
ஊர்:திருக்கள்வனூர்#தி.தே-54
மூலவர்: ஸ்ரீஆதிவராகப்பெருமாள்-நின்றகோலம்-
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅஞ்சிலைவல்லிதாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநின்றான், இருந்தான்,கிடந்தான்கோலம்:
மரம்:
தீர்-நித்யபுஷ்கரணி.
வி-வாமண. சிவ ஆச்சாரியர்களால் பூஜை.
திநே.0600-1200,1600-2000
#16022007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தொலைபேசி: 044-2722 2609, 2722 2610
மகாவிஷ்ணும், மகாலட்சுமியும் தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தபோது பரிகாசமாக மோகினி உருவமெடுத்து சிவனை மயக்கியுள்ளீர்கள். அது உங்கள் அழகால் அல்ல. மாய தந்திரத்தால் செய்தது. ஏனெனில் நீங்கள் கார்மேக வண்ணந்தானே. உங்கள்மீது யார் காதல் கொள்வார்கள் என்று மகாலட்சுமி சொன்னது அவள் உள்ளத்திலிருந்து வந்துள்ளது என அறிந்த திருமால் அப்படியென்றால் பால்கடலைக் கடைந்தெடுத்தபோது தோன்றிய நீ என்மீது காதல் கொண்டு ஏன் கல்யாணம் செய்து கொண்டாய் என்றார். அப்போது துடுக்காக பால்கடலின் கொந்தளிப்பு மேனியில் பட்டபோது தகதகவென்றி நீங்கள் இருந்தீர்கள். அதிலே ஏமாந்து கல்யாணம் செய்துகொண்டேன் என்றாள். கோபம் கொண்ட திருமால் நீ அழகி என்ற கர்வத்தல் இப்படி பேசிவிட்டாய். இந்தக் கணமே உன் அழகு நீங்கி குருபியாய் பூலோகத்தில் பிறந்து உழல்வாய் என்றார். தங்க மகாலட்சுமி தகரமானாள். வருந்தினாள். பாதங்களில் விழுந்து பிராயச்சித்தம் கேட்க காஞ்சியில் அருப லட்சுமியை வழிபடச் சொன்னார். கரு-மை நிறமாக இருந்த மகாலட்சுமி பார்த்து அருபலட்சுமி காமாட்சி அஞ்சன காமாட்சி என அழைத்தாள். என்னிடம் பெறும் குங்குமத்தை உன்மேல் தடவி விட்டு பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள் என்றாள். குரூர லட்சுயாக வந்தவளை அரூபலட்சுமி தன் இடது நிறுத்தினாள் காமாட்சி. விரைவில் சொரூப லட்சுமியானாள். இதைக் கேள்விபட்ட திருமால் தன் மனவியை காண வர அவள் தன் தங்கையுடன் இருப்பதால் ஒளிந்திருந்து பார்த்தார். லட்சுமியும், பார்வதியும் பேசிக்கொண்டிருந்த போது மறைந்து கேட்டதால் காமாட்சி தன் சகோதரனை கள்வன் என அழைத்தார். மிகச்சிறியமூர்த்தி.-108ல் இங்குதான் சிறியது. திருமால் சககோதரி மற்றும் மனைவியின் உரையாடலைக் கேட்க நின்ற அந்தக் குளக்கரையின் கல்மீது திருமால் பாதம்பட்டு சாப விமோசனமடைந்த அரக்கன் தேவியர்களை அச்சுறுத்த பெருமாள் அவனத்தாக்கி அவன்மீது நின்று, அமர்ந்து, படுத்து அவனை பாதாள உலகத்தினுள் தள்ளினார். அந்த நின்றான், இருந்தான், கிடந்தான் கோலத்தில் குளக்கரையில் காட்சி. காமாட்சி அம்மனுக்குப் படைக்கப்படும் அதே நெய்வேத்தியம் கள்வருக்கும் படைக்கப்படுகிறது காமாட்சியம்மன் கோவில் உள்ளே காமாட்சி சன்னதி செல்லும் வழியில் மறைந்து உள்ளார் கள்வர்.
திருநீரகம் திருப்பதியில் நிலைத்து நிற்பவனே! சொர்க்க லோகத்தில் இருப்பவர்களும் வழிபடும் திருப்பதி திருமாலே, நிலாத்திங்கள் துண்டத்தில் ஒளி வீசுபவனே, எல்லா வளமும் நிறைந்த காஞ்சிபுரத்தில் திரு ஊரகத்தில் எழுந்தருளியிருப்பவனே, திருவெஃகா ஆலயத்தில் இருப்பவனே, நினைத்தவர்கள் உள்ளத்தில் உறைபவனே, எல்லா உலகங்களும் புகழ்ந்து துதிக்கும் திருக்காரகம் என்னும் திருப்பதியில் வாழ்பவனே, திருக் கள்வனூரைச் சேர்ந்தவனே, அழகிய காவிரியின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பேர்நகர் தெய்வமே என்னுடைய நெஞ்சத்தில் நீங்காது இருக்கும் பகவானே உன்னுடைய திருவடிகளை என் உள்ளத்தில் வைத்து வணங்குகிறேன்.-- திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
