gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
ஞாயிற்றுக்கிழமை, 06 January 2019 11:13

பீடங்கள்!

Written by
Rate this item
(0 votes)

பீடங்கள்!

சதச்ருங்க மலையில் விஷ்ணு அம்சம் கொண்ட சனத்குமாரர் ஈசனைக் குறித்து தவம் செய்ய அவருக்கு அம்பிகையுடன் காட்சி கொடுத்தும், தியானத்தினால் சகலமும் பிரம்மமாகக் காட்சி அளிக்கும் நிலையில் ஈஸ்வர தரிசனத்தை உணராத நிலையில் சனத்குமாரர் காட்சி கொடுத்தவர்களை பூஜிக்கவில்லை. தியானம் என்றால் அப்படியொரு தியானம். சிவன் தன் கையிலிருந்த ‘டமரு’ என்ற உடுக்கையில் ஒலி எழுப்ப சனத்குமரர் கண் திறந்து பார்த்து வணங்கினார். சிவன் தன்னை பூஜிக்காததால் சபித்துவிடப்போவதாக கோபம் கொண்டவர் போல கூற, சனத்குமாரர் “உம் சாபம் என்னையோ என் ஆன்மாவையோ பாதிக்காது” என்றார். அவரது ஞானத்தை அறிந்த சிவன் இந்தப் பிறவியில் பிரம்ம புத்திரராக பிறந்த அவரை இன்னொரு ஜன்மத்தில் தன் புத்திரானாக பிறக்க கேட்டுக் கொள்ள சனத்குமாரர் சம்மதம் தெரிவித்தார். எத்தனையோ பேருக்கு புத்திர பாக்கியம் அருளும் ஈசன் தனக்கு கேட்ட புத்திர பாக்கியம் இது. சனத்குமாரரை ஆழ்ந்த தியானத்திலிருந்து எழுப்ப சிவபெருமான் தன் டமரூ என்ற உடுகையிலிருந்து டம்டம் என்று நாதம் எழுப்பியபோது அந்த நாத ஒலி அட்சரஒலியாக உருவாகி பல புண்ணிய இடங்களை அடைந்து உருவம் பெற்று பதிந்துள்ளது.

பிரளயத்திற்குப்பின் உலகில் படைப்புத் தொழிலை ஆரம்பித்து அனைத்தையும் உற்பத்தி செய்த பிரம்மனுக்கு. மற்ற தொழில்களான காத்தல். அழித்தல். அருளல். மறைத்தல் ஆகியமற்ற தொழில்களும் சிறப்பாக நடக்க விஷ்ணு மற்றும் சிவனின் ஈடுபாடு தேவை என்று நினைத்தார். படைக்க நானும், காக்க விஷ்ணுவும் இருக்க மற்ற தொழில்களும் சரிவர நடைபெற்றால்தான் மீண்டும் சிருஷ்டிதொடங்க முடியும். ஜீவன்கள் மறைந்து கொண்டிருந்தால்தான் புதியவைகளை படைக்க முடியும். என நினைத்த பிரம்மன் பெரும் யோகியாக விளங்கும் ஈஸ்வரனை போக வாழ்க்கைக்கு மாற்ற தன் மகன் தக்ஷபிராஜாபதியிடம் சென்று நீ மாகாமாயாவை நோக்கித் தவமிருந்து மாகாமயையை உனக்கு மகளாக பிறக்க வேண்டிக்கொள்ளச் சொன்னபடி தட்சன் வேண்ட தட்சாயணியாக பிறந்தவளை பிரம்மனும் விஷ்ணுவும் நேரில் சென்று மணந்துகொள்ளச் சொல்ல ஈஸ்வர் விரும்பி மணம் புரிந்து கொண்டார்.

ஈஸ்வரன் தனக்கு மருமகன் என்ற நினைவினால் தக்ஷபிரஜாபதிக்கு கர்வம் ஏற்பட்டது. மகளையும் மருமகனையும் காண கயிலாயத்திற்கு சென்றபோது என்ன சொல்லியும் நந்திதேவர் உள்ளே செல்ல அனுமதி அளிக்கவில்லை. அதனால் கோபங்கொண்ட தட்சன். கயிலை நாதனை அவமானப்படுத்தும் நோக்கில் ஓர் யாகம் நடத்த முடிவு செய்து மருமகன் சிவன் தவிர மற்ற அனைவருக்கும் அழைப்பு அனுப்பினான்.

சிவன் விருப்பத்திற்கு மாறாக தட்சாயினி தந்தையின் யாகத்திற்கு வந்தாள். தந்தை அவளை வரவேற்காமல் அவளையும் அவள் கணவன் சிவனையும் இழிவு படுத்தி பேச அவமானப்பட்ட தட்சாயினி, உன்னால் உருவான இந்த உடம்பு எனக்கு தேவையில்லை, இனி நீ எனக்கு தந்தையுமில்லை என கூறி ஆவேசத்துடன் தீயில் பாய்ந்து உயிரை விட்டாள். அவள் உயிர் போனாலும் அக்னி அவள் உடலை தீண்டவில்லை. சிவனால் உருவான வீரபத்திரர் அங்கு வந்து யாகத்தில் கலந்து கொண்டோரை துரத்திவிட்டு யாகத்தை அழித்து தட்சனையும் கொன்றார். இந்திரன் குயிலாக பறந்தான். அக்னியின் நாவை அறுத்தார் வீரபத்திரர், சூரியன் பற்கள் உடைந்துவிட்டன. சந்திரன் தேய்வுற்றான். அங்கு வந்த சிவன் அவள் உடலை தன் தோள் மீது போட்டுக் கொண்டு கோபத்துடன் தாண்டவமாடினார். அது ஊழிக் கூத்தானது.

சிவன் ருத்ரதாண்டவம் ஆடிய போது உபயகாவேரி எனும் இடத்தில்அவரது விரிந்த சடாமுடி பதினொரு இடங்களில் பூமியில் உதிர அந்த பதினொரு இடங்களிலும் பதினொரு சிவபருமான் உருவம் தோன்றி ருத்திர தாண்டவத்தை ஆடியது.

சிவ உருவங்கள் ருத்ர தாண்டவம் ஆடிய பகுதியை அடைந்த பெருமாள் பதினொரு விஷ்ணுவாய் தோன்றி பதினொரு சிவபெருமானையும் கட்டித் தழுவ சிவன் கோபம் தணிந்து சாந்தமடைந்து ஒரே உருவமாய் மாறினார். சிவபெருமான் சடாமுடி உதிர்ந்த பதினொரு இடங்களிலும் பதினொரு வடிவங்களாக பெருமாள் கோவில் கொண்டார். அவை திருநாங்கூர் திவ்ய தேசங்கள் எனப்படும்.

சிவனின் சடாமுடி உதிர்ந்த பதினோரு இடங்களிலும் பதினொரு ருத்திரர்கள் தோன்றி ருத்ர தாண்டம் ஆடியதை விஷ்ணு பதினொரு உருவமெடுத்து சந்தப் படுத்திய இடங்கள் பன்னிரு சிவ பீடங்களாக உருவாயின. அவை.
1.தத்புருஷ பீடம்-திருநாங்கூர் ராஜமாதங்கி உடனுறை மதங்கீஸர் சுவாமி திருக்கோவில்.
2.அகோரபீடம்-கீழைத் திருக்காட்டுப்பள்ளி அகிலாண்டநாயகி உடனுறை ஆரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவில்.
3.வாமதேவபீடம்-கீழ் சட்டநாதபுரம் திருயோகிஸ்வரர் யோகாம்பாள் உடனுறை யோகநாத சுவாமி திருக்கோவில்
4.சத்யோஜத பீடம்- காத்திருப்பு சொர்ணாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர் சுவாமி திருகோவில்.
5.சோமபீடம்-,திருநாங்கூர் அமிர்தபுரீஸ்வரர் திருக்கோவில்
6.சர்வபீடம்- அல்லிவிளாகம் செம்பதனிருப்பு நாகநாத சுவாமி திருக்கோவில்
7.மகாதேவபீடம்-திருநாங்கூர் பக்தவத்சலாம்பிகை உடனுறை நம்புவார்க்கன்பர் சுவாமி திருக்கோவில்,
8.பீமபீடம்-திருநாங்கூர் கைலாசநாதர் சுவாமி திருக்கோவில்,
9.பவபீடம்-திருநாங்கூர் சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்,
10.பிராணபீடம்-அத்தீஸ்வரம் பெருந்தோட்டம் அதுல்ய குஜாம்பாள் உடனுறைஐராவதேஸ்வரர் சுவாமி திருக்கோவில்,
11.ருத்ரபீடம்- அன்னப்பன்பேட்டை சுந்தராம்பாள் உடனுறைசுந்தரேஸ்வரர் திருக்கோவில்
12.பாசுபதபீடம்-மேல்நாங்கூர் நயனவரதேஸ்வரர் சுவாமி திருக்கோவில்

பதினாலு உலகங்களும் நடுங்க, இவ்வுலகிற்கு பேராபத்து நிகழும் என அஞ்சிய சூரிய சந்திரர்கள் மற்றும் தேவாதி தேவர்கள் நடுங்கி விஷ்ணுவிடம் விபரம் சொல்ல அவர் தன் சக்ராயுதத்தை அணுப்ப அது சிவனரை பின் தொடர்ந்து சதிதேவின் உடற் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீழ்த்தியது. அவ்வாறு துண்டு துண்டாக வெட்டப்பட்ட தட்சாயினியின் உடற் பாகங்கள் எங்கெங்கு விழுதனவோ அந்த இடங்கள் அம்பாளின் சக்தி பீடங்கள் எனப் பெயர் பெற்றன.

தேவபாஷையான சமஸ்கிருத எழுத்துக்களின் அட்சர ஒலி வடிவிலான பீஜாக்ஷார எழுத்துக்கள் தோன்றிய அந்த இடங்களில் தட்சாயனியின் உடல் பாகங்கள் விழுந்தது. அதாவது அக்ஷரங்களும் அங்கங்களும் ஒருங்கே சேர்ந்த இடங்களில் பீடங்கள் உருவாகி அவை மாத்ருகாபீடங்கள் / மகா சக்தி பீடங்கள் எனப்பட்டன. மற்ற இடங்களில் தட்சாயனியின் உடல் பாகங்கள் அணிகலன்கள் விழுந்தபடியால் அங்கும் பீடங்கள் ஏற்படுத்தப்பட்டு அவை உபசக்தி பீடங்கள் என்றானது. இந்த உண்மையை உணர்ந்த ரிஷிகளும் சித்தர்களும் அம்பிகையின் உடல் பாகங்களுக்குப் பதிலாக பொன் / வெள்ளி / செம்பு களால் ஆன மந்திரத் தகடுகளை செய்து அதில் மந்திர பீஜாக்ஷரா எழுத்துக்களையும் பொறித்து மந்திரங்களை உருவேற்றி பூமியில் புதைத்து அதன்மேல் சிலைகள் / விக்ரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.

அம்பாளை உபாசிப்பவர்கள் / வழிபடுபவர்கள் சாக்தர்கள் என்றும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் என்றும் அழைக்கப்படுவர். இறைவனின் அருளைப்பெற புனித மந்திரங்களே நல்வழிகாட்டிகளாக உதவுகின்றன. இறைவனின் சூட்சும வடிவமே அத்தகைய மந்திரங்கள், தெய்வ சக்தியை அளிக்கும் மந்திரங்கள் ஏழுகோடி என்று முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். 51 சமஸ்கிருத எழுத்துக்களில் அடங்கியுள்ள இவையே ஆதிபீஜாக்ஷரங்கள் ஆகும். எல்லா மந்திரங்களும் இந்த ஐம்பத்தி ஒன்று ஆதி பீஜாக்ஷரங்களில் அடங்கும். இந்த எழுத்துக்களை மாத்ருகாக்ஷரங்கள் / ஆதி மந்திர பீஜாக்ஷரங்கள் என்றும் கூறலாம். தேவர்களும் ரிஷிகளும் ஆதீபீஜாக்ஷர சக்தித் தலங்களில் தங்கியிருந்து தவம், யோகம், மந்திரஜபம் ஆகியவற்றைச் செய்து நற்பேறுகள் பெற்றுள்ளனர்.

உலக உயிர்களின் உடலைப் பிண்டம். என்பர். பிண்டத்திலிருப்பது அண்டத்திருக்கும். அண்டத்திலிருப்பது பிண்டத்தில் உள்ளது என்பர். பிர்மாண்டத்தில் தோன்றிய 51 ஆதி பீஜாக்ஷர எழுத்துக்களும் உயிர்களின் உடல் பகுதியில்-பிண்டத்தில் உள்ளதால் வித்யா உபாசனைப்படி அந்த அட்சர எழுத்துக்களின் ஒலிவடிவில் தேவி உடலில் வீற்றிருக்கின்றாள் என்று மனதில் வைத்து தன் கை விரலால் அந்த இடத்தை தொட்டு அந்த அட்சர எழுத்தை உச்சரித்தால் அந்த உடலில் தெய்வீக சக்தி தேஜோமயமாக விளங்கும் என்றும் இந்த முறைக்கு நியாஸம் என்றும் பெயர். இந்த முறையை அகத்தியருக்கு ஹயக்கிரீவ பகவான் போதித்துள்ளார் என்கிறது வேதம்.

நியாஸ முறையில் அந்த 51 ஆதிபீஜாக்ஷர மந்திர எழுத்துக்களும் அதற்குறிய உடலின் இடங்களைத் தொட்டுக்கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவாறு உச்சரித்து உயிர்களே நீங்களும் பயன் பெறுங்கள் என்று அன்புடன் அருளாசி வழங்கும் குருஸ்ரீ-பகோரா.
#*#*#*#*#

“ஆதி மந்திர பீஜாக்ஷரங்கள்”

‘அங்க நியாஸம்’ அகத்தியருக்கு
ஹயக்கீரீவ பகவான் போதித்தது-
நியாஸம்-தேவி ஒலி வடிவத்தில் உடலில்
வீற்றிருக்கும் பகுதியை தொட்டு வணங்குதல்-தினமும்.
#*#*#*#*#

1. ‘அம்’-அஜாமுகிதேவி-காமரூபாயை நம- தலையில்
2. ‘ஆம்’-அதர்வணிதேவி-வாராணஸ்யை நம- முகவட்டத்தில்
3. ‘இம்’-இளாதேவி-நேபாலாயை நம- வலது கண்ணில்
4. ‘ஈம்’-ஈஷ்வரிதேவி-பௌண்ட்ரவர்த்தனயைநம- இடது கண்
5. ‘உம்’-உக்ராதேவி-புரஸ்திரகாஷ்மீராயைநம- வலது காது
6. ‘ஊம்’-ஊர்ஜஸ்வலாதேவி-கன்யாகுப்ஜாயை நம- இடது காது
7. ‘ரூம்’-ருதுதாமாதேவி-பூர்ணசைலாயை நம- வலது மூக்கு மடிப்பு
8. ‘ரூம்’-ரேணுகாதேவி-அர்புதாசலாயை நம- இடது மூக்கு மடிப்பு
9. ‘லும்’-லுதும்ராதேவி-ஆம்ராதகேசவராயைநம- வலது கன்னம்
10. ‘லூம்’-லூஞ்சகாதேவி-ஏகாம்பராயை நம- இடது கன்னம்
11. ‘எம்’-ரேவதிதேவி-த்ரிஸ்ரோதஸ் நம- மேல் உதடு
12. ‘ஐம்’-ஷுஷ்கரேவதி-காமகோட்யை நம- கீழ் உதட்டில்
13. ‘ஓம்’-அஷ்வனிதேவி-கைலாஸாயை நம- மேற்பற்கள்
14. ‘ஒளம்’-ஒளஷதாதேவி-ப்ருகுநகராயை நம- கீழ்ப்பற்கள்
15. ‘அம்’-அஞ்சனாதேவி-கேதாராயை நம- நாக்கு நுனி
16. ‘அஹ’-அஜாதேவி-சந்த்ரபுஷ்கரிண்யைநம- கழுத்து
17. ‘க1ம்’-புதவின்யாதேவி-ஸ்ரீபுராயை நம- வலது தோள்
18. ‘க2ம்’-கத்யோநிதிதேவி-ஓங்காராயை நம- வலது முழங்கை
19. ‘க3ம்’-தும்ராதேவி-ஜாலந்தராயை நம- வலது மணிக்கட்டு
20. ‘க4ம்’-வராஹமுகிதேவி-மால்வாய் நம- வலது கைவிரல் அடி
21. ‘த3ம்’-அருந்தஷக்திதேவி-குலாந்தகாயை நம- வலது கைவிரல் நுனி.
22. ‘ச1ம்’-சூஷ்மாதேவி-தேவிகோடாயை நம- இடது தோள்.
23. ‘ச2ம்’-நிர்ஜலருந்ததிதேவி-கோகர்ணாயை நம- இடது முழங்கை.
24. ‘ச3ம்’-போகதாதேவி-மாருதேச்வராயைநம- வலது மணிக்கட்டு.
25. ‘ச4ம்’-நிர்ஜரனதீதேவி-அட்டஹாஸாயைநம- இடது கைவிரல்.
26. ‘ஞம்’-ப்ரபோதினிதேவி-விராஜாயை நம - இடது கைவிரல் நுனி
27. ‘டம்’-தாரிணீதேவி-ராஜகோஹாயைநம- வலது தொடை மேற்பகுதி.
28. ‘ட2ம்’-க்ரியாசரஸ்வதிதேவி-மகாபதாயை நம- வலது முழங்கால்.
29. ‘ட3ம்’-டஹாரிணிதேவி-கோலாபுராயை நவ- வலது கணுக்கால்.
30. ‘ட4ம்’-ஸ்ரீகணாதேவி-ஏலாபுராயை நம- வலது கால் விரலடி.
31. ‘ணம்’-அனந்தசக்திதேவி-காலேச்வராயை நம- வலது கால் விரல் நுனி.
32. ‘தம்’-சரஸ்வதிதேவி-ஜயந்திகாயை நம- இடது தொடைமேல்பகுதி
33. ‘த2ம்’-நீலகண்டசரஸ்வதிதேவி-உஜ்ஜயின்யை நம- இடது முழங்கால்.
34. ‘த3ம்’-போகதாயிணிதேவி-சித்ராயை நம- இடது கனுக்கால்.
35. ‘த4ம்’-அமலாதேவி-க்ஷீரிகாயை நம- இடது கால் விரல் அடி.
36. ‘நம்’-அந்தரஷக்திதேவி-ஹஸ்தினாபுராயைநம- இடது கால் விரல் நுனி.
37. ‘பம்’-இச்சாஷக்திதேவி-உட்டிசாயை நம- வலது விலாப்புறம்.
38. ‘ப2ம்’-ஆதபகோமலாதேவி-ப்ரயாகயை நம- இடது விலாப்புறம்.
39. ‘ப3ம்’-சித்ச்யாமளாதேவி-ஷஷ்டி சாயை நம- முதுகு.
40. ‘ப4ம்’-ச்யாமளாதேவி-மாயாபூர்யை நம- நாபி.
41. ‘மம்’-வித்யாஷ்யாமளாதேவி-ஜலேசாயை நம- வயிறு.
42. ‘யம்’-தீபினோதேவி-மலயாயை நம- இதயம்.
43. ‘ரம்’-ரேஜூஷ்வலாதேவி-ஸ்ரீசைலாயை நம- வலது தோள்பட்டை
44. ‘லம்’-மோஹினிதேவி-மோரவே நம- பிடரி.
45. ‘வம்’-நாராயணிதேவி-கிரிவராயை நம- இடது தோள்பட்டை.
46. ‘ஷம்’-மங்களகௌரிதேவி-மஹேந்திராயை நம- இதயம் முதல் வலது கை நுனிவிரல்வரை.
47. ‘ஷ1ம்’-அனுக்கிரியாதேவி-வாமனாயை நம- இதயம் முதல் இடது கை நுனிவிரல்வரை.
48. ‘ஸம்’-சித்தக்ரியாதேவி-ஹிரண்யபுராயைநம- இதயம் முதல் வலது கால் நுனிவிரல்வரை.
49. ‘ஹம்’-ஆத்யாயனீதேவி-மகாலக்ஷ்மிபுராயைநம- இதயம் முதல் இடது கால் நுனிவிரல்வரை.
50. ‘ளம்’-பந்தமோசனீதேவி-ஓட்யாணாயை நம- இதயம் முதல் இன உறுப்பு வரை.
51. ‘க்ஷம்’-மயாமாலினீ தேவி- சாயச்சத்ராயை நம- இதயத்திலிருந்து தலை உச்சிவரை.

#####


அந்த அற்புத 51 ஆதிபீக்ஷார சக்தி தலங்கள் / மகா சக்தி பீடங்கள்

 

      ஓம்

1-அ/அம்

2- ஆ/ஆம்

3- இ/இம்

4- ஈ/ஈம்

5- உ/உம்

6- ஊ/ஊம்

7- ரு/ரும்

ஓம்

28-2/டம்

ஓம்

சி

ஓம்

8-ரூ/ரூம்

27-1/டம்

29-3/டம்

34-3/தம்

39-3/பம்

42-ய/யம்

47-ஷ/ஷம்

9- லு/லும்

26-ஞ/ஞம்

30-4/டம்

35-4/தம்

40-4/பம்

43- ர/ரம்

48-ஸ/ஸம்

10-லூ/ல்ரூம்

25-2/சம்

சி

31-ண/ணம்

36-ந/னம்

41-ம/மம்

44-ல/லம்

49-ஹ/ஹம்

சி

11-ஏ/ஏம்

24-1/சம்

32- 1/தம்

37-1/பம்

45-வ/வம்

50- ள/ளம்

12-ஐ/ஐம்

23-2/சம்

33- 2/தம்

38-2/பம்

46-ச/ஷம்

51-ஷ/க்ஷம்

13-ஓ/ஓம்

22-1/சம்

ஓம்

சி

ஓம்

14-ஒள/ஒளம

ஓம்

21-ங்/நம்

20-4/கம்

19-3/கம்

18-2/கம்

17-1/கம்

16- அஹ

15- அம்

          ஓம்

 

######

Read 5081 times Last modified on புதன்கிழமை, 28 December 2022 10:49
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879042
All
26879042
Your IP: 54.81.185.66
2024-03-19 07:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg