gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

முதுமை வருவதற்குள் ஓர் உடலில் எத்தனை சாவுகள். குழந்தைப்பருவம், வாலிபப் பருவம், நடுவயது பருவம் என நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் இறந்து கொண்டுதான் இருக்கின்றோம்!

இராஜயோகம்

Written by

                                   ஓம்சிவாயநமக!
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து என்பணியை
உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!
0=0=0=0=0=0


பொது:


வாழ்வின் வெற்றிக்கு மகிழ்வு ஓர் காரணம். மகிழ்ச்சிக்கு உடல்நலம் இன்றியமையாதது. உடல் நலமுடன் இருக்க, இயங்க சில பயிற்சிகள் அவசியம். அப்பயிற்சிகள் உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் ஆகியவைகளைச் சீராக்கி, நுறையீரல்கள், முதுகுத்தண்டு மற்றும் உள்ளுறுப்புகளை முழு அளவில் இயக்கிட உதவி புரிகின்றது. உடலின் உறுப்புக்கள் நல்லமுறையில் இயக்கப்பட்டால் நாள்தோறும் புத்துணர்வோடு நோய்களின் தாக்கமின்றி செயல்படலாம். இதற்காக தினமும் சில மணி நேரங்களைச் செலவிடுதலில் எந்த தவறுமில்லை.
மனிதன் வாழ்வு இயற்கையை ஒட்டி இருந்தது. அப்போது மனிதனின் இயக்கம் நன்றாக இருந்ததால் அவன் உறுப்புகள் மிகுந்த செயல்பாடுகளை கொண்டிருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அவனிடம் அதிகமாக இருந்தது. அவன் ஆரோக்கியமாக இருந்தான். உடல் உழைப்புக்குத் தகுந்த உணவு கிட்டாதபோதுதான் அவனை நோய் தாக்கியது.
நவி உலகில் உடல் உழைப்பு குறந்துவிட்டது. முக்கிய உறுப்புகள் இயக்கமும் குறைய எதிர்ப்பு சக்திகள் உடலில் குறையத்தொடங்கியது. நோய்க்கு தவறான உணவுப் பழக்கம், அவனின் வாழ்க்கை முறை, உடலில் கழிவுகளின் தேக்கம், இரத்த, காற்று, வெப்ப ஓட்டங்களால் ஏற்படும் தடை ஆகியவைகளே காரணமாயின. மேலும் அதை மிகப்படுத்த உணவு முறையில் கட்டுப்பாடின்றி தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு உறுப்புக்களுக்கு அதிக செயலாக்கம் நிர்பந்திக்கப் படுவதால் அவைகள் தளர்ச்சியுறுகின்றன. இது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகிறது.
இதை சரிசெய்ய சிலர் உடற் பயிற்சிகளை செய்கின்றனர். உடற் பயிற்சி தசைகளை இயக்கி இறுக்கி வலுவடைய மட்டுமே செய்கிறது. உடற் பயிற்சிக்கு நம் சக்தி அதிகமாக செலவிடப்படுகின்றது. உடல் உறுப்புகள் ஓரளவே இயக்கமடைகிறது.
நோய்களை எதிர்க்கும் ஆற்றல் உள்ள உள் உறுப்புகளின் இயக்கத்திற்கு உடற் பயிற்சியைவிட ஆசனப்(யோகா) பயிற்சி சிறந்தது. கண்ணுக்குத் தெரியா உள் உறுப்புகள் இயக்கமடைந்து பலன் தரும். ஆசன, யோக பயிற்சிகளினால் தைராய்ட், சோற்றுப்பை, பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல், மற்ற உருப்புகள் எல்லாம் முழுவதும் இயக்கமடைந்து பலனடைகிறது. இரத்தக்குழாய்களில் கூடுதல் பிராணன் செல்வதால் எல்லா உறுப்புகளுக்கும் தடையில்லா இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. முதுகுத்தண்டு எல்லா நிலைகளிலும் வளைந்து செயல்பட்டு அதை ஒட்டியுள்ள நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. மனக்கட்டுப்பாடு வளரும். உணவு கட்டுப்பாடு தன்னால் ஏற்படும்.
உலக ஆத்மாக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் ஆனந்த வாழ்வு வாழவேண்டும் என்பதே குருஸ்ரீ பகோராயின் எண்ணம். ஒரு மனிதன் ஆனந்த ஆரோக்கிய வாழ்வு வாழ்திடில் அவனைச் சுற்றியுள்ள சுற்றமும் ஆனந்தத்தில் திளைக்கும். ஆகவே எல்லா ஆன்மாக்களும் இந்த தேக, ஆசன, யோக முறைகளைப் பயிற்சி செய்து ஆரோக்கிய ஆனந்த வாழ்வு வாழ்ந்திடுவீர். அதைத் தருவது  “இராஜயோகம்“
கருத்து வேற்றுமைகளால் ஏற்படும் இறுக்கம், விறைப்பு (Tension), எளிதில் கலவரமடைந்து சஞ்சலத்தினால் ஏற்படும் பயம், நடுக்கம் (Nervous strain), உணர்ச்சிமிக்க மனவெழுச்சிகளினால் ஏற்படும் தீவிர உணர்ச்சிகள் (Emotional disturbances), போதுமான தூக்கம், உறக்கம் இல்லாதிருத்தல் (Sleeplessness), சந்தி, நிம்மதி, அமைதியில்லாதிருத்தல் (Peacelessness) ஆகியவைகளிலிருந்து தப்பிக்க, விடுபட தங்களது கவனத்தை, மனதை “யோகா” வின் பக்கம் மக்கள் திரும்புகின்றனர்.
வந்தபின் நாடுவதைவிட வருமுன் காப்பது என்ற அடிப்படையில் அனைவரும் ”யோகா” கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். “யோகா” என்பது அறிவு புகட்டும், ஞானம் உபதேசிக்கக்கூடிய ஒரு அமைதியான ஒழுங்கீனமில்லா வழி முறைகளைக் கொண்ட கலை.எந்த ஒரு மனிதனும் தொடர் யோகா பயிற்சிகள் மூலம் நிலைபெற்ற அமைதி, முக்தி, எப்போதும் சந்தோஷத்துடன் கூடிய புனிதமான வாழ்வு, ஜீவன் முக்தி அடைய வாய்ப்புகள் உண்டு. ‘யோகா’ என்றால் இனைப்பு, தொடர்பு, சம்பந்தம் என்றாகும். பரிசுத்தமான ஆன்மீக நிலையில் சொன்னால் மனதிற்கும், உள்மனதிற்கும் உள்ள ஐக்கியமான ஒர் ஒற்றுமை வளையமாகும்.
நம்மில் பலருக்கு இந்த இனைப்பு வளையம் உடைந்து, செயலில்லா தொடர்பில்லா நிலையில் உள்ளது. முதலில் அந்த புனித தொடர்பை மீண்டும் ஏற்படுத்த முனைய வேண்டும். நாம் இறைவனின் அணுக்கள். அவனின் குழந்தைகள். எப்படி ஒரு குழந்தை பிறந்தவுடன் அது தந்தையின் உறவாகிறதோ, பின் வளர்ந்தபின் வாழ்வின் அனுபவங்களை தந்தையின் மூலம் தெரிந்து புரிந்து செயல்பட நாடுகின்றதோ, அதுபோல நாமும் இறைவனிடம் நம் உறவை மேம்படுத்த வேண்டும். ஒன்ற வேண்டும். யோகத்தின் உதவியோடு நமது மனம், உள்மனம் இறையின் அருளைப் பெறமுடியும்.
இறைபற்றிய ஞான அறிவு, அந்த அறிவின்மேல் முழுநம்பிக்கை, மனதளவில் எப்போதும் அதை நிலை நிறுத்துவது என்ற மூன்றின் அடிப்படையைக் கொண்டு நமது உள்மனதை யோகம் இயக்க முடியும். நாம் இறையின்மேல் கொண்ட அன்பை, யோகமானது தொடர்ச்சியான தியானம், மாசு மருவற்ற மயக்கத்தை, புனிதமான, முழுமையான அர்ப்பணிப்பை தருகின்றது. ‘யோகா’வின் புரிந்து கொள்ளும் சக்தி மனதிற்கு தோழமையானது.‘யோகா’விற்காக மந்திரங்களையோ, ஜபங்களையோ திரும்பத் திரும்ப சொல்லி மனதில் பதிய வைக்க வேண்டியதில்லை. ‘யோகா’ என்பது மனித மனதில் தூய்மையான ஒருமுனைப்படுத்தும் ஒரு செயலாகும். இறை தானே செய்ததும், எல்லோரும் எந்த முறையையும் சார்ந்திராமல் கற்றுக்கொள்ள உதவுவதும் “இராஜயோகம்” ஆகும்.
இறையை தந்தையாக நினை. அதுதான் உண்மை. ஒரு குழந்தை தன் தந்தையை நினைப்பதுபோல இறை உன்மனதில் எப்போதும் இருப்பார். இறை ஒளி மயமானவர். இறையின் ஒளி வடிவத்தைக்காண ‘யோகம்’ உதவி புரியும். இதற்கு பிரமச்சாரியம் அதிகமான உதவியுடன் கூடியதாக இருக்கும். “இராஜயோக”ப் பயிற்சியினால் மன அழுத்தம் ஏற்படாமலிருக்கும். மன அமைதி கிட்டும். புனிதத் தன்மை வந்தடையும். வாழ்வு சீராகும். உடல் தளர்ச்சி அடையாது. உயிர்களுக்கு வழிகாட்டக்கூடிய மேலான நிலையை அடைய சிறந்த வழிகாட்டக்கூடிய ஞானம் பெறுவர். எல்லோருக்கும் வழிகாட்டக்கூடிய உதாரண புருஷன், ஆத்மா ஆவீர்.
நமது அறிவிற்கு ஆதாரம் அனுபவமே. தெரிந்ததைக்கொண்டு தெரியாததைக் கிரகிக்கும் அனுமான ஞானத்திற்கும் அனுபவமே அடிப்படையாகும். உலகின் சமயங்கள் எல்லாம் சாஸ்திரங்களை உடையவை. அஃதன்றி தோன்றிய சமயங்கள் நாளடைவில் மறைந்து விட்டது. சமயங்களின் சமயவாதிகள் உண்மைகளை அனுபவித்து அதை உபயோகித்தார்கள். நம் அறிவின் பலத்தின் அடிப்படையாகிய அனுபவத்தின் பேரில் சமயங்கள் அமைக்கப்பட்டன. சாஸ்திரங்களை உருவாக்கினர். உபதேசங்கள் செய்தவர்கள் கடவுளைக் கண்டனர். தங்கள் ஆன்மாவைக் கண்டனர். எதிர் காலத்தை, தங்களின் அமர வாழ்க்கையை உணர்ந்தனர். தாங்கள் கண்டதை உபதேசித்தனர்.
சமய மதங்கள் முன்னோர்களின் அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது. ஒரு சமயத்தை பின்பற்ற நினைக்கும் ஒருவன் அந்த அனுபவத்தை உணர்ந்தால்தான் அந்த சமயத்தை முழுமையாக பின்பற்றமுடியும். இந்த அனுபவங்களை அடையும் வழியைப் புகட்டுவது யோக சாஸ்திரமாகும். ஆன்மீக விடுதலை அடைவதைக் குறிக்கோளாக கொண்டுள்ள முறைகளுக்கு ‘யோக’ முறைகள்தான் சிறந்த வழிகாட்டி.
யோகமுறைகளை ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அனைவரும், இதுதானே எனக்குத்தெரியும் என்ற நினைவில் செய்ய முயன்றால் அது ஆபத்தில் போய் முடியும். ஒரு குருவுடைய நேரடித் தொடர்பில்தான் ஆபத்தின்றி நன்கு பயின்றிட முடியும் என்ற எச்சரிக்கையை இங்கு நினைவுபடுத்த விருப்புகின்றேன். ஆன்மாவை உணராத நிலையில் அது தன்னிடம் இருக்கின்றது என ஒருவனால் எப்படி உரிமையுடன் சொல்லமுடியும். இறைவன் இருந்தால் நாம் அவரைக்காண வேண்டும். ஆண்டவனிடத்தில் நம்பிக்கை வைத்தால் அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள், ஒழுக்கம் நிரம்பப் பெற்றவர்களாக ஆக வாய்ப்புண்டு எனச் சொல்பவரின் பேச்சை நம்பியவர்கள் எத்தனைக் காலம் நல்லவர்களாகவும் ஒழுக்கமுடையவர்களாகவும் இருப்பர் எனக் கூறமுடியும். மணிதனுக்கு உண்மை வேண்டும். அவன் அறிவிற்கு அது புலப்படவேண்டும். ஒவ்வொரு சாஸ்திரத்தையும் கற்கத் தனித்தனி முறைகளை கையாளவேண்டும். மனித அறிவிற்குப் புலப்பட்டு உணர்ந்து அனுபவத்தில் அடைவதற்குரிய செயல் முறைகளைத் தருவது “இராஜயோகம்” என்ற சாஸ்திரமாகும்.
பரிசுத்தமான சுயநலமில்லாத உலகின்வாழ் மக்களுக்கு நன்மை புரியும் நோக்கத்தில் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்களை முழு நம்பிக்கையுடன் முயன்று செயல் முறைகளைக் கையாண்டால் உண்மைகளைப் பற்றிய ஞானம் தெரியவரும். புற உலகின் உண்மைகளை நமது புலன்களாகிய கருவிகளால் அடைகின்றோம். அக உலகைப் பற்றி அறிவதற்குரிய சாதனங்கள் நம்மிடம் இல்லை. அகத்தில் தோன்றும் எண்ணங்கள், விவரங்கள், மனம் பற்றிய உண்மைகளை அறிந்து ஆராய நாம் ‘இராஜயோக’ முறை சாஸ்திரத்தை பயன்படுத்துவது சிறப்பு. மனத்தை அளக்க, அதன் சிறப்பை புரிந்து கொள்ள மனம்தான் உதவி செய்ய வேண்டும். நம்மின் கூர்ந்து நோக்கும் சக்தியை உட்புறமாக திருப்பினால் மனம்பற்றிய உண்மைகள் புலனாகும். சிதறிய ஒளிக்கிரணங்கள் போன்ற மனிதனின் வலிமையான சக்திமிக்க ஆற்றல்களை ஒன்றுபடச் செய்தால் ஒளிபிறக்கும். அதுவே சக்தி ஒளி. சக்தி ஒளியைக்கண்டவன் என்றுமே அழியாத தூய்மையான ஓர் பொருளை நேருக்கு நேர் காண்கின்றான். அதன்பின் துயரமில்லை, துன்பமில்லை, நிறைவேறாத ஆசையும் பயமும்தான் துன்பங்களுக்கு காரணம். தனக்கு மரணமில்லை, தான் பூரணன் என்று அறிந்த கொண்ட அந்த உயிர்க்கு வீண் ஆசைகள் எழாது. அதாலால் துன்பமில்லை. பரிபூரண ஆனந்தம் ஏற்படும்.
ஞானம் பெற ஒரே வழி மனத்தை ஒரு முகப்படுத்துதலே. ஒருமுகப்படுத்திய மனதினால் ஊடுருவினால் உலகத்தின் இரகசியங்கள் தெரியவரும். ஊடுருவலின் வலிமையும் சக்தியும் வேகமும் மனதைக் குவிப்பதால் கிடைக்கும். மனதின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. எந்த அளவிற்கு மனம் குவிக்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு ஆற்றல் அதிகமாகும். காரிருளில் கதிரவன் கதிர்கள் பாய்ந்தால் மறைப்பொருள்கள் தெரிவது போல குவிந்துள்ள மனம் தனது இரகசியங்களை வெளிப்படுத்தும்.‘இராஜயோக’ப் பயிற்சிக்கு குருட்டு நம்பிக்கைத் தேவையில்லை. ஆராய்ந்து உண்மைகளை கண்டபின் நம்பிக்கை வையுங்கள். செயல்படுங்கள். அதற்குமுன் எதையும் நம்பாதீர்கள் என்பதுதான் ‘இராஜயோகம்’.
‘இராஜயோகம்’ கற்க நீடித்த பயிற்சியும், காலமும் வேண்டும். ஒரு பகுதி பயிற்சி உடலையும், மீதிப் பகுதி பயிற்சி மனதையும் சார்ந்தது. உடலையும், மனதையும் கட்டுப்படுத்த உடல் சார்ந்த உதவிகள் வேண்டும். உடலை அடக்கியபின் மனதை வயப்படுத்தி ஆற்றல்களைக் குவித்து ஒருமுகமாக்கி நம் ஆணைகளை நிறைவேறச் செய்ய முடியும். சூட்சம தோற்றம்- சூட்சமமான உணர்வுகளைப் பெறும் ஆற்றல்- காரணம் எனலாம். தூல தோற்றம்- காரியங்கள் புலன்களால் உணரக்கூடியது- காரியம் எனலாம். “நுண்ணிய அகவுலகின் தூல வடிவமே புற உலகமாகும்.” அக உலகு சூட்சமமானது, அதுவே காரணமாகும். புற உலகு தூலமாக இருப்பது- அதுவே காரியமாகும். அகத்தின் நுண்ணிய சக்திகளே புறத்தில் தூல சக்திகளாக இருக்கின்றது. அகத்தின் சக்திகளை வழிப்படுத்த தெரிந்து கொண்டால் புறத்தில் உள்ள இயற்கை முழுவதையும் தன் வயப்படுத்தமுடியும்.
இயற்கையின் விதிகள் தன்னை தாக்காது அவற்றிற்கு அப்பால் இருக்கும் நிலையை அடைவது ஒரு யோகியின் விருப்பமாகும். மனித இனமுன்னேற்றம், நாகரீகம் ஆகியவை மனிதன் இயற்கையை வெற்றி கொள்வதைத்தான் குறிக்கின்றது. ஒவ்வோர் ஆன்மாவும் உள்நிறைந்த தெய்வத் தன்மையுடையதுதான். உள்ளும் புறமும் நிறைந்திருக்கும் இயற்கையை அடக்கி, உள்ளே உள்ள தெய்வத்தன்மையை வெளிப்படுத்துவதே ‘இராஜயோகத்தின்’ நோக்கமாகும்.
பொதுவாக எந்த ஒரு பயிற்சியும் செய்ய ஆரம்பிக்கும்போது ஒரு குரு அல்லது ஆசிரியர் அல்லது மேற்பார்வையாளர்கீழ் செய்ய வேண்டும். அதுதான் சரியான முறையாகும். எனினும் இதைப்படித்து செய்ய சிலர் முனையலாம். அவர்கள் மிகுந்த கவனமுடன் செய்து பார்க்க வேண்டும். எப்படியிருப்பினும் ஒரு குருவின் அருள் இருப்பது நலம். அதற்காக இங்கே விநாயகர் அகவல் எனும் செய்யுள் தந்துள்ளோம். அதைப் படித்து அவரை குருவாக நினைத்து செய்ய வேணுமாய் கேட்டுக் கொள்கின்றேன். யோகம் பற்றிய பல வார்த்தைகள் ஒளவையார்பாடலில் பதிந்துள்ளதைக் காணலாம்.

சீதக் களபச் செந்தாமரைப்பூம்பாதச் சிலம்பு பல இசை பாடப்

பொன் அரை ஞானும் பூந்துகில் ஆடையும் வண்ண மருங்கில் வளர்ந்து அழகு

எறிப்ப பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்ட முப்புரிநூல் திகழ் ஒளி மார்பும்

சொற்பதம் கடந்த திரிய மெய்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!

முப்பழம் நுகரும் மூஷிக வாகனனே! இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டித்

தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே திருத்திய

முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய் பொருந்தவே வந்து என் உளம்தனில் புகுந்து

குரு வடிவாகிக் குவலயம் தன்னில் திருவடி வைத்துத் திறம் இது பொருள் என

வாடாவகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக் கோடாயுதத்தால் கொடுவினைகளைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்

கருவிகள் ஒடுங்கும்கருத்தினை அறிவித்து இருவினைதன்னை அறுத்து இருள்கடிந்து

தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி மலம் ஒரு மூன்றின் மயக்கம்

அறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறாதாரத்து அங்கிசை நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக் கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசைபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலதாரத்தின் மூண்டு எழு கனலைக் காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்உடல் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்மமும் எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி

என்னை அறிவித்து எனக்கு அருள்செய்து முன்னைவினையின் முதலைக்களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டிற்கும் ஒன்று இடம்என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்திஎன்

செவியில் எல்லையில்லா ஆனந்தம் அளித்து அல்லல்களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்குஅணுவாய் அப்பாலுக்குஅப்பாலாய்க் கணுமுற்றிநின்ற கரும்புள்ளேகாட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத்

தத்துவ நிலையைத் தந்துஎனை ஆண்ட வித்தக விநாயகன் விரைகழல் சரணே!

“எந்த ஒன்றிலிருந்து பல தோன்றினவோ,எந்த ஒன்று பலவாக இருக்கின்றதோ,

அந்த ஒன்றை சாஸ்திரங்கள் காண முயல்வதை-இராஜயோகம்அகத்தில் ஆரம்பித்து அதன் தன்மையை ஆரய்ந்து அதன்மூலம் அகம் புறம் அனைத்தையும் அடக்கியாள உதவி புரியும். இந்தனை சிறப்புகளுக்குரிய “இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.

   

1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை

 

                                   ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

19666649
All
19666649
Your IP: 162.158.79.107
2020-12-01 04:38

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg