
ஊர்:திருவரங்கம்,#தி.தே-1.ஸ்ரீரங்கம்
மூலவர்: ஸ்ரீரங்கநாதன்,பெரியபெருமாள்(சு)அழகியமணவாளன்-ஆதிசேடன்மேல்பள்ளி, புஜங்கசயனம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்,செங்கமலநாச்சியார்
உற்சவர்: ஸ்ரீநம்பெருமாள்,ரங்கராஜர்-ஸ்ரீரங்கநாச்சியார்,செங்கமலநாச்சியார்
பிறசன்னதிகள்: ஸ்ரீதான்யலட்சுமி, ஸ்ரீமேலபட்டாபிராமர், ஸ்ரீஆதிநாராயணப்பெருமாள், ஸ்ரீவாசுதேவ பெருமாள், ஸ்ரீதன்வந்த்ரி, ஸ்ரீலட்சுமிநாராயணப்பெருமாள், ஸ்ரீலட்சுமிநரசிம்மர், ஸ்ரீபரம்பதநாதர், ஸ்ரீலட்சுமிஹயக்கீரிவர், ஸ்ரீவேதாந்ததேசிகர், ஸ்ரீகிரூஷ்ணர்-ருக்மணி, ஸ்ரீகோதண்டராமர், பூதேவி, நளாதேவி-கண்ணாடிமாளிகை. ஸ்ரீபட்டாபிராமர், ஸ்ரீசந்தானகிருஷ்ணன், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீதசரூபநாராயணன்,ஸ்ரீசக்ரத்தாழ்வார், ஸ்ரீசீனிவாசபெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவேனுகோபாலன்-பாமா, ருக்குமணி, ஸ்ரீகூரத்தாழ்வார். ஸ்ரீகோதண்டராமர்-சொர்க்கவாசல் எதிரே- சந்திரகுளக்கரையில். ஸ்ரீபெரிய வீர ஆஞ்சநேயர்.
11நிலை231'ராஜகோபுரம்.மொட்டை கோபுரம்246'
தீர்-சந்திர(ஏழுகிணறுகள்),அசுவத,ஜம்பு,பில்வ,வகுள,கதம்ப,ஆம்ர,புன்னாக,ப்லாச
மரம்:புன்னை.வில்வ,நாவல்,அரசு,மகிழ,புன்னை,பொரசு,கடம்ப,மா.
வி:ப்ரணாவாக்ருதி.
சொர்க்கவாசல்
தி.நே-0700-1200,1600-2000
# 10032005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(7)
தொலைபேசி-0431-2432246, 0431-2341433
ராஜகோபுரம் ஆசியாவிலேயே உயரமானது.மொத்தம் 21 கோபுரங்கள். பிரஹாரங்கள் ஏழு- இவை ஸப்த லோகங்களாக கருதப்படும். மொட்டை கோபுரம் 246' உயரம். 3' நிலம் கொடுக்க தடை செய்த சுக்ரன் தோஷம் நீங்க கிழக்கு வாசல் வழி வந்து வழிபட சாபம் நீங்கியது. கிழக்கு வாயில் வெள்ளை நிறம். கோவிலில் 55 சன்னதிகள்.
அயேத்தியில் பட்டாபிஷேக விழா முடிந்த பின், ராமன் முன்னோர்கள் தவமிருந்து பிரம்மனிடம் பெற்ற திருவாராதனப் பெருமாளை விபீஷணன் சீதனமாக பெற்று வரும்போது களைப்பால் வைத்த இடம்- உள்ளம் கவர்ந்த இடத்தில் ரங்கநாதர் பள்ளி- மணம் நொந்த விபீடனுக்கு நீ செல்லக்கூடிய பாதயை நோக்கியே நான் பள்ளி கொண்டுள்ளேன், ஆண்டுக்கு ஒருமுறை இங்கு வந்து வழிபடு என ஆறுதல்.
திருமகள் பூஜை. பூலோக வைகுந்தம் கருவறையில் 2 மணத்தூன்கள் தழுவியவர்களுக்கு -நித்யசூரி பாக்யம்.. அம்மா மண்டபம் காவிரியில் துலா மாதம் நீராடினால் கங்கையில் நீராடிய பலன். பஞ்சாமிர்தம்-ஞானாமிர்தம்-1/5. ஸ்ரீரங்கம் விமானத்தில் பரவாசுதேவர். வைகுண்ட ஏகாதசி- பரமபதவாசல் திறப்பு. இதற்கு முன்னும் பின்னும்பகல் பத்து இராபத்து எனப்படும் வேதம் ஓதும் நிகழ்ச்சி-அத்யயன உற்சவம் சிறப்பு.
உறையூரில் பாணர் சேரியில் பிறந்த பாணாழ்வார் அரங்கனிடத்தே ஆறாத பக்தி கொண்டு காவிரி ஆற்றின் தென் கரையில் இசைமூலம் வழிபட்டு அவன் வடிவத்தை அனுபவித்து வந்தார். தாழ்ந்த குலமாதலால் திருக்கோவில் அருகில் வராமல் தூர நின்றபடி வழிபடுவார். அப்படி காவிரி கரையில் இருந்து பாடியபோது அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்ய நீர் எடுக்கவந்த சாரங்க முனி திருப்பாணர் குறுக்கே நிற்பதைக் கண்டு தள்ளிப் போக சைகை செய்ய தன் பாடலில் கவனமாக இருந்த திருப்பாணர் அதைக் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர் ஒரு கல்லை எடுத்து வீச அந்தக் கல் தாக்கி இரத்தம் வழிய திரும்பிய திருப்பாணருக்கு அப்போதுதான் தான் அவர் வழியில் குறுக்கிட்டு நிற்பது தெரிந்து விலகினார். நீர் கொண்டு அரங்கனுக்கு அபிஷேகம் செய்ய அருகில் சென்றபோது அரங்கன் நெற்றிலிருந்து இரத்தம் வடியக்கண்டு பதைபதைத்தார் முனிவர். உணவின்றி உறக்கம் வரமல் இருந்தார் கனவில் இறைவன் தோன்றி என்மீது அன்பு கொண்ட பாணரைக் கல்லால் அடித்து காயப்படுத்தியதை தாம் ஏற்றுக்கொண்டோம். அவரை நாளைக் காலை ஆற்றிலிருந்து தோளில் தூக்கிக் கொண்டு இங்கு வந்து நம்மருகே விடுக என்றார். அடுத்தநாள் பாணர் வழக்கம்போல் பாடிக்கொண்டிருக்க முனிவர் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கி அவர் என்ன தடுத்தும் கேளாமல் அவரை கட்டாயமாக தன் தோளில் சுமந்து அரங்கன் சன்னதி வந்து சேர்த்தார். வரும் வழியில் கோவில் வாசலில் திருவரங்கனும் கோவில் பிராட்டியும் சேர்ந்த கோலத்தை பாணர் கண்டு மனம் மகிழ்ந்தார். அவர்பாடிய 10வது பாசுரத்தின்போது அவரை தம்முடன் அழைத்துக் கொண்டார்.
பக்தர்கள் அனைவரும் தேடிவந்து தரிசனம் செய்யும் வகையில் ஜனாகர்ஷண யந்திரத்தை ஸ்தாபித்து ஸ்ரீரங்கநாதரை வணங்கினார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
