
ஊர்:திருவெற்றியூர்#தி.த-20,மு+ச9/9+அ-98. ஆதிபுரி
மூலவர்: இறைவன்:ஸ்ரீஆதிபுரீஸ்வரர்(சு)- புற்றுவடிவில், ஸ்ரீபடம்பக்க நாதர், ஸ்ரீபுற்றிடங் கொண்டார், ஸ்ரீஆனந்த தியாகர், ஸ்ரீஎழுத்தறியும் பெருமாள், ஸ்ரீதியாகேசர், ஸ்ரீஜெகந்நாதர் ,ஸ்ரீஒற்றீஸ்வரர் லிங்கவடிவில்
இறைவி: ஸ்ரீவடிவுடைமாணிக்கம், ஸ்ரீதிரிபுரசுந்தரி, ஸ்ரீஜெகதாம்பிகை, ஸ்ரீவடிவுடையம்மை(ஞானசக்தி),
தாயார்: உற்சவர்: ஸ்ரீதியாகராஜர்.
பிறசன்னதிகள்: ஸ்ரீதியாகராஜசுவாமி, ஸ்ரீவடகுருஸ்தலம். ஸ்ரீகுணாலாய விநாயகர், ஸ்ரீதெற்குநோக்கிய அம்மனுக்கு- ஞானம். கங்காதேவி- சமேத- ஸ்ரீதட்சிணாமூர்த்தி. ஸ்ரீஏகபாத மூர்த்தி. ஸ்ரீகாளி. ஸ்ரீதிருப்தீஸ்வரர். ஸ்ரீஆகாசலிங்கம், ஸ்ரீஅண்ணாமலையார், ஸ்ரீஜம்புகேஸ்வரர், ஸ்ரீநாகலிங்கேஸ்வரர், ஸ்ரீகாளத்தீச்வரர், ஸ்ரீசுந்தரேசுவர லிங்கங்கள். ஸ்ரீஏகாதசருத்திரலிங்கம். ஸ்ரீசந்திரமௌனீசர். ஸ்ரீஅருள்ஜோதி முருகன்-4கரங்கள். ஸ்ரீவட்டப்பாறை அம்மன்-பிடாரி.ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீசங்கிலி நாச்சியார், ஸ்ரீசஹஸ்ரலிங்கம், ஸ்ரீஏகாம்பரநாதர். ஸ்ரீநடராஜர்-சிவகாமி
5நி.ராஜகோபுரம்.4காலவழிபாடு.
தீர்-பிரம. ஆதிசேஷ
மரம்-மகிழ.அத்தி
வி-கஜப்பிரஷ்டை,அஷ்டாங்க
தி.நே.06-12,16-20.வெள்ளி,பெளர்-06-20
#10072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி: 044-25733703 , அலைபேசி: 98405 40135
1500 ஆண்டுகள் பழமை. பிரளய வெள்ளத்தை சிவன் ஒற்றி எடுத்து நீர்வற்ற செய்ததால்- ஒற்றியூர். திருமாலின் நாபிக்கமலத்தில் உலகத்தை படைக்கத் தோன்றிய பிரம்மா உலகைப் படைக்க முயலும்போது ஐவகை நிலமும் பின்னி பினைந்திருப்பதையும் அங்கு ஓர் நகரம் இருப்பதைக் கண்டு திருமாலிடம் கேட்க அவர் அது சிவனால் உருவாக்கப்பட்டது என்றார். முதலில் தோன்றிய ஆதிபுரி- வாசம் செய்பவர் ஆதிபுரீஸ்வரர். ஆழிசூழ் நீர் ஒத்தி இருப்பதால் ஒத்தியூர் மருவி ஒற்றியூர். வாசுகி நாகம் உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி வழிபட அதன் பணி முடிவுற்றதை உணர்ந்த இறைவன் புற்றுவடிவில் காட்சி தந்து தன்னுள் அதை ஐக்கியப் படுத்திக் கொண்டார்- படம்பக்கநாதர்- நாகவடிவில் சுயம்பு லிங்கம். கார்த்திகை பௌர்ணமி 3 நாட்கள் தவிற ஆண்டு முழுவதும் கவசம் சாத்திய நிலையில் தினசரி தரிசனம். அபிஷேகம் கிடையாது. கவசம் களைந்து புனுகு சார்த்தப்பட்டு 3ம் நாள் மீண்டும் கவசம். சுந்தரர்- சங்கிலியார் மணம்- மகிழமரத்தடியில்- பிரம்மோற்சவத்தில் மகிழடி சேவை இறைவன் முன் திருமணம். கலியநாயனார் அவதாரம்- பட்டினத்து அடிகள் முக்தி- 27 நட்சத்திரங்கள் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டது- தியாகராஜர் சந்நிதி- மன்னனுக்கு கொடுக்க வைத்திருந்த மாணிக்கங்களை தியாகேசர் கூறியபடி காசியில் இருந்து வந்த அடியார்களிடம் கொடுத்துவிட்டு மன்னன் கேட்கும்போது திகைத்த எலேலசிங்கருக்கு தியாகராஜர் அருள். நாரதர், வான்மீகி, வியாசர், காடவர்கோன், முசுகுந்தன் வழிபட்டது. இராமாயணம் எழுதுமுன் வட்டப் பாறையம்மன் -ஐ வணங்கிய கம்பனுக்கு அருள் செய்தவள். பார்வதி சிவன் கண்னை மூடியதால் இச்சா, ஞான, கிரியா சக்திகள் செயல்யிழந்தன- சிவன் சாபத்தால் மூன்று முறை பூமியில் அவதாரம். இங்கு பார்வதி ஞான சக்தியாக-தவமிருந்து வழிபட்டு சிவனை மணந்தார். வடிவுடைய அம்மன்- தந்தீரீக முறை பூஜை. செல்வம், கல்வி, வீரம் பெற 3 அவதாரங்களையும் (மேலூர்- திருவுடை- இச்சா-செல்வம், திருவெற்றியூர்- வடிவுடை-ஞான-கல்வி, முல்லை வாயில்- கொடியுடை- கிரியா-வீரம்) முழு நிலவன்று தரிசித்தால் 10மடங்கு பலன். சித்ரா பௌர்ணமி யன்று 1000மடங்கு பலன். வெள்ளி பெளர்ணமி மதியம் தரிசனம் 12-18 சிறப்பு- சென்னை- 9சக்தி-9. குருபரிகாரத்தலம்- தண்னீர் கண்டம் விலகும். நீர்வளம் பெருகும்.அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர்-பாடல் பெற்ற தலம். கோவிலில் திரு விளக்கு எரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த கலியர் என்பவர் திருவிளக்கிற்காக தன் செல்வம் அனைத்தையும் இழந்து, வேலை செய்து வந்த பணத்தைக் கொண்டும் தன் பணியைத் தொடர்ந்து வர ஒருநாள் எண்ணெய் வாங்க பணமின்றி விட்டிலுள்ள பொருட்களை விற்றும் பணம் தீர, மணிவிளக்கு ஏற்றும் பணி நின்ரு விடுமானால் நான் மாள்வதே சரி என்ற துணிவுடன் விளக்குகளுக்கெல்லாம் திரியிட்டு எண்ணெய்க்குப் பதிலாக தன் இரத்தத்தை கொண்டு விளக்கேற்ற தன் கழுத்தை அறுத்துக் கொள்ள இறைவன் காட்சி கொடுத்து தடுத்து அருள் புரிந்தார். 4/63-கலியநாயனார்.
இங்கு வந்த சங்கரர் வட்டப்பாறை அம்மன் சன்னதியில் ஸ்ரீ சக்ரம் பதித்து புனிதப் படுத்தி நரபலி கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தினார். திரிபுர சுந்தரி ஸ்தோத்திரம் பாடினார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
