
ஊர்:திருபுள்ளபூதங்குடி. திதே-10, தியாகசமுத்திரம்
மூலவர்: ஸ்ரீவல்வில்ராமன்-புஜங்கசயனம்-4கரங்கள்,சங்கு,சக்கரத்துடன்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபொற்றாமரையாள்
உ:
பிறசன்னதிகள்:
5நி.கோபுரம்-59'+39'-3நி.உள் கோபுரம்.
மரம்:
தீர்-ஜடாயுபுஷ்கரணி.
வி-சோபன.
தி.நே-0700-1200,1700-2000
-
இராவணன் சீதையை கவர்ந்தபோது சீதையின் அழுகுரல் கேட்ட ஜடாயு ராவனை தடுத்து அறிவுறை கூறி அவன் ஏற்காததால் சண்டையிட்டு தன் இறக்கையை இழந்தார். இராமர் லஷ்மணன் ஜடாவுவை சந்தித்து உண்மையறிந்தனர். ஜடாயுவின் மரணம் துக்கம் ஏற்படுத்த இறுதியாய் தன் தந்தைக்கு ஈமக்கடன்களை செய்ய முடியாத ராமன் பெரியப்ப ஸ்தானத்தில் இருந்த ஜடாயுவிற்கு ஈமக்கடனை செய்ய நினைத்தார். சடாயுவுக்கு இராமன், தீக்கடன், நீர்க்கடன் செய்ய நினைத்த போது சீதைக்கு பதிலாக மானசீகமாக தாமரையில் காட்சி அளித்த பூமிதேவியுடன்(சீதையும் பூமாதேவியும் ஒன்று) சேர்ந்து இறுதிக்கடன் செய்து மோட்சம் அருளிய தலம். சடாயு-புள்ளி மோட்சம் கொடுத்து பூத உடலுக்கு ஈமக் கடன்கள் செய்தமையால் புள்ளபூதங்குடி. ஸப்தராமசேத்திரம்-4/7. இங்கு வந்த திருமங்கை ஆழ்வார் பெருமாளைத் தாண்டிச் செல்ல ஒளி வெள்ளத்தால் தான் இருக்கும் திசையை காட்ட ஆழ்வார் பார்க்க அங்கு 4கரங்களுடன் ராமர் காட்சிதர பாசுரம் பாடினார். மனைவியுடன் இருந்தால் மட்டும் செய்யும் காரியங்கள் முற்றுப்பெரும் எனக் குறிப்பால் உணர்த்தியத் தலம். பித்ரு தோஷ நிவர்த்தி தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
