
ஊர்:திருவல்லிக்கேணி#தி.தே-60
மூலவர்: ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்-கிழக்கு நோக்கி நின்றகோலம்.ருக்மணி, பலராமர், தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் பேரன் அநிருத்தன் ஆகியோருடன் காட்சி
இறைவன்: இறைவி: தாயார்:ஸ்ரீவேதவல்லி தாயார் தனிக் கோவில்
உற்சவர்: ஸ்ரீபார்த்தசாரதி-ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீஆண்டாள், 2. ஸ்ரீஅரங்கநாதர்-சயனநிலை- என்னை ஆளும் அப்பன். பூதேவி,ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீவராகபெருமாள், ஸ்ரீநரசிம்மர்
3. ஸ்ரீராமபிரான்-சக்ரவர்த்தி திருமகன், ஸ்ரீசீதா, ஸ்ரீலட்சுமணன், ஸ்ரீசத்ருக்கனன், ஸ்ரீஆஞ்சநேயர்
4.ஸ்ரீகஜேந்திரவரதர், ஸ்ரீவரதராஜபெருமாள்-கருடன்மீது அமர்ந்த கோலத்தில்.
5.ஸ்ரீஅழகியசிங்கர்-மேற்கு நோக்கி அமர்ந்த நிலை,பின்னால் யோகநரசிம்மர்-அமர்ந்தநிலை,
5நிலைராஜகோபுரம்.
தீர்-கைவிரணி-அல்லிக்கேணி இந்திர,ஸோம,அக்கினி,மீன,விஷ்னு.
வி-ஆனந்த,ப்ரனவ,புஷ்ப,சேஷ,தைவீக
க்ஷேத்திரம்:பிருந்தாரண்ய
ஆகமம்: வைகானஸம்
தி.நே.06-12,16-20,சனி-1300 வரை.
#08072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தொலைபேசி-044-2844 2462, 2844 7042
வியாசர் பூஜித்த கண்ணனின் விக்ரகத்துள் பெருமாள் அடைக்கலமாக அதை அவர் சீடன் ஆத்ரேயர் திருவல்லிக்கேணியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
துண்டீர- தொண்டை மண்டலப் பகுதியை ஆண்ட சுமதி திருப்பதியில் பெருமாளை வழிபட்டு, அர்ஜுனனுக்கு தேரோட்டிய கண்ணன் கோலத்தில் காட்சிதர வேண்ட அல்லி தீர்த்ததிற்கு வரச் சொல்லி அசரீரி. ஆத்ரேயர் பூஜித்துவந்த சிலையிலிருந்து சுமதி மன்னனுக்கு தேரோட்டிய கோலத்தில் காட்சி கொடுத்ததால் வேங்கட கிருஷ்ணன்.
பிருந்தாரண்யம். அத்திரி முனிதவம்- நரசிம்ம மூர்த்தி காட்சி- அகோபிலம், மதுமான்மகரிஷி- ராமர் காட்சி- அயோத்தி, சப்தரோமர்ரிஷி- கஜேந்திரவரதர் காட்சி- காஞ்சி, சுமதி மன்னன்- வேங்கட கிருஷ்ணன் காட்சி- திருப்பதி, பிருகுமகரிஷி- ரங்கநாதன் காட்சி- ஸ்ரீரங்கம் என 5மூர்த்திகள்- பஞ்ச மூர்த்தி தலம்.
108 தி.தே-ல் மீசையுடன் எழுந்தருழிய தலம். ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய 3 தலங்களைத் தரிசித்த புண்ணியம்- பார்த்தசாரதி பெருமாள்.
கரையில் தவம் செய்யும் முனிவர்களுக்கு தங்களின் சலசலப்பு சப்தம் இடைஞ்சலாக இருக்குமென்பதால் கடலருகில் இருந்தும் குளத்தில் மீன்கள் இல்லை.
பீஷ்மர் விட்ட அம்புகளை கண்ணன் அர்ஜுனனுக்காக தன் முகத்தில் வாங்கியதால் ஏற்பட்ட தழும்புகள் பார்த்தசாரதி உற்சவரின் முகத்தில்.
துளசி வன- ப்ருந்தாரண்ய சேத்திரம். பஞ்சாமிர்தம்- கீதாமிர்தம்-1/5. பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோர் மங்களாசசனம்.
மங்களாசாசனம்- அழகிய தாமரைப்பூவை இருப்பிடமாகக் கொண்ட மாகாலட்சுமி வாசம் செய்கின்ற திருமார்பை உடையவனும், அடுத்தடுத்து வீசுகின்ற வெண்மையான அலைகளில் சிவந்த பவளங்களும் வெளுத்த முத்துக்களும் பிரதிபலிக்கும் சந்திகால விளக்கினை நினைவுபடுத்துவது போன்ற எழிலினை உடைய திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருக்கும் பெருமானே எனக்கு சுவாமியாவான்.- பேயாழ்வார்.
மங்களாசாசனம்-பெரிய அலைகள் வந்து வந்து மோதிடும் அலைகடலின் கரையிலே இருக்கின்ற மயிலாப்பூரை அடுத்த திருவல்லிக்கேணியிலே எப்போதும் வாசம் செய்கின்ற எம்பெருமான் ஐந்து தலை நாகத்தின்மேல் சயனித்திருப்பதன் காரணம் திருவடிகளால் மூவுலகினையும் அளந்த கலைப்பினால்தான் போலும்- திருமழிசை ஆழ்வார்.
மங்களாசாசனம்- மிகச் சிறந்த யாகமான தநுர்யாகம் என்ற வேள்வியினை நடத்திய கம்சனும் அவனால் ஏவப்பட்ட மல்லர்கள், அசுரர்கள், குவாலய பீடம் என்ற யானை, அதன் பாகன், அனைவரையும் அழித்தவனும், திரிபுரம் எரித்த சிவபிரானின் பிரமஹத்தி தோஷம் நீங்க அருளியனும், எதிரிகளான கௌரவர்கள் அஞ்சும்படி அர்ஜுனன் தேரில் சாரதியாக வீற்றிருந்தவனும் சிற்றன்னை கைகேயின் சொல்லால் அரச பதவியினை ஏற்காது விட்டவனுமான எம்பெருமானை திருவல்லிக்கேணியிலே சேவித்தேன்.
வேதத்தின் வடிவானவனும், விருப்பத்திற்கு ஏற்ப காட்சி தருபவனும், வினைகளுக்குமான பலனைத் தருபவனும், குற்றமில்லாக் கனியென முனிவர்களால் போற்றப்படுகின்றவனும், நந்தகோபர் குலத்தில் உதித்த கம்பீரமான யானையைப் போன்றவனும் உலகுக்கு காரணமானவனும், எல்லா உலகிலும் துதிக்கப் படுபவனும், அமுதம் போன்றவனும், பக்தர்கள் மனம் கவர்ந்த எம்பிரானை, கற்பிற் சிறந்த மங்கையிர் வாழும் மயிலைக்கு அருகே உள்ள திருவல்லிக்கேணியில் தரிசித்தேன்.
அன்பு நிறைந்தவளான வடிவோடும் வஞ்சனையான மனதோடும் வந்து நஞ்சு தடவிய மார்பினால் பாலுட்டிய பூதகி அரக்கியின் உயிரினை அவள் பாலூட்டிய மார்பின் வழி உறிஞ்சி அவளைத் தரையிலே வீழும்படி செய்தவனும், அசுரர்களுக்கு எமன் போன்றவனும், வித்யாதரர்கள், கந்தர்வர்கள், சாரணர்கள் என்று சகலவித தேவர்களும் வியந்து வணங்கும்படி மோகினி வடிவம் எடுத்து அமுதத்தினை அளித்தவனுமாகிய எம்பெருமானை திருவல்லிக்கேணியில் தரிசித்தேன்.
இந்திரனை வணங்கிய ஆயர்கள் செய்த ஆராதனையை மாற்றியதால் கோபம் கொண்டு அவன் பெருமழை பெய்வித்தபோது அதனால் துன்ப பட்டவர்கள், எங்கள் குலத் தலைவனே.. எங்களையும் எங்களது பசுக் கூட்டத்தையும் நீதான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்ட கோவர்த்தனம் என்ற பெரிய மலையைக் குடைபோல் தூக்கிக் காத்தவனாகிய எம்பிரானை திருவல்லிக்கேணியில் தரிசித்தேன்.
தன் மனத்திற்கு உகந்தவளும் தாமரையில் உதித்தவளுமான திருமகளின் நாதனும், பூமிதேவிக்குப் பிரியமானவனும், நப்பின்னை பிராட்டிக்கு நாயகனும், எல்லோருக்கும் எப்போதும் துணையாக இருப்பவனும், பாண்டவர்களுக்காக தூது சென்று பேசியவனும், எனக்குத் துணையானவனும் என் குலத்திற்கே நாதனுமான பெருமானை திருவல்லிக்கேணியில் தரிசித்தேன்.
திருதராஷ்டிரனின் மகனும் தனே சக்ரவர்த்தி என்று கர்வமாகச் சொல்லிக் கொள்பவனும் ஆன துரியோதனன் தம்பி துச்சாதனன், கற்பினை அணிகலணாகக் கொண்ட திரௌபதியை நீ எங்களுக்கு அடிமையானவள் என்று சொல்லி அவை நடுவே அவமானப் படுத்தியபோது அவள் எழுப்பிய அபயக் குரல் கேட்டு காத்தவனும், அழகிய கருங்கூந்தலை உடைய திரௌபதி அப்போது அடைந்த துயரத்தினை போன்ற துயரத்தினை கௌரவர்களின் மனைவியரும் அடைய வேண்டும் என்பதற்க்காக பார்த்தனது தேரில் சாரதியாக அமர்ந்தவனுமாகிய எம்பெருமானை திருவல்லிக்கேணியில் தரிசித்தேன்
சீதை, லட்சுமணன், பரதன், சத்ருக்கணன், ஆகியோரால் எப்போதும் வணங்கப்படுபவரும், ராவணனை வதைத்தவருமான பெருமானை குரவ மலர்கள் நிறைந்த சோலையில் குயில்களும் மயில்களும் ஆரவாரிக்க, சூரிய கிரணங்களின் வெம்மையால் தாக்கப் படாமல் எப்போதும் தண்ணென்று இருக்கின்ற திருவல்லிக்கேணியில் தரிசித்தேன்.
கொடியவனான இரண்யன், குருகுலத்தில் பயின்றுவிட்டு வந்த தன் மகனான பிரகலாதன் மகாவிஷ்ணுவின் புனிதமான 1000 திருநாமங்களை சொல்வதைக் கேட்டு பெருமை கொள்ளாமல் சிறுவன்மீது சீற்றம் கொண்டு துன்புறுத்தி பின் தூணைப் பிளந்தபோது பிறைச் சந்திரன் போன்ற பற்களையும், கனல் போன்ற கண்களையும் பெரிய வாயையுமுடைய சிம்மமூர்த்தியாக அவதரித்த பெருமாளை திருவல்லிக்கேணியில் தரிசித்தேன்.
மீன்கள் நிறைந்த குளத்தில் திருமாலை பூஜிப்பதற்காக அன்று பூத்த தாமரை மலர்களைப் பறிக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு இறங்கிய காட்டு யானையாகிய கஜேந்திரனின் காலை முதலை கவ்வ ஆதிமூலமே என்று அலறிய யானையின் துயரைத் தீர்ப்பதற்காக கருட வாகனத்தில் ஏறிச் சென்று தன் சக்கரத்தால் முதலையை அழித்தவனை தேன் கமழும் சோலைகள் நிறைந்த திருவல்லிக்கேணியில் தரிசித்தேன்.
குளிர்ந்த சோலைகளும், பசுமையான நிலங்களும், நீர் நிரம்பிய குளங்களும், மாளிகைகளும், மதில்கள் நிறைந்ததுமாக பாண்டிய மன்னனான தொண்டைமான் சக்ரவர்த்தியால் நிர்மாணம் செய்யப்பட்ட அழகிய நகரான மயிலாப்பூரை அடுத்துள்ள திருவல்லிக்கேணியிலே அருளும் பெருமானைப் பற்றி அழிவற்ற நல்ல மாடங்களைவுடைய திருமங்கை நாட்டின் தலவரான திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த சொல் மாலையாகிய இப்பாசுரங்களை சொல்பவர்கள் எல்லா சுகங்களும் பெற்று வாழ்ந்து ஆனந்தமயமான பரமபதப்பேரினை அடைவர்.- திருமங்கை ஆழ்வார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
