gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

ஆரோக்கியம் (6)

வெள்ளிக்கிழமை, 12 April 2019 17:03

ஸ்தூல, சூக்ம உறுப்புகள் !

Written by

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#*#*#*#*#

ஸ்தூல, சூக்ம உறுப்புகள் !

பஞ்ச பூத உலகில் எந்தப் பொருளாயிருந்தாலும் அதன் காலம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன்படி மனிதனின் உடல் உறுப்புக்களுக்கும் காலம் நிர்ணயிக்கப் பட்டுள்ளபடியாலும் அதை உபயோகப்படுத்தும் முறையையும் கொண்டு அதன் வாழ்நாள் அப்படியே இருக்கலாம். அல்லது குறையலாம். எப்படியிருப்பினும் ஒரு பொதுவான வாழ்நாள் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கும் நிர்ணயிக்கப் பட்டுள்ளதை அறிவோம். -குருஸ்ரீபகோரா


இருதயம்:

இரத்தத்தை உள்வாங்கி மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இதய பம்ப். இரத்தத்தை விரைவாக அனுப்பும் திறன் கொண்டது. நாற்பது வயதிற்குமேல் இது பலவீனமடைந்து விடுவதால் மற்ற உறுப்புகளுக்கு இரத்தம் பாயும் வேகமும் குறையும்.

எலும்புகள்:

எலும்புகள் இருபத்தைந்து வயதுவரை வலுவாக இருக்கும். முப்பத்தைந்தாவது வயதிலிருந்து பலவீனமடையும்.

கல்லீரல்:

உடலின் உள் உறுப்புகளிலேயே சிறந்த இயக்கத்தைக் கொண்டுள்ள உறுப்பு கல்லீரல்தான். மனிதனின் எழுபது வயதுவரை இது நன்றாக இயங்கும். மது போன்றவை இல்லாமலிருந்தால் மிகவும் நன்றாகச் செயல்படும் திறன் கொண்டது.

கண்:

மனிதனின் நாற்பது வயது முதல் இதன் இயக்கம் குறைய ஆரம்பிக்கும். அதனால் தான் மனிதன் நாற்பது வய்திற்குமேல் பொருள்களைப் பார்க்கும்போது, படிக்கும்போது கண்களைச் சுறுக்கிக் கொண்டு பார்க்க வேண்டி வரும்.

குடல்:

ஒரு மனிதனின் குடல் சுமார் ஐபத்தைந்து வயது வரை நன்றாகச் செயல்படும். அதன் பிறகு ஜீரணத்திற்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிப்பதால் வயிற்றில் பிரச்சனைகள் தோன்றும்.

குரல்:

தொண்டையில் உள்ள மெல்லிய திசுக்களுக்கு லாரினக்ஸ் எனப் பெயர். இது நீடிக்கும்வரைதான் குரலில் இனிமை இருக்கும். அறுபத்தைதிற்கு மேல் முற்றிலும் குரல் மாறிவிடும்.

சிறுநீரகம்:

சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்ஸ் என்ற திசுக்கள் அங்கு வரும் அசுத்த ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையைச் செய்கின்றன. ஐம்பது வயது வரை வலுவுடன் இயங்கி அதற்குமேல் வலுவிழக்கும்.

சிறுநீர்ப்பை:

உணவில் சேர்க்கும் நீர் பிரித்து இங்கு வரும்போது முப்பத்தைந்து வயது வரை இரு கப் அளவிற்கு தேக்கி வைக்கும் ஆற்றல் உண்டு. நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சம் சுறுங்கி வயது அறுபத்தைந்தில் ஒரு கப் அளவிற்குத்தான் நீரை தேக்கி வைக்க முடியும்.

தசைகள்:
மனிதனின் முப்பது வயதுவரை ஆரோக்கியமாக இருக்கும் இது அதன்பிறகு 0.5 முதல் 2.0 சதவீதம்வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். இதை வலுவுடன் இருக்கச் செய்ய தினசரி உடற்பயிற்சி, மற்றும் உடல் உழைப்பு அவசியம்.

தலைமுடி:

சராசரியாக முப்பது வயதிலிருந்து ஒரு மனிதனுக்கு முடி கொட்ட ஆரம்பிக்கும். பின்னர். அங்கொன்றும் இங்கொன்றுமாக நரை முடியாக மாறிக் கொண்டு வரும்.


தோல்:

மனித உடலின் தோல் இருபத்தைந்து வயதிலிருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.

நுறையீரல்:

மனிதனின் இருபது வயது வரை நன்றாக இயங்கும். அதன்பின் இடுப்பு எழும்பு பகுதி நெருக்கிக்கொள்ள நுரையீரல் சக்தி குறைந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியேவிடும் அளவு குறையும். இதனால் தான் சிலருக்கு நாற்பது வயதிற்குமேல் கொஞ்ச தூரம் நடந்தால் கூட மூச்சு வாங்கும். படியேறினால் மூச்சு வாங்கும்.

பற்கள்;

வாயில் எச்சில் உற்றும் வரைதான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களை விரட்டியடிக்கும். நாற்பது வய்தில் எச்சில் ஊறுவது குறைய ஆரம்பிக்கும்.

மார்பகம்:

சுமார் முப்பத்தைந்து வயது வரை ஆரோக்கியமாக இருக்கும் மார்பகம் அதற்குமேல் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகளில் கொழுப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும். பருத்த மார்பகங்கள் சுருங்க ஆரம்பிக்கும்.

மூளை:

சராசரியாக ஒரு மனித மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை பத்தாயிரம் கோடி. மனிதனின் எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகளே காரணம். இதன் செயல்பாடுகள் இருபது வயது வரை சுறு சுறுப்பாக இருக்கும். இருபது வயதிலிருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். நாற்பது வயதில் இருந்து ஒரு நாளைக்கு பத்தாயிரம் வீதம் குறைந்து கொண்டு வரும். இந்தச் சரிவினால்தான் மனிதனுக்கு நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்கும்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 10 May 2015 10:56

தியான ஆசன காலம்!

Written by

ஓம் சர்வம் சிவமயம் ஜகத் ஓம் சிவயநம ஓம் சிவநம ஓம்

ஓம்நமசிவய!

இயங்கிய ஞானக் குன்றே அரவக் கிண்கிணி ஆர்ப்பாய்
இலகக் கொம்பொன்றேந்தினோய் வஞ்சனை பலவும் தீர்ப்பாய்
அழகிய ஆனைக்கன்றே இளமத யாணை முகத்தாய்
இரகுபதி விக்கின விநாயகா அனந்தலோடாதியில் அடிதொழ அருளே

$$$$$

 

தியான யோக ஆசனம்!

வாழ்வின் வெற்றிக்கு மகிழ்வும் ஆரோக்யமும் காரணங்கள். மகிழ்வு காண்பதில், கேட்டலில், பேசுவதில், செயல்கள் செய்வதில் கிடைப்பதாகும். எந்தவகையிலான மகிழ்வாக இருந்தாலும் அதற்கு அந்த உறுப்புக்கள் அதவது உடலின் ஆரோக்கியம் இன்றியமையாதது. உடல் நலமுடன் இருக்க, இயங்க சில பயிற்சிகள் அவசியம். அப்பயிற்சிகள் உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் ஆகியவைகளைச் சீராக்கி, நுறையீரல்கள், முதுகுத்தண்டு மற்றும் உள்ளுறுப்புகளை முழு அளவில் இயக்கிட உதவி புரிகின்றது. உடலின் உறுப்புக்கள் நல்லமுறையில் இயக்கப்பட்டால் நாள்தோறும் புத்துணர்வோடு நோய்களின் தாக்கமின்றி செயல்படலாம். இதற்காக தினமும் சில மணி நேரங்களைச் செலவிடுதலில் எந்த தவறுமில்லை. 

மனிதன் வாழ்வு இயற்கையை ஒட்டி இருந்தது. அப்போது மனிதனின் இயக்கம் நன்றாக இருந்ததால் அவன் உறுப்புகள் மிகுந்த செயல்பாடுகளை கொண்டிருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அவனிடம் அதிகமாக இருந்தது. அவன் ஆரோக்கியமாக இருந்தான். உடல் உழைப்புக்குத் தகுந்த உணவு கிட்டாதபோதுதான் அவனை நோய் தாக்கியது. நவி உலகில் உடல் உழைப்பு குறந்துவிட்டது. முக்கிய உறுப்புகள் இயக்கமும் குறைய எதிர்ப்பு சக்திகள் உடலில் குறையத் தொடங்கியது. நோய்க்குத் தவறான உணவுப் பழக்கம், மற்றும் அவனின் வாழ்க்கைமுறை, உடலில் கழிவுகளின் தேக்கம், இரத்த, காற்று, வெப்ப ஓட்டங்களால் ஏற்படும் தடை ஆகியவைகளே காரணமாயின. மேலும் நோயயை மிகப்படுத்தும் வகையில் உணவு முறையில் கட்டுப்பாடின்றி தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு உறுப்புக்களுக்கு அதிக செயலாக்கம் நிர்பந்திக்கப் படுவதால் அவைகள் தளர்ச்சியுறுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைத்து விடுகிறது.

இதை சரிசெய்ய சிலர் உடற் பயிற்சிகளை செய்கின்றனர். உடற் பயிற்சி தசைகளை இயக்கி இறுக்கி வலுவடைய மட்டுமே செய்கிறது. உடற் பயிற்சிக்கு நம் சக்தி அதிகமாக செலவிடப்படுகின்றது. உடல் உறுப்புகள் ஓரளவே இயக்கமடைகிறது. உடலின் உள் உறுப்புக்களை இயக்க தியான யோக ஆசனமுறைகளை பயின்று பலன் பெறுவீர்.—குருஸ்ரீ பகோரா

கீழே குருஸ்ரீ பகோரா தனக்காக ஏற்படுத்திய தியான யோக ஆசன உடல் நல கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணை முழு நேரமும் ஆன்மீக யோக நிலைக்கானது. இயன்றவரையில் முயற்சித்து கால நேரத்துடன் உடல் ஒத்துப்போக பழகுங்கள். முழு நேரமும் ஒதுக்கமுடியாமல் பணி செய்பவர்கள் சில நேரங்களை ஒதுக்கி தங்களால் முடிந்த நேரத்தில் அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதை அட்டவணைப்படி செய்து பழகுங்கள். உடலும் உள்ளமும் சிறப்புறும்- அன்புடன் குருஸ்ரீ பகோரா

தியான யோக ஆசன உடல் நல கால அட்டவணை:
விடியற்காலை
0230-0245 தயாராகுதல்
0245-0400 மூச்சுப்பயிற்சி-நுரையீரல்-ஆயுள் (72நி) -3 நாழிகை
0400-0525 தியானம் –ஓம் ந ம சி வா யா –வீணாத் தண்டு நலன் (84நி) - 3½ நாழிகை
0525-0530 வெறும் வயிற்றில் தேன்கலந்த வெதுவெதுப்பான நீர்
0530-0620 அந்திசந்தி- சூர்யகலை- குண்டலினி எழுச்சி நலன் (48நி) - 2 நாழிகை  

காலை
0620-7010 ஆசனயோகப்பயிற்சி-நுண்ணிய உடலின் உறுப்புக்கள் நலன் (48நி) -2 நாழிகை
0710-0730 காலைக்கடன்- மலச்சிக்கல் நீங்க- பெருங்குடல்- நலன்.
0730-0800 குளியல், தயாராகுதல், பூப்பறித்தல்
0800-0830 கணபதி, கந்தசஷ்டி, சிவபுராணம்- பூஜை முதல் காலம்
0830-0930 கணபதி, சக்தி, பைரவ மந்திரங்கள் 108முறை
0930-1000 காலை உணவு-ஜீரணம் நன்கு ஆகும்-வயிறு நலன்.
1000-1300 ஜீரண நேரம்- எதுவும் சாப்பிடக்கூடாது-மண்ணீரல் நலன்.
1100-1300 உரக்கப் பேசுதல், படபடத்தல், கோபம் தவிர்க்க-இதய நலம்.
1100-1130 கணபதி, கந்தசஷ்டி, சிவபுராணம்- பூஜை இரண்டாம்காலம்
1130-1230 அந்திசந்தி- மூச்சுப்பயிற்சி (48நி) - 2 நாழிகை

பிற்பகல்
1230-1330 சரஸ்வதி மந்திரம் 108முறை
1330-1400 மிதமான மதிய உணவு
1400-1500 ஓய்வு-சிறு குடல் நலன்.
1500-1900 இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது- சிறுநீரககங்கள் நலன்.
1500-1600 தயாராகுதல்
1600-1630 கணபதி, கந்தசஷ்டி, சிவபுராணம்- பூஜை மூன்றாம் காலம்
1630-1730 காளி மந்திரம் 108முறை
1730-1830 அந்திசந்தி- மூச்சுப்பயிற்சி (48நி) - 2 நாழிகை
1830-1900 தினம் ஒரு கோவில் / கனணி

இரவு
1900-2030 இரவு உணவு நேரம்-இதயம் சுற்றிய பெரியகார்டியன் நலன்.
2030-2100 மூச்சுப்பயிற்சி (30நி) - 1 நாழிகை
2100-2300 அமைதியான உறங்கும் நேரம்-மூன்று நாடிகள் நலன்.
2300-0100 அவசியமான உறங்கும் நேரம்-பித்தப்பை நலன்.
0100-0230 கட்டாயத் தூக்கம்-கல்லீரல் நலன்-இரத்தம் சுத்தமாகும்
நலம்காண- அன்புடன்-குருஸ்ரீ பகோரா

$$$$$

புதன்கிழமை, 20 February 2013 00:00

பசுமை மொழி வித்து!

Written by

ஓம்சிவாயநமக!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

$$$$$

பசுமை மொழி வித்து!


பசுமை ஓர் இதமான எண்ணம். உணர்வு. அதை நினைத்தால் குளிர்ச்சியாய் இருக்கும். மனதில் அமைதி கிட்டும். ஆனந்தத்துடன் ஓர் பரவச நிலை ஏற்படும். அதன் வனப்பு குளுமையைத் தரும். உள்ளத்திற்கு உணர்வுகளுக்கு இனம்புரியாத ஆனந்த மகிழ்வைத் தரும். சந்தோஷத்தில் மூழ்கடிக்கும், பல புதிய எண்ணங்களை உருவாக்கும்.

பசுமை இனிமையான சூழலை உருவாக்கி அந்த இடத்தை மலர வைக்கும் தன்மையுடையது. அது உள்ளத்திற்கு புத்துணர்வு தந்து அதன் மூலமாக உடல் புதிய தெம்புடன் செயல்பட இயங்க வைக்க முடியும்.

இதுமட்டுமல்லாமல் பசுமை நிழல் தரும். நிழல் என்றால் ஒளியின் பரப்பால் பொருளின் உருவம் ஒளிக்கு எதிர் திசையில் உருவாகும். அதன் வடிவம் பல கோட்பாடுகளுக்குட்பட்டது. மரத்தின் நிழல் ஜீவராசிகள் அனைத்திற்கும் பயன் படும் வகையில் அமைந்துள்ளது. அதே நிழல் மனிதனுக்கும் உண்டு. ஆனால் அது அவனுக்கும் பயன் படாது. மற்றவர்களுக்கும் பயன்தராது. எனவேதான் மனிதன் எல்லோருக்கும் பயன்படும் நிழல் தரும் பசுமை கொள்ளும் மரங்களை வளர்க்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகின்றது.

வெய்யிலின் அருமை நிழலில் தெரியும் என்பது அனுபவித்த ஆன்றோரின் வாக்கு. அந்த நிழலின் சுகத்தை நமக்கும் மற்றைய ஜீவராசிகளுக்கும் அளிப்பது மரங்களே.

மரங்கள் இப்பூமியில் தோன்றி நிழல் மட்டும் தருவதில்லை. பலவகைகளில் உலக ஜீவிதத்திற்கு உற்ற துணையாக இருக்கின்றது. சில மர வித்துக்களிலிருந்து எண்ணெய் கிடைக்கப் பெற்று மனித குலம் பயன்படுத்துகின்றது.

நெருப்பை உருவாக்க, எரியும் நெருப்பை அதிகரிக்க, உயிரற்ற உடல்களை தகனம் செய்து சாம்பலாக மாற்றி மண்ணுடன் மண்ணாக்க நம்மிடைய இயற்கை அளித்துள்ள பல்வேறுவகையான மரங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றது.

மனிதன் ரப்பர் கண்டு அதன் உபயோகங்களை அறிந்து கொண்டு அதைத் தயாரிக்க மூலப் பொருளினை மரத்திலிருந்துதான் பெறுகின்றான். மரங்களிலிருந்து ஒட்டும் பிசின், பசை தயாரித்து உபயோக்கின்றோம்.

நாம் எழுதுவதற்கு உபயோகமாகும் காகிதங்களை மரத்திலிருந்துதான் நாம் பெறுகின்றோம். எழுதும் பென்சில் தயாரிக்கின்ரோம். நாம் குடியிருப்புக்கு தேவையான சன்னல், கதவு, விட்டம், கூரை ஆகியவற்றை மரங்கள் தாம் வழங்குகின்றது. நம் வீட்டிற்குள் மேஜை, நாற்காலி, கட்டில், பீரோ, சோபா போன்றவைகளும் அழகு சாதனங்கள் வைக்கவும் மரங்களைத்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.

அலங்காரப் பொருள்கள், மரச்சிலைகள், தெய்வ சிலைகளை மரங்களின் உதவியால் தயாரிக்கின்றோம். வாகனங்களுக்கு கூடுகட்ட பயன்படுத்துகின்றோம்.

இவைகளுக்கு மேலாக பல மரங்களும் செடி கொடிகளும் நமக்கு உண்ணுவதற்கு என பல்வேறு பழ வகைகளைத் தருகின்றன.

ஆடு, மாடு போன்ற பல நான்கு கால் ஜீவராசிகளின் உணவிற்கு பசுந்தழைகளைத் தருகின்றன.

மேட்டுப்பகுதியிலிருந்து மழைநீர் வேகமாகப் பாயும்போது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்தும் வெள்ள அபாயத்திலிருந்து ஜீவராசிகளுக்கு உதவியாய் இருப்பதும் மரங்களே.

மரம் செடி கொடிகளின் பூக்கள் கண்ணிற்கும் மனத்திற்கும் குளுமை அளித்து பரவசத்தை ஏற்படுத்தி மனிதனை தன் துன்ப துயரங்களிலிருந்து சில விநாடிகள் விடுவிக்கின்றன.

சூரிய ஒளியால் பூமி வெப்பம் அடைவதை தடுக்கின்றது.

பிரபஞ்சத்தில் வரும் அசுத்த காற்றை தான் ஏற்று சுத்த பிராணவாயுவை வெளியிட்டு வாழ்வின் ஜீவாதாரத்திற்கு துணை புரிகின்றது.

மேலும் மேகங்களைக் கவர்ந்து மழை தருவித்து அப்பகுதிக்கு நீர் கிடைக்க துணைபுரிகின்றது. குளிர்ந்த இதமான சூழலை ஏற்படுத்துகின்றது.

மனிதர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கின்றது.

உலக ஜீவராசிகளுக்கு அதுவும் மனித குலத்திற்கு இத்தனை பல்வேறு நலங்கள் நாம் கேட்காமல் அளிக்கும் மரங்களை நாம் உற்ற நண்பனாக கொண்டு அதைப் பேணிக் காக்க வேண்டும். ஒருவன்

வாழ்நாளில் ஓர் ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும். மரங்களை வெட்டக்கூடாது. மரங்களை வெட்ட அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டும் என்ற கட்டாய நிலை மேற்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் மரங்கள் இல்லா நிலை ஏற்படும். நாம் அனுபவித்து வந்த எல்லாச் சுகங்களும் அழிந்து படும். அந்த நிலை வருமுன் காக்க அனைவரும் புரிந்துணர்வு கொண்டு ஒவ்வொருவரும்

குறைந்தது ஒரு மரம் வளர செய்யுங்கள். மரங்களை வெட்டாதீர்.

பசுமைதனை உணர்வீர். பசுமை என்ற இதமான உணர்வை பரப்புவீர். நம்மைச் சுற்றி பசுமை மலர முயற்சியுங்கள். அந்த பசுமைமொழி நம் பிற்கால சந்ததியினருக்கு, எதிர்கால மனித குலத்திற்கு ஓர் ஒளியாக உதவும். மனிதநேயம் கொண்டு அந்த உதவியைச் செய்ய முனைவீர் என அன்புடன் அழைக்கும்.

பசுமைமொழி வித்து ஒவ்வொரு மனித உள்ளத்திலும் முளைத்து குருத்துவிட ஆவல்--குருஸ்ரீ பகோரா

$$$$$
                                                   

புதன்கிழமை, 20 February 2013 09:29

ஆரோக்கிய முத்திரைகள்

Written by

ஒம் நமசிவய நமக!
வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

$$$$$     

                                                

முத்திரைகள்!


முத்திரைகள் நாட்டியத்தின் பாவனைகளைக் குறிப்பிடப் பயன் படுத்தினர். பின் சங்கேத மொழியாகப் பயன்படுத்தினர். அதன் பின்னர்தான் முத்திரைகள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்றறிந்தனர். எங்கு யாரால் எதற்காகப் பயன்படுத்தினாலும் அந்த முத்திரை அவர்களின் நரம்பு மண்டலத்தில் சில செயல்களைச் செய்து அவர்களை அறியாமல் அவர் நல்வாழ்விற்கு உற்ற துணையாகின்றது. எந்த முத்திரையானலும் பயின்று பயன் படுத்துவதால் உடலுக்கு எந்த கேடும் விளையாது. முத்திரைகளினால் நன்மையைத் தவிர வேறொன்றுமில்லை. உடலில் வியாதிகள் தோன்றாமலிருக்க உதவும். இருக்கும் வியாதிகள் விரைவில் குணமடைய உதவிகரமாக இருக்கும்.கடுமையான தவம், உடல் வருத்தும் பயிற்சிகள் மற்ரும் கசப்பான மருந்துகள் என்ரு எதுவும் இல்லாமல் மனித ஜீவ உயிர்கள் ஆரோக்கிய ஆனந்தமாக வாழ முதல் சித்தன் சிவன் சித்தர்கள் மூலம் நமக்குத் தந்ததை முடிந்த வரையில் பயிற்சி செய்து பலன் பெற்று ஆரோக்கிய வாழ்வு வாழ ஆசி வழங்கும் –குருஸ்ரீ பகோரா

முத்திரைகள்- எல்லோரும் செய்து பழகலாம். வேறு சிகிச்சை மேற்கொண்டு இருப்பவர்களும் செய்யலாம். எந்த சிகிச்சை முறைக்கும் எதிரானது அல்ல. உடலில் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து சக்திகள் சேரவேண்டிய இடத்திற்கு முறையாக சேர உதவுகிறது. யோகப் பயிற்சியில் சொல்லியது போல உள்ளே இழுக்கும் பூரகம் மூச்சை விட, வெளியே விடும் ரேசகம் மூச்சு இரு மடங்கு இருந்தால் அது ஆரோக்யம் ஆகும். எந்த அமர்ந்த நிலையிலிருந்தும் உங்கள் வசதியைப் பொருத்து செய்யலாம். கழுத்து, தலை, முதுகுத்தண்டு ஆகியவை நேராக இருக்கவும். முத்திரை செய்யும் கை எந்த உதவியையும் உறுதுணையையும் பெற்றிருக்கக்கூடாது.

உங்கள் நலனுக்காக கீழே கண்டுள்ள 32 முத்திரைகளை அவற்றின் அருகில் உள்ள குறிப்பினைப் பயன் படுத்தி சரியான முறையில் கவனமாக செய்து பழகவும். சந்தேகங்களுக்கு குருஸ்ரீ பகோராயை மின்னஞ்சலில் / தொலைபேசியில் / அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

அபானவாயு / அனுசாசன் / உஸஸ் / கணேச / கருட / குபேர / சக்தி / சங்கு / சுரபி / சுவாசகோச-2 / சூர்ய / சூன்ய- ஆகாய / சோபன / ஞான-சின் / சமான-துடிப்பு-3 / நாக / பங்கஜ / பிரம்மார / பிராண / பிருத்வி / மகாசிரசு / மாதங்கி / மிருகி – மான் / முதுகுவலி / முஷ்டி / மூட்டுவலி / ருத்ர / லிங்க / வருண – பூதி / வாயு / வீட்ராக் / ஹாக்கினி

$$$$$                                                                                       

 

 அபானவாயு முத்திரை--இருதய முத்திரை-மிருத சஞ்சீவினி முத்திரை
1abanavayumudra

பலன்-இதயம் நன்றாக சீராக இயங்க வைக்கும். மாரடைப்பு ஏற்படாது.

செய்முறை-சுண்டு விரலை நேராக நீட்டி, நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் கட்டைவிரல் நுனியைத் தொடுமாறு செய்யவும். ஆட்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடிப்பாகத்தை தொடுமாறு செய்யவும். கை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்  

 

 அனுசாசன் முத்திரை
2anusasanmudra

பலன்-கழுத்துவலி குறையும். தண்டுவடம் வலுவடையும்.

செய்முறை- ஆட்காட்டி விரலை நேராக நீட்டி, சுண்டு விரல், நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் உள்ளங்கையை தொடுமாறு செய்யவும். கட்டை விரலை நடு விரலின் மீது வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். கை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
உஸஸ் முத்திரை
4usasmudra

பலன்-உரிய நேரத்தில் எழ, விழிப்புணர்வு அதிகரிக்கும்.

செய்முறை-இரு கை விரல்களையும் கோர்த்தவாறு வைக்கவும். ஆண்கள் வலதுகை கட்டை விரலை இடதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும். பெண்கள் இடதுகை கட்டை விரலை வலதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும்.

தினமும்- காலை- எழும்போது, இரவு உறங்கும் போது 3/5 நிமிடம் செய்யவும்

blank  

கணேச முத்திரை

5ganesamudra

பலன்-இருதயம் பலம் பெறும். மன இருக்கம் தளர்ந்து தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

செய்முறை-இடது கைவிரல்களை மடக்கி கைபாதம் நெஞ்சைப் பார்த்தபடி வைக்கவும். வலதுகை விரல்களை மடக்கி இடதுகை விரல்களில் கொக்கி போல் மாட்டிக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும்போது கை புஜங்களில் அழுத்தம் கொடுத்து கைகள் ஒன்றை ஒன்று இழுத்த வண்ணம் இருக்கட்டும். கை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

 

   
கருட முத்திரை
6garudamudra 

பலன்-உடல் சோர்வு மறைந்து, கண்பார்வை தீர்க்க மாகும். பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

செய்முறை-கிராஸ் வடிவில் இடதுகைமேல் வலதுகை இருக்குமாறும் இரு கைகளையும் பாதங்கள் தெரியுமாறும் அவை நம் முகம் பார்த்த வண்ணம் இருக்குமாறும் வைக்கவும். இருகை கட்டை விரல்களை கொக்கிபோல் வளைத்து மாட்டிக் கொள்ளவும். மற்ற விரல்கள் நேராக ஒன்றை ஒன்று தொடாமல் நீட்டி இருக்க வேண்டும்

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
குபேர முத்திரை 
 7kuberamudra

பலன்-சைனஸ் கோளாறுகள் நீங்கும். நினைவாற்றல் கூடும்.பொருளாதார வசதிகளை மேம்படுத்தும் என்பதால் குபேர முத்திரை.

செய்முறை-மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடித்து அதன் நுனி உள்ளங்கையைத் தொடுமாறு வைக்கவும். கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடுவிரல் ஆகியமூன்றின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு செய்யவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சக்தி முத்திரை
8sakthimudra

பலன்-உறக்கம் விரைவில் வரும். பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

செய்முறை-தலையணை இன்றி நேராக மல்லார்ந்து படுத்த நிலையில் செய்ய வேண்டும். இரண்டு கை கட்டை விரல்களையும் உள்ளங்கையில் மடித்து வைத்து ஆள்காட்டி விரல், நடு விரல்களால் மூடியபடி கட்டை விரலில் லேசன அழுத்தம் கொடுக்கவும். இடது கைவிரல்கள் வலது கை விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இடது கை சுண்டு விரல், மோதிர விரல் இரண்டையும் நேராக நீட்டி விரல்களின் நுனிகள் வலது கையின் விரல் நுனிகளைத் தொடுமாறு செய்யவும். இந்நிலையில் கைகளை அப்படியே அடிவயிற்றின் அருகே வைத்து மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக விடவும்.

இரவு படுக்கையில் 3/5 நிமிடம் செய்யவும்

   
சங்கு முத்திரை
9sangumudra

பலன்-திக்குவாய் குணமாகும். சரளமான தங்குதடையற்ற பேச்சுவளம் கூடும். தொண்டை பாதிப்புகள், தைராய்டு பிரச்சனைகள். ஜீரணக் கோளாருகள் நீங்கும்

செய்முறை-இடது கை கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்துவலது கைவிரல்களால் இறுக பிடிக்கவும். மற்ற விரல்களை வலதுகை விரல்மேல் வைக்கவும். அந்த விரல்களின் நுனி வலதுகை கட்டைவிரலைத் தொட்டவாறு இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சுரபி முத்திரை
10surabimudra

பலன்-வாதநோய் குணமாகும்.

செய்முறை-இடதுகை சுண்டு விரல் வலதுகை மோதிர விரலைத் தொடுமாறும், இடதுகை மோதிர விரல் வலதுகை சுண்டு விரலைத் தொடுமாறும், இடதுகை நடுவிரல் வலதுகை ஆள்காட்டி விரலைத் தொடுமாறும், இடது ஆள்காட்டி விரல் வலது கை நடுவிரலைத் தொடுமாறும், இரு கட்டை விரல்களும் நேராக நிமிர்ந்தும் இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சுவாசகோச முத்திரை 
3asthmamudra

பலன்-ஆஸ்துமா குணமாகும்.

முதல் நிலை-செய்முறை-இருகை பாதங்களும் ஒன்றை ஒன்று பார்த்தபடி நெஞ்சுக்குமுன் வைத்து இருகை நடு விரல்களை உட்பக்கமாக மடித்து அதன் நகக்கண்கள் ஒன்றை ஒன்று தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக ஒன்றை ஒன்று தொடாத வண்ணம் இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

11suvasakosamudra 

இரண்டாம் நிலை-செய்முறை- இடதுகை ஆட்காட்டி விரலை நேராக நீட்டவும். இடதுகை சுண்டு விரலை மடக்கி இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்திலும், மோதிரவிரலை கட்டை விரலின் நடுப்பாகத்திலும், நடுவிரலை கட்டை விரலின் நுனியைத் தொட்டமாறும் வைக்கவும். கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சூர்ய முத்திரை
12suryamudra

பலன்-தைராய்டு சுரப்பி தூண்டப்படும். உடல் சூட்டினால் கொழுப்பு கரையும். உடல் எடை குறையும்.

செய்முறை-இடது கை மோதிர விரலை மடித்து இடதுகை கட்டைவிரலின் அடிப்பாகத்தை தொட்டவாறு வைக்கவும். எல்லா விரல்களும் நேராக இருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சூன்ய-ஆகாய முத்திரை 
13soonya aagayamudra

பலன்-காது நோய்கள் குணமடையும். காது குறைபாடுகள் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டும்எழும்புகள் வலுவடையும்.

செய்முறை-இடது கை கட்டைவிரல் இடதுகை நடுவிரல் இரண்டின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டவாறு வைத்து மற்ற விரல்கள் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சோபன முத்திரை
14shobnamudra

பலன்-எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும்.

செய்முறை-இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை கட்டை விரல் மேல் வலதுகை கட்டை விரல் இருக்குமாறு செய்யவும். ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
ஞான-சின் முத்திரை
15gnana sinmudra

பலன்-தியானத்திற்கு ஏற்றது. சிந்தனை தெளிவு அடையும். நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்படும். இரத்த அழுத்தம் சீர்படும். மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூலையின் செல்கள் புத்துணர்ச்சி பெறும். மூளையின் செயல் திறன் ஞாபக சக்தி அதிகரிக்கும். மனம் எளிதில் ஒரு நிலைப்படும்,தலைவலி தூக்கமின்மை, கவலை, கோபம், ஆகியவை நீங்கும்.

செய்முறை-இருகைகளையும் முழங்கால் மீது உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து கட்டைவிரல் ஆட்காட்டி விரல் நுனியைத் தொட்டவாறு லேசான அழுத்தம் தரவேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சமான-துடிப்பு முத்திரை
16thudippu1-2 mudra

பலன்-சிந்தனை தெளிவு அடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

முதல்நிலைசெய்முறை-ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பின் மோதிர விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

16.1thudippu1-2-3 mudra இரண்டாம் நிலைசெய்முறை-ஆள்காட்டி விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பின் மோதிர விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.
16.1thudippu1-2-3 mudra மூன்றாம் நிலைசெய்முறை-ஐந்து விரல்களின் நுனிகளும் ஒன்றாக சேர்ந்திருக்குமாறு வைக்கவும்.மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

 

தினமும் காலை, மாலை மூன்று நிலை களையும் 3/5 நிமிடம் செய்யவும்.

   
நாக முத்திரை
17naagamudra

பலன்-சிந்தனை தெளிவு அடையும். பிரச்சனைகள், சிக்கல்கள் தீர்வு காணும்.

செய்முறை-இடது உள்ளங்கை கீழ் வலது உள்ளங்கை பாதம் பார்த்தவண்ணம் வைத்து வலது கட்டை விரலால் இடது உள்ளங்கையை லேசாக அழுத்தவும். இடது கட்டை விரல் வலது கட்டை விரல் மீது இருக்க வேண்டும். இடதுகையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
பங்கஜ முத்திரை
18pangajamudra

பலன்-காய்ச்சல் குணமாகும். உடல் சூடு தணியும்..

செய்முறை-இரு கைகளின் பாதங்களை ஒன்று சேர்த்து குவித்து கட்டை மற்றும் சுண்டு விரல்கள் ஒன்றை ஒன்று தொடுமாறும் மற்ற விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் குவிந்த நிலையில் இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.

   
பிரம்மார முத்திரை 
19brammarahmudra

பலன்-அலர்ஜி உடல் தடிப்பு குணமாகும்.

செய்முறை-இடதுகை ஆட்காட்டி விரலை மடித்து இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு வைக்கவும். இடதுகை கட்டைவிரலால் நடுவிரலின் நகத்திற்குப் பக்கவாட்டில் தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைகளை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.

   
பிராண முத்திரை 
20piraanamudra

பலன்- கண் பார்வை கூர்மையாகும். மூளை செயல் திறன் அதிகரிக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  நரம்புத் தளர்ச்சியை போக்கும் கண் நோய்கள்  நீங்கும். அபான முத்திரையுடன் சேர்ந்து செய்தால் நீரழிவு நோய் குணமாகும்

செய்முறை-இடதுகை மோதிர விரல், சுண்டு விரல் நுனிகளால் கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற இரண்டு விரல்களும் நேராக இணைந்தபடி நீட்டி இருக்கட்டும். கைமாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
பிருத்வி முத்திரை
21piruthvimudra

பலன்-வயதானவர்களுக்கு மிகுந்த பயன். நகம் எழும்பு, முடி வளரும். உடல் நடுக்கம் குறையும்.

செய்முறை-இடதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைமாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
மகாசிரசு முத்திரை
22mahasirasumudra

பலன்-தலைவலி, தலை பாரம் குறையும். கண்களில் அயர்ச்சி குறையும்.

செய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடு விரல் ஆகிய மூன்றின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்து இடதுகை மோதிர விரலை மடித்து அதன் நுனி உள்ளங்கையை நடுவில் தொடுமாறு இருக்கவும் சுண்டு விரல் நேராக நீட்டி இருக்கவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

 
   
மாதங்கி முத்திரை 
23madangimudra

பலன்-சர்க்கரையின் அளவை இரத்தில் குறைக்கும்.

செய்முறை-இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல்மீது வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைக்கவும். இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

 
   
மிருகி-மான் முத்திரை
24mirukimudra

பலன்-பற்கள் உறுதியாகி பல்வலி குறையும்.

செய்முறை-இடதுகை நடுவிரல், மோதிரவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு இடதுகை கட்டை விரலால் இரண்டு விரல்களின் நுனியிலிருந்து முதல் ரேகை- கோட்டை லேசான அழுத்தம் கொடுத்துத் தொடவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
முதுகுவலி முத்திரை  
25muduguvalimudra

பலன்-முதுகு வலி நரம்புக் கோளாறுகள் குறையும்.

செய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு- சின் முத்திரை. மற்ற விரல்கள் நேராக சேர்ந்து இருக்கட்டும். வலதுகை சுண்டுவிரல் மற்றும் நடுவிரல் நுனிகளைக் கட்டை விரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
முஷ்டி முத்திரை  
26mustimudra 

பலன்-பயம் குறையும். தன்னம்பிக்கை அதிகமாகும்.

செய்முறை-இடதுகை விரல்களை மடக்கி உள்ளங் கையைத் தொடுமாறு வைக்கவும். கட்டை விரலை மோதிர விரலின் மேல் வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும், கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
மூட்டுவலி முத்திரை    
27mootuvalimudra 

பலன்-மூட்டு வலிகள் குணமாகும்..

செய்முறை-இடதுகை நடுவிரல் நுனியை இடதுகை கட்டை விரலைத் தொடுமாறு வைக்கவும். இடது கையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்கட்டும். வலதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
ருத்ர முத்திரை   
28rudramudra 

பலன்-வயிற்றின் கோளாறுகள் குணமாகும். குடலிறக்கம், கருப்பை கீழிறங்குதல், மூலநோய் ஆகியவைகள் கட்டுப்பாட்டினுள் வரும்.

செய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியை ஒன்று சேர்த்து தொடுமாறு வைக்கவும். இடது கையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்..

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

 
   
லிங்க முத்திரை
29lingamudra  பலன்-தும்மல், சளி, இருமல், மூக்கடைப்பு சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஜலதோஷம் மற்றும் சுவாச பாதிப்புக்களுக்கான எதிர்ப்புச் சக்தியையும் வெப்ப நிலை மாற்றத்தை எதிர்கொளவதற்காண சக்தியையும் அளிக்கும், நுரையீரலுக்கு வலிமை கொடுக்கும். உடலின் வெப்பத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்பை எரித்துவிடும்.

செய்முறை-இருகைகளையும் கோர்த்து இடதுகைப் பெரு விரல் மீது வலது கைப் பெருவிரல் இருக்குமாறு வைத்து இடதுகைப் பெருவிரலை நேராக நிமிர்த்தி இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
வருண-பூதி முத்திரை 
30varunamudra

பலன்-உடல் சூடு குறையும். தாகம் தணியும். தோல் வறட்சி மறையும். முகப்பருக்கள் வராமல் தடுக்கும்

செய்முறை-இடதுகை கட்டை விரல் நுனியை சுண்டு விரல் நுனியோடு இணைக்கவும். இடதுகையின் மற்ற விரல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவாறு நேராக நீட்டியிருக்கட்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
வாயு முத்திரை  
31vayumudra 

பலன்-வாயு தொந்தரவு நீங்கும், வயிற்றுக் கோளாறுகள் குறையும்.

செய்முறை-இடதுகை ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலின் அடிப் பகுதியில் வைக்கவும். இடதுகையின் மற்ற விரல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவாறு நேராக நீட்டியிருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
வீட்ராக் முத்திரை
32vetrakmudra

பலன்-தியானம் செய்யப் பயன்படும். மன அமைதி ஏற்படும்..

செய்முறை-இடதுகை விரல்கள் ஒன்று சேர்ந்து பாதம் மேல் நோக்கியிருக்குமாறு வயிற்றின் அருகில் வைக்கவும். வலதுகை விரல்கள் ஒன்று சேர்ந்து பாதம் மேல் நோக்கியிருக்குமாறு இடதுகை பாதத்தின்மேல் வைக்கவும். இரு கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

 
   
ஹாக்கினி முத்திரை     
33hakginimudra

பலன்-மன அமைதி ஏற்பட்டு நினைவாற்றல் அதிகமாகும்..

செய்முறை-இடதுகை வலதுகை விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் நேராக நீட்டி அவைகளின் நுனிகளை ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கவேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

 

   
அஞ்சலி முத்திரை     
 

பலன்-இரு கைவிரல்களும் இணைவதால் வலப்பக்க மூளையும் இடபக்க மூளையும் ஒருங்கிணைந்து செயல்படும்.. சிந்தனை கற்பனா சக்தி, உடலின் செயல் திறன் ஆகியவை பன்மடங்கு அதிகரிக்கும்.

செய்முறை-இறைவனை இரு கரம் குப்பி வணங்குகின்றோமோ அப்படி கூப்பியக் கரங்களே அஞ்சலி முத்திரையாகும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

    ***முடிவுற்றது***

புதன்கிழமை, 20 February 2013 09:28

ஆரோக்கிய உணவு!

Written by

 ஒம் சிவாயநமக!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

0=0=0=0=0=0

 

ஆரோக்ய உணவு!

 

நாம் இந்த உலகில் பிறந்துவிட்டோம். வாழ்வதற்கு ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இந்த வாழ்க்கையை நாம் வாழவேண்டும் வாழ்ந்துதானாக வேண்டும். வாழ வேண்டும் என்றால் ஆரோக்கியமாக வாழவேண்டும். ஆனந்தத்துடன் வாழ வேண்டும். வாழ் நாளை பரிபூரணமாக அனுபவிக்க வேண்டும்.

வாழவேண்டும் என்றதும் ஆகா! என்ன ஆசை எத்தனை ஆசைகள் மனதிற்கு. சரி  எந்தக் காரிய காரணங்களாக இருந்தாலும் ஓர் செயல் திட்டம் இருந்தால்தான் வாழ்வில் வெற்றி என்ற மகிழ்வு வரும். அப்படியே வாழ வேண்டும் என்றால் நம் வாழ்க்கைக்கு என்ன திட்டம் வைத்திருக்கின்றோம்? யார் எடுத்த கைப்பிள்ளைப்போல் எந்த வித கட்டுப்பாடும் திட்டமிட்ட செயல்களும் இல்லாமல் குழந்தைமுதல் இறுதி நாள் வரை செயல் படுகின்றோம்.

நினைத்ததைக் கிடைத்ததை அருந்துகிறோம். உணவை உட்கொள்கின்றோம். இதில் எங்கு ஆரோக்கியம் வருகின்றது. எப்படி ஆனந்தஆரோக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் சீர் கெட்டபின் அங்கும் இங்கும் அதற்காக அலைகின்றோம். ஆரோக்கியம் என்றதும் இரண்டு நினைவிற்கு வரவேண்டும் 1. உடல் ஆரோக்கியம், 2. உணவு ஆரோக்கியம். உடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கிய உணவு அவசியமானது. இரண்டும் ஒன்றுடன் ஒன்றாய் சேர்ந்தது. எனவே பொதுவாக ஆரோக்கியம் என்றால் முதலில் கவனம் செலுத்தவேண்டியது உணவு ஆரோக்கியம்தான். அது சீரடைந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்க மிகவும் வாய்ப்பு உள்ளது.

வாழ்நாளை முழுக்க முழுக்க அனுபவிக்க கடைசி நிமிடம்வரை ஆனந்தமாக இருக்க நல்ல ஆரோக்கிய உடல் வேண்டும். அதற்கென திட்டங்கள் இட்டு செயல்படவேண்டும். வாழ்வு வளம்பெற உடல், மனது ஆரோக்கியமாய் இருக்க சில நல்ல பழக்க வழக்கங்களை உணவு முறையில் நடைமுறைப் படுத்தி பழக வேண்டும். மனிதன் பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவன். பழக்கத்தினால் எதையும் சாதிக்க முடியும். அவனால் எதையும் விரைவாக பழகவும் முடியும்.

இனி நீ புகைபிடித்தால், மது அருந்தினால், லாகிரிப்பொருள்களை உபயோகித்தால் உன் வாழ்நாளை கணக்கிட்டுக்கொள் என ஒரு மருத்துவர் சொல்லியபிறகு பழக முயற்சிப்பதற்கு வருமுன் காப்பாய் உன் ஆரோக்கியத்தை நல் சீரிய திட்டங்களினால், செயல்பாடுகளினால்.

சரி என்ன செய்ய வேண்டும்? நீங்கள் மனிதர்கள் போலச் சாப்பிடாமல் விலங்குகள் போல் உணவு உண்பதே சிறப்பு. எப்படி என்றால் மனிதன் தன் ருசிக்காக மேலும் மேலும் என விரும்பி சாப்பிடுகின்றான். விலங்குகள் தன் பசிக்காக மட்டுமே சாப்பிடுகின்றன. பசி அடங்கியதும் அது உண்பதை நிறுத்திவிடும். இதுவே சிறந்த பழக்கம்.                                                                                                                                                                           

‘எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்’ என ஒரு பழமொழி உண்டு. இதை பல இடங்களில் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்தாலும் இதன் முதண்மை வயிற்றைப் பேணிக் காக்க வேண்டும் என்பதுதான். உடலின் உறுப்புக்களுக்கு தேவையான சத்துக்களை சக்கரைப் பொருளாக மாற்றி இரத்தத்தில் கலக்கச் செய்வது இரப்பை என்ற வயிறே ஆகும். இது தன் செயல் திறனை இழந்தால் சத்துக்கள் உடலில் கலப்பது குறையும். பல உறுப்புகளின் செயலாக்கம் குறைந்துவிடும். இரப்பையின் சக்தி குறைந்தால் அசீரணம் ஏற்படும். உணவை நாம் முன்பு அருந்திய அளவிற்கு சாப்பிடமுடியாது. நன்றாயுள்ளது என்றோ கிடைத்தது என்றோ எதையும் சாப்பிட சாப்பிட வீணான கோளாறுகள் ஏற்படும். அசீரணத்தால் வந்தி பேதி ஏற்படலாம். இன்னும் பல குறைகள் உண்டாகும். மேலும் ஒரு இயந்திரம் கூட ஓர் காலஅளவு தான் இயங்குகிறது. பின் அதன் திறன் குறைந்துவிடும். வாழ்நாள் பூராவும் இயங்க வேண்டிய இந்த இரப்பையை பேணிக் காக்க வேண்டியது முதல் திட்டமாக இருக்க வேண்டும். 

எனக்கு இருக்கும் பிரச்சனையில் இதற்கு எப்படி முக்கியம் கொடுப்பது என்று சரியான நேரத்தில் உண்பதில்லை, கிடைத்த எதையும் உண்பது, காலம் தாழ்த்தி உண்பது, மிக அதிகமாக உண்பது, உண்ணாமலே இருப்பது ஆகியவை தவறான கருத்தாகும். நீங்கள் எதற்காக உழைகின்றீர்கள்?. நீங்கள் உண்ண, உங்களை நம்பி உள்ளவர்களைப் பாதுகாக்க. அன்பனே, சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்டமுடியும் என கேள்விப் பட்டிருக்கின்றீர்களா. நீங்கள் நலமுடன் இருந்தால்தான் உங்களை நம்பிய உறவுகளுக்கு உங்கள் உதவி கிடைக்கும். நீங்கள் ஆரோக்கியம் கெட்டிருந்தால் உங்களுக்கு எப்படி உங்களை நம்பி உள்ளவர்களின் உதவி கிடைக்கும். நீங்களும் உங்களை நம்பியிருந்தவர்களும் மிகுந்த துயரத்திற்குள்ளாவீர். சற்றே நிதானத்துடன் ஒருமுறை சிந்தியுங்கள். தெளிவடையுங்கள்.

எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் உடல் நலத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். நம் உடலில் உள்ள ஜீவ அணுக்களின் நல்வாழ்வு நம் வாழ்வுடன் பின்னப்பட்டுள்ளது. அவைகள் நசிந்து விடாமல் பாதுகாப்பது அந்தந்த உடலின் உள்ளத்தின் கடமை.

உடலை ஆரோக்கியமாக வைக்க நாம் செய்ய வேண்டியது

சூரிய ஒளி- காலை சூரியஒளி படுமாறு சூர்ய வணக்கம் செய்யுங்கள். காற்று சூரிய ஒளியின் அனுக்கள் நம் உடம்பில் பல தேவையான இயற்கை மாற்றங்கள் செய்யும்.

நல்ல சுவாசம்- நல்ல சீரான மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் பிரணாயமம் செய்யுங்கள். குருஸ்ரீ பகோராயின் இனையதளம் இராஜயோகப் பகுதியில் பிரணாயாமம் முறைகள், மற்றும் ஆசனங்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. படித்துப் பார்த்து சந்தேகங்களை மின்னஞ்சலில் தீர்த்துக் கொள்ளவும். அல்லது அலை/ தொலை பேசியில் தொடர்பு கொள்ளவும்.

நீர்சத்து- உணவு அருந்தியபின் நீர் அருந்தவும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் நீர் பருகுங்கள்.

உடல் பயிற்சி- முடிந்த அளவு உங்களுக்குத் தெரிந்த சாதரண பயிற்சிகளைச் செய்யுங்கள். அதிக நாட்டம் உள்ளவர்களாக இருந்தால் குருஸ்ரீ பகோராயின் இனையதளம் இராஜயோகப் பகுதியில் உள்ள இருக்கைகள் பகுதியை பயன் படுத்துங்கள். இனைய தளத்திலுள்ள ஆரோக்கியமுத்திரைப் பகுதியையில் உங்களுக்கு உரியவற்றை தேர்தெடுத்து செய்து பழகவும். சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்க.

ஆரோக்கிய உணவு- உணவு என்ற உடன் சிலருக்கு சுவை நினைவிற்கு வரும். சுவைக்காக உணவருந்தாதீர். தேவைக்காக அருந்துங்கள். “அற்றல் அளவறிந்து உண்க, அஃதுடம்பு பெற்றான் நெடுதுய்குமாறு” என்பதற்கேற்ப அளவறிந்து தேவைக்கேற்ப தேவையானவைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அப்போது நோயும் மருந்தும் தேவையில்லை. கீழே உள்ள அட்டவணையில் உள்ள கலோரி கணக்கில் ஒர் நாளைக்கு என்ன தேவை எவ்வளவு தேவை என்பதைக் கணக்கிட்டு தெரிந்தெடுத்து உட்கொள்ளப் பழகுங்கள். நாளடைவில் பழகிவிடும். சராசரியாக ஒரு குழைந்தைக்கு ஒருநாளைக்கு 2000 கலோரிகளும், இளைஞர்களுக்கு 3500 கலோரிகளும் முழுவளர்ச்சி அடைந்தவர்களுக்கு 3000 கலோரிகளும் தேவைப்படும்.

ஆழ்ந்த உறக்கம்- நல்ல ஆரோக்கிய உடல் உள்ளவர்களுக்கு, உழைப்பவர்களுக்கு நல்ல உறக்கம் இயற்கையாகவே கிடைக்கும். மற்றவர்கள் படுத்த உடன் உறங்க சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

சராசரியான எடை- ஒவ்வொருவரும் தங்கள் உயரத்திற்கு வயதிற்கு ஏற்ப இவ்வளவு எடை இருக்கவேண்டும் என கணக்கிட்டுள்ளார்கள். அந்த அட்டவனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டு உங்களின் எடையை நீங்கள் பராமரிக்க வேண்டும். உங்களின் குழைந்தகள் சராசரியாக நன்றக வளர்கிறார்களா என்பதை நீங்களே உயரத்தையும் எடையும் கொண்டு கணக்கிட்டு தெரிந்து கொண்டு தகுந்த ஆலோசனையுடன் நடவடிக்கை எடுக்கலாம்.

நாம் எல்லோரும் நம் உடலுக்கு என முன்னெச்சரிக்கையாக எதுவும் செய்வதில்லை. உடலின் பாகங்கள் தாக்கப்பட்டு செயல் குறையும் போதுதான் அதப்பற்றி கவலைப்பட்டு கவனம் செலுத்துகின்றோம். சிலசமயம் அது காலம் தாழ்த்திய செயாலகிவிடுகின்றது. இந்த புனித உடல் உலக இன்பத்தை ஆரோக்கியமாக அனுபவிப்பதற்காக கிடைத்தது. அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் அந்த எண்ணங்கள்தான் நமக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தும். அதற்கு கட்டுப்படும்.அன்புடன் -குருஸ்ரீ பகோரா  

சராசரியான உயரம் (செ.மீ) மற்றும் எடை (கி.கி) ( சிறுவர்- சிறுமியர்)

வயது

உயரம் சிறுமியர்

உயரம் சிறுவர்

எடை சிறுமியர்

எடை சிறுவர்

பிறந்த போது

50

50

3.0

3.0

3மாதம்வரை

55

56

4.0

4.5

4 – 6 மாதம்

61

62.5

6.5

6.5

7 – 9 மாதம்

64.5

65

6.0

7.0

10 – 12 மாதம்

66.5

69.5

6.5

7.5

1 வருடம்

72.5

74.0

8.0

8.5

2 வருடம்

80

81.5

9.5

10.0

3 வருடம்

87

89

11

12

4 வருடம்

94.5

96

13

13.5

5 வருடம்

101.5

102

14.5

15

6 வருடம்

107.5

108.5

16

16.5

7 வருடம்

113

114

17.5

18

8 வருடம்

118

119.5

19.5

19.5

9 வருடம்

123

123.5

21.5

21.5

10 வருடம்

128.5

128.5

23.5

23.5

11 வருடம்

133.5

133.5

26.5

26

12 வருடம்

139.5

138.5

30

28.5

13 வருடம்

144

144.5

33.5

32

14 வருடம்

147.5

150

37

35.5

15 வருடம்

149.5

155.5

39

39.5

16 வருடம்

151

159.5

41

43

17 வருடம்

151.5

163

42.5

47.5

18 வருடம்

151.5

163.5

42.5

48

19 வருடம்

151.5

163.5

42.5

48

20 வருடம்

151.5

164

43.5

49

21 வருடம்

153

164

44

49.5

 

இந்திய ஆண்கள் , பெண்களின் சராசரியான உயரம் மற்றும் எடை 

உயரம்- செ.மீ

ஆண் எடை- கி.கி

பெண் எடை- கி.கி

152

-

50-54

154

-

51-55

157

56-60

53-56

159

57-61

54-58

162

59-63

56-60

165

61-65

58-61

167

62-67

59-64

170

64-68

61-65

172

66-71

62-67

175

68-73

64-69

177

69-74

66-70

180

71-76

67-72

182

73-78

69-74

185

75-81

-

187

77-84

-

 

கலோரி அட்டவனை

காலை உணவு

அளவு

கலோரி

பானங்கள்

அளவு

கலோரி

முட்டை வேகவைத்தது

1

80

கருப்பு டீ சக்கரை இல்லை

1 கப்

10

முட்டை வருத்தது

1

110

கருப்பு காபி சக்கரைஇல்லை

1 கப்

10

முட்டை ஆம்லெட்

1

120

டீ பால் சக்கரை

1 கப்

45

பிரட் வெண்ணெய்

1

90

காபி பால் சக்கரை

1 கப்

45

சப்பாத்தி

1

60

பால் சக்கரை இல்லை

1 கப்

60

பூரி

1

75

பால் சக்கரை

1 கப்

75

பரோட்டா

1

150

ஹார்லிக்ஸ் பால் சக்கரை

1 கப்

120

சப்ஜி

1 கப்

150

பழரசம்

1 கப்

120

இட்லி

1-50கி

85

கரிமிலம் கலந்த பானம்

200 மி

90

சாதா தோசை

1-75கி

120

பீர்

200 மி

200

மசாலா தோசை

1-150கி

250

சோடா

200 மி

10

சாம்பார்

1 கப்

150

ஆல்கஹால்

1பெக்

75

உப்புமா

1-100கி

130

பெப்ஸி/ மிரண்டா

200 மி

80

 

 

உணவு வகைகள்

அளவு

கலோரி

பலவகை

அளவு

கலோரி

சாதம் வேகவைத்தது

100 கி

100

ஜாம்

ஸ்பூன்

30

சாதம் வறுத்தது

100 கி

150

வெண்ணெய்

ஸ்பூன்

50

நன்

1

150

நெய்

ஸ்பூன்

50

பருப்பு

1 கப்

150

சக்கரை

ஸ்பூன்

30

தயிர்

1 கப்

100

பிஸ்கட்

1

30

காய்கறிகள்

1 கப்

150

வறுத்த கொட்டைகள்

1 கப்

300

மாமிசம்

100 கி

230

ஐஸ்கிரீம்

1 கப்

200

சலாட்

1 கப்

100

மில்க் ஷேக்

1 கப்

200

அப்பளம்

1

45

வேபர்

1 பாக்

120

கட்லட்

1

75

சமோஸா

65 கி

207

ஊறுகாய்

1

30

பேல்/பாணி பூரி

ப்ளேட்

150

சூப் காய்கறி

1 கப்

75

பாயாசம்

150 கி

330

சூப் மாமிசம்

1 கப்

150

பழங்கள்

1

75

மீன்

100 கி

70

மைசூர்பா

60 கி

400

கோழி

100 கி

100

அல்வா

100 கி

320

முட்டை

1

80

எண்ணெய்

10 கி

90

 

சத்துள்ள உணவு- ஒவ்வொன்றிலிருந்தும் ஏதாவது ஒன்றை தினமும் உபயோகிக்கவும்

பழவகைகள்

அண்ணாசி, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, தர்பூசணி, திராட்சை, பப்பாளி, மாம்பழம், மாதுளை, வாழை,

காய்கறிகள்

அவரை, இஞ்சி, உருளைக்கிழங்கு, எழுமிச்சை, கத்தரி, காரட்,, காலிப்ளவர், டர்னிப், தக்காளி, தேங்காய், பீட்ரூட் பீர்க்கன், புடலங்காய், பூசனி, முருங்கை, முட்டைகோஸ், வெங்காயம், வெண்டை, வெள்ளரி, வெள்ளைப்பூண்டு,

பருப்பு,தானியம்

உளுந்து, கடலை, கொட்டைகள், கொள்ளு, கோதுமை, சிகப்பு அரிசி, சுண்டல், தட்டபயிர், துவரை, பாசிப்பருப்பு, பட்டாணி, பீன்ஸ், மொச்சை,

மாமிசம்

கோழி, மீன் வெள்ளை மாமிசம்,

பால் பொருள்

தயிர், பாலடைக்கட்டி, வெண்ணெய் எடுக்கப்பட்ட பால்

பல வகை

உலர்ந்த கொட்டைகள், தாவர எண்ணெய்வகைகள், தேன்,

திரவ வகை

காய்கறி சூப், தண்ணீர், பழங்கள், பழரசங்கள், லஸி.

 

குறைந்த கொழுப்பு, நிறைய நார்சத்து உள்ள மாதிரி உணவு (இந்தியா) 

நேரம்

உணவுவகை

கொழுப்பு-கலோரி

நார்சத்து

மற்றவை

அதி காலை

1கப் டீ பால் சர்க்கரை

1

45

0

காலை உணவு

2சப்பாத்தி,

1கப் காய்கறிகள்,

1கப் பால்

0

0

1

120

100

60

6

8

0

மதிய உணவு

1 கப் வேகவைத்த அரிசி

1 கப் குழம்பு

1 கப் காய்கறிகள்

1 கப் சாலெட்

1 பழம்

0

0

0

0

0

120

150

100

100

75

6

10

8

8

8

மாலை

1 கப் டீ, பால் சர்க்கரை

1

45

0

இரவு

2 சப்பாத்தி

1 கப் பருப்பு

1 கப் மீன் மாமிசம்

1 கப் சாலெட்

1 கப் தயிர்

2 ஸ்பூன் எண்ணெய் சமையலுக்கு

0

0

10

0

8

10

120

150

100

100

100

90

6

10

0

8

0

0

மொத்தம்

30

1575

78

 

 $$$$$

 

புதன்கிழமை, 20 February 2013 09:26

அன்பின் ஆழம்!

Written by

ஓம் நமசிவய நமக!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
$$$$$

அன்பின் ஆழம்!

 

அன்பு மனதில் தோன்றும் மன வெழுச்சியாகும். அது ஒரு தீவிர உணர்ச்ச்சி, மனக் கிளர்ச்சியாகும், பல நிலைகளைக் கொண்டது. மற்ற மனங்களை உருக்கும் தன்மை கொண்டது. வாழ்வுப் பாதையில் வாழ்க்கையை வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது அன்பே. உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அது பொதுவானது, பொருமையான அன்பில் அமைதியிருக்கும். அமைதியான அன்பில் ஆழமிருக்கும். ஆழமான அன்பில் பண்புகள் குடியிருக்கும். அடித்து அடக்கி வெல்வதைவிட அன்பினால் சுலபமாக வெற்றி கொள்ளலாம். துப்பாக்கி முனைகள் சாதிக்காததை அன்பின் வழி கண்கள் சாதிக்கும். இந்த அதிசய அன்பின் ஆழத்தை ஒவ்வொரு உயிரும் உணர வேண்டும். உலகில் உள்ள பழமையான ஆனால் அதி நவீன சக்திகளைக் கொண்ட கருவி அன்பு ஒன்றேயாம். உலக உயிர்களின் இதயங்களை மனதை நாம் அன்பால் வெல்லலாம்.

நான், என்னுடையது எனும் தன்னுணர்ச்சியால், சுயநலத்தால் பெறும் வெற்றிகள் எல்லாம் வெற்றியாகாது. அப்படி சுய நலத்தால் வென்றாலும் அது உண்மையான வெற்றியாகாது. ஆனால் அன்பினால் தோல்வி ஏற்பட்டிருந்தாலும் அது தற்காலிகமானதுதான், மீண்டும் அதில் தானாக வெற்றி கிட்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து நம் உள்ளார்ந்த மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

மிகவும் துன்பங்களைக் கொண்ட நேரங்களில் யாரும் அன்பை பற்றி நினைக்க முடியாது, ஆனாலும் நாம் இவ்வுலகில் வாழ்வுப்பயணம் எனும் நிகழ்வை தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கு அன்பு மிக உதவியாய் இருக்கும். ஓன்று நீங்கள் கொண்ட அன்பு. மற்றது மற்றவர்கள் உங்கள்மேல் கொண்ட அன்பாகும். எனவே துன்பங்களிலிருந்து விடுபட வன்முறைகளை கையில் எடுக்காதீர்கள். அப்படி எடுத்துக் கொண்டு அதிலிருந்து வெளிவர மறுக்கும் அன்பர்களை விட்டு விடுங்கள். அவரின் முடிவு வேறு விதமாய்த்தான் இருக்கும்.

எந்நிலையிலும் அமைதியான அன்பு அளவிற்கதிகமான சக்தியுடையது. உள்ளார்ந்த மன நிம்மதியை உறுதியைத் தரும். நாம் முழு மன நிம்மதி மற்றும் அமைதியான அன்புடன் இருக்கும்போது நம்மைச்சுற்றி ஓர் அன்பு வட்டத்தை ஏற்படுத்துகின்றோம். அது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு பயனை அளிக்கக் கூடியது. நம் நண்பர்களோ, உறவினர்களோ துன்பத்தில் வாடும் போது அதை நாம் நினைத்து அதிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும் என உண்மையான அன்பினால் அன்பு கொண்டு நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் நினைக்கும்போது அந்த உணர்வுகள் மின் காந்த அலைகளாக மாறி காற்றில் பரவி பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சென்றடைந்து நலம் விளைவிக்கும். 

 

இதை நாம் உணர்ந்து செயல் பட்டால் நலம். இது போன்ற அன்பை ஒவ்வொருவரும் மனதில் கொள்வதற்கும் மற்றவர் துன்பம் போக்கும் வல்லமையை அடையவும் வாழ்வில் அன்பு மிக கொண்டு மனதளவில் மனித நேயம் கொண்டு நம்பிக்கையுடன் நம் ஆழ் மனத்தில் இருக்கும் அன்பை அடிக்கடி தூய்மை கொள்ளச்செய்ய வேண்டும். நாம் அமைதியாக இருந்து நம்பிக்கையுடன் தியானம் செய்தால் அந்த நிலை துன்பத்தில் துயரப்படும் ஒருவருக்கு கண்டிப்பாக உதவி புரியும். அந்த நிலைக்கு எல்லோரும் வாருங்கள். அன்பு கொண்டவராகுங்கள். 

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். உலகமே துன்ப துயரத்தில் மூழ்கியிருக்கும்போது நான் என்ன செய்ய முடியும் என நினையாது, என்னாலும் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கை முதலில் கொள்ள வேண்டும். 

ஒரு சிட்டிகை அளவு மருந்து பல கிலோ எடையுள்ள ஒரு மானுடத்தினுள் மாற்றம் செய்யும் போது கோடிக்கணக்கான உயிர்களைக் கொண்ட இவ்வுலகில் ஒரு துரும்பாக நீங்களும் உங்களால் முடிந்ததை இவ்வுலகுக்கு செய்யலாம் வருங்கள் அன்புகொண்டு.

ஒரு கூட்டம் கருத்து வேறுபாடினால் இரண்டாகப் பிரிந்து விரோத மனப்பான்மை கொண்டிருந்தால் நீங்கள் முதலிம் இரு பகுதியினரிடமும் அன்புடன் போசுங்கள். அவர்களிடையே நண்பர்கள், உறவினர்கள், நேசங்கள் என பலதரப்பட்டவர்களும் பிரிந்திருக்கலாம் உண்மை காரணம் தெளிவாகப் புரியாமல், அதைப் புரியவைத்து அவர்களின் பழைய தொடர்புகளை நல்லவைகளை நீங்கள் அறிந்தவற்றை எடுத்துக் கூறி பாச பிணைப்புக்களைத் தோற்றுவிக்க முயற்சி பண்ணுங்கள். பழைய உறவுகளை மீண்டும் புதுப்பியுங்கள். அன்பு கொண்டு அன்பை மலரச் செய்யுங்கள். மலரச்செய்த அன்பு பழைய நினைவுகளால் புதுப் பொலிவு அடைந்து வேற்றுமைகளை வலுவிளக்கச்செய்யும். அது ஆரம்பமானால் நீங்கள் அன்பில் வெற்றி கண்டுள்ளீர்கள் என்பதாகும். அமைதியுடன் அன்பை பரப்புங்கள், வேற்றுமைகள் முற்றிலும் அகன்று மீண்டும் ஒற்றுமை தோன்றி அன்பு பரிமளிக்கும்.

இது போன்றே மதக் கருத்து வேறுபாடுகளையும் அன்பினால் களையலாம். எம்மதமாயினும் அவரவர் தம் மழலைச் செல்வங்களுக்கு உபதேசம் செய்யும்போது தங்களின் பழக்க வழக்கங்களைச் சொல்லிய பின் அருகில் அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தினரின் பழக்க வழக்கங்களையும் போதிக்க வேண்டும். இது அவர்களிடையே ஓர் நேசத்தை தோற்றுவிக்கும். ஒரு இன, மதத்துச் சிறுவன் வேறு மதச் சிறுவர்களுடன் நட்பாக இருப்பதை நாம் கண்டிருக்கின்றோம். இந்த நட்பு வளர்ந்து இறுதிவரை கூடி நீடிப்பதுண்டு. இந்த நட்பானது இனக் கருத்து வேறுபாடுகளினால் மாற்றம் அடையாது. கலவரங்கள் ஏற்பட்டாலும் மனித நேயத்துடன் ஓர் அன்புடன் மனித உயிர்களின் மதிப்பை உணர்ந்து நட்புடன் செயல்படும் பண்பாக மலரும். நல்ல நம்பிக்கையும் நற்பண்புகளும் தோன்றும். எந்த இனத்தையும் தாழ்வாக எண்ணாது. ஜாதி, இன பேதம் கொள்ளாது. எல்லா இன கோட்பாடுகளும் அன்பின் எல்லைகளுக்கு உட்பட்டவைகள்தான்.

எல்லா இனத்திலும் அன்பு இல்லாமல் இல்லை. அன்பே உயிர்கள் வாழ ஒருவருக்கொருவர் உதவி செய்ய பயனுள்ளதாகும். ஓர் சுனாமி ஏற்படும்பொழுது அங்கே ஜாதி, இனம், மதம் ஏன் ஆண், பெண் என்றுகூடப் பார்க்கப்படுவதில்லை. அல்லலுற்று துன்பத்தில் வாடும் உயிர்களுக்கு அன்பு என்ற ஒன்றால்தான் ஆறுதல் தர முடியும். நாம் எல்லோருக்கும் பொதுவாக படைக்கப்பட்ட இவ்வுலகில் நம்மிடம் பொதுவாக இருப்பதும் அன்பேயாகும்.

 

ஓர் நாட்டில், தேசத்தில் தோன்றிய உணவு வகைகளை மற்ற நாட்டினர் சுவைத்து மகிழ்கின்றனர். உலகின் ஓர் பகுதியில் உள்ள இயற்கையைக்காண மற்றவர்கள் உல்லாசமாக பயணிக்கின்றனர், ஒவ்வொரு பகுதியில் தோன்றும் இசை உலக மக்களை கவர்ந்து இழுக்கின்றது அனைவரும் ஆனந்தத்தில் மூழ்குகின்றனர். ஒர் பகுதியின் கலாச்சரங்கள் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர்கள் அதை மிகவும் விரும்பி இரசனை கொள்கின்றனர்.

இப்படி உலகின் ஒவ்வொரு இடத்தும் உள்ள சிறந்த உபயோகமான ஒன்று உலகின் அடுத்த பக்கத்திற்கு, எல்லைக்குச் செல்லும்போது ஏன் மனித உயிர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றான அனைவருக்கும் பொதுவான ஒன்று ஏன் செல்லாது, மருகி விரோதங்கள் மாற்று எண்ணங்கள் தோன்றி பிடிவாத குணங்களால் அன்பை மறந்து செயல்படும் விழிப்புணர்வு இல்லா நிலையில் நொண்டியடித்துக் கொண்டிருப்பதை காண்கிறோம். சில எண்ணங்கள் விளைவால் உள அன்பை விடுத்து துப்பாக்கி முனையில் அன்பை தேடும் பிடிவாத முட்டாள் தனம் தெரிகின்றது. அன்பைவிட சிறந்த துப்பாக்கி இல்லை என அவர்கள் உணரும் காலம் உங்கள் உணர்வில் தோன்றட்டும்.

 எத்தனை எத்தனை நிகழ்வுகள். இடத்துக்கு இடம், தேசத்திற்கு தேசம் தினசரி நிகழ்கின்றது.. நேசம் கொண்டவர்களே நினைப்பீர்கள் இதனை. செயல் காணுங்கள், எங்கும் மனித நேய அன்பு மலர ஆவன செய்ய நினைவு கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மனதில் முதலில் விதை விதைத்து உரமிடுங்கள். ஒரு பூ மலர்ந்து பல பூக்கள் மலர வழிவகுக்கட்டும். அன்பு மலர்ந்து பூந்தோட்டமாகட்டும் இந்த அன்பு பூமி.

நாம் ஒவ்வொருவரும் தற்பெருமை கொள்வதில் நிகரில்லாமல் இருக்கின்றோம். அதனால் என்ன பயன். இரக்க உணர்வு இருந்தாலும் அதை வெளிப்படுத்த தயங்குகின்றோம். நமக்கு ஏன் இந்த வம்பு என விலகிச் செல்கின்றோம். நான் மிகுந்த இரக்ககுணமுடையவன். அதனால் உயிர்களிடம் அன்புடன் இருப்பேன் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்று தற்பெருமை கொள்ளுங்கள். நீங்கள் மனித நேயம் கொண்டவராக மாறுவீர்கள். ஒரு மனிதனுக்கு இரக்க உணர்ச்சியுடன் கூடிய அன்பு இயற்கையிலே இருக்கின்றது, அதை மலர விடுங்கள். மணம் வீசட்டும், அதன் பயனை யாவரும் நுகருட்டும், அதுவே உங்களுக்குப் பெருமை. அந்த தற்பெருமை கொள்ளுங்கள்.

 

உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள், சுற்றத்தினர் அனைவரையும் இதுபோன்றே தற்பெருமை கொள்ள வையுங்கள். அங்கு ஓர் புதிய உலகம் உருவாகட்டும். அன்புமழை பொழியட்டும். தளிர்கள் வளரட்டும், உலக உயிர்கள் பயன் பெறட்டும். எல்லா உலக உயிர்களும் உணர்ச்சிமிக்க வாழ்வுப்பாதையின் ஆனந்த வாழ்விற்கு திருப்ப முயற்சிக்க வேண்டும்

 நீங்கள் ஒருநாளில் சந்திக்கும் நண்பர்கள், உறவினர்கள், மற்றோர் ஆகிய முகங்களில் மகிழ்ச்சியின் சாயலை எத்தனை முகங்களில் பார்க்க முடிந்தது என்றால் நீங்கள் யோசனை செய்து தேட வேண்டியிருக்கும். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் முகங்கள் ஒரு சோர்வு, களைப்பு, துக்கம், வெறுப்பு, தூக்கமின்மை முதலிய செய்திகளை சொல்லுவதாக இருக்கும், சந்தோஷ முகங்களைக் காண்பது என்பது அரிதாகிக் கொண்டிருக்கின்றது,

ஓர் ஆய்வில் குழந்தையாயிருக்கும்போது பல நூறு தடவை சிரிக்கும் அது இளமையில் பத்தாகி பருவத்தில் ஒன்றுகூட இல்லாமல் இருப்பதன் காரணம் என்னவென்றால் மனதில் தேவையற்றவைகளை நிரப்பி இறுத்திக் கொண்டு தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதால் தான் அந்நிலை.

 சிலர் சிரிக்கவேண்டிய இடத்தில்கூட சிரிப்பதில்லை. மனம் இறுகிப்போன நிலையில் எப்படி சிரிப்புத் தோன்றும். சிரித்த முகமே அழகு, அகத்தின் அழகு முதத்தில், அகம் இருளின்றி வெளிச்சமுடன், சிந்தனைகளால் குழப்பங்களின்றி தெளிவுடன் இருந்தால் அது முகத்தில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு புன்னகையும் நரம்புகளை செயல் படுத்தி நல்ல சுறு சுறுப்பான இயக்கத்தைக் கொடுக்கும். புன்னகை ஓர் தொற்றாகும். ஒருவரின் மலர்ந்த முகத்தைப் பார்த்த ஒருவருக்கு அது காரணமில்லாமல் தொற்றி மலரவைக்கும், காரணம் கண்டால் மேலும் மலரும். அது பலருக்கும் நன்மை பயக்கும். ஒரு முகம் மலர்ந்து மற்றமுகத்தை அது பற்றினால் முதலில் மலர்ந்திருந்த முகத்தையுடையவருக்கு என்ன தீமை விளையப் போகின்றது, நன்மையைத்தவிர வேறொன்றுமில்லை என்பதாகும்.

தீயவைகளைப்பற்றி நினையாது நல்ல செயல்களை சிந்தித்து மனம் எண்ணினால் அது அமைதி பெற்று குழப்பங்கள் குறைந்து முகத்தில் தெளிவை காட்டி மலரவைக்கும், இப்படியிருக்கும் முகத்தைப் பார்த்துதான் நாம் “இன்று நீ மிகவும் சந்தோஷமாக இருக்கின்றாய் போலிருக்கின்றது” என பழகிய ஒருவரை கேட்கமுடியும். இதுவே முகமலர்ச்சிக்கு ஆதாரம், அங்கு அன்பு மலரும். ஒளிரும். முகம் மிளிரும்.

 உங்களது வாழ்க்கையில் நீங்கள் அன்புடன் ஆனந்தத்துடன் வாழ வாழ்ந்திருக்க அன்பு கொள்ளுங்கள். அன்பு காட்டுங்கள். அன்பே பிரதானம். அன்பே உலகம். உயிர்கள் ஒவ்வொன்றும் ஒரு சில பல வருடங்கள் வாழலாம் அதற்கு பின் வாழ்வு முடிவுபெற்று விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இதுகாறும் நாம் அடைந்தவைகளைப் பற்றியும் அடைய முடியாதவைகளைப் பற்றியும் நினைந்து மிக மிக வருத்தம் அடைகின்றோம். அந்த எண்ணங்களே நம்மை துயரத்தில் ஆழ்த்தும். மன அழுத்தம் ஏற்பட்டு துன்புறுவதைவிட்டு அதனின்று வெளிவர வேண்டிய விழிப்புணர்வு நமக்குத் தேவை. அதற்கு மன அமைதி தேவை. அன்பு உள்ளம் தேவை. நம் உள்ளத்தில் அந்த அன்பிருந்தால் நம்மைச்சுற்றி அதைப் படரவிடமுடியும்.

நீங்கள் எதுவாக நினைகின்றீர்களோ அதுவாகவே ஆகின்றீர்கள். நீங்களே அது. நீங்களே அன்பு என நினையுங்கள். நீங்கள் அதுவாகவே ஆகுவீர்கள்.

சந்தோஷங்களை செயல்களால் அனுபவத்தால் உணர்ந்தால் உங்கள் மூளை விரிவடைந்து சிறப்பான செயல்பாடுகளையுடையது ஆகும்.துன்பங்கள் துயரங்களை உணர்ந்தால் அதனால் மூளையின் செயல்பாடுகள் தாக்கம் குறைந்து செயல்திறன் குறைந்துவிடும்.வாழ்வு முழுவதும் துயரங்கள் இருக்கும் அதை நாம் தீர்க்க, குறைத்துவிட, கொன்றுவிட முயலவேண்டும். அதை விடுத்து அதையே நினைவு கொண்டு அதனுள் மூழ்கி விடக்கூடாது.அன்பினால் வலி ஏற்பட்டாலும் அது ஒரு சுகமான ஆழமான நல் அனுபவத்தை நம்முள் ஏற்படுத்தும். சந்தோஷம் நம் வளர்சிக்கு உதவும். சந்தோஷம் அன்பான உணர்வுகளை எண்ணங்களை ஏற்படுத்தும். அன்பு எல்லோருக்கும் வளமான சந்தோஷங்களைத் தரும்.துன்பங்கள் நம்மை துயரத்தில் மூழ்கடித்துவிடும். துன்பத்தால் நம் உடலில் சேமித்த சக்திகள் விரையமாகிவிடும், புத்தி கூர்மை மழுங்கிவிடும். துன்பங்கள் நம்மையும் மற்றவரையும் காயப்படுத்தும்.

அன்பு மென்மையானது. யாரையும் காயப்படுத்தாது. அன்பு ஒரு தூதுவன். அது நமக்குள் தூதுபோகும். நமக்காகவும் தூது போகும். ஒருவர்மேல் கொண்ட அன்பால் நம் உள்ளம் சில செயல்களில் இணக்கம் கொண்டு தடுமாறினாலும் அந்த அன்பு உறுதியான அன்பாகும். அத்தகைய அன்பு போற்றத்தக்கது. நீங்கள் அன்பு கொண்டிருக்கும் போதும் அதை மற்றவரிடத்து காண்பிக்கும் போதும் மிகவும் மென்மைத் தன்மையுடையவராக மாறிவிடுவீர்கள். நீங்கள் முழுவதும் அர்ப்பணிக்ககூடிய பொருளாக மாறுவீர். இளகிய தன்மையுடையவராக ஆவீர். மாறாக துன்பத்தில் நீங்கள் ஓர் கடுமையான பாறை உள்ளம் கொண்டவராக திகழ்வீர்,

ஆன்மீக உலகில் அன்பும் அதன் அனுபவமும் ஆன்மீக தூதும் ஆகாயத்தைப் போன்று பரந்து விரிந்தது. எனவே “அன்பே கடவுள்’” கடவுளே அன்பு என்றார்கள். இது வானளாவிய ஒரு தத்துவமடங்கிய சொல்லாகும்.

பெரியவர் ஒருவரின் அருகில் அமர்ந்து அன்பை ஒருவன் அறிந்து கொள்ள முடிந்தால் அதனால் அவன் ஒரு தூய்மையான உடம்பை உடையவன் என்றோ, வளமான எண்ணங்களை உடையவன் என்றோ, நிறைய திட்டங்களை உடையவன் என்றோ, எழுச்சியுடையவன் என்றோ கூறமுடியாது. அப்படி நினைப்பது தவறு.

நீ நினைக்கும் அன்பு உன்னுள் ஏற்பட்ட அன்பு அது உண்ணால் ஏற்பட்டது. பெரியவரின் அருகாமை அதை உன்னுள் நினைவு கொண்டு வந்தது, அவ்வளவே. கண்களை மூடி அமைதியுடன் உங்களுக்குள் சென்று பாருங்கள். இதுகாறும் மறைந்திருந்த அன்பு பெட்டகம் திறந்திருக்கும். நீங்கள் அதை அறிந்து கொள்வீர்.

நீங்கள் அன்புடன் படைக்கப்பட்டுள்ளீர்கள். அதை இப்போது உணர்ந்துள்ளீர்கள். உங்கள் உள்ளே உள்ள அன்பே கடவுள் என்பதை உணர்ந்துள்ளீர் என்பதாகும். எனவே நீங்கள் அன்பானவர். எப்போதும் அதனுடன் இருந்து சிறப்படைவீர். அன்பே சிவம்.

 நம்மிடையே தோன்றும் அன்பை மூன்று வகையாகச் சொல்லலாம். முதல் வகை- அழகு, கவர்ச்சி ஆகியவற்றால் ஏற்படுவது. அழகும் கவர்ச்சியும் நிலையானது அல்ல. அது ஒரு மாயை. எப்போது வேண்டுமானாலும் எதோ ஒரு காரணத்திற்காகவும் மாற்றம் பெறும். நிலை மாறினால் அழகும் கவர்ச்சியும் குறைந்து விடுமானால் புதிய தோற்றத்தின் நிலை பழைய தோற்றத்தைக் கண்டவருக்கு இதற்காகவா இத்தனை கஷ்டங்கள் இன்னல்கள் பட்டோம் என்ற சலிப்பை வெறுப்பை ஏற்படுத்தி அன்பை மெல்ல மெல்ல குறைத்திடும்.

இரண்டாம் வகை ஒருவரின் புகழ், பழக்கவழக்கங்களினால் தோன்றுவது. இதுவும் நிலையானது அல்ல, மாற்றம் கொள்ளக்கூடியது ஆகும். புகழ் என்பது எதாவது ஒரு காரணத்தால் எப்போதோ ஒரு சமயத்தில் வந்தது என்றால் காலப்போக்கில் அதன் மதிப்பு குறைந்துவிடும். புகழ் அவ்வப்போது தொடர்ந்து வந்து கொண்டிருக்கவேண்டும், அப்போதுதான் அந்த புகழுக்கும் மதிப்பு. அல்லது யாராலும் அதுபோன்ற சாதனை செய்ய இயலாது என்றவகை புகழாக இருக்க வேண்டும் அது நிரந்தரமானது. அப்படி திறமைகளை வெளிப்படுத்துவது என்பது பலருக்கு இயலாதது ஆகும். ஆகவே புகழனினால் ஏற்படும் அன்பும் மாற்றம் கொள்ளக்கூடியது ஆகும். ஒருவருடைய பழக்க வழக்கங்கள் எதோ ஒருவகையில் ஒருவருக்கு பிடித்திருந்தால் அதனால் அன்பு மலரலாம். அதனால் அவரது மற்ற பழக்க வழக்கங்கள் மற்றவருக்கும் பிடிக்கும் என்ற கட்டாய நிலை இல்லாததால் இதனால் ஏற்பட்ட அன்பும் மாறக்கூடியதாகும்.

 மேற்கண்ட இரண்டுவகை அன்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இந்தவகை அன்பாகும். அது தெய்வீக அன்பாகும். தெய்வத்தின் மேல் கொள்ளும் அன்பு, அதனால் மற்றவர்களின் மேல் கொள்ளும் அன்பு எனப்படும். ஆன்மீக அன்பு சிறப்பானது. எப்போதும் புதியதாக இருக்கும். மிக நெருக்கமாக அதனருகில் சென்றால் அது மிக ஆழமாக கவர்ந்திழுக்கும். அது வசதியாகவும் உற்சாகமூட்டுவதாகவும் மற்றவருக்கு துன்பம் தராததாகவும் இருக்கும். அதனால் வெறுமை ஏற்படாது. பொதுவாக அன்பு கடலைப் போல் ஆழமானது. கடலுக்கு அடிமடி உண்டு. ஆனால் அன்பிற்கு ஆழம் ன் எல்லை கிடையாது, வானம் போன்று எல்லையற்றது.

நாம் ஏன் அப்படிப்பட்ட அன்பை ஒருவர்மேல் செலுத்த வேண்டும். இந்த உலகில் வாழ ஒவ்வொரு உயிரையும் நேசிக்க வேண்டும். அதற்கு அன்பு தேவையாயிருப்பதால் மற்றவரிடம் அன்பு கொள்கின்றோம். அன்பு செலுத்த காரணம் இரத்த சம்பந்தமான உறவாக இருக்கலாம், நம் விருப்பத்தினால் இருக்கலாம், ஆசையினால் இருக்கலாம், நட்பினால் இருக்கலாம், அல்லது இதுகாறும் சந்திக்காத அழகு, திறமை, புத்திசாலித்தனம் இவைகளில் ஒன்றாக இருக்கலாம். இந்த வகைக் காராணங்களால் ஏற்படும் அன்பு நிரந்தரமானது அல்ல. நாம் கொண்ட அன்பு அப்போது இருந்த சூழ்நிலையில் அப்போதைக்கு மட்டும்தான் என்ற நிலையாக இருக்கலாம்.

 பின் உறவு என்ற நிலையில்லாமல் நட்பாகி, சொந்தமாகி புதிய உறவாகி தினம்தினம் ஒருவர்மேல் கொள்ளும் பாசத்தினால் ஊறும் அன்பே நிரந்தரமானது.

கடவுளின்மேல் நமக்கு மிகுந்த நம்பிக்கை. கஷ்டங்கள் வந்தாலும் துன்ப துயரங்கள் ஏற்பட்டாலும் வாழ்வில் சொந்தங்களை இழந்தாலும் மீதி இருக்கும் வாழ்விற்கு அவன் உதவி செய்வான் என்ற நம்பிக்கையின் உணர்வில் தோன்றும் அன்பு மாறாததாகிவிடுகின்றது.

 

அதைப்போன்றே நண்பர்களாயிருந்தாலும் சொந்தங்களாக இருந்தாலும் உறவுகளாக இருந்தாலும் அவர்கள் நம் வாழ்வின் பயணத்திற்கு உதவுவார்கள் என்ற நம்பிகையினால் ஏற்படும் உறுதி கொண்ட பாசம் பினைந்த அந்த ஆழமான அன்பு என்றும் மாறாது. உயர்ந்து நிற்கும். அந்த அன்பே மிக அதிக பலத்தினை ஒருவனுக்கு கொடுக்கக்கூடியது.

இப்படிப்பட்ட ஒப்புயர்வில்லா மாசில்லா தூய அன்பை அனைத்து உயிர்களும் அடைந்து வாழ்வில் ஆனந்த சந்தோஷம் கண்டு வாழ வாழ்த்தும் --- குருஸ்ரீ பகோரா

$$$$$

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27031422
All
27031422
Your IP: 44.201.97.0
2024-04-17 21:59

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg