால் விரும்பப்படும் ஆனந்தக் கடல் போன்றவன் முத்தைப் போன்ற சடையுடையவன். நீல ஒளியை உடையவன், ஞானியர் ஒளியில் விளங்கும் இறைவனை இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பர். ஆனால் சித்தரும் தேவரும் அறிவு ஆராய்ச்சியால் தெளிந்து அறியமாட்டார்.

3020.முகத்தின் முன்பு எந்த நிறங்கள் காணப்படுமோ அந்த அந்த நிறங்க்ளின் தன்மைக்கேற்ப இறைவன் விளங்குவான். அறம் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இன்பம் அமையும். தீய ஒழுக்கம் எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப் படுகின்றதோ அந்த அளவு பாவம் அமையும். இத்தகைய உண்மை நிலையை அறிந்திருந்தாலும் மக்கள் ந்ன்மையை கடைபிடிக்கவில்லையே.

3021. அருள் மழை பொழிகின்ற இறைவன் இவ்வுலகில் பல் தலங்களில் உள்ளான். மேல் உலகில் இருக்கின்றான். எங்கும் இருக்கின்றான். எனவே அவன் எல்லாப் புவனங்களிலும் நிறைந்து விளங்கும் புண்ணிய மூர்த்தி. அப்பெருமானை சீவரின் அஞ்ஞான இருளில் உள்ளான். ஞான ஒளியில் கதிர் ஒளிபோன்று அவன் விளங்குவான்.

3022. உணர்வாகவும் மிக மேலானதாகவும் அறிவது சூக்குமமான எம்பெருமானையே ஆகும். அப்பெருமான் அணைப்பவனாகவும் நுட்பமானவனாகவும் உடல் உணர்வால் அண்டகாயத்தில் உயிர் ஒளியிலும் நிலைபெறுபவனாகவும் விளங்குகின்றான்.

3023. இறைவன் தன் ஆற்றலால் ஏழு உலகங்களையும் தாங்கியுள்ளான். தன் ஆற்றலால் தான் அணுவைக் காட்டிலும் நுட்பமாய் இருக்கும் தன்மை உடையவன். அவனது வலிமையை நோக்கில் எட்டுக் குலமலைகளும் ஒப்பாகச் சொல்லப்படா. அவனது ஆற்றலால் அகன்ற கடலிலும் பரவியுள்ளான்.

3024. என் தலைவனான சிவபெருமான் மண்ணவர் விண்ணவர் மற்றவர் யாவரினும் மேம்பட்ட பெருமையுடையவன். ஆயினும் அவன் சிறிய ஊன் உடலிலும் உணர்வாகக் கலந்து அங்கு உள்ளான். அவன் விண்ணுலகத்தவராலும் அறிய முடியாத பேரொளியுடையவன். மண்ணுலகத்தவர் செய்யும் தவத்தின் ஆற்றலுக்கேற்ப அறியப் படுபவனாக இருக்கின்றான்.

3025. பிண்டமான் உடலில் ஆல விதையைப் போன்று எழும் சீவசத்தி பெரிய ஆலமரம் போன்ற உடலில் மேற்சென்று பக்குவப்பட்டு ஒளியாய் விளங்கியது. அதை விளங்கச் செய்து அனுபவித்தவர் அதில் திளைத்திருந்தார். அந்த உணர்வைப் பெற்றிராத மூடர்கள் உடம்பைக் கடந்து ஒளியை அறியாது உடலே பெரிது என்று எண்ணி மயங்குகின்றனர் என்னே அறியாமை.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27184010
All
27184010
Your IP: 44.211.117.197
2024-05-24 10:25

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg