gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சக்ர யோகம்

Written by

        ஓம்சிவாயநமக!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!
******


சக்ரத் தியானம்
நம் உடலில் உள்ள ஆதார சக்கரங்களை முழு மனத்துடன் நினைத்து தியானத்தில் ஈடுபடுதல் சக்ரத்தியானம். அந்தந்த சக்கரத்திற்குரிய இடத்தில் அதனுடைய பெயர், நிறம், வடிவம், உரிய தெய்வம், கலை மற்றும் அதன் நிறம் ஆகியவற்றை நினைத்து தியானத்தில் ஒருமனதுடன் நினைவைச் செலுத்தி ஈடுபடவேண்டும். மனம் ஒருமுகப்பட்டு மந்திரங்களை ஒலித்து செய்தால் மனமும் உடலும் சுத்தமாகும். உடலில் உள்ள சக்கரங்களும், சூன்யங்களும், கலைகளும் அதைப்பற்றிய குறிப்புகளும் கீழ்கண்ட வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஏழு+1 ஆதரங்களை நினைத்தோ, பதினாறு கலகளை நினைத்தோ, ஆறு சூன்யங்களை நினைத்தோ தியானம் செய்யலாம். எல்லப் பொருள்களுக்கும் அதிதேவதைகள் இருப்பதால் கலைகளில் அதை அறிந்து வழிபட்டால் சிக்கல்கள் தீரும். அ – உ – ம் எனும் பிரணவத்தில் அ- தோன்றுவதால் அதற்கு படைப்புக் கடவுளும், உ- வளருவதற்கு துணை செய்வதால் காவல் கடவுளும், ம்- முடித்து வைப்பதால் அழித்தல் கடவுளுக்கும் பிறகு ஒவ்வொரு நிலைக்கும் மும்மூர்த்திக்கும் மேலான கடவுள் பெயர் சொல்லப்பட்டுள்ளது

1. மூலாதாரம்.
2. சுவாதிட்டானம்.
3. மணிப்பூரகம்.
4. அநாதகம்.
5. விசுக்தி.
6. ஆக்ஞை.
7. சகஸ்ராரம்.
8. துவாதசாந்தம்.
9. ஆறு சூன்யங்கள்.

 

1.மூலாதாரம்.

 

இருப்பிடம்

பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடையில்

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

கலை

கோடகலையான குண்டலினிக்கலை

பரப்பு அளவு

மூலாதாரம் முதல் நாபி-தொப்புள் வரை 12 விரல்

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

நான்கு இதழ் தாமரை-வெண்மை

அதிதேவன்

விநாயகர்

2.சுவாதிட்டானம்.

 

இருப்பிடம்

பிறப்புறுப்பிற்குமேல்

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

ஆறு இதழ் தாமரை-பொன்மை

அதிதேவன்

பிரம்மா

3.மணிப்பூரகம்.

 

இருப்பிடம்

தொப்புள்

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

பத்து இதழ் தாமரை-செம்மை

அதிதேவன்

திருமால்

4.அநாதகம்.

 

இருப்பிடம்

நடுமார்பு

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

பன்னிரண்டு இதழ் தாமரை-படிகம்

அதிதேவன்

உருத்திரர்

5.விசுக்தி.

 

இருப்பிடம்

தொண்டை

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

பதினாறு இதழ் தாமரை-பச்சை

அதிதேவன்

மகேசுவரர்

6.ஆக்ஞை.

 

இருப்பிடம்

புருவ நடுவில்

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

இரண்டு இதழ் தாமரை-புகைநிறம்

அதிதேவன்

சதாசிவர்

7.சகஸ்ராரம் (அ) பிரம்மரந்திரம்.

 

இருப்பிடம்

உச்சந்தலை

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

ஆயிரம் இதழ் தாமரை-படிகம்

அதிதேவன்

சதாசிவர்

8. துவாதசாந்தம்.

1 முதல் 16 கலைகளைத் தியானம் செய்யும் முறை துவாதசாந்த கலாப் பிராசாத யோகம் அல்லது சோடச கலாப் பிராசாத யோகம் ஆகும். இதற்கு நாபி- தொப்புளிருந்து ஆரம்பிக்க வேண்டும். பிரணவமாகிய ‘ஓம்’ ஓசையின் முதல் பிரிவு 12 கலைகளாகும். பன்னிரண்டாக எண்ணி பாவிக்கப்படும் போது அது சிவசக்தி தொடர்பை பெறும் 10 க்கும் 11 க்கும் இடையே 4 கலைகள் சதுர வடிவில். மொத்தம் 16 கலைகள்.
மந்திர ஓசை - ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

இருப்பிடம்- புருவ மத்தியிலிருந்து 12 விரல் உயரத்தில் இருப்பது. இது முதல் துவாதசாந்தம் எனப்படும். சக்தி, வியாபினி, சமனை, உன்மனை ஆகிய நான்கும் (1+3+4+4)12 விரல் அளவு கூறியிருந்தாலும் அவைகள் பரந்து ஒன்றியுள்ளதால் இவைகள் இரண்டாம் துவாதசந்தம் எனப்படும்.
பரப்பு- மூலாதாரத்திலிருந்து புருவமத்தி ஆக்ஞாவரை உள்ள ஆறு ஆதாரங்களில் சுழுமுனை நாடியின் நீளம் 40 விரல் (12+12+7+4+4+1) + புருவ மத்திக்குமேல் துவாதசாந்தம் 12 விரல் மொத்தம்= 52 விரல்
கலைகள்- அகாரக்கலை, உகாரக்கலை, மகாரக்கலை, விந்துக்கலை, அர்த்தசந்திரக்கலை, நிரோதினிக்கலை, நாதக்கலை, நாதாந்தக்கலை, சக்திக்கலை, வியாபினிக்கலை, சமனைக்கலை, உன்மனைக்கலை. சமனைக்கும் வியாபினிக்கும் நடுவில் வியோமரூபினி, அனந்தை, அனாதை, அனாசிருதை நான்கும் சதுர வடிவில்

ஆதாரம்/நிராதாரம்- அகாரக்கலை, உகாரக்கலை, மகாரக்கலை, விந்துக்கலை, அர்த்தசந்திரக்கலை, நிரோதினிக்கலை, நாதக்கலை, நாதாந்தக்கலை. சக்திக்கலை, வியாபினிக்கலை, சமனைக்கலை, உன்மனைக்கலை. சமனைக்கும் வியாபினிக்கும் நடுவில் வியோமரூபினி, அனந்தை, அனாதை, அனாசிருதை நான்கும் சதுர வடிவில்

எழுத்து /வடிவம்- அகாரக்கலை-அ, உகாரக்கலை-அ, மகாரக்கலை-ம, விந்துக்கலை-0, அர்த்தசந்திரக்கலை- பிறைவடிவம், நிரோதினிக்கலை- முக்கோணம், நாதக்கலை- நடுவில் ஒரு கலப்பை இருபக்கமும் இரு வட்டம், நாதாந்தக்கலை- வலப்பக்கம் வட்டம் கலப்பையுடன். சக்திக்கலை- இடப்பக்கம் வட்டம் கலப்பையுடன். , வியாபினிக்கலை- வலப்பக்கம் ஒரு வட்டத்துடன் திரிசூலம், சமனைக்கலை- இரு நேர் கோட்டிற்கு இருபுறமும் இரு வட்டம், உன்மனைக்கலை- தனிவட்டம்.

அதிதேவர்கள்- அகாரக்கலை- பிரம்மா, உகாரக்கலை- திருமால், மகாரக்கலை-உருத்திரன், விந்துக்கலை- மகேசுவரன், அர்த்தசந்திரக்கலை- சதாசிவன், நிரோதினிக்கலை- சதாசிவன், நாதக்கலை- சதாசிவன், நாதாந்தக்கலை- சதாசிவன், சக்திக்கலை-சிவன், வியாபினிக்கலை- சிவன், சமனைக்கலை- சிவன், உன்மனைக்கலை- சிவன்.
நிறம்- அகாரக்கலை- எரியும் தழல், உகாரக்கலை- சூரிய சந்திரன் ஒன்றாய் இருப்பது போன்ற, மகாரக்கலை- மின்னல் ஒளி, விந்துக்கலை- விளக்குச் சுடர், அர்த்தசந்திரக்கலை- வாளின் கூரிய பகுதி, நிரோதினிக்கலை- புகை, நாதக்கலை- மாணிக்க ஒளி, நாதாந்தக்கலை- இரண்டு மின்னல்கள் சேர்ந்து, சக்திக்கலை- 100 சூரியன், வியாபினிக்கலை- 1000 சூரியன், சமனைக்கலை- கோடி சூரியன், உன்மனைக்கலை- அளவிலா சூரிய ஒளி
தத்துவம்- அகாரக்கலை- ஆன்மதத்துவம் (நிலமாகிய பூதம் முதல் மூலப்பிரகிருதிவரை), உகாரக்கலை- ஏழு வித்யா தத்துவங்களில் மாயை நீங்கிய ஆறும், மகாரக்கலை- சிவதத்துவம்- ஐந்தில் சுத்த வித்தை, ஈச்வரம் இரண்டில் நிற்கும், விந்துக்கலை- மாயை, அர்த்தசந்திரக்கலை- சதாசிவ, நிரோதினிக்கலை- சதாசிவ, நாதக்கலை- சதாசிவ, நாதாந்தக்கலை- சதாசிவ, சக்திக்கலை- சிவ, வியாபினிக்கலை- சிவ, சமனைக்கலை- சிவ, உன்மனைக்கலை- சிவ.

பதினாறு கலைகள்

கலை-1- மேதைக்கலை- அகாரக்கலை

மாத்திரை அளவு

3- மூன்று

பரப்பு அளவு

நாபி-தொப்புள் முதல் மார்பு நடு-இதயம் வரை 12 விரல்

ஆதாரம்/நிராதாரம்

ஆதாரம்

எழுத்து/ வடிவம்

அதிதேவர்கள்

பிரம்மா

நிறம்        

எரியும் தழல்

தத்துவம்    

ஆன்மதத்துவம் (நிலமாகிய பூதம் முதல் மூலப்பிரகிருதிவரை)

கலை-2- அருக்கீசக்கலை- உகாரக்கலை

மாத்திரை அளவு

2- இரண்டு

பரப்பு அளவு

இதயம் முதல் தொண்டைக்குழிவரை 7 விரல்

ஆதாரம்/நிராதாரம்

ஆதாரம்

எழுத்து/வடிவம்

அதிதேவர்கள்

திருமால்

நிறம்        

சூரிய சந்திரன் ஒன்றாய் இருப்பது போன்ற

தத்துவம்    

ஏழு வித்யா தத்துவங்களில் மாயை நீங்கிய ஆறும்

கலை-3- விடக்கலை- மகாரக்கலை

மாத்திரை அளவு

1- ஒன்று

பரப்பு அளவு

தொண்டை முதல் நாக்கின் அடிவரை 4 விரல்

ஆதாரம்/நிராதாரம்

ஆதாரம்

எழுத்து/வடிவம்

அதிதேவர்கள்

உருத்திரன்

நிறம்        

மின்னல் ஒளி

தத்துவம்    

சிவதத்துவம்- ஐந்தில் சுத்த வித்தை, ஈச்வரம் இரண்டில் நிற்கும்

நாபிக்கு அடுத்துள்ள மேதைக் கலை(அ), அருக்கீசக் கலை(உ), விடக் கலை(ம) ஆகிய மூன்றின் முடிவில் முதல் சூன்யம்

கலை-4- விந்துக்கலை

மாத்திரை அளவு

½ (0.5) அரை

பரப்பு அளவு

நாக்கினடி முதல் புருவ நடுவரை 4 விரல்

ஆதாரம்/நிராதாரம்

ஆதாரம்

எழுத்து/வடிவம்

0

அதிதேவர்கள்

மகேசுவரன்

நிறம்        

விளக்குச் சுடர்

தத்துவம்    

மாயை

கலை-5- அர்த்தசந்திரன் கலை

மாத்திரை அளவு

1/4 (0.250) கால்

பரப்பு அளவு

புருவநடு முதல் உச்சித்துளைவரை- முதல் 3 விரல்

ஆதாரம்/நிராதாரம்

ஆதாரம்

எழுத்து/வடிவம்

பிறைசந்திரன்

அதிதேவர்கள்

சதாசிவன்

நிறம்        

வாளின் கூரிய பகுதி

தத்துவம்    

சதாசிவ

கலை-6- நிரோதினிக்கலை

மாத்திரை அளவு

1/8 (0.125) அரைக்கால்

பரப்பு அளவு

புருவநடு முதல் உச்சித்துளைவரை- அடுத்த 3 விரல்

ஆதாரம்/நிராதாரம்

ஆதாரம்

எழுத்து/வடிவம்

முக்கோணம்

அதிதேவர்கள்

சதாசிவன்

நிறம்        

புகை

தத்துவம்    

சதாசிவ

விந்துக்கலை, அர்த்தசந்திரன்கலை, நிரோதினிக்கலை ஆகிய மூன்றின் முடிவில் இரண்டாம் சூன்யம்

கலை-7- நாதக்கலை

மாத்திரை அளவு

1/16 (0.0625) வீசம்-மாகாணி

பரப்பு அளவு

புருவநடு முதல் உச்சித்துளைவரை- அடுத்த 3 விரல்

ஆதாரம்/நிராதாரம்

நிராதாரம்

எழுத்து/வடிவம்

ஏற்கலப்பை இருபக்கமும் வட்டம்

அதிதேவர்கள்

சதாசிவன்

நிறம்        

மாணிக்க ஒளி

தத்துவம்    

சதாசிவ

கலை-8- நாதாந்தக்கலை

மாத்திரை அளவு

1/32 (0.03125) அரைமா- அரைக்காணி

பரப்பு அளவு 

புருவநடு முதல் உச்சித்துளைவரை- அடுத்த 3 விரல்

ஆதாரம்/நிராதாரம்

நிராதாரம்

எழுத்து/வடிவம்

ஏற்கலப்பை வலப்பக்கம் ஒருவட்டம்

அதிதேவர்கள்

சதாசிவன்

நிறம்        

இரண்டு மின்னல்கள் சேர்ந்து

தத்துவம்    

சதாசிவ

கலை-9- சக்திக்கலை

மாத்திரை அளவு

1/64 (0.0156125) காணியே- முந்திரிகை

பரப்பு அளவு

உச்சித்துளை 1விரல்

ஆதாரம்/நிராதாரம்

நிராதாரம்

எழுத்து/வடிவம்

ஏற்கலப்பை இடப்பக்கம் ஒருவட்டம்

அதிதேவர்கள்

சிவன்

நிறம்        

100 சூரியன்

தத்துவம்    

சிவ

சக்திக்கலைக்கு அடுத்து மூன்றாம் சூன்யம்

கலை-10- வியாபினிக்கலை

மாத்திரை அளவு

1/128 (0.007806125) அரைக்காணியே- கீழரை

பரப்பு அளவு

சக்திகலை முதல் 3விரல்

ஆதாரம்/நிராதாரம்

நிராதாரம்

எழுத்து/வடிவம்

சூலத்துடன் ஒரு வட்டம்

அதிதேவர்கள்

சிவன்

நிறம்        

1000 சூரியன்

தத்துவம்    

சிவ

வியாபினிக்கலைக்கு அடுத்து நான்காம் சூன்யம்

கலை-11- சமனைக்கலை

மாத்திரை அளவு

1/256 (0.00395306125) முந்திரிகையே-கீழ்க்கால்

பரப்பு அளவு

வியாபினிக்கலை முதல் 4 விரல்

ஆதாரம்/நிராதாரம்

நிராதாரம்

எழுத்து/வடிவம்

இரு நேர் கோட்டிற்கு இருபுறமும் இரு வட்டம்

அதிதேவர்கள்

சிவன்

நிறம்        

கோடி சூரியன்

தத்துவம்    

சிவ

சமனைக்கலைக்கு அடுத்து ஐந்தாம் சூன்யம்

கலை-12- உன்மனைக்கலை

மாத்திரை அளவு

மனத்தளவு

பரப்பு அளவு

சமனைக்கலை முதல் 4விரல்

ஆதாரம்/நிராதாரம்

நிராதாரம்

எழுத்து/வடிவம்

தனிவட்டம்

அதிதேவர்கள்

சிவன்

நிறம்        

அளவிலா சூரிய ஒளி

தத்துவம்    

சிவ

உன்மனைக்கலைக்கு அடுத்து ஆறாம் சூன்யம்

கலை-13 - வியோமரூபினிக்கலை
கலை-14 - அனந்தைக்கலை
கலை-15 - அனாதைக்கலை
கலை-16 - அனாசிருதைக்கலை

வியாபினிக் கலைக்கும் சமனக் கலைக்கும் இடையே மிகவும் சூக்குமமாய் நான்கு கலைகள் 1.வியோம ரூபிணி, 2.அனந்தை, 3.அனாதை, 4. அனாசிருதை உள்ளன. இவைகளுக்கு விந்துவாகிய வட்டப்புள்ளியே வடிவமாகும். ஞான ஆகாயம், ஞானக்கடல், ஞானக்கண்ணாடி, கோடி சந்திரர் ஒளி என இந்தக் கலைகளைக் கருதி தியானம் செய்க. பதிமூன்று முதல் பதினாறாகிய கலைகளுக்கு வியாபினியின் மாத்திரையில் பாதிப் பாதியாக கொள்க.

சமனை மற்றும் உன்மனை வரை நிராதாரமாகச் சொல்லப்பட்ட கலைகளைக் கடந்து தியானம் செய்தால் மாயையான உலகப் பாசங்கள் விலகும். கடவுளை எளிதில் அடையலாம்.

பத்துக்கும் பதினொன்றுக்கும் நடுவில் இருக்கும் நான்கு கலைகளும் சமமாக சதுர அளவில் பிரிவதில்லை. வியோமரூபிணி- கீழ், அனந்தை- இடப்பக்கம், அனாதை வலப்பக்கம், அனாசிருதை –மேல் என வைத்து தியானிக்கவும்

9. ஆறு சூன்யங்கள்.

சூன்யங்கள் என்பது இடைவெளியாகும். காற்றின் பரப்பில், நீரின் பரப்பில் சுழல் ஏற்படும் இவை வெற்றிடங்களே. வேகத்தின் வலிமையால் இந்த வெற்றிடங்கள் சூன்யங்கள் உருவாகின்றன. இந்த சூன்யங்களில் சிக்காமால் திகைக்காமல் மேலே தாண்டிப் போவதற்காகவே இந்த சூன்யங்களை நினைத்து தியானம் செய்வது சூன்ய தியானமாகும்.

சூன்யங்கள்இருப்பிடம்
1. நாபிக்கு அடுத்துள்ள மேதைக் கலை(அ), அருக்கீசக் கலை(உ), விடக் கலை(ம) ஆகிய மூன்றின் முடிவில் முதல் சூன்யம்;
2. விந்துக்கலை, அர்த்தசந்திரன்கலை, நிரோதினிக்கலை ஆகிய மூன்றின் முடிவில் இரண்டாம் சூன்யம்:

3. நாதக் கலை, நாதாந்தக் கலை, சக்திக் கலை ஆகிய மூன்றின் முடிவில் மூன்றாம்சூன்யம்;
4. வியாபினி கலைக்கு மேல் நான்காம் சூன்யம்;
5. சமனைக் கலைக்கு மேல் ஐந்தாம் சூன்யம்;
6. உன்மனைக் கலைக்கு மேல் ஆறாம் சூன்யம்.

இந்த ஆறு சூன்யத்திற்குமேல் பரம் பொருள்
ஆதாரம்/ நிராதரம் -முதல் 2 சூன்யமும் ஆதாரம். மற்ற 4 சூன்யமும் நிராதாரம். நிராதாரத்தில் இருக்கும் சூன்யத்தைக் கடப்பதை முப்பாழ் என்பர்.

******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880798
All
26880798
Your IP: 3.236.18.23
2024-03-19 16:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg