gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
புதன்கிழமை, 15 March 2023 16:00

தவறுக்கான தண்டனைகள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!


பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.


#*#*#*#*#

 

47.தவறுக்கான தண்டனைகள்!


மனதால் செய்த பாவத்தை மனதாலும், வாக்கால் செய்த பாவத்தை வாக்காலும், உடலால் செய்த பாவத்தை உடலாலும் அனுபவிப்பர்.

தாமிஸிரநரகம்!

பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைத்து மீண்டும் மீண்டும் இங்கு தள்ள மயங்கி கிடப்பான்.

அநித்தாமிஸ்ரநரகம்!

கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவநரகம்!

பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள். பொன் பொருளை இழ்ந்து துன்பத்திற்கு ஆளானவர்கள் நரகத்திற்கு வந்தால் அவர்களும் இவனை இம்சிப்பார்கள். காம மிகுதியினால் தன் சுக்கிலத்தை பூமியில் விட்டவன் அந்த பூமியின் தூள் ஒன்றுக்கு ஒருவருஷம் வீதம் இந்த நரகத்தில் துன்பப்படுவான்.

மகாரௌரவநரகம்!

மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து, முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்!

வாயில்லா விலங்குகளை , உயிர்களை வதைத்தும் பலவிதங்களில் கொடுமைப் படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கொப்பறையில் போட்டு, பாவிகளைத் துன்புறுத்துவார்கள். பசுக்கள் மேய்ச்சலுக்குச் செல்லும் பாதையை அடைத்து பயிரிடுபவன் நூறு ஆண்டுகள் இந்த நரகத்தில் உழல்வான்.

காலகுத்திரம்-காலவெம்மை!

பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். தன்னாலவது பிறராலாவது தானம் செய்ததும், பிராமணர் உழைப்பில் சம்பாதித்ததுமான நிலத்தை அநியாயமாக அபகரித்தவன் சந்திர சூரிய காலம் இருக்கும்வரை இந்த நரகத்தில் துன்பப்படுவான். மேலும் அவனது புத்திரபௌத்திரரும் பூமியும் செல்வமும் சந்ததியும் அற்று பரமதரித்திரத்தை அடைவார்கள். இங்கு அக்னியும் சூரிய வெப்பமும் கொளுத்தி வாட்டும் போது அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கப்படுவது உறுதி.

எவன் கங்கை நீரைக் கையில் எடுத்துக் கொண்டு பொய்யை சொல்கின்றானோ அவன் பிரமனின் வயது காலம் வரை காலசூத்திரத்தில் உழல்வான் என சிவன் பிரதிக்ஞை செய்துள்ளார்.

அசிபத்திரம்- வாளலகு!

தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியை விட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும். வாளலகு என்ற ஒருவகை இலையினால் செய்யப்பட்ட சாட்டையால் அடித்து துன்புறுத்துவார்கள். அடிக்கும்போது அங்குமிங்கும் ஓடி கால் இடறி கீழே விழுந்தால் அசிபத்திரம் கத்தியினால் உடலில் கீரி துன்பப்படுவர். மாட்டு மந்தைகள் இருக்குமிடம், தடாகம் ஆகியவற்றை ஆக்கிரமித்து உபயோகிப்பவன் பதினான்கு இந்திரன் ஆயுட்காலம்வரை இந்த நரகத்தில் கிடப்பான்.

பன்றிமுகம்!

குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள். உண்ணத் தகுந்ததை உண்னமுடியாமல் உண்ணத் தகாததை உண்ணும் பன்றியைப் போல் உண்பான்.

அர்த்தகூபம்-பாழுங்கிணறு!

உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்!

பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக் கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். பிறர் சொத்துக்களின்மேல் ஆசைக்கொண்டு ஆக்கிரமிப்பு, வயலில் வரப்பை தள்ளிப் போடுதல், எல்லைக் கற்களை மாற்றி தன் எல்லையை அதிகரித்துக் கொள்ளல் ஆகியன குற்றமே. இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள். கிணறு, குளம் ஆகியன பாழடைந்து சிதிலமாக இருந்தும் அதைச் சீர்படுத்தாமல் வேறு கிணறு, குளம் வெட்டுதல் குற்றமே. அவர்கள் இந்நரகத்தில் துன்புறுத்தப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்!

சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.

கிருமிபோஜனம்!

தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி!

நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை வஜ்ரகண்ட முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி!

நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நீர் நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்!

சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும். மலம். சிறுநீர், சீழ், உதிரம் நிறைந்த நகரத்தில் தள்ளப்பட்டு அவற்றையே உண்ண வேண்டி வரும்.

பிராணிரோதம்!

பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்!

பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலாபக்ஷம்!

மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் இந்திரிய குண்டத்தில் தள்ளி அதில் அமுக்கி அதையே உண்ணச் செய்து வதைபடும்.

சாரமேயாதனம்!

வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும். நாய்களால் கடிப்பட்டு நாய் இறைச்சியை திண்ண வேண்டி வரும்.

அவீசி!

தானம் செய்யும்போது தன் பெயரை முன்னிலைப் படுத்துபவரும், பொய்சாட்சி சொல்பவரையும் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.

பரிபாதாளம்.!

எந்தக் குலத்தில் பிறந்தவராயிருந்தாலும் மது போதையூட்டம் பானங்களை அருந்தியவர்களை இந்த நரகத்தில் நெருப்பைக் காய்ச்சி உருக்கியுள்ள எஃகிரும்பை குடிக்கச் செய்வர்.

க்ஷாரகர்த்தமம்.!

கயவன் தன்னை புகழ்ந்துகொண்டு யாரையும் மதிக்காமல் அவமரியாதை செய்பவன் இந்த நரகத்தில் தள்ளப்பட்டு தலை கீழாகப் கிடத்தப்பட்டு துன்பங்களை அனுபவிப்பான்.

ரக்ஷோகணம்.!

யாகத்திற்காக மனிதர்களைப் பிடித்து நரமேத யாகம் செய்பவர்களும் நரமாமிசம் சாப்பிடுபவர்களும் இங்கு தள்ளப்பட்டு நரப்பசுவாக கொல்லப்பட்டவர்களே இங்கு வந்து கத்தியால் இவர்களை கீறி ரத்தத்தை குடிப்பர்.

சூலப்புரோதம்.!

தீவினை புரியாதவர்களை கொலை செய்பவரும். சூலத்தினால் / கயிற்றினாலே தற்கொலை செய்து கொள்பவர்களும் இங்கு தள்ளப்பட்டு சூலம் முதலிய வற்றால் குத்தி கோர்க்கப்படுவார்கள். கொக்கு கழுகு போன்ற பறவைகள் அவர்களை கொத்தி துன்புறுத்தும்.

தந்த சூகம்.!

பம்பு முதலிய துஷ்ட ஜந்துக்களும் தேள் முதலான விஷப் பூச்சிகளாலும் பாவிகள் துன்புறுத்தப்படுவார்கள்.

வடாரோதம்.!

கூடுகளிலும், வளைகளிலும் வாழும் பிராணிகளை துன்புறுத்துபவர்கள் இந்த நரகத்தில் புகையாலும் நெருப்பாலும் விஷத்தாலும் துன்புறுத்தப்படுவார்கள்.

பர்யாவர்த்தனகம்.!

உணவருந்தும் வேளையிலும் பணி செய்யும் அதிகாரிகளை சுட்டுப் பொசுக்கவேண்டும் என்று லோப குணத்துடன் செயல்படுபவர்கள இந்த நரகத்தில் அவன் கண்களை கழுகு, காகம், முதலிய பறவைகள் கொத்த துன்புறுத்தப்படுவான்.

சுசீமுகம்!

நான் செல்வத்துடன் இருக்கின்றேன் என்ற கர்வத்துடன் இருப்பவர்கள் பிறரைப் பார்த்து தன்னுடைய பணத்திற்கு செலவு வந்துவிட்டது என்று நினைத்து முகத்தில் வெறுப்பைக் காட்டுபவர்கள், பூதம்போல பணத்தைக் காப்பவர்கள் இந்த நரகத்தில் அளவற்ற துன்பங்களை அனுபவிப்பார்கள்.

மேலும் பசுக்கள் குதிரைகளை விரோதத்தின் பேரில் கொல்வது, கனிகள் தரும் நல் மரங்களை அழிப்பது, தங்கத்தை திருடுவது, ஆண் / பெண் ஐ கடத்திச் செல்வது, தெய்வ சொத்துக்களை அபகரிப்பது, பெண்ணை பலவந்தப்படுத்துதல், பிற உயிர்க்கு விஷத்தைக் கொடுத்தல், பொருள்களின் அளவுகளிலும் தரத்திலும் தில்லுமுல்லு செய்வது, குற்றம் செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை தப்ப விடுவது, அரசு உத்தரவுகளை சரியாகச் செய்யாமால் மீறுவது ஆகியனவையும் குற்றங்களே. இவைகளுக்கும் தக்க தண்டனைகள் உண்டு.

சிரார்த்தம் செய்யும் பூமியின் உடமைக் காரனுக்கு பணம் ஏதும் கொடுக்காமல் பிதுர்களுக்கு பிண்டம் போடுபவன் நரகத்தை அடைவான். தீபத்தை ஆசனமில்லாமல் பூமியின்மேல் வைத்தால் ஏழு ஜென்மங்கள் குடிகாரனாகவும், புத்தகத்தை பூமியின்மேல் வைப்பவன் பிறவி முடிவில் குஷ்டரோகியாகவும், முத்து, ரத்தினம், தங்கம் ஆகியவற்றை பூமியின்மேல் வைப்பவன் ஏழு பிறவிகளுக்கு அந்தகனாகவும், சிவலிங்கத்தை மண்மீது வைப்பவன் நூறு மன்வந்திரம் புழுக்களைத் திண்பவனாகவும், சங்கு, மலர்கள், கோரோசனம், சந்தனம், கற்பூரம், மலர்மாலை, ஜபமாலை, ருத்திராட்சம், தர்ப்பை ஆகியவற்றை பூமியின்மேல் வைப்பவன் மன்வந்திர காலம் நரகத்திலும், கிரகண காலத்தில் பூமியை வெட்டுபவன் மகாபாபியாகவும் உறுப்புகள் குறைந்தவனாகவும், யாகஞ் செய்ததனால் உண்டாண உஷ்ணத்தை பாலினால் நனைக்காதவன் ஏழு பிறவி உஷ்ணத்துடன் அல்லல் படுபவனாகவும் இருப்பார்கள்.

 

#*#*#*#*#

Read 420 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26751382
All
26751382
Your IP: 18.207.129.175
2024-02-25 10:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg