
ஊர்:திருவைகாவூர்.தி.த-102.வில்வவனம்.திருவைகா, வில்வவனம்,பூமிபுரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவில்வவனேஸ்வரர்,ஸ்ரீவில்வவனநாதர்(சு) ,ஸ்ரீஅரியீசர், ஸ்ரீமகவருளீசர்.
இறைவி: ஸ்ரீசர்வஜனரட்ஷகி, ஸ்ரீவளக்கைநாயகி , ஸ்ரீமங்களாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், ஸ்ரீதட்சிணாமூர்த்தி கையில் கோலுடன், ஸ்ரீசப்த கன்னியர்கள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுந்தரமூர்த்தி,
த.வி. ஸ்ரீபிரளயம்காத்தவிநாயகர்
முகப்புவாயில்+உள்கோபுரம்
தீர்-எம
மரம்-வில்வ
நான்கு கால பூஜை
தி.நே-0700-1230,1700-2030
#18.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
தவநிதி முனிவர் தியானத்தில் இருந்தார். வேடன் மானைத் துரத்த மான் முனிவரிடம் அடைக்கலம். வேடன் முனிவரைத் தாக்க சிவன் அடியவருக்காக புலி உருக்கொண்டு துரத்த புலிக்குப் பயந்த வேடன் மரத்தின் மீதேறி தப்பித்தான். கீழே புலி இருந்ததால் அவனால் கீழிறங்க முடியவில்லை. தூக்கம் வந்தது தூங்கினால் கீழே விழுந்து புலியிடம் அகப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் தூக்கம் வராதிருக்க மரத்தின் தலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துப் போட்டு நேரத்தைக் கழித்தான். காலை சூரிய உதயம் கண்டவுடன் புலி திரும்பி போனது. மனநிம்மதியுடன் கிழே இறங்கினவனுக்கு தான் இரவில் பறித்த இலைகள் யாவும் வில்வ இலைகள் என்றும் அதுவும் கீழே இருக்கும் சிவ லிங்கத்தின் மீது விழுந்திருப்பதும் தெரிய வந்தது. மகா சிவராத்திரி நாளில் புலிக்கு பயந்த வேடன் வில்வமரத்தின் மேலேறி தூங்காமல் வில்வத்தை பறித்ததால் இறைவன் காட்சி. வேடனுக்கு அன்று காலையுடன் காலம் முடிவதால் எமன் வேடனை பிடிக்க வர அவனை மூச்சுக் காற்றால் தடுத்து நிறுத்த நந்தி திருப்பியுள்ளது. வேடனைக் காப்பாற்ற தட்சிணாமூர்த்தி வடிவில் தடி எடுத்து எமனை விரட்டுதல். சிவராத்திரி சிறப்புத் தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். ஊழிக்காலத்தில் வேதங்கள் அழியாமல் இருக்க இந்த தலம் வந்து வில்வ மரங்களாக இருக்க ஆலோசனை. அதனால் வேதங்கள் இங்கு வில்வமரங்களாக. இறைவன் -வில்வவனேஸ்வரர். சிவனுடன் மோதவந்த எமனை நந்தி விரட்ட எதிரிலுள்ள குளத்தில் எமன் வீழ அவன் திரும்பி வராமலிருக்க நந்தி குளத்தை பார்த்தவாறு. அர்த்த மண்டபத்தின் வாயிலில் விஷ்ணுவும் பிரம்மாவும் துவாரபாலக நிலையில் காட்சி. பூதெவி வழிபட்டதால் பூமிபுரம். ஒரு கற்புக்கரசியின் சாபம் நீங்க விஷ்ணு வழிபட்டதால் அரியீசர், நகைக்காக கொலை செய்யப்பட்ட குழந்தையை மீட்ட ஈசன் மகவருளீசர். பிரம்மன், அக்னி வழிபட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
