gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

கட்டுரைகள் (20)

ஞாயிற்றுக்கிழமை, 13 June 2021 10:42

சமுதாய சீர்திருத்தம்!

Written by

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந்
தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி
இடைப்படுத்தித் தறுகட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை
நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

சமுதாய சீர்திருத்தம்!

 தந்தை தன் மகளை மூன்றுவருடமாக கற்பழித்தார்.
 ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி ஒரு கும்பலால் கற்பழிப்பு.
 ஆதிவாசிபெண்கள் அதிகாரிகளால் கற்பழிப்பு
 பள்ளி மாணவியிடம் ஆசிரியர் முறைதவறி நடந்தார்
 சிறுமியை காவவெறியுடன் சிதைத்து கொலை
 கல்லூரி மாணவன் காதலிமேல் ஆசிட் வீச்சு


இப்படி நாளும் எங்கோயோ ஓரிடத்தில் ஏதாவது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பல நிகழ்வுகளில் ஒரிரண்டு மட்டும் செய்திகளாக வருகின்றது. பல தெரியாமல் போய்விடுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் தெரிவிப்பதில்லை. தெரிந்த செய்திகள் சம்பந்தப் பட்டவர்களுக்கு பல சிக்கல்களை உருவாக்குகின்றது. சட்டங்களும் சமுதாயமும் ஒன்றும் செய்யமுடியாமல் திணறுகின்றது. நீதி துறையும், பாதுகாப்பும் கேள்விக் குறியாகிறது. சமுக ஆர்வலர்கள் தங்கள் உணர்வுகளை தங்கள் அனுபவத்திற்கேற்ப கட்டுரைகளாகவும் கருத்துக்களாகவும் தெரிவிக்கின்றனர். பத்திரிக்கைகள் விமர்சனம் செய்கின்றன. மக்கள் சிந்தனை வயப்படுகின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து அந்த நிகழ்வுகளை ஒவ்வொருவிதமாக கணித்து நியாப்படுத்தியும், கண்டித்தும் மற்றவர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டு அந்த நிகழ்வை மறந்து விட்டு அடுத்த செய்திக்கு தாவுகின்றனர். மறுபடியும் எங்கேயாவது ஏதாவது நிகழ்ந்தால் அப்போது பழையதை எல்லாம் சொல்லி நினைவு கூறி பட்டி மன்றம் நடத்துபவர்களாக மாறி விடுகிறார்கள். தொலைக்காட்சியில் பார்க்கும் சிலர் அழுத்தம் காரணமாக உடல்சூடேறி உணர்ச்சி வயப்பட்டு கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி தங்கள் கோபத்தை ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கின்றனர். சற்று மாறுபட்ட வடிவில் நாங்கள் இவர்களுக்கு பாதுகாவலர்கள் எனதன்னை முன்னிலப்படுத்தும் ஆர்வலர்களும் அமைப்புகளும் தொலைக்காட்சி மூலம் விவாதம் நடத்தி தங்கள் பங்கை முடித்துக் கொள்கின்றனர். சிலர் கட்டுரைகள் எழுதிவிட்டு அமைதியாகி விடுகின்றனர். தொடர்ந்து என்ன நடவடிக்கை என்பதற்கு நமது சமுதாய அமைப்பில் உள்ள வழிமுறைகளை அதிகாரத்தில் உள்ளவர்களிடம் எடுத்துச்சென்று வென்றிட முனையுமாறு சமூக அமைப்பில் ஆர்வமாக உள்ள அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

சிறுவயதினில் சிறார்கள் தன் வளரும் அங்கங்களை, இன உறுப்புகளை தொட்டு பார்க்கும் தன் உறவினர்களால், நண்பர்களால் அவர்களின் செயல் புரியாமலும் தடுக்கும் நிலையில் இல்லாமலும் இருக்கும் நிலையில் உள்ளனர் நாளைய சமுதாய அங்கத்தினர்கள். தாய் தந்தை முன்னிலையிலும் இது நடப்பதாலும் அவர்களில்லாதபோது நடப்பதை அவர்களிடம் சொல்ல வேண்டுமென்றுகூட தோன்றுவதில்லை. மீண்டும் மீண்டும் அப்படி தொடும் போது அது தவறல்ல என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பாகின்றது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களில் பலர் சிறார்களை கொஞ்சும்போது இனக்குறிகளைத் தொட்டு முத்தமிடல், இது யாருக்கு என சொல்லி கேலி பேசுவதுமான நிகழ்ச்சிகள் இன்றும் பல இடத்தில் நடந்து கொண்டுதானிருக்கின்றது. புரிந்தோ, புரியாமலோ இவைகள் குழைந்தைகளின் மனதில் பதிந்து விடுகின்றது.

வளரும் பருவத்தில் கேட்கும், படிக்கும் கதைகளும், பார்க்கும் சினிமா காட்சிகளும், எதிர்பாரமல் நேரில் பார்க்கும் காட்சிகளும் அவர்களுக்கு புரியாத நிலையில் தன் நட்புகளுடன் பரிமாரிக் கொள்ளும்போதும் இனம்தெரியா மயக்க உணர்வினை அடைகின்றனர். சிலருக்கு அது பிடிப்பதில்லை. தவறு என நினைத்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். சிலர் மேலும் அரிந்துகொள்ள முயன்று முன்னெச்சரிக்கையும் அடைகின்றனர். சிலர் தடம்மாறியும் விடுகின்றனர். தவறு பாவம் என்பவர்கள் மற்றவர்களிடமிருந்து பிரித்து நிற்பதால் இது போன்ற தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

பருவமடைந்து பலவருடங்கள் ஆகியும் திருமணமாகாமல் உணர்வுகளுடன் அடங்கியிருக்கும் ஆண் அல்லது பெண், பருவமடைந்தபின் எதிர்பாராமல் ஆண்,பெண் உறவை தங்கள் வீட்டிலோ வேறு எங்கேயோ பார்த்த ஆண் அல்லது பெண், ஒளிவுமறைவு இல்லாமல் வரும் கதைகள் மற்றும் வண்ணப்படங்கள் பார்த்த ஆண் அல்லது பெண், வாழ்நாள் முழுவது துணை என்று மணந்தபின் ஆசை அறுபது மோகம் முப்பது என்றபடி ஒதுங்கும் ஆண் அல்லது பெண், கணவன் கைவிட்ட மனைவி அல்லது மனைவியால் கைவிடப்பட்ட கணவன், வாழ்வில் பணம் அல்லது வேரொன்று குறிக்கோள் என நினைக்கும் ஆண் அல்லது பெண், திருமணத்திற்கு பின் முற்றிலும் மாறிய ஆண் அல்லது பெண், நாற்பது வயதிற்குமேல் என்ன வேண்டியிருக்கின்றது எனும் ஆண் அல்லது பெண் ஆகிய இவர்களே இந்த சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு காரண கர்த்தாக்கள்.

ஒரு ஆணோ பெண்ணோ தன் மறுபாலினரின் விறுப்பு வெறுப்புகளை மதித்து விட்டுக்கொடுத்து அவர்களின் சின்ன ஆசைகளை நிறைவேற்றினால் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ வக்ர உணர்வுகள் எப்போதும் ஏற்படாது. தினமும் ஒருவனுக்கு ஒருத்திக்கு அவர்கள் விரும்புவது கிடைத்தால் வேறு மாற்று எண்ணங்கள் தோன்றாது. இதுவே அடிப்படை. அப்படி வேண்டியது கிடைக்காதவர்கள்தான் திருட்டுப்பாலில் சுவைகாண விரும்புவர். அது பூனை குணம். அவர்களின் பார்வையில் ஓர் கள்ளத்தனம் குடியிருக்கும். அது நாளடைவில் வக்ரத் தன்மையுடையதாகிவிடும். பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகள் அமைதி அடைய சமுதாய திட்டமிடல் வேண்டும்.

இந்த ஆண் அல்லது பெண் நமது சமுதாய அமைப்பிற்குப் பயந்து பெறும்பாலும் அமைதியாகவே இருக்கின்றார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த உணர்வுகள் கூடிய உணர்ச்சிகள் அவர்களிடையே நீறு பூத்த நெருப்பாக தனலாக எரிந்து கொண்டுதானிருக்கின்றது சாம்பலின் அடியில் கனல் இருப்பது போன்று. அவர்கள் எல்லோரும் நல்லவர்களே நல்ல சந்தர்ப்பம் வரும்வரை. உணர்வுகள் அமைதியாய் இருக்கும்வரை. ஏதோ ஓர் சூழல் பூத்த சாம்பலில் இருக்கும் கனல் பூத்து அவர்களை தன் நிலை மறைக்க வைக்கும். அதுவே அவர்களின் உடல் செயல்களும் அதைத் தொடர்ந்த திட்டங்களும். செயலாக்கமும். இது அவர்களுக்குள் இருக்கும் யாருக்கும் தெரியாத ஒரு உணர்வு. வேகம் கொண்டு அமைதியாக இருக்கும் வியாதி எனக்கூட கூறலாம். ஓர் செயலைக் கண்டதும் அல்லது கேட்டதும் அழுத்த நோயுள்ளவர்களின் செயல்பாடு எப்படி வீறு கொண்டிருக்குமோ அது போன்ற தன்மையுடையது. பல சூழ்நிலைக் காரணங்களால் அவர்கள் செயல்படுத்தும்போது பலர் தப்பிவிடுகின்றனர். சிலர் மாட்டிக்கொள்கின்றனர்.

உணர்வுகள் என்பது சாதாரணமான விஷயமில்லை. எவ்வளவு காலமானாலும் உள்ளத்திலிருக்கும். எந்த சூழலிலும் மீண்டும் அது தோன்றும். உங்களுக்கு சிறுநீர் பையில் அடைப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் சிரமங்களும் சிக்கல்களும் அதை அனுபவிக்கும்போதுதான் தெரியும். அந்தப் பை முழுவதும் நிரம்பினால் மருத்துவர் உதவியுடன் அதை சரி செய்தவுடன் ஓர் நிம்மதி ஏற்படும். மலம் கழித்தலிலும் சிறுநீர் கழித்தலிலும் வெளியேற்றத்திற்குப்பின் ஏற்படும் ஆனந்தம் அளவிடமுடியாதது. இதைப் போன்றதே உணர்ச்சிகள் நிறைந்த ஆண் / பெண் அதனை நீண்ட நாள் அடக்கி வைத்தலும் ஆரோக்கியமானது அன்று. எனவே அதற்கு இந்த சமுதாயம் ஓர் மாற்றம் காணவேண்டியது அவசியம். உணர்வுகளை அடக்கிவைத்த இருபாலருமே முகம் களையிழந்து கண்கள் ஒளியிழந்து சொற்களில் சுவராசியமில்லாமல் செயல்களில் ஓர் உந்துதல் இல்லா சலிப்பான நிலையில் இருப்பார்கள்.

இதிலிருந்து விடுபட எத்தனையோ வாய்ப்புகளும் வழிமுறைகளும் இருக்கின்றது. ஆனால் அதைஎல்லாம் நமது சமுதாயம் அங்கீகரிக்கின்றதா என்பதைப் பார்க்க வேண்டும். சிலர் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்களுடன் பழகும் ஆண் அல்லது பெண் உதவியை நாடுகின்றனர். சிலர் சிலரின் பழக்கத்திற்கு உடன்பட்டு போதை வஸ்துகளை உபயோகிக்கின்றனர். சிலர் ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபாடு கொள்கின்றனர். எல்லாவற்றையும் மறந்து தொழிலில் கவனம் செலுத்துகின்றனர். எப்படியிருப்பினும் உணர்ச்சிகள் அமைதியடையா நிலையில் இருந்து வரும் ஆண் அல்லது பெண் ஓர் நாள் ஓர் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களின் உணர்வுகளில் கிளர்ச்சி தோன்றி கட்டுக்கடங்கா நிலையில் தவறு செய்ய தூண்டப்படுவர். அந்நிலையில் அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவர்களின் உணர்ச்சிக்குத் தீர்வு ஒன்றோயாகும். அதுவே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். தீர்வுகாண முயற்சி செய்து வென்றாலும் தோற்றாலும் நாம் இப்படிச் செய்துவிட்டோமே என வருந்துவர். என்ன செய்ய! காலம் தாழ்ந்த எண்ணம்! இந்த நோயின் தாக்கத்தில் இருக்கும் அந்த சகோதர சகோதரிகளுக்கு நம்மிடையே என்னென்ன வழிமுறை கொண்டு அவர்களை அந்த தாக்கத்திலிருந்து எப்படி காக்க முடியும் என்பதை சமுதாய ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

இப்படி உணர்ச்சிகளின் அடிப்படையில் நிகழ்வுகள் நடப்பதை, ஏன் நடக்கின்றது என விவாதிக்க வேண்டியதில்லை. ஆனால் அந்த உணர்வுகளின் தாக்கத்தை புரிந்துகொள்ள நாம் அந்த நிகழ்வுகளை ஆராய வேண்டும். அப்படியின்றி ஒரு நிகழ்வைக்கண்டு அது தவறு அவர்களை அடி, உதை, தூக்கிலிடு என்பதாலாயோ அல்லது சட்டதிட்டங்கள் போட்டதாலோ இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்கும் என்பதற்கு யார் பொறுப்பு!. உண்மைதனை அலசி ஆராயவேண்டும். எல்லோருக்கும் பொதுவான சட்டங்கள் இந்த சமுதாயத்தில் பாதுகாப்பும் தவறு செய்பவர்களை தண்டிக்கவும் இதுபோன்று இனி நடக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே.

ஒர் சிறு பெண்ணுக்கு என்னவென்று அறியாத புரியாத நிலையில் நிகழ்வுகள் நடப்பது கொடுமையிலும் கொடுமை. இதுபோன்று சமுதாய கொடுமைகள் நடக்காமலிருக்க ஆரம்ப அடிப்படை உண்மைகளை தெளிந்து வளரும் சமுதாயம் ஆரோக்கியமாக வளர உரிய நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஏதோ சமூக ஆர்வலர்கள் சொல்கின்றார்கள் என்பதற்காக ஏனோதானோவென்று முடிவுகள் இருக்கக்கூடாது. இந்த வேகம் விவாத மேடைகளுடன் நின்றுவிடக்கூடாது.

பாலியல் பலாத்காரம் என்பது இருபாலருக்குமே உரியது, வெளியில் தெரியாத நிலையில் எத்தனை பேர் என்ன நிலையில் இருக்கின்றார்கள் தெரியுமா! சொல்ல முடியா நிலையில் உணர்வுகளை அடக்கிவைத்த நிலையில் பலர். எந்த இனத்தவருக்கும் யாருக்கும் யாரும் ஆமோதிக்க வேண்டியதில்லை. ஆதரவு காட்ட சார்ந்திருக்க வேண்டியதில்லை. ஆணாலும் பெண்ணாலும் அவர்களும் ஓர் ஆத்மா. இவ்வுலகின் வாழ்வியல் இன்பங்களை நுகர்ந்து அனுபவித்து ஆரோக்கியமுடன் சந்தோஷமாக வாழ உரிமையுள்ளவர்கள். இருபாலருக்கும் அந்த ஆனந்த சந்தோஷம் சரியாக குறைபாடியின்றி கிடைக்கின்றதா! என்பதை தெரிந்து சமுதாய சீர்திருத்தம் ஏற்படவேண்டும். இந்த குறைபாடுகளின் வெளிப்பாடே நடக்கும் நிகழ்வுகளுக்கு காரிய காரணம்.

சட்டங்கள் அனைவருக்கும் பொது. சட்டங்கள் நிறைவேற்றினாலும் அது பயனுள்ளதாகவும் மீண்டும் உபயோகமின்றி போகாததாகவும் மாற்றமில்லாத நிலையானதாகவும் இருக்க வேண்டும். சிந்திக்க சிந்தனையாளர்களும் அறிஞர்களும் ஆன்மீகவாதிகளும் நிறைந்த புண்ணிய பூமி இது. எல்லா சமூக அமைப்புகளும் ஆர்வலர்களும் இந்நிலையை ஆய்ந்து நம் வரும்கால சமுதாயத்திற்கு ஓர் நல்ல வழியை தெரிவு செய்து முறைப்படுத்தி வழங்கி அந்த வருங்கால சமுதாயம் நிம்மதிகொண்ட சந்தோஷமுடன் இயங்கிட உதவிடுங்கள் என அன்புடன் அழைக்கும்- குருஸ்ரீ.

வெள்ளிக்கிழமை, 17 May 2019 09:10

ஆக்ரமிப்பு!

Written by

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#*#*#*#*#

 

ஆக்ரமிப்பு!

நல்ல காற்றோட்டத்துடன் குடியிருப்புகள் அமைய வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி மக்கள் ஆரோக்கியத்தை முன்னிட்டு அரசு சில சட்டங்கள் போட்டால் அதை ஏற்று மதித்து நடந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யா விடில் அதன் பாதிப்புகள் மக்களுக்கே. சட்டதிட்டங்களை மீறுபவர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களும் அதனால் பாதிக்கப் படுகின்றனர். என்பதை மக்கள் உணர வேண்டும். யார் எப்படி போனால் என்ன நம் பிரச்சனை தீர்வு கண்டால் போதும் என்ற நிலைப்பாடானது அவர்களுக்கும் ஓர்நாள் தீங்கு விளை விக்கக்கூடும்.

சாலை ஓரங்களில் சாலையை ஒட்டி குடிசைகள் மற்றும் வீடுகள் கட்டிக் கொள்கின்றனர். அங்கு முறைப்படி விட வேண்டிய அளவிற்உ இடம் விட்டுக் கட்டுவதில்லை. சட்ட அமைப்பில் கூறிய இடத்தை விட்டால் இடம் குறுகி விடுகின்றது. மேலும் வளர்ந்த நகரங்கள், கிராமங்களில் அந்த இடத்தின் மதிப்பு அதிகமாவதால் அவ்வளவு இடத்தை விட்டுவிட மனதில் எண்ணம் தோன்றுவதில்லை. ஆனால் எதிர்பாராமல் நடைபெறும் விபத்துக்களைப் பார்க்கும்போது மதிப்பு பெருகிய இடத்தைவிட மனித உயிர்கள் மேலல்வா என்பதை புரிந்து செயலாக்கம் கொள்ள வேண்டும்.

சாலை ஓரத்தில் இருக்கும் வீட்டிற்குள் பேருந்தோ அல்லது கனரக வாகனங்களோ எதிர்பாரத நிலையில் கட்டுப்பாட்டை இழந்து புகுந்தால் வீட்டில் இருப்பவர்களின் நிலை என்ன என்பதை சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதை உணர்ந்து அரசும் இடத்தின் சொந்தக்காரரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூடுமான வரையில் சாலை அருகே நெருங்கிய வண்ணம் குடியிருப்புகள் அமையக்கூடாது என்ற நிலையை அரசு மேற்கொள்ள வேண்டும். அந்த இடத்தை தவிர வேறு இடம் இல்லாதவர்களுக்கு அதற்குப் பதிலியாக மாற்று இடம் தர அரசு முன்வரவேண்டும். இதை அந்த இடத்து சொந்தக்காரரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முக்கிய சாலைகளில் தாங்கள் வளம்பெற வேண்டுமென்று சிலர் வியாபார அமைப்பில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த இடம் வியாபார ஸ்தலமாக மாறும் போது அங்கு வருபவர்களின் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் அவர்கள் சாலையை பயன் படுத்துவதால் சாலையின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றது. அவ்வாறு வணிக வளாகங்கள் கட்டும்போது வாகனங்கள் நிறுத்த குறைந்த அளவிற்காகவது இடம் ஒதுக்க வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்படுத்தப் படவேண்டும். வாகனங்கள் நிற்க இடம் இல்லா வணிக வளாகங்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். அல்லது அவர்களது மின் இனைப்பு மற்றும் குடிநீர் இனைப்புகள் மறுக்கப் படவேண்டும்.

வீடாக இருந்த பகுதியை மாற்றி அமைத்து வணிக இடமாக மாற்றுகின்றனர். வீட்டிற்குமுன் காலியாக இருக்க வேண்டிய அளவு இடம் இல்லாமல் கட்டிவிடுகின்றனர். சிலகாலம் கழித்து இப்படி மாற்றுவதால் மேலும் சிக்கல் உருவாகி தாங்கள் இடம் விடாமல் விட்டதோடு அல்லாமல் பொது இடமான சாக்கடைகள் நடைபாதைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். அங்கு வரும் வாகனங்கள் எங்கு நிறுத்தப்படும்!. வேறு வழியின்றி சாலைகளில்தான் நிறுத்தப்படுகின்றன. இந்த முறைதனை மாற்ற வேண்டும். போக்குவரத்திற்கு எத்தனை தடைகள். மேலும் விபத்துக்கள் ஏற்படவும் வாய்பு இங்கு உறுவாகின்றதால் கடுமையான முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். இவர்கள் போட்டு இருக்கின்ற மேற்கூரை தகரங்கள் இவற்றிற்குள் புகுந்துதான் அவ்வழி செல்லும் மக்கள் செல்ல வேண்டியிருக்கின்றது.

பலர் கடைகளுக்கு முன்னால் ஓர் தார்பாய் அல்லது ஒரு ஓலைக்கீற்று கொட்டகை ஆகியவற்றை சாலைகளில் போட்டே தங்கள் கடைகளைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். கடை கட்ட வேண்டுமென்றால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களது இடத்திலேதான் போட வேண்டும் அப்படி போடும் அளவிற்கு இடம் நிலத்திற்கு உள்ளேயே விட்டுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலை வேண்டும். பொது இடங்கள் ஒரு சிலர் முன்னேறுவதற்காக ஆக்கிரமிப்பு செய்வதற்கல்ல. பொதுவான இடங்கள் அனைவருக்கும் பயன் படவேண்டும் என்ற நிலை ஏற்பட வேண்டும். பொதுவாக இது போன்ற இடங்களுக்கு அரசு நிர்வாகத்தில் அனுமதி பெற்றே வணிகத்திற்கான இடங்களை அமைத்திட வேண்டும்.

அனுமதிபெற்ற கட்டுனர்களையே இனிவரும் காலங்களில் புதிய கட்டிடம் கட்ட அணுமதிக்கப்பட வேண்டும். மின் இனைப்பு பெறுவதற்கு ஓர் அனுமதி பெற்றவரின் கையொப்பம் மற்றும் கட்டிட வரைபடம் அனுமதி பெற்றவரின் ஒப்பத்திற்குப் பிறகே நிர்வாகத்தால் அனுமதிக்கப் படுவதுபோல் கட்டிடம் கட்டுவதற்கும் அனுமதி பெற்றவரால்தான் கட்டப்பட வேண்டும் என்ற நிலையில் விதிமுறைகளை மீறி தவறான அமைப்பில் கட்டிடம் கட்டப்பட்டால் அதற்கு அவர் பொறுப்பாவார். கட்டிடம் கட்டி முடித்தபின் அரசு நிர்வாகத்திலிருந்து ஒரு குழு மேற்பார்வை செய்து சரியாக விதிமுறைக்குட்பட்டு கட்டப்பட்டுள்ளது என்ற சான்றிதழ் அளித்த பின்னரே மின் இனைப்பு மற்றும் குடிநீர் இனைப்புகள் வழங்கப் படவேண்டும். சான்றிதழ் அளிக்கும் குழு தன் பணியைச் சரிவரச் செய்யாமலிருந்தால் அவர்களும் தண்டிக்கப்படலாம். விதி முறைப்படி கட்டப்படாத கட்டிடத்தை கட்டிய அனுமதி பெற்ற என்ஞினியரின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம். அவர்மேல் விசாரனை நடவடிக்கை எடுத்து பின்னர் நிரந்தரமாக ரத்து செய்யலாம்.

எந்த ஒரு கட்டிடமாயிருந்தாலும் அந்த கட்டிடத்திற்கு மின் இனைப்பு சரியாகச் செய்யப்பட்டுள்ளது என்றும், கழிவு நீர் குழாய்கள் சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கின்றது என்றும் கட்டிடம் விதிமுறைப்படி கட்டப்பட்டுள்ளது என்றும் யாரால் கட்டப்பட்டுள்ளது என்றும் வணிக வளாகத்தின் பார்வையில் படும் பகுதியில் அல்லது மேற்பாற்வையாளர் வரும்போது பார்க்கும் வகையில் புகைப்படத்துடன் கையொப்பமிட்டு பொருத்தப்பட வேண்டும்.

இதுவரை கட்டப்பட்டுள்ள இடங்களை கால அவகாசம் கொடுத்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களே அகற்றாவிட்டால் நிர்வாகம் அகற்றவேண்டும் அதற்குரிய கட்டணத்தை கண்டிப்பாய் தண்டனைக் கட்டணத்துடன் வசூலிக்க வேண்டும்.

சிலர் தங்களின் வீட்டிற்கு முன்னால் பாதுகாப்பிற்காக பொது இடத்தை கோவில் என்ற அமைப்பை ஏற்படுத்தி நாளடைவில் மக்கள் அதைப் பயன்படுத்துவதால் ஓர் ஆக்கிரமிப்பு இடமாகின்றது. இதே போன்று சிலர் கல்லறைகளையும் சமாதிகளையும் கட்டிவிடுகின்றனர். ஏனென்றால் கோவில்கள் மற்றும் இது போன்ற சமாதிகள் அகற்றும் நிலை வந்தால் அந்த இனத்தாரை சேர்த்துக் கொண்டு போராட்டங்கள் ஏற்படுத்தும் சூழல் உருவாக்குகின்றனர். அவர்களுக்கு ஒன்று சொல்வேன். நீங்கள் உண்மையான பக்தராக இருந்தால் கோவிலுக்கு என்று ஓர் இடம் வாங்கி அல்லது உங்கள் சொந்த இடத்தில் கோவிலை கட்டி நீங்களும் மற்றவர்களும் வழிபட செய்யுங்களேன்! ஏன் இந்த ஆக்கிரமிப்பு புத்தி! இது முற்றிலும் சுயநலம்! இதைப் புரியாமல் மற்றவர்களும் இவர்களுடன் சேர்ந்து போராடுவது மிகுந்த வேதனை அளிக்கின்றது.

சாலைகள் ஆக்கிரமிப்பு என்றில்லாமல் கோவில் இடங்களையும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து சுயலாபம் அடைந்து வருகின்றனர் பலர். அருகில் இருக்குமிடம் பலமடங்கு வாடகை வரும் அளவிற்கு உயர்ந்தபோதும் கோவில் இடங்களில் இருப்போர் ஓரளவாவது வாடகையை உயர்த்தி தராமல் சாக்கு போக்கு சொல்லி இருந்து வருகின்றனர். மேலும் வாடகைக்கு எடுத்தவர்கள் சிலர் உள் வாடகைக்கு விட்டு விட்டு அவர்கள் லாபம் சம்பாதிக்கின்றார்கள். இவைகளை கண்டறிந்து யார் பேருக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றதோ அவர்களே அங்கு இருக்க வேண்டும். மற்றவர்கள் இருந்தால் அவர்களை அகற்றி விட்டு வேறு உரிய நபரை அங்கு இருக்க வைக்க வேண்டும். கோவில் நிலங்களை குத்தைகை எடுத்தவர்கள் பொய்க்காரணங்கள் சொல்லி குத்தகையை சரியாக செலுத்துவதில்லை. மொத்த இடத்தில் எவ்வளவு சொந்தமாக்கிக்கொள்ள முடியுமோ அவ்வளவு செய்து விட்டிருக்கின்றனர். பழைய ஆவனங்களை எடுத்து இவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அவர்களாகவே திருப்பிக் கொடுத்துவிட்டால் சரி! இல்லை என்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை ஓரங்கள், கோவில் நிலங்கள் என்றில்லாமல் நீர் வழிகளையும் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்போது சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய பிரமுகர்களும் இந்த விஷயங்களில் தலையீடு செய்தல் கூடாது. பொது நன்மை கருதி தங்களை நாடி வரும் அன்பர்களுக்கு உபதேசம் செய்து அதுவே தாங்கள் வகிக்கும் பொறுப்பிற்கு உகந்த தகுதி என்பதை நிலை நிறுத்த வேண்டும

தங்களின் இனம், மதம் வளர வேண்டி அரசிடம் வேண்டிப் பெற்ற தொன்னூற்று ஒன்பது வருடத்திற்கான குத்தகை நிலத்தின் மூலமாக பயன் அடைந்து வளர்ந்தபின் அதை தங்கள் சொந்த சொத்தாக சில அமைப்புகள் கருதுகின்றன. இவ்வளவு காலம் ஆண்டு அனுபவித்த காராணத்தால் அவர்கள் உரிமையைக் கேட்கலாம். அதற்காக பொது மக்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய ரோடுகள் அமைக்கும் பணிக்கு கூட இடம் தர மறுப்பது எந்த விதத்திலும் சரியில்லை. அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அந்த இடங்களை கைப்பற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சாலை வசதிகளை மேம்படுத்தி அமைக்க வேண்டும், குத்தகைக் காலம் முடிவடையாமலிருந்தாலும் பொது உபயோகத்திற்கு வேண்டிய இடத்தை திரும்ப பெறுவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது. வளார்ந்து வரும் நாட்டில் அனைத்து மக்களும் பயன் தரக்கூடிய திட்டங்களுக்கு எல்லா அமைப்புகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

வசதி பெற்ற சிலர் அரசு நடவடிக்கை எடுக்கும்போது ஒரு ரிட் போட்டு விட்டால் பல வருடங்களுக்கு இழுத்துக் கொண்டிருக்கும் நமக்கு கவலையில்லை என்று சட்டத்தில் இருக்கும் சந்து பொந்துகளை தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு சில ஆயிரத்தில் அரசின் நடவடிக்கையை தடுத்து விடுகின்றனர். இது போன்ற ஆக்கிரமிப்புகளுக்கு நீதி நிர்வாகம் எந்த வித ஒத்துழைப்பும் தரக்கூடாது என்பதே சிறப்பு. மேலும் இதுபோன்ற பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நல்லவர்களுக்கு நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள் ஆதரவு அளித்து அதை நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல ஆதரவு அளிக்கக்கூடாது. வழக்கறிகளுக்குத் தெரியும் இது போலி வழக்கு என்று. அப்படிப்பட்ட போலி வழக்குகளை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் தர்மத்தையும் நீதியையும் காக்க செயல் படவேண்டும். இதனால் நீதி மன்றங்களின் பொன்னான நேரம் மிச்சமாகும்.

சுதந்திரம் பெற்ற பின் கடந்த எழுபது ஆண்டிற்குள் வசதி படைத்தோர் மற்றும் அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் அளவில்லாதவை அவற்றை சரி செய்தால் போதும். நீதி நியாயங்கள் காக்கப் படுவதோடு மக்களுக்கு ஆரோக்கியமும் பெருகி விபத்துகள் இல்லா நிலைக்கு நாடு செல்ல வசதியாக வழிவகுக்கும்.

ஆக்கிரமிப்பு செய்துவிட்டு அதைபற்றி கேட்டால் அங்கே பருங்கள். இங்கே பாருங்கள். அவர் இப்படிச் செய்துள்ளார் என்று மற்றொரு நிகழ்வைக் காட்டிக் கொடுத்து அதன் நிழலில் தான் தப்ப நினைப்பது அயோக்கியத் தனம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். யார் செய்தாலும் எப்படிச் செய்திருந்தாலும் தப்பு தப்புதான். பலர் தவறு செய்வதால் அது சரியாகி விடாது. நீங்கள் செய்யும் ஆக்கிரமிப்பு செயல்களால் பொதுவாக என்ன துயரங்கள் ஏற்படுகின்றன் என நினைத்து அந்த பாவங்களைச் செய்யாமலிக்க நினையுங்கள்.

ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஓர் உண்மையை இங்கு சொல்ல விரும்புகின்றேன். நீங்கள் சுயமாக நியாமாக தர்மமான முறையில் சம்பாதித்திருந்தாலும் அதிலிருந்து ஒரு குன்றின் மணி அளவுகூட நீங்கள் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது எடுத்துச் செல்லமுடியாது என்ற நிலையை உணருங்கள். அப்படியிருக்க வீண் ஆசையினால் ஆக்கிரமிப்பு செய்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வதால் என்ன பலன் தெரியுமா! நீங்கள் உங்கள் கர்ம பலன்களில் பாவங்களை சேர்த்துக் கொள்வதுதான் மிச்சம். அந்த பாவங்களை நீங்களோ அல்லது உங்கள் சந்ததியினரோ தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். அது தான் வினை. இதற்காகவா இப்படி ஆக்கிரமிப்புச் செய்கின்றீர்கள். சற்று யோசித்துப் பாருங்கள்! ஆக்கிரமிப்பு ஒர் பெரும் தொற்று நோய்! மனம் தெளிவடைவீர். நல்லது நடக்கட்டும். நாடு வளம் பெறட்டும்! அன்புடன் குருஸ்ரீ பகோரா.

#####

வெள்ளிக்கிழமை, 17 May 2019 08:38

அகோரிகள்!

Written by

ஓம்நமசிவய!

மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

#*#*#*#*#

அகோரிகள்!

அகோரிகள் என்றாலே நம்மில் பலருக்கு பலவகையான கருத்து உண்டு. புத்தகங்கள் ,ஊடகங்கள் ,இணையம் ,செவிவழி செய்தி என பலவாறாக அவர்களை பற்றி அறிந்திருப்போம். சில நேரங்களில் அவர்களை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளும் வருவதுண்டு. உண்மையில் அகோரிகள் என்பவர்கள் யார்! ?

உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன். முகத்திலும மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள். தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது. இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது. சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள். தங்களை விளம்பரப் படுத்திகொள்ளவோ, தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிக்காண்பிக்கவோ மாட்டார்கள் .உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள். மத பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள். அகோரிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு என கண்டறிவது சிரமம். அனைவரும் ஒரே போல இருப்பார்கள். ஆண் மற்றும் பெண் அகோரிகள் இருவரும் இருப்பர்கள். நிர்வாணமாக இருந்தாலும் பெண்யோகிகளை கண்டறிவது கடினம். இவர்களின் தலைமுடி வயதானாலும் வெள்ளை ஆகாது. உடல் பயில்வானை போல இல்லாமல், சீரான நிலையில் இருக்கும். ரிஷிகேசம் அல்லது இமாலய மலையின் வனங்களில் இருப்பார்கள்.

பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள். இமாலயவனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள், மீண்டும் நடந்தே சென்றுவிடுவார்கள். வாகனத்தை பயன்படுத்த மாட்டார்கள். வாகனத்தில் சென்றால் குறைந்த பட்சம் பன்னிரெண்டு மணி நேர பயணம். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது கட்டுகோப்பாக வரிசையில் செல்வார்கள். வரிசையின் முன்னாலும் ,பின்னாலும் இருக்கும் அகோரிகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். நீண்ட முடியும், மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும் அவர்கள் மேல் எந்த விதமான வாசனையும் இருக்காது. நறுமணமும் இருக்காது, நாற்றமும் இருக்கது. முக்கியமாக இவர்கள் பிறருடன் பேசுவது குறைவு. தங்களுக்குள் பேசிக்கொள்ளவே மாட்டார்கள். குழுவாக வட்டவடிவில் உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள். கும்பளாவில் கஞ்சா எல்லாஇடத்திலும் கிடைக்கும், சிலர் இலவசமாக பிறருக்கு வழங்குவார்கள். ஆனால் இவர்களிடம் யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள். தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளை கொண்டு வருவார்கள். வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள். மூலிகை குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள். பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள். இப்படியாக வட்டம் முழுவதும் புகைகுழாய் வட்டமடிக்கும்.

ரிஷிகேசத்திலும், கும்ப மேளாவிலும் எத்தனை டிகிரி செண்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உட்கார்ந்து தியானம் செய்வார்கள். இப்படி பட்ட யோகிகளை புரிந்து கொள்வது கடினம். இமாலய மலை பகுதிகளில் (யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது. கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் அகோரிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.

அகோரிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது. இங்கே உடல் சக்தி என குறிப்பிடுவது பூஸ்ட், காம்ளாண் குடித்து வருவதில்லை. யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்க மாட்டார்கள். இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி. மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவார்கள். தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள்.

கும்பமேளா என்பது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு. பூமியில் வேறு எந்த பகுதியிலும் நிகழாத வண்ணம் அதிக மக்கள் கூடும் ஒரே விழா கும்பமேளா. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் கலந்து கொண்டார்களாம். அழைப்பிதழ் இல்லை, அமைப்பாளர்கள் இல்லை, தொண்டர்படை ஒருங்கினைப்பில்லை அப்படி இருக்க, இந்த விழா எப்படி சிறப்பாக நடைபெறுகிறது!! ஏதோ ஒரு சூட்சும சக்தி அனைவரையும் வரவழைக்கிறது. பல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ, தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை. உயிர்சேதம் இல்லை. யாரோ ஒருவர் பெரிய லாரியில் கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும் இலவசமாக தானம் செய்கிறார். மற்றொருவரோ அனைவருக்கும் உணவுப் பொட்டலங்களை வினியோகம் செய்கிறார். இவர்களை தூண்டியது எந்த சக்தி! தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும், வைராக்கியமும் அலாதியானது. தங்கள் குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள். அகோரிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும் முறை விசித்திரமானது. புதிய தலைவரை வணங்கிவிட்டு, பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்¬…!

காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானம் என்றால் அது காசி என சொல்லலாம். தினமும் சராசரியாக எழுநூறு முதல் ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகிறது. சன்யாசிகள், யோகிகள், தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என அங்கே கூட்டம் அதிகம். காக்கி சட்டையில் வரும் ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல, மக்கள் அகோரிகளுக்கும் மாந்திரீகர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே தலைப்பில் அடைத்துவிடுவார்கள்.

மேலைநாட்டுகாரர்களுக்கு இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாகசன்யாசிகள், அகோரிகள் எனக் கூறிவது வருந் ததக்கது. அகோரிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம், சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணியமாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. (நிர்வாணத்திற்கான காரணம் ஆசை, பாசம், பொருள் ஆடை என்று எல்லாவற்றையும் கடந்து பிறவிச்சுழற்சியிலிரு¬யந்து விடுதலை அடைந்து முற்றும் துறந்த நிலை என்று கூறலாம்.) சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்—குருஸ்ரீ பகோரா

#*#*#*#*#

திங்கட்கிழமை, 15 April 2019 20:20

வேதம்!

Written by

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து
அகர உகர மகரங்கள் தம்மால் பகருமொரு
முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி
தரித்துக் கொண்டு புகாரில்பொருள் நான்கினையும்
இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக்
கருணை புரிந்தல்லார்க்கு நிகரில்
மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#*#*#*#*#

வேதம்!

வேதத்தை வெளிப்படையாக பலருக்கும் சொல்லப்படுவதில்லை. அது ஒரு சாராருக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக மறைக்கின்றார்கள். அதனால் அதில் வெளிப்படை இல்லை எனச் சொன்னாலும் வேதத்தில் முன் பின் பகுதி போக நடுப்பகுதி விஷயங்கள் ரகசியம் என்றே சொல்லப்படுகின்றன. அப்படி ரகசியம் என்பதை எப்படி எல்லோருக்கும் சொல்ல முடியும்.

வேதம் முழுவதையும் தமிழில் மறை என்பதுண்டு. அது மிகப் பொருத்தமாக இருக்கும் பெயர். தாவரங்களின் வேர் தெரியாமல் மண்ணுக்குள்தான் இருக்க வேண்டும்.. வேர்போன்ற வேதத்தை தனியாக அமர்ந்து ரகசியமாய்தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.. ஏன் பகிங்ரங்கமாகச் சொன்னால் என்ன!

தாவரங்களின் பூவைப் பார்க்கலாம்,. காயைப் பார்கலாம், கனியைப் பார்க்கலாம், இலைகளைப் பார்க்கலாம். ஆனால் வேரைப் பார்க்க முடியாது. அப்படி அவ்வேரைப் பார்க்க எண்ணினால் அந்த தாவரமேதன் வழுவை இழந்து விழுந்துவிடும் நிலைக்கு வந்துவிடும். அதனால் வேர் மண்ணுக்குள் மூடித்தான் இருக்க வேண்டும் என்பது நியதி.

வேதத்தை யாரும் மறைத்து வைக்க வில்லை. சொல்லப் போனால் அந்த மந்திரங்களை எழுத சரியான மொழி எழுத்து கிட்டவில்லை. அதனால் அந்த மந்திரங்கள் சப்த உச்சரிப்பினால் தொனியால் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் பாடமாகும். இரகசியத்தைச் சொன்னாலும் யாரும் எழுதிக் காட்டமாட்டார்கள் என்பதே உண்மை. வேதம் என்கிற மறை மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றதாகச் சொல்லப்பட்டாலும் அவை சப்த ஒலி வடிவில் எங்கும் நிறைந்துதான் இருக்கின்றது..

வேதம் என்றால் அது அறியப்படவேண்டிய ஒன்று. அறிவது என்றால் எதை! எவற்றை! என்ற சந்தேகத்திற்கு எதையெல்லாம் அறிந்து கொண்டால் பரிபூரண ஞானம் அதாவது முற்றறிவு பெற முடியுமோ அவற்றையெல்லாம் அறியத் துணையாக நிற்கும் ஒரு தொகுப்பாகும். ஆனால் வேதம் ஒன்றுதான். அதை வியாசர் என்ற மகரிஷி நான்காகப் பகுத்துள்ளார். அவரை வேத வியாசர் என்பர்.

ஒரு வேதத்தை வியாசர் ஏன் நான்காகப் பிரிக்க வேண்டும். கலியுகத்தில் வேதத்தை அறிய வேண்டும் என்றால் அவர்களின் ஆயுட்காலம் மற்ற யுகங்களை விட குறைவு என்பதாலும், கலியில் வேதங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவு என்பதாலும் கலியுக மக்கள் வேதங்களால் நன்மை பெற வேண்டும் என்பதாலும் ஒன்றாக இருந்த வேதத்தை பிரித்து நான்காக்கி தந்துள்ளார்.

வியாசரால் நான்காக்கப்பட்ட வேதங்கள். ருக்வேதம், யஜூர்வேதம்,. ஸாமவேதம், அதர்வவேதம் எனப்படும். வேதம் ஒரு மரம் என்று கொண்டால் நான்கு பிரிவுகளும் நான்கு கிளைகள். பெரிய கிளைகளிலிருந்து சிறிய கிளைகள் தோன்றுவதுபோல் நான்கு பிரிவுகளிலிருந்தும் பல கிளைகள் உண்டு அவைகள் சாகைகள் எனப்படும். வேதத்தின் உட்பிரிவுகளே மந்திரங்களாகும்.

ஒவ்வொரு வேதத்திலும் ஸம்ஹிதை, பிராமணங்கள், உபநிடதங்கள் என்ற மூன்று பிரிவுகள் உள்ளது. முடிந்தளவிற்கு சுருங்கச் சொல்லியுள்ளது ஒரு மேலோட்டமாக வேதங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக- குருஸ்ரீ பகோரா.


ஸம்ஹிதை
ஸம்ஹிதை என்றால் தொகுதிகள் எனப் பொருள். ஸூக்தங்கள் எனும் மந்திரங்களைக் கொண்ட இவை வேள்விகள் மற்றும் வைதீக கர்மாக்கள் ஆகியவற்றிற்கும். மனித நலத்திற்காகவும் உபயோகிக்கப்படுபவை.

ருக்வேத ஸம்ஹிதை- ருக்வேதத்தில் உள்ள மந்த்ர ஸமூஹம் 1017 ஸூக்தங்களுடன் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை அக்னியில் ஆஹூத் செய்யும்போது ”ஹோதா” க்குரிய மந்திரங்களைக் கொண்டது.

யஜூர்வேத ஸம்ஹிதை- நாற்பது அத்தியாயங்களுடன் 1886 சுலோகங்களைக் கொண்டுள்ளது. இதில் தேவதாவாஹனம், தேவதா ஸ்துதி, வேதிகை செங்கல் தூபஸ்தம்பம் ஆகிய விபரங்கள் உள்ளன. இது வேள்வியை நடத்துகின்ற அத்வாயுக்கான தர்மங்களைக் உள்ளடக்கியவை. யஜுர் வேதம் கிருஷ்ண யஜுர்வேதம், சுக்ல யஜூர்வேதம் என இருவகைப்படும். கிருஷ்ண யஜுர்வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதையும், சுக்ல யஜூர்வேதத்தில் வாஜஸனேய ஸம்ஹிதையும் உள்ளன.

ஸாமவேத ஸம்ஹிதை- 32 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இதில் 460 ருக்குகள்-மந்திரங்கள் உள்ளன. 75 ருக்வேத மந்திரங்களும் அடங்கியுள்ளது. கானம்-இசை பற்றியது. ஸாம வேதம் அறிந்த ஒருவரைத்தான் பண்டிதர் என்று சொல்வது வழக்கம். ஸோம யாகத்தில் ஆஹூகு செய்யும் போது ஸாம வேத கானம் பாடப்படும். இறைவனுக்கு மிகவும் பிடித்த கானம்.

அதர்வ வேதம்- இது 20 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு 731 ருக்குகள்-மந்திரங்கள் கொண்டது. அன்றாட வாழ்வியல் விவசயிகள், வியாபாரிகள் ஆகியோரின் நடைமுறைகளை விளக்குவது. யாகங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பு பிரம்மாவுடையது. அத்வர்யு, உத்காத, ஹோதா இவர்களால் ஏற்படும் தவறுகளை நிவர்த்திக்கும் பொறுப்பு பிரம்மாவுடையது.

பிராமணங்கள்!
யக்ஞ விதிகள், நிந்தை, ஸ்துதி, கதைகள், கதை வசனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை.

ருக்வேத பிராமணங்கள்! முப்பது அத்தியாயங்கள் கொண்ட இது இரண்டு பிரிவுகள் கொண்டது. ஐதரேயம், சங்காயாணம் அல்லது கௌஷிதக ப்ராமணங்கள். ஐதரேய பிராமணத்தில் ஐதரேய உபநிஷத்தும், கௌஷிக பிராமணத்தில் கௌஷிக உபநிஷத்தும் உள்ளது.

யஜூர்வேத பிராமணங்கள்! கிருஷ்ண யஜுர் வேதத்தில் வசன நடையும், ஸம்ஹிதையும் கலந்து கூறப்பட்டுள்ளன. இதில் தைத்தரீய உபநிஷத், கடோபநிஷத், ஸ்வேதாசுவதரம் ஆகிய உபநிடதங்கள் உள்ளன.

சுக்ல யஜுர் வேதத்தில் 100 அத்தியாயங்கள் கொண்ட சதபத பிராமணம் உள்ளது. இதில் பிரஹதாரண்யக உபநிஷத், ஈசோப நிஷத் ஆகியன உள்ளது.

ஸாமவேத பிராமணங்கள்! தலவகாரம், பஞ்சவிம்ச பிராமணம், சாந்தோக்ய பிராமணம் ஆகியவை உள்ளன. இதில் கோனாப நிஷத் உபநிஷத்துக்கள் உள்ளது.

அதர்வவேத பிராமணங்கள்! கோபாத பிராமணம் உள்ளது. இதில் முண்டக, பரச்ன, மாண்டுக்ய ஆகிய உபநிஷத்துக்கள் உள்ளன.

வேதாங்கங்கள்- சிஷா, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், சோதிடம், என்ற ஆறும் வேதத்தின் அங்கங்கள் எனப்படும்.

சிஷா- இது அத்யயனம் பண்ணும் முறையை தெரிவிப்பது. ஸ்வர ஞானம், உத்ஸாரணம், மாத்திரை பற்றிச் சொல்வது. வேத வாக்கியங்கள் மாறுதல் அடையா வண்ணம், பதம், க்ரமம் ஆகியவகைகளில் ஒழுங்கு படுத்தப் பட்டிருக்கின்றது.
பதபாடம் என்பது ஒவ்வொரு வார்த்தையையும் தனித்து அதன் ரூபத்துடன் உச்சரித்தல் ஆகும்.
கிரமபாடம் என்பது இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து உச்சரித்தல் ஆகும்.

கல்பம்: கல்பம் என்பது க்ரியை முறையாகும். மூன்று அக்னி சம்பந்தமான கிரியைகளைச் சொல்கின்ற சிரௌத சூத்திரங்கள் இதைச் சேர்ந்தவை. யாக சாலை நிர்மாணிக்க வேண்டிய க்ஷேத்ர கணித அளாவு, குறைகளைக் கூறும் கல்ப சூத்திரங்களைக் கொண்டது. இதற்கு ஜியோமிதி அல்லது க்ஷேத்ர கணித பிரக்ஞை வேண்டும்.

வியாகரணம்- வியாகரணம் என்பது ஒரு இலக்கண நூல். பாணினி என்பவரால் எழுதப்பட்ட பாணினி சூத்திரம் இதிலடங்கியது.

நிருக்தம்- சொல்லின் உற்பத்தி முதலியவைகளின் இலக்கணம். யாஸ்கர் என்பவர் இதற்கு பாஷ்யம் செய்திருக்கின்றார்.

சந்தஸ்-இது வேத சம்பந்தப்பட்ட முக்கியமான சாஸ்திரம். இதை யாப்பிலக்கணம் என்பர்.

ஜோதிஷம்-இதில் ககோள சாஸ்திரம் மற்றும் பல சாஸ்திரங்களைக் கொண்டது. கிரஹம் பற்றியவைகளின் சஞ்சாரம் கொடுக்கும் பலன்கள் மனிதர்களுக்குச் சொல்கிறது.

#####

 

செவ்வாய்க்கிழமை, 09 April 2019 09:59

சாலைகள்!

Written by

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#*#*#*#*#

சாலைகள்!

சாலை பொதுவாக ஒர் இடத்தையும் மற்றொரு இடத்தையும் இணைக்க ஏற்படுத்தப்பட்டது. ஒற்றையடிப்பாதை, இருசக்ர வாகனங்கள் செல்லும் பாதையாகமாறி பின்னர் மாட்டு வாண்டிகள் கார் பயணிக்க மாற்றம் கொண்டு தற்போது பயணிகள் பேருந்து, சரக்கு வாகனங்கள் பெரிய எந்திரங்கள் ஆகியவற்றிற்காக பயன் படுத்தப்படுகின்றது.

நிறைய போக்குவரத்து உள்ள வழித்தடங்கள், பெரிய ஊர்களை இனைக்கும் சாலைகள் ஆகியன நெரிசல் காராணமாக இரு வழிப் பாதயாக மாறி தற்போது நான்கு வழிச்சாலை மற்றும் எட்டு வழிச்சாலையாக மாற்றம் கண்டு வருகின்றன. இவையெல்லாம் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு தங்கு தடையின்றி விரைந்து செல்லவும் மக்கள் நலன் கருதி ஏற்படுத்தப் பட்டுள்ளன.

அதனால் இந்த பெருவழிச் சாலைகளின் சட்ட திட்டங்களை மக்கள் அவசியம் புரிந்து கொண்டு செயல்படவேண்டும். மீறீனால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் ஏற்படலாம். விபத்துக்கள் தவிர்க்கப் படுவதற்காக ஆங்காங்கே குறியீடுகளும், சாலையை கடக்க வழிமுறைகளையும் எற்படுத்தியுள்ளனர். இதை மீறி செயலாக்கம் கொண்டு விபத்துகளை சந்திக்க நேர்ந்தால் அதற்கு யாரும் பொறுப்பில்லை. வாகனங்களுக்கோ உயிருக்கோ பாதுகாப்பு பாலிசிகள் எடுத்திருந்தாலும் அது உதவாது. எனெனில் நீங்கள் சட்டத்தை மீறி தானாகே விபத்தைத் தேடி ஏற்படுத்திக் கொண்டீர்கள் என்பதால் எந்த பணமும் கிடைக்காது. ஆனால் மருத்துவ உதவி மட்டும் கிடைக்கும்.

சாலைகள் சீராக இருந்தால்தான் பயணம் நன்றாக இருக்கும் உடல் உபாதைகள் குறையும். சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தால் பயணம் செய்யும் மக்களுக்கு உடல் உபாதைகள் அதிகம். ஓர் இடத்தில் சாலை செப்பனிட்டு புதியதாக அமைத்தால் அடுத்த வாரத்திலேயே மின் அல்லது குடிநீர் அல்லது தொலைபேசி இவர்களில் ஏதாவது ஒரு நிர்வாகம் சார்பாக குழிபறித்து விட்டு அவர்கள் வேலை முடிந்ததும் அப்படியே மண்ணை நிரப்பிவிட்டு சென்று விடுகின்றனர்.

ஆனால் அவர்கள் அவ்வாறு குழி பறிப்பதற்கு அந்த சாலைக்குரிய நிர்வாகத்திடம் எழுத்துமூலம் எழுதிகேட்டு அனுமதி பெற்ற பின்னரே குழி தோண்ட வேண்டும் என்பது நியதி. அதன்படி அங்கு தோண்டப்பட்ட குழியை மூடி சமன் செய்து பழைய நிலையான தார் சாலையாக மாற்றுவது உள்பட விரிவான அறிக்கை தயரித்து அதற்காண பணத்தைக் கட்டச் சொல்லிய பின்னரே அனுமதி என்றாலும் ஒரு சில சமயம் அவசரம் காரணமாக சம்பந்தப்பட்ட துறையிடம் சொல்லிவிட்டு வேலை தொடங்குவதும் நடப்பதுண்டு. எப்படியிருப்பினும் அவர்கள் அதற்குரிய தொகையைச் செலுத்தி விடுகின்றனர். ஆனல் அந்த துறை அந்தச் சாலையை மீண்டும் சரியான முறையில் செப்பனிடாமல் அந்த சாலையைப் உபயோகப்படுத்தும் பயணிகளுக்கு தொடர்ந்து துன்பம் விளைவிக்கக்கூடியதாக வைத்து விடுகின்றனர். அவ்வாறு பல குழிகள் சேர்ந்தபின் முழுமையான சாலை அமைக்கும் போதுதான் அந்த மேடு பள்ளம் சரியாகின்றது.

முறைப்படி அனுமதி பெற்று தோண்டுவது ஒருபுறம் என்றால் அனுமதியில்லாமல் மக்கள் தங்கள் சுயநலம் கருதி பல இடங்களில் தோண்டி சாலையை மேடுபள்ளம் ஆக்கி விடுகின்றனர். போதுவாக சாலைகளை யாராயிருந்தாலும் எந்தப் பணிக்காக இருந்தாலும் உரிய உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதிபெற்று வேலை முடிந்த பின்னர் அவர்களே சரியான முறையில் சாலையை செப்பனிட வேண்டும் என்று கட்டாயம் இருக்க வேண்டும். வீட்டிற்குள் ஓரு வேலை செய்து விட்டு அதை சரிசெய்யாமல் அப்படியே விட்டு விடுவார்களா என்ன! அனுமதி பெற்று வேலை முடிந்தபின்னர் மேற்பார்வை செய்து சாலையை செப்பனிடாமல் விடுபவர்களை உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். தண்டனை என்ற பயம் இருந்தால் எல்லாம் சரியாக இயல்பாக நடைபெறும். சாலையில் தோண்டும் ஒவ்வொரு குழிக்கும் கட்டணம் செலுத்தி இரசீது பெற்றபின்னரே குழி தோண்ட வேண்டும். அவசரம் கருதி அவசரகாலப் பணியாகவும் அனுமதி வாங்கலாம்.

எந்த சாலையும் மேடுபள்ளங்களின்றி மக்களின் ஆரோக்கிய பயணத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். அதனால் உடனுக்குடன் செப்பனிடல் நடைபெற வேண்டும். அனுமதியின்றி குழிதோண்டல் விளம்பரங்களுக்காக தோண்டல் கூட்டங்களுக்காக தோண்டல் என்று எதுவாக இருந்தாலும் அனுமதியில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபருக்கு அதற்குரிய தண்டணை வழங்கப்பட வேண்டும்.

சாலைகளை ஆக்ரமித்து கடைகளையும் வீட்டின் பகுதிகளையும் அதிகப் படுத்தி உபயோக்கும் எண்ணங்கள் சரியில்லை. அவ்வாறு செய்பவர்கள் முதலில் எச்சரிக்கை செய்யப் படவேண்டும்,. பின்னும் அவ்வாறு தொடர்ந்தால் அவர்கள் தண்டிக்கப் படவேண்டும். ஒரு வியாபார இடத்திற்கு முன்னால் அங்கு வரும் வாகனங்களுக்கு நிறுத்துவதற்கு அவர்களே ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவ்வாறின்றி சாலைகளில் தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்ய விடுவது வியாபாரம் செய்பவர் அல்லது அந்த இடத்தினுடைய சொந்தக்கார்களே பொறுப்பு என்பதை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சாலை ஆக்கிரமிப்புகளால் பல உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

பெரிய நகரங்கள் /ஊர்களை இனைக்கும் சாலைகளில் சேரும் குறுக்குச் சாலைகளிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக கவனமுடன் வரவேண்டும். அதை விடுத்து அவர்கள் வேகமாக வந்து திரும்புவார்களாம். அதனால் நெடுஞ்சாலையில் சாலையை உயர்த்தி மேடாக்கி தடுப்பு அல்லது தட்டிகள் வைத்து ஒருசமயம் ஒரு வண்டி செல்வது போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றனர்.

குறுக்குச் சாலையில் எப்பொழுதாவது சில வண்டிகள் வரும். நெடுஞ்சாலையில் அடிக்கடி வண்டிகள் வரும். ஒரு சில வண்டிகளுக்காக நெடுஞ்சாலையைக் கடக்கும் நூற்றுக் கணக்காண வண்டிகள் தங்கள் வேகத்தை குறைத்து மேட்டில் ஏறி இறங்கி மெதுவாக செல்ல வேண்டுமாம். தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக இருக்கின்றது. இது போன்று ஒரு நெடுஞ்சாலையில் பல மேடுகளைக் கட்டி தடுப்பு செய்துள்ளதால் நெடுந்தொலைவு பயணிக்கும் மக்கள் துன்பமடைகின்றனர். பொதுவாக சாலைகள் மேடு பள்ளங்கள் நிறந்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை போதாது எண்பதற்காக இந்த மேடு பள்ளங்கள்வேறு. இதனால் ஒவ்வொரு முறையும் வண்டி ஏறி இறங்கும்போது அதில் பயணம் செய்யும் மக்களின் முதுகுத் தண்டு தேவையில்லாமல் தேய்வடைகின்றது. பலருக்கு கழுத்து சுளுக்கு ஏற்படுகின்றது. நிறைய பயணிகளுக்கு பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு சாலை தடுப்புகளை குறுக்குச் சாலைகளில் மட்டும் அமக்க வேண்டும். இரு பக்கமும் எச்சரிக்கை பலகைகளை முறைப்படி பொறுத்த வேண்டும்.

இது மட்டுமில்லாமல் வாகனங்கள் தங்கள் வேகத்தைக் குறைத்து மெதுவாக அந்த இடத்தை கடக்க கீர்முறையை மாற்றி செயல் படுவதால் நிறைய பெட்ரோல் தேவையின்றி வீணாக்குகின்றோம். இப்படியெல்லம் செய்து விட்டு பெட்ரோலை சிக்கனப்படுத்த நடவடிக்கை என்று விளம்பரங்கள் எதற்கு!

அடுத்து பள்ளிகளுக்காக தடுப்புகளை சாலையில் ஏற்படுத்துகின்றனர். பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர்கள் வேகமாக கவனமின்றி சாலையைக் கடப்பதாலேயே பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. நம் குழந்தைகள் அறிவில் சிறந்தவை. புத்திசாலித்தன மிக்கவர்கள். அவர்களுக்கு முறையான விளக்கங்களைச் சொல்லி வழி முறைகளை கற்றுத் தந்தால் அவர்களின் செயல் பாடுகள் நம்மை மிஞ்சி இருக்கும். அவர்களுக்கு சாலைகளின் குறியீடுகள் சாலியை கடக்குமுன் செயல் படும் முறைகளை சரியாக கற்றுத்தாராமல் அவர்களை சரியான இயக்கமில்லாத மண்பொம்மைகளாக்கி விடுகின்றோம்.

எல்லா பள்ளிகளின் வாயிலில் முறையான தடுப்பை ஏற்படுத்தி மாணவ மாணவிகளின் வேகத்தை குறைத்து தாங்கள் ஒரு சாலையை கடக்க இருக்கின்றோம் என்ற விழிப்பு நிலையை ஏற்படுத்தி செயல் படவைத்தால் எந்த பள்ளிக் குழந்தையும் விபத்தில் சிக்காது. இந்த விழிப்புணர்வு மற்ற இடங்களில் அவர்கள் சாலையைக் கடக்கும்போதும் உபயோகமாயிருக்கும். இதற்கு உதவியாக காலை, மதியம் மற்றும் மாலை ஆகிய மூன்று நேரங்களிலும் அந்தப் பள்ளியில் உள்ள உடற்பயிற்சியாளர்கள், பாட்டு மற்றும் கலைத் துறை ஆசிரியர்கள், நூலகப் பெருப்பாளர் ஆகியோரின் உதவியுடன் குழந்தைகள் பள்ளி வாயிலிலுள்ள சாலயைக் கடக்கச் செயல் முறைப்படுத்தலாம்.

பள்ளிக்கூடங்களின் வாயிற் கதவுகள் திறந்திருக்கக் கூடிய காலங்கள் காலை மதியம் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகள் சேர்ந்து மொத்தம் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே. இந்த மூன்று மணி நேரத்திற்காக ஒரு நாளைக்கு மற்ற இருபத்தியோரு மணி நேரமும் அந்த நெடுஞ்சாலையில் செல்வோர் மேடுகளில் ஏறி இறங்கி முதுகு தண்டு வடத்திற்கு அதிர்ச்சி தந்து செல்ல வேண்டுமா! இதுமட்டுமல்லாமல் விடுமுறை தினங்கள் வேறு.! இந்த சிந்தனை கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் சிந்தித்து நம் மக்களின் உடல்நலப் பாதுகாப்பிற்கு உதவ வேண்டுகின்றேன்.

 

ஒரு இரயில் பாதையை மற்றும் நான்கு வழிச் சாலகளை கடக்கும்போதும் எப்படி கவனுத்துடன் இருபுறம் பார்த்து செல்கின்றோமோ அதே கவனம் எந்த சாலையாயிருப்பினும் கவனமுடன் கடந்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

இப்படி வீணற்ற தடுப்புகளால் பயணம் செய்வோரின் கழுத்து, முதுகுத் தண்டுவடம் பாதிப்பு என்ற நிலை குறைவது மட்டுமல்லாமல் நாட்டில் பெட்ரோல் சிக்கனமும் ஏற்படும்.

அடுத்து சாலை தடுப்புகளை சில கல்லூரி, மருத்துவ நிர்வாகங்கள் தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்கின்றன. இவர்கள் விளம்பரம் செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள். விளம்பரங்களை உரிய

இடங்களில் சாலை ஓரங்களில் அனுமதி பெற்று வைத்துக் கொள்ள வேண்டும் கண்ட பொது இடங்களில், சாலைகளில் வைக்கக்கூடாது என்று கட்டாய மாக்கப் படவேண்டும்.

பெரிய ஊர்களில் சாலைகளை முறையாகக் கடப்பதற்கும் போக்குவரத்தை சீர்படுத்தவும் மின் விளக்கு (சிமப்பு-ஆரஞ்சு-பச்சை) கம்பங்களைப் பெறுத்தியிருக்கின்றனர். அதிலும் சில நிர்வாகங்கள் விளம்பரங்கள் செய்ய தங்களது தட்டிகளை பெரிய அளவில் வைத்துள்ளனர். எங்கு செல்ல வேண்டும் என்ற குறிப்புகள் மறைக்கப் பட்டோ அல்லது சிறிய அளவிலே வைக்கப்பட்டுள்ளது. அது எப்படி மக்களுக்கு சாலையை முறையாக கடந்து வேண்டிய இடத்திற்கு செல்ல வழிகாட்டியாக உதவும்.

போக்குவரத்து விளக்கு கம்பங்களில் விளம்பரங்கள் செய்வது தடுக்கப் படவேண்டும். இதை யார் அனுமதிக்கின்றனர் என்றே தெரிவதில்லை. சாலைகளில் நேராக விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டு வாகன ஒட்டி வண்டியைச் செலுத்தினால் ஏன் விபத்துக்கள் அதிகமாகாது.

பொதுவாக பெரிய நிர்வாகங்கள் வளர விளம்பரங்கள் வேண்டியதுதான். அதை முறைப்படி மக்களுக்கு பாது காப்பாகவும் அதே சமயம் பயன் படுபவனாகவும் இருக்கும்படி விளம்பரங்கள் செய்ய வேண்டியது அவர்களது சமுதாய கடமை. அதற்கு அரசு நிர்வாகங்கள் தகுந்த மேற்பார்வை முறைகளை ஏற்படுத்தி சாலைகளை முறையாக பயணிப்போர் நலன் கருதி மேம்பாட்டுச் செயல்களைச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்!— குருஸ்ரீ பகோரா

#####

திங்கட்கிழமை, 08 April 2019 16:03

நீதியின் குரல்!

Written by

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#*#*#*#*#

 

நீதியின் குரல்!

குற்றவாளிகள் அல்லது குற்றத்திற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என நினைத்து சட்ட பாது காப்பாளர்களில் ஒரு பிரிவினரான காவல்துறை போலீஸார் இன்ன காரணத்திற்காக கைது / அல்லது அழைத்துச் செல்லப் படுகின்றார் என்று எழுத்து மூலமாய் அவர்களை எங்கிருந்து கூட்டிச் சொல்கின்றார்களோ அங்கிருந்து அப்போதே எழுதிக் கொடுத்துவிட்டு, அவர்களின் வீட்டிற்கும் தகவல் கொடுத்து விட்டு, அவர்களை நீதி அரசர்கள் எனப்படும் நீதிபதிகளின் முன்னிருத்தி காரணங்களை எழுத்து மூலமாக விளக்கி எத்தனை நாள் அவர்களை விசாரிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்து நீதிமன்றத்திலிருந்து கூட்டிச் சென்று மனித நேயத்துடன் குற்றத்திற்குத் தகுந்தவாறு விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது ஏன் என்றால் எதற்காக ஒருவரை அரசின் சமூக பாதுகாப்பாளர்கள் எனப்படும் காவல்துறை போலீசார் அழைத்துச் செல்கின்றார் என்பது அவர்களுக்கோ அல்லது அவர் உறவுகளுக்கோ தெரிவதில்லை.ஒரு சில சமயம் இன்னாரைக் காணவில்லை என்று புகார் கொடுக்கச் செல்லும்போதுதான் காணமல் போன நபர் புகர்கொடுக்குமிடமான அந்த காவல்துறை நிலையத்திலேயே இருப்பது தெரிய வருகின்ற நிலை. 

குற்றங்கள் உறுதி செய்யப் படும்வரை குற்றவாளிகளுக்கு எந்த நிலையிலும் ஆதரவு தெரிவிக்கின்ற நிலை இக்கட்டுரையிலில்லை அவர்கள் யாராயிருந்தாலும் என்ன காரணமாய் இருந்தாலும் சட்டத்தின்முன் சமம் என்ற நிலையை மேற்கொள்வதே காவல்துறைக்கு சிறப்பாகும். ஒருவரின் தனிபட்ட செல்வாக்கு காரணமாக காவல்துறை தன் நிலையை நலிவடையச் செய்து விடக்கூடாது. குற்றங்கள் உறுதி செய்யப் படும்வரை எல்லோருக்கும் ஒரே நடைமுறையை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். பின் அவர்கள் செய்த குற்றங்கள் உறுதியானால் அதற்கேற்ற நிலைகள் என வைத்துக் கொள்வது சிறப்பு.

காவல் நிலையங்களில் இருப்பவர்கள் வெறும் உள்ளாடையுடன் இருப்பதக் காண்கின்றோம். நாகரீகம் வளர்ந்த இந்நாளில் ரோட்டில் செல்லும் ஒருவன் ஆடையின்றியோ அல்லது அரைகுறை ஆடையுடன் இருந்தால் அவனை மனவளர்ச்சி குன்றியவன் என்கிறோம். அவனைப் பார்த்து பரிதாபப்பட்டு என்ன காராணத்தினால் இந்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளானோ என வருந்துகின்றோம். நீதி மன்றங்களில் குற்றங்கள் நிரூபணம் ஆனபின் குற்றவாளிகள் என அவர்களுக்கு ஓர் சீருடை அளித்து அவர்கள் மனமாற்றம் அடைய அவர்கள் செய்த குற்றத்திற்குரிய தண்டனை அடைய வேண்டும் என்று ஓர் கட்டுகோப்பை ஏற்படுத்தி உள்ளது அரசின் சட்டங்கள்.

அப்படியிருக்கும்போது எதுவும் உறுதி செய்யாமல் ஒருவரை காவல் நிலையத்தில் அரைகுறை ஆடைகளில் வைப்பது எந்த சட்டத்தில் உள்ளது. இது முற்றிலும் மனித நேயத்திற்கு எதிரானது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.

ஓர் உயிர் பறிக்கப்பட்டபின் அந்த உயிர் சமபந்தப்பட்டவர்களின் இழப்பை யாராலும் சரிப்படுத்த முடியாது. சமுதாயத்தில் ஒரு உயிரை மற்ற உயிர் பறித்தல் கூடாது என்தற்காகவே இவ்வகைக் குற்றங்களுக்கு கடுமையான சட்டமுறைகளையும் தண்டனைகளையும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சட்ட முறைகளையெல்லாம் மீறி தன் பணபலத்தால் தனிப்பட்ட செல்வாக்கால் கடுமையான சட்ட திட்டங்களை மீறி ஒருவரால் செயல் படுத்த முடியும் என்றால் என்ன சமதர்மம். அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்பதெல்லாம் எதற்கு! என்ற எண்ணங்கள் மக்களிடையே தோன்றுவதை அணுமதிப்பது வளரவிடுவது எதிர்கால சமுதாயத்திற்கு சீர்கேடாகும்.

ஓர் உயிரைப் பறித்ததற்காக ஒருவர்மேல் குற்றம் சாட்டப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவரின் உறவுகள் வருந்தி கதறலாம். ஆனால் அவர்கள் கொலை செய்யப்பட்டவரின் உறவுகளின் நிலையை ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் எத்தனைக் கனவுகள். கற்பனைகள். வாழ்வாதாரம் எல்லாம் வீணாகி அவரின் பிரிவால் அந்தக் குடும்பம் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளதே! அதற்கு காராணமான தங்கள் உறவினன் செய்தது சரியா என நினைக்க வேண்டும். இதே நிலையில் தன் உறவின் குடும்பம் இருந்தால் எப்படி என்பதையும் சிந்திக்க வேண்டும். அது எவ்வளவு துயரம் என்பது அப்போது அவர்களுக்குப் புரியும்.

ஓர் சாதாரண வாழ்வு நிலையிலிருந்து மாறுபட்ட ஒருவர் மற்றொருவரைத் தாக்கி கொலை செய்வது என்றால் அந்த வன்மம் ஏன்! அந்த வன்மத்துடன் இருக்கும் அவரை எந்த உறுவுகளாவது கண்டித்தனவா அல்லது தடுத்தனவா! இப்போது ஏன் தன் உறவு சிக்கலில் சிக்கியதே என்று கண்ணீரும் புலம்பலும்! தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்.

பத்திரிகைகளும், செய்திகளும் தவறு செய்தவரின் உறவுகள் கண்ணீர் விடுவதை, புலம்புவதை, அழுவதை தெரிவித்து மற்றவர்களின் மனதில் ஓர் இரக்க உணர்ச்சியை ஏற்படுத்த முயல்வதை தடுக்க வேண்டும். தவறு, குற்றம் என்றால் எந்த நிலையிலும் யாரும் அந்த நிகழ்வுகளை ஆதரிக்க கூடாது என்ற நிலை ஏற்பட்டால்தான் நாட்டில் அநியாயங்கள் அக்கிரமங்கள் செய்வன குறையும். தெய்வம் நின்று கொல்லும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற சொற்றொடர்களுக்கு ஏற்ப பத்திரிகைகளிலும் செய்திகளிலும் தெரிவிக்க வேண்டும். இந்த நிலைதான் சமூகத்தில் மற்ற உயிர்களுக்கு கெடுதல் புரிபவர்களுக்கு ஓர் குற்ற உணர்ச்சியைத் தூண்டி குற்றங்கள் செய்யப்படுவதைக் குறைக்க முடியும். குற்றங்கள் செய்யாமலிருக்க தூண்டுதலாக அமையும்.

ஒருவர் மற்றொருவரின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு தாக்குகின்றார் என்றால், தாக்கப்பட்டவர் செய்தது என்ன! எதனால் தாக்குபவருக்கு இவ்வளவு வன்மம் ஏற்பட்டுள்ளது. இன்ன காராணத்தினால் எனக்கு இவர்மேல் வன்மம் ஏற்பட்டுள்ளது . என்ற முறையீட்டிற்கு தீர்வு காணும் முறை நீதி மன்றங்களில் இருந்தால் இது மோன்ற வன்மங்கள் அதிகமாகி ஒருவர் தன் எதிர்காலம் பற்றி கவலை கொள்லாமல் வன்மம் தலை தூக்கிய நிலையில் ஒரு குற்றத்தினைச் செய்து விட்டு அதனால் தன் உறவுகளுக்கு பாதிப்பையும் பலகஷ்டங்களையும் விரும்பியா உருவாக்குவார்!

சமுதாய சீர்திருத்தத்திற்கு மிகவும் சிந்தித்து செயலாக்கம் வேண்டிய பொது விஷயம் இது! இதற்காண ஓர் அமைப்பு இருந்து அதில் முறையீடு செய்து ஒருவரின் வன்மங்கள் குறையும் நிலை ஏற்பட்டால் இது போன்ற உயிர் போக்கும் அவல நிகழ்வுகள் நடைபெற வாய்பில்லாமல் போகும். மனித நேயம் மேம்பட்டு சமுதாயம் உயர் நிலை அடையும்.

ஓர் விசாரணையை ஆரம்பித்த அமைப்புகள் முடிவுகளை விரைவாக ஒர் கால நிர்ணயத்திற்குள் கட்டாயமாக அறிவிக்கப் படுபனவாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தள்ளிவைக்கக் கூடாது. வாய்தா என்பது பல்லாண்டுகள் வாழ்க என்பதுபோல் வழக்குகளை வாழவைக்கும் சொல்லாகும். வாய்தா வழக்குகள் வாழ்வதற்காகவே! வழக்குகள் விரைவில் முடிக்க வேண்டும் என்ற எல்லோரும் ஒப்புக்கொண்ட நிலையில் ஏன் மந்தமாக முடிவாகமல் இருக்கும் நிலை ஏற்படுகின்றது. அதற்கு ஓர் முக்கியமான காரணம் வாய்தா அளிப்பதே. ஒரு விசாரனைக்கு இத்தனை வாய்தாதான் என்று கட்டாயமாக்கப்படவேண்டும். அதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் வரவில்லை என்றால் அவர்மேல் குற்றம் நிருபணம் ஆவற்கு இதுவும் ஒர் காரணம் என்ற நிலை ஏற்படும் என கட்டயமாக்குதலே,

வாய்தாவினால் காலதாமதம் ஏற்பட்டு அந்தக் காலங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு அது ஒரு பாலருக்கு சாதகமாக அமைய வாய்ப்புண்டு. இந்த வாய்தா நிலையிலிருந்து மக்களையும், நீண்டகாலமாக வழக்குகள் நடந்து கொண்டிருப்பது என்ற நிலைகள் மாற வாய்தாக்களை இத்தனை என்று நிர்ணயிக்கப் படவேண்டும். சிலருக்கு இது நன்மைகள் தராமலிருக்கலாம். சிலருக்காக ஒட்டுமொத்த நாட்டின் நலன் நீதி நிர்வாகம் பாழ்படுவதை எல்லோரும் எல்லா காலமும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதைச் சீர்படுத்தினால் நாட்டில் தேங்கிக் கிடக்கும் பல் ஆயிரக்கணக்காண குற்றங்களை விசாரண நடத்தி விரைவில் தீர்த்து வைக்கப்படலாம்.

மேலும் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதி மன்றங்களை நாடினால் வாய்தா! வாய்தா! என நம் ஆயுளில் முடிக்க மாட்டார்கள், மேலும் அவ்வளவு செலவு செய்ய முடியாமல் நம்மைத் தீர்த்து விடுவார்கள் என்ற நினைவு கொண்டு. விரைவில் தீர்வு வேண்டும் என குறுக்கு வழியில் தகாத சமூக முறைகளை மேற்கொள்ள வழி வகுக்கும்.

வேண்டுமென்று தகராறு செய்துவிட்டு நீதி மனறத்தில் புகார் பதிவு செய்து விட்டால் அது பல ஆண்டுகள் இழுத்துக் கொண்டிருக்கும் என்ற நிலையில் பல சமூக விரோதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அவல நிலை மாற அனைவரும் முயற்சிக்க வேண்டும். நீதி நேர்மையாக அனைவருக்கும் விரைவில் கிடைக்க வழி வகுக்க வேண்டும்.

ஒரு விசாரணையில் அது முற்றிலும் பொய்யானது. வேறு நோக்கிற்காக வழக்கு புனையப்பட்டது என்று தெரிந்தால் எக்காரணத்திற்காகவும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படக் கூடாது நிச்சயமாக அந்த தவறை உணரும் வகையில், பொய்யான குற்றசாட்டுகள் சுமத்தி ஒருவரை மனஉலைச்சலுக்கு ஆளக்கிய காரணத்திற்காகவும், வக்கீல்கள், நீதிபதி மற்றும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தினை பொய்யான வழக்கினால் வீணடித்த குறத்திற்காகவும் கடுமையா தண்டனை தர வேண்டும். அப்போதுதான் இது போன்ற போலியான வழக்குகள் நீதி மன்றத்திற்கு உள்ளேயே வராது. நீதி மன்றத்தின் நேரங்களும் வீணடிக்கப் படாது. நன்றாக வெளிப்படையாகத் தெரியும் ஒரு போலி வழக்கை எந்த ஒரு வழக்கறிஞரும் வாதாடக்கூடாது. அப்படி வாதடும் வழக்கறிஞர்மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வழக்காடும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

வழக்காடு மன்றத்தில் வழக்காடுபவர்கள் ஒவ்வொரு வழக்கின் தன்மையை உணர்ந்து அதில் தங்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என்ற நிலை அறிந்து வழக்குகளை மேற்கொண்டால் ஆரம்பத்திலேயே போலியான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவது குறைந்து விடும். அப்படி வந்தாலும் அந்த வழக்குகள் இனம் கண்டு கொள்ளப்பட்டு நீதிபதி அவர்கள் தண்டனை தறுவாரென்ற நிலை உறுதியாக இருந்தால் போலியான வழக்குகள் குறைந்து நீதி மன்றத்தின் நேரங்கள் வீணடிக்கப்படாது. ஆண்டுக்கு ஆண்டு போலி வழக்குகள் குறைந்து நாட்டில் நீதித்துறை மேன்மையடைந்து நீதி நியாயம் வழுப்பட்டு மக்கள் நிம்மதியுடன் வாழ வாழ்வியல் முறை அமைந்து நாட்டில் அமைதி பெருகி ஆனந்தமும் நிறையும்.

ஒரு வழக்கறிஞர் தேர்வு எழுதி நீதி அரசருக்குகான தகுதியில் இடம் பெற்றிருந்தாலும் அவரின் முந்தைய காலங்களில் அவர் ஈடுபட்ட வழ்க்குகள் அடிப்படையில் அவரின் முழுத் தகுதி தெரிந்து மற்றவர்களில் சிறந்தவர் என்ற நிலையில் அவர் நீதிஅரசருக்குத் தெரிந்தெடுக்கப் படவேண்டும். அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது செல்வாக்கிற்காகவோ எந்த ஒருவரும் நீதி அரசராகத் தேர்ந்தெடுக்கப் படக்கூடாது. உண்மைகள் மறைக்கப்படாத தெளிவு கொண்ட வாதம், விவாதம், முடிவுகள் முன்னிலைப் படுத்தப்படவேண்டும்.

ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்து விட்டு முன் ஜாமீன் கேட்கிறார் என்றால் எதற்கு அவருக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும். குற்றம் செய்யாத ஒருவர் ஏன் பயப்படவேண்டும். ஒரு குற்றம் தன்மேல் சாத்தப்படவிருக்கின்றது என குறு குறுக்கும் நெஞ்சிற்கு பாதுகாப்பிற்காக ஜாமீன் வழங்குதல் கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கி மேலும் அந்த குற்றப் பின்னியை சீர்குலைக்க அவருக்கு உதவுவதற்காகவே அந்த ஜாமீன் அமையும். எந்த குற்றம் செய்தாலும் சட்ட விளக்கங்களைச் சொல்லி முன் ஜாமீன் வாங்கி விடலாம் என்ற அவல நிலையிலிருந்து நீதிமன்றங்களின் நிலை மாற வேண்டும்

ஜனநாயகம் எல்லோருக்கும் பொது. பணம் இருப்பவர்களுடன் அறிவில் சிறந்தவர்கள் சேர்ந்து அதை தங்கள் பக்கம் இழுத்து ஜனநாயகத்தை பணநாயகமாக ஆக்க விடக்கூடாது என்பதற்காகவே நீதி மன்றங்கள். நியாய தர்ம சிந்தனையுடன் வழக்காடுபவர்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். நாட்டில் தர்ம் நியாங்கள் நிலைக்க அவர்களும் உதவ வேண்டும். அதிகாரமும் பணமும்தான் சட்டத்தின் கண்கள் என நினைத்து தர்மத்தினை விட்டு வேறு செயலுக்கு துணை போகக்கூடாது. இதிகாசங்களும் புராணங்களும் முக்கியத்துவம் கொடுக்கும் இப்புண்ணியபூமியில் நியாயம் தர்மத்தை உறுதிப்படுத்தவே போர்கள் நடந்து அவற்றை நிலைப்படுத்தியுள்ளதை அறிஞர்கள் புரிந்து தங்களின் நிலைகளை மாற்றிக்கொண்டு நியாயம் தர்மத்திற்காக போராடும் நிலையை மேற்கொள்ள வேண்டும்.

சட்டம் என்றால் அது தன் கடமையைச் செய்யும் என்ற நிலை, உணர்வு, ஓர் பயம் கலந்த மரியாதை அனைவருக்கும் வேண்டும். பணம் மற்றும் அதிகாரம் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என சொல்லும் நிலையை நாட்ட நீதி மன்றங்கள்தான் முற்றிலும் உதவி செய்ய வேண்டும்.

ஒரு குற்றத்தைச் செய்தவன் எந்த நிலையிலிருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. பாரபட்சமின்றி நீதி சொல்லி நியாமான தண்டணைகளை அடைய வேண்டும் என்பதே தர்மத்தின் குரலாக நீதி மன்றங்களில் ஒலிக்க வேண்டும். ஒரு விசரணையில் ஒரு நீதி மன்றத்தில் தண்டனை மறு நீதி மன்றத்தில் விடுதலை. எப்படி ஒரு நீதியானது இரு நீதிமன்றங்களிலும் மாறு பட்டு நிற்கின்றது. விசாரணை ஒன்றே. நியாமும் தர்மமும் ஒன்றே. அப்படியானால் ஏன் இரு வேறு வகையான தீர்ப்புகள். அப்படி நீதிக்கு முரணான தீர்ப்புகளை வெளியிட்ட நீதி அரசர்களுக்கும் தண்டனை என்ற நிலை ஏற்பட்டால் இது போன்ற ஒரே வழக்காட்டில் இரு வேறு தீர்ப்புகள் வெளிவராதல்லவா!. நீதிமன்றத்தின் நேரங்களும் வீணடிக்கப் படாது அல்லவா.

ஒரு நீதி அரசர் அளித்த தீர்ப்பு எங்கு சென்றாலும் அது நீதிக்கு உகந்தது. அதுவே சரி என்ற நிலை வேண்டும். அதுவே நீதி. நீதி என்பதில் ஒன்றுக்கு மேற்பட்டது எல்லாம் நீதியென்றாகாது. அது நீதியின் ஆட்சி! அதுவே நீதியின் குரல்!.--குருஸ்ரீபகோரா

#####

வெள்ளிக்கிழமை, 05 April 2019 16:31

நிழல்!

Written by

ஓம்நமசிவய!

பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!
#*#*#*#*#

நிழல்!

எது பிறந்ததோ அந்த வேளையில்தான் நானும் பிறந்தேன். நித்திய தத்துவம் ஒன்றின் விளக்கமாக ஆண்டவன் என்னை அதனுடன் படைத்தனன். நான் பிறந்தது அதற்குத் தெரியாது. எப்போதாவது என்னை காண வேண்டி வரும் .அப்போது அது என்னைக் கண்டு ஆச்சரியப்படலாம். சில சமயம் அதன் பார்வைக்கு நான் தென் படமாடேன். அதனால் என்மீது அதற்கு நம்பிக்கையில்லாமல் போகலாம். ஆனால் நான் அதனுள்தான் ஒளிந்தும் ஒளியாமலும் இருந்து வருகின்றேன்.

அது பிறந்ததிலிருந்து தனக்கு வாழ்க்கை கிடைத்து விட்டது என மகிழ்ந்து கொண்டிருப்பதை நான் அறிவேன். உண்மை என்ன வென்றால் சாவை நோக்கிச் செல்லும் பயணம் தான் வாழ்க்கை என்பதை அது புரிந்து கொள்ளவில்லை. பிறப்பு என்பது சாவில் நுழைவு வாயில். எனவே காலத்தின் கையில் வாழ்க்கை. எனவே காலச்சக்கரத்தின் மணித்துளிகளை இனியனவாக்கிக் கொள்ள முயற்சிசெய் என்ற தத்துவத்தை அது தெரிந்ததாகத் தெரியவில்லை. எப்படியிருப்பினும் நான் அதன் நண்பன். அதன் துணைவன். அது எங்கு சென்றாலும் எது செய்தாலும் அதைக் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன். அதுவே இறைவன் எனக்கு இட்ட கட்டளை.

ஆண்டவன் என்கிற ஒளியுடன் அது கலக்கும்போது அதுவும் நானும் ஒன்றாகி விடுவோம். சம்சார சாகரங்களைக் கடந்த நித்ய நிலையும் அதுவே! அந்த ஒளியிடமிருந்து அது விலகி ஓடினால் அதன் கோரச்சாவு எனக்கு புரிகின்றது. அதை எச்சரிக்கும் முறயை நான் அறிந்ததில்லை. இருந்தாலும் உண்மையை ஒர் நாள் அது உணர்ந்து திருந்தும் என்ற நம்பிக்கையில் அதனுடன் பயணிக்கின்றேன் அது அந்த இறை ஒளியை நாடி முன்னேறும்போது அதுகலக்கும்போது நானும் கலந்துவிடலாம் என்ற நப்பாசையில் அதனுடன் இனைந்து வர அதன் அடியொற்றி நடக்கின்றேன். இதுவே நான் அதைச் சுற்றி சுற்றி அதனுடன் அலைவதன் உள்ள சிறிய தத்துவம். -குருஸ்ரீ பகோரா

#####

வெள்ளிக்கிழமை, 05 April 2019 08:34

ஒதுக்கீடு!

Written by

ஓம்நமசிவய!

புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி! !
#*#*#*#*#

ஒதுக்கீடு!

பிறப்பால் ஒதுக்கீடு அளிப்பது முற்றிலும் சரியில்லை. மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வாய்ப்புக்கள் கிட்ட தாம் இந்தக் குலத்தில் பிறந்திருக்க மாட்டோமா! அந்தக் குலத்தில் பிறந்திருக்க மாட்டோமா! என ஏங்கும் நிலை. இதற்காக பொய் கூறி பிறப்பை மாற்றி சான்றிதழ் பெறும் அவல நிலை

சமுதாயத்தில் சமமான நிலைக்காக தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள அனைவரும் மேம்பாடு அடைய ஓர் ஊக்கம் தர வேண்டியது அவசியம் அனைவரின் கடமை. அதன் முகத்தான் அரசும் மற்றையோரும் படிப்பிற்கும், முதல் வேலை வாய்ப்புக்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் செயல்பட சட்டங்களைத் திருத்துவதில் தவறில்லை.

இதையே எல்லா நிலைகளிலும் பயன்படுத்துவது ஓர் போட்டி, பொறாமை உணர்வுகளை மற்ற்வர்களிடையே தோற்றுவிக்க வழி வகுக்கும். வேலை வாய்பிற்குப்பின் ஊக்குவிப்பு என்றபெயரில் அடுத்த நிலை தருவது சரியில்லை. அந்நிலை அடைந்தோர் எந்தவிதத் திறமையையும் வெளிபடுத்தா நிலையில் பிறப்பால் தனக்கு வேலை மட்டுமல்ல ஊக்குவிப்பும் என்பது என்றென்றும் ஓர் மெத்தனமான போக்கையே உருவாக்கி கொண்டிருக்கின்றது..

இதே நிலையில் இணையாகப் பணி புரிந்தோருக்கு எல்ல திறமைகளிருந்தும் பிறப்பு ஜாதி இல்லை. அதனால் ஊக்குவிப்பு இல்லை அதனால் இங்கேயும் மெத்தனப் போக்கு உருவாக சாதகமான மனநிலை ஏற்படுகின்றது. இப்படிப் பட்ட நிலை உருவானால் நிர்வாகம் எப்படி சீரும் சிறப்புமாக இருக்க முடியும். விரைவில் நலிவடையும் நிர்வாகம் சீர் கெடும்— -குருஸ்ரீ பகோரா

#####

வியாழக்கிழமை, 04 April 2019 19:33

அன்பளிப்பு!

Written by

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வனவ பகர்முன்னவாம் பரமே போற்றி!
#*#*#*#*#

அன்பளிப்பு! 

ஒருவருக்கு ஒருவர் கொடுகும் லஞ்சத்தை கீழ்கண்ட பெயர்களில் கூறினாலும் பொதுவாக மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டத்தில் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு! குற்றம்!. தண்டனைக்குரியது. என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை,
அன்பளிப்பு,
நல்லெண்ணம் பரிமாறல்,
வாழ்த்துக்கள்
வெற்றிபெறுவதற்காக
பழிவாங்க
ஜென்ம கடனை திரும்ப செலுத்துதல்
இயற்கை சமன் (நாம் வாங்கிய லஞ்சத்திற்கு)

ஒருவருக்கு ஒருவர் பணம் கொடுத்தால் அது ஒன்று வட்டியில்லா கடனாக அல்லது வட்டியுடன் கூடிய கடன் அல்லது லஞ்சமாகத்தான் இருக்க முடியும்.

மனிதனுக்கு மனிதன் பொருளோ அல்லது பணமோ கொடுத்தால், உறவாயிருந்தாலும் சரி, நண்பர்களாயிருந்தாலும் சரி, மூன்றாவது நபராக இருந்தாலும் சரி அவரவர் சூழ்நிலை, எதிர்பார்ப்பு இவைகளைக் கணக்கில் கொண்டுதான் அன்பின் மிகுதியால் கொடுக்கப் படுகின்றதா அல்லது மறைமுக எதிர்பார்ப்புடன் கொடுக்கப் படுகின்றதா என தீர்மானிக்க முடியும்,

அன்பு என்ற ஓர் காரணத்திற்காக கொடுக்கப்பட்டாலும், அதே காரணத்திற்காக பெறப்பட்டாலும் காலங்கள் மாறும்போது சூழ்நிலை உறுவாகும்போது ஒருவன் செயலை மற்றவன் நினைத்துப் பார்த்து அவன் இப்படிப்பட்டவன், இவ்வளவு அன்பு காட்டியுள்ளான், இதுகாறும் ஏதும் செய்ய வில்லை. இனியாவது அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும், இப்போதைக்கு அவன் கேட்காமலேயே இந்த உதவியாவது செய்யலாம் என்ற ஓர் எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. என்றோ எதற்கோ பெறப்பட்டதிற்கு பிரதி பலன் வேறு முறையில் திருப்பி செலுத்தப் படுகின்றது- இது ஒருவகை.

ஒரு சின்ன குழப்பத்தில் ஆழ்த்தி அவனுக்கு பணம் கொடுத்து விவகாரத்தில் மாட்டி வைப்பது ஒரு வகை பழி வாங்குதல்.

ஒருவனை சந்தோஷத்தில் பணம் கொடுத்து வாழ்த்துவது ஒருவகை

ஒருவனை வேதனையில் வேறு வழியில்லாமல் கொடுத்துவிட்டு சபிப்பது ஒரு வகை.

இவையெல்லாம் ஏன்! எதற்காக!`

லஞ்சம் ஏன் கொடுக்க வேண்டும்! எதற்காக கொடுக்க வேண்டும்!

ஒருவனுக்கு ஓரிடத்தில் ஓர் செயல் நடக்க வேண்டும் என்றால் நடக்க இருக்கும் காரியத்தின் தன்மை, அதனால் கிடைக்கும் பலன் இவைகளைக் கருத்தில் கொண்டு கணிக்கப்பட்டு பிரதியாகப் பணம், பொருள், மது, பெண்ணாகக் கேட்கப் படுகின்றது. இவனால் அந்தக் காரியத்தை செய்து முடிக்க அவனுக்கு என்ன லாபம் என்று வரையறுக்கப் பட்டு ஏதாவது ஒன்றாக கொடுக்கப் படுகின்றது.

முதலில் தொடர்பு கொண்டு இந்த பரிவர்த்தனையை நட்புடன் ஆரம்பிக்க, வாங்க காபி அல்லது தேநீர் அருந்திக் கொண்டே பேசலாம் என்ற அழைப்பு. பின் ஷேம நலன்கள், ஊர் முறையில் அல்லது ஜாதி முறையில் ஏதாவது ஓர் முறையில் ஒருவரை ஒருவர் நெருங்க முயற்சி. நெருங்கிய வட்டத்திற்குள்தான் எல்லாம் விரிவாக பேச முடியும் என்பதால் எல்லா விபரங்களையும் கேட்டு எப்படியாவது இரு பாலரும் அந்த குறுய வட்டத்திற்குள் நுழைய பிடிவாதம் பிடிக்கின்றனர். அவர் சொன்னார். இவர் சொன்னார் என்று புகழ் பாடி ஏதாவது ஓர் தொடர்பை ஏற்படுத்தி அரசியல் நிலை, காலப் போக்கு, சூழ்நிலை இவைகளை பேச்சுத் திண்ணைபோல் பரிமாறி.. இன்றைய சூழலில் செலவின்றி ஏதும் செய்ய முடியாது. அவருக்கு இவருக்கு என்று கணக்குச் சொல்லி ஒருமித்த கருத்தடைவர்.

இருவரும் சமரசம் ஆகி ஓர் நிலையில் இந்த வேலை செய்து முடிக்க என்ன தருவாய்! என்ற கேள்வி வரும்.. அவர் அந்த வேலையைச் செய்வதற்கு நிர்வாகம் ஊதியம் தந்தாலும் அவருடைய ஆசைக்கு பேராசைக்கு பணம் பற்றாக் குறையாக இருப்பதால் அல்லது அவன் ஆடம்பரச் செலவு செய்வதற்கு தேவையாக இருப்பதால் இந்தக் கேள்வி. இது மற்றயவருக்கும் தெரியும், இந்த வேலையைச் செய்வதற்குத்தான் அவன் சம்பளம் பெறுகின்றான் என்று. இருந்தாலும் தனக்கு வேறு வேலை இருப்பதாலும் மீண்டும் மீண்டும் அலைய முடியாது என்பதாலும் கேட்பதை கொடுத்து தொலைத்து விடலாம். நமக்கு காரியம் ஆனால் சரி. இல்லையென்றால் ஏதாவது கேள்விகேட்டு இழுத்தடிப்பான் என்று நினைத்துக் கொண்டு, ஒன்றும் தெரியாதவரைப் போல நான் என்ன செய்ய வேண்டும் என்பார்.

சரியாக நம் வழிக்கு வந்து விட்டார் என கணக்கிட்டு எல்லோருக்கும் தரவேண்டும் மீதிதான் எனக்கு என்று கிம்பளம் வாங்காத ஆட்களையெல்லம் சொல்லி கணக்கிட்டு ஒரு தொகையைச் சொல்வார். அந்தத் தொகையைக் கேட்டதும் பகீர் என்றிருக்கும் கேட்டவருக்கு. இவ்வளவா! என்பார். அதற்கு இதே போன்ற ஒரு கேஸிற்கு முன்பு இவ்வளவு வாங்கினோம். நீங்கள் மிகவும் பழகி விட்டீர்கள். முன்பு பேசியதில் ஏதாவது உறவு ஒன்றைச் சொல்லி, அதனால் உங்களுக்காக நான் பெரும் தொகையை குறைத்துக் கொண்டுதான் சொல்லியுள்ளேன் என்று ஒரு அற்புதமான விளக்கமான பதிலை தருவார்.

வேறு வழியில்லாமல் சில்லரையாக உள்ள ஐம்பது அல்லது நூறைக் குறைத்துக் கொண்டு தருகின்றேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துவிட்டு கொஞ்சம் முன் பணமாக கொடுத்துவிடுவார். பின் இரண்டு நாட்கள் கழித்து மீதி பணத்தையும் கொடுத்து விட்டு அவனிடமிருந்து காரியம் முடிந்து பெறும்வரை நடப்பார். அவனும் இதே முடிந்துவிட்டது. அங்கு பைல் இருக்கின்றது. அவரிடம் கையெழுத்து வாங்க வெண்டும் என்று எதையாவதைச் சொல்லி இழுத்தடித்து மிகவும் கஷ்டப்பட்டு காரியத்தை முடிப்பது போல பாவலா செய்து விட்டு உங்களுக்காகத்தான் இவ்வளவு சிரமப்பட்டு சீக்கிரம் முடித்து தந்துள்ளேன் என்று கூறுவான். நபர் மிகவும் நம்பிவிட்டால் எனக்கு கொஞ்சம் சேர்த்து தாருங்கள் என்று மேலும் ஒரு சிறியதிற்கு ஆசைப்பட்டு பேசுவான். அவனின் அந்த ஆசை தீருவது இவரின் ஏமந்த நிலையைப் பெறுத்தது.

அப்பாடா ஒருவழியாய் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டார்கள் இதில் ஏது லஞ்சம் எனக் கேட்போர் கேட்கலாம். அவர்கள் இருவரும், கொடுக்க வேண்டியதைக் கொடுத்து பெறவேண்டியதை பெற்றுக் கொண்டேன் என்றும், பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டு தரவேண்டியதை தந்துவிட்டேன் என்று சொல்வார்களா! எப்படிச் சொன்னல் என்ன! காரியம் சிக்கலின்றி இனிது முடிந்தது.

என்ன தருவாய்! என்ன வேண்டும் என்ற பேரத்தில் ஆரம்பித்து இன்ன இன்ன பிரச்சனைகள் யார் யாருக்கு பங்கு என அலசப்பட்டு நாளொரு தேதியும் ஒவ்வொரு செயலுக்கும் விலை நிர்ணயிக்கப் படுகின்றது. காரியங்கள் ஒழுங்கு முறையின்றி வரிசை ஒழுங்கு முறையின்றி மாறி நடத்தப்பட்டு விரைவாக முடிக்க அதைப் பெற்று முடித்து வைக்கப் படுகின்றது.

இந்த முறையில்லையேல் இந்தக் காரியம் நடந்திருக்க முடியாது. இவ்வளவு நாள் ஆனாலும் செலவானாலும் பரவாயிலை காரியம் நடந்தேறியதே என்ற மகிழ்வு ஓர்புறம். சம்பளம் பெற்றுக் கொண்டு முறைப்படி செய்ய வேண்டிய வேலையை முறையின்றி பெற வேண்டியதை பெற்று ஒழுங்கு முறை தவறி செய்து கொடுத்ததால் அடைந்த பணப்பயன் புற சந்தோஷங்களுக்கு பயன் படுகிறது என்கிற அளவிலா ஆனந்த சந்தோஷம் மறுபுறம்.

இவைகள் உண்மையான சந்தோஷங்களா. இது நீடித்து நிலைக்குமா! என்று தெளியும் இந்த சந்தோஷ மோகம்! யார் அறிவார்! இறைவனன்றி!---குருஸ்ரீபகோரா.

#####

வியாழக்கிழமை, 04 April 2019 08:56

முதன் முதல் வேலை!

Written by

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#*#*#*#*#

முதன் முதல் வேலை!
ஒரு வேலைக்குச் செல்வதற்கு முன்பும், இந்த வேலைக்குப்பின் இருக்கும் நிலைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு.

வேலை கிடைப்பதற்கு ஒருவரது திறமை அல்லது படித்த படிப்போ அல்லது இராண்டுமோ காரணமாயிருக்கலாம். முதன் முதலில் வேலைக்குச் செல்லும்போது நரம்புகளில் ஓர் உணர்ச்சி, ஆர்வம் எதிர்பார்ப்பு எல்லாம் தோன்றி என்ன வென்று தெரியாத ஒருவித பயம் கலந்த நிலை உருவாகும்.

மரியாதையுடன் கூடிய பொறுப்பு, வேலை பளு ஆகியவை முன்பு இருந்த நிலையிலிருந்து விடுபட்டு உங்களை ஒரு மாற்று நிலைக்கு பொறுப்புள்ள புதிய சூழ்நிலைக்குத் தள்ளும்.
சின்ன சின்ன கஷ்டங்கள் தவிர்க்க முடியாவிட்டாலும் ஒரு வேலையை முதன் முதலில் ஆரம்பிக்க சிறிதளவாவது சிரமப்பட வேண்டியிருக்கும். அதற்காக உணர்ச்சி வசப்படாதீர்கள். உடனடியாக எங்கும் எதுவும் நடந்து விடாது. சாதாரணமாக முயற்சி செய்யுங்கள். ஒரு சிறந்த வழியைக் கண்டு தேர்ந்து எடுங்கள்.

உங்களைப் பற்றி நல்ல நினைவுகள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் தோன்றும் வண்ணம் உங்கள் நடையுடை பாவணைகளை மாற்றிக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் வந்து பழகுங்கள். ஆடம்பரமில்லா ஆடையுடன் வந்து எல்லோர் மனதையும் எல்லா நேரத்தில் கவரும் வண்ணம் புன்னகை முகத்துடன் பேசிப் பழகுங்கள். மேலே சொன்ன சிறந்த சரியான பழக்கங்களுடன் உங்களது கடந்தகால நினைவுகள், பழக்கங்கள் எல்லாம் மூட்டை கட்டிவைத்து விட்டு எதையும் திறம்பட செய்து முடிக்க வேண்டும் என்ற உயரிய நினைவுகளுடன் பணியைத் தொடருங்கள்.

சாதகமான எதிர்கால நோக்குதலும், சரியான வேலைத் தத்துவமும் இருக்கும் ஒருவரை யாரும் குறைகூற முடியாது. அவர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள வேலைதனை திறம்பட முடித்து நல்ல பெயர் எடுப்பர். அந்த நிர்வாகமும் அவர்களால் நல்ல பயன் பெறும். ஒருவரின் இந்த முறையானது முன்னேற்ற பாதைக்கு சரியான எந்த ஒரு நிர்பந்தத்திற்கும் கட்டுப் படாத வழியாக அமையும்.

நீங்களும் உங்கள் செயல்பாடுகளும் யாராவது ஒருவரால் கவனிக்கப் படலாம். உங்கள் கவனக் குறைவு நீங்கள் சார்ந்த நிர்வாகத்திற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தலாம். எனவே எச்சரிக்கையுடன் செயல் படுங்கள். கடுமையாக உழையுங்கள். உங்கள் முழுத் திறமையையும் வெளிபடுத்தும் வண்ணம் செயல் படுங்கள்.

உங்களைச் சுற்றி ஓர் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதற்குமுன் நீங்கள் தவறு செய்தால் அது உங்களை மட்டும் பாதிக்கும். ஆனால் தற்போது நீங்கள் செய்யும் தவறுகள் உங்கள் நிறுவனத்தைப் பாதிக்கும். ஆகவே எதையும் நன்றாகக் கவனியுங்கள். குறைவாக பேசுங்கள். யோசித்து முடிவு எடுங்கள்.

நீங்கள் தற்போதுதான் உள்ளே சென்றிருக்கின்றீர்கள். அந்த நிர்வாகத்தின் நடை முறைகளை நன்றாக கேட்டு, கவனித்து, கற்றுக் கொள்ளவும். உடனே எல்லாவற்றையும் யாராலும் அறிந்து கொள்வது என்பது முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக சக தோழர்களை திரும்ப திரும்ப கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள். வழி முறைகளையும் உதவியையும் கேட்பதற்கு எந்த வித தயக்கமும் கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு நன்றாகப் புரியும் வரைக்கும் விளக்கமாகக் கேளுங்கள். ஒரு வேலையைத் தவறாகச் செய்துவிட்டு திரும்ப மீண்டும் அதே வேலையை செய்வதைவிட திரும்பவும் ஒருமுறைக்கு இருமுறை விளக்கம் கேட்பதில் தவறொன்றுமில்லை.

உங்களுக்குமேல் உள்ள மேற்பார்வையாளர் அல்லது நிர்வாகி ஆகியோருடன் கலந்து ஆலோசிப்பது உங்கள் வேலையை நீங்கள் நன்றாக அடித்தளம் வரை புரிந்து கொள்ள உதவும். நீங்கள் சாதனை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து உங்கள் அதிகாரியுடன் உங்கள் வேலை செயல் முறைகளை கலந்து ஆலோசிக்கவும். எல்லா விஷயங்களையும் சந்தேகங்களையும் பரிமாறிக் கொள்வது என்பது உங்களுக்கு எப்போதும் உதவி புரியும்.

உங்களுடன் பணி புரியும் சகதோழர்களுடன் அன்புடனும் நேசமாகவும் பழகுங்கள். உங்களின் பழகும் உறவுமுறை வேலையில் ஒரு புதிய அனுபவங்களை ஏற்படுத்தும். நல்ல நட்பு முறைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கூட்டுமுயற்சி, ஒட்டுமொத்த செயல்பாடுகள், நன்றி கலந்த வேலை ஆகியவை உங்களை குறிப்பிட்ட காலங்களில் உயர்ந்த இடத்தில் உங்களைச் சேர்க்க வழிவகுக்கும்.

முதல் கோணல் முற்றும் கோணல் என்ற ஓர் அபிப்ராயம் மற்றவர்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வேலையில் வாழ்க்கைக்கு ஓர் புதிய திறவு கோல். திறம்பட செயல்பட்டு வெற்றிகரமாக முடித்தபின் ஓர் மகிழ்வு உங்களுக்குள் தோன்றி உங்கள் முகத்தை பிரகாசிக்கச் செய்யும். முதன் முதலில் தொடங்கிய வேலை வெற்றிகரமாக முடிந்ததால் அது நம்மாலும் முடியும் என்ற ஒரு தன்னம்பிக்கையை உங்களுக்குள் ஏற்படுத்தும். அது தொடர் சங்கிலியாகி உங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர் வெற்றியாகி வாழ்க்கை வளமுடன் இருக்க உதவும். எனவே அதுபோன்ற ஓர் உன்னத செயல் முறைக்கு உங்களைத் தயார் எய்து கொள்ளுங்கள்.

எதிர்ப்புகள் எத்திசையிலிருந்து வந்தாலும் அதை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு அதை முதன்மை படுத்திவிட்டு அதிலிருந்து விடுபட்டு சுமூகமாக தீர்வு காணுங்கள். எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் சரி செய்ய வெண்டும் என்ற உத்வேகத்துடன் செயலிறங்குங்கள். உங்கள்மேல் தன்னம்பிக்கை கொண்டு உங்கள் திறமைகளை நிரூபிக்க காலத்தை விரயம் செய்யாமல் உங்களது சக்தியை உபயோகித்து உங்கள் செயலை சிறப்பாக உங்களுக்கு சாதகமாக முடிக்க முயற்சி செய்யுங்கள்

உங்களிமிருந்து வெளிப்படும் செயல் எல்லாம் திறமையுடன் கூடியதாக இருக்கும் பட்சத்தில் உங்களது பணியில் உங்களை மிஞ்ச யாராலும் முடியாது. மேலும் மேலும் நல்ல உயர் நிலையை அடைவீர்!.. வாழ்த்துக்களுடன்! --குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27031270
All
27031270
Your IP: 44.201.97.0
2024-04-17 21:19

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg