gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

சந்திரனைப்போல் உங்கள் அருகிலிருக்கும் உயிர்களை அன்பு மழையில் நீராட்டுங்கள்.!

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#*#*#*#*#

 

9. "வேள்வியின் அர்பணிப்பு மூலம் உயர்ந்த நிலையை அடைதல் “

21 பண்டங்கள் சிவனிடம் வேண்டப்படுகின்றன

 

"வேள்வியின் அரசன்" என்றழைக்கப்படுகிற அஷ்வமேத வேள்விக்கு முன் ஐந்து அர்ப்பணிப்புகள் மூலம் தொடங்கபடும் "ப்ராவர்க்ய" என்ற ஸோம வேள்வியில், ஆறு கடவுள்களையும், மறை, பாட்டுப் பாடுதல், வேள்வியின் கடைசிக்கட்டத்தில் நீராட்டுவது போன்றவை இடம்பெறுகிறது. இப்பிரிவு சமகத்தின் பாதையை கோடிட்டுக் காட்டுகின்றது; அதாவது, தனக்கும், இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று வேண்டியது முடிந்து, ஒரு படி மேலே போய் வானுலக கடவுளாகவே தான் மாறவேண்டும் என்று வேண்டுவது மனிதனை விலங்குநிலைச் சிந்தனையிலிருந்து, ஆண்டவன் நிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்ள துடிக்கும் சிந்தனை முயற்சியாகும்.

சமஸ்கிருதம்::

அக்னிச்சமே கர்மச்ச மேர்க்கச்ச மே ஸுர்யச்ச மே ப்ராணச்ச மே sச்வமேதச்ச மே ப்ரதிவீ ச மேsதிதிச்ச மே திதிச்ச மே யஜ்ஞேன கல்பந்தாம் ருக்ச மே ஸாம ச மே ஸ்தொமச்ச மே யஜுச்ச மே தீக்ஷா ச மே தபச்ச ம ருதுச்ச மே வ்ரதஞ்ச மேsஹோராத்ரயோர் வ்ருஷ்ட்யா ப்ருஹத்ரதந்தரே ச மே யஜேஞன கல்பேதாம்||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

நெருப்பும், ஸோம யாகத்துக்கு முன் செய்யப்படும் "ப்ரவர்க்கியும்" "அர்க்கயாகம்" எனப்படும் செயல்களும், கதிரவனுக்குச் செய்யும் வேள்வியும், கடைசியில் நெருப்புக் கடவுளுக்கிடும் எல்லாவித அர்ப்பணிப்புகளும் (பூர்ணாஹுதியும்) அசுவமேத வேள்வியும், ப்ராண வேள்வியும், அர்ப்பணிப்பிலேயே சிறந்த தான குதிரை அர்பணிப்பும், பூமிக் கடவுளும், அதிதி கடவுளும், திதி கடவுளும், ஸ்வர்க்க கடவுளும், கை விரல்கள்போல் விரிந்திருக்கும் கால்பகுதியே தெரியும் விராடபுருஷனான முழுமுதற் கடவுளின் அருளும், இவ்வகையான பொருட்களும், சேற்கைப் பொருட்களும், இவ்வகை அர்ப்பணிப்பினால் ஏற்படும் எல்லவிதமான நன்மைகளும், குறிக்கோளும், ரிக் மறை போன்ற புனித ஒலி நூல்களில் கூறப்பட்டுள்ள போற்றிப்பாடலும், ஸாம மறை போன்ற புனித ஒலி நூல்களில் கூறப்பட்டுள்ள போற்றிப்பாடலும், அதர்வன மறை போன்ற புனித ஒலி நூல்களில் கூறப்பட்டுள்ள போற்றிப்பாடலும், யஜுர் மறை போன்ற புனித ஒலி நூல்களில் கூறப்பட்டுள்ள போற்றிப்பாடலும், வேள்வியின் அர்ப்பணிப்பிற்கு போகும் முன்பு செய்யப்படும் "திக்ஷா' எனப்படும் உடம்பை நீரால் தூய்மைபடுத்தும் சடங்கும், தவத்தால் என் பாவங்களைக் கழுவும் திறமையும், சரியான நேரத்தில், உரிய காலத்தில், ஒவ்வொரு தன்மையைப் பொருத்து செய்யப்படும் பலவகை வேள்வித்தீயும், மற்றும் தொடர்புடைய செய்கைகளும், கடினமானதும் நடைமுறையில் இல்லாத திடமான சூளுரைகளும், பசுவின் ஒரு முலைக் காம்பின் பாலை மட்டும் பருகும் பட்டிணி முதலியனவும், அவற்றை சிறப்பாக, கடைபிடிக்க கூறப்பட்ட அறிவுரையும், தொடர்ந்து பகலிலும் இரவிலும் பெய்யும் மழையால் விளையும் பயிர்களின் செழிப்பும், "ப்ரிஹட்" மற்றும் "ரதந்தர' என்ற போற்றுதலுக்குறிய ஸாம மறைப்பாட்டுக்களும் நான் நடத்தும் அர்ப்பணிப்பில் எனக்கு நன்மை பயக்கட்டும்.

ஓம் அமைதி  ||  ஓம் அமைதி ||  ஓம் அமைதி

#####

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#*#*#*#*#

8. "வேள்வியில் ஈடுபடுவதற்கு தேவையான நுணுக்கமான பொருட்கள்! 

22 ஆதரவுப்பொருட்கள்/பாண்டங்கள் சிவனிடம் வேண்டப்படுகின்றன

வேள்வி நடத்தத்தேவையான உபகரணங்கள் வேண்டப்படுகின்றன இவ்வகையான பாண்டங்களின் துணையின்றி நாம் வேள்வியை செவ்வனே செய்ய முடியாததுமட்டுமின்றி, அவற்றின் முழுப்பயனையும் பெறமுடியாது. சித்திரம் எழுத தேவையான நிறச்சாந்து சரிசமமாக இருப்பின் ஓவியம் எழுதுவது எளிது.அதேபோல், நேர்த்தியான பாண்டங்களின் துணைகொண்டு செய்யப்படும் வேள்வியால் "ஸோமச்சாறு" கிடைக்குமென்ற நோக்கில் இப்பகுதியில் வேண்டப்பட்டுள்ளது.
"ஸோமச்சாறு" கிடைக்கச் செய்யப்படும் வேள்வி அவ்வளவு எளிதானதல்ல; பலவித பண்டங்களின்/ பாண்டங்களின் துணைகொண்டே அதைப் பெற முடியுமமென்பது தின்னமாகிறது இங்கு. அதேநேரத்தில், ஒழுக்கத்துடன் கையாளப்படவேண்டிய ஒன்று இவ்வகை முறை என்பதும் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

சமஸ்கிருதம்::
இத்மச்ச மே பர்ஹிச்ச மே வேதிச்ச மே திஷ்ணியாச்ச மே ஸ்ருசச்ச மே சமஸாச்ச மே க்ராவாணச்ச மே ஸ்வரவச்ச ம உபரவாச்சமேsதிஷவணே ச மே த்ரோணகலசச்ச மே வாயவ்யானி ச மே பூதப்ருச்ச ம ஆதவனீயச்ச ம ஆக்னீத்ரஞ்ச மே ஹவித்தானஞ்ச மே க்ருஹாச்ச மே ஸதச்ச மே புராடாசாச்ச மே மே பசதாச்ச மேவப்ருதச்ச மே ஸ்வகாகாரச்ச மே ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

காய்ந்த சருகும் (ஸமித்தும்), காய்ந்த புல்லும் (தர்ப்பையும்), வேள்வி செய்யும் மேடையும், இரண்டு வேள்வித் தீக்குண்டங்களுக்கு நடுவே ஏற்படுத்தப்படும் குறுகிய பாதையும், ஹோதா முதலானவர்களின் எழுந்தருளப்பெறும் திண்ணைகளும், 'புரஸ' மரத்தினால் செய்யப்பட்டு 'இஷ்டி' வேள்விக்கு பயன்பெறும் நீண்டகரண்டிகளும், 'சமஸா' என்றழைக்கப்படும் மரத்தினால் செய்யப்பட்டு "ஸோமச்சாறை" விட்டுக் குடிப்பதற்கான தட்டும், ஸோமக் கொடியை இடிக்கும் கற்களும், 'யுபா' வேள்விக் கொடியில் (அர்ப்பணிக்கும் பொருட்டு) கட்டப்படும் "ஸ்வரவஸ்" எனப்படும் மரக்கத்திகளும், நிலத்தில் "ஹவிர்தானா" எனப்படும் நான்கு முழக்கணக்கில் தோண்டப்படும் நான்கு குழிகளும், அரசமரத்தைச் செதுக்குவதால் விழும் சிராய்த்துண்டுகளும், மாம்பழ வடிவில் செதுக்கப்பெற்ற ஆலமரத்தினால் ஆண பாண்டமும் (துரோண கலசமும்) மற்றும் அதில் வைக்கப்பெற்ற பிழிந்தெடுத்த ஸோமச்சாறும், மரத்தினாலான பாண்டங்களும், மண்ணால் செய்யப்பெற்ற பாண்டங்களும், 'சாமசாஸ்" என்ற வகை மண்ணினால் செய்யப்பெற்ற 'ஸோமச்சாறு' வைக்கபெறும் பாண்டங்களும், "ஆதவனீயம்" என்ற இன்னொருவகை மண்ணினால் செய்யப்பெற்ற 'சுத்தகரிக்கப்பட்ட ஸோமச்சாறு' வைக்கபெறும் பாண்டங்களும், "ஆக்ணீத்ரம்" என்ற வேள்வி எறியூட்டப்படும் புனிதமான இடமும், "ஹவிச்ஸ் ஸுக்களை" வைக்கும் மண்டபமும்,"க்ருஹாஸ்"எனப்படும் வேள்வி நடத்தும் முதலாளிகளின் மனைவிகள் எழுந்தருளும் இடமும், "உதகதா" போன்ற ஆன்றோர் வேள்வி நடத்தும் பொருட்டு இறைப்பாட்டில் பயன்படுத்திய "மஹாவேதி" எனப்படும் மிக உயர்ந்த மேடையும், அரிசி நொய்யாலான பண்டங்களும், ஹவிஸ் தயாரிக்கப்படும் இடமும், பலிபீடங்களும், வேள்வியின் முடிவில் செய்யும் குளியலும், காய்ந்த சருகுகளின் (ஸமித்துக்களின்) தகனமும் ஆகிய உயர்ந்த பொருட்களும் ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்குக் கிடைக்கட்டும்

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி

#####

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#*#*#*#*#

 

7. "ஸோம வேள்வி நடத்த தேவையான பாண்டங்களை சிவனிடம் வேண்டுதல்!

ஸோமச்சாறை பொழியவேண்டும் வேள்விக்கு பயன்படும் 29 பாண்டங்களை அளிக்கக் சிவனிடம் கூறுதல்.

மறைகளில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள ஸோம அர்ப்பணிப்பு இந்தப் பிரிவில் விரிவாக்கச் சொல்லப்பட்டுள்ளது. வேள்வி செய்யும் பொருட்டு, சரியான பாண்டங்களை பயன்படுத்தினால் மட்டுமே அதன் வெற்றி உறுதிப்படும். இந்தப் பாண்டங்கள் வேள்வி செய்யப்படும் தன்மையை வெளிக்கொணர்கிறது. ஒவ்வொரு பாண்டத்திற்கும் ஒருபாங்கும், தனித்தன்மையும் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாண்டமும் ஒரு குறிப்பிடத்தக்க கடவுளுக்கோ, குறிப்பிட்ட வழிபாட்டிற்கோ கோரப்படுகிறது. இதில், 'அதிபதி' மட்டும் விதிவிலக்கு. 'அதிபதி' என்பது தயிர் வைக்கப்படும் ஒர் பாண்டம். 'அதிபதி'க்கு மிக உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சோதனைக்கூடத்தில் எப்படி ரசாயனக் கலவைகளை கவனமாக கையாளவேண்டுமோ, அதே போல் இங்கும் வழிபாட்டு முறையைக் கையாள வேண்டும். தவறாக கையாண்டால், நாம் செய்யும் வழிபாடு வீணாகப் போய்விடும். ஒவ்வொரு கடவுள்களுக்கும் பயன்படும் பாண்டங்களை கொடுக்கக் வேண்டுவது சிறப்பு.

சமஸ்கிருதம்::

அகும்சுச மே ரச்மிச்ச மேதாப்யச்ச மேதிபதிச்ச ம உபாகும்சுச்ச மேந்தர்யாமச்ச ம ஐந்த்ரவாயவச்ச மே மைத்ரா வருணச்ச ம ஆச்வினச்ச மே ப்ரதிப்ரஸ்தானச்ச மே சுக்ரச்ச மே ம்ந்தீ ச ம ஆக்ரயணச்ச மே வைச்வதேவச்ச மே த்ருவச்ச மே வைச்வாநரச்ச ம ருதுக்ரஹாச்ச மேதிக்ராஹ்யாச்ச ம ஐந்த்ரரக்னச்ச மே வைச்வதேவச்ச மே மருத்வதீயாச்ச மே மாஹேந்த்ரச்ச ம ஆதித்யச்ச மே சாவித்ரச்ச மே ஸாரஸ்வதச்ச மே பௌஷ்ணச்ச மே பாத்னீவதச்ச மே ஹாரியோஜனச்ச மே ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

அம்சு பாண்டமும், ரஸ்மியும், அதப்யமும், தயிரைத் தாங்கும் "அதிபத" பாண்டங்களும், ஸோமச் சாறைத் தாங்கிடும் ஊபம்சுவும், அந்தர்யாமமும், ஐந்த்ர வாயவாஸ்வமும், இரட்டைக்கடவுள்களான மித்ரனும், வருணனும், ஆச்வினமும், ப்ரதிப்ரஸ்தானமும், ஷுக்ரமும், மந்தியும், ஆக்ரயனமும், வைச்வதேவமும் த்ருவமும், வைச்வாநரமும், ரிது க்ரஹாசமும், அதிக்ரஹாசமும், இரட்டை கடவுள்களான இந்தரனுக்கும், அக்னிக்கும் பயன்படுத்தப்படும் பாண்டமும், விஷ்வதேவாசுக்கு பயன்படுத்தப்படும் பாண்டமும், மாருத்துகளுக்கு பயன்படுத்தப்படும் பாண்டமும், மற்றும் கடவுள்களில் அரசனான இந்தரனுக்கு பயன்படுத்தப்படும் எல்லாவிதமான் பாண்டங்களும், கதிரவக் கடவுளான ஆதித்தனுக்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும், சவிதாவிற்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும், சரஸ்வதிக்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும், பூஷாவிற்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும், பத்னேவதஸுக்குபயன்படுத்தப்படும் பாண்டங்களும், ஹரியோஜனாஸுக்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும் - ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்.

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி ||

#####

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#*#*#*#*#

6. "இந்திரனும், மறைக் கடவுள்களும்" !

20 வகையான மறைக் கடவுள்களும் (இந்திரனுடன் சேர்த்து), செய்யவேண்டிய வழிபாட்டு முறைகளும் கூறப்படுகின்றது

இரண்டு, இரண்டாக கடவுள்களை பிரித்து, 21 "மறைக் கடவுள்களை" போற்றும் இந்தப்பகுதியில், முதலில் முழு முதற்கடவுளும், பின் ஒவ்வொரு 'மறைக் கடவுளும்' 'இந்திரனை சேர்த்து போற்றப்பட்டுள்ளது. ஒரே பாட்டில் இரண்டு கடவுள்களை சேர்த்தற்கு காரணம், நாம் செய்யும் வேள்வியில் அவர்களை எழுந்தருளச்செய்தலும், பின் ஒருங்கே கிடைக்கும் நற்பேறுகளுமேயாகும. சமக அறிமுகத்தில் அக்னி தேவனும், விஷ்ணுவும் பாடப்பட்டுள்ளனர். ஏன் இந்திரனை ஒவ்வொரு கடவுள்களுக்கும் பின்னால் சேற்கப்பட்டுள்ளது? சமகம் 6வது பிரிவை 'அர்தேந்த்ரம்' என்று 'ப்ராஹ்மணம்' குறிப்பிடுகிறது, அதாவது 'பாதி' இந்திரன் என்று, ஏனென்றால், பிற்பகுதியில், ஒவ்வொரு கடவுள்கூட இந்திரன் சேர்க்கப்படுகிறான். இதற்குக் காரணம், நாம் அர்ப்பணிக்கும் பொருட்களில் முக்கால் பங்கு இந்திரனால் பெறப்படுகிறது. இந்திரன் 'கடவுள்களின் அரசன்', அதனால் ஒவ்வொரு அர்பணிப்பிலும், பாதி பகுதியை அவன் பெறுகிறான். 'கடவுள்களுக்கு, இந்திரனைச் சேர்த்து, வழிபடும் இப்பகுதியை 'அர்தேந்த்ரம்' என்று குறிப்பிடுவது சிறந்தது.

சமஸ்கிருதம்::
:
அக்னிச்சம இந்த்ரச்ச மே ஸோமச்ச ம இந்த்ரச்ச மே சவிதா ச ம இந்த்ரச்ச மே சரஸ்வதீச ம இந்த்ரச்ச மே பூஷா ச ம இந்த்ரச்ச மே ப்ருஹசஸ்பதிச்ச ம இந்த்ரச்ச மே மித்ரச்ச ம இந்த்ரச்ச மே வருணச்ச ம இந்த்ரச்ச மே த்வஷ்டா ச ம இந்த்ரச்ச மே தாதா ச ம இந்த்ரச்ச மே விஷ்ணுச்ச ச ம இந்த்ரச்ச மேச்விநௌ ச ம இந்த்ரச்ச மே மருதச்ச ம ச ம இந்த்ரச்ச மே விச்வே ச மே தேவா இந்த்ரச்ச மே ப்ருதிவீ ச ம இந்த்ரச்ச மேந்தரிக்ஷஞ்ச ம இந்த்ரச்ச மே த்யௌச்ச ம இந்த்ரச்ச மே திசச்ச ச ம இந்த்ரச்ச மே மூர்த்தா ச ம இந்த்ரச்ச மே ப்ர்ஜாபதிச்ச ம இந்த்ரச்ச மே
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

இரட்டை கடவுள்கள் எனக்கு கருணைகாட்டட்டும், அக்னியும், இந்திரனும்; ஸோமனும், இந்திரனும்; மேலும் சவிதாவும் இந்திரனும்; சரஸ்வதியும், இந்திரனும்; பூஷாவும் இந்திரனும், ப்ருஹஸ்பதியும் இந்திரனும்; மித்ரனும், இந்திரனும்; வருணனும், இந்திரனும்; மேலும் த்வஷ்டாவும், இந்திரனும்; விஷ்ணுவும், இந்திரனும்; இரட்டையர்களான அஷ்வினிகளும், இந்திரனும்; மருத்துகளும், இந்திரனும்; விஷ்வ டேவர்களும், இந்திரனும்; நிலமும், இந்திரனும்; சொர்க்கத்திற்கும் - நிலத்திற்கும் - இந்திரனுக்கும் உள்ள இடைவெளியும், இந்திரனும்; வாணவருலகமும், நான்கு திசைகளும், இந்திரனும்; மேல்திக்கும், இந்திரனும்; ப்ரஜாபதியும், இந்திரனும் எனக்கு கருணை மழை பொழியட்டும்.

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி

#####

ஓம்நமசிவய!

அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!

#*#*#*#*#

5"நிலமும், அதைச்சார்ந்த மதிப்பிடமுடியாத பொருட்களும்" ! 

நிலத்தில் வசிக்க 31 வகை தேவையானவை சிவனிடம் வேண்டப்-படுகின்றன

ஐந்தாவது பிரிவில், நிலத்தில் வாழத் தேவையானவற்றையும், ஆன்மீகத்தில் வாழ்வை ஈடுபடச்சொல்லி, நம்மைக் கடவுளை நோக்கி திருப்பும் இப்பகுதி பெரும் திருப்புமுனையாக உள்ளது. இதுவரை உலகில் தொந்தரவின்றி வாழ்வதற்கும், இன்பங்களைச் ரசித்துச் சுவைக்கவும், வேண்டப்பட்டு வந்த வேண்டுதல் படிப்படியாக மாறி நாம் எப்படி கடவுளுக்காகச் செய்யப்படும் வேள்வியிலும், அதற்கு நம்மை அர்ப்பணிப்பதிலும் மனதைச் செலுத்தவேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகிறது வேள்வியாலும், இன்ன பிற வழிபாட்டு முறைகளாலும் மட்டுமே இறைவனை அடைய முடியுமென்று 'பூர்வ மீமாம்சை' நூல் தெரிவிக்கிறது. வேள்வி செய்ய வேண்டிய பொருட்களும், நெருப்பு, தண்ணீர், பயிர்கள், பசுக்கள், உலோகங்கள் போன்றவைகளும், தேக்கி வைக்க போதுமான அளவு பண்டங்களும் வேண்டப்படுகின்றன.

சமஸ்கிருதம்::
:
அஷ்மா ச மே ம்ருத்திகா ச மே கிரயச்ச மே பர்வதச்ச மே ஸிகதாச்ச மே வனஸ்பதயச்ச மே ஹ்ரண்யஞ்ச மேயச்ச மே ஸீசஞ்ச மே த்ரபுச்ச மே ச்யாமஞ்ச மே லோஹஞ்ச மேக்னிச்ச ம ஆபச்ச மே வீருதச்ச ம ஓஷதயச்ச மே க்ருஷ்ட பச்யஞ்ச மே க்ருஷ்டபச்யஞ்ச மே க்ராம்யாச்ச மே பசவ ஆரண்யாச்ச யஜ்ஞேன கல்பந்தாம் விதஞ்ச மே வித்திச்ச மே பூதஞ்ச மே பூதிச்ச மே வஸூ ச மே வஸதிச்ச மே கர்ம ச மே சக்திச்ச மேர்தச்சமஏமச்ச ம இதிச்ச ம கதிச்ச மே.
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

கல்லும், மண்ணும், எங்கே தண்ணீர் உற்பத்தியாகிறதோ அந்த குன்றுகளும், மலைகளும், மணல்களும், மலர் மலராமலே கனியைச் சொரியும் சிறந்த மரவகைகளும், பொன்னும், எஃகும், ஈயமும், துத்தநாகமும், இரும்பும், தாமிரமும், இதர உலோகங்களும், நெருப்பும் தண்ணீரும், கொடிகளும், மூலிகைகளும், உழுது பயிரிட்டு விளைந்தவைகளும், உழுது பயிரிடாமல் விளைந்தவைகளும், சிற்றூரில் உள்ளவைகளும், வேள்வியில் அரப்பணிக்கப்பெறும் விலங்குகளும், அதனால் ஏற்படும் நன்மைகளும் எனக்கு கிடைக்கட்டும், மற்றும், மூததையர்களின் சொத்தும் என்னுடைய உழைப்பால் கிடைக்கப்போகும் சொத்துக்களும், மனநிறைவான குழந்தைச் செல்வங்களும், சொந்தமாக தொழிலில் ஈட்டும் சொத்தும், நாலுகால் விலங்குகளும், பசுக்களும், அசையாச் சொத்துக்களும், வசிக்க வசதியான சொத்துக்களும், 'நெருப்பினால் வேள்வி' செய்யக்கூடிய கொடுப்பிணையும், இது போன்று புனிதமான இறை செயல்களை திறம்படச் செய்யும் தகுதியும், அதற்கு போதிய படிப்பும், அதனால் அடையக்கூடிய இன்பமும், மகிழ்ச்சியும், அதை அடையும் குறிக்கோளும், எண்ணங்களும், முடிவான இலக்கை அடையக்கூடிய 'ஒரே நோக்கும்' ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி ||

#####

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#*#*#*#*#

4. "உணவுப்பொருட்களும் நீர்பண்டங்களும்"!

38 உணவுப்பொருட்கள் சிவனிடம் வேண்டப்படுகின்றன

வாழ்க்கை வாழ்வதற்கு மனிதனுக்கு முதல் தேவை உணவும், தண்ணீரும். இவை இல்லாவிடில் வாழ்வது கடினம், அதனாலேயே, இவற்றைத் தேடி எங்கெல்லாமோ அலைகிறான். மனிதனின் உழைப்பும், ஆண்டவனின் கருணையாலும் மட்டுமே இவற்றைப்பெற முடியும். நாம் உழுது செப்பனிட்டு, நிலத்தை சீராக்கி, விதை தூவி வைத்திருக்கும் போது, ஆண்டவன், மழை வடிவத்தில், கருணை புரிந்து உணவை வளரச்செய்கிறான். பாலும், நெய்யும் பருப்பும், அரிசியும், தேனும், எல்லோருடனும் சேர்ந்து உணவருந்துதலும், பயிர்களும், கோதுமைகளும், பருப்பு வகைகளும் மற்றும் அனைத்து வகையான உணவுப்பொருட்களும் இப்பகுதியில் கோரப்படுகின்றன. அதாவது முழுநிலையும், அதற்கு மேலான 'பரம் பொருளை' அடைந்து பேரின்பம் என்ற பேறைப் பெற முயற்சிக்கும் வேண்டுதல்கள் சீர்மிக்க சிறப்பு.

சமஸ்கிருதம்::

ஊர்க்சமே ஸுந்ருதா ச மே பயச்ச மே ரஸச்ச மே க்ருதஞ்ச மே மது ச மே ஸக்திச்ச மே ஸபீதிச்ச மே க்ருஷிச்சமே வ்ருஷ்டிச்சமே ஜைத்ரஞ்ச ம ஔத்பித்யஞ்ச மே ரயிச்சமே ரயச்சமே புஷ்டஞ்சமே புஷ்டிச்சமே விபு ச மே ப்ரபு ச மே பஹு ச மே பூயச்ச மே பூர்ணஞ்ச மே பூர்ணதரஞ்ச மேக்ஷிதிச்ச ம கூயவாச்ச மேன்ன்ஞ்ச மேக்ஷுச்ச மே வ்ரீயஹயச்சமே யவாச்ச மே மாஷாச்ச மே திலாச்ச மே ம்த்காச்ச மே கல்வாச்ச மே கோதூமாச்சமே மசுராச்ச மே ப்ரியங்கவச்ச மேணவச்ச மே ச்யாமாகாச்ச மே நீவாராச்சமே.
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

சாதமும், இதமான வார்த்தைகளும், பாலும், அதன் சுவையும், நெய்யும், தேனும், உற்றார்களுடன் கலந்து உணவருந்துதலும், கூடி அருந்துதலும், பயிர்த் தொழிலும், சரியான நேரத்தில் பொழியும் மழையும், செழிப்பான நிலமும், மரம் செடி கொடிகளின் உற்பத்தியும், வேகமாக விளையும் மூலிகைச் செடிகளும், பொன்னும், விலைமதிக்க முடியாத கற்களும், மணிகளும் செல்வத்தின் செழிப்பும், குறையில்லா குழந்தைகளும், நிறைவான உறவினர்பால் ஏற்படும் பாதுகாப்பும், நன்றாக பராமரிக்கப்பட்ட திடகாத்திரமான உடம்பும், சிறந்த பயிர்களும், அதன்பால் விளையும் உணவுப் பண்டங்களும், அதனால் ஏற்படும் மேன்மையும் அதன் பலவகை இன்பம் தரும் சுவைகளும், மேலும், மேலும் வளர்ச்சியும், முழுநிலையும், முழுநிலைக்கு மேலாக உள்ள உன்னத நிலையும், உணவும், உணவினால் பசி நீங்குதலும், சிறந்த நெல் வகைகளும், வால் கோதுமை வகைகளும், உளுந்து வகைகளும், எள் வகைகளும், பாசிப்பயறுகளும், தட்டைப்பயறுகளும், கோதுமைகளும், நரிப்பயருகளும், தினனகளும், ஊசிச்சம்பா நெற்களும், சாமைகளும், செந்நெற்களும் ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்.

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி !!

#####

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

#*#*#*#*#

3. ஆசை, இச்சை, நிறைவேற வேண்டும்!

36 வகையான 'இன்பங்கள்' சிவனிடம் வேண்டப்படுகின்றன.

உலகவியலில் மனிதன் குறுகிய வாழ்வில், அவனுக்கு பலவகையான இன்பங்கள் தேவைப்படுகின்றது. இந்தப் பகுதியில், வார்த்தைகள் மிகவும் நுணுக்கமாக இரண்டு இரண்டாக கோர்க்கப்பட்டு போது மனிதனின் மனக்கண்ணாடியும், என்ன ஒட்டங்களும் தெளிவாகப்பட்டுள்ளன. முதலில் இன்பத்தை விரும்பிக் கேட்கும் மனித மனம், பின் நல்ல சந்ததியினரைக் கோரி, சுவையான வாழ்வைக் கொடுக்கச் சொல்லி, இவற்றையெல்லாம் அடையத் தேவையான செல்வச் செழிப்பை வேண்டி, ஆளும் திறனையும் கூட்டி, கடைசியாக மேலுலக இன்பத்தை நாடுவதாக கோரப்படுவது சிறப்பான சிகரமாக அமைந்துள்ளது. இவ்வுலக இன்பங்களையும் மேலுலக இன்பங்களையும் ஒருங்கே வேண்டும் மனிதனின் ஆசை இயல்பாக சித்தரிக்கப்பட்ட இப்பகுதி ஒரு 'வைர மகுடம்' எனலாம்.

சமஸ்கிருதம்::

சஞ்ச மே மயச்ச மே ப்ரியஞ்ச மேனுகாமச்ச மே காமச்ச மே காமச்ச மே ஸொமனஸச்ச மே பத்ரஞ்ச மே ஸ்ரேயச்ச மே வஸ்யச்ச மே யசச்ச மே பகச்ச மே த்ரவிணஞ்ச மே யந்தா ச மே தர்த்தா ச மே க்ஷேமச்ச ம த்ருதிச்ச மே விச்வஞ்ச மே மஹச்ச மே ஸம்விச்சமே ஜ்ஞாத்ரஞச மே ஸூச்ச ம ப்ரசஸூச்ச மே ஸீரஞ்ச மே லயச்சம ருதஞ்ச மேம்ருதஞ்ச மேயக்ஷ்மஞ்ச மேநாமயச்ச மே ஜீவாதுச்ச மே தீர்க்காயுத்வஞ்ச மேநமித்ரஞ்ச மேபயஞ்சமே ஸுகஞ்ச மே சயனாஞ்ச மே ஸூஷா ச மே ஸுதினஞ்சமே ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

இவ்வுலக இன்பமும் மேலுலக இன்பமும் அன்பும் அதனால் ஏற்படும் ஆசையும் அவ்வாசையின் அனுபவமும் மனதிற்கினிய உற்றாரும், சீரான இவ்வுலக வாழ்வும், மங்களமும் உயர் நலமும் நல்ல இருப்பிடமும், புகழும், பொன்னும் செல்வமும், தவ வலிமையும், அதனால் கிடைக்கப்பெற்ற பலனை பாதுகாக்கும் திறனும், வழிகாட்டும் ஆசிரியரும், தந்தை போன்று தாங்குபவனும் -மேன்மை பொறுந்திய பெரியவர்களும், நல்லொழுக்கத்தை போதிப்பவனும் -என்னை சரியான பாதையில் வழிநடத்திச் செல்பவனும், மனஉறுதியும், எல்லோருடைய உதவியும், வெகுமானமும், வேள்வியும் வேள்வியின் பாதையில் செல்ல வழிகாட்டும் நூலும், அதன் அறிவும், நான் கற்றரிந்தவற்றை கற்றுக்கொடுக்கும் திறனும், மக்களை ஏவும் திறமையும், பணியாட்களையும் மற்றவர்களையும் நடத்தும் திறமையும், மேழிச் செல்வமும், பயிர்த்தொழிலில் ஏற்படும் இடையூறுகளின் ஒழிவும், வேள்வி முதலிய நற்கருமமும், அதன் பலனும், நீடித்த குடல் முதலிய நோயின்மையும் குறுகிய காய்ச்சல் முதலிய நோயின்மையும், நோயற்ற வாழ்வுக்குரிய மருந்தும், என்வாழ்வின் நாட்களை கூட்டும் மூலிகை மருந்துவகைகளும், நீண்ட ஆயுளுடன் கூடிய எதிர்பாராத மரணமின்மையும், நண்பர்களில்லாதமையும், அச்சமின்மையும், நன்னடத்தையும், நல்ல தூக்கமும், கடவுளின் திருவுள்ளத்துடன் கூடிய விடியற்காலையும், வேள்வி, மறைஒதுதல், வேள்வி பயிலுதல் முதலிய நல்ல செயல்களினால் ஒளிரும் பகற்பொழுதும், ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைககட்டும்.

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி !!

#####

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#*#*#*#*#


2. அழகான உடம்பும், கவர்ந்திழுக்கும் ஆளுமையும!

உடல் உறுப்புக்களின் நேர்த்தியும்.38 வகையான பொருட்களும் வேண்டப்படுகின்றன

அழகான உடம்புறுப்புகளை வேண்டும் முதல் பகுதியிலிருந்து விலகி, வாழ்க்கையை மேம்படுத்தவும், செல்வத்தைப் பெறுக்கவும், விரும்பியதை அடையவும், இலக்கை நிர்ணயத்து அதை அடையவும் முற்படும் மனித வாழ்வு பற்றி இப்பகுதியில் சிந்திக்கப்படுகிறது. ஒழுங்கான உறுப்புகள் தனது உடம்பில் ஒருமனிதனுக்கு கிடைக்குமாயின், அடுத்தது அதிகாரத்தை நோக்கியும், ஆளும் திறனை நோக்கியுமே அவன் மனம் செல்லும். பரந்து விரிந்த நாட்டையும், நிலத்தையும் அடக்கி ஆளும் வேட்கையும் அவன் மனதில் கனல்போல் எறிவதற்கு அவனுக்கு சரியாக அமைந்த உடல் உறுப்புகளே காரணம். கோபப்படும் இடத்தில் கோபம் வரவேண்டுமென்று வேண்டப்படுவது இப்பகுதியின் சிறப்பு. ஹிந்துமதம் ஒருபோதும் முழுகொல்லாமையை கடைபிடிக்க அறிவுறுத்தியதில்லை. "சரியான நேரத்தில் சரியான காரணத்திற்கு கோபம் கொள்ளாதவன் கோழை" என்றார் தத்துவஞானி அரிஸ்டாட்டில். வால்மீகி ஸ்ரீ ராமரை அவர் கொண்ட "யுக்த க்ரோதத்திற்காக" பாராட்டுகிறார். கடலைத்தாண்ட வேண்டி, "கடல்கடவுளுக்கு" தன் உரிய வணக்கத்தையும், அர்ப்பணிப்புகளைச் செய்தும், சமுத்திரராசன் வராது போகவே, கோபம் கொண்டு கடலை அழித்துவிட துணிந்த இச்செயல் பாராட்டப்படுகின்றது. உலகவியலை விட்டு விலகிப்போகச் சொல்வதாக ஹிந்துமதம் ஒருபோதும் சொன்னதில்லை. "சம்ச மே, மயச்ச மே" என்று இவ்வுலகிலும், மேலுலகிலும் எது நன்மை பயக்குமோ அவைகள் உயிர்க்கு கிடைக்கட்டும் என்று வேண்டப்படுகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் விளயாட்டுக்களும், உன்னிப்பாக கவனத்தை செலுத்துதலும், கடந்து போன இனிமையான வாழ்வும், நடக்கவிருக்கும் ரம்மியமயமான நாட்களும், வேண்டப்படுவதை பார்க்கும்போது, சாதாரண விருப்பத்திலிருந்து படிப்படியாக உயர்ந்து சிந்தனையின் வளர்ச்சியை அடைந்துள்ளது புரியும்.

சம.ஸ்கிருதம்::

ஜ்யைஷ்ட்யஞ்ச ம ஆதிபத்யஞ்ச மே மன்யுச்சமே பாமச்ச மேமச்ச மேம்பச்ச மே ஜேமா ச மே மஹிமா ச மே வரிமாசமே ப்ரதிமா ச மே வர்ஷ்மா ச மே த்ராகுயா சமே வ்ருத்தஞ்ச மே வ்ருத்திச் சமே சத்யஞ்ச மே ஸ்ரத்தா ச ம ஜகச்ச மே தனஞ்ச மே த்விஷிச்ச மே க்ரீடா ச மே மோதச்ச மே ஜாதஞ்ச மே ஜநிஷ்யமாண்ஞ்ச மே சூக்தஞ்சமே ஸுக்ருதஞ்ச மே வித்தஞ்ச மே வேத்யஞ்ச மே பூதஞ்ச ம ருத்தஞ்ச ம ருத்திச்ச மே க்லுப்தஞ்ச மே க்லுப்திச்ச மே மதிச்ச மே சுமதிச்ச மே ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

மனிதர்களில் மேன்மையாகப் போற்றப்படுவதும், தலைமையை ஒளிரச் செய்பவராயும், ஏற்கத்தகுந்த உட்பகைகளில் கோபமும், அளவிர்க்குட்பட்ட வெளிப்பகைகளின் கோபமும், ஆழங்காணமுடியாத மனமும், அதைச் சார்ந்த எண்ணமும், இனிமையான குளிர்ந்த தண்ணீரும், எதிரிகளை வெல்லும் திறமையும், தளராத ஆளுமையும் வெற்றியினால் கிட்டும் செல்வமும், பெருமையும், உள்ள பொருட்களிலேயே மிகவும் உயர்ந்த பொருளாக எல்லோராலும் மதிக்கப்பட்டதும், வீடு, நிலம் முதலிய செல்வமும், மேலும் கணக்கிடமுடியாத செல்வங்களும், உயர்ந்த படிப்பினால் ஏற்படும் எண்ணங்களும், ஆளுமையும், உண்மையும், "மறை" போன்ற உயர்ந்த "எழுதாக்கிளவி" நூலில் முழு ஈடுபாட்டுடன் கூடிய நாளைய வாழ்வும், அசையும் சொத்தும், அசையாச் சொத்தும், பலவித தங்கம் போன்ற சொத்தும், வெள்ளியும், மயக்கும் ஆளுமையும், சுண்டியிழுக்கும் ஆணத்தமும், உடம்பின் பெருமையும், எண்ணச் சிதறல்களை உண்டாக்கும் விளையாட்டுக்களும், அதனால் ஏற்படும் கேளிக்கையும், மக்கட்செல்வமும், பேரப்பிள்ளைகளினால் ஏற்படும் தலைமுறை பெருக்கமும், அழியாத தலைமுறையும், செல்வப் பெருக்கும், நன்னம்பிக்கையும், மரம், செடி போன்ற பொருட்களும், பணமும், உண்டானதும், உண்டாகப் போவதும், பலன்களும், சேமித்த பொருளும், இனி கிடைக்கக்கூடிய பொருளும், சேமித்த நிலம் முதலிய சொத்தும் எளிதில் சென்றடையக்கூடிய ஊரும், நல்ல வழியும், இறந்த பின் நான் கொண்டுபோகும் நற்பயனும், இனிமையான பொழுது போக்கிறக்கு தேவையான சொகுசு வீடுகளும், என் வாழ்வை துன்பமின்றி நடத்த தேவையான இயற்கை வளங்களும், சேமிப்பும், அவற்றைச் சரியாக பயன்படுத்தும் வழிமுறைகளும், கைகூடவிருக்கும் நற்பயனும், ஒழுங்காகத் திரட்டிய பொருளும், ஒரு செயலை திறமையாக செய்யக்கூடிய பண்பும், ஊகித்தறியும் திறமையும், நிர்வாகம் முதலியவற்றைப் பராமரிக்கக்கூடிய மனஉறுதியும், இக்கட்டான நிலையை கையாளும் திறனும், ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்.

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி

#####

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#*#*#*#*#

1. உடம்பும், உடம்பு சார்ந்தவைகளும்!.

36 வகையான பொருட்கள் சிவனிடம் வேண்டப்படுகின்றன

சமகத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒரு தனித்தன்மையுடன் எல்லாப் பிரிவுகளும் உச்சக்கட்டத்தில் ஒரே வழிபாட்டு நோக்கின் இலக்கை அடைய வழிகோலுகின்றது. "உடம்புதான் நேர்மை என்ற வேரின் தொடக்கம்" என்று ஒரு வடமொழி வழிபாட்டு நூல் குறிப்பிடுகிறது. இப்பகுதி முழுவதும் 'உடம்பு' சார்பாகவே சொல்லப்பட்டுள்ளது உணவுப்பதார்த்தங்களும், அர்ப்பணிப்பதினால் கிடைக்கும் உணவுப்பொருள்களும், உடம்பும் அதன் உறுப்புகளும், அவற்றின் அமைப்புகளும் சொல்லப்பட்டுள்ளன.

சமஸ்கிருதம்::

வாஜச்ச மே ப்ரஸவச்சமே ப்ரய்திச்ச மே ப்ரஸிதிச்ச மே தீதிச்ச மே க்ரதுச்சமே ஸ்வரச்ச மே ச்லொகச்ச மே ச்ரவச்ச மே ஜ்யோதிச்ச மே ஸுவச்ச மே ப்ராணச்ச மேSபானச்சமே வ்யானச்சமேசுச்சமே சித்தஞ்சம ஆதீதஞ்ச மே வாக்சமே மனச்சமே சக்ஷுச்ச மே ஸ்ரோத்ரஞ்சமே தக்ஷச்ச மே பலஞ்ச ம ஓஜச்ச மே சஹச்ச ம் ஆயுச்ச மே ஜராச ம ஆத்மா ச மே தனூச்சமே சர்ம ச மே வர்ம ச மேங்கானி ச மேஸ்தானி ச மே பரூக்ம்ஷி ஷி ச மே சரீராணி ச மே.
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

உணவுப் பொருள்களும், உணவளிக்கும் மனதும், தூய்மையான உணவும், உணவு உட்கொள்ளும் கொடுப்பிணையும், உணவளிக்கும் வேட்கையும், உணவைச் செறிக்கவைக்கும் தன்மையும், உணவை சம்பாதிக்கும் வேள்வியும், வேள்வி செய்யும் போது பாடப்படும் பாட்டை சரியாக உச்சரிக்கும திறனும், குயில் போல இனிமையான குரலும், புகழும், சொற்களை கையாளும் திறமையும், கேள்வித்திறமையும், நன்றாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் திறனும், உள்ளொளியும், சொர்க்கமும், உடம்பில் சீரான மூச்சுக்காற்றும், மூச்சுக்காற்றின்மையும், மேலும், அறிவினால் ஏற்படும் ஞானமும், அந்த ஞானத்தினால் துரிதமாக அறியப்படும் செய்திகளும், சுவையான பேச்சும், திடகாத்திரமான மூளையும், கூர்மையான பார்வையும், துல்லியமான காது கேட்கும் திறனும், உயிரும், எண்ணங்களும், எண்ணத்தினால் அறியப்பட்ட பொருளும், அறிவொளியினால் அறியப்படும் உந்துதலும், செயல்பாட்டின் திறனும், மூச்சுக்காற்றின் திறனும், எதிரிகளை வெல்லும் திறமையும், நீண்ட ஆயுளும், மதிக்கப்படும் முதுமையும், தேவையான அளவு திமிரும், உள்ளொளியும், செதுக்கினாற்போன்ற உடல்வாகும், நலமும் உடலைக்காக்கும் கவசம் முதலியனவும், திடமான உறுப்புக்களும் எலும்புகளும் கணுக்களும் - திடமான மூட்டுகளும், மறுபிறப்பால் உயர்ந்த தலைமுறையில் பிறவிக் கொடுப்பிணையும் - ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி

#####

வெள்ளிக்கிழமை, 17 May 2019 09:10

ஆக்ரமிப்பு!

Written by

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#*#*#*#*#

 

ஆக்ரமிப்பு!

நல்ல காற்றோட்டத்துடன் குடியிருப்புகள் அமைய வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி மக்கள் ஆரோக்கியத்தை முன்னிட்டு அரசு சில சட்டங்கள் போட்டால் அதை ஏற்று மதித்து நடந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யா விடில் அதன் பாதிப்புகள் மக்களுக்கே. சட்டதிட்டங்களை மீறுபவர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களும் அதனால் பாதிக்கப் படுகின்றனர். என்பதை மக்கள் உணர வேண்டும். யார் எப்படி போனால் என்ன நம் பிரச்சனை தீர்வு கண்டால் போதும் என்ற நிலைப்பாடானது அவர்களுக்கும் ஓர்நாள் தீங்கு விளை விக்கக்கூடும்.

சாலை ஓரங்களில் சாலையை ஒட்டி குடிசைகள் மற்றும் வீடுகள் கட்டிக் கொள்கின்றனர். அங்கு முறைப்படி விட வேண்டிய அளவிற்உ இடம் விட்டுக் கட்டுவதில்லை. சட்ட அமைப்பில் கூறிய இடத்தை விட்டால் இடம் குறுகி விடுகின்றது. மேலும் வளர்ந்த நகரங்கள், கிராமங்களில் அந்த இடத்தின் மதிப்பு அதிகமாவதால் அவ்வளவு இடத்தை விட்டுவிட மனதில் எண்ணம் தோன்றுவதில்லை. ஆனால் எதிர்பாராமல் நடைபெறும் விபத்துக்களைப் பார்க்கும்போது மதிப்பு பெருகிய இடத்தைவிட மனித உயிர்கள் மேலல்வா என்பதை புரிந்து செயலாக்கம் கொள்ள வேண்டும்.

சாலை ஓரத்தில் இருக்கும் வீட்டிற்குள் பேருந்தோ அல்லது கனரக வாகனங்களோ எதிர்பாரத நிலையில் கட்டுப்பாட்டை இழந்து புகுந்தால் வீட்டில் இருப்பவர்களின் நிலை என்ன என்பதை சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதை உணர்ந்து அரசும் இடத்தின் சொந்தக்காரரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூடுமான வரையில் சாலை அருகே நெருங்கிய வண்ணம் குடியிருப்புகள் அமையக்கூடாது என்ற நிலையை அரசு மேற்கொள்ள வேண்டும். அந்த இடத்தை தவிர வேறு இடம் இல்லாதவர்களுக்கு அதற்குப் பதிலியாக மாற்று இடம் தர அரசு முன்வரவேண்டும். இதை அந்த இடத்து சொந்தக்காரரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முக்கிய சாலைகளில் தாங்கள் வளம்பெற வேண்டுமென்று சிலர் வியாபார அமைப்பில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த இடம் வியாபார ஸ்தலமாக மாறும் போது அங்கு வருபவர்களின் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் அவர்கள் சாலையை பயன் படுத்துவதால் சாலையின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றது. அவ்வாறு வணிக வளாகங்கள் கட்டும்போது வாகனங்கள் நிறுத்த குறைந்த அளவிற்காகவது இடம் ஒதுக்க வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்படுத்தப் படவேண்டும். வாகனங்கள் நிற்க இடம் இல்லா வணிக வளாகங்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். அல்லது அவர்களது மின் இனைப்பு மற்றும் குடிநீர் இனைப்புகள் மறுக்கப் படவேண்டும்.

வீடாக இருந்த பகுதியை மாற்றி அமைத்து வணிக இடமாக மாற்றுகின்றனர். வீட்டிற்குமுன் காலியாக இருக்க வேண்டிய அளவு இடம் இல்லாமல் கட்டிவிடுகின்றனர். சிலகாலம் கழித்து இப்படி மாற்றுவதால் மேலும் சிக்கல் உருவாகி தாங்கள் இடம் விடாமல் விட்டதோடு அல்லாமல் பொது இடமான சாக்கடைகள் நடைபாதைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். அங்கு வரும் வாகனங்கள் எங்கு நிறுத்தப்படும்!. வேறு வழியின்றி சாலைகளில்தான் நிறுத்தப்படுகின்றன. இந்த முறைதனை மாற்ற வேண்டும். போக்குவரத்திற்கு எத்தனை தடைகள். மேலும் விபத்துக்கள் ஏற்படவும் வாய்பு இங்கு உறுவாகின்றதால் கடுமையான முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். இவர்கள் போட்டு இருக்கின்ற மேற்கூரை தகரங்கள் இவற்றிற்குள் புகுந்துதான் அவ்வழி செல்லும் மக்கள் செல்ல வேண்டியிருக்கின்றது.

பலர் கடைகளுக்கு முன்னால் ஓர் தார்பாய் அல்லது ஒரு ஓலைக்கீற்று கொட்டகை ஆகியவற்றை சாலைகளில் போட்டே தங்கள் கடைகளைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். கடை கட்ட வேண்டுமென்றால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களது இடத்திலேதான் போட வேண்டும் அப்படி போடும் அளவிற்கு இடம் நிலத்திற்கு உள்ளேயே விட்டுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலை வேண்டும். பொது இடங்கள் ஒரு சிலர் முன்னேறுவதற்காக ஆக்கிரமிப்பு செய்வதற்கல்ல. பொதுவான இடங்கள் அனைவருக்கும் பயன் படவேண்டும் என்ற நிலை ஏற்பட வேண்டும். பொதுவாக இது போன்ற இடங்களுக்கு அரசு நிர்வாகத்தில் அனுமதி பெற்றே வணிகத்திற்கான இடங்களை அமைத்திட வேண்டும்.

அனுமதிபெற்ற கட்டுனர்களையே இனிவரும் காலங்களில் புதிய கட்டிடம் கட்ட அணுமதிக்கப்பட வேண்டும். மின் இனைப்பு பெறுவதற்கு ஓர் அனுமதி பெற்றவரின் கையொப்பம் மற்றும் கட்டிட வரைபடம் அனுமதி பெற்றவரின் ஒப்பத்திற்குப் பிறகே நிர்வாகத்தால் அனுமதிக்கப் படுவதுபோல் கட்டிடம் கட்டுவதற்கும் அனுமதி பெற்றவரால்தான் கட்டப்பட வேண்டும் என்ற நிலையில் விதிமுறைகளை மீறி தவறான அமைப்பில் கட்டிடம் கட்டப்பட்டால் அதற்கு அவர் பொறுப்பாவார். கட்டிடம் கட்டி முடித்தபின் அரசு நிர்வாகத்திலிருந்து ஒரு குழு மேற்பார்வை செய்து சரியாக விதிமுறைக்குட்பட்டு கட்டப்பட்டுள்ளது என்ற சான்றிதழ் அளித்த பின்னரே மின் இனைப்பு மற்றும் குடிநீர் இனைப்புகள் வழங்கப் படவேண்டும். சான்றிதழ் அளிக்கும் குழு தன் பணியைச் சரிவரச் செய்யாமலிருந்தால் அவர்களும் தண்டிக்கப்படலாம். விதி முறைப்படி கட்டப்படாத கட்டிடத்தை கட்டிய அனுமதி பெற்ற என்ஞினியரின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம். அவர்மேல் விசாரனை நடவடிக்கை எடுத்து பின்னர் நிரந்தரமாக ரத்து செய்யலாம்.

எந்த ஒரு கட்டிடமாயிருந்தாலும் அந்த கட்டிடத்திற்கு மின் இனைப்பு சரியாகச் செய்யப்பட்டுள்ளது என்றும், கழிவு நீர் குழாய்கள் சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கின்றது என்றும் கட்டிடம் விதிமுறைப்படி கட்டப்பட்டுள்ளது என்றும் யாரால் கட்டப்பட்டுள்ளது என்றும் வணிக வளாகத்தின் பார்வையில் படும் பகுதியில் அல்லது மேற்பாற்வையாளர் வரும்போது பார்க்கும் வகையில் புகைப்படத்துடன் கையொப்பமிட்டு பொருத்தப்பட வேண்டும்.

இதுவரை கட்டப்பட்டுள்ள இடங்களை கால அவகாசம் கொடுத்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களே அகற்றாவிட்டால் நிர்வாகம் அகற்றவேண்டும் அதற்குரிய கட்டணத்தை கண்டிப்பாய் தண்டனைக் கட்டணத்துடன் வசூலிக்க வேண்டும்.

சிலர் தங்களின் வீட்டிற்கு முன்னால் பாதுகாப்பிற்காக பொது இடத்தை கோவில் என்ற அமைப்பை ஏற்படுத்தி நாளடைவில் மக்கள் அதைப் பயன்படுத்துவதால் ஓர் ஆக்கிரமிப்பு இடமாகின்றது. இதே போன்று சிலர் கல்லறைகளையும் சமாதிகளையும் கட்டிவிடுகின்றனர். ஏனென்றால் கோவில்கள் மற்றும் இது போன்ற சமாதிகள் அகற்றும் நிலை வந்தால் அந்த இனத்தாரை சேர்த்துக் கொண்டு போராட்டங்கள் ஏற்படுத்தும் சூழல் உருவாக்குகின்றனர். அவர்களுக்கு ஒன்று சொல்வேன். நீங்கள் உண்மையான பக்தராக இருந்தால் கோவிலுக்கு என்று ஓர் இடம் வாங்கி அல்லது உங்கள் சொந்த இடத்தில் கோவிலை கட்டி நீங்களும் மற்றவர்களும் வழிபட செய்யுங்களேன்! ஏன் இந்த ஆக்கிரமிப்பு புத்தி! இது முற்றிலும் சுயநலம்! இதைப் புரியாமல் மற்றவர்களும் இவர்களுடன் சேர்ந்து போராடுவது மிகுந்த வேதனை அளிக்கின்றது.

சாலைகள் ஆக்கிரமிப்பு என்றில்லாமல் கோவில் இடங்களையும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து சுயலாபம் அடைந்து வருகின்றனர் பலர். அருகில் இருக்குமிடம் பலமடங்கு வாடகை வரும் அளவிற்கு உயர்ந்தபோதும் கோவில் இடங்களில் இருப்போர் ஓரளவாவது வாடகையை உயர்த்தி தராமல் சாக்கு போக்கு சொல்லி இருந்து வருகின்றனர். மேலும் வாடகைக்கு எடுத்தவர்கள் சிலர் உள் வாடகைக்கு விட்டு விட்டு அவர்கள் லாபம் சம்பாதிக்கின்றார்கள். இவைகளை கண்டறிந்து யார் பேருக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றதோ அவர்களே அங்கு இருக்க வேண்டும். மற்றவர்கள் இருந்தால் அவர்களை அகற்றி விட்டு வேறு உரிய நபரை அங்கு இருக்க வைக்க வேண்டும். கோவில் நிலங்களை குத்தைகை எடுத்தவர்கள் பொய்க்காரணங்கள் சொல்லி குத்தகையை சரியாக செலுத்துவதில்லை. மொத்த இடத்தில் எவ்வளவு சொந்தமாக்கிக்கொள்ள முடியுமோ அவ்வளவு செய்து விட்டிருக்கின்றனர். பழைய ஆவனங்களை எடுத்து இவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அவர்களாகவே திருப்பிக் கொடுத்துவிட்டால் சரி! இல்லை என்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை ஓரங்கள், கோவில் நிலங்கள் என்றில்லாமல் நீர் வழிகளையும் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்போது சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய பிரமுகர்களும் இந்த விஷயங்களில் தலையீடு செய்தல் கூடாது. பொது நன்மை கருதி தங்களை நாடி வரும் அன்பர்களுக்கு உபதேசம் செய்து அதுவே தாங்கள் வகிக்கும் பொறுப்பிற்கு உகந்த தகுதி என்பதை நிலை நிறுத்த வேண்டும

தங்களின் இனம், மதம் வளர வேண்டி அரசிடம் வேண்டிப் பெற்ற தொன்னூற்று ஒன்பது வருடத்திற்கான குத்தகை நிலத்தின் மூலமாக பயன் அடைந்து வளர்ந்தபின் அதை தங்கள் சொந்த சொத்தாக சில அமைப்புகள் கருதுகின்றன. இவ்வளவு காலம் ஆண்டு அனுபவித்த காராணத்தால் அவர்கள் உரிமையைக் கேட்கலாம். அதற்காக பொது மக்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய ரோடுகள் அமைக்கும் பணிக்கு கூட இடம் தர மறுப்பது எந்த விதத்திலும் சரியில்லை. அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அந்த இடங்களை கைப்பற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சாலை வசதிகளை மேம்படுத்தி அமைக்க வேண்டும், குத்தகைக் காலம் முடிவடையாமலிருந்தாலும் பொது உபயோகத்திற்கு வேண்டிய இடத்தை திரும்ப பெறுவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது. வளார்ந்து வரும் நாட்டில் அனைத்து மக்களும் பயன் தரக்கூடிய திட்டங்களுக்கு எல்லா அமைப்புகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

வசதி பெற்ற சிலர் அரசு நடவடிக்கை எடுக்கும்போது ஒரு ரிட் போட்டு விட்டால் பல வருடங்களுக்கு இழுத்துக் கொண்டிருக்கும் நமக்கு கவலையில்லை என்று சட்டத்தில் இருக்கும் சந்து பொந்துகளை தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு சில ஆயிரத்தில் அரசின் நடவடிக்கையை தடுத்து விடுகின்றனர். இது போன்ற ஆக்கிரமிப்புகளுக்கு நீதி நிர்வாகம் எந்த வித ஒத்துழைப்பும் தரக்கூடாது என்பதே சிறப்பு. மேலும் இதுபோன்ற பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நல்லவர்களுக்கு நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள் ஆதரவு அளித்து அதை நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல ஆதரவு அளிக்கக்கூடாது. வழக்கறிகளுக்குத் தெரியும் இது போலி வழக்கு என்று. அப்படிப்பட்ட போலி வழக்குகளை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் தர்மத்தையும் நீதியையும் காக்க செயல் படவேண்டும். இதனால் நீதி மன்றங்களின் பொன்னான நேரம் மிச்சமாகும்.

சுதந்திரம் பெற்ற பின் கடந்த எழுபது ஆண்டிற்குள் வசதி படைத்தோர் மற்றும் அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் அளவில்லாதவை அவற்றை சரி செய்தால் போதும். நீதி நியாயங்கள் காக்கப் படுவதோடு மக்களுக்கு ஆரோக்கியமும் பெருகி விபத்துகள் இல்லா நிலைக்கு நாடு செல்ல வசதியாக வழிவகுக்கும்.

ஆக்கிரமிப்பு செய்துவிட்டு அதைபற்றி கேட்டால் அங்கே பருங்கள். இங்கே பாருங்கள். அவர் இப்படிச் செய்துள்ளார் என்று மற்றொரு நிகழ்வைக் காட்டிக் கொடுத்து அதன் நிழலில் தான் தப்ப நினைப்பது அயோக்கியத் தனம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். யார் செய்தாலும் எப்படிச் செய்திருந்தாலும் தப்பு தப்புதான். பலர் தவறு செய்வதால் அது சரியாகி விடாது. நீங்கள் செய்யும் ஆக்கிரமிப்பு செயல்களால் பொதுவாக என்ன துயரங்கள் ஏற்படுகின்றன் என நினைத்து அந்த பாவங்களைச் செய்யாமலிக்க நினையுங்கள்.

ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஓர் உண்மையை இங்கு சொல்ல விரும்புகின்றேன். நீங்கள் சுயமாக நியாமாக தர்மமான முறையில் சம்பாதித்திருந்தாலும் அதிலிருந்து ஒரு குன்றின் மணி அளவுகூட நீங்கள் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது எடுத்துச் செல்லமுடியாது என்ற நிலையை உணருங்கள். அப்படியிருக்க வீண் ஆசையினால் ஆக்கிரமிப்பு செய்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வதால் என்ன பலன் தெரியுமா! நீங்கள் உங்கள் கர்ம பலன்களில் பாவங்களை சேர்த்துக் கொள்வதுதான் மிச்சம். அந்த பாவங்களை நீங்களோ அல்லது உங்கள் சந்ததியினரோ தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். அது தான் வினை. இதற்காகவா இப்படி ஆக்கிரமிப்புச் செய்கின்றீர்கள். சற்று யோசித்துப் பாருங்கள்! ஆக்கிரமிப்பு ஒர் பெரும் தொற்று நோய்! மனம் தெளிவடைவீர். நல்லது நடக்கட்டும். நாடு வளம் பெறட்டும்! அன்புடன் குருஸ்ரீ பகோரா.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17262897
All
17262897
Your IP: 162.158.79.37
2020-06-07 11:09

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg