
ஊர்:தர்மபுரி,தகடூர்#கோட்டைகோவில். சனத்குமாரநதி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமல்லிகார்ஜுனர், சதுரபீடம். சாணாயிரம்- முழமாயிரம் உடையார், ஸ்ரீதிருவேளாலீசுவரம், ஸ்ரீஒராயீசுவரமுடையார்
இறைவி: ஸ்ரீகல்யாணக்காமாட்சி-4கரங்கள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீகாடுவெட்டிசித்தர்- ஸ்ரீசித்தேஸ்வரன். ஸ்ரீராஜதுர்க்கை- ஸ்ரீசூலினி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீப்ரத்யங்கிராதேவி, ஸ்ரீபைரவர்
த.வி.செல்வவிநாயகர்.
மரம்-குடவேல
தீர்:
தி.நே-0630-1030,1630-2030
#31052011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04342-263640
அர்ஜுனன் பிரதிஷ்டை. அம்மன் சன்னதிக்கு 18 படிகள். 18யானைகள் தாங்கிய தேர்போன்ற அமைப்பு. முதல் யாணையின் மத்தகத்திலிருந்து ராமாயாணக் காட்சிகள். 4கற்தூண்களில் 1 பூமியில் படாமல் தொங்கியபடி-அடியில் பேப்பரை விட்டு எடுக்கலாம். இந்த தூணில் நவகண்டபலி காட்சி. அன்போடு எல்லோர்க்கும் அருளும் கல்யாண குணம். ஸ்ரீசக்ரம் . அம்மையை வலம்- இடம் சுற்று உலகியல் இன்பங்கள் பெருகும். ராமாயண காவியத்தை தரிசிக்க இடம்- வலம் சுற்று உலக இன்பங்கள் விடுபட்டு முக்தி கிட்டும். அன்னை கிளியாக வந்து சாட்சி- உலோகக்கிளி. மகா மண்டபம், நவக்கிரக மண்டபம் சிற்பங்கள் சிறப்பு. அர்ச்சுனன் ஈசனை வேடன் என பழித்ததால் சாபமடைந்து இங்கு வணங்கி மறுபிறவியில் கண்ணப்ப நாயனாராக தோன்ற வரம். அர்ச்சுனன் மல்லிகை மலர் பூஜை- மல்லிகார்ஜுனர். சூலினி ராஜதுர்க்கை- பூமியிலிருந்து தோன்றிய நாள் ஆடி 3ம் செவ்வாய்- செவ்வாய் தோஷ முள்ளவர்கள் வழிபடின் சிறப்பு- தைமாதம் சண்டிஹோமம் சிறப்பு. கன்னிராசி-அஸ்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தலம். அஷ்டதிக்பாலகர்கள்-இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயி, குபேரன், ஈசானம்- உருவ வடிவில்- நடுவில் நடராஜர் பாதம் மாறி ஆடிய காட்சி.
மன்னர்கள் அக்காலத்தில் போருக்குச் செல்லுமுன் சூலத்தை நட்டு கொற்றவைக்கு பூஜை நடத்தி திலகமிட்டுக்கொண்டுச் செல்வர். போர்வீரன் ஒருவன் தன் நாட்டிற்காக மேலேயிருந்து சூலத்தில் விழ்ந்து உயிர் துறந்து தியாகம் செய்ய நினைத்தபோது சூலினி தன் கையை சூலத்தின் மேல் வைக்க குதித்த வீரன் அந்தரத்தில் அப்படியே நிற்க, நீ ஆற்றவேண்டிய காரியங்கள் நிறைய உண்டு என அவனுக்கு உயிர் பிச்சை அளித்து எழுமிச்சையை சூலத்தில் சொருகி தன்னை வணங்குமாறு அருள். அதன் பின் எழுமிச்சை ராஜகனி மரியாதையுடன் சூலத்தில் சொருகி வழிபடும் வழக்கம். அந்தக் காட்சி தெங்கும் தூணில் செதுக்கப்பட்டுள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
